மதுர ஜில்லா... மச்சானே!-40
அத்தியாயம்-40
மருத்துவமனையின் வெள்ளை சுவர்கள் அந்த நொடியின் பதற்றத்தை இன்னும் அதிகப்படுத்திக் கொண்டிருந்தன.
வாசலுக்கு வெளியே நின்ற இனியன், இரண்டு கைகளையும் இறுக முடிச்சுக் கொண்டு முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தான்.
அவன் முகத்தில் கோபம், குழப்பம், பயம் மூன்றும் ஒன்றாக கலந்திருந்தது.
'ஏன் இவ இப்படி பண்ணிட்டா?' என்ற கேள்வி மட்டும் அவன் மனதை குடைந்து கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் அவசரமாக அவன் வீட்டின் மற்றொரு கார் மருத்துவமனை வாசலில் வந்து நின்றன.
வேல்விழி, அருளாளன், இளையமதி, கல்யாணசுந்தரம், எழிலரசன், நிலானி என அனைவரும் பதற்றமாக இறங்கி ஓடிவந்தனர்.
"இனியா... என்னடா ஆச்சு? மதுரா எங்கே?" என்று வேல்விழி மூச்சு வாங்கக் கேட்டார்.
இனியன் பதில் சொல்லாமல் சிகிச்சை அறையை மட்டும் காட்டினான்.
"எம் பொண்ண என்னடா பண்ணின?" என்று இளையமதி முதல் முறையாக மட்டு மரியாதையின்றி கேட்டார்.
கல்யாண சுந்தரம் "எங்குழந்தையை சாகடிச்சிட்டியா. சொல்லு டா சொல்லு. சொக்க தங்கம் மாதிரி பையன் இருந்தும், உனக்கு கட்டிக்கொடுத்தோம் பாரு. எங்கடா என்மக" என்று உலுக்கினார்.
இனியன் தன் மாமானாரின் கையை தட்டிவிட்டு, "நான் ஒன்னும் பண்ணலை. அவ தான் ஏதோ பண்ணிருக்கா. உங்க பொண்ணு தான் கர்ப்பத்தை அழிச்சிருக்கா" என்று தட்டிவிட்டான்.
வேல்விழியோ "என்னடா சொல்லற? கர்ப்பமா இருந்தாளா?" என்று கேட்க, "எனக்கும் தெரியாதும்மா... அவ கிச்சன்ல விழுந்து கிடக்க இங்க கொண்டு வந்தேன். டாக்டர் தான் அபார்ஷன் ஆகியதா சொன்னாங்க.'' என்று கூறவும், மருத்துவர் வெளியே வந்தார்.
"பேஷண்டுக்கு இப்போது ஆபத்து இல்லை. ஆனால்..." என்று அவர் தயங்கினார்.
"டாக்டர்... என் பொண்ணுக்கு என்னாச்சு?" என்று இளையமதி கண்ணீருடன் முன்னேறினார்.
"கரு கலைந்திருக்கிறது. அவங்க கரு ஸ்ட்ராங்க தான் இருந்திருக்கு. ஆனாலும் எப்படி கலைந்ததுனு தெரியலை. என்னவோ இயற்கையாக ஏற்பட்டதா, இல்லையா. பேஷண்ட் கண் முழிக்கவும் சொல்லறேன்" சில விஷயங்களை நோயாளியிடம் பேசித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது போல காத்திருக்க கூறினார்.
அந்த பதிலே அங்கிருந்த அனைவரையும் அமைதியாக்கியது.
இனியன் மட்டும் திடீரென்று சுவரை குத்தினான்.
"என் குழந்தை. அவ வேண்டுமின்னே அழிச்சிருக்கா அம்மா. அவ ரூம்ல இருந்தப்ப அடிக்கடி ஏதாவது திண்பா. பர்பி லட்டுனு. அப்ப எல்லாம் எனக்கு ஸ்டக் ஆகலை. வாரம் வாரம் பப்பாளி வேற... இப்ப என் குழந்தையை அழிக்க தான் அவ பிளான் பண்ணி சாப்பிட்டு இருக்கா." என்று உதடுகள் நடுங்கின.
