மதுர ஜில்லா... மச்சானே!-39
அத்தியாயம்-39
அகிலன் கட்டிய மாங்கல்யம் காவ்யாவின் கழுத்தில் மஞ்சள் கயிற்றோடு மின்னிக் கொண்டிருந்தது.
மூன்றாவது முடிச்சை போட்டு விட்ட தூரிகா ஒரு நொடி காவ்யாவின் முகத்தைப் பார்த்தாள்.
'இவ... எழுந்து போயிடுவாள்னு நினைச்சேன்... கடைசி வரைக்கும் அமைதியா உட்கார்ந்தே இருக்காளே.'
அவளால் அந்த எண்ணத்தை மறைக்க முடியவில்லை.
காவ்யா தன் கழுத்தில் தவழ்ந்த தாலியை விரலால் வருடினாள்.
அந்த சிறிய செயலை கவனித்த தூரிகாவின் மனம் இன்னும் குழம்பியது. 'இது நடிப்பா...? இல்லை... உண்மையாவே அண்ணனை ஏத்துக்கிட்டாளா...?' பதில் கிடைக்கவில்லை. தூரிகாவுக்கு இருப்பினும் காவ்யாவை பிடிக்கவில்லை.
மீனாட்சி அருகில் வந்து, "தூரிகா... என்னம்மா அப்படியே நின்னுட்டிருக்க.? வந்தவங்களை சாப்பிட வை. முக்கியமா உங்க பெரிப்பா பெரிம்மா, அத்தை மாமாவை கவனி." என்று மெதுவாக தோளை வருடினார்.
தூரிகா தலை அசைத்துவிட்டு புரிந்துக் கொண்டாள்.
அதியமான் தன் அண்ணன் குடும்பத்துடன் தன் குடும்பம உறுப்பினர்களே நிறுத்தி தங்கை குடும்பத்தையும் நிறுத்தி முதல் புகைப்படமாக எடுத்து முடித்திட கூறினார். எங்கே நேரம் தாழ்த்தினால் அண்ணன் அண்ணி கிளம்பிவிட்டால் இந்த வாய்ப்பு மீண்டும் அமையாதே.
வேல்விழியும் அருளாளன் காலில் அகிலன் விழுந்து வணங்க, வேல்விழியோ கணவர் கையில் தங்க காப்பை தந்தார்.
அவரும் வேறு வழியின்றி அகிலனுக்கு அணிவித்தார்.
அடுத்து இளையமதியும் அகிலனுக்கு தங்க மோதிரம் போட கணவரிடம் தந்தார். அவருமே சிவனேயென்று அணிவித்தார். இளையமதிக்கு லேசாக கண்ணீர் துளிர்த்தது.
புகைப்படம் எடுத்ததும் அருளாளன் கீழேயிறங்க, "பெரிப்பா சாப்பிட வாங்க" என்று தூரிகாவே கைப்பிடித்து பரிமாறும் இடத்திற்கு அழைத்து சென்றாள்.
அந்த நேரம் அருளாளனுக்கு சங்கடமாக இருந்தது. இதே பிள்ளை இனியன் கல்யாணத்திற்கு வந்து நாத்தனார் முடிச்சு போட்டு, மதுராவுக்கு தங்க வளையல் அணிவித்து இனியனுக்கும் செயினை மாட்டியிருந்தாள். ஆனால் சாப்பிட கூட கூறாமல் வேடிக்கை பார்த்தோமே' என்று கூனிக்குறுகினார்.
தூரிகா பெரிப்பா பெரிம்மாவையும் கூடவே தம்பி எழிலரசனையும் கேட்டு கேட்டு பரிமாறினாள்.
அருளாளன் பக்கத்தில் தான் தூரிகாவும் சாப்பிட்டாள்.
மறுபுறம் இளையமதி குடும்பத்தையும் அமர வைத்தாள்.
