Forum

மதுர ஜில்லா... மச்ச...
 
Notifications
Clear all

மதுர ஜில்லா... மச்சானே!-15

6 Posts
3 Users
1 Reactions
99 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#105]

அத்தியாயம்-15

    பஞ்சாயத்து தேர்தல் ஒரு பக்கம் ஊரையே பரபரப்பாக வைத்திருந்தது. இனியன் மதுரவாணி குடும்பத்தை அவர்கள் திருமணம் பதட்டத்தில் வைத்திருந்தது.

காலையிலிருந்தே அருளாளனும் இனியனும் கையில் வெல்வெட் நிற திருமணப் பத்திரிக்கைகளுடன் ஊர் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தனர்.

"என் பையன் கல்யாணம்... வந்துடுங்க" என்று ஊர்ஜனங்களுக்கு வீடு தேடி வைத்தார். அப்படியே தேர்தலில் ஜெயிக்க வைக்க ஓட்டு கேட்டு கோரிக்கையும் வைத்தார்.
  பலருக்கும் மதுரா-அகிலனை மணக்க நேரலாமென காத்திருக்க, இனியனுக்கு மடமுடிக்கும் விதமாக பத்திரிகை அடித்திருக்க, முதலில் தடுமாறி தான் வாங்கினார்கள். பிறகு என்னயிருந்தாலும் இனியன் அகிலனுக்கு மூத்தவன், மதுராவை முடித்திட முடிவெடுத்திருப்பார்கள் என்று அவர்களாகவே நினைத்தனர்.
 
இதில் 'வெளிநாட்டுல வேலை பார்த்தவன். சொந்த மண்ல தின் பொண்ணை முடிப்பேன்னு உறவுக்கு முக்கியத்துவம் தந்துட்டான். பிறவு காலம் தாழ்த்தாம முடிச்சிடறது தானே நல்லது" என்று மார்தட்டிக் கொண்டார் அருளாளன். போகும் வழியெங்கும் மகனது பெருமையாக பேசிக்கொண்டே சென்றார்.

இனியனோ ஒவ்வொரு வீட்டிலும் பத்திரிக்கை கொடுக்கும்போது, ஏதோவொரு ஆனந்தம். அவனுக்கு திருமணம் முக்கியத்துவம் தாண்டி அகிலனை தோற்கடிக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

மதிய நேரம் சித்தப்பா அதியமான் வீட்டின் வாசலில் ஜீப் வந்து நிறுத்தினான் இனியன்.
தூரிகா ஜன்னல் வழியே பார்த்தவுடனே முகம் சுருங்கியது.

"வந்துட்டாங்க." என்று முணுமுணுத்தாள்.இவ யாரை என்னத்த சொல்லறா.. என்று மீனாட்சி எட்டி பார்க்க, வாசலில் அருளாளன், வேல்விழி, இனியன் மூவரும் நின்றனர்.

அதியமான் உள்ளுக்குள் வேதனையோடு இருந்தாலும் அண்ணனும் அண்ணன் குடும்பத்தாரும் வரவும் வெளியே வந்தார்.
  மீனாட்சிக்கு அந்தளவு பெருந்தன்மையான மனமில்லை. அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.

அதியமானோ மனைவி செயலை கப்பொழுது கண்டிக்கும் வழியின்றி அண்ணனை வரவேற்றார்.
"வாங்கண்ணே... வராதவங்க வந்திருக்கிங்க" என்று அழைத்தார்.

அருளாளன் முகம் நிறைய சிரிப்புடன் இருந்தது.
"என்ன தம்பி... நம்ம வீட்டுக்கு விசேஷம். பத்திரிக்கை வைக்காம போக முடியுமா? இனியனுக்கும் நம்ம தங்கச்சி மக மதுரவாணிக்கும் கல்யாணம் பேசி பரிசம் போட்டோம். இப்ப ஊரறிய கல்யாண பத்திரிக்கை வைக்க வந்தாச்சு. நல்லது நடக்கறச்ச பழசை எல்லாம் மறந்து நீ கல்யாணத்துக்கு வருவனு நம்பி பத்திரிக்கை வைக்க வந்தேன்" என்று கூறி பத்திரிக்கையை நீட்டினார்.

அதியமான் அதை வாங்கும்போது கைகள் லேசாக நடுங்கின. அவரது பார்வை ஒரு நொடி அகிலன் அமர்ந்திருந்த இடத்தை தொட்டது. அந்த பார்வையில் ஒரு தந்தையின் குற்றவுணர்ச்சி இருந்தது.

