Forum

மதுர ஜில்லா... மச்ச...
 
Notifications
Clear all

மதுர ஜில்லா... மச்சானே!-41

8 Posts
8 Users
3 Reactions
74 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#197]

அத்தியாயம்-41

மாலை சூரியன் மறைந்து, வீட்டின் முற்றம் முழுவதும் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.
விருந்தினர்கள் மெதுவாக கிளம்பிக் கொண்டிருக்க, மீனாட்சி காவ்யாவை அறைக்குள் அழைத்துச் சென்றார்.
"தூரிகா... இங்க வா காவ்யாவுக்கு சேலை கட்டி விடு. அப்பறம் தலைவாறி கொஞ்சம், பூவெல்லாம் அழகா வைச்சு அனுப்புடி." என்றார்.‌

தூரிகாவோ முகத்தைச் சுளித்தபடி வந்தாள்.

"அம்மா... அவ வந்ததிலிருந்து அவளுக்கு சேலை கட்டுற வேலையே எனக்கு தர்ற. இப்போவும் நானா?" என்று முனங்கிட, ''அவ இவனு சொன்ன பல்லை தட்டிடுவேன். அண்ணி.. உங்கண்ணன் அகிலன் தாலி கட்டியாச்சு. நினைவிருக்கட்டும்" என்று மீனாட்சியின் வார்த்தைக்கும் பார்வைக்கும் அமைதியாகி காவ்யா இருந்த இட்ததிற்கு வந்து, காவ்யாவை அலங்கரிக்கத் தொடங்கினாள்.

காவ்யா சிரித்தபடி அசையாமல் அமர்ந்திருந்தாள்.

முதலில் தலைவாற ஆரம்பித்தாள். "இவ்வளவு பூ வேணுமா?" என்று கேட்டாள்.
"என்கிட்ட கேட்காதீங்க. எங்கம்மாவிடம் கேளுங்க." என்று தூரிகா முகம் சுளித்தபடியே பதிலளித்தாள்.

சில நிமிடங்களில் அடுத்து சேலை வேறு கட்டிவிட்டாள். ஷோ கேஸ் பொம்மை போல பாவாடையும் பின் பக்கம் கொக்கி வைத்த ப்ளவுஸும் அணிந்து நிற்க, 'மதுரா அண்ணி என்னடானா சேலை கட்டறப்ப வெளிய போடினு என்னை விரட்டுச்சு. இது என்னடானா பொம்மை மாதிரி கையை விரிச்சுட்டு சேலை கட்ட சொல்லுது. இதுல ஜாக்கெட் கொக்கி கூட நான் தான் போடணும்' என்று மனதில் முனங்கி ஆங்காங்கே ஊக்கை குத்தி முடித்து சேலை கட்டிவிட்டு நிமிர்ந்தாள்.
சேலை கட்டியாச்சு, தலைவாறியாச்சு, அலங்காரமும் முடிந்தது.  "ஆச்சு." என்று மட்டும் சொல்லிவிட்டு காவ்யாவைப் பார்க்காமலேயே வெளியேறினாள்.

மீனாட்சி உள்ளே வந்து மருமகளை ரசித்துப் பார்த்தார்.
"என் கண்ணே பட்டுடும் போல இருக்கே." என்று திருஷ்டி கழித்தவர், வெள்ளி டம்ளரில் பாலை அவளிடம் கொடுத்தார்.

"பயப்படாம போம்மா. எதுவா இருந்தாலும் மெதுவா பேசிக்கோ." என்று கூறியே வழியனுப்ப, காவ்யா புன்னகையுடன் தலையசைத்தாள்.

அதியமான் கூட மகன் அறைக்குள் செல்வதற்கு முன் "அந்தப் பொண்ணுக்கும் உன்‌நிலைமை தான் பார்த்து, அவ மனசு புரிஞ்சு நடந்துக்கோ. அதுக்கு மேல நான் எதுவும் சொல்ல மாட்டேன்." என்று கூறியிருக்க அகிலன் அமைதியாகத் தலையசைத்திருந்தான்.

