உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -18
உதயம் 💏 18 💏
"ஆதித்யா ரொம்ப சுறுசுறுப்பான பையன். குறும்புத்தனம் அதிகமாக இருக்கும். யாரையாவது வம்புக்கு இழுத்துட்டே இருப்பான். எப்பவும் அவன் முகத்தில சிரிப்பு இருந்துட்டே இருக்கும்.அவன் இருக்குற இடமும் கலகலன்னு தான் இருக்கும்.
காலேஜ் முடிந்ததும் அவன் அப்பா அவன ஆபீஸர் பார்த்துக்க சொன்னதுக்கு,
'சாரி பா, லைஃபை அந்த அந்த டைம்ஸ் என்ஜாய் பண்ணனும்னு.
பிசினஸ்ஸ எடுத்துக்கிட்டா அது பின்னாடியே ஓட வேண்டியதாக இருக்கும். கம்பெனியோட லாபம் நஷ்டம் எல்லாத்தையும் ஹாண்டில் பண்ணனும். ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்கும். அதனால நான் பிசினஸ் பண்ண போறது இல்ல.
அப்புறம் இப்பதான் எக்ஸாம் அரியர் இன்டர்ணல் அப்படின்னு எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்து இருக்கேன். இப்ப திரும்ப ஆபீஸ் பைல் இதுக்கெல்லாம் முன்னாடி கொஞ்சம் சந்தோஷமா இருக்கணும்ன்னு நினைக்கிறேன்.
கொஞ்ச நாளாவது லைஃப்ல எந்த விதமான டென்ஷனும் இல்லாம சந்தோசமா அம்மா சமைச்சத சாப்பிட்டு ஊர் சுத்தி எல்லார்கிட்டயும் திட்டு வாங்கிட்டு இருக்கணும்னு ஆசை படுறேன்.
நீங்க என் அம்மாவோட ரொமான்ஸ் பண்ண ஆபீஸ்ஸ என் தலைல கட்ட பாக்காதீங்க. அது இந்த ஆதித்யா குமார் கிட்ட நடக்காதுன்னு
லைஃப் நல்லா என்ஜாய் பண்ணிட்டு, அதுக்கப்புறம் ஏதாவது ஒரு நல்ல கம்பெனில ஜாயின் பண்ணி ஜஸ்ட் என்னால முடிஞ்ச வெளியே பார்க்க போறேன்."அப்படின்னு சொல்லிட்டு சுத்திக்கிட்டு இருந்தான்.
ஏதோ பண்ணிக்கோன்னு விட்டுட்டாங்க பவித்ராவும் விஷ்ணுவும்.
அப்படி ஒருநாள் தியேட்டர்ல ஸ்வேதாவை மீட் பண்ணுனான். பார்த்ததும் காதல்ல விழுந்துட்டான். ஸ்வேதாவும் அப்படித்தான். ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் தங்களோட காதல சொல்லி அவங்க காதல பெருக்க ஆரம்பிச்சிட்டாங்க.
இவங்களும் மொத்த காதலர்கள் மாதிரி போன் எஸ்எம்எஸ் பார்க் மால் தியேட்டர்ன்னு பேசி பார்த்து பழக ஆரம்பிச்சாங்க.
ஸ்வேதாவும் ரெண்டு மூணு தடவ ஆதியோட கேரளாக்கு வந்து இருக்கா.
ரொம்ப அன்பா பேசுவா.
இப்படியே இவங்க காதலிச்சு இரண்டு வருசம் ஓடி போய்ருச்சு.
ஒரு நாள் ரெண்டு பேரும் பார்க்கு போய் இருந்தாங்க.
அப்ப ஒருத்தன் வந்து ஸ்வேதாவை கன்னத்தில் அறைஞ்சுட்டான்.
அதைப்பார்த்த ஆதி கோபத்துல எப்படிடா என்னோட ஸ்வேதா அடிக்கலாம்னு அவன அடி பின்னி எடுத்துட்டான்.
ஸ்வேதா அவங்க இரண்டு பேரையும் தடுத்து ஏதோ சொல்ல பார்த்தா.
அதுக்குள்ள அங்க ரவுண்ட்ஸ்ல இருந்த போலீஸ் அவங்க மூணு பேரையும் ஸ்டேசன்க்கு கூட்டிட்டு போய் விசாரிச்சாங்க.
அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது அந்த பையன் ஸ்வேதாவோட அண்ணன்னு.
அதுக்கப்புறம் ஆதித்யா நிலைமைய புரிஞ்சுக்கிட்டு ஸ்வேதாவோட அண்ணா கிட்ட மன்னிப்பு கேட்டான்.
ஆனால் அவன் ஸ்வேதாவை முறைச்சுக்கிட்டு போயிட்டான்.
இதெல்லாம் ஸ்டேசன் இருந்த இன்ஸ்பெக்டர் மூலமா விஷ்ணு காதுக்கு போச்சு.