மீனாட்சி மட்டும் அறைக்குள் இருந்தார். வெளியே வரவே இல்லை. அவரால் அந்த பத்திரிக்கையை பார்க்க முடியவில்லை.

தூரிகா கோபத்தில் சமையலறைக்குள் உருட்டியபடி நின்றிருந்தாள்.
இனியனோ வேண்டுமென்றே இரும்பி சித்தப்பா தண்ணி" என்று கூற, அவரும் "தூரிகா அண்ணனுக்கு தண்ணி கொண்டு வா."என்று அதியமான் கூறியதும்,
விருப்பமில்லாமல் தண்ணீர் கொண்டு வந்து வைத்தாள்.

இனியன் கிளாஸை வாங்கி குடித்தான். பிறகு நேராக அகிலனை பார்த்தான்.
அவன் முகத்தில் சோகத்தின் சாயலை கண்டதும், வெற்றி பெற்றவன் போல ஒரு சிரிப்பு.
"ஏய் அகிலா... ஊருக்கு வந்த அன்னிக்கு நீ சொன்னியே... கல்யாணம் செய்தா பத்திரிக்கை வை. தம்பி முறைக்கு வந்துடுவேன்னு. இந்தா... பத்திரிக்கையோட வந்துட்டேன். கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடு. எப்படியும் இளையமதி அத்தை பத்திரிக்கை வைப்பாங்க. நம்ம மதுரவாணி தானே பொண்ணு. இருந்தாலும் அண்ணன் என் சார்புல உன்னை நேர்ல அழைக்க வந்தேன். இது கல்யாணத்துக்கு வாங்கின புது துணி." என்று வேல்விழி வைத்திருந்ததை காட்ட, தூரிகாவிடம் தந்தனர்
அவளும் வேறுவழியின்றி கையை நீட்டி வாங்கியிருந்தாள்.

அந்த நொடியில்தான் அகிலனுக்கு எல்லாம் தெளிவானது.
இனியன் மதுராவை விரும்பியதால் இத்திருமணம் நடைப்பெறவில்லை.
மதுராவை தன்னிடமிருந்து பறிக்கவே இந்த திருமணம்.
அவன் கண்களில் தெரிந்த வெற்றிச் சிரிப்பு அதையே சொன்னது.

"'நீ தோற்றுட்ட...' என்று சொல்லாமல் சொன்னது. பெரியப்பா இந்தளவு வன்மத்துடன் தனக்கு எதிராக காய் நகர்த்துவாரென அகிலன் நினைக்கவில்லை.
அகிலனின் கை முட்டி இறுகியது. ஆனால் எதுவும் பேசவில்லை.
அவர்கள் கிளம்பிய பிறகும் அகிலன் அதே இடத்தில் அமர்ந்திருந்தான்.

தூரிகா அருகே வந்தாள்.
"இப்பவாவது புரியுதா?"
என்று கேட்டாள்.
அகிலன் பதில் பேசவில்லை.
அவன் கண்கள் மட்டும் பத்திரிக்கையை பார்த்துக் கொண்டிருந்தன.

மணமகன் : இனியன்
மணமகள் : மதுரவாணி
என்ற எழுத்துக்கள் அவன் நெஞ்சை கிழித்தன.

   இனியன் வீட்டார் தந்த துணிமணி தட்டை தட்டி விட்டு மீனாட்சி நின்றார்.

   "இங்க பாசம் கண்ணை மறைக்குதுல்ல... எம்புள்ள பெயரு இருக்க வேண்டிய இடம். ஆனா உங்கண்ணா என் பையன் வாழ்க்கையை அழிக்கவே இப்படி பண்ணறார். அவர் பையன் கல்யாணம் விளங்கவே விளங்காது." என்று கத்தினார்.

  தூரிகாவுமே "அம்மா.. சபிக்காத.‌ அங்க கல்யாட பொண்ணா நிற்க போறது நம்ம மதுரவாணிம்மா" என்றாள்.