அறைக்குள் தனியாக அமர்ந்தவனுக்கு, அது அவனுடைய அறையாகவே தெரியவில்லை. மல்லிகைப்பூ மணம், புதிய மெத்தை விரிப்புகள். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டில். ஒவ்வொன்றும் புதிதாகத் தோன்றியது.

மெதுவாக கதவு திறந்ததும்,
பால் டம்ளருடன் காவ்யா உள்ளே வந்தாள். கருநீல நிற பட்டுப்புடவை, தலைமுழுவதும் மல்லிகை, முகம் முழுக்க மென்மையான அலங்காரம். ஒரு நொடி அவளைப் பார்த்த அகிலன் சட்டென்று எழுந்து நின்றான்.

அவளை வரவேற்கும் விதமாக ஓரமாக நின்றான். காவ்யா அவனைப் பார்த்து சிரித்தாள். "பொண்டாட்டிக்கு இவ்வளவு மரியாதையா?" என்று கேட்டவள் பால் டம்ளரை நீட்டினாள். அகிலன் வாங்கி மேசையில் வைத்தான்.

"குடிக்கலையா?" என்று கேட்க,
"கொஞ்சம் நேரம் ஆகட்டும்." என்றான் சலிப்பாக. அகிலனுக்கு மனம் இலகுவாகயில்லை.

"சரி." ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாள். பிறகு திடீரென்று,
"சரி... ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்கு வரட்டுமா?" என்றாள்.

அகிலன் விழிகளை பெரிதாக்கினான். "மேட்டரா?" காவ்யாவோ சிரிப்பை அடக்கிக்கொண்டு, "இந்த தலையில எவ்வளவோ பூவும் கிளிப்பும், ஹேர்பின்னும் குத்தி வைச்சிருக்காங்க. ரொம்ப பாரமா இருக்கு. அதையெல்லாம் கொஞ்சம் எடுத்து விடுறீங்களா? நான் எப்பவும் ப்ரீ ஹேர் ஸ்டெயில். இல்லைன்னா ஒரு சின்ன க்ளிப் தான். சம்டைம் போனிடெயில். இந்த ஹெர் ஸ்டெயில் பின்னி பூ ரகரகமா வச்சி, அதை தலையில நிற்க ஹேர்பின்னு நிறைய இருக்கு. ப்ளிஸ் ரிமூவ் இட்.. ஒரு பிரெண்ட்லி ஹெல்ப் தான்" என்றாள்.‌

அகிலன் அவள் கூற வருவது புரிய வேறு வழியின்றி, தலை அலங்காரத்தை நீக்க உதவினான்.‌

''பிடிக்கலைன்னா அலங்காரம் செய்தப்பவே மறுத்திருக்கலாமே" என்றான்.

"அதெப்படி உங்க அம்மா ஆசையா அலங்காரம் செய்ய சொன்னாங்க. அதுவும் அலங்காரம் எல்லாம் உங்க தங்கை தூரிகா தான் உதவியது.
சரி நம்மளை கண்டாலே முகத்தை அஷ்டகோணலா மாத்தற ஜீவன். எனக்கு வேலை செய்யட்டும்னு ஹாயா உட்கார்ந்தேன்." என்றதும் அகிலன் அவளை ஏறிட, "அது வந்து.. வேலைன்னா வேலை இல்லை. அப்படியாவது பழக ட்ரை பண்ணிடலாமேனு.‌" என்று சமாளித்தாள்.

அகிலனோ தங்கை இவளுக்காக அலங்காரம் செய்து சேலை கட்டி வேலையாக பாவித்து விட்டு நின்ற காவ்யாவை கண்டு புன்னகை முகமாக மாறினான்.

