Forum

உறவில் உதயமாகி உயிர...
 
Notifications
Clear all

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -19

1 Posts
1 Users
0 Reactions
1 Views
(@salmaamjathkhan)
Posts: 19
Trusted Member
Topic starter
 
[#230]

உதயம் 💏 19 💏

 

குளித்து விட்டு வெளியே வந்து கட்டிலில் இருந்த பரிசை பிரிக்க, அதிலிருந்த ட்ரெசை பார்த்ததும் எனக்கு கண்களிலிருந்து நிற்காமல் கண்ணீரை வந்தது. 

 

வாய் மட்டும் இடியட் இடியட் இடியட் என முணுமுணுத்தது‌.

 

எப்படி எனக்கு இந்த ட்ரஸ் பிடிக்கும்னு தெரிஞ்சது. அன்னைக்கு டிரஸ் கடைல கூட ஆதித்யா இல்லையே என அந்த கருப்பு நிற சேலையை தடவிப் பார்த்தேன்.

 

ஒருவேளை எதார்த்தமாக இந்த சேலையை எடுத்து இருப்பானோ?

 

எதுவாக இருந்தால் என்ன.ஆதி எனக்கு பிடித்த கறுப்பு நிறத்தை எடுத்துக் குடுத்திருக்கிறான். அதுவும் முதன்முதலாக.

 

தங்க நிற பார்டர் வெள்ளை நிறக் கற்களை கொண்ட அந்த கருப்பு நிற சேலை எனக்கு அமைப்பாகவே இருந்தது. 

 

வாழ்க்கையில் முதல்முறையாக கருப்பு நிறத்தில் அணிகிறேன்.

 

சேலையுடன் சில நகைகளும் இருக்க அதையும் அணிந்துகொண்டேன்.

 

அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

 

" யாரு?"

 

" நான்தான் தி. ரெடி ஆயிட்டியா? ஸ்டோரை ஓபன் பண்ணவா வா?"

 

"முடிஞ்சது. உள்ள வா ஆதி."

 

உள்ளே நுழைந்தவன் என்னைப் பார்த்ததும் சிலையானான். அவனின் பார்வை வீச்சு தாங்காமல் நான் குனிந்து கொண்டேன்.கன்னங்கள் எல்லாம் சூடு ஏறியது.

 

வெட்கம் பிடுங்கித் தின்ன திரும்பிக்கொண்டேன்.

 

என் பின்னால் வந்தவன் என் கூந்தலை முன்புறம் ஒதுக்கி அவன் கையில் வைத்திருந்த நெக்லஸை மாட்டு விட்டான்.

 

"செம அழகா இருக்க."

 

என் காதில் கிசுகிசுத்தான்.அவன் உதடுகள் என் காதை உரச, அவன் மீசை என் கன்னத்தின் குறுகுறுத்தது.

 

மெதுவாக அவனிடமிருந்து விலக முயற்சித்தேன். ஆனால் என்னை நகரவிடாமல் பின்னாலிருந்து அணைத்தவன் என் தோளில் அவன் நாடியை வைத்து கண்ணாடியை காட்டினான்.

 

"அழகுதான். ஆனா என் அளவுக்கு இல்ல.  நெக்ஸ்ட் இன்னும் கொஞ்சம் மேக்கப் போட்டுக்கோ."  என்று சொல்லி சிரித்தான்.

 

நான் திரும்பி நின்று அவனை முறைத்தேன்.

 

"உடனே கோபம் வந்ததுமே." என்றவாறு மூக்கை பிடித்து ஆட்டி விட்டான்.

 

"கொஞ்ச நேரம். நானும் ரெடி ஆயிட்டு வந்திர்றேன்." என குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

 

குளியலறையிலிருந்து வெளியே வந்தவனை பார்த்து சிலையாக நிற்பது இப்பொழுது என் முறையானது.

 

வயிட் சர்ட் பிளாக் கோட் சூட் என அம்சமாக இருந்தான். அவனையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.

 

" இன்னும் எவ்வளவு நேரம்  என்னையே சைட் அடிப்ப. இப்போவே டைம் ஆச்சு சீக்கிரம் வா."

