உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -16
உதயம் 💏16💏
ஆதி காரை பார்க் செய்து கொண்டிருக்க நான் காலிங் பெல்லை அழுத்தினேன்.
"ஹாய் தியா..." என்ற குரலுடன் கதவைத் திறந்தவனை பார்த்து அதிர்ந்தேன்.
யார் இவன்? நான் இதற்கு முன் இவனை பார்த்ததே இல்லை. ஆனால் உரிமையோடு என்னை பெயரை சொல்லி அழைக்கிறான்.
கண்ணில் கேள்வியோடு அவனை பார்த்துக்கொண்டிருக்க அவனோ புன்னகையுடன் "நான் யாருன்னு யோசிக்கிறீயா?"
நான் நினைத்ததை சொன்னதும் பேந்த பேந்த முழித்தேன்.
"உன்னை யாருடா உள்ள விட்டது." என்ற ஆதியும் குரலில் திரும்பிப் பார்த்தேன்.
" ஏன் நான் உள்ள வர்றதுக்கு என்ன?"
"இல்ல நீங்கதான் ரொம்ப பிஸியான ஆளாச்சே. பிரண்டோட கல்யாணத்துக்கு கூட வர உங்களுக்கு டைம் இருந்திருக்காது." என வந்தவரின் காலைவாரினான்.
"நான் தான் சொன்னேன்ல ஆன்சைட்ல மாட்டிக்கிட்டேன்னு. நான் என்ன கனவா கண்டேன் நீ திடுதிப்புன்னு கல்யாணம் பண்ணுவேன்னு."
"ஏன் நான் கல்யாணம் பண்ண கூடாதா?" ஒற்றை புருவம் உயர்த்தி ஆதித்யா கேட்க நான் அவனை ரசித்துக்கொண்டிருந்தேன்.
"பரவாயில்ல நல்ல முன்னேற்றம்தான். நான் கூட நீ சிங்கிளாவே செத்துருவியோன்னு நெனச்சேன்."
இதைக் கேட்டதும் நான் வந்தவனை முறைக்க,அவன் என்னை பார்த்து விட்டு,
" சிஸ்டர் நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.டோன்ட் நீ ஆங்கிரி. அவன் என்னை இன்ரிடியூஸ் பண்ணமாட்டான். நானே பண்ணிக்கிறேன். என் பெயர் சஞ்சய். ஆதித்யாவோட பிரிண்ட்."
இவன்தான் சஞ்சயா. இவனிடம் தான் என்னைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தான் என்று எண்ணம் என்னை தாக்க ஒரு நிமிடம் தடுமாறினேன்.
ஆனால் அந்த தடுமாற்றத்தை அவர்களிடம் காட்டாமல் சமாளித்தேன்.
"ஹாய்..." என சொல்லிவிட்டு அமைதியாக அங்கிருந்து நகர்ந்தேன்.
"என்னாச்சுடா ஏதும் ப்ராப்ளமா?" என சஞ்சய் குரல் என் காதில் விழுந்தது. ஆனால் நான் அதை கண்டுகொள்ளாமல் எங்கள் அறைக்கு சென்றேன்.
சஞ்சயை பார்த்ததும் நேற்றிரவு நான் ஆதியிடம் கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது.
நேற்று இரவு ஊர் சுற்றிய களைப்பில் சோர்வாக இருக்க கட்டிலில் படுத்து விட்டேன். சிறிது நேரத்தில் ஆதியும் அருகில் படுத்துவிட்டான்.
இரவு தாகம் எடுக்க எழுந்து உட்கார்ந்தேன். அப்பொழுது என் புறம் திரும்பி படுத்த ஆதித்யாவை பார்த்தேன்.
அமைதியாக குழந்தை போல் உறங்கிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் என் முகத்தில் வெட்கம் கலந்த புன்னகை வந்தது.
அவனுடன் ஊர் சுற்றிய அனுபவம் எனக்கு புதியதாக இருந்தது. அவனுடைய நெருக்கம் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை நினைத்து பார்த்தேன்.
எப்பொழுது என்னுள் காதல் வந்தது என தெரியவில்லை. ஆனால் காதல் வந்த தருணத்தை அறியாமலேயே அவனில் மூழ்கி இருந்ததை உணர்ந்து கொண்டேன்.
திருமணத்திற்கு முன் நான் சந்தித்த ஆதித்யா விற்கும் இப்பொழுது நான் பார்க்கும் அதைத் தவிர்க்கும் ஏகப்பட்ட வித்தியாசம்.
