Forum

உறவில் உதயமாகி உயிர...
 
Notifications
Clear all

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -13

1 Posts
1 Users
0 Reactions
19 Views
(@salmaamjathkhan)
Posts: 19
Trusted Member
Topic starter
 
[#158]

உதயம் 💏13💏

 

"மாப்பிள்ளை மாங்கல்ய தானம் பண்ணுங்கோ" என ஐயர் என தாலியை ஆதித்யாவிடம் நீட்ட அதை அவன்  பெற்றுக்கொண்டான்.

 

"கெட்டி மேளம் கெட்டி மேளம்" என உரக்க குரல் கொடுக்க, கெட்டி மேளம் கொட்டப்பட்டது.

 

நான் என்  கண்களை மூடி இரு கைகளையும் கூப்பினேன்.

 

" கடவுளே இந்த நிமிஷம்ல இருந்து ஆதித்யாவ என் முழு மனசோட என்னோட கணவனா நான் ஏத்துக்கிறேன். எங்களோட  இந்த வாழ்க்கையை நல்லா அமைச்சு கொடுக்க வேண்டியது உன் பொறுப்பு.

 

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் ஆதித்யாவோட மனைவியா நான் கடைசி வரைக்கும் போராடுவேன்.

 

என் உயிர் பிரியிற கடைசி நொடி வரைக்கும் இந்த தாலி ஆதித்யா பேரை சொல்லி என் நெஞ்சிலேயே கிடைக்கணும்." என்ற வேண்டுதலை முடிக்கும் போது என் நெஞ்சில் தாலியின்  பரிசமும் என் முதுகில்  குறுகுறுத்த அவன் கை தீண்டலிலும் கண்ணை திறந்து ஆதித்யாவை பார்க்க, ஆதித்யாவும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவன் கண்களில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை. ஒரு பொம்மைபோல தாலியைக் கட்டிக் கொண்டிருந்தான்.

 

நிச்சயம் முடிந்த பிறகு நடந்த மன போராட்டத்திற்கு இன்று விடை கிடைத்தது போல இருந்தது. இந்த திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் நேற்று முதலே என்னை ஆக்கிரமித்திருந்தது. அதற்கு காரணம் நேற்று ஆதித்யா உதிர்த்த வார்த்தைகள் தான்.

 

"நல்ல நேரம்ம் முடியறதுக்குள்ள 2 வீட்டு பெரியவாளும் தட்ட மாத்திக்கோங்கோ." என ஐயர் கூறியவுடன் என் தந்தையும் ஆதித்யாவின் தந்தை விஷ்ணு மாமாவும்  நிச்சயத் தட்டை மாற்றிக்கொண்டனர்.

 

"அப்படியே பொண்ணும் மாப்பிள்ளையும் மோதிரத்தை மாத்திக்கோங்கோ." என கூற என் அம்மா என் கையில் ஆதித்யாவிற்கான மோதிரத்தை திணித்தார்.

 

அதைப் பெற்றுக் கண்டு ஆதித்யாவின் கைவிரல்காக காத்துக் கொண்டிருக்க அவனோ கையை நீடாமல் மடக்கி வைத்திருந்தான்.

 

அதை கலைக்கும் விதமாக விஷ்ணு மாமா "தியா எவ்வளவு நேரம்தான் கையை நீட்டிக்கிட்டே இருப்பா." என அவர் ஆதித்யாவின் கையை எடுத்து என் முன்னே நீட்டினார்.

 

என் கைகள் நடுங்க என் இடது கையால் ஆதியின் கையை தாங்கி வலது கையால் அவனின் மோதிர விரலில் எங்கள் நிச்சய மோதிரத்தை அணிவித்தேன்.

 

அதன்பிறகு பவித்ரா அத்தை என் கையில் போடுவதற்கான மோதிரத்தை ஆதித்யாவின் கையில் கொடுத்தார்.