காவ்யா நாற்காலியில் அமர்ந்தாள். அவன் கவனமாக ஒவ்வொரு பூவையும், ஒவ்வொரு ஹேர்பின்னையும் எடுக்க ஆரம்பித்தான். "இவ்வளவு ஹேர்பின்னா?" என்று சலித்துவிடும் அளவிற்கு இருந்தது.

"நானும் அதைத்தான் யோசிச்சேன். எடுக்க எடுக்க புதையல் மாதிரி வருது." என்று அகிலன் சொல்ல, காவ்யா சிரித்தாள்.

ஒரு பின் முடியில் பூவோடு சிக்கிக் கொண்டது. "ஆங் வலிக்குதுங்க..." என்று லேசாக கத்தினாள்.

"அச்சோ.. மெதுவா கத்துங்க. வெளிய கேட்டுட போகுது. நான் ஏதோ உங்களை." என்றவன் வார்த்தையை துண்டித்து கொண்டான். வார்த்தை வேறு விதமாக சென்றால் முதலுக்கே மோசமென நிறுத்தினான்.‌

பூவையும் ஹேர்பின்னையும் எடுப்பதில் கவனம் செலுத்தினான்.‌ ஆனாலும் காவ்யாவுக்கு அர்த்தம் புரிந்திட நமுட்டு புன்னகை உதிர்த்தாள்.

கூந்தல் முழுவதும் சுதந்திரமாக விரிந்தது. காவ்யா தலையை ஆட்டினாள். "அப்பாடா... இப்பதான் ரிலாக்ஸா இருக்கு." என்று நிம்மதியாக சிரித்தாள்.

அந்த சிரிப்பைப் பார்த்த அகிலனின் பதற்றமும் கொஞ்சம் குறைந்தது.

"அடுத்து சேரியை கழட்டி விடுங்க" என்றதும் அகிலன் திடுக்கிட்டு‌ நிற்க, "என்ன‌ பார்க்கறிங்க. உங்க தங்கச்சி கண்ட இடத்துல பின் குத்தி விட்டாங்க. எங்க எதுனு தெரியலை. புது சேலை நான் பாட்டுக்கு அவசரப்பட்டு ஏடாகூடமா கழட்ட ட்ரை பண்ணி, ஏதாவது கிழிச்சி வச்சிட்டா அதான். ஹெல்ப் கேட்கறேன்." என்றதும் அகிலன் சற்று தயங்கினான்.‌

"இப்பல்லாம் கேர்ள்ஸுக்கு பிரைடல் சேரி கட்டி விடறதே பாய்ஸ் தாங்க. அப்படி பார்த்தா நீங்க எனக்கு இந்த உதவி பண்ணறதுல தயங்க வேண்டாம்" என்றாள்‌.

  அப்படியிருந்தும் தயக்கத்துடன் 'அப்ப எந்த டிரஸ் மாத்திப்பிங்க?" என்று தெரியாமல் கேட்க, "எனக்கு இங்க போடறதுக்கு சில சேரி, சுடிதார், நைட் சூட் வாங்கியது எல்லாம் அப்பவே வந்து இங்க வச்சிட்டதா அத்த சொன்னாங்க. சோ நைட் சூட் இங்க தான் இருக்கும்" என்று பீரோ திறக்க, "பாருங்க.. என்னோட டிரஸ் இங்க இருக்கு. இந்த நைட் சூட் போட்டுப்பேன்.‌ உங்க ரூம்ல என்ன மாற்றம் இருக்குன்னே உங்களுக்கு தெரியலை" என்று நைசாக பேச, அகிலனோ புடவை முந்தானையில் கை வைக்க சென்றான்.‌

