மதுர ஜில்லா... மச்சானே!-36
அத்தியாயம்-36
கிராமத்தின் காலைகள் எப்போதுமே ஒரு தனி அழகைக் கொண்டவை. அந்த அதிகாலையிலும் கிழக்கு வானம் ஆரஞ்சு நிறத்தில் மெல்ல மலர்ந்து கொண்டிருந்தது. இரவு முழுவதும் விழுந்திருந்த பனித்துளிகள் வயல்வெளியின் நெற்பயிர்களின் நுனிகளில் வைரம் போல மின்னின.
அதியமான் வீட்டில் மட்டும் வழக்கத்தை விட பரபரப்பு அதிகமாக இருந்தது.
வாசலில் புதிதாக பெரிய கோலம். அதன் நடுவே சாணம் வைத்து செம்பருத்தி பூவை அலங்காரமாக வைத்தனர்.
காலையிலேயே பூஜையறையில் மீனாட்சி விளக்கேற்றி வைத்திருந்தார்.
அவரது முகத்தில் பல நாட்களுக்கு பிறகு ஒரு நிறைவான சந்தோஷம் தெரிந்தது.
"அகிலா... சீக்கிரம் கிளம்புப்பா... அப்பாவும் சம்பந்தியும் தரகர் பாலு கூட பத்து மணிக்கே மண்டபம் பார்த்துட்டு வர போறாங்க நாம புடவை எடுத்துட்டு வந்துடலாம்." என்றார்.
சட்டை பட்டனை போட்டுக் கொண்டே வெளியே வந்த அகிலனோ "இதோம்மா கிளம்பிட்டு தான் இருக்கேன்." என்றான்.
அவனைப் பார்த்த மீனாட்சி ஒரு நொடி ரசித்தார்.
பல நாட்களாக முகத்தில் இருந்த சோர்வு சற்றே குறைந்திருந்தது.
அதிலன் சிரிக்காமல் இருந்தாலும்... மனதை மூடி வைத்திருந்த இருள் கொஞ்சம் விலகியிருந்தது போல, அந்த மாற்றத்தை ஒரு தாயாக அவர் தெளிவாக உணர்ந்தார்.
சற்று நேரத்தில்... ராஜாராமும் தயாராகி வந்தார்.
"குட் மார்னிங் சம்பந்தி..."
"வாங்க சம்பந்தி..."
அதியமான் சிரித்தபடி கையைப் பிடித்தார்.
இருவருக்கும் நெருக்கம் கூடியதால், நண்பர்களை போல சாப்பிட்டு புறப்பட்டு போவதற்கு தயாராகியிருந்தார்கள்.
வாழ்க்கை எவ்வளவு வேகமாக மாறுகிறது என்று இருவருமே நினைத்து சிரித்தனர்.
"முதல்ல மண்டபம் முடிச்சிடலாமா?" என்று ராஜாராம் கேட்க "ஆமாம் சம்பந்தி" என்று கூறினார்.
அதியமான் இருவர் என்பதால் பைக்கை துடைத்தார். ராஜாராம் ஓட்ட, இருவரும் நண்பர்கள் போல கிளம்பினார்கள்.
ராஜாராம் அதியமான் ஊரின் மையப்பகுதிக்குச் சென்றார்கள். தரகர் பாலு ஏற்கனவே காத்திருந்தார்.
"வாங்க அய்யா... இந்த மண்டபம் நல்லா இருக்கும்.. ரீசண்டா இவரோட பெரியவர் புள்ளைக்கும் இங்க தான் கல்யாணம் நடந்தது." என்று பெரிய திருமண மண்டபத்தைப் பார்த்தனர்.
அதியமான் அன்று பெயருக்கு தானே வந்தார். இன்று நிதானமாக சுற்றிப் பார்த்தார்.
"பார்க்க நல்லாத்தான் இருக்கு..."
ராஜாராம் மெதுவாக கேட்டார்.
"எத்தனை பேர் உட்காரலாம்?"
"ஆயிரம் பேரு..."
"பார்க்கிங்?"