 

என் முறைத்துக் கொண்டே என் கையை பற்றியவன் அதில் அழுத்தத்தை கூட்டினான்.

 

என் அருகில் வந்தவன், "நான் உன்ன கல்யாணத்தை நிறுத்த சொன்னா. நீ நிச்சயம் வர கொண்டு வந்துவிட்ட. விட்டா நாளைக்கு தாலியையும் கட்ட வச்சுருவ போல. மனசுல என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்க." என கேட்க, நானும் அவன் கூறியதை காதில் விழாதவாறு அவன் கையில் இருந்த மோதிரத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.

 

அதில் கோபமானவன்  சூழ்நிலையை மறந்து என் முழங்கையை வழக்கம்போல் அழுத்திப் பிடிக்க,

 

"டேய் என்னடா பண்ற. நாங்க எல்லாரும் இங்கதான் இருக்கோம். உங்க ரொமான்ஸா தனியா இருக்கும்போது வெச்சுக்கோங்க." என கலாய்க்க சூழ்நிலையை உணர்ந்தவன் பிடியை தளர்த்தி விட்டு ஒரு பொய்யான புன்னகையுடன் பின் நகர்ந்து என் விரலில் மோதிரத்தை மாட்டி விட்டான்.

 

நேரங்காலம் தெரியாமல் போட்டோ கிராப்பரும் "பொண்ணு மாப்பிள்ளை சேர்ந்து நில்லுங்க ஒரு ஸ்டில்  எடுத்துக்கிறேன்." என்றார்.

 

இது இப்பொழுது முக்கியமா என நான்  எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது என் இடையில் கை கொடுத்தவன் அவன் அருகே என்னை இழுக்க, நானோ தளர்ந்து போய் அவன் தோளில் இடித்து நின்றேன்.

 

கூச்சத்தில் நெளிந்த என்னை இடையில் அழுத்தத்தை கூட்டி,

 

"என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. கல்யாணத்த இன்னிக்கு நிப்பாட்டுற.  இல்லாட்டி நான் நிப்பாடுவேன்."என்றான்.

 

அவன் திருமணத்தை விடுவானோ என்ற பயம் என்னை சூழ்ந்தது. ஆனால் இப்பொழுது அந்த பயம் இல்லை.

 

" நெனச்சத  சாதிச்சுட்டல." என்ற குரல் என் காதோரம் கேட்க, என் நினைவுகளில் இருந்து வெளி வந்து என் நெற்றி வகிட்டில் குங்குமம் இட்ட ஆதித்யாவை பார்த்தேன்.

 

ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு என்னுள் எழுந்தது.

 

இவன் என் மணாளன் என்ற எண்ணமே எனக்கு தலை சுற்றலை ஏற்படுத்தியது.

 

எப்படி சமாளிக்கப் போகிறேனோ என்ற எண்ணத்தில் பெருமூச்சுவிட்டு அவனைக் கண்டு கொள்ளாது திரும்பிக் கொண்டேன். அது தெரிந்து  அவனும் முகத்தை திருப்பிக்கொண்டான்.

 

ஆனால் எங்களை இப்படியே விடாமல் அடுத்தடுத்த சடங்குகளை அடுக்கிக் கொண்டே இருக்க  வேண்டா வெறுப்பாக  ஆதித்யாவும் நானும் ஒத்துழைத்தோம்.

 

சடங்குகள் அனைத்தும் முடிவடைய நாங்களும் சாப்பிட்டு வந்தவர்களிடம் வாழ்த்துகளையும் பரிசுகளையும் பெற்றுக்கொண்டு போட்டோக்களுக்கும் போஸ் கொடுத்தோம். எல்லாம் முடிந்து அந்த கடினமான நேரமும் வந்தது.

 

பிரியா விடை கொடுக்க என் தந்தையும் தாயும் பாட்டியும் இன்னும் சில சொந்தங்களும் அழுதுகொண்டே நிற்க, நானும் அழுது கரைந்தேன். 