ஆதித்யாவின் உண்மையான குணம் என்ன? நான் அவனை இப்படி பார்த்ததே இல்லை.
தூக்கம் மறந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன். புரண்டு படுத்ததில் உறக்கம் கலைந்தான் ஆதித்யா.
"இன்னும் தூங்கலையா தி.." எனக் கேட்டான்.
அவனின் தி அழைப்பு என்னுள் ஏற்படுத்திய மாற்றத்தை அனுபவித்துவிட்டு தூக்கம் வரவில்லை என்றேன்.
என்னை ஒருமுறை ஆழ்ந்து பார்த்தவன் எழுந்து அமர்ந்து கொண்டான்.
"என்ன தி ஆச்சு? என்கிட்ட ஏதாவது சொல்லனுமா?" என கேட்டான்.
இல்லை என்று தலையசைத்தேன்.
" அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்க?"
"அது... நீங்க தப்பா நினைக்கலனா நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கட்டா...?"
"தப்பா நினைக்க என்ன இருக்கு. தாராளமா கேளு."
" நம்ம ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போது சண்டை தான் போட்டோம். நம்ம ரெண்டு பேருக்குள்ள எதுவும் செட் ஆகல.
அதுக்கப்புறம் என்னை பொண்ணு பாக்க வந்தபயும் சரி அதுக்கு அப்புறம் நாம மீட் பண்ணும் போதும் சரி நாம அதிகமா சண்டைதான் போட்டோம்.
ஆனால் நீ என்கிட்ட மட்டும் ரூடா பிஹேவ் பண்றீங்களோன்னு தோணுச்சு. எனக்கு தெரிஞ்சு மாயாசரண்யா கூடலாம் நீங்க நல்லா தான் பேசுறீங்க. என்கிட்ட மட்டும் தான் கோவமா இருப்பேங்க.
இப்போ நீ நல்லா பேசுறீங்க தான். என்னால நம்ப முடியல. எந்த ஆதி நிஜம் இந்த ஆதியா இல்ல இதுக்கு முன்னாடி நான் பார்த்த ரூடான ஆதியா
நான் பேச பேச அவன் முகம் யோசனையில் சென்றது.
மெதுவாக கட்டிலிலிருந்து எழுந்தான்
"தியா எனக்கே தெரியல. நான் என்ன பண்றேன்னு .மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஆதித்யா இருந்தான்.ஒரு ஆக்ஸிடெண்ட்ல அந்த ஆதித்யா செத்துட்டான். ஆனா நீ பார்த்த ஆதித்யா வேற தான்."
(புரியலன்னு யாரும் கோபப்பட வேணாம். புரிய கூடாதுன்னு தான் அவன் இப்படி குழப்புறான்.)
"எனக்கு புரியல ஆதி."
"சிலநேரம் என்னாலேயே என்ன புரிஞ்சுக்க முடியல தியா. எனக்குள்ள இருக்கிற கேள்விகளுக்கு நான் விடை தெரியாமல் இருக்கேன்.
ரொம்ப நேரம் ஆச்சு நீ தூங்கு. நாளைக்கு நாம்ம ஊருக்கு போகணும்.
இத பத்தி நாம இன்னொரு நாள் பேசலாம் என்றவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்.
அவன் யோசனையில் இருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனை நான் தொந்தரவு செய்யவில்லை.
அவன் என்னை தூங்குமாறும் சைகை செய்ய நானும் படுத்துக் கொண்டேன். ஆனால் அவன் தூங்கவில்லை என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவனை குழப்பி விட்டதை எண்ணி என்னை நானே கடிந்து கொண்டேன்.
ஆதியின் குரல் என்னை நிகழ்விற்கு கொண்டு வந்தது.
"தி charn உன் கூட பேசணுமாம்." என அலைபேசியை என்னிடம் கொடுக்க யார் அந்த charnn என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. இருந்தாலும் அவர்கள் லையனில் காத்திருக்கிறார்கள் என காதில் வைத்து ஹலோ என்றேன்.
"என்னை எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா? பாவமே பிள்ளை கல்யாணம் இஷ்டமில்லாமல் பண்ணுச்சே.
என்னமோ ஏதோன்னு உனக்கு கால் பண்ணா அட்டென்ட் பண்ண மாட்டேங்குற. நீயும் கால் பண்ண மாட்டேங்குற.
