உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -15
உதயம் 💏 15 💏
ஏதேதோ கற்பனைகளுடன் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வோம் என்ற எண்ணத்தில் இந்த கொடைக்கானல் பயணத்திற்கு சம்மதித்தேன். ஆனால் இப்பொழுது இந்த பயணமே அனல் மேல் நிற்பது போல் தகிக்கும்.
மதுரையிலிருந்து ஆரம்பித்த எங்கள் மௌனம் கொடைக்கானல் வரும்வரை ஒருவரை ஒருவர் பார்க்காமலே தொடர்ந்தது.
இப்பொழுது அறையில் நான் மட்டும் தனியாக இருக்கிறேன். ஆதித்யா எங்கோ அலுவலக வேலை என வெளியே சென்று விட்டான். அதுவும் என்னிடம் கூறவில்லை. அவனுடைய உடையை வைத்து கணித்துக் கொண்டேன்.
கொடைக்கானல் வந்து இரண்டு நாட்கள் ஆகின்றன. ஆனால் நாங்கள் இருவரும் முகம் கொடுத்து பேசக்கூட இல்லை.
தனியாக இருப்பது வெறுமையாக தோன்றுகிறது. எங்கள் வீட்டிலும் இதற்குமுன் தனிமையில் தான் இருந்தேன்.
தந்தை அலுவலகம் சென்று விட, தாய் பூஜை அறையில் இருக்க பாட்டி கிராமத்தில் தான் இருப்பார். நான் வீட்டில் தனியாகத் தான் இருப்பேன்.
ஆனால் அந்தத் தனிமையை இனிமையாக்க மாயாவும் சரண்யாவும் இருப்பார்கள்.
இப்பொழுது மாயாவும் சரண்யாவும் அலைபேசியில் தொடர்பு கொள்கிறார்கள். ஆனால் ஏனோ அவர்களிடம் பேச எனக்கு தோன்றவில்லை.
காரணங்கள் ஏதாவது சொல்லி அலைபேசியை அணைத்து விட்டு தனிமையில் அழுகிறேன்.
இந்த தனிமையும் கொடுமையாக இருந்தாலும் வேறு வழியின்றி இதையே அனுபவிக்கிறேன்.
மணி இரவு பதினொன்றாகிவிட்டது. ஆதித்யா இன்னும் வரவில்லை. தனியாக சாப்பிடவும் பிடிக்காமல் இரவு உணவையும் நிராகரித்துவிட்டு நிலவையும் இந்த குளிரையும் ரசிக்கவும் அனுபவிக்கவும் முடியாமல் தனித்து பால்கனியில் நின்று கொண்டிருக்கிறேன்.
கதவு தட்டும் சத்தம் கேட்டது. நான் சென்று திறக்கும்போது ஆதித்யா தான் நின்று கொண்டிருந்தான்.
என்னை ஏறெடுத்தும் பார்க்காமல் அழைபேசியில் பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தால் உள்ளே வந்தவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
அவனிடம் பேசுவதற்கு படுத்து விடுவதே மேல் என எண்ணி படுக்கையில் படர்ந்தேன்.
குளித்து வந்தவன் கட்டிலின் மறு ஓரத்தில் படுக்கும் அரவத்தை உணர்ந்து கண்களை மூடி நித்திரைக்கு சென்றேன்.
காலை 8 மணி ஆகியும் இன்னும் இருள் சிறிது படர்ந்திருக்க கண்களில் திறக்கமுடியாமல் அந்த குளிருக்கு இதமாக பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூக்கத்தை கலைக்க பிடிக்காமல் உறங்கிக் கொண்டிருந்தேன்.
ஆதித்யா யாரிடமும் கத்திக்கொண்டிருக்கும் சத்தம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.
இன்று யார் அவனிடம் மாட்டினார்களோ நாம் நம் வேலையை பார்ப்போம் என என் தூக்கத்தை கெடுக்க முயன்ற அவன் குரலை அலட்சியம் செய்து கண் மூடினேன்.
இதில் கதவு வேறு யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
ஆதித்யாவும் கதவை திறக்கும் நோக்கத்துடன் இல்லை என்பதை புரிந்து கொண்டு மெதுவாக படுக்கையில் இருந்து எழுந்தேன்.
"இல்லன்னு சொன்னா என்ன அர்த்தம். சிஸ்டம் ல இருந்தது எப்படி காணாமல் போகும். என் லேப்ல ஃபைல் ஓபன் ஆகவே இல்ல.
எனக்கு தெரியாது எப்படியாவது ரெக்கவர் பண்ணி எனக்கு சென்ட் பண்ணுங்க. ஏன் இவ்வளவு யூஸ்லெஸ்ஸா இருக்கீங்க. இது எவ்வளவு பெரிய காண்ட்ராக்ட்ன்னு தெரியும் தானே."
என யாரையோ வறுத்து எடுத்து கொண்டிருந்தான். ஆதித்யா குமார்.