'எங்க மாமாவுக்கு பாயசம்னா பிடிக்கும், வத்தக்குழம்பு ஊத்துங்க.' என்று குரல் தந்து ஜமாய்த்தாள். அவருக்குமே லேசான குற்றவுணர்வு மதுரா திருமணத்திற்கு பத்திரிக்கை கூட வைக்க வரவில்லையே. எல்லாம் இளையமதி தானே பார்த்துக்கொண்டது.
புரோகிதர் அடுத்தடுத்த சடங்குகளை நடத்த ஆரம்பித்தார். அகிலனும் காவ்யாவும் பெரியவர்கள் சொல்வதை அமைதியாக செய்து கொண்டிருந்தனர்.
அரிசி மாற்றுதல், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் எந்த சடங்கையும் விடாமல் காவ்யா ஆசைக்கு எல்லாவிதமான தமிழர் சடங்கை கலந்து நிறுத்தியிருந்தனர்.
ஒவ்வொரு சடங்கையும் காவ்யாவுக்கு புதிதாக இருந்தது. சிலர் மட்டும் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தனர்.
அவள் எதைச் செய்தாலும் முதலில் அகிலனையே பார்த்தாள். அவன் செய்வதைப் பார்த்துதான் தானும் செய்தாள்.
அதைப் பார்த்த ராஜாராமின் முகத்தில் நிம்மதி பரவியது.
"என் பொண்ணு... இனிமே இவனையே நம்பி வாழப்போறா சரியான துணையை தான் அமைந்திருக்கு." என்று மனதிற்குள் கூறிக் கொண்டார்.
மணமக்களை வாழ்த்த
என்ற அறிவிப்புடன் மக்கள் வரிசையாக மேடையேற ஆரம்பித்தனர்
ஒருபக்கம் ஊர்ப் பெரியவர்கள் அவரவருக்கு தெரிந்த விதமாக
"நூறு வருஷம் நல்லா வாழணும்யா"
"பதினாறு செல்வமும் பெத்து பெருவாழ்வு வாழணும்"
"சீக்கிரம் நல்ல செய்தி கேக்கணும்..." என்று ஒவ்வொருவரும் ஆசீர்வதித்தனர்.
அகிலனும் காவ்யாவும் பொதுவாக சபைக்கு பணிந்து குனிந்து விழுந்தனர்.
அகிலனுக்கு இவ்வளவு பேர் முன்னால் நிற்பதே சங்கடமாக இருந்தது.
காவ்யாவோ அவனை விட சிரித்த முகமாக எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தாள்.
"தேங்க்யூ..."
"வணக்கம்..."
"ரொம்ப சந்தோஷம்..." என்று தமிழும் ஆங்கிலமும் கலந்த மொழியில் பேசினாள்.
அதைப் பார்த்த சில பாட்டிகள் சிரித்தார்கள்.
"தமிழே நல்லா பேசுதே அமெரிக்காவுல வளர்ந்தவன்னு சொன்னாங்க." "அட... நம்ம ஊரு மருமக மாதிரித்தான் இருக்கு." என்று மகிழ்ந்தனர்.
அடுத்ததாக புகைப்படக்காரர்கள் மேடையை கைப்பற்றினர்.
"சார்... கொஞ்சம் நெருக்கமா நில்லுங்க..." அகிலன் உடனே ஒரு அடி விலகினான்.
"அய்யோ சார்..."
புகைப்படக்காரன் தலையில் கை வைத்தான். "இப்பதான் கல்யாணம் முடிஞ்சிருக்கு... இன்னும் ஏன் இவ்வளவு தூரம் போறீங்க?" சுற்றியிருந்தவர்கள் சிரித்தனர்.
ரகுவும் வாயை விடவில்லை.
"டேய்... இப்ப அவங்க உன் பொண்டாட்டிடா..." என்றதும் அகிலன் கஷ்டப்பட்டு சிரித்தான்.
காவ்யா குறும்பாக, "சார்... இவரை விட்டுருங்க... இவருக்கு இன்னும் அப்டேட் ஆக டைம் ஆகும்..." என்று சொல்ல மீண்டும் மேடை முழுவதும் சிரிப்பு பரவியது.