என்னப்பா புருஷனோட கொடைக்கானல் புல்லா சுத்தி முடிச்சாச்சா. ஒரு அஞ்சு நிமிஷம் டைம் இருத்தா எங்க கூடயும் கொஞ்சம் பேசுங்களேன்." என்ற சரண்யாவின் குரலில் அலைபேசியின் திரையைப் பார்த்தேன். அதில் charn என பதிவாகி இருந்தது.
ஆதித்யாவின் அலைபேசியில் எப்படி சரண்யா என யோசித்துக்கொண்டிருந்தேன்.
" தியா லைன்ல இருக்கியா. ஏதாவது பேசு."
" சாரி சரண். கொஞ்சம் கண்பியூஷன்ல இருந்தேன். அதான்."
" என்ன கண்பியூஷன்? நீ காப்பியா தானே இருக்க?" என கவலையாக கேட்டாள்.
" ஆமாம் நான் ஹாப்பியா தான் டா இருக்கேன்." என அவளுக்கு ஆறுதல் அளித்தேன்.
" சரி வீட்டுக்கு கெஸ்ட் வந்துருக்காங்கலாமே நீ அவங்கள பாரு. நான் ஈவினிங் கால் பண்றேன்." என சரண்யா வைத்துவிட ஆதித்யா என் அருகே வந்தான்.
என் கையை பிடித்து அங்கிருந்த சோபாவில் அமர வைத்தான்.
" தி எனக்கு தெரியும். நீ ஏன் இப்படி தனியா வந்து மேல உட்காந்துருக்கன்னு.
நான் உன்ன வெறுக்கல. அது சஞ்சய்க்கு ரொம்ப நல்லாவே தெரியும். சோ அவ முன்னாடி நீ அன் கம்பார்டேபில பீல் பண்ண தேவையில்லை."
இவனுக்கு எப்படி என்னுடைய எண்ணங்கள் தெரிந்தது என தெரியவில்லை.
என்னால் இவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால் இவன் என்னுடைய எண்ணங்கள் அனைத்தையும் புரிந்து கொள்கிறான்.
எனக்கு சிறிது தயக்கம் சஞ்சய் பார்த்ததும் வந்தது உண்மைதான்.
அன்று ஆதித்யா என்னை வெறுக்கிறான் என்று சஞ்சயிடம் கூறியதால் அவன் பார்வை என்மேல் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தான் என் தயக்கத்திற்கு காரணமாக இருந்தது.
அந்த தயக்கத்தை ஆதி உடைத்தெரிந்து விட்டான்.
அதில் சற்று நிம்மதி அடைந்து கீழே செல்ல தயாரானேன். சஞ்சை அத்தை மாமாவுடன் டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தான்.
அத்தை என்னை பார்த்ததும் வந்து அணைத்துக் கொண்டார்.
"சந்தோஷமா இருக்குடா.என்னோட ஆதிய நீ திருப்பி கொடுத்துட்ட."
புரியாமல் முழிக்க அவரும் என் நெற்றியில் முத்தமிட்டு என்னை டைனிங் டேபிளில் அமரவைத்தார்.
அனைவர் முன்னும் ஏதும் கேட்க வேண்டாம் என நானும் அமைதியாக விட்டுவிட்டேன்.
"உண்மையிலேயே மா ஆதி முன்ன மாதிரி மாறிட்டான்."
" நீதான் ரொம்ப மாறிட்ட" என ஆதி அவனை குற்றம்சாட்ட,
அவனோ
"அப்டில்லாம் ஒன்னும் இல்லடா. நான் பாரின்ல இருந்து நேரா இங்க தான் வரேன். இன்னும் வீட்டுக்கு கூட போகல."
"நம்ப முடியலையே."
"நெஜமாவாடா. அம்மாக்கு கால் பண்ணி பாரு. உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வராம ஊருக்கு வராத அப்படின்னு சொல்லிட்டாங்க."
"ரெண்டு பேருமா." ஆதி கேள்வியாக அவனை பார்த்தான்.
"புதுசா கல்யாணம் ஆன உங்களுக்கு விருந்துக்கு சொல்லி உங்களை கையோட கூட்டிட்டு வாடான்னு சொல்லிட்டாங்க."
"தியா நீயும் கண்டிப்பா திருவனந்தபுரத்துக்கு என்கூட வரணும். ப்ளீஸ்..." என அவன் கெஞ்ச நானும் மகிழ்ச்சியாக ஆதியை பார்த்தேன்.
