Forum

உறவில் உதயமாகி உயிர...
 
Notifications
Clear all

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -14

2 Posts
2 Users
0 Reactions
15 Views
(@salmaamjathkhan)
Posts: 19
Trusted Member
Topic starter
 
[#175]

உதயம் 💏 14💏

 

காலை எழுந்ததும் பவித்ரா அத்தை கொடுத்த டீயை குடித்துவிட்டு ஆதித்யாவிற்காக கொடுத்த டீ யை எடுத்து கொண்டு எங்கள் அறைக்கு சென்றேன்.

 

என்னிடம் எப்பொழுதும் கோபமாக சுத்தும் ஆதித்யா அமைதியாக குழந்தை போல் படுக்கையில் சுருண்டு கிடந்தான். நீயா இப்படி என எண்ணிக்கொண்டேன்.

 

ஆதித்யாவிற்கான டீயை  டேபிளில் வைத்துவிட்டு,

 

" ஆதி... ஆதி...." என அழைத்தேன்.

 

அவனிடம் எந்த ஒரு அசைவும் இல்லை. அவன் தோள்களை தட்டி எழுப்ப முயற்சித்தேன்.

 

எழுந்தவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். இப்பொழுது என்ன கூறப் போகிறோனோ என பயந்துகொண்டே, "அத்த உங்களுக்கு டீ குடுக்க சொன்னாங்க." என டேபிள் மீது இருந்த காட்டினேன்.

 

"என்ன இதை எல்லாம் கொடுத்து என்னை இம்ப்ரஸ் பண்ண பார்க்கிறியா?" என்ற ஆதித்யாவின் கேள்வி என்னை ஆத்திரமூட்டியது.

 

நான் எதற்கு அவனை இம்ப்ரஸ் செய்ய வேண்டும். இவன் பெரிய மாயக் கண்ணனோ?என மனதில் பொறுமிக் கொண்டு அவனை முறைத்தேன்.

 

அவனும் சளைக்காமல் என்னை முறைத்துக் கொண்டே அவன் மீது இருந்த பெட்ஷீட்டை பெட்டில் வீசிவிட்டு இறங்கி டேபிளில் இருந்த டீயை எடுத்தவன்   பாத்ரூமிற்கு சென்று என்னை பார்த்துக் கொண்டே அதை சிங்கிள் கொட்டினான்.

 

கொட்டிவிட்டு என்னருகே வந்தவன் என் வலது கையை எடுத்து அதில் கப்பை திணித்தான்.

 

" இதெல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ. இனிமே அம்மா கொடுத்தாங்க அப்பா கொடுத்தாங்கன்னு என்னை நெருங்க முயற்சி பண்ணினா அப்புறம் நான் பொல்லாதவன் மாறிருவேன். 

 

மத்தவங்க முன்னாடி தான் நாம்ம கணவன் மனைவி இந்த ரூம்ல நீ யாரோ நான் யாரோ புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்." என்றவன் என்னை பொருட்படுத்தாது குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

 

சரியான முசுடு என்று நானும் அவனை கோவித்துக்கொண்டு பால்கனியில் நின்று.

 

இவனுக்கு என் மேல் அப்படி என்ன கோபம் என்று எனக்கு தெரியவில்லை. சரண்யாவுடனும் மாயாவுடனும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். ஆனால் என்னிடம் மட்டும் சிடுசிடுவென எரிந்து விழுந்து கொண்டிருக்கிறான்.

 

இவனுக்கு பெண்களை பிடிக்கவில்லை என்றால் எல்லா பெண்களிடமும் கோபமாகத் தான் இருக்க வேண்டும். என்னிடம் மட்டும் ஏன் கோபப்படுகிறான் எனத் தெரியவில்லை.

 

ஒருவேளை அவனுக்கு திருமணத்தில் நாட்டமில்லாமல் நான் அவன் மனைவியாக இருப்பதால் மட்டும் என்னை சிடுசிடுவென விழுகிறனா என்று யோசித்தாலும் திருமணத்திற்கு முன்னும் நான் அவனுக்கு பார்த்த பெண் என்று அறிவதற்கு முன்னும் அவன் அப்படித்தானே இருந்தான். என எண்ணும்போதே ஒரு மாதிரி இருந்தது.