அகிலன் கைகள் நடுங்கியது‌. ''இதெல்லாம் வேண்டாம்னு அப்பவே சொல்லி இருக்கலாம்ங்க. இப்ப சங்கடமா இருக்குல. அம்மா வற்புருத்தியிருக்க மாட்டாங்க" என்று கூற, "அட.. நான் சேரி கட்டியதே இல்லை. அவங்க கட்டி விட்டா ஜாலியா கட்டிக்கிட்டேன்
நாலைந்து போட்டோ எடுத்து போன்ல சேவ் பண்ணிட்டேன்.
இது போதாதா. இனி தேவையில்லை அதனால மாத்திக்கறேன்.‌ இன்னிக்கு ஸ்பெஷல்-டேனு சேலை கட்டிக்கறியானு கேட்டா நோ சொல்லவா முடியுமா?" என்றாள்.

  அகிலனும் "வாஸ்தவம் தான்." என்று கூறியவன் 'அதுக்கு என்னையே கழட்ட சொன்னா எப்படி?' என்று மனதிற்குள் கூறியபடி முந்தானை நீக்கிட்டு மூச்சடைக்க நின்றான்.‌

காவ்யா முன் நெருக்கமாக வந்து சுத்தி இடுப்பில் கை வைக்க சென்றவன், அவளுக்கு அசௌகரியம் ஆகுமென ஏறிட, காவ்யாவோ "வாட். முந்தானையிலயே மூனு பின் இருந்தது." என்றாள்.
முந்தானை சிறிதாக மடித்து தொங்கும் இடத்தில் ஒன்று, தோளில் ஒன்று. தோளில் சைடாக ஒரு பீளிட் மட்டும், வேறு குத்தி வைத்திருந்தாள் தூரிகா.‌
   இதில் ஜாக்கெட்டும் சேலையும் வயிறும், இடையும் தெரியாத வகையில் ஒன்று குத்தியிருக்க அதை எடுத்து முடித்தான்.

அகிலனுக்கு வயிற்றுக்கு கீழே நிச்சயம் பின் குத்தி இருக்க வாய்ப்புண்டு என்று அணுமானித்து, கையை அங்கு கொண்டு சென்றான். அவனது கை கூடுதலாக நடுங்கியது.

காவ்யாவுக்கு சிறு புன்னகை கூட உதட்டில் வந்து செல்ல. அகிலனின் நெற்றியில் வேர்வை மழை சொட்டியது. இத்தனைக்கும் ஏசி காற்று சில்லென்று தான் அறையை குளிர வைத்திருந்தது.

கண்ணை மூடி பட்டும் படாமலும் ஊக்கை எடுக்க, அதில் இரண்டு குத்தி வைப்பதாக காட்டியது‌.
அந்த ஊக்கையும் கழட்டி வைத்து நிமிர, முன்னழகில் மயக்கப்படுத்தும் விதமாக நின்றியிருந்தாள் காவ்யா.
காவ்யாவோ அவன்‌ பார்வை நிமிரவும் தான், கையை வைத்து மறைக்க முயன்றாள். அப்படி செய்தாலும் தவறாக போகும் என்று ஒரு கை மட்டும் நெஞ்சில் அணைத்து நின்றாள்.

அவளை சுற்றி வந்து மீண்டும் ஒரு‌ ஊக்கை இடையிலிருந்து எடுத்து விட்டு நிமிர்ந்தான்.

மொத்தம் ஏழு ஊக்கை எடுத்து பால் டம்ளர் அருகே வைத்ததும் நைட் சூட் மாத்திக்க சென்றவள் கையை முதுகுக்கு பின் தடவினாள்.
"ஹலோ இதுவும் கழட்ட உதவறிங்களா? இந்த ப்ளவுஸ்ல பேக்-ல கொக்கி இருக்கு." என்றதும் அகிலனோ அப்பொழுது தான் மூச்சை வெளியிட்டவனுக்கு மீண்டுமா? என்று மலைக்க தோன்றியது.

பிறகு வேறு வழியில்லை. ஜாக்கெட் வைக்கும் போதே மாடல் மாடலாக அவளுக்கு தெரிந்த விதமாக வைத்து நின்றாள்.