ஆதியோ " இல்லடா எனக்கு கொஞ்சம் மீட்டிங் இருக்கு. நான் இன்னும் நாலு நாள்ல திருச்சி போனும்."
"நாலு நாள் கழிச்சு தானே திருச்சி போனும். இப்ப எங்கூட வா. எப்போ மீட்டிங் கோ அப்போ அங்க இருந்து பிளைட் பிடிச்சுக்கோ."
ஆதித்யா என்னை பார்க்க நானும் கெஞ்சும் தோரணையில் கண்களால் பிளீஸ் என கேட்டேன்.
என்னையே ஊடுருவி பார்த்தவன் சரியென சம்மதித்தான்.
ஆதி சஞ்சய் அண்ணாவுடன் நானும் திருவனந்தபுரத்தை நோக்கிய எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
சிறிது நேரத்திலேயே சஞ்சய் அண்ணாவின் தங்கச்சி தங்கச்சி என்ற கூற்றில் சஞ்சயை நான் அண்ணாவாக ஏற்றுக்கொண்டேன்.
கலகலவென பேசிக்கொண்டிருந்த சஞ்சய் அண்ணாவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆதியை கண்டுக்காமல் நாங்கள் இருவரும் பேசியவாறே பயணித்துக் கொண்டிருந்தோம். ஆதி எங்களை கவனித்துக் கொண்டே இருந்ததையும் ஓரக்கண்ணால் பார்த்தேன்.
திருவனந்தபுரத்தில் சஞ்சய் அண்ணாவின் வீட்டில் வண்டி நிற்க சஞ்சய் அண்ணாவின் தாய் தந்தை பாட்டி தாத்தா என அனைவரும் வாசலில் வந்து எங்களை வரவேற்றனர்.
அவர்கள் என்னிடம் சகஜமாக பேச புது இடத்தில் இருப்பது போல் தோன்றவே இல்லை. சரண்யாவிற்கு நான் திருவனந்தபுரத்தில் இருப்பதாக மெஸேஜ் செய்தேன்.
இரவு நேரம் ஆகிவிட்டதால் சரண்யா நாளை வருவதாக கூறி இருந்தாள். இரவு கேரளாவின் பாரம்பரிய உணவை சாப்பிட்டுவிட்டு அவர்கள் எங்களுக்காக கொடுத்த அறையில் ஓய்வு எடுத்தோம்.
"தி, உன்னோட சஞ்சய் அண்ணாவோட ரொம்ப பிசியா இருக்க போல." ஆதியின் குரலில் ஏகத்துக்கும் என்னுடன் மட்டும் பேசவில்லை என்று ஏக்கம் நிறைந்திருந்தது.
" அப்படின்னு இல்ல. ஆனா அவங்க கூட இருக்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஜாலியா இருக்கு."
"அப்போ என் கூட இருக்கும்போது அப்படி உனக்கு தோணலையா...?" என்ற கூற்றில் இருந்தது என்னவென்று பிரித்தறிந்து பார்க்க முடியவில்லை.
கவலையா ஏக்கமா பரிதவிப்பா என புரியாமல் அது எதுவாக வேணாலும் இருக்கட்டும் அதை துடைத்தெறிய வேண்டியது என்னுடைய பொறுப்பு என,
" அப்படி இல்ல. அண்ணா கூட இரண்டு நாள் தானே இருப்போம். அதுக்கப்புறம் லைப் லாங் நாம ரெண்டு பேர் மட்டும் தான் இருப்போம். அப்போ நல்லா என்ஜாய் பண்ணலாம்."
என சமாதானம் கூற அவனோ சிறிது சமாதானம் ஆகினான். பின் நாங்கள் இருவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டு படுத்து உறங்கி விட்டோம்.
நான் அதிகமாக வெளியூர்களுக்கும் சென்றதில்லை. மதுரைக்குள் இருக்கும் இடத்தை மட்டும் தான் சரண்யா மாயாவிடம் சுத்தி பார்த்திருக்கிறேன்.
அதுபோக பள்ளிக்கல்வி சுற்றுலாக்களை ஒரு சில ஊருக்கு மட்டும் சென்றிருக்கிறேன்.
என் பெற்றோரிடம் எங்கும் சென்றதாக எனக்கு நினைவில் இல்லை.
சஞ்சய் அண்ணா ஓவியக் கண்காட்சி அருங்காட்சியகம் அழைத்துச் சென்றார். அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அங்குதான் முதன்முதலில் உயிரியல் பூங்கா வை பார்க்கப் போகிறேன். அதுவும் என் ஆதியுடன்.
