மதுர ஜில்லா... மச்சானே!-37
அத்தியாயம்-37
காவ்யா அழைப்பை ஏற்ற அடுத்த நொடி, "அகிலனை கல்யாணம் கட்டிக்கப் போறியாமே? உங்க அப்பா என்னைப் பார்த்து ஆயிரம் நொட்டை சொல்லுவாரு. இப்ப அதே மனுஷன்... அகிலனுக்கு உன்னை கட்டி வைக்க மண்டபம் பார்த்துட்டு ஜாலியா திரியறாராம். அதியமான் சித்தப்பாவும் கல்யாண மண்டபத்தை பேசி முடிச்சதா கேள்விப்பட்டேன்.
ஏய்... எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு தெரியவும் வந்து திட்டிட்டு அறைந்துட்டு அமெரிக்கவே போக வேண்டியது தானே? அதென்ன அவன் வீட்ல உட்கார்ந்துட்டு சொகுசா வயல்வரப்பும், பண்ணை வீட்லயும் நல்லா ஜம்முனு இருக்க? லூசாடி நீ... அவன் என்னை பழிவாங்க உன்னை யூஸ் பண்ணறானா?'' என்று இனியனின் குரலில் இருந்த கோபம் காதையே கிழித்தது.
காவ்யா அமைதியாக நின்றாள்."டேய்.. நான் அமெரிக்கா போகணுமா இங்க இருக்கணுமானு நீ சொல்லக்கூடாது. அதை நான் தான் முடிவெடுக்கணும். அப்பறம்... இனியன்... நீ கேள்விப்பட்டது எல்லாம் கரெக்ட் தான். எங்கப்பாவும் அதியமான் மாமாவுமா கல்யாண மண்டபமும், கல்யாண சாப்பாடும் முடிவெடுத்து பேசிட்டு வர்றதா போனாங்க. ஐ திங்க்.. பேசி முடிச்சிருப்பாங்க. நான் அகிலனோட வயல்ல தண்ணில விளையாடினா உனக்கென்ன? அவரோட இன்னிக்கு கார்ல... கல்யாண பட்டுபுடவை எடுக்க கூட போனேன். மரகத பச்சை கலர்ல சேலை.. என் நிறத்துக்கு தூக்கலா இருக்கும்னு செலக்ட் பண்ணினார் தெரியுமா?
அப்பறம் என்ன சொன்ன... அவர் உன்னை பழிவாங்கறாரா. டேய் டேய்... அவருக்கு அந்த பழக்கமெல்லாம் இல்லை. இருந்திருந்தா தேர்தல்ல ஜெயித்ததும் பந்தா பண்ணிட்டு திரிந்திருப்பார். அவர் அப்படி பண்ணலை. தோற்றுடுவேன்னு தெரிந்து அவசரமா மதுராவை கட்டிக்க பிளான் பண்ணினவன் தானே நீ.
அப்பறம்... நான் தான் அவரை கல்யாணம் பண்ண வெட்கத்தை விட்டு வாயை திறந்து கேட்டேன். அவர் இல்லை. அப்ப கூட, உன் எக்ஸ்னு நான்னு தெரிந்ததும், இது சரிவராதுங்கனு சொல்லி நழுவினார்.
ஆனா எனக்கு தான் உன்னை ரிவேன்ஜ் எடுக்கணும்னா ஆசை இருந்தது. ஆனா அதென்னவோ அவரிடம் கல்யாணத்துக்கு எஸ் சொல்ல வச்சி கல்யாணம் பேசியதும், உன்னை பழிவாங்கற என்நோக்கம் கூட காற்றுல கரைந்துடுச்சு. ஒருவேளை இப்பவே அவரோட நல்ல சுபாவம் என்மேல வீசுது போல.
அப்பறம் சும்மா போன் போட்ட.. நான் உன்னை பழிவாங்குவேன். ஆனா அந்த நிலையை கொண்டு வந்துடாத. புரிதா... இனி இப்படி தம்பி பொண்டாட்டியிடம் திமிரா பேச முயற்சி பண்ணின... அப்பறம் மரியாதை கெட்டுடும்டா... போனை வச்சிடவா மச்சான்" என்று நக்கலாய் கேட்டு துண்டித்தாள்.