 

இனி என்னுடைய வாழ்க்கை ஆதித்யாவுடன் வேறு பாதையில் பயணித்த போகிறதை எண்ணி கலங்கினேன்.

 

இத்தனை வருடங்களுக்கு பிறகு கிடைத்த தந்தையின் அன்பும் இப்பொழுதும்  தூரமாக போகிறது என நினைக்கும் பொழுதே மனம் ரணமாகியது.

 

  இனி என் பெற்றோர்களுக்கு நான் அந்நியமாக போகிறேன். அவர்களுடைய மகள் என்பதற்கு முன்பு ஆதித்யாவுடைய மனைவி என்ற அடையாளம் என்னை சூழ்ந்து கொள்ளப் போகிறது.

 

தந்தையை என்னை அணைத்து கண்ணீர் விட்டு ஆறுதல் வார்த்தை கூறி ஆதித்யா வின் கையில் என் கையை திணித்தார்.

 

என் தாயும் பாட்டியும் அறிவுரை பெயரில் மீண்டும் கொஞ்சம்  பயம் ஏற்றி ஆதித்யாவின் காரில் என்னை அமர வைத்தனர்.

 

ஆதித்யா என் அருகில் அமர்ந்து கார்  முன்னோக்கி செல்ல என் பிறந்த வீடு நோக்கி செல்வதாக உருவகம் கொண்டேன்.

 

அழுகை மீண்டும் அதிகமானது அது எதையும் கண்டுகொள்ளாத ஆதித்யா ஜன்னலில் வெறித்துக்கொண்டிருந்தான்.

 

நேரம் கடக்க என் அழுகை நின்றபாடில்லை.

 

"வண்டியை நிறுத்துங்க."

 

என்ற  ஆதித்யாவின் குரல் கேட்டதும் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்துக் கொண்டே அழுவதை தொடர,

 

"இப்ப எதுக்குடி அழுதுகிட்டே இருக்க. உன்ன கட்டுனதுக்கு நான் தான் அழனும். உனக்கு  உங்க அப்பா அம்மாவ விட்டுட்டு வர்ற  அவ்வளவு கஷ்டமா இருந்தா இங்க இறக்கி விடுறேன். இறங்கி போய்டு சும்மா அழுது சீன் போட்டு இருக்க கூடாது."

 

அவன் சொற்களில் அழுகை அதிகமாக வண்டியிலிருந்து இறங்கியவன், என்பக்க கதவை திறந்து என் கையைப் பிடித்து வெளியே இழுத்தான்.

 

நானும் அவன்  இழுப்பிற்கு வெளிய வந்து நின்றேன்.

 

"இங்கே நின்னு அழு. நான் கிளம்புறேன்." என என்னை வெளியே நிறுத்திவிட்டு அவன் வண்டி ஏற எங்கே என்னை விட்டு சென்று விடுவானோ என்ற பயத்தில் நானும் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.

 

என்னை பார்த்து ஒரு முறை முறைத்தான்.

 

" ஒழுங்கா அமைதியா படுத்தின வா.இல்ல அவ்வளவுதான்." என எச்சரித்தான்.

 

வண்டியை எடுக்க சொல்ல  ஆதித்யா வீட்டை நோக்கி படையெடுத்தது.

 

ஆதித்யாவின் வீட்டை அடைந்த போது என் கண்ணீர் எல்லாம் வற்றியிருந்தது. 

 

இப்பொழுதே இப்படி என்றால் போகப்போக எப்படியோ என்ற எண்ணம் வராமல் இல்லை.

 

முயன்று கடினப்பட்டு என்னை அடக்கிக்கொண்டு  காரை விட்டு இறங்கினேன்.

 

ஆதித்யாவின் உறவுக்கார பெண் ஒருத்தி ஆரத்தி எடுத்து உள்ளுக்குள் அழைத்துச் செல்ல பூஜை அறையில் சாமி கும்பிட்டு விளக்கை ஏற்றி விட்டேன்.