அங்கு சில பேர் இந்த நேரத்திலும் சில பேர் நடை பயணம் செய்து கொண்டிருந்தனர்.
வருவதாக சொன்ன சரண்யா இன்னும் வரவில்லை. இவளுக்கு இதே வேலையாக போய்விட்டது. போன் செய்த பார்த்தேன்.
"தியா. அந்த சொட்ட சேட்டா என்னை விட மாட்டேங்குறான்டி. நான் வர கொஞ்சம் லேட்டாகும்."
சரண்யா அன்றும் இப்படித்தான்.மாலில் என்னை காக்க வைத்தாள் என எண்ணும் போதே ஆதித்யாவை முதன்முதலில் பார்த்த நியாபகம் வர்ற அவனை ஏறிட்டேன்.
அவன் என்னை பார்த்து என்னவென்று கேட்க புன்னகையுடன் ஒன்றும் இல்லை என தலையசைத்தேன்.
நானும் ஆதியும் உயிரியல் பூங்காவிற்கு அருகில் காத்துக் கொண்டிருக்க, சஞ்சய் அண்ணா சரண்யாவுடன் சேர்த்து எங்கள் நால்வருக்கும் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு வந்தார்.
"தியா மா"
சஞ்சய் அண்ணா என்னை இப்பொழுதெல்லாம் தியாமா என்றுதான் அழைக்கின்றார்.
"தியாமா உன் ப்ரெண்ட் வந்துட்டாளா?"
"இல்லண்ணா அவ வர இன்னும் நேரமாகும்ன்னு சொன்னா."
"இன்னும் ரெண்டு மணி நேரத்துல ஜூவ கிளோஸ் பண்ணிருவாங்க. நீங்க இப்போ போனா தான் ஒழுங்கா எல்லாத்தையும் பாத்துட்டு வர முடியும்."
"ஆனா சரண்யா..."
"நான் உன் பிரெண்ட கூட்டிட்டு வரேன். நீ ஆதி கூட உள்ள போய் சுத்தி பாரு."
நான் ஆதியை பார்க்க அவன்,
" சரி. இதுதான் சரண்யா நம்பர். நீ கால் பண்ணி எப்போ வருவான்னு கேட்டு கூட்டிட்டு வா. நான் உள்ள போய் எல்லாத்தையும் சுத்திக்காட்டுகிறேன்."
ஆதி என்னை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.
காடு போன்ற அமைப்பை ஒத்திருந்தது அந்த உயிரியல் பூங்கா.
திருவனந்தபுரம் உயிரியல் பூங்கா எப்போதுமே காட்டு விலங்குகளுக்கு ஒரு அற்புதமான வாழ்விடமாக இருக்கிறது. மேலும் அனைத்து பார்வையாளர்களுக்கும் அனைத்து சுற்றுலா பயணங்களிலும் எப்போதும் ஏற்ற ஒரு இடமாக இருக்கும்.
மிருகக்காட்சிசாலை எப்போதும் குடும்பங்கள், தம்பதிகள் மற்றும் எல்லா வயதினரையும் போற்றும் ஒரு நினைவகமாக இருந்து வருகிறது.
இந்த மிருகக்காட்சிசாலை சமீபத்தில் வெள்ளை வங்காள புலி மற்றும் குறிப்பாக அனகோண்டாஸின் புதிய சேர்த்தல் பற்றிய செய்திகளும் வந்துள்ளது.
அதிகாரிகள் அனகோண்டாக்களுக்காக பிரத்தியேகமாக ஒரு உறைவிடம் கட்டியுள்ளனர், இது மிகவும் உற்சாகமானது.
ஆனால் மறுபுறம், பல விலங்குகளின் அடைப்புகள். விலங்குகளை கூட கண்டுபிடிக்கும் பரிதாப நிலையில் உள்ளன. அடைப்புகளின் கிரில்ஸ் பல துருப்பிடித்தன. ஒரு சில விலங்குகள் புறக்கணிக்கப்பட்ட பக்கத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
ஆனால் இது தவிர, மிருகக்காட்சிசாலை என்பது உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அனுபவிக்க வேண்டிய ஒரு வாழ்நாள் அனுபவமாகும்.
இந்த அனுபவத்தை நான் ஆதித்யாவுடன் சேர்ந்து அனுபவித்துக்கொண்டிருந்தேன்.