'இனியன் தான் கால் பண்ணறான்னு தெரியுதுல்ல.. இந்த மனுஷன் அவன் எதுக்கு கால் பண்ணறானு ஒரு கேள்வி என்னிடம் கேட்க என்னவாம். ஜென்நிலையில ஒரு பார்வை பார்த்துட்டு போறார். பெரிய தியாகி.' என்று அகிலனை தான் உரிமையாக திட்டினாள்.
இனியனோ காவ்யாவிடம் திட்டு வாங்கி விட்டு, நேராக மதுராவைத் தேடிச் சென்றான்.
அவள் வீட்டில் செய்த பர்பியை தின்றுக் கொண்டிருக்க, அதை தட்டிவிட்டான்.
மதுரா அதிர்ந்தாள். "எ... என்னாச்சு?" என்று பதட்டமாய் எழுந்தாள்.
"நீ என்னமோ... அவன் ரொம்ப நல்லவன். வம்பு தும்புக்கே போக மாட்டான், அமைதியானவன் அப்படின்னு பேசின. இப்ப... நான் காதலிச்ச பொண்ணையே, அவன் கல்யாணம் பண்ணிக்கப் போறான்." என்று கத்தினான்
மதுராவின் கண்கள் விரிந்தன.
"என்ன? அகிலன் மச்சான் காவ்யாவையா கல்யாணம் செய்ய போறாரா?" என்று திகைத்து கேட்டாள்.
"ஆமா. இங்க என்னை திட்டிட்டு போன காவ்யாவை அவன் வீட்டுல தங்க வச்சிருந்தான். வயல்வரப்பு கூட்டிட்டு போய், தண்ணில ஆடியிருக்கான். இதுல.. கல்யாணம் பண்ணிக்கறதா மண்டபம் புக் பண்ணிருக்காங்க. அவளை பார்ம் ஹவுஸ்ல தங்க வச்சியிருக்கான்." என்று அடுக்கினான்.
மதுராவுக்கு உள்ளுக்குள் ஆனந்தம் ஊற்றெடுத்தது. எங்கே அகிலன் மச்சான் மணமுடிக்காமல் அவரது வாழ்க்கையை பொது சேவைக்கென்று அர்ப்பணித்து விடுவாரோ என்று பயந்தாள். என்ன தான் மீனாட்சி அத்தை மாமா அப்படி நடக்க துணை போக மாட்டாரென்றாலும், அந்ந பயம் மதுரவாணிக்கு இருந்தது.
இன்று அந்த பயம் களைய, அவளுக்கு அது உண்மை தானா என்றறிய ஆவல் பீறிட்டது.
கல்யாணம் செய்வது சரி... ஆனால் இவர் காதலித்த பெண்ணை மணப்பதா என்ற தயக்கம். அவளால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. அகிலன் மச்சான் இவரை போல பழிவாங்குகின்றாரா? என்று சிந்திக்க அகிலன் மச்சான் அப்படிப்பட்டவர் இல்லையே என்று புத்தி உரைத்தது.
இதில் இரவென்பதால் யாரிடம் கேட்டு முடிக்க, அய்யனார் சாமி போல ரௌத்திரம் பொங்க, இனியன் தன்னையே உறுத்தும் அளவிற்கு பார்வையிடுவதில் மதுரா செய்வதறியாது திகைத்தாள்.
"என்னடி யோசிக்கற?" என்று கேட்க, கீழே விழுந்த பர்ஃபியை எடுத்து டப்பாவில் போட்டு, "இப்ப என்ன செய்யணும்னு நினைக்கறிங்க. ஒருவேளை உங்க காதலி உங்களை மாதிரி பதிலடி தர முடிவெடுத்திருக்கலாம்.
யார் கண்டா... நீங்க கூட உங்க லவ்வரிடம் அவரை கூடயிருந்து குழிப்பறிக்க நினைக்கலாம். எதுவாயிருந்தா என்ன? என்னிடம் போன் இல்லைங்க. அம்மாவிடம் கூட பேச முடியாத அபலை நான். எனக்கு இந்த நாலு சுவரும், ஆறடி உசரத்துல உங்க உருவம் தான் நெருக்கமா தெரியும்." என்று செவிமடல் அருகே கிசுகிசுப்பாய் கூறினாள்.