மீனாட்சியோ "ஏன் சபிக்க கூடாது. அவளுக்கு எம்மகன் தான் முக்கியம்னா பரிசம் போடறச்ச நான் அகிலனை தான் கட்டிப்பேன்னு சொல்ல என்னவாம். அவளுக்கு அவ வாழ்க்கை முக்கியம்னா ஆத்தாளையும் அப்பனையும் எதிர்த்து நிற்க என்ன கேடு." என்றார்.
   தூரிகாவுக்கு மதுரா மீது அந்த கோபமும், உண்டு. பரிசம் போட்டப்ப செயின் போட்டப்ப கழட்டி வீச வேண்டியது தானே?
இதில் அகிலனுக்கும் அதே எண்ணம் உதிர்த்தது. அவளும் தன்னை போலவே சூழ்நிலை கைதியாகி நின்றுயகருந்து, தனது வருகையால் மனதை திறக்க நினைத்திருந்தால்... அந்த எண்ணம் வந்ததும் நேரம் காலம் பாராமல் தாய் தந்தையரிடம் கூட அனுமதி கேட்டிராது  அந்தி சாயும் மாலை நேரம் மதுரா வீட்டிற்கு, எதையோ முடிவு செய்தவன் போல அகிலன் பைக்கை எடுத்தான். நேராக மதுரா வீட்டை நோக்கி சென்றான்.

வாசலில் கல்யாண வேலைகள் நடந்துக் கொண்டிருந்தன.
பந்தல் போட கம்பிகள் இறக்கப்பட்டிருந்தன.

அகிலனை பார்த்ததும் இளையமதி முகம் இறுகியது.
"அத்தை... கொஞ்சம் பேசணும்."
ஹாலுக்குள் வந்தான். மதுரா அங்கு இருந்தாள். அவளை பார்த்ததும் அகிலனுக்கு பேச வார்த்தைகள் வரவில்லை.
பல நாட்களுக்கு பிறகு பார்த்தான். முகம் மெலிந்து போயிருந்தது. கண்கள் அழுது வீங்கி இருந்தன.

"அத்தை... இனியன் மதுராவை விரும்பி எல்லாம் கல்யாணம் பண்ணல. பெரிப்பா என் மேல இருக்கற வன்மத்துல தான், நான் மதுராவை விரும்பறதை தெரிந்துக்கிட்டு இனியனை கட்டி கொடுக்க அவசரமா காய் நகர்த்தியிருக்கார்." என்றான்.
இளையமதி அதிர்ந்து பார்த்தார். "என்ன சொல்ற?" என்றார்.  "இனியனும் மதுராவை நான் விரும்புறது தெரிஞ்சுதான் முந்திக்கிட்டு வந்திருக்கான். அவனுக்குமே பெரிப்பா புத்தி தான் இருக்கு. என்னை அழிக்கணும் தோற்கடிக்கணும்னு தான் மதுராவை கட்ட நிற்கறான்." என்றான். மதுராவின் கண்கள் சட்டென உயர்ந்தன. ஒரு நொடி அகிலன் வந்துவிட்டானென்ற எண்ணத்தை, அடுத்த நொடியே  முகம் வெளிறியது.

"இப்ப சொல்றியா மச்சான்? ஏன்..?" அகிலன் திகைத்தான். இவளும் தன்னை போட்டிக்கு பேச வந்ததாக நினைத்துவிட்டாளா? இளையமதி அத்தையை போல என்று யோசித்தான்.

"மதுரா..." என்று அகிலன் பேச, "நான் அழுதப்ப எங்க இருந்த?" அவளது குரல் நடுங்கியது.
"தூரிகா வந்து சொல்லிட்டு போனாளே. அப்போ வரல. பரிசம் போட்டப்போ வரல. என்னை காப்பாத்து மச்சான்னு கதறினப்பவும் வரல." என்று அடுக்கினாள்.

அகிலன் விளக்கம் சொல்ல முயன்றான்.
"நான்..." என்று தன்னிலை விளக்கமளிக்க முயன்றான்.
"இல்ல. மச்சான்..'' என்று அவள் நிறுத்தினாள்.