"அபாண்டமா பழி சொல்லாத இனியா.. அவளுக்கு எள்ளுல எது செய்தாலும் பிடிக்காது. அதே போல பப்பாளி கூட சீண்ட மாட்டா. ஏதாவது கோவிலுக்கு நல்ல நாள்னா வீட்டுக்கு தூரம் ஆகற நாளு முன்கூட்டியே வரணும்னு நான் தான் பப்பாளி சாப்பிட வற்புறுத்துவேன். அதுவே திங்காம ஓடுவா." என்று கூறினார்.
"ஓ... அவளுக்கு பிடிக்காததை செய்து சாப்பிட மாட்டாளா? நீங்க நம்பலைன்னாலும் உங்க பொண்ணு அதை தான் செய்து சாப்பிட்டுருக்கா. என் குழந்தையை பெத்தெடுக்க கூடாதுனு" என்று கத்த, யாராலும் அவனை சமாதானப்படுத்த முடியவில்லை.
இளையமதிக்கோ மதுரவாணி செய்திருப்பாளோ என்று நிலானியை கவனித்தாள். வேல்விழியுமே, "சமையல் முழுக்க அவ தான். நான் தூங்கறச்ச அவ அடிக்கடி ஏதோ சமையக்கட்டுல உருட்டி செய்வா." என்று அவருமே கையை பிசைந்தார்.
அருளாளனோ ''ஆமாடி.. ஒருத்தி வீட்ல என்ன செய்யறானு தெரியாம தூங்கு. இப்ப வீட்டோட வாரிசை அழிச்சிட்டு நிற்கறா" என்று திட்டினார்.
இதற்கு மேல் கல்யாண சுந்தரமும் இளையமதியும் மகளின் செய்கையால் வாயடைத்து நின்றனர். மதுரவாணி கண் திறக்க காத்திருந்தனர்
மதியம் தாண்டி, நேரம் கழித்து மதுரா கண் திறந்தாள்.
மருத்துவர் மெதுவாக அருகில் வந்து, "இப்போது உடம்பு எப்படி இருக்கு?" என்று கேட்டார்.
மதுரா மெதுவாக, ''இப்ப கொஞ்சம் பரவாயில்லை டாக்டர்" என்றாள்.
டாக்டரோ மெதுவாக அவளிடம் கைப்பிடித்து, "உனக்கு என்ன நடந்திருக்கிறது என்பது தெரியுமா?" என்று கேட்க, அவள் மெதுவாக கண்களை மூடி திறந்து தலையசைத்தாள்.
மருத்துவர் சில நொடிகள் அமைதியாக இருந்தார்.
"கர்ப்பமாக இருக்கும் காலத்தில் சில உணவுகளைத் தவிர்க்கச் சொல்வார்கள். நீ ஏதாவது கவனிக்காமல் சாப்பிட்டியா? உன் புருஷன் ஏதோ நீ சாப்பிட்டதா சொன்னார்?" என்றார். மதுரா அமைதியாக அவரைப் பார்த்தாள்.
"சில நாட்களாக... சில விஷயங்களை தவிர்க்க, நான் உணவு பண்டத்தை, பழத்தை, தெரிந்தே தான் சாப்பிட்டேன்." என்று மெதுவாக சொன்னாள்.
அறைக்குள் இருந்த அனைவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
"ஏன்?" என்ற மருத்துவரின் கேள்வி அமைதியை கிழித்தது.
மதுராவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
"ஒரு பெண்ணோட உடலை வலுக்கட்டாயமா கைப்பற்ற முடியும்... ஆனா அவ மனசை அடைய முடியாது டாக்டர்." என்று கூற அறை முழுவதும் அமைதி.