 

என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளா விட்டாலும் பரவாயில்லை தோழியாக இல்லையென்றால் ஒரு சக மனுஷியாக  கூட ஏற்றுக் கொள்ளலாமே அதுவும் செய்யாமல் என்னை ஏதோ கொலை குற்றம் செய்தவர்களை போலும் எதிரியை போலும் நடத்துகிறான் என எண்ணும் போது கஷ்டமாக இருந்தது.

 

இனி  திரும்பி வந்து மீண்டும் ஏதாவது கூறி மனதை கஷ்டப்படுத்துவான் அதற்குள் நான் கீழே சென்று விடலாம் என கீழே சென்றேன்.

 

சமையலறையில் பவித்ரா அத்தை சிற்றுண்டி தயார் செய்து கொண்டிருந்தார்.

 

"அத்தை நான் எதாவது பண்ணட்டுமா?"

 

"வேணாம்மா. நேத்து தானே மேரேஜ் முடிஞ்சது டயர்டா இருக்கும். நீங்க இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க."

 

"இல்லாத டயர்டா இல்ல. நான் நல்லாத்தான் இருக்கேன். நான் எதாவது பண்றேனே" என கெஞ்சுதலாக கேட்டேன். எனக்கு நேரம் போகவில்லையே அதனால். அதனால் மட்டும் அல்ல ஆதியை பற்றி நினைக்காமல் இருக்கவும் தான்.

 

"சரி பண்ணுமா.  first-time நம்ம வீட்ல சமைக்க போற ஏதாவது ஸ்வீட் மட்டும் செய்." என்றார்.

 

"சரிங்க அத்தை. என்ன ஸ்வீட் பண்ண?" என கேட்டேன்.

 

ப்ரெட் அல்வா பண்ணுடா அதுக்கு ரொம்ப பிடிக்கும்

 

"பிரெட் அல்வா ஆதித்யாக்கு ரொம்ப பிடிக்கும். அதை பண்றியா?" என கூறியவுடன் என் முகத்தில் புன்னகை பரவியது.

 

என் கணவனுக்காக முதல்முதலாக செய்யப்போகும் சமையல் என உள்ளுக்குள் மகிழ்ந்தேன்.

 

என்ன தான் எனக்கும் ஆதிக்கும் ஒத்து வராமல் போனாலும் நானும் தமிழ் பெண்தானே. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்கிற பழமொழி என் இரத்தத்திலும் ஊறிவிட்டதே. 

 

என் சிந்தனையை எண்ணி நானே அதிசயித்துக் கொண்டேன்.

 

என்னுடைய ஆதிக்காக நான் சமைக்க போகிறேன் என எண்ணும்போதே உற்சாகம் மேலோங்கியது.

 

ஒருபுறம் அத்தை சிற்றுண்டியை தயார் பண்ணிக் கொண்டிருக்க மற்றொருபுறம் நான் பிரெட் அல்வா தயார் செய்து கொண்டிருந்தேன்.

 

"அடடே நம்ம சமையல் கட்டுல கூட  வாசம் வருது பா." என உள்ளே நுழைந்தார், விஷ்ணு மாமா.

 

"என்ன சொன்னிங்க?" என சப்பாத்தி  கட்டையை தோளில் வைத்து ஆட்டிக்கொண்டே கேட்டார்,அத்தை.

 

"அது சும்மா பவிமா. மருமகள் முதமுதலா சமைக்கிறாள அதான் என்க்ரேஜ் பண்ண." என சமாளிக்க மாமா சிரிக்க, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மெலிதாக சிரித்தேன்.

 

அவரை முறைத்துக்கொண்டே,

 

" பாத்தியா தியா. இத்தன வருஷமா உன் மாமாக்கு வேலைக்காரங்கள கூட சமைக்க விடாம நானே என் கையால சமைச்சுக் கொடுத்தா மருமக வந்ததும் என்னைய கழட்டிவிட பார்க்கிறாரு. இவரை இப்படின்னா ஆதித்யா என்ன பண்ண போறானோ" என விளையாட்டாக சலித்துக்கொண்டார்.

 

"அச்சோ பவிமா நான் ஏன் உன்னை கழட்டிவிட போறேன். உன் சமையல் சாப்பிட தான்  உன்னையே சுத்துறேன்." என ஐஸ் வைத்தார்.