நான் கதவை திறக்க அங்க பேரர் சிற்றுண்டியுடனும் பழச்சாறுடனும் நின்று கொண்டிருந்தான்.
ஆதித்யா ஆர்டர் செய்திருப்பான் என அதை எடுத்துக் கொண்டு ஆதி அமர்ந்திருந்த சோபாவின் அருகில் இருந்த டீபாயில் வைக்க குனியும்போதும் ஆதித்யா வேகமாக கத்திக்கொண்டே எழுந்தவன் என் கையில் இருந்த ட்ரேயையை தட்டிவிட அதிலிருந்த பழச்சாறு மொத்தமும் லேப்பில் கொட்டியது.
"Damn..." என அவன் லேப்டாப்பை தட்ட அதுவும் செயல் இழந்து இருந்தது.
என் புறம் திரும்பியன்,
" இடியட். அறிவில்ல உனக்கு." அவன் என் மேல் பாய்ந்தான்.
"நான் இல்ல ஆதி... நீ தான்..." என பேசிக்கொண்டிருக்கும்போதே என் கன்னத்தில் இடியென விழுந்து அவன் அறை.
'ஜஸ்ட் ஸ்டாப் இட் யூ இரிடேட்டிங்க் இடியட்." அவன் கோபத்தை அடக்க கையால் தலைமுடியை கோதி என்னை தள்ளிவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
என் கன்னத்தில் கை வைக்க அது தகதகவென எரிந்தது. கண்ணீர் விட்டு அந்த இடத்தை இதமாக வருட நினைக்க எரிச்சலும் அதிகமாக இருந்தது.
என் தந்தை கூட என்னை இதுவரை கைநீட்டி அடித்ததில்லை. ஆனால் இவன்?
என்னால் முடியவில்லை. என் மீது எந்த தவறும் இல்லை. அவன்தான் திடீரென எழுந்தான்.
அவனால்தான் பழச்சாறு அவன் மடிக்கணினியில் கொட்டியது. தவறை அவன் மீது வைத்துக் கொண்டு அவனுடைய அலுவலக கோபத்தை என்மீது காட்டினால் என்ன அர்த்தம்.
ஒருவேளை என்னை வெறுப்பதால் கோபத்தை காட்டுகிறானா என்ற எண்ணமும் வர்ற மனம் கசந்து போனது. கண்களை துடைத்துக்கொண்டு அவனுடைய மடிக்கணினியை எடுத்து என் மடியில் வைத்தேன்.
பழச்சாறு முழுவதும் கீபோர்டை நனைத்திருந்தது. எப்படியும் முழு பழச்சாறும் உள்ளே சென்றிருக்க வேண்டும்.
ரூம் சர்வீஸ் க்கு போன் செய்து எனக்கு தேவையான டூல்ஸை கேட்டேன்.சிறிது நேரத்தில் நான் கேட்டதும் கிடைத்தது.
மடிக்கணினியின் பேட்ரியை தனியாக கழட்டிவிட்டு மடிக்கணினியை ஸ்கூருவை கழட்டி விட்டு அதை திறந்து ஆராய்ந்தேன். உள்ளே அங்கங்கு தண்ணீராக இருக்க ஒவ்வொன்றாய் சுத்தம் செய்து ப்ளோ செய்தேன்.
ஸ்லாட்டில் கனெக்ட் செய்து இருந்த வயர்களை கழட்டி துடைத்துவிட்டு மீண்டும் பொருத்தினேன்.
துணியை கொண்டும் ப்ளோவரை கொண்டும் கீபோர்ட்டை நீர் தடையின்றி செய்து லேப்டாப்பை மறுபடியும் ஸ்கூரூவ் வை டைட் செய்து மடிகணினியை ஆன் செய்தேன்.
மடிக்கணினி உயிர் பெற என் உயிர் மீண்டும் வந்தது. கண்டினியூ ஸ்டார்டிங் என கேட்க கன்டினியூ கொடுக்க விட்ட இடத்தில் மீண்டும் திரை நின்றது. அந்த பைலின் பார்மட்டை சரி செய்து முடிப்பதற்கும் ஆதி குளியலறையிலிருந்து வருவதற்கும் சரியாக இருந்தது.
"என்னோட லேப்ல என்ன பண்ற. அதான் மொத்தமா முடிச்சிட்டியே" என காரசாரமாக கேட்டான்.
உள்ளுக்குள் வெதும்பினாலும் உணர்ச்சிகளை துடைத்தவளாய்,
"உங்க லேப்பை சரி பண்ணிட்டேன். அந்த பைல் பார்மேட் உங்க லேப்ல சப்போட்டா ஆகல. அதனால் பார்மேட் சேஞ்ச் பண்ணி வெச்சி இருக்கேன். இப்போ ஓபனாகும் பாத்துக்கோங்க."