 

தலைவலி என ஆதித்யா சென்றுவிட நான் மட்டும் தனியாக மாட்டிக் கொண்டேன்.

 

ஆதித்யா இல்லாததால் அதிக சடங்குகள் ஏதும் இன்றி ஒரு சில சடங்குகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு அவர்கள் காட்டிய அறையில் குளித்துவிட்டு ஓய்வு எடுத்தேன்.

 

அந்த ஓய்வையும் கெடுக்கும் வகையில் இரண்டு பெண்கள் வந்து என்னை அலங்காரம் செய்ய தொடங்கினர்.

 

இந்த அலங்காரம் எதற்கென்று புரிந்தாலும் அதை தடுக்கும் நிலையில் நான் இல்லை‌

 

அலங்காரம் எல்லாம் முடிந்தபின் ஆதித்யாவின் அம்மா வந்து அவர்களின் குடும்ப நகையை அவர் கையாலேயே போட்டுவிட ஆதித்யாவின் அக்கா முறையிலிருந்த பெண் என்னை ஆதித்யாவின் அறையில் விட்டாள்.

 

 

ஆதித்யா அறையில் இல்லாதது ஒரு நிம்மதி என்றாலும் அது நீண்ட நேரம் நீடிக்க போவதில்லை என்பதும் தெரிந்த ஒன்றுதான்.

 

அந்த அறையில் இருந்த மெத்தையில் நான் அமர்ந்தேன்.

 

ஆதித்யாவை பார்த்த தினத்திலிருந்து தடம் மாறிப் போன என் வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை எண்ணிப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

 

கதவு திறக்கும் அரவம் கேட்க அது ஆதித்யா தான் என உணர்ந்து அவனைப் பார்க்காது குனிந்து கொண்டேன்.

 

அவன் வந்து நீண்ட நேரம் ஆகியும் அவன் இருப்பதற்கான எந்த ஒரு ஓசையும் எனக்கு கேட்கவில்லை.

 

நிமிர்ந்து பார்க்கலாமா வேண்டாமா என்று மனதில் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க அவனின் அழுத்தமான காலடிகள் வேகமாக கேட்டன.

 

ஆஆஆ என்ற சத்தத்துடன் வழியில் முனங்கினேன்.

 

நான் தரையில் கிடந்தேன். கைகளில் சிராய்ப்பு ஏற்பட்ட எதிர்பாராத இந்தத் தாக்குதலில் என் தலை தரையில் முட்டிக் கொண்டது.

 

என்ன நடந்தது என எண்ணிப்பார்த்தேன். வேகமாக வந்த ஆதித்யா என் கையை பிடித்து இழுத்து நான் உணர்வதற்குள் என்னை கீழே தள்ளி எறிந்தான்.

 

 

"எவ்வளவு தைரியம் இருந்தா என் பெட்லயே உட்கார்ந்திருப்ப. இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி அவ்வளவு சொல்லியும் உன் ஆசையை நிறைவேத்த என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டல." என கோபமாக கேட்டான்

 

வெளிவரத் துடிக்கும் கண்ணீரை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டேன். வாழ்க்கை முழுவதும் இவனிடம் அடிமையாக என்னால் வாழ முடியாது.

 

இப்பொழுது தைரியமாக அவனை எதிர்த்தால் தான் இல்லையென்றால் இப்படியே என் வாழ்க்கை முடிந்துவிடும் என என்னை திடப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து அவனை பார்த்தேன்.

 

"என்னடி மொறைக்கிற ஏன் கல்யாணத்தை நிறுத்தல சொல்லு."

 

அவன் டி என்றதில் கடுப்பாகி "நான் ஏன் கல்யாணத்தை  நிறுத்தனும். உனக்கு பிடிக்கலைன்னா நீ தான் நிறுத்தணும்.