ஒரு ரெண்டு நாள் கழிச்சு விஷ்ணு இதை பத்தி ஆதித்யா கிட்ட பேசுனான்.
அந்த பொண்ணு மிடில் கிளாஸ் பொண்ணுப்பா. அந்த பொண்ணுக்கும் நமக்கும் செட்டாகாது.
நீ ஊர் சுத்துனது போதும் ஒழுங்கா பிஸ்னஸ கைல எடுத்துக்கோ அப்படின்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனால் ஆதி கேட்கவே இல்ல.
கோவத்துல என்னால முடியாது எனக்கு ஸ்வேதா தான் எல்லாமே அப்படின்னு சொல்லி அவன் அப்பா கிட்ட சண்டை போட்டான்.
அப்படி என்னடா உன்ன மயக்கிட்டான்னும், சுவேதாவை பத்தி தப்பாவும் பேச ஆதித்யாக்கு கோவம் வந்துருச்சு.
ஆதித்யா அவங்க அப்பாவையே அடிச்சுட்டு எனக்கு உங்க பணம் சொத்து எதுமே வேணாம். இனிமே நான் உங்க பையன் இல்ல அப்படின்னு சொல்லி வீட்ட விட்டு வெளிய வந்துட்டேன்.
வெளியே வந்தவள் நேராக ஸ்வேதாவை மீட் பண்ணி நடந்தத சொல்லி ஃபீல் பண்ணுனான்.
அதுக்கு ஸ்வேதா இது தப்பு. உங்க அப்பா எது பண்ணாலும் உன் நல்லதுக்குதான் பண்ணுவாங்க.
கோபத்தில தான் நீ அவங்க பேச்சு கேக்க மாட்டேங்குறன்னு என்ன பத்தி சொல்லி இருப்பாங்க.
இதுக்கு நீ உங்க அப்பா அடிச்சதும் பிள்ளையே இல்லன்னு சொன்னதும் ரொம்ப தப்பு. இதை பெரிதுபடுத்தாம அவர் கிட்ட போய் மன்னிப்பு கேளு அப்படின்னு சொல்லி சமாதானம் படுத்துனா.
அதுக்கப்புறம் ரெண்டு பேரும் அந்த இடத்துல கிளம்பினாங்க.
அப்பதான் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது.
நடந்த பிரச்சனைகள் எல்லாம் யோசிச்சுக்கிட்டே வண்டி ஓட்டினா ஆதி எதிர்ல வந்த லாரியை கவனிக்கல.
எதிர்ல வந்த லாரி மோதி ரெண்டு பேரும் தூக்கி வீசப்பட்டாங்க.
தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருந்த ஸ்வேதாவை தான் ஆதி கடைசியா பார்த்தான்.
ஆமா மா அந்த ஆக்சிடெண்டில ஸ்வேதா இறந்து போயிட்டா. ஆதியும் கோமாக்கு போயிட்டான்.
மூணு மாசம் கழிச்சுதான் ஆதி கோபால் இருந்து வெளிய வந்தான்.
கோமால இருந்து வந்த உடனே சுவேதா பத்திதான் கேட்டான்.
அந்த நேரத்துல அவனுக்கு எந்த அதிர்ச்சியான தகவலும் சொல்லக்கூடாது .அப்படிச் சொன்னால் திரும்பவும் கோமாக்கு போற நிலைமை வரலாம் டாக்டர் சொல்லிட்டாங்க .
அதனால நாங்க யாரும் எதுவும் சொல்லல.தெரியலன்னு மட்டும் தான் சொன்னோம்.
ஆனா அன்னைக்கு நைட்டே ஆதித்யா எங்க யாருக்கும் தெரியாம ஸ்வேதா வீட்டுக்கு போயிருக்கான்.
ஸ்வேதா வீட்டில ஸ்வேதா படத்துக்கு மாலை போட்டு இருந்ததை பார்த்து உடைஞ்சு போய்ட்டான்.
அவ அண்ணனை பார்த்து எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டான்.
அதுக்கப்புறம் எங்க போனான் என்ன ஆனான் எதுமே தெரியல.
நாங்க தேடாத இடமில்லை.
அப்போ போன் வந்தது. ஆதித்யா ரோட்ல விழுந்து கிடக்குறான்னு.
விஷ்ணுவும் சஞ்சயும் தான் போய் கூட்டிட்டு வந்தாங்க.
பவித்ரா ஆதித்யாக்கு ஆறுதல் சொல்லியும் தூங்க வச்சா.
அடுத்தநாள் ஆதித்யாவை பார்க்க அவன் போகும்போது வாயில நுரை தள்ளி இருந்தது.
அவன ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனாங்க.
நான் தூங்குனதுக்கு அப்புறம் பாய்சன் குடிச்சுட்டான்னு சொன்னாங்க.
அதுக்கப்புறம் கவுன்சில் கொடுத்து என்னென்னவோ பண்ணியாச்சு. ஆனால் நினைப்பு எல்லாம் ஸ்வேதா மேலேயே தான் இருந்தது.