 

"ஆமா ஆமா சொன்னாங்களாம்." என சலித்துக் கொள்ள.

 

"நிஜமா பவி செல்லம்." என அத்தையின் கன்னத்தைக் கிள்ள, அவரோ என்னை பார்த்து மெல்லிய குரலில்,

 

" தியா இருக்கா  என்ன பண்றிங்க மருமகள் முன்னாடி." என அவர் கையை தட்டிவிட்டார்.

 

அவர்களின் ரொமான்ஸை கெடுக்க விரும்பாமல், 

 

"அத்தை அல்வா ரெடி ஆயிராச்சு.நான் அவர் என்ன பண்றாருன்னு பாத்துட்டு வந்துர்றேன்."  என மெதுவாக அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு வந்தேன் .

 

நான் சமயலறைய விட்டு வெளியே வரும்போதுதான் கோட் சூட்டுடன் ஆதித்யா அலுவலகத்திற்கு தயாராகி வந்தான்.

 

இவர்களின் காதலில் பாதியாவது ஆதித்யாவிடம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வராமல் இல்லை.

 

"மோம் பிரேக் பாஸ்ட்.." என கத்திக்கொண்டே டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

 

அத்தையும் மாமாவும் சமையல் அறையில் இருந்து வெளிவந்து, ஆதித்யாவை உடையைப் பார்த்து அவனை முறைத்துக் கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்தனர்.

 

" என்னடா இது. எங்க கிளம்பிட்ட?"

 

" என்ன கேள்வி இது. ஆபீஸ் தான்."

 

" நேத்து தான்டா கல்யாணம் ஆச்சு. இன்னிக்கு ஆபீஸ் போகனும்னு சொல்ற. "

 

"மாம்.இது உங்களுகே ஓவரா இல்ல. கல்யாணம் ஆனா ஆபீஸ் போக கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன?"

 

"நீ ஒன்னும் ஆபிஸ் போகும் வேணா. உன் மேனஜர் கிட்ட சொல்லி பார்த்துக்க சொல்லு.வன் வீக் தியா கூடவே இரு."

 

"மா, திஸ் இஸ் டூ மச். நீங்க சொன்னீங்கன்னு மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.இனி எதுவும் இல்லை.  எனக்கு மீட்டிங் லேட் ஆச்சு.

நான் நம்புகிறேன்." அத்தை அவன் கைப்பிடித்து தடுத்தார்.

 

"ஆதி அம்மா சொன்னா கேளு.  நீ ஆபிஸ் போகக்கூடாது.இங்க பாரு உன் பொண்டாட்டி உனக்காக ஹல்வா பண்ணியிருக்கா. சாப்பிட்டு எப்படி இருக்கு ன்னு சொல்லு."

 

நான் செய்த அல்வாவை அவன் முன் நீட்டினார்.

 

ஆதி என்னை முறைத்துக் கொண்டே "அவ பண்ணுனத சாப்பிட தான் நான் இருக்கேனா?" என தட்டி விட ஹல்வா மொத்தமும் கீழே விழுந்தது.

 

நான் ஆதித்யா விற்காக முதன்முதலில் செய்ததை அவன் கீழே தள்ளி விடவும் எனக்கு வருத்தம் ஆகிப்போனது. ஏனடா செய்தோம் என ஆகிவிட்டது.

 

"டேய் என்னடா பண்ற." என அத்தை ஆதித்யாவிடம் கோவப்பட அவர் என்னை பார்த்து,

 

" சாரிமா அவன் தெரியாம...." என என்னிடம் மன்னிப்பு வேண்டி நின்றார்.

 

"பரவாயில்லை அத்தை. அவருக்கு வேலை இருந்திருக்கும். அந்த டென்ஷன்ல தான் தெரியாம பண்ணியிருப்பாங்க."  நான் சமாளித்தேன். ஆனால் என் கண்கள் கலங்குவதையும் குரல் கரகரப்பதையும் நிச்சயம் அவர்கள் கண்டிருக்க வேண்டும்.

 

"ஆதி நீ ஆபீஸ் போக கூடாது இதுதான் என்னோட பைனல் டிசிஷன். இல்ல உனக்கு ஆபீஸ் முக்கியம் அப்படின்னா இனிமே என்கூட பேசாத.ஆபீஸ்ஸயே கட்டி அழுதுக்கோ."