"என்னடி... வரவர உனக்கு எகத்தாளமா இருக்குல்ல... வெத்து பத்திரத்துல கையெழுத்து போட்டிருக்க.. நினைவு இருக்கட்டும். உன்னை உங்கப்பா வீட்டுக்கே அனுப்ப என்னால முடியும்." என்றான்.
"அய்யோ.. அப்ப விடுதலை உண்டா? நான் கூட அடிச்சி மிதிச்சு, கொண்ணு புதைச்சு இங்கயே அடக்கம் பண்ணிடுவிங்கனு நினைச்சேன்." என்றாள் புன்னகைமுடன்.
இனியனோ நெஞ்சு விம்ப, அவ்விடம் விட்டு அகன்றான். இப்பொழுது எல்லாம் வார்த்தையால் மதுரவாணியை காயப்படுத்த இயலாமல் போனதில் இனியனுக்கு வருத்தம்.
ஆனால் இரவில் மோகத்தால் தண்டிப்பது எளிதாக இருந்தது. என்ன.. சிலநேரம் மோகத்தில் கூட மென்மை எட்டி பார்த்திடுகிறது.
முரட்டுத்தனமாக மறுத்தால் வன்மையை கையாளலாம். இவன் இழுத்த இழுப்புக்கு எல்லாம் வளைபவளை ஒரு கட்டத்தில் வன்மையாகவும் ஆளா மறந்துவிடுகின்றான்.
மதுராவோ இறைவனை வேண்டியபடி, அகம் மகிழ்ந்தாள்.
அடுத்த நாள் காலை பத்து மணியளவில் கிராமத்தில் மரங்களுக்கு நடுவே, அகிலனும் காவ்யாவும் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டில் நின்றிருந்தனர்.
பச்சை நிற வயல்வெளி, தென்னை வரிசைகள், காளை வண்டி, மல்லிகைப்பூ தோட்டத்தில் என்று புகைப்படம் எடுக்க புகைப்படக்காரர் கூட வந்து விட்டனர்.
காவ்யாவுக்கு சேலை கட்டிய அலங்கார பெண்மணியும் கூடயிருந்தார்.
அகிலனுக்கு இதெல்லாம் பழக்கமில்லை. ஆனாலும் காவ்யா சொன்னதால் மறுக்கவும் வழியில்லாமல் மீனாட்சியும் அதியமானும் அனுப்பி விட்டார்.
ராஜாராம் எல்லாம் வீட்டில் இருந்தார்.
புகைப்படக்காரர் இப்படி நில்லுங்க... இப்படி கைப்பிடிங்க. தோளில் சாய்ந்து நில்லுங்க. அவங்களை தூக்குங்க சார்' என்றெல்லாம் கூற, அகிலன் தடுமாறினான்.
அகிலனோ "ஊர்கூடி பார்க்கற தெரு முச்சந்தில உங்களை தூக்கிட்டு நிற்கற மாதிரி எல்லாம் இருந்தா நல்லா இருக்காதுங்க." என்று மறுத்தான்.
"ஓ... எங்க நாட்ல கட்டி பிடிச்சி கிஸ்ஸடிப்பாங்க. பட் அதெல்லாம் நான் உங்களை பண்ண சொல்லலையே. உங்க ஊர்ல பக்கத்துல பக்கத்துல தானே நிற்க சொல்லறாங்க. அதுக்கே ஓவரா பண்ணறிங்க." என்றாள்.
அகிலனுக்கோ அவள் பேசியதில் ஆடிப்போனான். கிஸ் எல்லாம் அவன் வாயிலிருந்து வார்த்தையாக கூட வரவில்லையே. ஆனாலும் காவ்யா வளர்ந்த இடம் வேறல்லவா? அதனால் "என்னயிருந்தாலும் எனக்கு உதறுதுங்க" என்று அழுத்தமாய் மறுத்தான்.
"அகிலன்.. டீசண்டானா போட்டோ மட்டும் தான் பேனரா போட்டு வையுங்க. அதர்வைஸ் இதெல்லாம் ஆல்பமா போட்டு நாம பார்த்து வச்சிக்கலாம்.