அவனோட அஜாக்கிரதை யால தான் ஸ்வேதா அவன விட்டுட்டு போய்ட்டான்னு ரெண்டு மூணு தடவை சூசைட் பண்ணினா.
ஆனால் கடவுள் புண்ணியத்துல அவனை காப்பாற்றியாச்சு.
ஆனா அது நடைபிணமா சுத்திக்கிட்டு இருந்தான்.
ஆதியோட இந்த நிலைமையை பார்த்து பவித்ரா ரொம்ப கஷ்டப்பட்டா. அதிலேயே அவளுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு.
அதுக்கப்புறம் பவித்ராவை காரணம் காட்டியே ஆதித்யாவை கொஞ்சம் கொஞ்சமா தேத்தி கொண்டு வந்தோம்.
ஆனால் அந்த பழைய ஆதியோட சந்தோசத்தையும் குறும்புத்தனத்தையும் எங்களால வெளியே கொண்டு வர முடியல.
அவனுக்கு பிடிக்காத பிசினஸ்ஸ செய்ய கையில் எடுக்க ஆரம்பிச்சான்.
எப்பவும் பிசினஸ் செய்ய ஸ்வேதாவை ஓரளவு அவனால மறக்காம முடிஞ்சது.
ஆனால் இன்னும் அவன் யாரோடயும் ஒட்டாம தான் சுத்திக்கிட்டு இருந்தான்.
நாங்களும் எவ்வளவோ இங்கே கூப்பிட்டு பார்த்தோம். மாட்டேன்னு சொல்லிட்டான்.
நாங்க தான் ரெண்டு தடவை போய் அவன பாத்துட்டு வந்தோம். ஆனால் அந்த கண்ணல அந்த சந்தோசம் , அந்த உயிர்ப்பு இல்லவே இல்லை.
கடமைக்காக வாழுற மாதிரி தான் இருந்தான்.
இந்த மூணு வருஷம் கழிச்சு நேத்து தான் அவன் முகத்தில சந்தோசத்தையும் கண்ணுல காதலையும் உயிர்ப்பையும் பார்த்தேன்.
உனக்காக உயிர் வாழனுங்குற ஆசையும் பார்த்தேன்.
ஆனால் உங்களுக்குள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியல.
நேத்து நைட்டுல இருந்து உங்க ரெண்டு பேர் மூஞ்சியும் சரி இல்ல.
இன்னைக்கு காலைல ஆதித்யா ரொம்ப நொந்து போய் தெரிஞ்சா.
ஆதித்யா ஏதாவது தப்பு பண்ணியிருந்தாலோ உன்ன கஷ்டப்படுத்தி இருந்தாலோ அவன் கிட்ட பேசி பாருமா.
அவனோட தப்பா திருத்திக்க அவனுக்கு ஒரு வாய்ப்பு குடுமா. அவன திரும்பவும் உணர்ச்சி இல்லாத ஜடமா பார்த்திராத மா."
என அழுது கொண்டே அங்கிருந்த நகர்ந்தார்.
"இப்ப நான் சொல்றதுக்கு எதுவுமே இல்ல.
உன் மனசுல அண்ணாதான் இருக்காருன்னு உனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு.
அதே மாதிரி அண்ணாவோட மனசுக்குள்ள நீ இருக்கலாம்.
எல்லாத்தையும் ஓபனா பேசினா தான் தெரியும்.
மனசுவிட்டு அண்ணாகிட்ட பேசி உன் மனசுல என்ன ஃபீல் பண்றேன்னு அண்ணா கிட்ட சொல்லிரு.
அதுதான் உங்க ரெண்டு பேருக்கும் நல்லது. ஒருவேளை சுவேதாவை பற்றி இன்னும் நினைச்சுகிட்டு இருந்தேன்னா ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.
அவரோட ஸ்வேதா மேல வச்சிருக்கற
காதலை மறக்க வைக்குற சக்தி உன்னோட காதலுக்கு மட்டும் தான் இருக்கு.
இல்லாத ஒருத்திக்காக அவரோட வாழ்க்கை அழிக்க விடாம. உன்னோட காதலால அவருக்கு வாழ கத்துக்குடுத்து அவரை வாழ வைக்க முயற்சி செய்."
நான் எதுவும் பேசவில்லை.அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தான்.
நாங்கள் இருவரும் கூட்டத்திற்கு சென்ற பொழுது சஞ்சய் அண்ணாவின் அம்மா ஆதித்யாவை முறைத்துக் கொண்டிருந்தார்.
நாங்கள் அவர்கள் முன் சென்று என்ன நடக்கிறது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தோம்.
சஞ்சய் அண்ணாவின் அப்பா,
" இந்த பாரு தியா, நேற்று தான் வந்தான். அதுக்குள்ள நாளைக்கு மீட்டிங் இருக்கு. நான் இப்ப கெளம்பனுங்குறான். நீயே சொல்லு மா." என கூற நானும் ஆதித்யாவை பார்த்தேன். ஆதித்யா தலையை குனிந்து கொண்டான்.