 

உனக்கு தேவனா நீ நிறுத்தி இருக்க வேண்டிய தானே. உனக்கு என்ன கல்யாணம் பண்ணனும்னு ஆசை‌. அதனாலதான் நீ அமைதியா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட. இப்ப பலியை என் மேல போடுறியா." என அவன் பலியை அவனிடமே திருப்பிப்போட்டு அமைதியாக அவனை முறைத்தேன்.

 

"உன்ன கல்யாணம் பண்ணனும்னு நான் ஆசைப்பட்டேனா அந்த தப்ப மட்டும் நான் என்னைக்கும் பண்ண மாட்டேன்."

 

அட முண்ட  கல்யாணம் பண்ணிக்கிட்டேனல இன்னும் தப்பு பண்ண மாட்டான்னு என்று த முகத்தைத் திருப்பிக் கொள்ள,

 

"ஏய் என்னடி ரொம்ப பேசுற" என என்னை நெருங்கி வந்தான்.

 

"நான் அப்படிதான் பேசுவேன் என்ன பண்ணுவ" என நானும் அவனை நெருங்கி சென்றேன்.

 

"என்னையைக் எதுத்து பேசுற அளவுக்கு உனக்கு அவ்வளவு தைரியம் வந்துருச்சா."

 

"ஆமா நீ பெரிய மினிஸ்ட்டர் உன் கிட்ட பேசுறதுக்கு எனக்கு தைரியம்  வரணுமாக்கும்."

 

"ஏய் மரியாதையா பேசு. இல்ல  பல்லை உடைச்சிடுவேன்."

 

"அதுவரை உனக்கு பல்ல காட்டிகிட்டு இருப்பேனாக்கும். எனக்கு தூக்கம் வருது.தள்ளு." என அவன் தோளை நகர்த்தி விட்டு மீண்டும் பெட்டில் போய் அமர்ந்தேன்.

 

என் அருகில் வந்து என் கையை பிடித்து இழுத்தான்.

 

"என் பெட்ல படுக்குற  உரிமையை உனக்கு கொடுத்தா."

 

என அவன் கேட்க நான் யோசிக்கும் பாவனை செய்து பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு,

 

" அச்சச்சோ இன்னைக்கு காலைல உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்த மாதிரி கனவு கண்டேன் மிஸ்டர் ஆதித்ய குமார். அந்த தைரியத்தில தான் இந்த கட்டில்ல உக்காந்தேன்.

 

எதுக்கும் நாம்ம கீழே போய் உங்க அம்மா கிட்ட கன்பார்ம் பண்ணிட்டு வரலாம் வாங்க." என அவன் கையை பிடித்து  அறை வாசலுக்கு இழுத்துச்  சென்றேன், 'அத்தை' என்ற குரலுடன்.

 

"என்ன பண்ணிக்கிட்டு இருக்க. அம்மா எந்திரிச்சு வாங்க" என அவன்  கை கொண்டு என் வாயை மூடினான்.

 

அவன் முகம் என் முகத்திற்கு மிக அருகில் இருக்க அவனின் பதட்டத்தை உள்ளுக்குள் ரசித்துக்கொண்டே கோபமாக இருப்பது போல் அவன் கையை தட்டி விட்டேன்.

 

" அப்போ நடந்தது எல்லாம் உண்மை தானே. உங்க பொண்டாட்டிங்குற உரிமை இருக்கு." என மீண்டும் கட்டிலுக்கு அருகே சென்றேன்.

 

"அத நான் சொல்லணும்."

 

"நீங்க எதுக்கு சொல்லணும். அது தான்  தாலி கட்டினீங்களே இதுவே போதும்.என்னோட உரிமைய சொல்ல." என கட்டிலில் உட்கார்ந்தேன்.

 

"நான் என் கட்டில உன் கிட்ட எப்பவும் ஷேர் பண்ணிக்க மாட்டேன் ஒழுங்கா எழுந்திரு."