"நிறைய இருக்கு..." அதியமான் தலையசைத்தார்.
"நம்ம ஊர்ல சொந்தம் மட்டும் வந்தாலே ஏழுநூறு பேரு ஆகிடும்..."
"அப்ப இதுதான் சரி." ராஜாராமும் சம்மதித்தார்.
அங்கேயே முன்பணம் கொடுத்து மண்டபத்தை உறுதி செய்துவிட்டனர்.
அடுத்ததாக சமையல்காரரைச் சந்திக்கச் சென்றனர்.
பெரிய சமையல் கூடம் அங்கே அடுப்புகள் வரிசையாக இருந்தன. "என்ன மெனு வேணும் அய்யா?" என்று கேட்க,.
அதியமானோ "கல்யாண சாப்பாடு சாப்பிட்டவங்க இன்னும் பத்து வருஷத்துக்கு கல்யாணத்தை பத்தியும் சாப்பாட்டை பத்தியும் பேசணும்..." சமையல்காரர் சிரித்தார். "அப்படின்னா கவலை வேண்டாம். சரியான இடத்துக்கு தான் வந்திருக்கிங்க" என்றார்.
ராஜாராம் உடனே பேசினார்.
"எனக்கு ஒரு ஆசை..." என்றார்.
"சொல்லுங்க... சம்பந்தி" என்று அதியமான் செவிக்கொடுத்தார்.
"அமெரிக்காவுல இருந்து என் நண்பர்கள் சில பேரு வர்றாங்க... அவங்களுக்கு நம்ம தமிழ்நாட்டு சாப்பாடு சாப்பிடணும். லைப்லாங் மறக்க முடியாத வகையில நம்ம பாரம்பரிய உணவா இருக்கணும். அதோட இந்த ஊர் ஸ்பெஷலா வையுங்க" என்றார்.
அதியமான் சிரித்தார். அது நம்ம பொறுப்பு..." இருவரும் சேர்ந்து மெனு எழுத ஆரம்பித்தனர்.
காலைலைக்கு இட்லி, வடை, பொங்கல், பூரி.. சட்னி சாம்பார், வடகறி, சட்னி கூட நாலைந்து வச்சிடணும். ஒவ்வொன்னும் ஒவ்வொரு கலருல. புதினாசட்னி, தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, வெங்காயமல்லி சட்னி வச்சிடணும். கூடவே பாசிப்பருப்பு கருப்பட்டி முந்திரி பாதம் போட்டு பாயசாம்.
மதியம் வாழையிலையில் முழு விருந்து. மூன்று வகை பொரியல். இரண்டு வகை கூட்டு. அவியல். பீன்ஸ் பருப்பு உசிலி, கோஸ் பெரியல் வாழைக்காயே மீன்மாதிரி வறுவல் போட்டுடுவோம்.
வத்தக்குழம்பு கருவேப்பிலை குழம்பு வச்சிட்டு, பூசனிக்கா மோர் குழம்பு. முருங்கை சாம்பார், பருப்பும் நெய்யும் , மிளகு ரசம், இளநீர் பாயசம்.
ஜாங்கிரி, லட்டு. அப்பளம். ஊறுகாய்னுஅசத்திடலாம். சம்பந்தி... அக்காரவடிசல் கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க. நம்ம மதுரை பக்கம் கல்யாணத்துல அது இல்லன்னா ஏதோ குறைஞ்ச மாதிரி இருக்கும். அதையும் சேர்த்திடுப்பா.." என்று சமையல்காரரிடம் கூறினார்.
இறுதியில் வெற்றிலை, பாக்கு வாழைப்பழம், குல்கந்து, ஐஸ்க்ரீம் ப்ரூட் சாலட்னு வச்சிடலாம். இதுதான் கல்யாண சாப்பாடு." என்று அதியமான் மகிழ்ச்சியாக கூற,
"சூப்பர். இப்பவே எல்லாம் ருசிக்கணும்னு ஆசையே கூடுது" என்று ராஜாராம் கைதட்டினார்.
அதே நேரத்தில்... மீனாட்சி வீட்டில் வேறொரு வேலை நடந்துகொண்டிருந்தது.