"சார்... மணப்பெண்ணோட தோள்ல கை போடுங்க..." என்றதும் அகிலன் மிகவும் தயங்கினான்.
காவ்யா அவனைப் பார்த்து மெதுவாக, "போட்டோக்காக மட்டும் போடுங்க" என்று கிசுகிசுத்தாள். அதன் பிறகுதான் அவன் மெதுவாக தோளில் கை வைத்தான்.
"சூப்பர்..."
"ஸ்மைல்..."
"ஒன்ஸ் மோர்..." என்று கேமரா மின்னல் போல மின்னியது.
சிறிது நேரத்தில் உறவினர்கள் அனைவரும் மேடையில் ஏறினர்.
ஒவ்வொரு குடும்பமாக நண்பர்கள், பள்ளி நண்பர்கள்,
பஞ்சாயத்து உறுப்பினர்கள்...
வயல்வெளி தொழிலாளர்கள்...
எல்லோரும் வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அந்த நேரத்தில் மேடைக்கு கீழே நின்ற இரண்டு பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
"அருளாளன் வந்திருக்காருப்பா" என்றார்.
"ஆமாம்... ஆனா அவன் பையன் இனியனையும் மதுராவையும் காணோமே..." என்றார்.
"அதான்... தம்பி கல்யாணத்துக்கு அண்ணன் வராம இருக்கானே..."
"அட அண்ணன் கல்யாணத்துக்கு கூட தான் தம்பி வராம இருந்தான்." என்றார்.
"அப்ப தேர்தல் இருந்ததுப்பா. வேலை இருந்துச்சு" என்று கூறினார்கள்.
"அதல்லாம் இல்லை. அந்த பழைய சண்டை இன்னும் முடியல போல... ஊருக்குள்ள எவ்வளவு நாள்தான் இப்படி இருப்பாங்க பெரியவர் மறந்துட்டாங்க. சின்னவங்க மனசுல உறுத்தும் போல"
என்று மெதுவாக பேசிக் கொண்டனர்.
அந்த வார்த்தைகள் வேல்விழி காதிலும் விழுந்தது.
அவர் சங்கடமாக தலையை குனிந்தார். அருளாளன் முகம் மட்டும் இறுகிப்போனது.
அதியமான் கேட்டும் கேட்காதது போல இருந்தார். இன்று எந்த சச்சரவுக்கும் இடம் தர விரும்பவில்லை. ராஜாராம் அமெரிக்க நண்பர்களிடம் ஒவ்வொரு உணவையும் விளக்கி கவனிப்பதில் பிசியாக இருந்தார்.
அருளாளன் அவராக கிளம்புவதாக தம்பியிடம் பேசிட, "இருந்துட்டு போகலாமே அண்ணா." என்று மட்டும் தெரிவித்தார். மீனாட்சியோ அவசரமாக "எழிலரசா... இந்தா... இரண்டு பேருக்கு சாப்பாடு பேக் பண்ணிருக்கு. மதுராவுக்கும் இனியனுக்கும்." என்று நீட்டினார்.
எழிலரசன் அன்னையை கண்டு முழிக்க, வேல்விழியோ "என்கிட்ட கொடும்மா" என்று வாங்கினார்.
அந்த நேரத்தில் இனியன் போன் வந்தது.
வேல்விழி தான் எடுத்து பேச முற்பட்டார்.
கல்யாண மண்டபத்தில் உள்ள சப்தத்தால் இனியன் பேசுவது கேட்காமல் "வந்துட்டே இருக்கோம்டா. ஹலோ... ஹலோ" என்று கூற, "அம்மா... மதுராவை நான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறேன்... ஹாஸ்பிடல் டீட்டெயில் எழிலரசனிடம் அனுப்பியிருக்கேன். கொஞ்சம் சீக்கிரம் வாம்மா" என்றான்.