ஆதித்யாவின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நான் வேறு அவனை வெறுக்கிறேன் என்று கோபத்தில் கூறி அவனிற்கு காயத்தை கொடுத்துவிட்டேன்.
என் மனதின் ஓரத்தில் என் ஆதித்யாவின் முதல் காதலாக நான் இல்லை என வருத்தப்பட்டாலும் இனி என் ஆதித்யாவிற்கு எல்லாமாக நான் இருக்கவேண்டும் எனவும் புரிந்து கொண்டேன்.
என் தந்தை கூறியது போல் என் காதலால் அவன் காதலில் மறக்கடிக்க முடியும். என் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
சரண்யாவும் அதையேதான் கூறினாள்.
சஞ்சய் அண்ணாவின் அம்மா கூறியது போல் ஆதித்யா என்னை காதலிக்கிறானா என தெரியவில்லை. ஆனால் ஆதிக்கு என்னை பிடிக்கும். அது மட்டும் எனக்கு நிச்சயம் தெரியும்.
நான் பேசாத பொழுது அவன் கண்களில் தெரிந்த ஏக்கம் பரிதவிப்பு எல்லாம் நான் உணர்ந்தே தான் இருந்தேன். இப்பொழுது கூட நான் பேசி விடமாட்டேனா என்று தான் ஆதித்யா ஏங்கிக் கொண்டிருப்பான்.
அவனை மாற்றும் பொறுப்பு என்னுடையது என புரிந்து கொண்டேன்.
"என்ன மீட்டிங்?" என பொதுவாக கேட்டேன்.
"அது கொடைக்கானல் வச்சு கன்ஃபார்ம் பண்ணுனேன்ல அந்த மீட்டிங்." என ஆதித்யா கூறியதும்
எனக்கு ஞாபகம் வந்தது.
கேரளா வரும்பொழுது கூட இந்த மீட்டிங் நான்கு நாட்களில் இருக்கும் என கூறினான்.
ஆனால் இரண்டே நாட்களில் மீட்டிங் இருக்கும் என எண்ணியிருக்கவில்லை.
"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். மீட்டிங்க கேன்சல் பண்ணு. மூணு வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் வந்த. வந்த அடுத்த நாளே எப்படி கிளம்புவதற்கு?"
" என்றே செருமகனே குறப்பெதுதுனத் நிற்டிக." மலையாளத்தில் அவனை திட்டுவதை நிறுத்த சொன்னார்.
"நின்னலுதே செருமகன் அட் செய்யுனதில் தெரில்லே "
சஞ்சய் அண்ணாவின் அம்மாவும் மலையாளத்தில் உங்கள் பேரன் செய்வது மட்டும் சரியா என சலித்துக் கொண்டார்.
சஞ்சய் அண்ணாவின் அம்மா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சஞ்சய் அண்ணாவின் அப்பா கேரளாவை சேர்ந்தவர். கல்லூரி படிப்புக்காக தமிழ்நாடு வந்தவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
பாட்டி ஆதிக்கு சாதகமாக பேச அம்மா ஆதியை முறைத்துக் கொண்டிருந்தார்.
அவர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் நான் இறங்கினேன்.
"எத்தனை மணிக்கு போகணும் ஆதி."
என் ஆதி என்ற அழைப்பில் நிமிர்ந்து என்னை பார்த்தவன் "ஆறு மணிக்கு பிளைட்" என்றான்.
அவன் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சி என்னை ஏதோ செய்தது.
"அப்போ நான் பேக் பண்றேன்.'
"தியா, நீ என்ன அவன் கூட சேர்ந்து போறேன்னு சொல்லுற."
"இல்லம்மா. இங்க வரும்போதே ஆதி மீட்டிங் இருக்குன்னு சொல்ல தான் செஞ்சான்.
இது அவனுக்கு முக்கியமான மீட்டிங். இது ஆதித்யாவோட பல நாள் உழைப்பு. அதை வீணாக்க முடியாதுமா.
சீக்கிரம் மீட்டிங் முடிஞ்சு திரும்ப வந்துருவோம்.
நான் கேரளா இன்னும் சுத்தி கூட பார்க்கல.இன்னொரு நாள் கண்டிப்பா வரோம்."
ஆதியை முறைத்துக்கொண்டு,
" நீ சொல்றன்னு நான் நம்பறேன். ஒழுங்கா திரும்ப கூட்டிட்டு வா." எச்சரிக்கையோடு ஆதியை பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டு சென்றார்.
"சரி தியா எனக்கும் நேரம் ஆகுது நான் கிளம்புறேன்."
"வெயிட் பண்ணு . என்ன எஸ் ஆகுற. எனக்கு பேக்கிங் க்கு ஹெல்ப் பண்ணு. என்ன பிளைட் ஏத்தி விட்டு தான் நீ போகணும்."
