உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் _12
உதயம் 💏12💏
"இதெல்லாம் பார்த்ததுக்கு அப்புறம் உனக்கு தோணலாம். இவ்வளவு பாசமா இருந்த அப்பா இப்பலாம் ஏன் நம்ம கிட்ட பேசவே மாட்டேங்குறாங்கன்னு. "
எனக்கேட்க என் தலை என்னை அறியாமல் என் ஆமாம் என அசைத்தது.
"இதெல்லாம் ஞாபகம் இருந்தால் உனக்கு 14 வயசு இருக்கும் பொழுது நடந்த ஆக்சிடென்ட் ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்."
ரத்த வெள்ளத்தில் இருந்த என்னை என் தந்தை பதறியடித்துக்கொண்டு கையில் ஏந்திக்கொண்டு ஓடியதையும் கதறி அழுததையும் என்னால் எப்படி மறக்க முடியும்.
அந்த நினைவுகள் இப்பொழுதும் நடப்பது போல் தோன்ற என் கைகள் நடுங்கின.
அதை உணர்ந்தவர் என் அருகே நெருங்கி என் தோளில் கைபோட்டு அவருடன் சேர்த்து அணைத்தார்.
"அப்பாக்கு உயிர் போய் உயிர் வந்தது தெரியுமா எங்கே உன்னை இழந்துருவேனோங்குற பயம் எனக்குள்ள இருந்துக்கிட்டே இருந்தது.
உன்னை திரும்ப பார்ப்பேனா. நீ அப்பான்னு என்னை திரும்ப கூப்பிடுவியா அப்படிங்குற பயம் எனக்குள்ள முழுசா இருந்தது. வேண்டாத கடவுள் இல்லை.
அப்பான்னு ஓடி வந்து என்னை கட்டி புடிக்கிற தருணத்துக்காக தருணத்துக்காக ஐசியு வாசலிலேயே நின்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்.
பாட்டி தான் சொன்னாங்க. ஜாதகத்துல எதுவோ சரி இல்லைன்னு. அதனால நம்ம பண்டிதரை போய் பார்த்தேன் அவர்தான் உன் உயிருக்கு கண்டம் இருக்குன்னு பரிகாரம் செய்ய சொன்னாங்க.
பரிகாரம் மட்டும் இல்ல உங்க பொண்ணோட உயிருக்கு எப்பவும் ஆபத்து இல்லாமல் இருக்கணும்னா நீங்க உங்க பொண்ணோட நெருங்கி பழகக்கூடாது. அவள தனியா விட்டுருங்க. பெத்தவங்கள அரவணைப்பும் அந்தக் குழந்தைக்கு இருக்கக் கூடாது. அப்படின்னு சொல்லிட்டாங்க. அதனால தான் நானும் உன்னை நெருங்கலடா."
"இது என்னன்னு சொல்லு." என என் தந்தையின் கையில் வைத்திருந்த சாவியை என்னிடம் நீட்ட நான் அதை பார்த்தேன். அது என் அறையின் சாவியை போல் தெரிந்தது.
"அப்பா இது என்னோட ரூம் சாவி மாதிரி இருக்கே?"
"ஆமாம்டா உன்னோட ரூம் சாவி தான். அப்பா உன்ன பாக்காம இருக்க மாட்டேன். நீ தூங்குனதுக்கப்பறம் மெதுவா உன்ன வந்து பார்த்து உன் தலையை கோதிவிட்டு உனக்கு முத்தம் கொடுக்காமல் எனக்கு தூக்கமே வராது.
ஸ்கூல் படிக்கும் போதெல்லாம் நீ பாதி நேரம் ஸ்டடி டேபிள்லயே தூங்கிடுவ. அப்பா தான் உன்ன தூக்கிட்டு வந்து பெட்ல படுக்க வச்சுட்டு போவேன்."
இப்போது தான் ஞாபகம் வந்தது. நான் பள்ளி காலங்களில் படித்துக்கொண்டிருக்கும்போது தூங்கிவிடுவேன். காலையில் படுக்கையில் இருப்பேன். நான் கூட பூட்டியிருந்த அறைக்கதவை திறந்து யார் வருவார்கள் ஒருவேளை தூக்கத்தில் நாமே நடந்து சென்று படுத்து இருப்பேன் என நினைத்துக் கொள்வேன்.
ஆனால் அது என் தந்தை என இன்று தான் எனக்கு தெரிகிறது. என் தந்தை என் மீது இவ்வளவு பாசம் வைத்திருந்தார் என நிச்சயமாக எனக்கு தெரியாது.
