Forum

உறவில் உதயமாகி உயிர...
 
Notifications
Clear all

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -11

1 Posts
1 Users
0 Reactions
14 Views
(@salmaamjathkhan)
Posts: 19
Trusted Member
Topic starter
 
[#150]

உதயம் 💏11💏

 

"ஹலோ சொல்லு சரண்."

 

"..."

 

"என்ன சொல்ற நீ."

 

"..."

 

"என்னால நம்பவே முடியல."

 

"..."

 

"சரண் இது என்னோட வாழ்க்கை. விளையாடாத."

 

"..."

 

"உனக்கு நல்லா தெரியுமா? உனக்கு யார் சொன்னா?"

 

"..."

 

"எனக்கு ஆதித்யாவை ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனால் உண்மையிலேயே அவருக்கு காதல் இருந்திருக்கும் என்று எனக்கு தெரியாது. அதுவும் அவர் லவ் ஃபெயிலியர்ன்னு எனக்கு தெரியவே தெரியாது."

 

"..."

 

"இப்போ என்ன பண்றது ஆதித்யா இருக்கு கல்யாணத்துல இஷ்டம் வேற இல்லையா..."

 

"என்னால என்ன பண்ண முடியும் அப்பா அம்மா ஆசை படுறாங்க எனக்கும் வேற அவர பிடிச்சு இருக்கு." இப்போ அவருக்கு பிடிக்கலனா என்ன பண்றது."

 

"..."

 

"ப்ளீஸ்... எனக்கு கொஞ்சம் மனசு சரியில்ல. நான் அப்புறம் பேசுறேன்." என கண்களில் பொய்யாய் ஒட்டியிருந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே ஒரக்கண்ணால் அறையின் வாயிலில் நின்றிருந்த மணிமேகலை அத்தையை பார்த்தேன்‌.

 

அவ்வளவுதான் முடிந்தது வேலை. வீட்டிற்கு நான்கு பேர் இந்த வேலையை சிறப்பாக செய்வார்கள். அதில் ஒன்றுதான் இந்த மணிமேகலை அத்தை.

 

யார் மகிழ்ச்சியாக இருந்தாலும் பிடிக்காது. ஏதாவது ஒரு சந்தோஷ நிகழ்ச்சியில் அபசகுனமாக செய்துவிடுவது அல்லது பேசுவது.

 

மற்றவர்களை காயப்படுத்தி விட்டால் தான் அவர்களுக்கு ஒரு மனநிறைவு கிடைக்கும். 

 

கிடைத்த இந்த அவல் போன்ற செய்தியை ஊரெங்கும் பரப்பி என் திருமணத்தில் ஏதாவது ஒரு குழப்பத்தை கண்டிப்பாக செய்வார்கள். அதில் ஒன்று பற்றிக் கொண்டு திருமணத்தை நிறுத்தி விட்டால் முடிந்தது.

 

‌ திருமணத்திற்காக சொந்தங்கள் எல்லாம் வீட்டுக்கு வந்திருக்க, எல்லோரும் என்னை பார்த்துவிட்டு வாழ்த்துக்கள் கூறிக்கொண்டும் கலாய்த்துக் கொண்டும் கேலி செய்து கொண்டும் சுற்றிக் கொண்டிருக்க எனக்கு சலிப்பாக இருந்தது.

 

ஆதித்யா இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் நிச்சயம் திருமணத்திற்கான எதிர்பார்ப்போடு நான் இருந்திருப்பேன்.

 

அவனைப் பற்றிய கனவுகளில் மூழ்கி இருப்பேன். ஆனால் இந்தத் திருமணம் நடக்காது என நானும் ஆதித்யாவும் விரும்புவதால் இதைப்பற்றி எண்ண கூட என்னால் முடியவில்லை. தலை கனமாக இருப்பது போல் தோன்ற கட்டிலில் சாய்ந்து படுத்தேன்.

 

ஒரு அரை மணி நேரத்தில் எழுப்பினாள்‌, மாயா.

 

"தியா... தியா.... எழுந்திரு. இங்க என்ன நடக்குது னு தெரியாம நீ பாட்டுக்கு படுத்துக்கிட்டு கிடைக்க."

 

"உனக்கு என்ன வேணும். ஏன் இப்படி கத்துற."

 

"இங்க உன் கல்யாணம் நடக்குமா நடக்காதான்னே தெரியலை. நீ என்னன்னா மகாராணி மாதிரி படுத்துகிட்டு கனவு கண்டுக்கிட்டு இருக்கியா?"