எல்லா விலங்குகளுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். கூண்டில் அல்லாது சுதந்திரமாக சுற்றித்திரியும் சில விலங்குகளை பார்க்கும் பொழுது சிறிது பயமாக இருந்தாலும் வித்தியாசமாக இருந்தது.
எல்லா விலங்குகளிலும் புகைப்படம் எடுத்துக் கொண்டு ஆதித்யா எனக்கு வாங்கி தந்த சில உணவுப் பண்டங்களை கொரித்துக்கொண்டே சுற்றி பார்த்து கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தில் ஆதித்யாவின் அலைபேசியில் அவனுக்கு அழைப்பு வர சிறிது நகர்ந்து நின்று பேசிக் கொண்டிருந்தான்.
நானும் அங்கே இருந்த நீர்யானையின் இருப்பிடத்திற்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.
அப்போது என் அலைபேசி நழுவி கீழே விழ அதுவோ வேலியை தாண்டி நீர்யானை இருக்கும் இடத்திற்கு சற்று அருகே விழுந்து இருந்தது.
என் கையை உள்ளே விட்டு எடுக்க முயற்சி செய்யலாம் எனப் பார்த்தால் அதுவோ தூரமாக விழுந்து இருந்தது.
ஏதாவது குச்சி கிடைக்கிறதா என பார்க்கலாம் என அங்கும் இங்கும் தேடிக்கொண்டிருந்தேன்.
ஒரு குச்சி கிடைக்க அதை எடுத்துக்கொண்டு அலைபேசியை எடுக்க முயற்சித்தேன். ஆனால் அந்த குச்சியால் அலைபேசியை இருந்த இடத்தில் பாதி அளவு தூரத்தை கூட தொட முடியவில்லை. அவ்வளவு தூரத்தில் சென்று விழுந்திருந்தது அமெரிக்கா.
ஆதியிடம் கூறலாம் அவன் ஏதாவது செய்வான் என ஆதியை தேடினேன்.
ஆனால் ஆதித்யா அங்கு இல்லை.
எங்கு சென்றுவிட்டான் என பதறி ஆதித்யாவை தேட ஆரம்பித்தேன்.
அது காடு போன்ற அமைப்பை கொண்டிருந்த உயிரியல் பூங்கா.
மொத்தம் 55 ஏக்கரை கொண்டிருந்தது.
இந்த 55 ஏக்கர் காடு போன்ற அமைப்பில் ஆதித்யாவை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது.
அலைபேசியும் கையில் இல்லை. நாம் தேடிக் கொண்டு எந்த இடத்திற்கு செல்கிறேன் என்று தெரியாமலே தேடிக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தில் தான் கவனித்தேன் நான் இருந்த இடத்தில் மக்கள் நடமாட்டம் சிறிதும் இல்லாமல் இருந்தது.
பயந்து போய் மீண்டும் அந்த இடத்திற்கு செல்லலாம் என பார்த்தால் எப்படி செல்வது என பாதை தெரியவில்லை.
எப்படியோ அலைந்து திரிந்து நீர்யானை இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தேன்.
சிறிது நேரத்திற்கு முன் கூட்டமாக இருந்த அந்த இடத்தில் இப்பொழுது ஒரு ஆளும் இருக்கவில்லை.
யாராவது மனிதர்கள் கண்ணிற்கு தென்படுவார்கள் அவர்களிடமாவது உதவி கேட்கலாம் என கண்களை அலைபாய விட என் கண்கள் அலைபாய இடமெல்லாம் விலங்குகள் மட்டுமே இருந்தன.
சில அடி தூரத்தில் இருந்த கூண்டில் இருந்த சிங்கத்தின் கர்ஜனையை கேட்டு இன்னும் பயந்துபோய் நடுங்கினேன்.
எங்கு செல்வது என தெரியாமல் அங்கிருந்து வேகமாக நடந்தேன். என் காலடி சத்தமே எனக்கு கிலியை உண்டாக்கியது.
தூரத்தில் எங்கோ "தி" என்ற ஆதியின் அழைப்பு காதில் விழ என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. குரல் வந்த திசையை நோக்கி ஓடினேன்.
இப்போது அழைப்பு கொஞ்சம் சத்தமாக கேட்க சுற்றிலும் கண்களை அலைபாய விட்டேன். ஆனால் ஆதி கண்களுக்குத் தென்படவில்லை.
"ஆதிதிஇஇஇ" என என்னால் முடிந்த மட்டும் கத்தினேன்.