 

"நான் எதுக்கு உன்ன சைட் அடிக்க போறேன். எனக்கு என்ன கண்ணு இல்லயா."  சொல்லிவிட்டு அவன் பின்னே சென்றேன்.

 

அந்த ஐந்து நட்சத்திர விடுதியில்  பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

மதுவின் நெடி  ரூம் ஸ்ப்ரேயுடன் கலந்து மூக்கில் நிறைந்தது.

 

அங்குள்ள பெண்களின் ஆடை அவர்களின் சிக்கனத்தை காட்ட, நான் ஆதியை நெருங்கி நின்றேன்.

 

ஆதித்யா அவன் கையில் என் கையை கோர்க்க கையை நீட்ட நானோ அவன் கையை தட்டி விட்டு நகர்ந்து நின்றேன்.

 

தோளை குலுக்கிக்கொண்டு அவன் முன்னே செல்ல நான் அவன் பின்னே சென்றேன்.

 

உள்ளே நுழைந்தால் எல்லோரையும் ஒரு பார்வை பார்க்க, கடைசியில் அவன் பார்வை ஒரு இடத்தில் நிலைகுத்தி நின்றது.

 

நானும் அவன் பார்வை செல்லும் திசையை நோக்க அங்கே தங்கப்பதுமையாய் அழகே உருவாய் ஒரு பெண் நின்றிருந்தாள்.

 

சிவப்பு நிற சில்க் சாரி கையில்லா பிளவுஸுடன்.எனக்கு சற்று பொறாமையாக இருந்தது.  

 

ஆதி அந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருக்க,நான் அவனை முறைத்துக் கொண்டிருந்தேன்.

 

எவ்வளவு தைரியம் இருந்தால் நான் இருக்கும் போதே வேறொரு பெண்ணை பார்ப்பான்.

 

  அவனை உலுக்க அவன் என்ன என்னை கண்டு கொண்டதாக தெரியவில்லை. அவன் வாய் ஸ்வே என முணுமுணுத்தது.

 

அவனின் ஸ்வே என்ற முணுமுணுப்பு என் காதில் தெளிவாக விழ எனக்கு உலகம் சுழல்வது நின்று விட்டதைப் போல் தோன்றியது.

 

நான் டக்கென திரும்பி அந்த பெண்ணை பார்த்தேன். உள்ளுக்குள் ஏதோ பயப்பந்து உருளுவதை என்னால் உணர முடிந்தது.

 

"ஹலோ,மிஸ்டர். ஆதித்யா குமார்.உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். கம்." எங்கிருந்தோ வந்த ஒருவன் எங்களை அந்த பெண்ணை நோக்கி அழைத்துச் செல்ல ஆதியும் பார்த்துக்கொண்டே சென்றான். 

 

வேறு வழியின்றி நானும் ஆதித்யாவை பின் தொடர்ந்தாலும் என் பார்வையும் அந்தப் பெண்ணிடத்தில் இருந்தது.

 

அந்த மனிதன் எங்களை அந்தப் பெண்ணிடமே அழைத்துச் சென்றவன்,

 

"மிஸ்டர் ஆதித்யா குமார்.  மீட் மை ஒய்ப் மெசேஜ் ஸ்வேதா ஜெயராமன்."

 

நான் சந்தேகப்பட்டது உறுதியாகிவிட்டது. இவள்தான் ஸ்வேதா. ஆதியின் முன்னாள் காதலியாக இருந்திருக்க வேண்டும்.

 

ஆனால் அவள் தான் இறந்து விட்டால் என சஞ்சய் அண்ணாவின் அம்மா கூறியது நினைவில் வந்தது. அப்போது எப்படி இவள் இங்கே என குழம்பிக் கொண்டிருந்தேன்.

 

"எஸ்கியூஸ் மீ" என்ற ஆதி அங்கிருந்து நகர்ந்தான். அங்கு மது பாட்டில்கள்அடுக்கி வைக்கப்பட்டிருந்த  இடத்திற்கு சென்றான்.