 

"யார் சேர் பண்ண சொன்னா. உனக்கு இஷ்டம்னா என் பக்கத்துல தூங்கு. நான் எதுவும் மைண்ட் பண்ணிக்க மாட்டேன். இஷ்டம் இல்லைனா தாராளமாக அங்க இருக்குற சோபாவில் படுத்துக்கோ.

 

இல்ல இந்த ரூமையே என்கூட ஷேர் பண்ணிக்க முடியாதுன்னு பீல் பண்ணினா தாராளமாக விட்டு நீ வெளியே போகலாம்.

 

கெஸ்ட் ரூம்ல தங்கிக்க. இல்ல மேல ரெண்டு ரூம் இருக்குன்னு அத்தை சொன்னாங்க. அங்கே போய் தங்கிக்க. இல்ல இந்த வீட்டை என் கூட சேர் பண்ண உனக்கு இஷ்டம் இல்லைனா அத்தைகிட்ட கெஸ்ட் ஹவுஸ் சாவி வாங்கித்தரேன்‌ அங்கே போய் தூங்கு. நான் ரொம்ப டயர்டா இருக்கேன். நான் போய் தூங்க போறேன்."

 

என மீண்டும் படுக்கைக்கு சென்றேன்.

 

"எவ்ளோ தைரியமிருந்தால என்னையே என் வீட்டை விட்டு போக சொல்லுவ."

 

" ஹலோ மிஸ்டர் நான் உங்கள வீட்டை விட்டு போக சொல்லல. உங்களுக்கு இஷ்டம் இல்லேனா தான் சொன்னேன். உங்க இஷ்டம் போல எங்க வேணா தூங்குங்க.எனக்கு என்ன?

 

ஒருவேளை நான்தான் வெளியே போகணும் அப்படினா சரி உங்களுக்காக என்னோட புருஷனுக்காக  பாவம் பார்த்து நான் வேணா போறேன். ஆனா உங்க அம்மாவோட ரூமுக்கு தான் போவேன். உங்களுக்கு ஓகேவா?" என கேட்க அவன் என்னை முறைத்தான்.

 

வேணாமா. அப்போ ஓகே. எனக்கு தூக்கம் வருது. காலைல இருந்து போட்டோக்கு போஸ் கொடுத்து கொடுத்தே செம டயர்ட் ஆயிட்டேன்.

 

இதுல காலைல சீக்கிரமே எழுப்பி விட்டாங்க. நான் போய் தூங்குறேன். முடிஞ்சா அந்த ஏசிய மட்டும் கொஞ்சம் கூட வச்சுருங்க."என கட்டிலில் படுத்து  போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு படுத்தேன்.

 

"உனக்கு நான் ஏசி போடணுமா" என ஏசி யை அணைத்துவிட்டு அவன் என் அருகில் வந்து படுத்து விட்டான்.

 

"நல்லவேளை பயத்துல குளிர் காய்ச்சல் வந்துவிடும்ன்னு நினைச்சேன். எங்க என் பேச்ச கேட்டுருவானோன்னு பயந்துட்டேன்.

 

பயபுள்ள என்னை வெறுப்பேத்த ஆஃப்  பண்ணிருச்சு.' என சந்தோஷப்பட்டு மெதுவாக போர்வையை விலக்கி அவனை பார்

க்க அவன் புலம்பிக் கொண்டே படுத்திருந்தான்.

 

பரவாயில்ல மிஸ்டர் ஆதித்ய குமார் எனக்கும் பயப்படுவான் போல. இதே டெக்னிக்கை ஃபாலோ பண்ணி வாழ்க்கையை ஓட்ட வேண்டியது தான். என எண்ணிக்கொண்டே நானும் படுத்துக் கொண்டேன்.

 


 
Posted : July 10, 2026 8:14 am

Scroll to Top