 

"மா , இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு."

 

"மீட்டிங் இருக்குன்னா வீடியோ கால்ல முடி."

 

வேகமாக அவன் டைனிங் டேபிளை விட்டு எழுந்து சென்றான்.

 

"எங்க போற?"

 

"மீட்டிங் இருக்கு. நான் ரூம்க்கு போய் வீடியோ கால் பண்ணிட்டு வர்றேன்."

 

"ப்ரேக் பாஸ்ட்?"

 

"ரூமுக்கு அனுப்பி வைங்க."

 

அவன் ரூமிற்கு செல்ல அத்தையோ என் அருகில் வந்தார்.

 

" சாரி மா கொஞ்சம் கோபக்காரன்." என்னை சமாதானப்படுத்தினார்.

 

கொஞ்சம் இல்ல ரொம்பவே என மனதில் நினைத்து நினைத்துக் கொண்டேன்.

 

"பரவாயில்ல அத்த. அவங்க ஆபிஸ் டென்சன்ல அப்படி பண்ணி இருக்கலாம்."என அவர்களுக்கு நான் சமாதானம் சொல்லி விட்டேன்.

 

"இந்த பிரேக் பாஸ்ட்  மட்டும் அவன் கிட்ட குடுத்துடு." என என் கையில் அவனுக்கான பிரேக்ஃபாஸ்ட்டை வைத்தார்.

 

அதை எடுத்துக் கொண்டு என் அறைக்கு செல்லும்போது அவன் வீடியோ கால் செய்ய தயாராகி இருந்தான்.

 

என்னை பார்த்ததும் என் கையிலிருந்த சிற்றுண்டியை கவனித்துவிட்டு மேஜையில் வைக்குமாறு சைகை செய்தான். 

 

அவனருகே சென்று மேசை மீது வைக்க அவன் அதிலிருந்த ஜீஸை எடுக்கப்போகும் போது,

 

" ஒரு நிமிஷம் ஆதி." என்று குரல் கொடுத்தேன்.

 

அவனும் என் குரல் கேட்டு பழச்சாறு எடுக்காமல் நான் என்ன சொல்லப்போகிறேன் என்று கவனித்தான்.

 

ஆனால் நான் எதுவும் பேசாமல் அவனருகே சென்று நான் கொண்டுவந்த சிற்றுண்டியை என் கையில் எடுத்து அறையின் மூலையில் இருந்த குப்பை தொட்டியை திறந்து  அதில் சப்பாத்தியையும் அதற்கு வைத்திருந்த மட்டன் கிரைவியையும் சிக்கன் குருமாவையும் கொட்டி விட்டு ஜூசை குளியலறை சிங்கில் கொட்டினேன். அவன் புரியாமல் என்னை பார்க்க நான் சிரித்துக்கொண்டே மீண்டும் அவனிடம் சென்றேன்.

 

"என்ன ஆதி பார்க்குறீங்க. உங்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னு தான் நானே உங்க வேலையை பண்ணிட்டேன். "

 

அவன் கோபமாக,

 

" எதுக்கு என்னோட பிரேக்பாஸ்ட்ட குப்பையில போட்ட." என அதிகாரமாக குரல் கொடுத்தான்.

 

"ஆதி. நீ தானே என் கையால எதுவுமே சாப்பிட மாட்டேன்னு சொன்ன.  எப்படியும் நீ கொட்ட தானே போற. அதை நானே கொட்டிடலாம்னு..."  என காலையில் நான் ஆசையாக செய்த பிரெட் அல்வா வேஸ்ட் செய்ததற்காக அவனை பழிவாங்கினேன்.

 

ஒருநாள் பட்டினியாக இரு. அதுதான் உனக்கு தண்டனைஎன நினைத்துக்கொண்டேன்.

 

"அப்போ நீ சாப்பிடுவியா ஆதி."என கேட்க அவனும் என்னை முறைத்துக் கொண்டு லேப்டாப்பின் முன் அமர்ந்தான்.