 

அங்கிருந்த ஒரு ஆசாமி கிளாசில் ஏதோ ஊற்றி கொடுக்க ஒரே மடக்கில் முழுவதையும் குடித்து முடித்தான். நான் ஆதியையே பார்த்துக் கொண்டிருக்க அந்தப் பெண் என்னிடம் பேச ஆரம்பித்தாள்.

 

"யார் நீ?"

 

நான் அவளைப் பார்த்து விட்டு எங்களை அவளிடம் அழைத்து வந்த அந்த ஆளை தேடினேன். ஆனால் அவனோ அங்கு இருந்ததற்கான அடையாளம் இல்லை.

 

"நான் ஆதித்யா வைஃப்."

 

என்னை பார்த்து நக்கலா சிரித்தவள்,

 

" நான் யாருன்னு தெரியுமா? ஆதி யோட கேர்ள் ஃப்ரெண்ட்."

 

"அந்த பொண்ணு செத்துட்டா தா சொன்னாங்க."

 

"ஆமாம் நான் தான் அப்படி சொல்ல சொன்னேன்."

 

"எதுக்கு?"

 

"அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போற"

 

"நான் எதுவும் பண்ண போறதில்லை.செத்தவ செந்தவலாவே இரு.எங்க லைஃப்ல வர்ற நினைக்காத. ஆதி என் ஹஸ்பன்ட். என்னோட ஹஸ்பண்ட் கிட்ட இருந்து தள்ளியே இரு."

 

என அவளிடம் இருந்து விலக முயற்சித்தேன்.

 

நான் தள்ளி இருந்தாலும் உன்னோட "ஹஸ்பண்ட் என்னை விட்டு தள்ளி இருக்க மாட்டான். ஏன்னா அவன் என்ன அவ்வளவு காதலிக்கிறான்.ஆதித்யாவ என் கிட்ட இருந்து உன்னால பிரிக்க முடியாது."

 

"மைன்ட் யுவர் வேர்ட்ஸ் மிஸஸ். ஜெயராமன். ஆதித்யா என்னோட புருசன்.எனக்கு மட்டும் சொந்தமானவன்.  உனக்கு மேரேஜ் ஆயிடுச்சு. அத ஞாபகத்துல வச்சிக்கோ.

 

ஆதித்யா மனசுல இப்போ நான் தான் இருக்கேன். நான் மட்டும்தான் இருக்கேன். புரிஞ்சுதா?" என்ன அவளே புரியவைக்க முயற்சி செய்தேன்.

 

"அதையும்தான் பார்க்கலாமே. நானா உன் புருஷன் கிட்ட போக மாட்டேன். உன் புருஷன் என்கிட்ட வந்தா விடவும் மாட்டேன்." எனக்கே சவால் விட்டவள் என்னிடமிருந்து விலகி சென்றாள்.

 

நான் ஆதியிடம் சென்று அவனின்  கையை பிடித்து அவனை அங்கிருந்து அழைத்து வந்தேன்.

 

"ஆதி என்ன பண்ற. போதும் நீ குடிச்சது."

 

அவன் என் பேச்சை கவனிக்காமல் கண்களால் அந்த இடத்தை துலாவினான்.

 

அதேபோல் அவனின் பார்வை ஸ்வேதாவின் மீது பட்டதும் மெதுவாக அவன் மீது போட்டிருந்த என் கையை நீக்கிவிட்டு ஸ்வேதாவிடம் சென்றான்.

 

என்னை விலக்கிவிட்டு ஸ்வேதாவை நாடி சென்றது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

 

எனக்குத்தான் தெரியுமே ஆதித்யா ஸ்வேதாவை எவ்வளவு காதலித்தான் என்று.

 

இறந்து போனவளாய் இருந்தவள்  எப்படி திடீரென வந்தாள் என தெரியவில்லை. ஆனால் எங்கே என் ஆதித்யாவை என்னிடமிருந்து பிரித்து விடுவாளோ என்ற பயம் எனக்குள் இருந்தது.

 

ஆதித்யா ஸ்வேதாவின் அருகில் சென்றதும் அவனை கண்டுக்காமல் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றாள்.

 

ஆனால் ஆதித்யா அவளை விடுவதாக இல்லை. அவள் பின்னேயே சுற்றிக் கொண்டிருந்தான்.

