Forum

உறவில் உதயமாகி உயிர...
 
Notifications
Clear all

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -17

2 Posts
2 Users
0 Reactions
7 Views
(@salmaamjathkhan)
Posts: 19
Trusted Member
Topic starter
 
[#203]

உதயம் 💏 17 💏

 

இரவு முழுவதும் தூங்காமல் கண்கள் சிவந்து இருந்தன.

 

மனதில் உள்ள காயங்களை மறைக்க முடியாமல் என் முகம் காட்டிக்கொடுத்தது.

 

" தியா சாப்பிட வாமா.." என சஞ்சய் அண்ணாவின் அம்மா அழைக்க அவர்களை வருத்தப்பட வைக்க விரும்பாமல் எழுந்து  குளியலறைக்கு சென்று முகத்தை கழுவிக்கொண்டு அழுத தடயங்களை மறைக்க சிறிது பவுடர் போட்டு விட்டு டைனிங் ஹாலுக்கு சென்றேன்.

 

நான் செல்லும்போது அந்த வீட்டிலிருந்த அனைவரும் அமர்ந்திருந்தனர். 

 

ஆதித்யா விற்கும் தாத்தாவிற்கும் இடையே மட்டும் இடம் காலியாக இருக்க வேறு வழியின்றி அதில் அமர்ந்தேன்.

 

கேரள பாரம்பரிய உணவுகள் டைனிங் டேபிளை அலங்கரித்து வைத்திருக்க, நானும் ஆப்பத்தை மட்டும் எடுத்து தட்டில் வைத்தேன்.

 

தொண்டைக்குழிக்குள் உணவு இறங்க மறுத்தது. அதை விட ஆதித்யாவின் பார்வை வீச்சு என் மேல் படர வெறுப்பாக இருந்தது. எல்லோர் முன்னிலையிலும்  ஆதியை விட்டு கொடுக்க மனமின்றி அமைதியாக உண்ண முயற்சித்தேன்.

 

ஆனால் ஆதித்யா அதை கெடுக்கும் வகையில்

 

" தியா இதை ட்ரை பண்ணி பாரு. கேரளா ஸ்பெஷல் என் புட்டை எடுத்து என் தட்டில் வைத்தான்.

 

ஒருவேளை அனைவரின் முன்னிலையிலும் நான் ஏதாவது பேசுவேன் என நினைத்தானோ என்னவோ ஆனால் என் பொறுமைக்கும் ஒரு எல்லை தான்.

 

அவன் என்னிடம் அக்கறையாக பேசும்பொழுது மனம் மகிழ்வதற்கு பதில் நேற்று அவன் கூறிய ஐ லவ் யு ஸ்வே குட்டி ஞாபகத்திற்கு வர கண்கள் கலங்க ஆரம்பித்தன. இதற்கு மேல் முடியாது என எழுந்து விட்டேன்.

 

"தியா ஏமா சாப்பிடாம எழுந்துட்ட?" அண்ணாவின் அப்பா அக்கறையாக கேட்டார்.

 

"இல்லப்பா இந்த மாதிரி சாப்பாடெல்லாம் இதுக்கு முன்னாடி சாப்பிட்டதில்லை. டிஃபரண்ட் இருக்கு. அதான் ஒருமாதிரி இருக்கு. எனக்கு இது போதும் வயிறு நிறைஞ்சுருஞ்சு. என ஆதியின் கலங்கிய கண்களை பார்த்தும் என் கலங்கிய மனதையும் கலங்கடித்தவனை பற்றியும் சிறிதும் நினையாமல் அறைக்கு வந்துவிட்டேன்."

 

ஏன் இந்த அக்கறை. இந்தக் அக்கறைக்காக ஏங்கிய நாட்களும் இருந்தன. ஆனால் இப்பொழுது இந்த அக்கறையே  என்னை கொல்லாமல் கொள்கிறது. ஆதித்யாவின் ஸ்வேதாவை பற்றி தெரியாமல் குழம்பியது.

 

சோபாவின் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன்.

 

"தி, எனக்கு புரியுது நீ என் மேல கோவமா இருக்கேன்னு. ஆனா நீ ஏன் கோவமா இருக்கேன் எனக்கு சத்தியமா தெரியல.

 

நான் ஏதாவது தப்பா நடந்துக் கிட்டேனா... ஒருவேளை நேத்து அந்த மாதிரி உன்ன ஹக் பண்ணுணது உனக்கு பிடிக்கலையா?" தயங்கிக்கொண்டே கேட்க நேற்றைய நினைவுகள் கண் முன் நிழலாட  உடலெல்லாம் எரிந்தது.