 

"ஆதி நான் வேணா அம்மாகிட்ட மார்னிங் நடந்ததையும் இப்ப நடந்ததையும் சொல்லி, சாரி அத்தை மார்னிங் டீய கொட்டிடாங்க.அதான் இதையும் குப்பையில போடுவாங்கன்னு நானே எல்லாத்தையும் கொட்டிட்டேன்னு  மன்னிப்பு கேட்டு வேற பிரேக் ஃபாஸ்ட் எடுத்துட்டு வர்றேன்."

 

என்னை முறைத்தவன்.

 

"ஆணியே புடுங்க வேண்டாம். என்ன கொஞ்ச நேரம் தனியா விடு. எனக்கு மீட்டிங் இருக்கு." என ஒரு பார்வை பார்த்துவிட்டு மீட்டிங்க்கு தயாராக… அவனுடைய அலுவலக வேலைக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க நான் அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.

 

கூடத்தில் அமர்ந்து  அத்தையிடமும் மாமாவிடமும் சிறிது நேரம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்.

 

"தியா ஆதி உன்கிட்ட நல்ல முறையில் நடந்துகிறானாமா?"

 

"அத்த என்ன கேள்வி இது. அவர் என்னை நல்லா பாத்துக்குறார்."

 

"இல்லமா அவனுக்கு இப்போ கல்யாணம் பண்றதுல இஷ்டம் இல்லனு சொன்னா. நான் தான் அவனை வற்புறுத்தி இப்போவே கல்யாணம் பண்ணனும்னு சொல்லி உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சேன். அதான் மனசுல உறுத்திக்கிட்டு இருந்துச்சும்மா."

 

"அப்படில்லாம் இல்லத்த. ஆதி  நல்லாவே பார்த்துக்கிட்டாங்க"

 

"அப்புறம் காலையில  நடந்ததற்கு ..."

 

"நீங்க எதுவும் சொல்ல வேணாம். எனக்கு தெரியும் காலையில அவர் குளிச்சிட்டு வந்ததும் ரெண்டுபேரும் சேர்ந்து கீழே போலாம்னு சொன்னாங்க. நான் தான் அவர் பேச்சை கேட்காம தனியா வந்தேன். அதனால சும்மா விளையாட்டுக்கு அந்த மாதிரி பண்ண அது சீரியஸ் ஆயிடுச்சு. வேற ஒன்னும் இல்ல."

 

ஆயிரம் தான் இருந்தாலும் என்னுடைய கணவனை எப்படி என்னால் விட்டுக்கொடுக்க முடியும்.

 

அது ஆதியை பெற்றவராக இருந்தாலும் சரி என்னால் ஆதியை யாரிடமும் விட்டுக்கொடுக்க முடியாது.

 

"ரொம்ப சந்தோசம்."  வாஞ்சையாக என் தலையைக் கோதினார்.

 

"மாம். எனக்கு ரொம்ப பசிக்குது." என வயிற்றை தடவிக்கொண்டே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்,ஆதி.

 

"இப்ப தான்டா சாப்பிட்டே. சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கூட இல்ல அதுக்குள்ள பசிக்குதுன்னு சொன்னா என்ன அர்த்தம். சமையல் இனிமே தான் செய்யணும்.கொஞ்சம் பொறு." என கோபமாக கேட்க…ஆதி என்னை முறைத்தான். 

 

நானும் வேறு புறம் திரும்பி ஓரக்கண்ணால் ஆதி முறைப்பதை ரசித்தேன்.

 

"அங்க என்ன பாக்குற இந்தா."

 

"என்ன இது..." என்றவாறு அதை பிரித்து பார்த்தவன் அதிர்ந்து என்னை நோக்கினான்.

 

"என்னடா இப்படி பாக்குற..."

 

"விளையாடுரிங்களா? என்னால முடியவே முடியாது." சோபாவில் இருந்து எழுந்து நின்று கத்தினான்.

 

"என்னடா  ஆபீஸ் ஆபீஸ்ன்னு சீன் போட பாக்குறியா. ஒழுங்கா எல்லாத்தையும் மேனேஜர் கிட்ட   ஒப்படைச்சுட்டு தியாவை கூட்டிக்கொண்டு  கொடைக்கானல் போயிட்டு வா. இல்லை என்ன வேற மாதிரி பார்ப்ப."

 

ஆதி என்னை பார்த்து அம்மாவிடம் பேசுமாறு சைகை செய்தான்.