யோசித்து பாருங்க... இத்தனை அலங்காரம் செய்துட்டு சும்மா பக்கத்துல பக்கத்துல நிற்க வச்சி பேனருக்கு போட்டோ எடுத்துட்டு அனுப்பிட முடியுமா? மேக்கப் செலவு, போட்டோகிராப்பருக்கான செலவு யோசிக்க மாட்டிங்க. சும்மா தூக்குங்க சார்.. காளையை அடக்கினவருக்கு.. இதுல எல்லாம் தயங்கிட்டு இருக்கிங்க" என்றாள். கூடுதலாக, 'தயங்கி தயங்கி தான் லவ் ப்ணணின பொண்ணை கை நழுவிட்டு நிற்கறிங்க' என்று மனதில் தான் நினைத்தாள்.
அகிலனோ தலையில் கை வைத்து சுற்றி பார்த்தான்.
அருகருகே நிற்பது அவஸ்தையாக இருந்தாலும் செய்து முடித்தான். தோளில் கை போடும் பொழுதெல்லாம் கைகள் நடுங்கியது.
ஆனால் காவ்யாவோ அவன் நெஞ்சில் தலைசாய்த்து நிற்க கூற, அகிலன் நெஞ்சில் சாய்ந்தாள்.
அகிலனின் இதயம் தான் தடம் புரண்டது.
அது சாய்ந்திருந்த காவ்யா செவியிலும் இதயவோசையாக ஒலித்தது. காவ்யாவிற்கு லேசான புன்னகை இயல்பாக அரும்பியது.
அடுத்து போட்டோகிராப் அவளை தூக்க சொல்லி அவசரப்படுத்தி நின்றார்.
"இருப்பா... ஒரு நிமிஷமாவது ப்ரிப்பேராக வேண்டாமா?" என்று வேஷ்டி மடித்து வந்தான்.
"சார்.. வேஷ்டி மடித்து கட்ட வேண்டாம். ஏதோ ஜல்லிக்கட்டுக்கு போற மாதிரி இருக்கும்." என்றான் புகைப்படக்காரர்.
புகைப்படக்காரனை முறைத்து காவ்யாவை நெருங்கினான்.
புகைப்படக்காரன் பேசிய கடுப்பிலும், காவ்யா பேசியதிலும் கடுப்பானவன், காவ்யாவை பூங்குவியலாக சட்டென்று தூக்கிவிட்டான். அவள் தன்னிச்சையாக அவன் கழுத்தை பிடித்துக் கொண்டாள். இருவருக்கும் நடுவே ஒரு நொடி உலகமே நின்றது போல இருந்தது.
அகிலனின் கரங்களில் இருந்த பாதுகாப்பை உணர்ந்த காவ்யாவின் கண்கள் மெதுவாக ஆனந்தம் கொண்டன.
"டக்குனு க்ளிக் பண்ணிடுங்க" என்று அகிலன் அவசரப்படுத்த, "இருங்க சார்... அவனவன் வுட்பியோட வெயிட்டை தூக்க முடியாம தடுமாறி திணறிட்டு நிற்பான். நீங்க அசால்டா சட்டுனுதூக்கிட்டிங்க. லென்ஸ் எல்லாம் துடைச்சிக்கறேன்." என்று அந்த நேரம் தான் புகைப்படக்காரன் லென்ஸை துடைத்தான்.
அகிலனுக்கு பொறுமை பறந்தோட காவ்யாவின் கண்களை சந்தித்தான்.
அவளுமே தன்னை அகிலன் சட்டென தூக்கிலிட்டதில் ஆச்சரியமடைந்தாள். அதிலும் அகிலன் கைகள் தன்னுடலை தீண்டியிருக்க, பார்வைகள் எல்லாம் வித்தியாசமாய் விழுந்தது.
அகிலனுமே அவள் விழிக்குள் விழுந்து சிக்கி நின்றான்.
இவளிடம் வகையாக 'மாட்டி விட்டோமோ' என்று தான் தோன்றியது.
புகைப்படக்காரரோ சொல்லாமல் கொள்ளாமல் காதல் பார்வைகளை போல பல க்ளிக்கை அள்ளிவிட்டான்.
அகிலன் என்ன நினைத்தானோ "பாஸ்.. போதும். இந்த போட்டோவோட போதும்," என்று கட்டளையாக கூறிவிட்டு, அவளை கீழேயிறக்கி எதெல்லாம் பேனராக வேண்டுமோ அதையெல்லாம் மட்டும் சொல்லிவிட்டு பறந்தோட பரிதவித்தான்.