"இனியன் மச்சான் விரும்பியோ விரும்பாமலோ பரிசய் போட வந்துச்சு. ஆனா உனக்கு தெரியும்ல.. நான் என்ன நிலையில இருகாகேன். என்‌ மனசுக்கு எதுல விருப்பம்னு. அப்ப வந்து நிற்காம, இப்ப இனியன் மச்சான் பழிவாங்க தான் கல்யாடம் கட்டுதுனு சொல்லி யாரை காப்பாத்த நினைக்கற‌? என்னையா?" என்றவள் மேசையில் இருந்த திருமணப் பத்திரிக்கையை எடுத்து அவன் கையில் திணித்தாள்.
மதுராவுக்கு கண்ணீர் வழிந்தது.
"இதுல பாரு." அகிலன் நடுங்கியபடி பார்த்தான்.
மணமகன் : இனியன்
மணமகள் : மதுரவாணி
"என் பெயருக்கு பக்கத்துல அவர் பேரு போடுற அளவுக்கு வந்த பிறகு... இப்ப கல்யாணத்தை நிறுத்த பேசினா நியாயமா மச்சான்?" என்று கேட்டாள். "இனியன் மச்ஞான் எப்படி அவரு அப்பா எண்ணத்தை போல வன்மமா நினைக்கறதா நீ நினைக்கிற. நீயும் கடைசில உங்க அப்பாரு மாதிரி தியாகி ஆகறிங்களோ? அண்ணனுக்கு விட்டுக் கொடுத்து? ஆக.. என்‌ மனசை விட இனியன் மனசு பெருசா போச்சு? ஆங்.. தூரிகா சொன்னா... மாமா என்ற அம்மை காலுல விழவானு கேட்டதா. அதுக்கு என்னை விட்டுட்டியா? என்னை விட மாமா நிலைமை முக்கியமா போச்சு. அப்படியிருக்க.. இப்ப மட்டும் என்னத்த சொல்ல வந்த? இனியன் மச்சான் கெட்டவராவே இருக்கட்டும். நீங்க ஒன்னும் என்னை காப்பாத்த வேண்டாம்." என்றாள்.

அகிலன் தலைகுனிந்தான்.
அவளது ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.
அவன் தாமதமாக்கி விட்டான்.
மிகவும் தாமதமாக.
அந்த நேரத்தில் கல்யாண சுந்தரம் உள்ளே வந்தார்.
"என்னல இங்க நடக்கு. பரிசம் போட்ட பிள்ளையிடம் என்ன பேசிட்டு இருக்கிங்க. அகிலா... பரிசம் போட்டது உங்க அண்ணனுக்கு... மதுரா உனக்கு அண்ணி முறையாகுது. இன்னும் என்ன பேச்சு?" என்று கத்தினார்.

இளையமதி அமைதியாகவே நின்றார். அவரும் எதுவும் பேசவில்லை.

"வெளியே போ." என்று கல்யாண சுந்தரம் அகிலனின் சட்டையை பிடித்தார்.

"மாமா..." என்று உதிர்த்தவன், மதுராவை தான் பார்வையிட்டான். அவளோ கல் போல கண்ணீரில் நின்றாள்‌.

"வெளியே போன்னு சொல்றேன். என்னிக்கு தான் உனக்கு மரியாதை தெரிந்துயிருக்கு" என்று அகிலனை இழுத்து வாசல் வரை கொண்டு வந்தார்.

"என் பொண்ணு கல்யாணம் நடக்கப்போகுது. இப்ப வந்து குழப்பம் பண்ணுறியா? இதுக்கு தான்ல உனக்கு பத்திரித்கை கூட வைக்கலை." என்று கத்த, அகிலன் எதுவும் பேசவில்லை.

ஒரு முறை மட்டும் மதுரவாணியை திரும்பி பார்த்தான். வாசல் உள்ளே நின்ற மதுரா அழுதுக் கொண்டிருந்தாள். அவள் அத்தனை அழுகையிலும், அவனை நோக்கி ஓடி வரவில்லை. அதுதான் அகிலனுக்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை.

வாசல் கதவு மூடப்பட்டது. மதுராவின் இதயவாசலும் என்று அகிலனுக்கு நன்கு புரிந்துப் போனது.

அகிலன் மட்டும் வெளியே நின்றான். கையில் திருமணப் பத்திரிக்கை. நெஞ்சில் ஆயிரம் குற்றவுணர்வுகள் வலி என்று குடைந்தது. அதே நேரத்தில் உள்ளே நின்ற மதுரா,
'நான் காத்திருந்த நேரத்தில் வராத நீ... இப்ப வந்ததால என்ன மச்சான் பண்ணறது உனக்கு உன் ஆத்தா அப்பன் முக்கியமா போச்சா. இந்த மதுரா இரண்டாம் பட்சமா போயிட்டேனா? விஷயம் தெரிந்ததும் எதுனாலும் சரினு என் மனசை யோசிக்கலையே நீ'
என்று மனதுக்குள் கதறினாள்.

தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.


 
Posted : June 26, 2026 11:46 am
(@Anonymous)
Posts: 0
 

போடி..போடி.. போக்கத்தவளே..! பெருசா அகிலனை குத்தம் சொல்ல வந்துட்டாள்.