அவர் பணத்திற்காக மகளை மறந்துவிடும் சராசரி ஆண் மகன் என நினைத்தேன்.
ஆனால் தன் குழந்தையை பொத்திப் பாதுகாக்கும் தமிழ் மகனாக இருந்திருப்பார் என இன்றுதான் தெரிந்தது.
என் தந்தை மீது நான் வைத்திருந்த யூகம் தவறானது என்ற குற்ற உணர்ச்சியில் கண்ணீர் என்னையறியாமல் என் கன்னங்களை தடவி சென்றது.
"அது மட்டும் இல்லடா நீ எப்பவும் தனியா பீல் பண்ண கூடாதுன்னு உன்னோட ப்ரண்டு சரண்யா எப்பவும் உன் கூடவே இருக்குற மாதிரி பார்த்துப்பேன். அப்பா டெய்லியும் சரண்யா கூட பேசுவேன்.
நீ என்ன பண்ற. உனக்கு என்னென்ன புடிச்சிருக்கு. உனக்கு என்ன வேணும். அப்படின்னு எல்லாமே உன் பிரண்டு சரண்யா மூலமா தெரிஞ்சுக்கிட்டு உனக்கு அதை செஞ்சு கொடுப்பேன் டா.
அது மட்டும் இல்ல. நீ ஆதித்யாவை மால்வா பார்த்தது உங்களுக்குள் நடந்த மிஸ் அண்டர்ஸ்டாண்டிங். இது எல்லாம் சரண்யா என்கிட்ட சொல்லி இருக்கா.
ஆதித்யா உன்ன பொண்ணு பாக்க வந்துட்டு போனதுக்கப்புரம் ஏதோ சரியில்லைனும் உன் மனசுல ஏதோ ஒன்னு உறுத்திக்கொண்டே இருக்கும்னும் சொன்னா.
ஒருவேளை இன்னைக்கு நடந்தது தான் உன் மனசுல ஓடுது அப்படினா அதை எல்லாத்தையும் துடைச்சு எறிஞ்சுட்டு டா.
ஆதித்யா ரொம்ப நல்ல பையன். நான் அவன சின்ன வயசுல இருந்தே பார்த்துகிட்டு இருக்கேன்.
ஆதித்யாக்கு முன்னாடியே ஒரு காதல் இருந்திருந்தா அதுல எந்த தப்பும் இல்லயேம்மா.
காதல்ங்குறது எல்லாருக்கும் வர்ற ஒரு அழகான உணர்வு. அதற்காக காதலிச்சவங்களை மட்டும் தான் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறது நடைமுறைக்கு சரியாக வராது.
இங்க கனவுகள்ல வாழ்ற காதல் தான் அதிகம்.
ஏன் அப்பா கூட அம்மாவை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி ஒரு பொண்ண காதலிச்சேன்.
உன் பாட்டிதான் உருட்டி மிரட்டி உன் அம்மாவ எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க.
நான் உன் அம்மா கூட சந்தோசமா இல்லாமலா இருக்கேன்.
நிச்சயமா இல்ல.
ஒருவேளை ஆதித்யாக்கு காதல் இருந்திருந்தா உன்னோட காதலால அவரோட காதல ஜெயிக்க முடியுங்குற நம்பிக்கை எனக்கு இருக்கு.
என் பொண்ண யாராலும் வெறுக்க முடியாது.
அப்பாகாக நீ ஆதித்யாவ முழு மனசோட கல்யாணம் பண்ணிக்கிறியா டா"என கேட்க,
அப்பாவிடம் "கண்டிப்பா ஆதித்யா தான் கல்யாணம் பண்ணிக்கிறேன் பா"என அவரை கட்டியணைக்க அவர் என் நெற்றியில் முத்தமிட்டார்.
அவரது அனைப்பிலேயே அழுது களைத்து விட அவர் என்னை என் அறையில் உறங்க அழைத்துச் சென்றார்.
தனிமையில் அமர்ந்து சிந்தித்தேன். வாழ்க்கை ஒரு புரியாத புதிர். ஆதித்யா பற்றி எனக்கு கொஞ்சம் தெரிந்திருந்தாலும் அவனை என்னால் சமாளிக்க முடியுமா என தெரியவில்லை.
ஒருவேளை ஆதித்யா இடத்தில் வேறு ஒருவன் இருந்து திருமணத்திற்கு பின் ஆதித்யா வை போல் இருந்தால் என்னால் என்ன பண்ணியிருக்க முடியும்.
இதையும் அவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துவிட்டேன்.