காவ்யாவோ அவன் ஒட்டமெடுக்க, உள்ளுக்குள் சிரிக்க தோன்றியது.
இனியனோடு நெருங்கி நின்று செல்ஃபி எல்லாம் எடுத்திருக்கின்றாள். இப்படி ஒரு உணர்வு இதயத்தை தாக்கி பிழியவில்லை. பெரும்பாலும் இனியன் சீனியர் இவள் ஜீனியர் என்பதால் பார்த்து பேசும் வாய்ப்பு சொற்பமானது. கேண்டீனில் சாப்பிடும் பொழுது தமிழ் பையன் என்றதால் பேசுவாள். அவனுமே தமிழ் பொண்ணா என்ற ஒருமையில் விழுந்தார்கள். ஒராகட்டத்தில் காதல்.. அடுத்து திருமணம் என்று திட்டம் போட்டவளுக்கு இனியன் இங்கு வந்தப்பிறகு சந்திப்பு குறைவாக இனியனுக்கு இவள் நினைவு குறைந்திருக்கும் போல.
இனியன் எனக்கானவன் இல்லை, அகிலன் தான் எனக்கானவன் என்ற ஆணித்தரமான எண்ணம் காவ்யா இதயத்தில் பதிந்தது. ஏற்கனவே இதை எண்ணி தான் கல்யாண ஏற்பாடு நடந்தேறியிருந்தாலும், இன்று முழுதாக உணர்ந்து விட்டாள்.
இங்கே அகிலன் பயணிக்க, அவன் செல்லும் வழியில் பார்வை செலுத்தினாள்.
இதில் பத்திரிக்கை கைக்கு வந்ததும் அதியமான் மீனாட்சியை அண்ணன் வீட்டிற்கும் தங்கை வீட்டிற்கும் பத்திரிக்கை வைத்துவிட்டு வர கூப்பிட்டார்.
மீனாட்சி மறுத்துவிட்டார். தூரிகாவும் காவ்யா மீதான கோபத்தில் மறுத்துவிட்டாள்.
அகிலனுமே "வேண்டாம் அப்பா.. இனியன் என்ன நினைத்தாலும் சரி. நான் அவனை பார்த்து பத்திரிக்கை வைக்க முடியாது. ஏதோ இவங்களை வேண்டுமின்னே கட்டிக்க சீன் போடுவதா நினைப்பான்.
அதுக்கு பதில் நான் எங்கயும் பத்திரிக்கை வைக்க போகலை என்ற கெட்ட பெயர் இருந்தா கூட பரவாயில்லை.." என்றுரைத்து விட்டான்.
மனைவி மகன், மகள் அண்ணன் தங்கை இருவர் வீட்டிற்கும் பத்திரிக்கை வைக்க வராவிட்டாலும், ராஜாராம் அவர் பங்கிற்கு 'அட வாங்க சம்பந்தி... நான் இருக்கேன்." என்று கூடவே இரு சக்கர வாகனத்தில் பத்திரிக்கை வைக்க அருளாளன் வீட்டுக்கு சென்றார்.
வீட்டுக்கு காலையிலேயே வந்து சேர்ந்தார்.
வேல்விழி தான் புன்னகையுடன் வரவேற்று அமரவைத்தார். ''காபி டீ போட்டுட்டு வந்துடறேன்" என்று கூற, "இல்லைங்க அண்ணி... வேண்டாம். இப்ப தான் குடிச்சோம்" என்று மறுத்தார் அதியமான். அருளாளன் வீட்டிலிருந்தாலும் வெளியே வரமறுத்து, நான் இல்லைனு சொல்லு போடி' என்று அறைக்குள் அமர்ந்து விட்டார்.
மதுரா ஆர்வமாய் படியிலிருந்து கீழேயிறங்கினாள். அதியமான் மாமாவிற்கு மறுத்தாலும் டீயை தயாரிக்க சமையலறைக்கு ஓடினாள்.
ஏற்கனவே இந்த நேரத்திற்கு அருளாளனுக்கு டீ போடுவது வழக்கமென்பதால் சுடசுட கொதிக்க வைத்து டீத்தூளில் பாலில் கலந்து கொண்டு வந்தாள்.