"ஒரு குழந்தை இந்த உலகத்துக்கு வரணும்னா... அதைக் காத்து வாழ வைக்கணும்னு அம்மாவும் அப்பாவும் மனசார நினைக்கணும். நான் தினமும் அழற வாழ்க்கைக்குள்ள இன்னொரு உயிரை கூட்டிக்கொண்டு வர எனக்கு மனசு வரலை." என்றவளை அடிக்கும் வெறியுடன் இனியன் திடீரென்று முன்னே வந்தான்.
"அதுக்காக. என் குழந்தையை அழிச்சியா?" என்றான்.
அவனைப் பார்த்த மதுராவின் கண்களில் பயம் இல்லை. சோர்வு மட்டும் இருந்தது.
"நான் என்னோட வாழ்க்கையைப் பற்றி முடிவு எடுத்தேன்." என்றாள் மதுரா.
"அது... என் குழந்தை..." என்று இனியன் கத்தினான்.
"அது எப்ப உங்க குழந்தையாச்சு? உங்களுக்கு பழிவாங்க நான் ஒருத்தி தேவை. கல்யாணம் செய்து பழிவாங்கினிங்க. என் மேல இல்லாத அக்கறை... இதுல குழந்தை பத்தி என்ன புதுசா அக்கறை. அதுவும் பூமில உருவம் கூட வராத குழந்தை மேல." என்று மதுரா எதிர்கேள்வி கேட்டாள்.
அந்த ஒரு கேள்வி இனியனின் கோபத்தை வெடிக்க வைத்தது.
அவன் முன்னேற, "ப்ளீஸ்.. இது ஹாஸ்பிடல்!" என்று மருத்துவர் கடுமையாக அதட்டினார்.
செவிலியர்கள் விரைந்து வந்து இனியனைப் பின்னால் அழைத்துச் சென்றனர்.
வேல்விழி நின்ற இடத்திலேயே கதறினார். அருளாளன் கண்களை மூடிக்கொண்டார்.
இளையமதி முகத்தை மூடி அழுதார். கல்யாணசுந்தரம் தலைகுனிந்து நின்றார்.
யாரையும் முழுமையாகக் குறை சொல்ல முடியாத நிலை.
யாரையும் முழுமையாக நியாயப்படுத்தவும் முடியாத நிலை. அறை முழுவதும் கனத்த அமைதி மட்டுமே நிரம்பியது.
டாக்டரோ "முதல்ல இந்த பேஷண்டை நம்ம மனோதத்துவ டாக்டரிடம் பேச வையுங்க. ஏதோ ஸ்ட்ரஸ்ல வீட்டு சண்டையில இருக்காங்க. அபார்ஷன் ஆனதுக்கு தண்டனை கூட கிடைக்கும் தெரியுமா. நீ என்னன்னா கூலா சொல்லறா.
நர்ஸ்... பேஷண்ட் சொந்தக்காரங்களை எல்லாம் வெளியே நிறுத்துங்க. அந்த பொண்ணு கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்." என்று கடிந்து சென்றார்.
நர்ஸ் மதுரா இருந்த அறையில் யாரையும் நிறுத்தவில்லை. வெளியே நிற்க கூறி கதவை தாழிட்டார்.
---
மறுபுறம் கல்யாண வீட்டில் அகிலன் காவ்யா திருமணத்தில் உறவினர்களின் சிரிப்பு இன்னும் அடங்கவில்லை.
திருமணப் புகைப்படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எடுக்கப்பட்டு முடிந்திருந்தன.
சாப்பாட்டு பந்தியில் உறவினர்கள் எல்லோரும் அமர்ந்திருந்தனர்.
"மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் ஒரே இலையில இனிப்பு சாப்பிடணும்..." என்று மீனாட்சி வீட்டு பக்கம் உள்ள பெரியவர்கள் சொல்ல,
அகிலன் சங்கடமாக காவ்யாவைப் பார்த்தான்.