"பிளைட் 6 மணிக்கு. ஆனால் நான் 6 மணிக்கெல்லாம் ஹாஸ்டல்ல இருந்தாகனும்."
"அதெல்லாம் கிடையாது. நீ என்கூட வந்தே ஆகணும்." என ஆர்டர் செய்தேன்.
"தேங்க்ஸ் தி... தியா... என் கூட வர்றதுல்ல உனக்கேதும் கஷ்டம் இல்லையே. அப்படி ஏதாவது இருந்தா சொல்லு நான் மட்டும் போயிட்டு வாறன்."
எவ்வளவு தைரியம் இருக்கும் என்னை விட்டுவிட்டு அவன் மட்டும் போறேன்னு சொல்வான்.
அவன் மூக்கிலே குத்த வேண்டும் போல் தோன்றுகிறது.
"அதெல்லாம் நான் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டேன். என்ன கூட்டிட்டு போக முடியுமா ?முடியாதா? "என அழுத்தம் திருத்தமாக கூறினேன்.
என்னை புரியாத பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லாமல்
" நான் டிக்கெட் புக் பண்ணிட்டு வரேன்." என அழைபேசியை எடுத்துக்கொண்டு சென்றான்.
அனைவரிடமும் விடைபெற்று சஞ்சய் அண்ணா ஆதித்யா காரின் முன் சீட்டில் அமர்ந்திருக்க நானும் சரண்யாவும் பின்னால் அமர்ந்து கொண்டோம்.
காரின் கண்ணாடி வழியே ஆதித்யா என்னைப் பார்த்துக் கொண்டிருக்க நானும் அவன் பார்க்காதவாறு அவனைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.
அவன் என்னிடம் பேசலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில் இருப்பது எனக்கு புரிந்தது.
ஏர்போர்ட் வந்ததும் சரண்யாவிற்கும் சஞ்சய் அண்ணாவிற்கும் விடை அளித்து விட்டு நாங்கள் இருவரும் திருசிசியை நோக்கிய பயணத்தை தொடர்ந்தோம்.
அடுத்தடுத்த பயணச்சீட்டு அமைய நான் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொள்ள ஆதி என் அருகில் அமர்ந்து கொண்டான்.
நாங்கள் அமர்ந்ததும் ஆதித்யாவிற்கு அலைபேசியில் அழைப்பு வர என்னை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, அலைபேசிக்கு அனுமதி அளித்து காதில் வைத்தான்.
சிறிது நேரத்திலேயே அந்தப்பக்கம் என்ன கூறப்பட்டதோ, அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. ஓரக்கண்ணால் என்னை பார்த்து விட்டு மெதுவான குரலில் கிசுகிசுத்தான்.
அப்படி என்ன கிசுகிசுத்தான் என மெதுவாக அவன் பக்கத்தில் சாய்ந்தவாறு ஏதேனும் கேட்கிறதா என பார்த்தேன்.
அவனோ அலைபேசியை அணைத்து விட்டு என்னைப் பார்த்து,
" என்ன வேணும்?" என கேட்க, நானோ சமாளித்தவாறு,
"ஒன்னும் இல்ல. எனக்கு ப்ளைட்ல இதுவரை போனதில்ல.கொஞ்சம் பயமா இருக்கு." என இழுத்துக்கொண்டே கூறினேன்.
என் கையை அழுத்தி பிடிச்சுக்குட்டு என் தோள்ல சாஞ்சுக்கோ எதுவும் தெரியாது."
' உன் மேல யா' என்ற பார்வை நான் பார்த்தாலும் உள்ளுக்குள் இந்த மாதிரியான நிகழ்விற்கு ஏங்கிதான் இருந்தேன்.
அவனோ ஒரு மர்ம சிரிப்புடன்,
" உனக்கு மேல சாய் கன்ஃபடபிள் இல்லைன்னா நான் வேணா அந்த தாத்தாவை இங்கே உட்கார சொல்லிட்டா.
நீ வேணா அவர் மேலே சாஞ்சுக்கோ." என அவன் அருகில் அமர்ந்திருந்த அறுவது வயது மதிக்கத்தக்க ஒருவரை காண்பித்தான்.
நான் அவனை முறைத்துவிட்டு கோபமாக அவன் தோளில் ஒரு அடி வைத்து அவன் தோளிலே சாய்ந்து கொண்டேன்.
என் இடது கை விரலுடன் அவன் விரல்களை கோர்க்க நானோ அவன் வலது முழங்கையை முற்றுகையிட்டு கொண்டேன்.
அவன் தலையை என் தலைமேல் வைத்தவாறு அவனும் கண் மூடினான்.
மனதுக்குள்ளே ஏதேதோ எண்ண அலைகள் ஓடினாலும் ஆதியின் நெருக்கத்தில் என்னை மறந்து உறங்க ஆரம்பித்தேன்.