காவ்யாவோ தந்தையோடு வந்தவள் அவர் சென்றதும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, "உங்க தங்கச்சி இல்லையா? இல்ல... அவங்களுக்கும் புடவை எடுக்க வருவாங்களேனு கேட்டேன்" என்று அகிலனை பார்த்து கேட்டாள்.
அகிலனோ தங்கையை ஏன் கேட்கறா, அவளுக்கும் இவங்களுக்கும் தான் உறவு பாவக்காயா இருக்கே என்று பார்த்தவன் காவ்யா காரணம் கூறவும் "தூரிகா காலேஜ் கிளம்பிட்டா. அம்மாவே அவளுக்கு சேலை எடுத்துடுவாங்க" என்றான்.
"நீங்க சாப்பிடலை?" என்று கேட்க, "அப்பவே கூழ் குடிச்சிட்டேங்க" என்று கூறி அவ்விடத்திலிருந்து ஒட்டமெடுக்கும் விதமாக செல்ல, மீனாட்சி சேலையை நேர்த்தியாக உடுத்தி வந்தார்.
நகரிலிருந்த பெரிய ஜவுளிக்கடைக்கு அனைவரும் சென்றனர். கடைக்காரர் உடனே வரவேற்றார்.
"வாங்க... என்ன வேண்டும்" என்று பணிப்பெண் கேட்க
மீனாட்சி பெருமையோடு "கல்யாண பட்டுபுடவை" என்று பூரித்தார்.
உடனே பட்டு புடவைகள் வரிசையாக மேசையில் குவிந்தன.
மஞ்சள் மெரூன், பச்சை, ரோஸ், வைன் கலர், அரக்கு. ஒவ்வொன்றாக விரிக்கப்பட்டது.
"காவ்யா.. உனக்கு எந்த கலர் பிடிக்கும்?" என்று மீனாட்சி கேட்க காவ்யா சிரித்தாள்.
"ஆன்ட்டி... நீங்க எடுக்குறதுதான் கல்யாண புடவை. என்னிடம் புடவையே இல்லை. நான் இதுவரை எடுத்ததில்லை. சோ இது நீங்க தான் சூஸ் பண்ணணும்.." என்றாள். மீனாட்சி ஒரு நொடி அவளைப் பார்த்தார்.
"இது உன் கல்யாணம்... உனக்கு பிடிச்சிருக்கணும்..." என்று கேட்க, காவ்யா புன்னகையோடு அகிலனைப் பார்த்தாள்.
"அவர்கிட்ட கேளுங்க ஆன்ட்டி." என்றாள். அந்த வார்த்தைக்கு "நானா?" என்று ஓரமாக நின்றவன் திடுக்கிட்டான்.
"ஆமா... உங்களுக்கு எந்த கலர் பிடிக்குமோ அதையே எடுங்க" என்று கூற, அவள் இதற்கு முன் புடவையே அணிந்ததில்லை என்றதால் அன்னையை பார்த்தான். அவரோ 'நீயே எடு' என்பது போல பார்வையால் உணர்த்தினார்.
அகிலன் மேசையில் இருந்த புடவைகளைப் பார்த்தான். இதற்கு முன்னும் ஒருத்திக்கு ஆசையாக புடவை எடுத்து தந்தது நினைவு வந்து ரணத்தை கூட்டியது. அந்த நினைப்பை தான் கடந்து வரவேண்டுமே. மெதுவாக அவன் கைகள் அங்கே காட்சிக்கு வைத்த புடவையை வருடியது.
நடுவே இருந்த ஆழ்ந்த மரகதப் பச்சை நிற பட்டு அவன் பார்வையை ஈர்த்தது. இந்த நிறம்... அவங்களுக்கு பொருந்துமா?' என்று மனதுக்குள் நினைத்தான்.
"இது... இந்த நிறம் ஓகே. சப்போஸ் அவங்களுக்கு வேறபிடிச்சிருந்தா கூட வேற தேர்வு செய்ய சொல்லுங்கம்மா. அவங்க நிறத்துக்கு எது கட்டினாலும் அம்சமா இருக்கும்" என்று மட்டும் சொன்னான்.