"என்னங்க... இதுக்கும் பயமா?" என்று காவ்யா குறும்பாகக் கேட்டாள். சுற்றியிருந்தவர்கள் சிரித்தனர். அவள் சிறிய லட்டுத் துண்டை உடைத்து அவன் பக்கம் நீட்டினாள். அகிலன் சங்கடத்துடன் வாங்கினான்.
அவன் தயக்கத்தை ரசித்த காவ்யா சிரித்தபடி தன் பங்கையும் சாப்பிட்டாள்.
"இப்போ தான் ஜோடி மாதிரி இருக்காங்க..." என்று ஒரு பாட்டி சொல்ல, பரிமாறும் இடம் முழுவதும் மீண்டும் சிரிப்பு பரவியது.
மதியத்தைத் தாண்டி அனைவரும் அகிலன் வீட்டிற்கு வந்தனர். மீனாட்சி ஆலம் கரைசல் சுற்றி ஆரத்தி எடுத்தார்.
"வலது காலை எடுத்து வைம்மா..." என்றார். காவ்யாவோ "அத்த.. நான் ஏற்கனவே இந்த வீட்டுக்கு வந்தப்ப எந்த காலை வச்சேன்னு தெரியலை." என்று கவலையாக கேட்க, "மருமகளா வர்றப்ப வலது கால்மா" என்று கூற காவ்யாவோ "சூப்பர்" என்று மெதுவாக வீட்டுக்குள் நுழைந்தாள்.
பூஜையறையில் விளக்கேற்றி கைகளை கூப்பி வணங்க கூறவும், சொன்னதை செய்த சமத்து பொண்ணாக "இப்ப தான் நிம்மதியா இருக்கு." என்று ஆழமாய் மூச்சுவிட்டாள்.
அவளைப் பார்த்த தூரிகா மட்டும் இன்னும் அமைதியாகவே இருந்தாள்.
'இவ உண்மையாவே நல்லவளா.? இல்ல இன்னும் ஏதாவது நடக்கப் போகுதா.?' என்ற சந்தேகம் அவள் மனதில் முழுவதுமாக மறையவில்லை.
மறுபுறம் ராஜாராம், அமெரிக்காவில் இருந்து வந்திருந்த தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
"நான் இன்னும் கொஞ்ச நாள் இந்தியாவிலேயே இருக்கப் போறேன். காவ்யா இந்த வீட்டுல முழுசா செட்டில் ஆகுற வரைக்கும் அவளை விட்டுட்டு போக மனசு வரலை. அதுக்குள்ள இங்க தங்க தேவையான ஏற்பாடுகளையும் முடிச்சிடலாம்." என்றார்.
அதை கேட்ட அதியமான் புன்னகையுடன், "இது உங்க வீடு சம்பந்தி.. எவ்வளவு நாள் வேணும்னாலும் இங்க தங்கலாம்." என்றார்.
ராஜாராமின் கண்கள் நன்றியால் நனைந்தன.
ஒருபுறம் மகளுக்கு புதிய வாழ்க்கை மலர்ந்தது. மறுபுறம் ஒரு குடும்பம் சிதறிக் கொண்டிருந்தது.
இரண்டு வீடுகளிலும் இரண்டு விதமான சூழல்கள். ஆனால் இரண்டிலும் அந்த நாளின் நினைவு மட்டும் மறையாமல் நின்றது.
அதிலும் காவ்யாவுக்கு மறக்க முடியாத நாள். வேல்விழியோ காவ்யாவிடம் ''ஏம்மா... சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்ணலாமா? இல்லை... ஏதாவது மனசுல கஷ்டமாயிருந்தா கொஞ்ச நாள் தள்ளி வைக்கலாம். இல்லை... அகிலன் பிரெண்ட் ரகுவை முதலிரவு அறையை அலங்கரிக்க சொன்னப்ப, அகிலன் தான் அந்த பொண்ணு மனசுக்கு அவகாசம் தேவைப்படும். நீங்க பாட்டுக்கு எதுவும் வைக்க வேண்டாம்னு சொன்னாப்ள" என்று கேட்டார்.