 

நான் எப்படி ஆதியின் மேல் கோபப்பட முடியும். நானும் வெட்கமில்லாமல் அவனுடைய அணைப்பில் கட்டுண்டு தானே கிடந்தேன்.

 

 

"என் மேல இருக்குற கோவத்தை சாப்பாடு மேலே காட்டாத.இதை சாப்பாடு‌"  என கையில் தட்டுடன் நின்றிருந்த அவனை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.

 

"தி, அட்லீஸ்ட் இந்த ஜூஸ்..."

 

"ஸ்டாப் இட் மிஸ்டர் ஆதித்யா குமார். என் பேரு தி இல்ல. 

 

தியா.

 

தியா விஸ்வநாதன்..." என அழுத்தம் திருத்தமாக கூறினேன்

 

அவனும் என்னை நெருங்கி வந்து,

 

" சாரி நீ இப்போ மிஸ்‌. தியா விஸ்வநாதன் இல்ல. மிஸ்ஸஸ். தியா ஆதித்யா குமார். மை ஒய்ஃப்."என அதிகாரமாக எச்சரித்தான்.

 

"உரிமை இருக்கிற இடத்துல தான் உரிமையா மிஸஸ் தியா ஆதித்யா குமாரனு  சொல்ல முடியும் மிஸ்டர் ஆதித்யக்குமார்."

 

"அப்போ நமக்குள்ள உரிமையை இல்லைன்னு சொல்றியா."

 

"நமக்குள்ள என்ன உரிமை இருந்திருக்கு."

 

"நான் உன் கழுத்துல தாலி கட்டி இருக்கேன். அந்த நிமிஷம் லிருந்து நிமிஷத்துக்கு உனக்கு என் மேலயும் என் பொருட்கள் மேலயும். எனக்கு உன் மேலயும் உன் பொருட்கள் மேலயும் எல்லா உரிமையும் இருக்கு.இத நான் சொல்லல. நீதான் சொன்ன. மிஸஸ் தியா ஆதித்யா குமார்."

 

அன்று இவனை வெறுப்பேற்ற சொன்னது இன்று மீண்டும் என்னை வந்து தாக்குகிறது." என என்னையை நொந்துகொண்டேன்.

 

"அந்த கல்யாணத்தை ஏன் நிறுத்தலன்னு  இன்னைக்கு நான் ஃபீல் பண்றேன்."

 

ஆதித்யாவின் முகம் முகத்தில் தோன்றிய வலியை என்னால் உணர முடிந்தது.

 

ஆனால் என்னுடைய வலி அவனுடைய வலிகளை விட பெரியது.

 

ஆனால் காதல் கொண்ட மனம் அவனுக்காக அவனை அணைத்து கொள்ள ஏங்க, என் வெட்கமில்லாத மனதை நானே கடிந்து கொண்டேன்.

 

முயன்று என் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு அவனிடமிருந்து விலகி நடந்தேன்.

 

என் முழங்கையை வளைத்துப் பிடித்து அவன் புறம் இழுத்தான்.

 

என் முகம் அவன் முகத்தின் வெகு அருகே இருக்க இதயம் படபடத்தது.

 

"என்னடா டார்ச்சர் பண்ற தி. உண்மையிலேயே நம்ம கல்யாணத்த ஏன் நிறுத்தலன்னு நீ பீல் பண்றியா?" கேட்டவனின் குரலில் இருந்த வலி என்னை சுக்குநூறாய் உடைத்தது.

 

அவனை அணைத்து ஆறுதல் கூற மனம் முரண்டியது.

 

"ஏன் நீங்க மேரேஜ் நிறுத்த முடியும்னு பீல் பண்ணலையா" எனக்கேட்க அவனோ இல்லையென தலையசைத்தான்.

 

என்ன மாதிரியான மனிதன் இவன் மனதில் ஒருத்தி வைத்துக் கொண்டு, இன்னொருத்தியுடன் குடும்பம் நடத்த முயற்சி செய்கிறான்.

 

அவனைப் பற்றி கீழ்தரமாக எண்ணி அவனை விட்டு விலக முயற்சி செய்தேன்.

 

"தி, நான்.. " என அவன் பேச ஆரம்பிக்க , அவனின் தி என்ற அழைப்பு என்னை ஏதோ செய்ய அவனை தள்ளிவிட்டேன்.