 

😀😀😀

CRVS (or) CRVS 2797


 
Posted : June 26, 2026 12:04 pm
(@Anonymous)
Posts: 0
 

மதுர ஜில்லா..மச்சானே ..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 15)

போடி, போடி கூறுகெட்டவளே ! பெருசா அகிலனை மட்டும் வாய் கிழிய அப்பா கோண்டு, அம்மா வாண்டுன்னு குறை சொல்லறாளே... இவ மட்டும் என்ன செய்தாளாம் ? அகிலனாவது தன்னோட விருப்பத்தை பெத்தவங்க கிட்ட சொன்னான், உடனே அதியமானும் தங்கச்சி இளையமதி கிட்ட பேசினார் தானே ? ஆனா, அதற்கப்புறமும் இளையமதி சட்டை பண்ணலைன்னா காலுலயா விழ முடியும் ? இத்தனைக்கும் அந்த இனியன் வந்தது, கையோட பரிசம் போட்டு கழுத்துல செயினை போட்டதெல்லாம் சின்ன மாமா வீட்டாளுங்களுக்குத் தெரியாது தானே..? தெரிஞ்சப் பிறகும் முயற்சி பண்ணாங்கத்தானே..?
அப்புறம் ஏன் அவனோட அப்பாவுக்கு சப்போர்ட் பண்ணான்னு குறை சொல்லணும்...? போகட்டும், இவ மட்டும் பெருசா என்ன பண்ணி கிழிச்சாளாம் அழறதைத் தவிர.
உருப்படியா ஏதாவது செய்தாளா ?
உண்மையாவே இவளுக்கு அகிலன் மச்சான் மேல அத்தனை ஆசைளிருந்திருந்தால், பரிசம் போட விட்டிருக்கலாமா, கழுத்துல செயின் போட விட்டிருக்கலாமா, நெத்தியில குங்குமம் வைக்க விட்டிருக்கலாமா ? அட்லீஸ்ட் இவளோட அம்மா அப்பா கிட்டயாவது எதிர்ப்பையும், மறுப்பையும் தெரிவிச்சிருக்கலாம் தானே..? மிஞ்சி மிஞ்சிப்போனால் திட்டியிருப்பாங்க, அடிச்சிருப்பாங்க.. அவ்வளவு தானே ? இல்ல கொன்னு போட்டிருப்பாங்களா ? மச்சான் மேல அம்புட்டு ஆசையிருக்கிறவ அவனுக்காக உசிரை கொடுக்க மாட்டாளா ? அகிலன், இல்லைன்னா இனியன்னு சும்மா இருந்துட்டு, இப்ப இந்தளவுக்கு அகிலனை கேள்வி கேட்குறாள் தானே, அதையே பெத்தவங்க கிட்டேயும் பெரிய மாமா கிட்டேயும் கேட்க வேண்டியது தானே..?
இம்புட்டு பேசுறவ..ஏன், அந்த வீணாப்போன இனியவன் கிட்டயே நான் கட்டினால் அகிலன் மச்சானைத் தான் கட்டுவேன், இல்லைன்னா உசிரை விட்டுடுவேன்னு சொல்ல வேண்டியது தானே ? பேச வேண்டிய நேரத்துல எல்லாம்
பேசாமல் அழுத்தமா இருந்திட்டு
இப்ப ஏமாந்த இளிச்சவாயன் கிடைச்சவுடனே அவனை வைச்சு செய்றாளோ..? கண்டபடி பேசிடறதா.. ? போடி, போடி..
போக்கத்தவளே !

😴😴😴
CRVS (or) CRVS 2797


 
Posted : June 26, 2026 12:48 pm
(@Anonymous)
Posts: 0
 

அகிலனுக்கு தான் மதுரா இல்லைனு வை ரைட்டர் போட்டு தள்ளபடுவார் 


 
Posted : June 26, 2026 12:52 pm
(@Kavi Bharathi arunkumar)
Posts: 8
 

Madhu unnoda varutham.niyam.than aana ne eppudi situation ah la sikki irukiyo athae pola than ah avan um 


 
Posted : June 27, 2026 12:48 pm
(@kothaihari)
Posts: 54
Trusted Member
 

அகிலனை குத்தம் சொல்லறாலே இவள் என்ன பண்ணா தன்னோட காதலை காப்பற்ற


 
Posted : July 21, 2026 10:44 pm

Scroll to Top