நேராக திருவனந்தபுரத்திலிருந்து திருச்சி சென்றடையும் டைரக்ட் பிளைட் இல்லாததால் சென்னை அல்லது பெங்களூரில் வழியாக தான் செல்ல வேண்டும்.
சென்னை வழியாக செல்ல ஏழு அல்லது ஏழரை மணி நேரமோ அல்லது நாலரை மணி நேரமோ ஆகலாம். அது விமானத்தையும் காத்திருப்பையும் பொறுத்தது.
அதனால் பெங்களூர் வழியிலேயே சென்றோம். 3 மணி 25 நிமிடத்தில் எங்களை திருச்சியிலே நிறுத்தியது அந்த இண்டிகோ ஏர்லைன்.
திருச்சியை வந்தடைந்ததும் நான் அவள் மேலிருந்து எழுந்தேன். பெங்களூர் நிறுத்தத்தில் கூட எழவில்லை.
ஆதி முழித்திருந்தாலும் என் உறக்கத்தை கலைக்க பிடிக்காமல் அமர்ந்திருந்தான். ஆனால் நான் தான் அப்போது உறங்கவில்லையே. அவன் நெருக்கத்தை ரசித்த வண்ணம் கண்களை மூடியிருந்தேன்.திருச்சி வரும் வரை அவனின் அணைப்பிலே தான் தூங்கிக் கொண்டிருந்தேன்.
நாங்கள் இருவரும் ஹோட்டலை வந்தடைய இரவு பத்துமணி ஆகியிருந்தது. சிறிது நேரத்திலேயே இருவரும் இரவு உணவை முடித்துவிட்டு தூங்கிவிட்டோம்.
அடுத்த நாள் காலை நான் எழுந்திருக்கும் முன்பே பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தான், ஆதி.
நான் பாதி கண்களை திறந்து பார்த்தேன். நான் பார்த்த காட்சியை என் விழி தாமரை மலர்போல் விரிந்தது.
நான் தூங்கிக் கொண்டு இருக்கிறேன் என நினைத்த ஆதித்யா குளித்து முடித்து டவலுடன் வெற்று மார்பு எனக்கு தெரியும்படி நின்றிருந்தான்.
முதன்முறையாக என் கணவன் என்ற உரிமையில் ஆதித்யாவை சைட் அடித்துக்கொண்டிருந்தேன்.
கொடைக்கானலில் நாங்கலாம் ஜிம் பாடி. என்றது நினைவுக்கு வர்ற, முறுக்கேறிய அவன் புஜங்களும் கட்டுப்போக்கான அவனின் சிக்ஸ் பேக்கும் என் கவனத்தை இழுத்தன.
அவனையே கண் இமையாமல் பார்த்து கொண்டிருந்தேன்.
அவன் உடலில் கோலமிட பரபரத்த என் விரல்களை கட்டுக்குள் கொண்டுவந்தேன்.
இது எதுவும் அறியாத ஆதித்யாவோ அவன் ஈர தலைய துவட்டி கொண்டு இருந்தான்.
"இன்னைக்கு மட்டும் பொறுத்துக்கடா செல்லம். நாளைக்கு நானே உனக்கு துவட்டி விடுறேன்."என மானசீகமாக அவனிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
நாளைக்கு என்ன என்று நீங்கள் நினைக்கலாம்.
இன்றிரவு என் மனதில் உள்ள காதலை நான் ஆதிதிராவிடம் சொல்லப் போகிறேன்.
ஆதித்யா என் காதலை ஏற்பானா என தெரியவில்லை. ஆனால் என்னை வெறுக்க மாட்டான் என்பது மட்டும் நிச்சயம்.
நான் அவனை பார்த்துக் கொண்டிருந்ததை அவன் உணர்ந்தானோ என்னவோ அவன் திரும்பி என்னை பார்த்தான்.
நான் கண்களை இறுக்க மூடிக் கொண்டேன்.
அவன் என் அருகில் வருவதை உணர்ந்தேன். என் இதயம் படபடக்க ஆரம்பித்தது. என் உடல் நடுங்கி சில்லிட்டுப் போனது. நான் அவனை பச்சையாக சைட் அடித்ததை பார்த்து விட்டானோ என பயத்தில் வியர்க்க தொடங்கியது.
"ஓய் பொண்டாட்டி, புருஷன் அவசர அவசரமா கிளம்பிட்டு இருக்கானே. எந்திரிச்சு அவனுக்கு ஹெல்ப் பண்ணி அழகாக ஸ்மைல்லோட பாய் சொல்றியா பாரு. தூங்கு மூஞ்சி பொண்டாட்டி.
பாரு ஏசி ல கூட எப்படி வேர்க்குதுன்னு." என்றவன் அவன் தலையை துவட்டிக் கொண்டிருந்த துண்டால் என் வியர்வையை துடைத்து விட என்னால் மூச்சு விட முடியவில்லை.
அவனின் வாசத்தை ஏந்திய துண்டும் அவன் கையில் ஏறியிருந்த சோப்பின் வாசமும் உள் வரை சென்று இதுவரை என்னுள் ஏற்படாத மாற்றத்தை ஏற்படுத்தியது.