 

'நான் கனவு கண்டுக்கிட்டு போடி லூசு.' 

 

"என்ன வேணும் உனக்கு. ஏன் இந்த கல்யாணத்துக்கு என்ன இப்போ?"

 

"ஆதித்யாக்கு ஆல்ரெடி ஆள் இருக்காம். அவர் ஏற்கனவே ஒரு பொண்ண லவ் பண்ணி இருக்காராம். அந்த பொண்ணு ஆதித்யா விட்டு போயிட்டா போல. அதனால அவரு சூசைட் பண்ண ட்ரை பண்ணுனாராம். அந்த பொண்ண மறக்க முடியாம இருக்காராம்.

இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையாம். ஓடி போனாலும் போய்விடுவாராம்."என கூற நான் கண்களை அகல விரித்தேன்.

 

'என்ன சூசைட்டா!!? ஓடி போய்டு வானா!!! இதெல்லாம் நம்ம லிஸ்டிலயே இல்லையே. அது சரி போட்டு குடுக்குறவங்க எப்படி வேணா போட்டு கொடுப்பாங்க' என நினைத்து இதுவும் நல்லாத்தான் இருக்கு. இது ஏன் நமக்குத் தோன்றாமல் போனது என்ற எண்ணம் வராமலும் இல்லை.

 

சோகமாக இருப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு கீழே செல்ல அம்மா சோபாவில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள்.

 

என்னைப்பார்த்ததும் மேலும் கண்ணீர் வடிக்க ஆறுதலாக அவர் தோளை பற்றினேன்.

 

"அம்மா இப்ப ஏன்மா அழுகுற?"

 

"ஆதித்யாக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லையாம். அவர் காதலிச்ச பொண்ணு கூட்டிட்டு ஓடிப்போக போறாராம். உன் வாழ்க்கை என்ன ஆகும் னு நினைச்சா என்னால முடியலயே" என மீண்டும் கண்ணீர்விட முகத்தை பாவமாக வைத்துக்கொண்டேன். வராத கண்ணீரை ஒற்றி எடுத்தேன்.

 

என் தந்தையோ செய்வதறியாமல் கைகளை பிசைந்து கொண்டு அலைபேசியில் யாரைரோ தொடர்பு கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தார்.

 

அனேகமாக விஷ்ணு அங்கிளாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.

 

பாட்டி வந்தவர்,

 

"நிறுத்து பார்வதி. இப்ப எதுக்கு ஒப்பாரி வச்சுட்டு இருக்க. இவர் கருப்பு சேலையை எடுத்து வைச்சுக்குட்டு இருக்கும்போதே நான் நெனச்சேன். ஏதாவது அபசகுணமா வரும்னு. இப்போ அழுறதை நிறுத்திவியா மாட்டியா" என கத்தினார். 

 

அவர் சத்தத்தில் அம்மா அமைதியானார்.

 

" எல்லாருக்கும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க. ஆதித்யாவை பத்தி எங்களுக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும். அவன் எப்படிப்பட்டவன்னும் எங்களுக்கு தெரியும். அதனால இந்த விஷயத்தில யாரும் ரொம்ப அக்கறை பட வேணாம்.

 

இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும். இதுக்கு மேல இதை பத்தி யாரும் பேசக்கூடாது. எங்க வீட்டு மாப்பிள்ளை பத்தி தப்பா பேசினா பல்லு இருக்காது." என எச்சரித்தார்.

 

பின் என் அருகில் வந்து என் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அவர் அறைக்கு சென்றார்.

 

என்னை ஏற இறங்க பார்த்தவர் இப்படி "உட்காரு" என்றார் அதிகாரமாக.

 

"எனக்கு தெரியும் உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு. அதுக்காக ஆதித்யாவை பற்றி இப்படி சொல்லுவனு நான் எதிர்பார்க்கவே இல்லை.

 

"பாட்டி நான் எதுவும்..." பாட்டிக்கு தெரிந்து இருந்திருக்குமோ என நினைக்கும் பொழுதே வியர்வையில் பூக்கத் தொடங்கி விட்டது.

 

"போதும் நிறுத்துடி. யாரை ஏமாற்ற பார்க்கிற."என என்னை முறைத்துக் கொண்டு நிற்க என் உடல் அதிர்ந்து நடுங்கியது.