இதற்கு மேலும் அங்கு நின்றால் அவன் எதிரில் அழுது என் பலவீனத்தை காட்டு விடுவேனோ என எண்ணி பால்கனிக்கு சென்று அமர்ந்து கொண்டேன்.
அவன் தயாராகி வெளியே செல்லும் அரவம் கேட்டது. நான் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. அவன் சென்று விட்டான் என உணர்ந்தும் அதே இடத்தில் அமர்ந்து என் நிலையை எண்ணி நானே நொந்துக்கொண்டேன்.
இவனை எந்த விதத்தில் சேர்ப்பது. கமலை கேட்டது போல் இவன் நல்லவனா கெட்டவனா என்ற எண்ணம் சந்தேகம் என்னுள் எழுந்தது.
ஒரு நேரம் நன்றாக பேசுகிறான். அக்கறையாக நடந்து கொள்கின்றான். சொல்லாமலே என் வலிகளை புரிந்து மாத்திரைகளை தருகிறான். சில நேரம் என்னை அடியோடு வெறுக்கிறான். காரணமின்றி என்மேல் கோபப்படுகிறான்.
இவனை என்னவென்று நினைக்க என எனக்கு நானே புலம்பிக்கொண்டு பால்கனியில் அமர்ந்து இருந்தேன்.
காலையில் அமர்ந்தவள் அந்த இதமான குளிரையும் பொருட்படுத்தாமல் என் வாழ்க்கையே எண்ணி கொண்டே அமர்ந்திருக்க மதிய நேரம் வந்தது.
என் அழுகையை எல்லாம் உள்ளுக்குள் அடக்கிக்கொண்டு என் பலவீனத்தை வெளியே காட்டாமல் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தேன்.
கதவு திறக்கும் சத்தம் கேட்க அப்போது தான் உணர்ந்தேன் கதவை சாத்தாமல் தனியாக இருந்திருக்கிறேன் என்று.
மெதுவாக எட்டிப் பார்க்க உள்ளே நுழைந்தவனை அவனின் குரலை வைத்தே யாரென அறிந்து கொண்டேன்.
"தியா.... தியா...
வேர் ஆர் யூ?" உற்சாகமாக வந்து கொண்டிருந்தான்.
என்ன இவ்வளவு உற்சாகமாக வருகின்றான் என யோசித்தாலும் நான் இருந்த இடத்தில் இருந்து நகரவே இல்லை.
இப்போது உற்சாகமாக வருவான் என்னை காயப்படுத்திவான். நான் மீண்டும் இதே இடத்தில் வந்து அமர வேண்டும். அதற்கு நான் இங்கே இருந்து கொள்வதே மேல் என அவன் குரலைக் கேட்டும் கேட்காதது போல் இருந்தேன்.
"தியா எங்க இருக்க?" பால்கனிக்கு வந்தவன்,
" நீ இங்க இருக்கியா... எவ்ளோ நேரமா கூப்பிட்டு இருக்கேன். யூ நோ வாட் உன்னால எனக்கு எவ்ளோ பெரிய காண்டராக்ட் கிடைச்சிருக்கு தெரியுமா. ஐ அம் சோ ஹாப்பி." என் அருகில் வர அப்போதும் நான் அவனை கண்டு கொள்ளவில்லை.
அவன் என் கையை பிடித்து இழுத்து எழ வைத்து அவன் புறம் திருப்பினான்.
"நான் எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்ன பண்ற?"
அப்போதுதான் அவன் முகத்தைப் பார்த்தேன். அவன் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் இருந்தது.
அந்த புன்னகை ஏனோ எனக்கு மனநிம்மதியை தந்தது.
நான் மெல்லிய புன்னகையுடன், "கங்கிராட்ஸ் ஆதித்யாகுமார்" எனும்போது அவனுடைய கண்கள் என் கண்ணத்தில் பதிந்தது.
அவனின் சந்தோஷமான முகம் நொடியில் வருத்தத்தை தத்து எடுப்பதை என்னால் பார்க்க முடிந்தது.
இவனின் எண்ணங்களே என்னால் என்றுமே கணிக்க முடியாது என அறிந்தவளாய் வேறு புறம் திரும்பி கொண்டேன்.
அவன் என்னை அவன் புறம் திருப்பினான்.
"தியா... " என்ற குரல் கம்மலாக வெளிவந்தது.
"உன் கன்னம் இவ்ளோ வீங்கி இருக்கு. ஐ அம் சாரி..." என்றவன் மெதுவாக என் கன்னத்தை வருட அந்த இதமான வருடல் ஒருபுறம் நிம்மதியையும் மறுபுறம் வலியில் எரிச்சலையும் தர என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
அதைப் பார்த்தவன் தலை முடியை அழுந்த கோதி அவன் கைகளை பால்கனியின் சுவற்றில் குத்தினான். ஒரு நிமிடம் பயத்தில் வெலவெலத்துப் போனேன்.