ஆதித்யாவை திருமணம் செய்து கொள்ளத்தான் போகிறேன். என் விதி என்னை எங்கு கொண்டு செல்கிறதோ அதனுடன் பயணிக்க தயாராகி விட்டேன்.
இரவு மணி பதினொன்று நெருங்கியிருந்தது. என் யோசனைகள் எல்லாம் மூட்டை கட்டி விட்டு என் தாய் தந்தையின் அறைக் கதவைத் தட்டினேன்.
என் தாய் கதவை திறக்க நான் என் அப்பாவையும் அம்மாவையும் பார்த்தேன்.
"அம்மா, அப்பா, இன்னும் மூணு நாள்ல நான் மிஸஸ் தியா ஆதித்யா குமார் ஆயிடுவேன். ஆனால் தியா விஸ்வநாத நா உங்க கூட இந்த மூணு நாளா ஸ்பெண்ட் பண்ணனும் னு நினைக்கிறேன் டாடி.
நான் உங்ககூட இன்னைக்கு படுத்துக்கவா?" எனக்கேட்க அவர் கண்ணீருடன் கைநீட்ட, நான் ஓடி சென்று அவர் அருகே படுத்துக் கொண்டேன். அவர் என் தலையை கோதி விட என் அம்மா என் அருகில் படுத்துக் கொண்டார்.
அழகான இதமான மாலை வேளையில் பறவைகள் யாவும் அவைகளின் கூட்டுக்குள் அடைய, சூரியன் தனது ஆதிக்கத்தை குறைத்துக்கொண்டு செல்ல, என் வாழ்வை மாற்றக்கூடிய அந்த நாள் மாலையும் வந்தது.
பியூட்டி பார்லர் பெண்கள் என்னை அலங்கரிக்க, மாயா என் அருகில் உட்கார்ந்து கொண்டு இருக்க, ஆதித்யா உடன் என்னுடைய எதிர்காலத்தை பற்றி சிறிதும் எண்ணாமல் நாளை ஆதித்யாவை என்னவனாக முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள தயாராகிவிட்டேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பாக வந்து விடுவேன் என கூறிய சரண்யா இன்னும் வரவில்லை.
இன்று எனக்கும் ஆதித்யாவுக்கும் நிச்சயதார்த்தம். அவனின் வருகைக்காக என் வீட்டார் அனைவரும் காத்துக்கொண்டிருக்கும் மீண்டும் அவனை எப்படி சமாளிக்கப் போகிறேனோ என்ற படபடப்பு என்னை சூழ்ந்து கொண்டது.
திருமணத்தை ஏன் இன்னும் நிறுத்தவில்லை என்று அவன் மீண்டும் கேட்பான். அவனிடம் என்ன பதில் கூறுவது என தெரியவில்லை.
நான் இந்த திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று அவன் நினைத்திருந்தால் பாவம் அவனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்ச போகிறது.
நான் மெசேஜ் திருமதி அதித்யாவாக அதற்கு மாறாக தயாராகிவிட்டேன் என்பதை அவன் அறியாதது அவன் விதியே என எண்ணிக்கொண்டு என்னை அலங்கரிக்கும் பெண்களுக்கு இசைந்து கொடுத்தேன்.
"ஹாய் டியர்."
சரண்யாவின் குரல் கேட்க கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டேன்.
என் அருகில் வந்து என்னை தோளோடு அணைத்துக் கொண்டவள்,
" சாரிடா புது வேலை. அங்கே இருக்குறவங்க லீவ் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. நான் என்ன பண்ணட்டும். நானும் எவ்வளவோ முயற்சி பண்ணுனேன். எப்படியோ அந்த சொட்டச் சேட்டா கிட்ட இருந்து தப்பிச்சு வந்துட்டேன்.
சாரிடா.."
என கண்ணத்தில் முத்தமிட என் கோபம் இருந்த இடம் தெரியாமல் போனது.
என் முகத்தில் புன்னகை பரவ அதை என் எதிரே இருந்த கண்ணாடியில் பார்த்து விட்டு என் முன்னால் வந்தாள்.
"வாவ் தியா கல்யாண கலை வந்துடுச்சு போல முகமெல்லாம் ப்ரைட்டா இருக்கு."
இருக்கும் இருக்கும் ஆதித்யா வ நினைச்சு பயத்தில் வெளுத்துப்போய் இருக்கும். என மனதில் நினைத்ததை வெளியில் சொல்ல முடியவில்லை.
மெல்லிய புன்னகை செய்ய அவளோ அதை வெட்கம் என நினைத்து மீண்டும் என்னை கேலி செய்தாள்.