இப்படி இனி வைக்க வேண்டாமென பொறுமையாக கூறிடலாமென, நடுக்கத்துடன் கொக்கியை ஒவ்வொன்றாக கழட்டினான். மாட்டை தொட்டு அடக்கிய வீரனுக்கு சாதாரண ஜாக்கெட் கொக்கி நடுக்கத்தை தந்துவிட்டது.

காவ்யாவின் பால்வண்ண மேனி, இவனது மாநிற நிறத்துக்கும் அவளது நிறத்துக்கும் சற்று வித்தியாசத்தை எடுத்து காட்டியது முதுகு.

'தான் கொஞ்சம் இனியனை விட கருப்புனு இளையமதி அத்த சொல்வாங்களே. இவங்க(காவ்யா) நிறத்துக்கு இன்னும் கருப்பா தெரியறேன்னோ? இதெல்லாம் காவ்யாவுக்கு மைனஸா தோணலையா?' என்று யோசிக்க, "அப்பாடா தேங்க்ஸ். ஏதோ டைட்டா இறுக பிடுச்சி மூச்சு முட்டிடுச்சு. " என்றவள், அவசரமாக, நைட் சூட் எடுத்து அணிய இடம் பார்த்தாள்.

பாத்ரூம் தவிர வேறு வழியில்லை என்றதால் அங்கே சென்று உடை மாற்றினாள்.

அகிலனோ மோகினி பேய் பிடித்திருக்க, வேப்பிலை அடிக்கும் நிலையில் நின்றியிருந்தான்.

மடமடவென இரு நொடியில் உடை களைந்து மாற்றிவிட்டு, "ஒகே... தேங்க்ஸ்.. அப்ப.. பெட்லயே தூங்கலாமா? உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லையே?" என்று காவ்யா வந்து கேட்டதும் அகிலன் சூதாரித்து இல்லையென தலையாட்டினான்.‌

"அட.. ம்ம்ம் இன்னிக்கு எடுத்த போட்டோஸ் எல்லாம் பார்க்கலாம் வாங்க" என்று அகிலன் கையை பிடித்து பக்கத்துல உட்கார வைக்க அகிலன் தடுமாறினான்.

கால்யா மீது மணக்கும் பெர்ஃப்யூம் வாசம், இயற்கையாகவே பெண்கள் மீது வீசும் நறுமணம். இதில் மல்லிப்பூ ரோஜாப்பூ வாசம் வேற அறையில் கமக்க, சுவாசமே தடையிடும் வகையில் இருந்தான்.

காவ்யாவிடமிருந்து கையை மட்டும் உருவினான். காவ்யா முதலில் தன் கையோடு இணைத்து இருக்க, அகிலன் உருவவும், மென்னகையோட புரிந்துகொண்டு இறுக பற்றி கையை தளர விட்டாள்.

அகிலன் அவன் நெஞ்சில் கையை கட்டிக்கொண்டு பார்க்க, காவ்யாவோ ஒவ்வொரு புகைப்படமாக காட்டினாள்.

அகிலன் காவ்யா மாறி மாறி சில சொந்த பந்தம், நட்புகள் என்று இப்படி நிறைய புகைப்படம் இருந்து. ராஜாராம் தான் எடுத்திருப்பது தெரிந்தது.

அந்த நேரம் ஒரு புகைப்படத்தில் அகிலனின் பெரிப்பா அருளாளன், பெரிம்மா வேல்விழி, தம்பி எழிலரசன், அத்தை இளையமதி, மாமா கல்யாணசுந்தரம், நிலானி அவர்களோடு தங்கள் குடும்பம் சகிதம் அதிலிருக்க, காவ்யா போனை வாங்கி சந்தோஷமா பார்த்தான்.