அவன் கண்களில் வலியுடன் என்னை நெருங்கியவன் என் கண்களில் கண்ணீரை பட்டும் படாமல் கிடைத்துவிட்டான்.
"ஐ அம் தியா. நான் ஒரு கோவக்காரன். இங்க பாரு உன்னை எப்படி அடிச்சுருக்கேன்னு. உன் அப்பா கூட உன்னை அடிச்சு இருக்கமாட்டார். ஆனா நான் உன்னை.... ஐ அம் சாரி தியா." அவனின் கண்களில் இருந்து கண்ணீர் சுரந்தது.
இவன் உண்மையிலேயே அவன் செய்த தவறை புரிந்து கொண்டான். ஆனால் என்னால் இவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை. இவன் புரியாத புதிராக இருக்கிறான்.
அவன் மேலும் என் கண்ணத்தில் வருட நான் வலியில் 'ஸ்ஆஆஆஆ...' என்ற முனகலுடன் பின் நகர என்னை இழுத்து அணைத்துக் கொண்டான்.
அவனின் இந்த அணைப்புக்கு என் உடலும் ஏங்கியதோ என்னமோ அவனுள் புதைந்து கொள்ள தொடங்கினேன்.
ஆதி ஆறுதலாக என் தலையை கோதி விட்டான்.
"என்னை ஏன் ஆதித்யா இவ்வளவு வெறுக்கிற ?"என்ற கேள்வியை என்னை அறியாமல் விசும்பலுடன் வெளியே வந்தது.
அதைக் கேட்டதும் என்னை விலக்கி என் முகத்தை நிமிர்த்தினான்.
" இல்ல தியா. இல்ல. நான் உன்னை வெறுக்கல. யார் சொன்னா நான் உன்னை வெறுக்கிறேன்னு"
"எனக்கு தெரியும். நீ உன் பிரண்டு கிட்ட பேசிகிட்டு இருந்தத நான் கேட்டேன்."
அவன் தலையில் அடித்துக் கொண்டு, "தியா, நீ தப்பா புரிஞ்சுகிட்ட. அந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்ல. நான் ஒன்னும் உன்ன வெறுக்கல.என்னை நம்பு. "
என்னை சமாதனப்படுத்தி சிறிது நேரத்தில் என்னை கட்டிலில் அமர வைத்தான் .
பண் போல் வீங்கி இருந்த என் கண்ணத்தில் மருந்தை தடவி விட்டான்.
வலியில் என் கண்களில் மீண்டும் கண்ணீர் கசிய அதை இடது கையால் துடைத்துக் கொண்டே வலது கையால் மருந்திட்டான்.
ரூம் சர்வீஸுக்கு போன் செய்தவன் எனக்கான உணவை எடுத்துவர கூறினான்.
உணவு கொண்டுவரப்பட அவனே எனக்கு ஊட்டி விட்டான் .
அவன் கண்களிலிருந்தது குற்ற உணர்ச்சியா? இல்லை வேறு ஏதுமா?
இது எந்த மாதிரியான உணர்வு எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த உணர்வு என்னை ஏதோ செய்தது.
அவனுடைய பாராமுகம் என்னை நிலைகுலையச் செய்தது என்றால் அவனின் இந்த அக்கறை என்னை அவனுள் புதைய செய்கிறது.
மதிய உணவு கொண்டுவரப்பட அவனே எனக்கு ஊட்டி விட என்னால் மெல்ல முடியாமல் போக, வேண்டாம் எனக் கூறினேன்.
முதலில் வற்புறுத்தியவன் பின் என் வலியை உணர்ந்து பழச்சாறு மட்டும் குடிக்கக் கொடுத்தான்
"தியா ப்ளீஸ் இனிமே இப்படி அழுகாத. எனக்கு தெரியும் நான் உன்கிட்ட இதுவரைக்கும் ரூடா தான் பிகேவ் பண்ணியிருக்கேன்.
அதுக்காக நான் கெட்டவன் இல்ல. அம் சோ சாரி. நான் உன்னை ஏதாவது ஹர்ட் பண்ணி இருந்தா. இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன்.
இன்னொரு முறை இந்த மாதிரி அழுகாத.எனக்கு ஒரு மாதிரி இருக்கு."
நான் அவனை நம்பாத பார்வை பார்த்தேன்.
அதை உணர்ந்தவன்.
" என்னை நம்பு. நாம இனிமே பிரெண்ட்ஸ்?" என அவன் கையை முன்னால் நீட்ட, இவனை நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தேன்.
" ஒரே ஒரு சான்ஸ் குடுடா..." என அவன் கெஞ்சும் தோரணையில் கேட்டான்.
அவனின் டா என்ற அழைப்பு என்னை ஏதோ செய்ய கையை நீட்டினேன்.
என் நாங்கள் இருவரும் கை குலுக்கிக் கொண்டோம். அதன் பிறகு எங்களுக்குள் அமைதி நிலவ அதை கலைக்கும் விதமாக ஆதித்யாவை பேச்சைத் தொடங்கினான்.