மீனாட்சி உடனே அந்தப் புடவையை எடுத்தார்.
"ரொம்ப அழகா இருக்கு. உடம்பு முழுக்க ஜரிகை." என்று காவ்யாவின் மேல் வைத்து பார்த்தார்.
பட்டு நிறம் அவள் முகத்தை இன்னும் பொலிவாக்கியது "இது பிடிச்சிருக்கா மா" என்று மீனாட்சி காவ்யாவிடம் கேட்டார்.
காவ்யா கண்ணாடியில் தன்னைப் பார்க்கவில்லை. அகிலனின் முகத்தையே பார்த்தாள். தன் நிறத்துக்கு தான் எல்லாமே சூட்டாகுமெனவும் அம்சமாக இருக்குமென கூறிவிட்டதால் அதுவே அவளுக்கு சந்தோஷம் தந்தது.
ஆனாலும் அகிலன் எதுவும்தன்னை பார்த்து பேசவில்லை என்றதால் "நல்லாருக்கு அத்தை." என்று மெதுவாக சொன்னாள்.
அந்த இரண்டு வார்த்தைகள் உதிர்க்க, அகிலன் திரும்பி பார்த்தான். இதுநாள் வரை ஆன்ட்டி என்று அழைத்தவள் அத்தை என்றதும் ஏற்பட்ட மாற்றம். மதுராவுக்கு வாங்கிய புடவை நினைப்பு கூட அந்த நொடி மறந்து போனது. காவ்யாவின் வார்த்தை தான் மனதில் சுற்றி சுழன்றது.
காவ்யாவோ என்னை காணாமல் ஏதோவொரு ரணத்தில் அகிலன் தவித்து நழுவுவதை அறிந்து, அவளை திடுக்கிட்டு பார்வையிட வைத்து, அவள் பக்கம் திரும்ப வைத்த கர்வத்தில் நின்றாள். அதற்கு தானே திட்டமிட்டு அத்தை என்றாள்.
மீனாட்சி இரண்டு மூன்று நாட்கள் முன் 'ஆன்ட்டி அங்கிள் எதுக்குமா? அத்தை மாமானு சொல்லு." என்று கூறியிருக்க, "ஐ வில் ட்ரை ஆன்ட்டி' என்றவள் சமயம் பார்த்து உச்சரிக்க மீனாட்சியோ புன்னகையுடன் நின்றார்.
அவருக்கும் மதுராவுக்கென புடவை எடுத்து வந்தவன், இன்று தத்தளிக்கும் நிலையில் நினைப்பை மாற்ற எண்ணிட,
காவ்யா அழைப்பில் அவளை கண்டு அல்லவா குறுகுறுவென பார்க்கின்றான்.
அகிலனின் தாயாக மனம் நிறைவு பெற்று அடுத்து, காவ்யாவுக்கு ரவிக்கை அளவு எடுக்கப்பட்டது.
"கை இவ்வளவு... கழுத்து எப்படி? பின்புறம் டிசைன்? ஆஹ்.. இது ஓகே" என்று டெய்லர் கேட்டுக்கொண்டே குறிப்பெடுத்தார்.
அதன்பின் உள்ளாடை பிரிவுக்கு செல்ல, அகிலன் கால்கள் தானாக புடவை செக்ஷனிலேயே நின்று விட்டது.
காவ்யாவோ அகிலனை கண்டு பணிப்பெண்ணை பார்த்தாள்.
"சைஸ் மேம்" என்று கேட்க, காவ்யா தன் அளவை கூறவும், எடுத்து முன் வைத்தாள்.
அடிக்கடி அகிலனை பார்த்து, "தூரிகாவுக்கு எடுத்தாச்சா அத்தை." என்று கேட்டாள். அடுத்து எடுக்கணும்மா. நேர்ல வாடி பிடிச்சதா எடுன்னு சொன்னா. முகத்தை திருப்பிட்டு போயிட்டா.