 

"நானும் ஆரம்பத்திலிருந்து பாத்துட்டு தான் இருக்கேன். கல்யாணத்துக்கு நீயா தானே சரின்னு சொன்ன. பின்ன எதுக்கு இதெல்லாம் பன்ற."

 

"..."

 

"அன்னக்கியும் அப்படித்தான் உன்னை பொண்ணு பாக்க வரும் பொழுது ஆதித்யா குடிக்கிற டீ ல உப்பைக் கலந்து கொடுக்குற. எவ்வளவு நெஞ்சழுத்தம் உனக்கு."

 

"பா..பா.. பாட்டி..." என நான் தடுமாற, இது எப்படி இவருக்கு தெரியும் என யோசித்துக் கொண்டிருக்க,

 

"எனக்கு எப்படி தெரியும் தானே யோசிக்குற. நான் தான் பார்த்தேனே நீ டீ ல உப்பை கலந்தத. அதனாலதான் நான் டீ கப்ல இருந்த டீயை கொட்டிட்டு வேற டீ போட்டு வைத்தேன்.

 

அது மட்டும் இல்லாம எவனோ ஒருத்தன கூட்டிட்டு வந்து சாமியாருன்னு பொய் சொல்லி ஏமாத்த வேற பார்க்குற. 

 

நீ வேணா இங்க எல்லாரையும் ஏமாற்றலாம். ஆனா என்னை ஏமாற்ற முடியாது.

 

அவன் கிட்ட பணத்தை காட்டுனதும் ஓடி போய்ட்டான்.

 

அன்னைக்கும் அப்படித்தான் புடவை எடுக்கும்போது அந்த பையன அப்படி முறைக்குற. உன்னால தான் அந்த பையன் பாதிலேயே போயிட்டான்னு நினைக்கிறேன்."

 

'நாம் முறைச்சத பாத்தியே. அவன் என்னை முறைச்சதையும் கையப் பிடிச்சு இழுத்ததயும் பார்க்கலயா கிழவி' என மனதிற்குள் அர்ச்சனை செய்தேன்.

 

"அப்படி பார்க்கிற. இன்னைக்கு என்னமோ போன்ல அந்த தம்பி  காதல் தோல்வின்னு  சொல்ற. நான் நீ பேசுன எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்.

 

இந்த கல்யாணத்துல பிரச்சனை பண்ணி நிறுத்த பார்க்குற. அது நான் இருக்குற வரை நடக்காது.

 

ஆதித்யாக்கு என்னடி குறைச்சல்."

 

'எல்லாமே குறைச்சல் தான்.' என மனம் ஒருபுறம் கூப்பாடு போட்டது.

 

" எவ்ளோ நல்ல பையன் தெரியுமா. அன்பான பையன். கோவமா பேச தெரியாது."

 

இதை கேட்டதும் என் கண்கள் வெளியே வராத குறைதான்.கோபமே வராதா. என் கையை பார்த்தேன். இரண்டு நாட்களுக்கு முன் கடையில் என் கைகளை அழுத்திய போது ஏற்பட்ட ரணம் இன்னும் குறையவில்லை. கிழவியை முழு மூச்சாக முறைத்தேன்.

 

நூறு பொய் சொல்லி கல்யாணம் செய்யலாம் என்று கூறுவார்கள். கிழவி அதையும் தாண்டி விடும் போலிருக்கு.

 

இந்த மாதிரி நல்ல பையனா கல்யாணம் பண்ண கொடுத்து வச்சிருக்கணும்.

 

அத விட்டுட்டு

அந்த பையன கெட்ட பையனா காட்ட முயற்சி பண்ற. இதோட நிப்பாட்டிகோ. இன்னொரு முறை இந்த கல்யாணத்துல நிப்பாட்ட ஏதாவது முயற்சி செஞ்ச அப்புறம் என்ன பொல்லாதவலா தான் பார்ப்ப."

 

இதுக்கும் மேலயா.

 

நான் எதுவும் பேசாமல் குற்றவுணர்வுடன் அமர்ந்திருக்க, என் அருகில் அமர்ந்து என் தோளை தொட்டார்.

 

"பாட்டி சொல்றேன்னு தப்பா எடுத்துக்கிட்டாலும் சரி. உண்மையாவே ஆதித்யா ரொம்ப நல்ல பையன் டா. கொஞ்சம் யோசிச்சு பாரு.

 

உன் அப்பா உன் மேல எவ்வளவு பாசமா இருக்காரு. உனக்கு எதுலயாவது குறை வச்சிருக்காரா. இல்லேல.