"தி.. உனக்கு கொடைக்கானல் பிடிச்சிருக்கா?"
அவனின் தி என்ற அழைப்பு உயிர் வரை சென்று வர நான் அவனை முறைத்துக் கொண்டே,
" கொடைக்கானலை பத்தி தெரியல. ஆனா இந்த ரூம் பிடிச்சிருக்கு."
"ஏன் கொடைக்கானல் பிடிக்கலையா?"
"எனக்கு எப்படி தெரியும் கொடைக்கானல் எப்படி இருக்குன்னு. இங்க வந்ததுல இருந்து ரூம்ல தானே இருக்கேன். " அவனிடம் கோபித்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.
அவன் கண்களை சுருக்கி நாக்கை கடித்து மானசீகமாக அவனை அவனே நொந்து கொண்டதை என்னால் அவனின் முக மாறுதலிலிருந்து உணர்ந்து கொள்ள முடிந்தது.
என்னை அறியாமலேயே நான் அதை ரசித்தேன். அழகாவும் இருக்கான். அன்பாகவும் இருக்கிறான் என என் மனது அவனுக்கு பாராட்டுச் சான்றிதழ் கொடுத்தது.
"சாரிடா ரொம்ப முக்கியமான மீட்டிங்க். இதுக்காக சிக்ஸ் மந்த் வொர்க் பண்ணியிருக்கேன்.
நெக்ஸ்ட் வீக் இதுக்காக நான் திருச்சிக்கு போகவேண்டியதிருக்கும். அங்க போய் அக்ரிமெண்ட் பேப்பர்ல சைன் பண்ணனும். இவ்வளவு பெரிய காண்ட்ராக்ட் எனக்கு கிடைச்சதுக்கு ரீஸனே நீ தான்.
நீ மட்டும் இன்னைக்கு பார்மேட் சேன்ஞ் பண்ணி கொடுக்காமல் இருந்திருந்தால் என்னால இந்த டீல் ஓகே பண்ணி இருக்கவே முடியாது.
அன்ட் சாரி உன்னை தனியா விட்டுட்டு போனதுக்கு.
அதுக்கு பதிலா நாளேல இருந்து இந்த மொத்த கொடைக்கானலயும் உனக்கு சுத்தி காட்டுறேன்." என சத்தியம் செய்தான்.
முதல் முறையாக ஆதியுடன் ஒரு தோழமை உணர்வுடன் பழகுகிறேன்.
இந்த உணர்வும் வித்தியாசமாகத்தான் இருந்தது.
ஆதித்யா என்னிடமும் சாதாரணமாக பழகுகிறான் என்ற எண்ணமே அவன் மனது சீக்கிரம் மாறிவிடும் என்ற எண்ணம் தோன்றியது.
"ஆனால் இந்த முகத்தை வைத்து என்னால வெளிய எங்கேயும் போக முடியாது." என்று முகத்தை சுருக்கிக்கொண்டு கூற அதில் அவன் குற்ற உணர்ச்சி மீண்டும் என் தலைதூக்க நானே மானசீகமாக என்னை கொட்டிக்கொண்டேன்.
"உனக்கு நான் வேற ஏதாவது ஏற்பாடு பண்றேன். சாரி " என மீண்டும் கவலையாக கூற மனம் நெகிழ்ந்து போனேன்.
"தியா எழுந்திரு.
"தியா கெட் ரெடி....
"தியா ஃபாஸ்ட்...
ஆதித்யாவின் குரல் கேட்டுக்கொண்டே இருந்ததில் என்னைவிட ஆதித்யா தான் வெளியில் செய்வதில் ஆர்வமாக இருக்கிறான் என புரிந்து கொண்டேன்.
அவன் வேகம் இல்லாவிட்டாலும் ஓரளவு வேகமாகவே கிளம்பி வந்தேன்.
கண்ணாடி முன் இறுதியாக ஒருமுறை பார்த்துக் கொண்டிருக்க ஆதித்யா என் பின்னால் வந்து நின்றான்.
" தி, நீ ரொம்ப அழகா இருக்க." என்றவன் கூற, நானும் எங்க ஜோடி பொருத்தத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டேன்.
எங்கள் ஜோடி அழகாகத்தான் இருந்தது .
பாட்டி சொன்னது போல் எங்கள் கல்யாணம் கடவுள் போட்ட முடிச்சு போல.
ஆதித்யா என் தோளைஇ பற்றி அவன் புறம் திருப்பினான். அவன் கையில் இருந்த ஸ்கார்ஃபை கண்ண வீக்கம் தெரியாமல் கட்டிவிட்டான்.
"இப்போ போலாம்." அவன் என் கையை பிடித்து அழைத்துச்செல்ல ஒரு புது மாதிரியான உணர்வு என்னை சூழ்ந்ததை உணர முடிந்தது.