 

நானும் யோசித்தேன்.  நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள கொஞ்சம் தனிமை உதவும் என நினைத்து என் அத்தையிடம் திரும்பி,

 

" அதை எல்லாம் ஓகே தான். ஆனா ஆதி ஒத்துக்க மாட்டானே."

 

"எதுக்கு ஒத்துக்க மாட்டான்‌ உனக்கு ஓகே தானே?"

 

"எனக்கு ஓகே தான் அத்தை." என சம்மதம் கூற கூறினேன்.

 

"ஒழுங்கு மரியாதையா தியா விளையாட்டு கூட்டிட்டு  கொடைக்கானல் போய்ட்டு வர வழியை பாரு." என்றவள் எழுந்து சமையல் அறை சென்றுவிட,மாமாவும் எங்கள் இருவருக்கும் தனிமையை  அளிக்க எழுந்து அவர் அறைக்கு சென்றார்.

 

"ஏய் எதுக்கு ஓகே சொன்னா. நான் உன்ன வேண்டாம் தானே சொல்ல சொன்னேன்."

 

"ஐயோஆதி  நீ சரின்னு சொல்ல நெனச்சேன் என்னடி சொல்றனு தான் சொன்னேன். நீ வேணாம்னா சொல்ல சொன்ன" என அப்பாவி போல் கேட்க அவன் என்னை முறைத்தான்.

 

"சாரி ஆதி, எனக்கு இந்த கண்ணால பேசுறதெல்லாம் தெரியாது. நீ  அம்மா கிட்ட ஓகே சொல்ல சொன்ன மாதிரி இருந்தது.அதான் நான் ஓகே சொல்லிட்டேன். நான் வேணா இப்ப போயி அத்தை கிட்ட க சாரி தெரியாம சொல்லிட்டேன்  வேணா  அப்படின்னு சொல்லட்டா."

 

"நீ என்ன வச்சு ஏதோ  பண்றன்னு மட்டும் தெரியுது. ஆனா அது என்னன்னு தான் தெரியல.. உன்னோட பிளான் எதுவும் என்கிட்டே நடக்காது‌." என்றவன் எழுந்து அவன் அருகில் சென்றான்.

 

அவன் பேச்சை காதில் வாங்காமல் அத்தைக்கு சமையலில் உதவி புரிய சமையலறையை நோக்கி சென்றேன்.

 

அத்தை என்னை சமையல் செய்ய விடாமல் ரெஸ்ட் எடுக்க சொல்ல, நானும் அவர்கள்  சமையல் மேடையின் மீது அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

 

அவர்கள் சமையல் வாசம் மூக்கைத் துளைக்க அதை நுகர்ந்துகொண்டேன். ஆதியின் குழந்தை பருவ வாழ்க்கை பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டிருந்தார்.

 

ஆதியின் சிறு வயதின் சேட்டைகளும் பற்றி கூறும் பொழுது அந்த ஆதியா இது என்று தோன்றியது.

 

காலம் எல்லாரையும் மாற்றி விடும் போலிருக்கிறது. குறும்புகளும் சேட்டைகளும் அதிகம் நிறைந்த ஆதி இப்பொழுது உணர்ச்சிகளற்ற கோப கண்களுடன் நிற்பதை நம்பமுடியவில்லை.

 

சமையலை முடித்த அத்தை ஆதியை சாப்பிட வருமாறு அழைக்க சொல்ல நான் எங்கள் அறையை நோக்கி சென்றேன். அறையில் ஆதி இல்லை.

 

பால்கனியில் ஆதியின்  சத்தம் கேட்க  பால்கனிக்கு சென்றேன்.

 

"முடியல சஞ்சய். நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்கிறேன். அவள கல்யாணம் பண்ணினது நெனச்சாலே என்னையை நெனச்சு எனக்கே வெறுப்பா இருக்கு. என் மனசு எதோ மாதிரி இருக்குடா.

 

இதுல இவள கொடைக்கானல் கூட்டிட்டு போக அம்மா சொல்றாங்க. எப்படி டா என்னால அவள கூட்டிட்டு போக முடியும். பார்க்கவே வெறுப்பா இருக்கு. இம்சையா இருக்காடா இந்த தியா."

 

என்னைப் பற்றி யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்.

 

என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. என்னை பார்க்க வெறுப்பாக இருக்கிறதாம்.