 

ஆதித்யாவை நீ கல்யாணம் பண்ணிக்கனுங்குறது உங்க அப்பாவோட ஆசை. 

 

உன் அப்பா நிச்சயம் ஆதிய பத்தி விசாரிக்காமல் இந்த கல்யாண முடிவை எடுத்திருக்க மாட்டார். அதனால யாருக்காக இல்லாட்டியும் உன் அப்பாவுக்காக யோசிச்சு பாரு.

 

பண்டிதர் சொன்ன மாதிரி நீ எவ்ளோ முயற்சி எடுத்தாலும் இந்த கல்யாணத்துக்கு நிப்பாட்ட முடியாது. இது கடவுள் போட்ட முடிச்சு.

 

இன்னொரு முறை ஆதிய தப்பா பேசாத. எப்பவும் இந்த மாதிரி பொறுமையாக எடுத்துச் சொல்லிக்கிட்டு இருக்க மாட்டேன்."

 

 

 

 

நான் என் பால்கனியின் சோபாவில் அமர்ந்து பாட்டி கூறியவற்றை மீண்டுமொருமுறை எண்ணிப் பார்த்தேன்.

 

பாட்டி சொன்னது போல் நடப்பது நடக்கட்டும் என விட்டுவிடலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது என் அறைக்கதவு தட்டப்பட்டது.

 

எழுந்து பார்த்தபோது என் தந்தை அறை வாயிலில் நின்று கொண்டிருந்தார்.

 

"தியா தூங்கிட்டியா?"

 

"இல்லப்பா சும்மாதான் உட்கார்ந்து இருந்தேன்."

 

"உனக்கு தூக்கம் வரலைன்னா. அப்பாகூட கொஞ்சம் வரியா டா?" என கேட்க நானும் சரியென அவர் முன்னே நடக்க நான் அவரை பின்தொடர்ந்தேன்.

 

அவரின் ஆஃபீஸ் ரூமுக்கு அழைத்துச் சென்றவர் என்னை அவர் அருகில் அமர வைத்து ஒரு ஆல்பத்தை எடுத்து என்முன்னே வைத்தார்.

 

"இது என்னன்னு தெரியுமா?"

 

எனக்கு தெரியாது என்பது போல் தலையசைத்தேன்.

 

"திறந்து பாரும்மா."

 

நான் அதை திறந்தேன் என் முகத்தில் அழகான புன்னகை குடிபெயர்ந்தது.

 

நான் பிறந்த போது எடுத்த புகைப்படம்.

 

அதை அடுத்து என் அப்பா அவரின் கையின் பாதி அளவு கூட இல்லாத என்னை அணைத்து நெற்றியில் முத்தமிடும் அழகிய தருணம் புகைப்படமாக உருமாறி இருந்தது.

 

என் கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளி எட்டி பார்த்தது.

 

அதன் அடுத்த பக்கத்தில் என் தந்தையின் அருகில் தவழ முயற்சி செய்யும் புகைப்படமும் அதன் அருகில் தவழும் போது தோல்வியடைந்த புகைப்படமும் இருந்தது. நான் அதில் கீழே விழுந்து கிடக்க என் தந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்ததை அந்த நன்றாக புகைப்படம் காட்சி படுத்தியிருந்தது.

 

என் தந்தை எனக்கு நடக்க கற்றுக் கொடுத்தது. சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தது. என் சொப்பு சாமான்களுடன் விளையாடியது.

எழுத கற்றுக் கொடுத்தது.

 

நான் என் பிஞ்சு விரல்களால் அவருக்கு ஊட்டி விட்டது. அவர் எனக்கு நிலா சோறு ஊட்டியது. 

 

என் தந்தைக்கு சடை போட்டு பொட்டு இட்டது.  என அனைத்தும் புகைப்படமாக மாறி இருந்தது.

 

புகைப்படங்களும் பார்த்ததும் மனதுக்குள் ஏதோ

இனம் புரியாத உணர்வு எழுந்ததை

என்னால் உணர முடிந்தது. கலங்கிய கண்களோடு என் தந்தையை கண்டேன். அந்த அழகான தருணங்களை என் தந்தையுடன் செலவிட்ட அந்த இனிமையான நினைவுகளை என்னால் என்றுமே மறக்க இயலாதது.

 


 
Posted : July 8, 2026 1:06 pm

Scroll to Top