"ஏதே... ஹாஸ்பிடல்லா?" என்று 'ஹலோ ஹலோ' என்று கத்த, எழிலரசன் போனில் வாய்ஸ் மெஸேஜ் வந்தது. பக்கத்து டவுனில் உள்ள ஹாஸ்பிடலுக்கு மதுராவை அழைத்து சென்றதாக வந்திருந்தது.
வேல்விழியோ இளையமதியை அழைத்து, "நாங்க கிளம்பறோம். நீங்களும் நம்ம கார்லயே வந்துடுங்க" என்று அழைத்தார். கல்யாண சுந்தரமோ "காரும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம். நாங்களே போவோம்" என்று முறுக்கி கொண்டார்.
பிறகு தனியாக அழைத்து, "மதுராவை இனியன் ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போயிருக்கானாம். என்னனு தெரியலை. உங்க அக்கபோரை அப்பறம் பண்ணுங்க. அகிலன் கல்யாணத்துல எந்த அசம்பாவிதமும் பண்ணாம நாம கிளம்புவோம்" என்று மட்டும் கூற, இளையமதியோ கண்ணிருடன், "அய்யோ என் பிள்ளைய என்ன செய்தானோ?" என்று அழுதார்.
கல்யாண சுந்தரமோ "எம் மவளை பிடிக்கலைன்னா அத்து விட்டுடுங்க. அது பாட்டுக்கு வீட்ல ராணி மாதிரி இருக்கும்" என்று கூறிவிட்டார்.
மீனாட்சி அதியமானிடம் பொதுவாக கிளம்புவதாக கூறிவிட்டு இருகுடும்பமும் கிளம்பியது.
அதியமானோ "ஏதோ சரியில்லை. தங்கச்சி அழுது. மாப்பிள்ளை ஏதோ புலம்பிட்டே போறார். எங்கண்ணா அண்ணி கூட டென்ஷனா இருந்தாங்க. நிலானி கூட கண்ணுல தண்ணி விட்டுயிருந்தா. எழிலரசன் கூட பதட்டமா இருந்தான்." என்றார்.
மீனாட்சியோ நம்ம மகன் கல்யாணம் நடக்குதுங்க. அதை கவனிங்க. அவங்க இவ்ளோ நேரம் இருந்ததே அதிசயம். போனா நல்லதுனு விடுங்க. இனியன் கோபத்துல ஏதாவது திட்டியிருப்பான்." என்று கூறிட மனைவி பேச்சையும் கேட்டுக்கொண்டார்.
மகனின் திருமணத்தில் எதற்கு வம்பு. அண்ணன் அண்ணி வந்ததே அபூர்வம் தான்.
காரில் அருளாளன் வேல்விழியும் இனியனுக்கு அழைத்தனர்.
"எம்பிள்ளைக்கு என்னாச்சு கேட்டு சொல்லுங்க" என்று துடித்தனர்.
இனியனோ "நேர்ல வாங்கம்மா... இவ செய்த வேலைக்கு நியாயம் சொல்லுங்க." என்று கத்தினான்.
இளையமதியோ மதுரா உயிருக்கு ஆபத்தில்லை ஆனால் இனியன் கத்துவது எதனால்? என்று பதட்டத்துடன் இருந்தனர்.
இனியன் வீட்டில் ஒரு மணிநேரத்திற்கு முன் நடந்தது இது தான். திருமணம் விஷேஷம் என்று அனைவரும் சென்றதால் வீடு அமைதியாக இருந்தது.
மதுரா மனதில் அகிலன் மச்சான் திருமணத்தை எண்ணி வேண்டினாள். இந்நேரம் அகிலன் மச்சான் காவ்யா திருமணம் நல்லபடியாக நடைப்பெற்று இருக்கும். நல்லவேளை அத்தை மாமா செல்கின்றனர் என்று பூரிப்பாக இருந்தாள். ஆனால் அடிவயிறு பிடித்து யாரோ உருவி எடுப்பது போல மதுராவின் வயிற்றில் சுளீரென்ற வலி.