"அதையேன் அத்த.. தள்ளி வச்சிக்கிட்டுக்கு. உங்க சாட்டிஸ்பெக்ஷனுக்கு எல்லாம் நடைமுறைப்படி செய்யுங்க. நான் அவரிடம் பேசிக்கறேன். மேபீ உங்க பையனுக்கு இன்னும் ஸ்பேஸ் தேவைப்படலாம்." என்று புன்னகையுடன் பதில் தந்தாள்.
அன்னை காவ்யாவிடம் முதலிரவு பற்றி பேச போகவும், பின்னால் சங்கடமாய் வந்து சேர்ந்தவனுக்கு காவ்யாவின் பேச்சில் ஆச்சரியம் கூடியது.
ரகுவோ "மச்சி... நான் எதுக்கோ அலங்காரம் பண்ணறேன். நீயும் தங்கச்சியும் பேசிக்கோங்கடா" என்று சீண்டினான்.
அகிலனோ நண்பன் கேலி செய்யவும் தயக்கத்துடன் திரும்ப, காவ்யாவின் பார்வைக்குள் விழுந்தான்.
அவளோ குறுகுறுவென பார்வையிட அகிலன் தான் படபடப்புடன் நழுவினான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
ஏதாவது குற்றம் குறைன்னா சொல்லுங்க. நான் இனியன்-மதுரா லைப், அகிலன் காவ்யா லைப்னு இரண்டா இங்கே நடப்பதை காட்டறேன்
மதுரா இனியனுக்கான தண்டனையா இதை பார்க்கறேன். ஆனா அவளுக்குமே கஷ்டம் தான். பட்... கதை இப்படி கொண்டு போறேன்.
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 40)
என்னைக் கேட்டால் ஒரு விதத்துல மதுரா செய்தது நியாயம், இன்னொரு விதத்துல மதுரா செய்தது அநியாயம்ன்னு சொல்வேன். ஆனால் இனியன் மாதிரி இருக்கிற செல்ஃபிஸ் ஆளுங்களுக்கு இப்படித்தானே தண்டனை கொடுக்க முடியும். ஆனால் அதுக்காக தன் மனசை கல்லாக்கிட்டு தன் வயித்துல வந்த முதல் குழந்தையை வலுக்கட்டாயமா அழிக்க வேண்டியதை நினைச்சால்...
அந்த குழந்தை என்ன பாவம் செய்துச்சுன்னு கேட்கத் தோணுது..? ஆனால், நல்லோர் ஒருவருக்காக பெய்யும் மழைப் போல, கெட்டவன்ங்களுக்காக நல்லவனும் சில நேரத்துல பாதிக்கப்படறதுல இருந்து தப்பிக்க முடியறதில்லை, தவிர்க்கவும் முடியறதில்லை.
சில பேர் செய்த பாவத்துக்கு இப்படித்தான் தண்டனை கொடுக்க வேண்டியதாயிருக்கு.