துடைத்து விட்டவன் என் கன்னத்தை வருடினான்.
"நான் உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். ஒரு ப்ரெண்டா அதுக்கு நான் சாரி கேட்டுக்குறேன்.
இன்னைக்கு என் மனசுக்குள்ள ரொம்ப நாளா அழுத்திக்கிட்டு இருக்கிற காதல பத்தி உன்கிட்ட சொல்ல போறேன். ரெடியா இரு டி பொண்டாட்டி." என என் மூக்கை பிடித்து ஆட்டி விட்டான்.
என் கன்னம் ரூஜ் போடாமலே சிவந்ததை சூடான கன்னத்தை வைத்தே புரிந்து கொண்டேன்.
"இப்படியே இருந்தேன்னா இன்னைக்கு மீட்டிங் அம்போ தான். நான் போய் சீக்கிரம் டெமோ பிரசன்ட் பண்ணிட்டு அக்ரிமென்ட்ல சைன் பண்ணிட்டு எவ்வளவு சீக்கிரம் வர்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரேன்."
என்றவன் நகர்ந்து வேக வேகமாக உடை மாற்றி விட்டு வெளியே சென்று விட்டான். அதுவரை நான் விழிக்கவில்லை. ஆனால் நடந்த அத்தனை சம்பாசனைகளையும் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அவன் சென்றதை உணர்ந்து மெதுவாக கண் திறக்கும் போது என் பக்கத்தில் ஒரு ஸ்டிக்கி நோட்ஸ் இருந்தது.
அதை எடுத்து பார்த்தேன்.
"தி... பேந்த பேந்த முழிக்காம சீக்கிரம் போய் பிரஸ் ஆய்டு ப்ரேக் பாஸ்ட் சாப்பிடு.
என்னோட பெர்சனல் போன் டேபிள்ஸ்பூன் வச்சுருக்கேன். அவன் என்னோட அபிசியல் நம்பர் இருக்கும்.
உனக்கு ஏதாவது என்கிட்ட பேசணும்னு தோணுனா அந்த நம்பர்க்கு கால் பண்ணு.
இப்படிக்கு நீ வெறுக்கும்,
மிஸ்டர் ஆதித்யா குமார்.
நான் அவனை வெறுக்கலைன்னு கண்டுபிடுச்சுட்டான்.அதான் பக்கி என்னையே சுத்தி சுத்தி வர்றான்.
எப்படி நான் அவனை வெறுக்கலன்னு கண்டுபிடிச்சான்னு தான் தெரியல இடியட் புருசா... பொண்டாட்டி யாம்ல பொண்டாட்டி.... ஆமா என்னமோ காதலை சொல்ல போறேன்னு சொன்னார் ஒருவேளை அவனும் என்னை காதலிக்கிறான் ஐயோ செம போ...
அவனுக்கு முதல்ல நான் தான் ப்ரொபோஸ் பண்ணனும்.
எப்படி ப்ரபோஸ் பண்ணலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன்.
கதவு தட்டும் சத்தம் கேட்டது.
எழுந்து சென்று பார்த்தபோது ரூம் பாய் நின்று இருந்தான்.
"என்ன வேணும்?"
"சார் ப்ரேக் ஃபாஸ்ட் ஆர்டர் பண்ணி இருந்தாங்க. இதையும் உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க."என ஒரு சிறு துண்டு சீட்டை கொடுத்தான்.
என்னவாக இருக்கும் என நான் பிரித்து பார்த்தேன்.
அந்த குட்டி மண்டையில இல்லாத மூளைய இருக்குன்னு நினைச்சு எதையும் போட்டு யோசிச்சுக்கிட்டே இருக்காமல் சீக்கிரம் போய் சாப்பிடு. டைமாச்சு." என இருந்தது.
என்னைப்பற்றி எப்படி இவன் எல்லாவற்றையும் சரியாக கணிக்கிறான் என்று தெரியவில்லை.
சிரித்துக்கொண்டே ரூம் பாயிடம் என் மனதில் தோன்றிய ஐடியாக்களை கூறினேன்.
"கண்டிப்பா மேடம். ஆனா நீங்க சொன்ன டெரஸ்ஸ விட ரூம் டெகரேஷன் இன்னும் அழகா இருக்கும். எங்க கிட்ட நிறைய டிசைன்ஸ் இருக்கு." அவன் ஆலோசனை கூறினான்.
நான் சிறிது யோசித்தேன்.
ஏதாவது நேரம் சரியில்லை என்றால் கூட மாற்றிவிடலாம் என , "இல்லை டெரஸ்லயே பண்ணிருங்க." என்றேன்.
அவனும் சரியான அட்வான்ஸ் பணத்தை வாங்கிக்கொண்டு சென்றான்.
நேரம் செல்ல செல்ல போரடித்தது. இங்கும் என்னை தனியாக விட்டுவிட்டு சென்று விட்டான்.