 

இந்த வார்த்தை ஒரு கணவனின் வாய்களில் இருந்து உதிரும் போது ஒரு மனைவியின் நிலையை அவளால் மட்டுமே உணர முடியும்.

 

எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது போல தோன்றியது.

 

என் கணவன் என்னை வெறுத்து விட்டால் நான் என் செய்வது. கண்ணீரை துடைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன். குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டேன்.

 

ஆதி என்னை இவ்வளவு தூரம் வெறுப்பதற்கு காரணம் என்ன? என தெரியவில்லை. ஆனால் இதே வெறுப்பு தொடர்ந்தால் எங்களின் வாழ்க்கை என்னவாகும்?

 

என் தந்தைக்காக என் வாழ்க்கையில் பணயம் வைத்தது பெரிதல்ல‌ ஆனால் ஆதியின் வாழ்க்கையையும் சேர்த்து பணயம் வைத்து விட்டேனோ என எண்ணும்போதே குற்ற உணர்ச்சி என்னை தாக்கியது.

 

ஆதி சொன்னதுபோல் திருமணத்தை நிறுத்தி இருக்க வேண்டுமோ என ஒன்றும் செய்ய முடியாதவளாய் திணறி நின்றேன்.

 

சிறிது நேரத்தில் என்னை சமன்படுத்தி கீழே செல்ல அத்தை மாமாவுடன் ஆதித்யா டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தான். நான் எதுவும் பேசாமல் சென்று அமர்ந்து பெயருக்கு சாப்பிட்டுவிட்டு எங்கள் அறையில் வந்து படுத்துக் கொண்டேன்.

 

அதற்குப் பின் ஆதியிடம் நான் எதுவும் பேச வில்லை. ஏன் அவன் முன் செல்லவே இல்லை.

 

அவன் என்னை ஒதுக்குவதற்கு முன் நானே ஒதுங்கிக் கொள்வது நல்லது என  நான் ஒதுங்கியே இருந்தேன்.

 

இரவு மணி ஒன்றை கடந்த நிலையில் அடி வயிற்றில் ஏற்பட்ட சுள்ளென்று ஏற்பட்ட வலியில் தூக்கம் பறந்தோடியது. தேதியை பார்க்க தலையில் அடித்துக் கொண்டேன். ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்தேன்.

 

அது சரியாக இருக்க என்னை நானே நொந்து கொண்டேன். ‌ கல்யாணத்தை நிறுத்துவதில் முனைப்போடு இருந்ததால் இந்த மாதாந்திர தேதியை மறந்து விட்டிருந்தேன். நாப்கினைஎடுத்து வைக்கவில்லை. ஒருவேளை அம்மா எடுத்து வைத்து இருக்கலாம் என பையில் ஆராய்ந்தேன்.

 

நான் தேடும் ஆர்வத்தில் உச் கொட்டிக்கொண்டே ஆதித்யா  புரண்டு படுத்தான்.  எழுந்துவிட்டால் இதற்கும் கத்துவான் என நினைத்து மீண்டும் கட்டிலில் படுத்துக் கொண்டேன்.

 

என் நிலையை எண்ணி எனக்கே கவலையாக இருந்தது. நான் நாப்கின் வேண்டுமென்று இங்கே யாரிடம் போய்க் கேட்பேன்.

 

என் வீட்டில் இருந்தால் அம்மாவிடம் கேட்டு இருக்கலாம். இங்கு அத்தையிடம் கேட்போம் என்று நினைத்தால் அவர்கள் மாத்திரையின் உபயத்தால் உறங்கிக் கொண்டிருப்பார்கள். அதுவும் மணி ஒன்றரைக்கு அவர்கள் அறைக்கதவை எப்படி தட்ட முடியும்.  வீட்டை விட்டு வெளியேறும் செல்ல இயலாத நிலை. ஆதித்யாவிடம் கூறலாம் என்றால் என்ன உறவு உள்ளது என்று இவனிடம் இதைப்பற்றி கூறுவேன்.

 

என்னை வெறுப்பவனிடம் எப்படி நாப்க்கினை பற்றிக் கூறுவேன். நினைக்கும் பொழுதே கண்ணீர் சுரக்க, எல்லாம் விதி என நினைத்து உறங்க முயற்சி செய்தேன்.