மதுராவை மனசுல நினைச்சவனே மறந்துட்டு வாழணும்னு இதயத்துல நெருப்போட போராடுறான்.
தூரிகா இதுல அத்தை மகளுக்காக பேசி யோசிச்சு, இப்ப.. உன்னை காரணமேயில்லாம பிடிக்காம திரியறா.
அதுவொன்னு தான் மனசுக்கு கஷ்டமாயிருக்கு. இதே முன்னனா இந்நேரம் துள்ளிட்டு திரிச்சு வேலையை இழுத்து போட்டு செய்வா. எல்லாம் இப்படி மாறிடுச்சு. புரிஞ்சுக்காம நடக்கறா." என்று மனதில் உள்ள வலியை வரப்போகும் மருமகளிடம் தெரிவித்தார்.
"கவலைப்படாதிங்க அத்தை... நான் இனியன் சொல்லி எதுவும் இங்க டிராமா பண்ணலைனு தெரிந்தா புரிந்துப்பாங்க" என்றாள்.
இப்படியே பேசி சிரித்து மதுரை ஜிகர்தண்டாவை ருசித்து சாப்பிட்டு முடித்து, வீட்டுக்கு வந்துசேரவே மாலை ஆனது.
வரும் பொழுதே அவளை அவள் தங்கிருந்த வீட்டில் இறக்கிவிட்டான். மீனாட்சி தான், "கொஞ்சம் நல்லா சாப்பிட்டு தூங்கும்மா" என்று கூறினார்.
"ம்ம்" என்று கூறியவள், அகிலனை கண்டு இறங்க, போன் அலறியது.
இனியன் காலிங்' என்று வந்ததை கவனித்து, போனின் தொடுத்திரையை பார்த்துவிட்டு அகிலனை காண, அவனும் ராஜாராம் மாமாவா என்று போனை பார்த்தவன், இனியன் என்றதும் காவ்யாவை ஏறிட்டான்.
இருவரது பார்வையும் சந்திக்க, அகிலன் ஏதாவது கேட்பானென காவ்யா காத்திருக்க, அகிலனோ "கிளம்பறேங்க" என்று வண்டியை எடுத்தான்.
மீனாட்சியோ "தூரிகாவுக்கு இந்த சேலை பிடிக்குதுனு சொல்ல மாட்டா பாரு. இந்த பிள்ளை மேல என்ன கோபமோ?'' என்று புலம்ப, "இனியன்... எதுக்கு கால் பண்ணிட்டு இருக்க?" என்று காவ்யா குரல் அகிலன் செவியில் விழுந்தது.
இனியன் கால் செய்து, அதை காவ்யா துண்டிக்காமல் பேசுவதை அறிந்தே வண்டியை இயக்கினான் அகிலன்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 36)
ஓ மை காட்..! ஒரு கல்யாணத்துக்கு என்ன மாதிரியான காலை சிற்றுண்டி, மதியம் கல்யாண விருந்து எப்படியெல்லாம் இருக்கணும், என்னென்ன ஐட்டமெல்லாம் இருக்கணும்ன்னு
அழகாவும், சுவையாவும் இருக்கிற மாதிரி பட்டியல் போட்டு இப்படி அசத்திப்பூட்டிங்களே..! நானே எதிர்பார்க்கலை, உங்க மெனு ஐட்டம்ஸ் சூப்பர், அசத்தலோ அசத்தல்.(உங்க ரெண்டு மகளோட கல்யாணத்துக்கும் பக்காவா இருக்கிங்க போல சூப்பர் சிஸ்).
புடைவை செலக்சனும் சூப்பர்.
இந்த எழவெடுத்தவன் எதுக்கு இப்ப போன் பண்றான் ? அவன் மூஞ்சிலயே நாலு போடுங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Kalyana sappadu nu chumma ah va na ra mathiri evolo menu adengappa apadi iruku .
Kaviya akilan oda thavippu ah sattunu poga vachita athai nu koopitu .ennavam iniyan ku ippo ethuku phone pannan Kaviya again andha mandai la oraikira mathiri ethachum sollu appo va chum amaithi ah irukan ah nu parpom
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
39 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
22 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