அவனை அலைபேசியில் அழைத்து திட்டலாம் என நினைத்து நினைத்தேன்.
அவன் அலைபேசியை எடுத்து ஆராய்ந்தேன்.
அலைபேசியை பார்த்ததுமே கோபமாக அலைபேசியை தூக்கி எறிந்தேன். அது சோபாவில் போய் பத்திரமாக விழுந்தது.
"மகனே இன்னைக்கு வாடி. உனக்கு இருக்கு." என அவனை கரித்துக் கொட்டிக் கொண்டு இருந்தேன்.
நேரம் செல்லாமல் அங்கிருந்து டிவியை ஆன் செய்தேன்.
விஜய் சமந்தாவின் 'நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்' என்ற பாடல் ஒலிக்கவும் அதில் விஜய்யின் சமந்தாவின் நீக்கிவிட்டு என்னையும் ஆதித்யாவை கற்பனை செய்து கொண்டு இருந்தேன்.
"ஹலோ மேடம், நெஞ்ச தட்டுற சத்தம் இருக்கட்டும். கதவை தட்டுற சத்தம் உங்களுக்கு கேட்கலையோ?"
திடீரென வந்த ஆதித்யாவின் குரலில் திடுக்கிட்டு எழுந்தேன்.
கைகள் இரண்டையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்தவாறு இருக்கும் ஆதித்யாவை கண்டு திருதிருவென முழித்தேன்.
"எவ்வளவு நேரம் கதவை தட்டுறது. நீ கதவை திறக்கலன்னு லாபியில் ஸ்பேர் கீ வாங்கிட்டு வந்து கதவை திறந்தேன்."
ஆதித்யா கூட அவனை முறைத்து விட்டு திரும்பிக் கொண்டேன்.
ஏன் சிரிகிறேன்னு முழிக்கிற ஏன் திரு திருன்னு முழிக்கிற திருட்டுத் தனம் பண்ணி நக்கலாக கேட்டான்
நான் அதற்கும் பதிலளிக்காமல் இருந்தேன்
"போன் எதுக்கு கோபம்.மார்னிங் ல இருந்து நீ கால் பண்ணவன்னு நெனைச்சு போனையே பார்த்துகிட்டு இருக்கேன் நீ கால் பண்ணல."
"நான் எப்படி போன் பண்ணுவேன். என் கிட்ட போனா இருக்கு."
"நான் உன்கிட்ட என்னோட போனை கொடுத்துட்டு தானே போனேன்."
"போடா முண்டம்..."
"எனது முண்டமா..."
"ஆமாடா போன் கொடுத்தியே, போனோட பாஸ்வேர்ட் கொடுத்தியா?"
நான் அவனை கோபமாக கேட்க அவனோ அப்போதுதான் பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு போகாததை உணர்ந்து நாக்கைக் கடித்து மன்னிப்பு கேட்கும் தோரணையில் கண்களால் கெஞ்சினான்.
"சரி இந்த தடவை மன்னிச்சு விடுறேன். என்னாச்சு?அக்ரிமண்ட்ல சைன் பண்ணியாச்சா?"
"அதை பத்தி தான் சொல்ல வந்தேன்.உன் கோபத்துல எல்லாத்தையும் மறந்துட்டேன். அக்ரிமண்ட் ல சைன் பண்ணிட்டேன்.இன்னைக்கு ஈவினிங் அதற்கான கிராண்ட் பார்ட்டி இருக்கு."
"அப்போ நீ திரும்ப என்னை விட்டுட்டு போயிடுவியா?"
" இல்ல நாம ரெண்டு பேரும் தான் பார்ட்டிக்குப் போறோம்.நீ போய் சீக்கிரமா ரெடி ஆகு."
"பட் என்கிட்ட பாட்டுக்கு வியர் பண்ற மாதிரி எதுவும் இப்போ இல்லையே."என்றேன் உதட்டை பிதுக்கி.
"அதைப்பற்றி நீ கவலைப்படாத." என்றவன் என்னை குளியல் அறைக்குள் தள்ளினான்.
"தியா நான் ரூம்ம கீயால லாக் பண்ணிட்டு வெளியே போறேன். உனக்கான ட்ரெஸ்ஸ கட்டில்ல வச்சுருக்கேன். அன்ட் அதுக்கான ஆரனமன்ட்ஸ்ஸயும் வச்சுருக்கேன்.போட்டுக்கோ."
என்றவன் வெளியேறினான்.
குளித்து விட்டு வெளியே வந்து கட்டிலில் இருந்த பரிசை பிரிக்க, அதிலிருந்த ட்ரெசை பார்த்ததும் எனக்கு கண்களிலிருந்து நிற்காமல் கண்ணீரை வந்தது.
வாய் மட்டும் இடியட் இடியட் இடியட் என முணுமுணுத்தது.
- 25 Forums
- 215 Topics
- 754 Posts
- 1 Online
- 329 Members