 

ஒரு கட்டத்தில் அவளின் கையை பிடித்து அவன் அருகில் இழுக்க அவன் மேலேயே மோதி நின்றாள்.

ஸ்வேதா ஆதியின் நெருக்கம் என்னுள் சொல்ல முடியா உணர்வுகளை ஏற்படுத்தியது.

 

மனம் வலித்தது. இந்த உலகம் இந்த நிமிடமே நின்று விடக்கூடாதா என்ற அளவிற்கு ஏக்கம் பிறந்தது. வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டேன்.

 

ஆதித்யாவும் ஸ்வேதாவும் நெருங்கி நிற்க ஸ்வேதாவின் இடது கை அவனின் இடுப்பை வளைத்து, அவள் வலது கையால் ஆதித்யாவின் கன்னங்களை  வருடினாள்.

 

கையை மெதுவாக கீழிறக்க அவனின் மார்புகளில் ஆரம்பித்த கோலத்தை அவனுடைய நடு வயிற்றுப் பகுதியில் நிறுத்தி ஓரக்கண்ணால் என்னை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தாள்.

 

அதிலேயே உடைந்துவிட்டேன். என் இதயம் சுக்கு நூறாகி விட்டது.என் ஆதித்யா எனக்கு இல்லை.

 

இவ்வளவு நடந்தும் ஆதித்யா அவளை தன் நெருக்கத்திலேயே வைத்திருந்தான். அவளின் கண்களை அவன் கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தான்.

 

எனக்கே கேட்காத உடைந்த குரலில் ஆதி என முனங்கினேன். அதற்கு மேல் நிற்க முடியாமல் சற்று கீழே அமர்ந்து. கண்ணீர் என் கன்னங்களை வருடி சென்றது.

 

அருகில் இருந்த ஒருவன் என் தோளை தொட அவனிடமிருந்து வந்த மதுவின் வாடையில் அவனிடமிருந்து விலகி அந்த இடத்திலிருந்து ஓடினேன்.

 

வழிந்த கண்ணீரை துடைக்க மனமில்லாமல்  டாக்ஸியில் ஏறி நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தேன்.

 

ஹோட்டலில் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்தபோது  அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது. 

 

அந்த ரூம் பாய் நான் சொன்னதை கேளாமல் மீண்டும் அறையை அலங்கரித்து வைத்து விட்டான்.

 

எனக்கு வந்த கோபத்தில் என் இயலாமை தனத்தை அந்த அலங்காரங்கள் மீது காட்டினேன்.

 

எல்லா அலங்காரத்தையும் கலைத்து விட்டு மடிந்து அமர்ந்து அழுதேன்.

 

என்னை ஆறுதல் படுத்த கூட யாரும் இல்லாமல் தனியாக இருந்தேன்.

 

என் ஆதி என்னை விட்டு சென்று விட்டான் என்று நினைக்கும் பொழுது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

 

அவன் கை என் கையை விலக்கிவிட்டு சுவேதாவின் நெருக்கத்தில் இருந்தது திரும்பத் திரும்ப என் கண்முன் வந்து சென்றது.

 

கண்கள் கலங்க அமர்ந்திருந்தேன். என்னால் என்ன செய்வது என்று தெரியவில்லை. கண்ணாடியில் என்னை பார்த்தேன்.

 

அழகுதான் ஆனா என்னை விட கொஞ்சம் கம்மிதான் என்று அவன் சிறிது நேரத்திற்கு முன் என் தோளில் நாடியை புதைத்துக்கொண்டது கண்ணாடியில் நிழலாக தோன்றியது.

 

மீண்டும் அழுக நான் அணிந்திருந்த கருப்பு நிற சேலையை கண்ணாடியில் பார்த்தேன்.

 

பாட்டி சொன்னது நினைவு வந்து தாக்கியது.

 

"என்னடி இது அபசகுனமா? கல்யாணத்துக்குப் புடவை எடுக்க வந்தா, கருப்பு கலர் எடுத்து  மேல் வைச்சுக்கிட்டிருக்க." 