ஆனாலும் பாருங்களேன் அந்த கிறுக்கனுக்கு தன் தப்பு எதுவும் தெரியலை, புரியவும் இல்லை. மதுரா கிட்ட ஸ்டாம்ப் பேப்பர்ல கையெழுத்து வாங்கி அவளை வலுக்கட்டாயமா அடைவானாம், மனைவியாவும் ஏத்துக்கிட்ட மாட்டானாம். ஆனால் அவ வயித்துல வளர்ற குழந்தை மட்டும் வேணுமாம், அந்த குழந்தையையும் ஏத்துப்பானாம், அந்த குழந்தைக்கு அப்பன் ஆகுறதுலயும் எந்தவித கூச்ச நாச்சமும், ஈகோவும் இல்லையாம். இது எப்படி இருக்குன்னா... பன்னி கறி வேணாமாம், பன்னி சூப்பு மட்டும் வேணுமாம்.. அந்த மாதிரித்தான் இருக்குப் போங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 40)
என்னைக் கேட்டால் ஒரு விதத்துல மதுரா செய்தது நியாயம், இன்னொரு விதத்துல மதுரா செய்தது அநியாயம்ன்னு சொல்வேன். ஆனால் இனியன் மாதிரி இருக்கிற செல்ஃபிஸ் ஆளுங்களுக்கு இப்படித்தானே தண்டனை கொடுக்க முடியும். ஆனால் அதுக்காக தன் மனசை கல்லாக்கிட்டு தன் வயித்துல வந்த முதல் குழந்தையை வலுக்கட்டாயமா அழிக்க வேண்டியதை நினைச்சால்...
அந்த குழந்தை என்ன பாவம் செய்துச்சுன்னு கேட்கத் தோணுது..? ஆனால், நல்லோர் ஒருவருக்காக பெய்யும் மழைப் போல, கெட்டவன்ங்களுக்காக நல்லவனும் சில நேரத்துல பாதிக்கப்படறதுல இருந்து தப்பிக்க முடியறதில்லை, தவிர்க்கவும் முடியறதில்லை.
சில பேர் செய்த பாவத்துக்கு இப்படித்தான் தண்டனை கொடுக்க வேண்டியதாயிருக்கு.
ஆனாலும் பாருங்களேன் அந்த கிறுக்கனுக்கு தன் தப்பு எதுவும் தெரியலை, புரியவும் இல்லை. மதுரா கிட்ட ஸ்டாம்ப் பேப்பர்ல கையெழுத்து வாங்கி அவளை வலுக்கட்டாயமா அடைவானாம், மனைவியாவும் ஏத்துக்கிட்ட மாட்டானாம். ஆனால் அவ வயித்துல வளர்ற குழந்தை மட்டும் வேணுமாம், அந்த குழந்தையையும் ஏத்துப்பானாம், அந்த குழந்தைக்கு அப்பன் ஆகுறதுலயும் எந்தவித கூச்ச நாச்சமும், ஈகோவும் இல்லையாம். இது எப்படி இருக்குன்னா... பன்னி கறி வேணாமாம், பன்னி சூப்பு மட்டும் வேணுமாம்.. அந்த மாதிரித்தான் இருக்குப் போங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Omg. Madura took a bold decision. But eniyian deserve this punishment. Becz its a martial rape. So that child wont allow to born by her mom. Its a good decision. Eniyian and their family need this puishment. Akilan start love to.kavya. becz she is ready to accept u. Likewise u also ready to accept her. Story going very well. Sis. Very intresting sis.
Madhura oda mudivu ah entire ah seri num sollamudiyala athae pola thappu nu solla mudiyatha situation than oru uyir ah kollurathu pavam andha vagai la ava pannathu thappu than aana avaluku nadanthu ah aniyathuku iniya kedaicha punishment ah pakkum ithu seri than ah yen na Madhura ku nadatha thu marital rape than apadi pakkum ava pannathu thappu nu sollaa manasu vara la.
Thappu seiyuravaga la vida andha thappu ah seiya thoonduravaga than kutravalli num pothu inga illayamadhi kalyana sundaram arulaalan velvizhi iniyan ellarum madhura oda vishyathula kutravali ga than so ithula ava victim ah than pakka mudiyuthu
madhura seithathu crt than entha edathulaum avalukana space illa athuvum valukattayama ava kitta neruni ipo kolanthai vantha udane eppadi ethuka mudium athulaum inum pali vanga than mrg pani irukanu therinji pethuka mudiuma ithu kandipa iniyanukana punishment than venum but ithanala madhura neeum udambala kasta paduriye
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
39 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
22 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