"தி" உருகிய அழைப்பு என் பின்னே ஒலிக்க திரும்பினேன். கண்களில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்த ஆதி என் கண்ணில் பட்டான்.
ஓடி சென்று அவனை அணைத்துக்கொள்ள அவனோ இன்னும் என்னை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
நான் பயந்ததை விட ஆதிதான் அதிகம் பயந்து இருப்பான் என நினைக்கிறேன்.
அவனுடைய இதயத்துடிப்பு என்னுடைய இதயத்துடிப்பை விட அதிகமாக இருந்தது.
கண்ணீரை சிறிது சிறிதாக சேமித்துக் கொண்டேன்.
அவனிடமிருந்து விலக முயற்சிக்க அவன் பிடி இன்னும் இறுகியது.
"ஆதி" என நான் மெல்லிய குரலில் இறைஞ்ச ..
"ப்ளீஸ்டி... கொஞ்ச நேரம்..." என அணைப்பின் இறுக்கத்தை கூட்டினான். அவனின் இதயத்துடிப்பு அவனின் பதட்டத்தை அப்பட்டமாக காட்டியது.
அவன் இதயத்துடிப்பு இன்னும் சீராகவில்லை. அவனுக்கு ஆறுதலாக அவன் முதுகை வருடி விட்டேன்.
"ஆதி, எனக்கு ஒன்னும் இல்ல."
"எங்க போன. நான் ரொம்ப பயந்துட்டேன். உன்னோட போன் எங்க?" என ஏக்கத்தில் ஆரம்பித்தவன் கோபமாக கேட்டான்.
நானோ என் அலைபேசியில் கீழே விழுந்த கதையையும் அதன் பிறகு நான் அவனை தேடியதையும் அவனிடம் சொல்ல அவன் மீண்டும் என்னை அனைத்துக்கொண்டான்.
" பயப்படாத. நாம இப்போ போயிடலாம்." என என்னை அழைத்துக் கொண்டு வாசலுக்கு சென்றான். ஆனால் கேட் பூட்டியிருந்தது.
ஆதியின் கடிகாரத்தில் மணியைப் பார்க்க அது ஆறு என காட்டியது.
அப்பொழுதுதான் அந்த இடம் இருட்டிவிட்டது என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
எப்போதும் இந்த உயிரியல் பூங்கா 5 மணிக்கே அடைத்து விடுவார்கள். அதனால்தான் எங்கும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.
ஆனால் உயிரியல் பூங்கா அலுவலகத்தின் அலுவலக எண் அங்கே இருந்தது. ஆதியின் அலைபேசியை எடுத்து பார்க்க அதுவும் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது
வேறு வழியின்றி அங்கேயே அமர்ந்தோம்.
எப்படியும் விலங்குகளுக்கு தீவனம் போட ஆட்கள் யாரேனும் உள்ளே வருவார்கள் என வாசலருகே அமர்ந்தோம்.
சிறிது நேரத்தில் அங்கே கொசுக்கள் அதிகமாக ஆதித்யா என்னை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
ஒட்டகச்சிவிங்கி நின்று இருக்க அதனருகே ஆதித்யா என்னை அமர வைத்து அவனும் என்னருகே அமர்ந்து கொண்டான்.
இதற்கு முன் எங்களுக்குள் எழுந்த இந்த உணர்வு போராட்டத்தின் தாக்கத்தால் நாங்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
நேரம் செல்ல செல்ல அங்கே குளிர் ஆக்கிரமித்தது. நானும் கைளை தேய்த்துக் கொண்டிருக்க, ஆதித்யா அவன் சட்டையை கழட்டி என் மேல் போர்த்தி விட்டான்.
நான் திரும்பி ஆதியை பார்த்தேன். வெற்று மார்போடு என்னை நெருங்கி அமர்ந்திருந்தான். எனக்குள் ஏதோ இனம்புரியாத உணர்வு தாக்க இதயம் படபடக்க நான் அவனை விட்டு விலகினேன்.
அவன் என்னை மேலும் நெருங்கி என்னை அவன் மேல் சாய்த்துக் கொண்டான். நானும் அந்த குளிருக்கு இதமாக என் கணவனின் மார்பில் உரிமையுடன் முகம் புதைத்தேன்.
தூரத்தில் கேட்ட ஏதோ விலங்கின் சத்தத்தில் கண்விழித்து பார்க்க ஆதி என் இடுப்பைச் சுற்றி அணைத்த வண்ணம் உறங்கிக் கொண்டிருந்தான்.