"என்னாச்சு?" என்று காவ்யா கேட்க, "மதுரா இனியன் இரண்டு பேர் தான் மிஸ்ஸிங். அவங்களும் இந்த போட்டோவுல இருந்தா. குடும்பம் முழுவதுமா போட்டோ எடுத்தது போல ஆகியிருக்கும்" என்று சொல்ல, காவ்யாவோ, "அதெப்படி அவங்க வருவாங்க? இனியன் எல்லாம் கூப்பிட்டா வர்ற ஆளே இல்லை. உங்களிடம் ரொம்ப ஈகோ பார்க்கறவன்.'' என்றாள்.

அகிலனோ "மதுரா அப்படி இல்லை.'" என்றாள்.

காவ்யா அகிலன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து 'நாம தூங்குவோம் குட்நைட்' என்றாள்.
'ம்ம் இன்னிக்கு அலைச்சல் இருக்கும்' என்று அகிலனும் கூறிவிட்டு படுத்துக் கொண்டான்.

காவ்யாவோ 'என்னவோ அவர் அவர் குடும்பமா போட்டோஸ் எடுத்ததை சந்தோஷமா சொல்லி, இனியனை மதுராவை மிஸ் பண்ணியதா சொன்னா. இனியனுக்கு ஈகோ அதுயிதுனு சொல்லிட்டேன். ஏதாவது நினைச்சிருப்பாரா? தாலி கட்டிய பின்னும் இனியனை பத்தி எனக்கு தெரியும் என்ற பேச்சு நினைச்சிக்கிட்டா?' என்று வருந்தினாள்.

அகிலனுமே, ''பச்... மதுராவை ஏன்‌ பெருமையா பேசினேன். காவ்யா தப்பா எடுத்துக்க போறாங்க. இனி கொஞ்சம் பார்த்து பேசணும்' என்று‌ நினைத்தான்.‌

இருவருமே மனதில் முதலடியை பார்த்து பார்த்து செதுக்கி வைத்தனர். அசதியில் நேரம் நகர உறங்கிவிட்டனர்.‌

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்


 
Posted : July 22, 2026 6:27 am
(@kothaihari)
Posts: 54
Trusted Member
 

Nice


 
Posted : July 22, 2026 6:40 am
(@dharsinipriya)
Posts: 59
Trusted Member
 

Super sis nice epi 👍 👌 😍 first night la evlo alaparai pandraley😂 kandipa sagajama aga than renduperum eppdi pesi pazhagita nalla pogum parpom 🤔 🧐 


 
Posted : July 22, 2026 7:02 am
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 41)

அய்யய்யோ..! என்ன இவ... எடுத்தவுடனே ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்கு வரவான்னு கேட்குறா...
அகிலா உஷாராகிக்கோ.

நிசம் தான், மாட்டை கூட அடக்கி காட்டிடலாம், ஆனா மங்கையை அடக்குறது தான் ரொம்ப குஷ்டம்ப்பா., அகிலா நிதானமே பிராதானம்.

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : July 22, 2026 8:24 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 49
Trusted Member
 

Kaviya ne pesurathu la yae akilan jerk aagiduran rendu perum porumai ah pesi avanga life ah start panna seri 


 
Posted : July 22, 2026 9:08 am
(@guna-sundari)
Posts: 56
Trusted Member
 

Omg akilan u have completed tuff task with very careful. Both are in same mindset. Soon they started to love. Let's wait for their love. Very intresting sis.

 


 
Posted : July 22, 2026 9:22 am
Kalidevi reacted
(@kalidevi)
Posts: 56
Trusted Member
 

very nice epi kavya bayangara speed polaye but namma veerar konjam thayakam iruku konjam konjama sari pannu edutha edupulaye nadunga vaikiriye . madhura eppadi iruka


 
Posted : July 22, 2026 10:35 am
(@subhakumar85)
Posts: 44
Eminent Member
 

Nalla pannitinga kavya ma


 
Posted : July 22, 2026 12:07 pm

Scroll to Top