நானும் ஆதித்யாவை முதன்முதலில் விரும்பி ஏற்கின்ற பயணம்.
முதலில் நாங்கள் ஹோட்டலுக்கு சென்று சிற்றுண்டியை முடித்துவிட்டு லேக் ஏரியாவிற்கு சென்றோம்.
அங்கே எல்லோரும் ஜோடியாக ஜோடியாக போர்ட்டில் செல்ல, நான் அதை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஆதித்யா என் அருகில் வந்தான்.
" என்ன பாத்துகிட்டே இருக்கலாம். வா" என அங்கிருந்த ஒரு போர்டில் என்னை ஏற்றி விட்டான்.
நாங்கள் இருவரும் நீல நிற அன்னம் போன்ற அந்த படகில் மிதந்தோம்.
அவனுடனான இந்தத் தனிமையை அந்த அழகான பயணத்தை ஒவ்வொன்றையும் என் நினைவு பெட்டகங்களில் சேமித்து வைத்துக் கொண்டிருந்தேன்.
இதேபோல் ஆதித்யா எப்போதும் என்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற வேண்டுதலையும் கடவுளிடம் மறக்காமல் வைத்துவிட்டேன்.
போட்டிங் முடித்து வெளியே வந்ததும் சுற்றி கடைகளாக இருக்க, இதை பார்த்த கொண்டே வந்தேன்.
என் கண்கள் அங்கே நின்று கொண்டிருந்த ஒரு கறுப்பு நிற குதிரையின் மேல் பதிந்தது.
"ஒரு ரைட் போலாமா?" என்ற குரல் காதின் ஓரத்தில் மென்மையாக கேட்கவும் மூச்சு முட்டியது.
அவனிடமிருந்து சிறிது விலகி, "ரைட் எதுக்கு?" என்றேன்.
" ரொம்ப நேரமா அந்த குதிரையை சைட் அடிச்சிட்டு இருந்தியா. அதான் கேட்டேன் குதிரையில ஒரு ரைட் போலாமான்னு."
"அய்யோ எனக்கு குதிரை னா ரொம்ப பயம். அந்த குதிரை எவ்ளோ ஹைட்டா இருக்குன்னு பாரு. அதோட ஸ்கின் ஸாஃப்டா இருக்கு. வால் லேடிஸ் ஹேர் மாதிரி இருக்கு பாரேன்."
"வா கிட்ட போய் பார்க்கலாம்."
"நான் வரல. எனக்கு பயமா இருக்கு."
"அதான் நான் இருக்கேன்ல." என் கையை பிடித்து குரையின் அருகே கூட்டிச் சென்றான்.
"இதை தொட்டுப் பார்க்கட்டா"
"தாராளமா பார்த்துக்கோ." என்றான்.
குதிரை சிறிது சத்தத்துடன் நகரவும் பயந்து பின் வாங்கினேன்.
ஆதியோ என் அருகில் வந்து என் கையைப் பிடித்து குதிரையின் மேல் வைத்தான்.
குதிரையின் கையைவிட ஆதியின் கைகளில் இருந்த மென்மை என்னுள் ஊடுருவிச் சென்றது.
அந்தக் குதிரை காரனிடம் குதிரையில் ரைட் போக வேண்டுமென்று கேட்க நானோ பயத்தில் வேண்டாம் என்றேன்.
" என் மேல நம்பிக்கை இருக்குல."எனக்கேட்க என் தலை என் அனுமதியில்லாமல் ஆமாம் என்றது.
குதிரைக்காரன் ஏறுவதற்கு உதவி புரிய கையை நீட்டினான்.
நான் குதிரைக்காரனின் கையை பிடிக்க போக, என் கையை தடுத்து நிறுத்தி என் இடையில் அவன் இரு கைகளையும் அழுத்தி என்னை தூக்க நானும் குதிரைகளை ஏறாமல் ஆதியின் திடீர் ஸ்பரிசத்தில் விதிவிதிர்த்தேன்.
"தியா சீக்கிரம் காலை தூக்கி போடு."
ஆதியின் குரல் நிதர்சனத்திற்கு கொண்டுவர குதிரையில் அமர்ந்தேன்.
"தியா கொஞ்சம் முன்னாடி தள்ளி உட்காரு"
நான் குதிரையில் முன்னால் கொஞ்சம் தள்ளி உட்கார ஆதித்யா என் பின்னே அமர்ந்தான்.
இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆதித்யாவுடன் ஒரே குதிரையிலா.
முதல் முறை இவ்வளவு நெருக்கத்தில் நாங்கள் இருவரும் அமர்ந்து இருப்பது எனக்கு மூச்சு முட்டியது.
நேற்று நானும் ஆதித்யாவும் அணைத்து இருந்தோம். ஆனால் அது எதிர்பாராத விதமாக நாங்கள் இருவரும் உணர்ச்சியின் பிடியில் இருக்கும் பொழுது நடந்தது.