 

"மிஸ்டர் ஆதித்ய குமார், நல்லா கேட்டுக்கோங்க. இந்த உலகத்திலேயே நான் வெறுக்குற ஒரே ஆள் நீங்க மட்டும் தான். என் கிட்டே இருந்து தள்ளியே இருங்க. அதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது." என்று எச்சரித்துவிட்டு அங்கு நிற்க முடியாது வெளியேறினேன்.

 

எனக்கு தெரியும். ஒரு மனைவி தன் கணவனை வெறுக்கிறேன் என அவனின் முன்  அந்த கணவன் எவ்வாறு உணர்வான் என்று.

 

ஏனென்றால் சில நாட்களுக்கு முன் நானும் அதையே தான் உணர்ந்தேன். ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. என்னை நினைத்து எனக்கே வெறுப்பாக உள்ளது.

 

கூடத்தில் சஞ்சய்  யாருக்கோ அலைபேசியை அழைக்க முயன்று கொண்டிருந்தார்.

 

"அண்ணா உங்க போன் கிடைக்குமா ஒரே ஒரு கால் பண்ணிட்டு தரேன்."

 

"இந்தாடா.." என சிறிது தயங்கியவர், ஒரு நிமிஷம் என போனில் ஏதோ செய்துவிட்டு என்னிடம் தந்தார்.

 

நான் அவரின் அலைபேசியில் இருந்து சரண்யாவை தொடர்பு கொண்டேன்.

 

ஆனால் தொடர்பு எடுக்கப்படவில்லை. 

 

'நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் வாடிக்கையாளர் தற்போது பிசியாக உள்ளார்.' என்ற பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் மட்டும் மலையாளத்தில் ஒலித்தது.

 

" என்னாச்சு மா..." சஞ்சய் அண்ணா  என்னிடம் கேட்க,

 

" அண்ணா சரண்யா கூட பேசணும். ஆனா போன் எடுக்கவே மாட்டேங்கிறா."

 

"மெசேஜ் பண்ணி பாருமா." என அவர் யோசனை தர நானும் மெசேஜ் செய்தேன்.

 

"Hai Saran... This is Diya.... I wanna talk to you.. I need you badly... Can you come over Sanjay Anna's place..."

 

குறுஞ்செய்தி சென்ற அடுத்த நிமிடமே சரண்யாவின் அழைப்பு வந்தது.

 

"என்னதான் பிரச்சனை இப்ப.  ஏன் இப்படி டார்ச்சர் பண்..." சரண்யா பேசிக்கொண்டிருக்கும்போதே நான் குறிக்கிட்டேன். 

 

"ஆமாண்டி நான் எல்லாருக்கும் டார்ச்சரா தான் இருப்பேன். இனிமே உன்னைக் கூப்பிட்டால் என்னை என்னன்னு கேளு‌."

 

அவளின் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்து விட்டேன்.

 

சஞ்சய் அண்ணன் கையில் அலைபேசி வைத்துவிட்டு திணித்துவிட்டு  நகர்ந்தேன்.

 

என் நேரம் சரியில்லை என்று நினைக்கின்றேன். எல்லோரும் என்னை டார்ச்சர் என எண்ணுகின்றனர்.

 

வந்த கடுப்பை எல்லாம் சரண்யாவின் மீது திணித்து விட்டு வந்துவிட்டேன்.

 

பாவம் குடும்பப் பெண்களின் தடுப்புகள் எல்லாம் பிரச்சனைகள் எல்லாம் அப்பாவி ஜீவன்கள் யார் மீதாவது திணிக்கப்படுகின்றன.

 

நான் மீண்டும் அறைக்கு சென்றபோது அங்கு ஆதித்யா இல்லை. 

 

நான் பால்கனியில் சென்று வானத்தை வெறித்துக் கொண்டிருந்தேன்.

 

யாரோ வரும் அரவம் கேட்க திரும்பினேன்.

 

சரண்யா அங்கு நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டேன்.

 

"என் மேல கோவமா?"

 

"நான் ஏன் உன் மேலதான் கோபப்பட போறேன். நான் தான் எல்லாருக்கும் த  டார்ச்சர் ஆ தெரிறேன் ல."

 

"இல்லடி வேற ஒருத்தர் மேல இருந்த கடுப்ப  உன்மேல காட்டிடேன் சாரிடி."

 

"எல்லாருக்கும் என்ன பாத்தா எப்படி தெரியுது ன்னு தெரியல." அவளிடம் நொந்துபோன குரலில் கூறினேன்.

 

"என்னாச்சு தியா ஏதாவது ப்ராப்ளமா?"