 

"கொஞ்சமாவது அறிவு இருக்கா. முத முதல கல்யாணத்துக்காக புடவை எடுக்க வந்தா. இப்படி அபசகுணமா பண்ணிக்கிட்டு இருக்க. வா வந்து என் கூட நில்லு."

 

உண்மையிலேயே கருப்பு நிறம் அபசகுணமாக என்னுள் தோன்றியது.

 

வேகவேகமாக என்னை சுற்றி இருந்த அந்த சேலையை கழட்டி தூக்கி எறிந்தேன். சேலையின்றி சட்டையுடனும் பாவாடையுடனும் நின்று வந்து அழுதேன். என் கண்ணீர் வற்றும் வரை அழுது கொண்டிருந்தேன்.

 

இதற்கு மேல் ஆதித்யாவை எதிர்கொள்ளும் சக்தி எனக்கு இல்லை. துணியை எடுத்துக் கொண்டு குளியல் அறையில் புகுந்து வேறு உடைக்கு மாறி விட்டு வெளியேறினேன்.

 

எங்கு செல்ல என்று தெரியவில்லை. என் பெற்றோர்களிடம் சென்றால் அவர்களிடம் என்ன சொல்வது. அத்தை மாமாவிடம் சொன்னால் அவர்களிடம் எப்படி சொல்வது.

 

ஆதி அவனுடைய முன்னாள் காதலுடன் சேர்ந்து விட்டாள் என்று.

 

வந்த கண்ணீரை அடக்க வழி இன்றி கால்கள் சென்ற வழியில் சென்றேன்.

 

கையில் அலைபேசி கூட இல்லை.

 

"தியா..." என்ற குரல் கேட்க உணர்வுகள் இன்றி திரும்பி நின்றேன்.

 

ஆறடி உயரத்தில் ஒருவன் நின்றிருந்தான். நான் அவனை யாரென்று புரியாத கேள்வியுடன் பார்க்க அவனை பார்த்தேன்.

 

  என்னை அவன் நெருங்க என் மூக்கை தொட, என் நினைவுகள் என்னைவிட்டு செல்வதையும் நான் அவன் மேலேயே சரிந்ததையும் உணர்ந்தேன்‌.

 

நான் கண் விழிக்கும் பொழுது என் எதிரே ஸ்வேதா அமர்ந்திருந்தாள்.

 

அதே சிவப்பு நிற சில்க் சாரியில் ஸ்வேதா நின்றிருந்தாள். கண்களை கசக்கி விட்டு மீண்டும் பார்த்தேன். ஸ்வேதாவே தான். சுற்றி முற்றிப் பார்த்தேன்.

 

அந்த இடம் ஏதோ ஹோட்டலில் அறை போல் இருந்தது.

 

என் கைகால்கள் கட்டியிருக்க நான் அதைக் கழற்ற முயற்சி செய்து கொண்டிருந்தேன்.

 

"உன்னால முடியாது தியா."

 

"உனக்கு என்ன வேணும். ஏன் இப்படி எல்லாம் பண்ற.எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்த?"

 

"வெயிட் பண்ணு. வெயிட் பண்ணு. இப்படியே மொத்தமா எல்லாம்  கேட்டா நான் என்ன பண்றது?

 

ஒன்னொன்னா சொல்றேன். எனக்கு ஆதி வேணும். எனக்கு மட்டும் முழுசா வேணும்."

 

"என்னோட புருசனை கேக்குறியே. உனக்கு வெக்கமா இல்ல."

 

"நான் எதுக்கு வெட்கப்படனும் ஆதி என்னைதான் காதலிச்சான்."

 

"நீதான் செத்துப் போயிட்டதா சொன்னாங்க.எப்படி திரும்ப உயிரோட வந்த. ஆதி வேணும்னு சொல்றவ இவ்வளவு நாள் எங்கே போயிருந்தாய் எதுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணுன"

 

"நான் என்ன பண்ணட்டும் .எனக்கு மட்டும் என்ன செத்துப்போயிட்டேன்னு சொல்ல ஆசையா?

 

லோயர் மிடில் கிளாஸ் ஃபேமிலில பிறந்தது என் தப்பு இல்லயே.