ஆனால் இன்று இவ்வளவு தெளிவாக ஆதித்யா என்னுடன் இந்தப் பயணத்திற்கு தயாரானது என் காதலின் முதல் படியாக நினைத்தேன்.
காதல். ஆம் காதல் தான்.
நேற்று அவன் அணைப்பில் இதம் தேடியபோது உணர்ந்துகொண்டேன்.
மஞ்சள் கயிறு அதன் மேஜிக்கை காட்டிவிட்டது.
நான் என்னை அறியாமலேயே ஆதியை காதலித்து விட்டேன்.
என் கணவர் என்ற உரிமையில் அவனிடம் என் ஆசைகளை எதிர்பார்க்க ஆரம்பித்தேன்.
என் கவலை சந்தோஷம் எல்லாம் ஆதித்யா மட்டும்தான்.
ஆதித்யாவின் நெருக்கத்தில் மதி மயங்கி இருந்த என்னை, "தியா கம்ஃபர்டபிளா இருக்கியா?" என்ற ஆதியின் குரல் என்னை வெளிக்கொணர்ந்தது.
தலையை மட்டும் ஆட்டினேன்.
குதிரைக்காரனை இருக்கச் சொல்லிவிட்டு ஆதியே குதிரையை சவாரி செய்ய ஆரம்பித்தான்.
அவன் குதிரையை லாவகமாக செலுத்தியதில் வியந்து அவனை பார்த்தேன். அவனுடைய முழங்கைகள் இரண்டும் என் இடையை உரசியவாறே குதிரையைச் செலுத்திக் கொண்டிருந்தது. இவனுக்கு ஹார்ஸ் ரைடிங் தெரியும் என்பது எனக்கு தெரியாமல் போனது.
ஆதித்யா உடனான இந்த பயணத்தை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் எந்த ஒரு பயணத்திற்கும் ஒரு முடிவு உண்டு என்பதை மீண்டும் சவாரி தொடங்கிய இடத்தில் குதிரை நின்றபோது உணர்ந்தேன்.
இறங்க மனமில்லாமல் ஆதி கொடுத்த கைகளை பற்றிக்கொண்டு கீழே குதிக்கும்.
குதித்ததில் தடுமாறி ஆதித்யாவின் மேலே விழ அவனோ என் இடையைப் பற்றி லாவகமாக என்னை நிறுத்தியவன் தள்ளாடியபடியே அவனும் நின்றான்.
"தியா வேற எங்க போலாம்?" என கேட்க மாயா டால்பின் நோஸ் பற்றி கூறியது ஞாபகம் வந்தது.
"ஆதி என்னை டால்பின் நோஸ் கூட்டிட்டு போறியா?"
"ஆர் யூ சுவர்? டால்பின் நோஸா?"
"எனக்கு அங்க போகணும் ரொம்ப ஆசையா இருக்கு." எனக் கூற ஆதி தோளைக் குலுக்கிக் கொண்டு சரி என்று பயணித்தான்.
இருவரும் டால்பின் நோஸ் ஒரு கிலோ மீட்டர் தள்ளியே வண்டியை நிப்பாட்டி விட்டு நடந்தோம்.
சிறிது தூரம் சென்றதும் பாதை மலை சரிவை போல் கரடுமுரடாக இருக்க, அந்த சரிவில் இறங்கினோம்.
குதித்தும் தாண்டியும் சிறுகுழந்தைகள் போல் செல்ல இந்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது.
இதற்கு முன் கொடைக்கானல் வந்ததில்லை. ஆதியுடன் தான் முதன்முதலில் வருகிறேன்.
20 நிமிட நீண்ட சரிவில் இறங்கிய பின் அங்கே இரண்டு மூன்று கடைகள் இருந்தன.
ஆதித்யா எனக்கும் அவனுக்கும் டீ சொல்லிவிட்டு வர நான் அந்த இடத்தை பார்க்க அருமையாக இருந்தது.
அந்த மலையின் ஓரத்தில் நின்று பார்த்துக் கொண்டு அந்த இயற்கை எழிலை ரசிக்க உள்ளம் பூரித்து போனது.
எங்கும் மேகங்கள் சூழ்ந்து இருக்க அந்த இதமான குளிர்ந்த காற்று உடலைத் துளைக்க ஆதியின் நெருக்கமான ஸ்பரிசமும் அந்த ரம்மியமான சூழ்நிலையை மேலும் அழகாக்க அதை ரசித்தேன்.
"தியா அஙக தெரியுது பாத்தியா. அதுதான் தோல்ஃபின் நோஸ்."என தூரத்தில் இருந்த ஒரு மலையின் நுனியை காட்டினான்.
இங்கிருந்து பார்க்கும் போதே அது தூரமாக இருந்தது.
அதன் முனையை பார்க்கும் பொழுது டால்ஃபின் மூக்கு போல காட்சியளிக்க அதற்காகவே டால்பின் நோஸ் என பெயர் வந்தது.