"நல்லாயிருக்கியாம்மா" என்று தான் அதியமான் கேட்டார்.
"சந்தோஷத்துக்கு என்ன குறைச்சல் மாமா. நல்லாயிருக்கேன். பாருங்க.. புதுதுணி.. நகை நட்டு, வீட்லயே மொசைக்கு தரை, கிச்சன்லயே எல்லா வசதியும் இருக்கு. நான் இங்க இவரோட சந்தோஷமா இருக்கேன்" என்று இனியனை பார்த்து உரைத்தாள்.
இனியனோ அவஸ்தையுடன் நிற்க ராஜாராமோ "இனியன் ரொம்ப நன்றிப்பா.. அன்னிக்கு காவ்யா பேசவேவிடலை. எனிவே... காவ்யாவுக்கு நல்ல வரன் கிடைச்சது உன்னால தான்பா. நூறுசதவிதம் மனநிறைவா இருக்கு. மாப்பிள்ளை அகிலன் அந்தளவு பண்பானவரா இருக்கார்." என்று வேறு ஏற்றிவிட, மதுராவுக்கு புன்னகை கூட அரும்பியது.
அதியமானோ டீ குடித்து அண்ணன் வீட்டில் பத்திரிக்கை வைத்து, "அண்ணன்..இல்லை.. வந்ததும் சொல்லிடுங்க அண்ணி. அப்பறம் மறக்காம வந்துடுங்க. அதோட நம்ம இனியனையும் மதுராவையும் கண்டிப்பா அழைச்சிட்டு வாங்க" என்றவர் ராஜாராமிடம் புறப்பட தலையாட்டினார்.
அருளாளன் அவர்கள் சென்றதும் உள்ளிருந்து வெளிவந்து வேல்விழியிடமிருந்த பத்திரிக்கையை பிடுங்கி எறிந்தார். கூடவே வீட்டிலிருந்தால் எரிச்சல் கூடுமென புறப்பட்டார்.
இனியனோ "அவ்ளோ சொல்லியும் ஆடறா" என்று காவ்யாவை வைதான். தந்தை செல்லவும் அவனும் பைக்கில் ஊர்சுற்ற பறந்தான்.
மதுரா மெதுவாக கல்யாண பத்திரிக்கையை எடுத்து பார்வையிட்டாள்.
அதில் மணமகன் இடத்தில் அகிலன் பெயரும், மணமகள் இடத்தில் காவ்யா பெயரும் இருக்க உதடு விரிந்தது. கண்ணில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.
"என்னம்மா.. கஷ்டமாயிருக்கா?" என்றார் வேல்விழி.
"அச்சோ.. இல்லை அத்தை. இது ஆனந்தகண்ணீர். யாரும் எப்படியும் அதே இடத்தில தேங்கிட முடியாதே. அகிலன் மச்சான் அப்படியே இருந்துடுவாரோனு பயந்தேன்.
எனக்கென்ன அத்தை... இனியன் மச்சானும் நல்லா தானே பார்த்துக்கறார். என்ன.. மனசை புரிஞ்சுக்கற பக்குவம்.. அதை விடுங்க அத்தை...
அத்தை.. எனக்கு ஒரு உதவி செய்விங்களா? நான் ஒரே ஒரு தடவை போன் பேசிக்கட்டுமா?" என்று கேட்டாள்.
அகிலனுக்கு கால் பண்ணி தர்றேன்" என்று வேல்விழி கூற, "இல்லைங்க அத்தை. சின்ன மச்சானுக்கு இல்லை. தூரிகாவுக்கு கால் பண்ணுங்க" என்றாள்.
வேல்விழி புரியாது போனை நீட்ட, மதுரா தூரிகாவுக்கு அழைத்தாள்.
இரண்டு ரிங்கில் எடுத்துவிட்டு "ஹலோ" என்றாள் தூரிகா.
"நான் காவ்யா பேசறேன் தூரிகா." என்றதும் தூரிகாவோ இடத்தை மறந்து, "அண்ணி.. மதுரா அண்ணி" என்று அழுதாள்.
"அண்ணியா.. ம்கூம்.. அதான் அண்ணினு கூப்பிட காவ்யா வந்துட்டாங்களே. இனி பெரியண்ணினு கூப்பிடு. எப்படியிருக்க?" என்றாள் அதிகாரம் தழுவி குரலில்.