"நான் வரும் போது தான் ஆதித்யா அண்ணாவ பார்த்தேன். அவங்க எல்லாரும் வந்துட்டாங்க. சீக்கிரம் பொண்ணு ரெடி பண்ணுங்க." என அங்கு இருந்த அலங்காரம் செய்யும் பெண்களிடம் கூற அவர்கள் விட்ட குறைவாக இருந்த அனைத்தையும் சீக்கிரமாக செய்து முடித்தார்கள்.
"ஆமாம் அது என்ன ஆதித்யா அண்ணா??? புதுசா இருக்கு.'
என நான் புருவம் உயர்த்தி கேட்க,
"ஆமாம் நீ எப்போ ஆதித்யா அண்ணாவ கல்யாணம் பண்ணிக்க ஓகே சொன்னியோ அப்பவே அவரு எனக்கு அண்ணன் ஆயிட்டாரு.
இப்பதான் அவர் கூட பேசிட்டு வரேன்."
அவர் பேசினாளா நான் அதிர்ச்சியாக அவளிடம் கேட்டேன். பின்னர் ஆதித்யாவிற்கு பெண்களிடம் பேசக்கூட தெரியுமா?
"ஏன் உனக்கு பொறாமையா இருக்கா?" என
"ஆமா ஆமா" என சலித்துக் கொண்டே போக
"ஏன் ஃபீல் பண்ற. நாளைக்கு தான் திருமதி ஆதித்யா குமார் ஆகபோறியே. அதுக்கு அப்புறம் உன்னோட பர்மிஷன் கிடச்சா தான் நாங்க எல்லாம் பேசவே முடியும்."எனக் கூற சிறிது நேரம் விட்டு இருந்த பயம் மீண்டும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது.
இந்த திருமணம் எந்த தடையும் இல்லாமல் நல்லபடியாக நடக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்.
என்னுடைய பயத்தை கல்யாண படபடப்பு என நினைத்த சரண்யா என்ணை சாதாரணமாக மாற்றுவதற்காக என் அருகில் உட்கார்ந்து அவள் புதிதாக வேலைக்கு சேர்ந்த இடத்தில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளை சொல்லிக் கொண்டிருக்க அதைப் புரிந்து கொண்டு நானும் அதைக் கேட்டுக்கொண்டு அதில் மூழ்கினேன்.
பேச்சுக்கள் பலவாறாக செல்ல நேரம் சென்றதே தெரியவில்லை.
சிறிது நேரத்தில் என்னை அழைக்க வந்த என் அம்மா, "என்ன வளவளன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க. உன்ன கூட்டிட்டு வர சொல்லிட்டாங்க. சீக்கிரம் கூட்டிட்டு வாங்க. நிச்சய பத்திரிக்கையை வாசிக்கணும்" என சொல்ல இதயம் வழக்கம்போல் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.
ஒருபுறம் சரண்யா மற்றொரு புறம் மாயா இருக்க இருவரும் சேர்ந்து என்னை மணமேடைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆதித்யாவை எப்படி எதிர்கொள்ள என தெரியாமல் நான் குனிந்த தலையை நிமிரவே இல்லை. என்னை அழைத்து மணமேடையில் ஆதித்யாவிற்கு அருகில் இருந்த கதிரையில் அமரவைத்து அவர்கள் பின்னால் நின்று கொண்டனர்.
ஆதித்யாவின் பார்வை என்னை துளைப்பதும் என்னால் உணரமுடிந்தது. ஆனாலும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. பின் அவன் முறைப்பை எவ்வாறு சமாளிப்பது என விழி பிதுங்கி அமர்ந்திருந்தேன்.
ஐயர் நிச்சயம் பத்திரிக்கைகளும் வாசிக்க ஆரம்பித்தார்.
நிகழும் சித்திரை மாதம் திங்கட்கிழமை பஞ்சமுகி சுவாதி நட்சத்திரம் அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் நண்பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் சிம்ம லக்னத்தில்,
மதுரை விஷ்ணு குமார்- பவித்ரா தம்பதியரின் குமாரன், திருமண செல்வன் ,ஆதித்திய குமாரனுக்கும்,
மதுரை விஸ்வநாதன் -
பார்வதி தம்பதியரின் குமாரத்தி, திருமண செல்வி, தியா விஸ்வநாதன்க் கும் நாளை திருமணம் என பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு உள்ளது அறிவித்துக் கொள்கிறேன்."
என முடித்தார்.
Super engagement over. Tomorrow marriage. But y Aadhi behave like that to diya? Very intresting
- 25 Forums
- 215 Topics
- 762 Posts
- 1 Online
- 329 Members