அங்கு செல்ல இன்னும் நடக்க வேண்டும் என்று சொல்ல எனக்கு இப்பொழுதே மூச்சு வாங்கியது.
ஆதி என் கையை பற்றி கொள்ள நானும் அவனுடனான பயணத்திற்காக அவனை தொடர்ந்து சென்றேன்.
இன்னும் பதினைந்து நிமிட பயணத்தில் டால்பின் நோஸை நாங்கள் வந்தடைந்தோம்.
இரண்டு மூன்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டு ஒரு பத்து நிமிடம் அமர்ந்து பேசி விட்டு மீண்டும் கிளம்பினோம்.
இப்பொழுது மலை இறங்குவது எளிமையாக இருந்தது.
இப்பொழுது மலை ஏற வேண்டும். இதற்கு முன் நான் மலை ஏறியது இல்லை. அதனால் அது எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது.
மெதுவாக மலையை ஏற பத்து நிமிடத்தில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து விட்டேன்.
"வாட் ஹேப்பெண்ட் தியா?"
"ஆதி எனக்கு கால் வலிக்குது."
அவன் சிரித்துக்கொண்டே
"நீ தானே டால்ஃபின் நோஸ் போனும்னு சொன்ன. அப்புறம் என்ன?"
"ஆனா இப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாது. மாயா தான் செம்மயா இருக்கும்னு சொன்னா. அவள் நம்பி தான் நான் வந்தேன்.நீயாவது முன்னாடியே சொல்லிருக்கலாம்ல."
"சரி. கொஞ்சம் உட்காரு நான் உனக்கு ப்ரட் ஆம்லேட் வாங்கிட்டு வர்றேன். அது இங்க ஃபேமஸ். அதை சாப்பிட்டு எனர்ஜி ஏத்திக்கோ."
என்ற ஆதி ப்ரெட் ஆம்லேட்டுடன் வந்தான்.அதை சாப்பிட்டேன்.
பத்து நிமிடம் ஓய்விற்குப் பின் மீண்டும் நடந்தேன்.
ஐந்து நிமிடத்திற்குப் பின் மீண்டும் பத்து நிமிடம் அமர்ந்தேன்.
மாயா கூறியது நினைவுக்கு வந்தது. அவளை கொலை செய்ய வேண்டும் அளவுக்கு ஆத்திரம் வந்தது.
சத்தியமாக என்னால் நடக்க முடியவில்லை.
என் கால்கள் இறந்து போய்விட்டன. எப்படித்தான் ஏறுகிறார்களோ.
என்னைப்போல் பல பெண்கள் அங்குமிங்கும் அமர்ந்திருக்க, அவர்கள் அருகில் அவர்களின் துணைகள் நின்று கொண்டிருந்தனர்.
"ஆதி இதுக்கு மேல என்னால ஒரு ஸ்டெப் கூட எடுத்து வைக்க முடியாது."
ஆதித்யா சிறிது நேரத்தில் "தியா , ஆர் யூ கம்ஃபர்டபிள்? "என கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே என்னை அவன் கைகளில் தாங்கி இருந்தான்.
"ஆதி என்ன பண்ற? இதுல ஏறவே முடியல இதுல எப்படி என்ன தூக்கிட்டு போவ?" என்றேன் அக்கறையாக.
"மேடம் , இது ஜிம் பாடி. இதெல்லாம் எனக்கு சாதாரணம்." என்றவன் என்னை தூக்கிக் கொண்டு மேலே ஏறினான்.
நிச்சயமாக மாயாவிற்கு இதற்காகவே நன்றி சொல்லியாக வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
அவன் நெஞ்சில் முகம் புதைத்து அவன் தோள்களில் என் கைகளை மாலையாக்கி கட்டிக்கொண்டேன்.
எப்படியோ ஒருவழியாக அங்கிருந்து கிளம்பி மேலும் சில இடங்களை பார்த்து விட்டு ரூமுக்கு வந்தோம்.
உடலில் வலி ஏற்பட சோர்ந்து போய் இரவு உணவை சாப்பிடாமல் தூங்கிவிட்டோம்.
காலை எழுந்ததும் ஆதித்யா எல்லாவற்றையும் எடுத்து வைக்க சொல்ல மீண்டும் மதுரையை நோக்கி சென்றோம்.
ஆனால் இந்த முறை பேச்சுக்கள் அரட்டைகள் என பயணம் செய்தது தெரியாத அளவிற்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.
ஆதித்யா வண்டியை பார்க் செய்து கொண்டிருக்க ,நான் காலிங் பெல்லை அடித்தேன்.
கதவை திறந்தவனின் " ஹாய் தியா" என்ற குரலில் அதிர்ச்சியில் நின்றேன்.
-தொடரும்.
- 25 Forums
- 215 Topics
- 762 Posts
- 1 Online
- 329 Members