"ம்கூம்.. அவ அண்ணியா.. நீ வேணுமின்னா பெரிய அண்ணியா இரு. அதை மாத்த முடியாது. ஆனா அந்த காவ்யாவை அண்ணினு கூப்பிட மாட்டேன். அவ இனியன் அண்ணா சொல் பேச்சை கேட்டு, அகிலன் அண்ணா வாழ்க்கையை சூறையாட வந்தவ. நீ வேணும்னா பாரு. தாலி கொடுத்து கட்டற சமயம் அகிலன் அண்ணனை பிடிக்கலைனு எழுந்து நிற்க போறா. ஊர் கூட்டி அகிலன் அண்ணாவை அவமானப்படுத்தறது தான் இனியன் அண்ணனோட திட்டம். அதுக்கு தான் இவ நல்லவ வேஷம் போடறா" என்று பேசினாள்.
மதுரவாணியோ "தப்பு தூரிகா.. அவ இவனு பேசறது. நாளைக்கு கல்யாணம் முடிச்சி அகிலன் மச்சான் பொஞ்சாதியா காவ்யா நின்னா நீ முகத்தை எங்க தூக்கி வச்சிப்பா. முதல்ல உன் யூகத்தை நிறுத்து. அவங்களை பார்த்தா அப்படிப்பட்டவங்களா தெரியலை. அவங்களும் மச்சானை போல தானே. மனகஷ்டத்துல இருந்து தைரியமா மீண்டு வந்திருக்காங்க. என்ன.. சிலர் கஷ்டத்தை வெளியே காட்டிக்க மாட்டாங்க. இல்லைன்னா.. கஷ்டத்தை சட்டுனு ஏற்று ஜீரணிச்சிடுவாங்க.
அவங்க அப்படிப்பட்டவங்களா இருக்கலாம். அவங்களை தப்பா பேசாத.
அப்பறம் நாத்தனார் முடிச்சி போடறப்ப, முறுக்கிட்டு போடாத. அதை சொல்ல தான் கால் பண்ணினேன்" என்றாள்.
"அண்ணி.. டீ மேல ஊத்தியதா அத்த சொல்லுச்சு. இப்ப எப்படியிருக்கு. ரொம்ப கஷ்டப்படறியா" என்று கேட்டு குலுங்கி அழுதாள்.
"அதெல்லாம் ஆறிடுச்சு. தீயினால் சுட்ட புண் ஆறிடும்னு கேள்விப்பட்டதில்லை." என்று நகைத்தாள்.
"அப்ப இனியன் அண்ணன் தினமும் நாவினால இதயத்தை சுட்டு பொசுக்கற பேசுதா?" என்று கேட்க, "அதுவும் சொரணக்கெட்டு போயிடும் தூரிகா. இங்க எவன் தான் பொண்டாட்டியோட காதல் தெரிந்து குத்தி காட்டி பேசாம இருக்கானுங்க. படிச்சா மட்டும் அப்படி பேசக்கூடாதுனு அறிவுகண் திறந்துடுமா? இதெல்லாம் யூனிவெர்சல் பிராப்ளாம்." என்றாள் மதுரா.
மீனாட்சியோ "மதுராவா.. நான் ஒரு வார்த்தை பேசறேன்டி" என்று கேட்க, "மதுராண்ணி... அம்மா பேசணுமாம்." என்று கூறிட, "அ..அத்தை" என்றாள்.
"அம்மாடி.. ராசத்தி எப்படியிருக்க?" என்றார் மீனாட்சி.
"ஆமா.. என் கல்யாணத்துக்கு கூட வராம இருந்துட்டு இப்ப நலம் விசாரிங்க" என்றாள் முகம் தூக்கி வைத்து.
"ஏன்டி கொல்லற. உன்னை அந்த கோலத்துல பார்க்க முடியுமா?" என்று கேட்டார்.
"ஆங்... சாக்கு.." என்று கூறினாள்.
"வரணும்னா வந்திருக்கலாம்.. உங்களுக்கு என் மேல பாசம் இல்லை." என்றாள். "கொல்லாதடி.. உன் நினைப்பு தான் நெருப்புல போட்டு வாட்டுது." என்றார்.