மதுராவுக்கு ஏன் எதற்கென்ற காரணம் புரிய, கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
பல்லை கடித்து சமாளித்திட முயன்றாள். ஆனால் வலியானது அவளை கதிகலங்க செய்தது.
அதன்பின்னரே சமையலறையில் சுடத்தண்ணீரை வைத்து பருக நினைத்தாள். கைகள் தடுமாறி பானையை தட்டி விட கால்கள் வலுவிழந்து, மயங்கினாள்.
இனியன் அறை ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்தான்.
சமையலறையில் சத்தம் கேட்டதும், கீழே வந்தான். அவளிருந்த நிலையை கண்டு மதுராவை தட்டி "ஏய்... என்னாச்சு?" என்று அதட்ட, அவளது ஆடையில் செங்குறுதி வடிந்தது.
இனியனுக்கு ஒரு கணம் ஒன்றும் புரியாமல் பயந்து மதுராவின் கன்னம் தட்டி "என்னாச்சு. என்ன நடக்கு?" என்று கேட்க, "அ...அபா.." என்று புன்சிரிப்பில் வலியுடன் கூறி மயங்கினாள்.
அவளை கையில் தூக்கிக் கொண்டு மற்றொரு காரில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தவன் "என்னனு தெரியலை கிச்சன்ல மயங்கி விழுந்து கிடந்தா பாருங்க டாக்டர்" என்று மட்டும் கூறினான்.
டாக்டர் மதுராவை பரிசோதித்து பார்த்து இனியனிடம் "அவங்க பிரகனென்டா இருந்து இப்ப அபார்ஷன் ஆகியிருக்கு." என்று மட்டும் கூறினார்கள்.
இதற்கு நடுவே தான் இனியன் வேல்விழிக்கு அழைத்தது.
அபார்ஷன் ஆனதற்கு காரணம் என்னவாக இருக்கும். அதிக வேலை செய்தாலா? என்று யோசிக்க, இனியனுக்கு அப்பொழுது தான் மதுரா னகொஞ்ச நாட்களாக ஏதோ கருப்பாக ஒன்றை வைத்து தின்றுக்கொண்டே இருந்தது கருத்தில் பதிந்தது. இவன் வந்ததும் சில நேரம் மறைத்து வைத்து போக்கு காட்டினாள். அந்த நேரம் இனியன் பெரிதாக அவளை கவனிக்கவில்லை.
தற்பொழுது 'கருப்பா.. எதையோ தின்னுட்டே இருந்தா பர்ஃபி... லட்டு.. எள்ளு.. எள்ளு பர்பியும் எள்ளு லட்டும்" என்றவன் ஸ்தம்பித்து அப்படியே இருக்கையில் தொப்பென ஆறடி உயரம் சரிந்துமர்ந்தான்.
மதுரா தனது குழந்தையை அவளே அழித்து இருக்கின்றாளென்று புரிந்தது இனியனுக்கு.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Oru uyir ah kollurathu pavam than aana inga Madhura apadi oru velai ah seiya muzhu karanam yae iniyan than ah yen na ivan already madhura ah va Akilan oda sethu pesi evolo kastapaduthi irukan ippo indha kuzhandhai ah vachi pesa matan nu enna nichiyam athu na la kooda ava ipadi seiyuthu irukalam la
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 39)
பின்னே..! கல்யாணமான முதல் நாளே திருட்டு பத்திரத்துல கையெழுத்து வாங்குனவனுக்கு பிள்ளையை பெத்துக் கொடுத்து
அப்பன் என்கிற பட்டத்தை கொடுக்கணுமாக்கும்...?
பொண்டாட்டி மேல வேற வராத நேசம், பாசம்.. பிள்ளை மேல மட்டும் வந்துடுச்சாக்கும் இனியனுக்கு. இவனுக்கெல்லாம் இப்படித்தான் திருப்பி கொடுக்கணுமாக்கும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
39 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
22 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