 

அப்பப்போ பாக்கெட் மணிக்காக நாலஞ்சு பசங்க லவ் பண்ணனுனேன். அதுல ஆதியும் ஒருத்தன்.

 

ஆனா ஆதி இவ்வளவு பணக்காரனா இருப்பான்னு எனக்கு தெரியாது. அதனால அவளோட சொத்தை அடைய   அவன் கூட  க்ளோசா பழகினேன்.

 

ஆனா அந்த லூசு என்னன்னா எனக்கு பணம் வேணாம் சொத்து வேணாம் ஸ்வேதா மட்டும் போதும்னு அவங்க அப்பாகிட்ட வீரவசனம் பேசிட்டு வந்துட்டான்.

 

அதுக்கப்புறம் அவன வச்சுட்டு நான் என்ன பண்ண முடியும். 

 

எனக்கு ஆதிய பத்தி நல்லா தெரியும். அவனுக்கு ஒரு விஷயம் வேணும்னா கண்டிப்பா வேணும்.

 

வேணாம்னா அதை அவன் மேல திணிக்க முடியாது.

 

அவன சமாளிச்சு திரும்ப அவன் அப்பா கிட்ட இருந்து சொத்தை வாங்குவது கஷ்டம். அதுக்கு மேல என்னோட அண்ணே ஆதியோட அப்பா கிட்ட என்னை பத்தின எல்லா உண்மையும் சொல்லிட்டான். இதுக்கு அப்புறம் என்ன கல்யாணம் பண்ணி வப்பாருங்குற.

 

நான் அவள காதலிச்சதே அவனோட சொத்துகாக தான். அதுவே இல்லாதப்போ அவனுடைய இருந்து என்னை வேலைக்கு போயி கொடுக்க போற நாற்பதாயிரம் ஐம்பதாயிரம்க்கு என்னால குடும்பம் நடத்த முடியாது.

 

அதான் அவனை கழட்டிவிட அந்த ஆக்சிடெண்ட்ட யூஸ் பண்ணிக்கிட்டேன்."

 

"உன் வீட்ல கூட நீ செத்துட்டதா மாலை போட்டு இருந்தாங்க."

 

"அவங்களுக்கு வேற வேலை இல்ல. குடும்பம் மானம் மரியாதை கற்புன்னு டயலாக் பேசிட்டு இருப்பாங்க. அதுல என்னோட அண்ணனும் சேர்த்தி.

 

அதான் அன்னைக்கு பார்க்ல ஆதி அடிக்கும்போது நல்ல அடி வாங்கட்டும்னு வேடிக்கை பார்த்தேன்.

 

அதுக்கப்புறம் போலீஸ் வரத பாத்துட்டுதான் காப்பாற்ற மாதிரி நடிக்க வேண்டியதா போச்சு."

 

"கூட பிறந்த அண்ணன் அடி வாங்குறதையே ரசிச்சிருக்கயே."

 

"வேற என்ன பண்ணனும்.  அவனுக்காவது தங்கச்சிக்காக சம்பாதிக்க துப்பு இருக்கணும். அதுவும் இல்லைங்கும் போது என்னை என் வழியில் விடணும்.

 

அத விட்டுட்டு எத்தனை பையன் கூட பேசுவ. லவ் பண்ணுவன்னு  கேட்குறான்.அதான் ஆதி அடிச்சுகிட்டு இருக்கும்போது வாங்கட்டும்னு விட்டுட்டேன்."

 

"நான் கூட ஆதியோட காதலை பார்த்து உங்க ரெண்டு பேரோட காதலை பார்த்து, வாழ்ந்தா உங்கள மாதிரி வாழனும் னு நினைச்சேன். ஆனால் நிச்சயமாக நான் நினைச்சு கூட பாக்கல நீ இருப்பன்னு. ச்சீஈ நீஎல்லாம் ஒரு பொண்ணா?"

 

"இதெல்லாம் ரொம்ப வாட்டி கேட்டாச்சு. நான் பொண்ணா பையனான்னு நீ தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்லை.

 

எனக்கு ஆதித்யா வேணும் அவ்வளவு தான்."