"ஆங்... இங்க வேல்விழி அத்தை இருக்காங்க. உங்களை விட நல்லா தான் பார்த்துக்கறாங்க. சொகுசா தான் வாழறேன்." என்றாள்.
மீனாட்சி உதட்டை கடித்து, "ஏன்டி.. 'சும்மா இருக்கியா... இல்ல.. ஏதாவது விஷேஷம் இருக்கா?" என்று கேட்க வேல்விழியும் மருமகள் கூற வருவதை கேட்க அவளையே கண்டார்.
"அத்த... எங்க மாமியார் போன்லயிருந்து பேசினேன். வைக்கட்டுமா? அப்பறம் மச்சான் கல்யாணத்தை ஜோரா பண்ணுங்க வேலையிருக்கு வைக்கறேன்" என்று துண்டித்து விட்டாள்.
வேல்விழியோ ஏமாற்றத்தை தாங்கி மதுரவாணியை பார்க்க, "ரொம்ப தேங்க்ஸ் அத்தை. மாமனார் அவ்ளோ சொல்லியும், எனக்காக இந்த போன் பேச அனுமதிச்சதுக்கு" என்று நீட்டினாள்.
இங்கே மீனாட்சி மதுரா தன்னிடம் முகம் திருப்பாமல் இருக்கவே நிம்மதியடைந்தார். லேசாக வருத்தம் இருந்தது. மதுரவாணியிடம் இன்று பேசியதில் அழுகை வந்து சேர, தூரிகாவோ பெரிம்மா நம்பரை சேமித்துக் கொண்டாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
நேத்து ஒனு லீடர் ரொம்ப கொதிச்சு போய் கத்தினாங்க. பிரதிலிபி இன்பாக்ஸில் நீங்களும் இப்படி பண்ணிட்டிங்களேனு. அகிலனுக்கு வேற ஜோடி போட்டிருக்கலாம்னு மதுராவல நினைச்சு கஷடமாயிருக்குனு. கதை இப்படி எழுத தான் பிளான். சோ. அதுல என்ன ஹாண்டில் பண்ணறேன்னு தான் என்னோட சாமர்த்தியம்.
என் கதை என் இஷ்டம்னு நான் என்னைக்கும் ஞொல்ல மாட்டேன். கதை கான்சப்ட் எப்படி யோசித்திருக்கேனோ அந்த வழில கொண்டு போறேன்
தவறா எதுவும் போகாம கையாள்வேன். ரெஜிஸ்டர் லாகின் செய்தா கமெண்ட்ஸ் பண்ண முடியும். ட்ரை பண்ணுங்க. மேல லாகின் பத்தி போட்ட இடத்துல விவரம் இருக்கு
Super sis nice epi semmaiya pogudhu story 👍 👌 😍 unga story unga concept dhan sis neenga podra pair ennaikum best dhan so don't care about them🙂 eppdiyo madhura pesinadhu romba santhosham pa 🥰 aana manasula paka varuthangal eruku andha ponnuku🥺 kavya vum akilan um nalla vaazhanum🥰
SUPER MADHURA PURINJIKITTA THELIVANAVA AVA MACHAN KASTAPADA KUDATHUNU NINAIKIRA . KANDIPA INTHA CONCEPT NALLA THAN IRUKU LOVE RA FEEL THERIUM KAVIYA INIYAN ITHUVARAI LOVE PANALA JUST PALAGI MRG PANALAMNU THA NINACHI IRUKANGA SO ATHAN TAKNU VELIYA VANTHUTANGA UNGA CONCEPT EPOUME THAPPA AGATHU SISSY
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 37)
ஏன் பழி, பாவம், கொலை, வெட்டு எல்லாம்.. இந்த இனியன் ஒருத்தனுக்கே குத்தகை கொடுத்துட்டாங்களா என்ன..?
அகிலனும் பழி வாங்குவான், காவ்யாவும் பழி வாங்குவாள்.
கத்தியை இவன் தூக்கினால் மட்டும் தான் வெட்டுமா என்ன, அகிலன் காவ்யாவும் தூக்குவாங்கத் தானே...?
போடா, போடா கூறுகெட்ட குப்பையன், மானங்கெட்ட மடையன். கல்யாணம் நடக்கத்தான் போகுது, பார்த்து வயிறெரியத்தான் போற நீ.
😀😀😀
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
39 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
22 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