 

"எல்லாமே ப்ராப்ளம் தான்." கலங்கிய கண்களை திரும்பி நின்று துடைத்துக் கொண்டேன்.

 

 

சரண்யா என் தோள் மீது கை வைக்க நானும் அவளை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தேன்.

 

" ஏன் அழுகிற. சொன்னாதானே தெரியும். ப்ளீஸ் அழுகுறத நிப்பாட்டுடி. மொதல்ல என்ன ஆச்சுன்னு சொல்லு."

 

அழுகையை நிறுத்திவிட்டு என் திருமணம் ஆனதிலிருந்து நேற்று நடந்தது அனைத்தையும் சரண்யாவிடம் கூறினேன்.

 

" இந்த ஸ்வேதா யாருன்னு நீ அண்ணா கிட்ட கேட்டியா?"

 

நான் இல்லை என்று தலையசைத்தேன்.

 

அப்பொழுது யாரோ கதவை தட்டும் ஓசை கேட்டது.

 

திரும்பிப் பார்த்தபோது அங்கே சஞ்சய் அண்ணாவின் அம்மா நின்றிருந்தார்.

 

"நான் உள்ளே வரலாமா?"

 

"ஐயோ என்னம்மா பெர்மிஷன் கேட்டுக்கிட்டு உள்ள வாங்க."

 

"இல்லை நீங்க ஏதோ பேசிக்கிட்டு இருந்தீங்க."

 

"அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா."  அவர்களை உள்ளே அழைத்தேன்.

 

"தியாமா எப்பவுமே கணவன் மனைவிக்குள்ள   சண்டைல மூணாவது மனுஷன் உள்ள வர கூடாதுன்னு சொல்லுவாங்க.

 

ஆனா என்னால ஆதிய இப்படி பார்த்துட்டு சும்மா இருக்க முடியல டா. அதனாலதான் நான் இப்படி எல்லாம் பேசுறேன். என்ன தப்பா நினைக்காத."

 

" அம்மா அப்படி எல்லாம் இல்ல. உங்களுக்கு எங்க மேலே எல்லா உரிமையும் இருக்கு."

 

"மூணு வருஷம் கழிச்சு ஆதித்யா விட கண்ணுல நேத்து  சந்தோஷத்தையே பார்த்தோம். இதுக்கெல்லாம் காரணம் நீதானம்மா."

 

என் தலையை வாஞ்சையாக தடவ எனக்கு அவர் சொல்ல வருவது எதுவும் புரியவில்லை.

 

"அம்மா நீங்க என்ன சொல்ல வரீங்க எனக்கு ஏதும் புரியலை."

 

"ஸ்வேதா போனதுக்கப்புறம் ஆதித்யா ரொம்ப உடைஞ்சு போய்ட்டான். அதுக்கப்புறம் ஆதித்யா சிரிச்சு நாங்க பார்த்ததே இல்ல.

 

  ஏன் இந்த மூணு வருஷத்துல ஒரு தடவை கூட கேரளாவுக்கே வரல. அதுக்கு முன்னாடி வரைக்கும் மாசத்துக்கு ஒரு தடவையாவது வந்து எங்கள எல்லாம் பார்த்துட்டு தான் போவான்."

 

அவர் ஸ்வேதாவை பற்றி பேசியதும் நானும் சரண்யாவும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டோம்.

 

"ஆண்டி, உங்களுக்கு ஸ்வேதாவை பற்றி தெரியுமா?" சரண்யா அவர்களிடம் கேட்டாள்.

 

"ஆமாம்மா எப்படி ஸ்வேதாவை மறக்க முடியும். ஆதிக்கு மொத்த உலகமும் ஸ்வேதா தான். " என்இதயம் ஊமை கண்ணீர் வடித்தது.

 

"ஆன்ட்டி எங்களுக்கு ஸ்வேதாவை பத்தி உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுவீங்களா?" சரண்யா மெதுவாக சஞ்சய் அண்ணாவின் அம்மாவிடம் கேட்டாள்.

 

"ஸ்வேதா பற்

றி எதுவும் தெரியாதா?" அம்மா அப்பாவியாக கேட்க, நாங்கள் இருவரும் தெரியாது என தலையை இட வலமாக ஆட்டினோம்.

 

எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தபடி ஆதித்யா பற்றியும் ஸ்வேதாவை பற்றியும் கூற ஆரம்பித்தார்.

 


 
Posted : July 23, 2026 10:45 pm
(@guna-sundari)
Posts: 56
Trusted Member
 

Intresting 


 
Posted : July 24, 2026 11:56 am

Scroll to Top