 

"அவன் நீ பணத்துக்காகத்தானே  லவ் பண்ண. இப்ப தான் உனக்கு அந்த பணம் இருக்குல. அப்புறம் எதுக்கு ஆதித்யாவ கேக்குற."

 

"அப்ப எனக்கு பணம் தேவை பட்டது. இப்ப அது என்கிட்ட நிறைய இருக்கு. ஏன்னா ஜெயராமனோட மொத்த சொத்தும் இப்ப என் பேர்ல தான் இருக்கு.

 

அதனால இப்போ எனக்கு ஆதித்யா வேணும். அவனோட காதல் வேணும்.அவன மாதிரி யாராலும் என்னை காதலிக்க முடியாது.

 

நானே திரும்ப ஆதித்யாவை சந்திக்க நினைச்சேன்.

 

ஆனா விதி எங்களை சேத்து வச்சுருச்சு. ஆனா எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நீ இருக்க. அதனாலதான் உன்னை இப்போ கொலை பண்ண போறேன்."

 

"நீ என்ன பைத்தியமா? நீ என்னை கொன்னா மட்டும்  ஆதித்யா உன்கூட சேர்ந்து வாழ்வான்னு  நினைக்கிறியா? உன்னை பத்தி தெரிஞ்சா உன் பக்கம் கூட திரும்பி பார்க்க மாட்டான்."

 

"இப்பவும் ஆதித்யா மனசுல நான் தான் இருக்கேன். நீ மட்டும் இல்லாம இருந்திருந்தா இந்நேரம் ஆதித்யா கூட அவன் ரூம்ல நான் இருந்திருப்பேன்."

 

எவ்வளவு தைரியம் இருந்தால் என்னுடைய ஆதித்யாவை பற்றி இப்படி பேசியிருப்பாள்.

 

அவள் ஆதித்யாவை உண்மையிலே காதலித்திருந்தால் என்னுடைய ஆதிக்காக விட்டுக் கொடுத்து இருப்பேன்.

 

ஆனால் இப்படிப்பட்ட ஒருத்தியை என்னுடைய ஆதித்யா எப்படி காதலித்தான் என்றுதான் தெரியவில்லை. கண்டிப்பாக இவளிடம் ஆதித்யாவை விடமாட்டேன்.

 

"அது என் உயிர் இருக்கிற வரைக்கும் நடக்காது."

 

"அதனால தான் உன் உயிரை எடுக்க போறேன்."

 

"ஸ்வேதா.... ஸ்வேதா..." என கதவு தட்டும் சத்தம் கேட்டது. அது என் ஆதித்யாவின் குரல்.

 

"ஆதி..."என ஆதிக்கு கேட்டுவிட வேண்டும் என என்னால் முடிந்த மட்டும் கத்தினேன்.

 

ஆதிக்க என் குரல் கேட்டு இருக்கவேண்டும் கதவை உடைக்க ஆரம்பித்தான்.

 

ஆதி கதவை உடைத்து உள்ளே வருவதற்கும் ஸ்வேதா என் கழுத்தில் கத்தி வைப்பதற்கும் சரியாக இருந்தது.

 

"அவள விட்டு அவள ஏதும் பண்ணாத."

 

"நான் இன்னும் உன்ன தான் லவ் பண்றேன். நாம நம்ம லைஃப்ப அமைச்சுக்கலாம். நமக்கு நடுவுல தி ய கொண்டு வராதா."

 

"நான் உன்ன நம்பமாட்டேன் ஆதித்யா. ஏன்னா நான்

உன் கண்ணுல இவளுகான காதலை பார்த்தேன்.

 

இவை இருக்கிற வரைக்கும் நீ என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்ட. இவ செத்துட்டா தான் நாம நிம்மதியா வாழ முடியும்."

 

என்றவள்  நொடியும் தாமதிக்காமல் என் நெஞ்சில் கத்தியை இறக்கினாள்.

 

கத்தி என்னுள்ளே இறங்க ஆதித்யாவின் 'தி' என்ற அலறல் மட்டுமே எனக்கு கேட்டது. கண்கள் சொருக மயங்கினேன்.

 


 
Posted : July 27, 2026 6:58 am

Scroll to Top