அவன் கண்ணில் இருந்து வந்த கண்ணீர் அவன் எவ்வளவு தூரம் பயந்தான் என்பதே அலகாக காட்டிக் கொடுத்தது.
என் கணவன் என்னை காதலிக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை என எண்ணிக்கொண்டு,
"எப்படிடா என் மனசுக்குள்ள வந்த?" என அவரிடம் கேட்டு விட்டு மீண்டும் அவன் மார்பில் சாய்ந்து கொண்டேன்.
ஆதியோ தூக்கத்திலே ,
"எப்படி நீ என் மனசுக்குள்ள வந்தியோ அப்படி." என்று தூக்கத்திலே என் நெற்றியில் முத்தமிட்டான்.
முதல் முத்தம் சிலிர்த்தது என் உடல். நானோ அதிர்ச்சியில் அவனைப் பார்த்தேன்.
" நீ இல்லாம என்னால முடியல ஸ்வேதா. ஐ லவ் யூ ஸ்வே குட்டி." என்றான்.
அவனின் ஐலவ்யு ஸ்வே குட்டியில் அனல் மேல் விழுந்த புழு போல் அவனிடமிருந்து துடித்து விலகினேன்.
அவன் அணைப்பில் இருந்து விலகிய அடுத்த நொடியே எழுந்தவன்,
" என்னாச்சு தி?" என என்னை நெருங்கினான்.
" என்ன தொடாதே." என்று கை நீட்டி அவனை எச்சரித்தேன்.
சற்று முன் இதமாக இருந்த அவன் அணைப்பு தொடுகை அவனுடைய முதல் முத்தம் எல்லாம் இப்பொழுது எனக்கு அருவருப்பாக தோன்றியது.
என்னை நினைத்து எனக்கே கேவலமாக இருந்தது.
யாரோ ஒருவரை காதலிக்கும் ஆதித்யாவை நான் காதலித்தேன்.
இப்பொழுது தான் அவனின் விலகலுக்கான காரணமும் அவன் என்னை வெறுக்கும் காரணமும் புரிந்தது.
"தி என்ன ஆச்சு பயந்துட்டியா?" என மீண்டும் அவன் என்னை நெருங்க,
" யாரது?" என்ற சத்தத்தில் இருவரும் அதிர்ந்து திரும்பினோம்.
விலங்குகளுக்கு உணவு விநியோகிக்க வந்தவர் எங்கள் இருவரை பார்த்து விசாரித்தார்.
நாங்கள் வழி தவறியதைக் கூறியவுடன் அவர் எங்களை வெளியே அழைத்துச் சென்றார்.
ஆதி என்னை சஞ்சய் அண்ணாவின் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு சென்றான்.
ஆனால் நான் ஆதியிடம் பேசவும் இல்லை. அவன் பேசிய எதையும் காதில் வாங்குவதாகவும் இல்லை.
ஆனால் வழி முழுவதும் அவன் பார்வை என் மீது படர்ந்து இருந்ததை நான் உணர்ந்து தான் இருந்தேன்.
ஆனால் ஏனோ அந்தப் பார்வை எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை. ஒருவிதமான அருவருப்பாய் மட்டுமே உணர்ந்தேன்.
வீடு வந்து சேர்ந்தேன்.
எதுவும் சாப்பிடாமல் அறையில் வந்து படுத்துக் கொண்டேன்.
ஆதியும் எதுவும் சாப்பிட்டதாக தெரியவில்லை.
என்னிடம் எவ்வளவோ பேச முயற்சி செய்தும் நான் அவன் புறம் திரும்பவும் இல்லை. கண்களை மூடி படுத்துக்கொண்டேன்.
ஆனால் தூக்கம் வர மறுத்தது.
ஆதி எழுந்து வெளியே செல்ல நான் எழுந்து பால்கனி
யில் சென்று நின்றேன்.
என்னுடைய கனவு கலைந்தது. நான் ஏன் ஆதித்யாவை காதலித்தேன் என தெரியவில்லை.
எந்த மனைவியால் தான் பொறுத்துக்கொள்ள முடியும் தன் கணவனின் இதயத்தில் வேறொரு பெண் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருப்பதை.
இத்தனை நாள் ஆதித்யாவின் விலகலுக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கும் என எண்ணியிருந்தேன்.
ஆனால் அவன் மனதில் வேறு ஒருவள் இருப்பதால் தான் என்னை விட்டு விலகியே இருக்கிறான் என புரிந்து கொண்ட போது என் இதயம் கனத்தது.
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