 

உறக்கம் பிடிபடாமல் போகும் புரண்டு புரண்டு படுத்தாலும் என் மீது ஏதோ ஊர்வது போன்ற உணர்வு தோன்ற விளக்கு எரிந்தது

 

ஆதி தான் என் பக்க விளக்கை ஒளிற செய்து இருந்தான்.

 

"என்ன வேணும். எதுக்கு தூங்காமல் இப்படி  தூங்காம கட்டிலை ஆட்டிக் கிட்டே  இருக்க?"ஆதியின் குரல்  கோவமாக வர, ஒன்றுமில்லை என தலையசைத்தேன்.

 

காலையில் இருந்த மனநிலையில் இருந்திருந்தால் கூட ஆதிடம் ஏதாவது சொல்லியிருக்கலாம்.

 

ஆனால் இப்போது அவனிடம் பேச எதுவும் இல்லை என அமைதியாக இருந்தேன்.

 

"நிம்மதியா தூங்க கூட முடியல." என புலம்பிக்கொண்டே மீண்டும் படுத்தான்.

 

என்னால் அழுகையை அடக்க முடியாமல் அழுது கொண்டே எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டேன். ஷவரை திறந்துவிட்டு அதன் கீழ் நின்றேன். என் மன வலியும் வயிற்று வலியும் அந்த தண்ணீரிலும் என் கண்ணீரிலும் கரைத்துவிட எண்ணினேன்.

 

சிறிது நேரத்தில் குளியலறை கதவு தட்டப்பட சவரை மூடிவிட்டு அதன் ஒலியை உள்வாங்கினேன்.

 

"தியா..." என்ற ஆதியின் இதமான அழைப்பு வந்தது.

 

முதன்முதலில் ஆதித்யாவின் இதமான குரலை கேட்கின்றேன். இது ஆதி தானா என்ற சந்தேகமும் எழுந்தது.

 

"தியா, எனக்கு தூக்கம் வரல. நான் கொஞ்சம் வெளியே போறேன். உனக்காக இங்க ஒன்னு வச்சு இருக்கேன். 

 

உனக்கு அது இப்போ தேவைப்படலாம்னு நினைக்கிறேன். ஒரு தடவ வந்து பாத்துக்கோ. நான் வர லேட்டாகும். நீ குளிக்கிறன்னு நினைக்கிறேன். குளிச்சுட்டு படுத்துக்கோ." என்று என் பதிலையும் எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான்.

 

அறைக் கதவு திறக்கும் சத்தமும் அதை தொடர்ந்து மூடும் சத்தமும் கேட்டது.மெதுவாக குளியலறையிலிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி எட்டி பாத்தேன்.

 

ஆதித்யா அறையில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு டவலுடன் வெளியே வந்து பார்க்கும் பொழுது குளியலறையின் வாசலிலேயே ஒரு பார்சல் இருந்தது.

 

அதை பிரித்து பார்த்த என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. ஆதித்யா என் வலியை புரிந்து கொண்டான் என எண்ணும் போது முகத்தில் புன்னகையும் சேர்ந்தே வந்தது.

 

மீண்டும் குளியலறைக்குள் புகுந்து குளித்து விட்டு உடை மாற்றி வெளியே வர்ற ஆதித்யா இன்னும் வரவில்லை.

 

ஆதி

த்யா என் உணர்ச்சிகளை புரிந்து கொண்டான் என்பதே இப்போதைக்கு மனநிறைவாக இருந்தது. என்னுடைய கணவன் என்ற கர்வமும் வந்தது.

 

ஆனால் அடுத்த நொடியே ஆதித்யா அவன் நண்பன் சஞ்சய் இடம் பேசிய வார்த்தைகள் மீண்டும் நினைவு வர மனதை கல்லாக்கிக் கொண்டு டேபிளின் அருகே ஆதித்யா எனக்காக வாங்கி வைத்திருந்த மாத்திரையை  போட்டுக்கொண்டு படுத்தேன்.

 


 
Posted : July 15, 2026 4:33 pm
(@guna-sundari)
Posts: 59
Trusted Member
 

Wow super Aadhi. But y u didnt like diya? 


 
Posted : July 18, 2026 10:38 pm

Scroll to Top