Forum

மதுர ஜில்லா... மச்ச...
 
Notifications
Clear all

மதுர ஜில்லா... மச்சானே!-35

8 Posts
8 Users
6 Reactions
76 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#176]

அத்தியாயம்-35

   வீட்டின் பின்புறத் தோட்டமிருக்க, மதிய வெயில் மெதுவாக இறங்கி, மாமரத்தின் நிழல் தரையில் நீளமாகப் படர்ந்திருந்தது.

   தூரிகாவின் வார்த்தைகள் இன்னும் அகிலனின் காதுக்குள் சுற்றிக் கொண்டே இருந்தன.

"அந்த பொண்ணு கல்யாண மேடை வரைக்கும் வந்து வேண்டாம்னு சொன்னா... என்ன அண்ணா பண்ணுவ? இனியன் அண்ணா உன்னை பழிவாங்க அனுப்பி இருந்தா.?" என்று அடுக்கியபடியிருக்க அவன் பெருமூச்சு விட்டான்.

'கடவுளே... என் வாழ்க்கையை ஏன் இப்படி ஒவ்வொரு தடவையும் சோதிக்கிற?' என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டான்.

அந்த நேரம் அவனது தோளில் மெதுவாக ஒரு மென்மையான கை தீண்டியது.

திரும்பிப் பார்த்தான் காவ்யா தூரிகாவை உறுத்தி பார்த்து, "உங்களிடம் கொஞ்சம் பேசணும்.." அவள் குரல் மென்மையாக இருந்தது.

அகிலன் ஒரு நொடி தயங்கினான். "இங்க வேண்டாம்." என்று சொல்லிவிட்டு வீட்டின் பக்கமாக இருந்த தென்னைத் தோப்பை நோக்கி கையை காட்டி அவனையும் அழைத்து நடந்தாள்.

மீனாட்சியோ மகனிடம் "ஏதாவது மனசுல இருந்தா காவ்யாவிடம் மனசு விட்டு பேசிடு அகிலன்" என்று கூறவும் அவனும் அமைதியாக காவ்யா பின்னால் சென்றான். 

இருவருக்கும் நடுவே சில நொடிகள் அமைதி. காற்றில் தென்னை இலைகள் மட்டும் சலசலத்தன. முதலில் பேசியது அகிலன் தான்.

"ஏங்க இப்படி பண்ணீங்க?" என்றான். காவ்யா புரியாமல் பார்த்தாள்.

"என்ன பண்ணிட்டேன்?" என்றாள் காவ்யா.

"வீட்டுல எல்லாருக்கும் முன்னாடி... என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னதை." என்றதும்

காவ்யா விளையாட்டாகவும் எடுத்துக் கொள்ளவில்லை.

"உங்களை பத்தி நான் சொன்னது ஒவ்வொன்னும் உண்மை." என்றாள்.

"உண்மையா?" என்று ஏளனமாய் தன்னை தானே மட்டமாய் நினைத்து நின்றான்.

"ஆமாம்." என்றவளிடம் அகிலன் தலையைத் தாழ்த்தினான்.

"உங்களுக்கு என்னைப் பற்றி ஒன்னுமே தெரியாது." என்று மறுத்தான்.‌

"தெரியும்... ஒரளவு தெரியும்." என்றாள். 

அகிலனுக்கு கோபம் உண்டாக "என்ன தெரியும்?" என்று கத்திவிட்டு மௌனமானான்.

"நங்க நல்லவர்." என்றாள் காவ்யா சாந்தமாக.

"உங்க வாழ்க்கையை என்னிடம் ஒப்படைக்க, அது போதுமா?" என்று கேட்டான்.

"எனக்கு போதும்." என்றவளை கண்ட அகிலன் கண்களை மூடினான்.

"இல்லங்க... அது போதாது. நான் இன்னொருத்தியை காதலிச்சவன். இப்பவும் மதுராவோட வாழ்க்கை என்னால சிக்கலாகுதுனு கஷ்டமாயிருக்கு." என்றவன் வெளிப்படையாகச் சொல்லிவிட்டான்.

"இப்படி இருக்கறவன்...

உங்களுக்கு நல்ல கணவனா இருக்கவே முடியாது அதுவுமில்லாம நீங்க இனியன் விரும்பினவர்" என்றதற்கு காவ்யா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"நான் உங்களுக்கு நியாயம் செய்ய முடியாது. ஒரு கணவன்...

தன்னோட மனைவியை முழு மனசோட நேசிக்கணும்.. ஆனா... என்னால... இப்ப சத்தியமா நேசிக்க முடியாது." அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவன் மனதிலிருந்து வந்தது. 

காவ்யா மெதுவாக பார்வையிட்டு, "நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா?" என்றாள் பதிலுக்கு.

"கேளுங்க." என்றான் அகிலன். 

"நான் மட்டும் இனியனை மறந்துட்டேனா?" என்று எதிர் கேள்வி கேட்டாள். அகிலன் அவளை விசித்திரமாக பார்த்தான்.

"அப்படின்னா?" என்று குழப்பவாதியாக மாறி நின்றான். 

"இனியன் என் வாழ்க்கையில நடந்த ஒரு அத்தியாயம் ஜஸ்ட்  அவ்வளவுதான். இப்ப அவன் நினைவு வந்தா வலிக்குது. இல்லைன்னு சொல்லலை. ஆனா... அதுக்காக வாழ்நாள் முழுக்க நான் அவனை நினைச்சு அழணும்னு எந்த கட்டாயமும் இல்லையே. அதே போல தானே உங்களுக்கும்.." என்றவள் வார்த்தைகள் அகிலனுக்குள் மெதுவாக இறங்கின.

"நீங்க மதுராவை உடனே மறக்கணும்னு நானும் சொல்லலை. மறக்கவும் முடியாது. முதல் காதலை யாராலயும் முழுசா மறக்க முடியாது. அதுக்காக அதையே சுமந்துட்டு வாழ்க்கையே தேங்கிடவும் முடியாது. நாம போக வேண்டிய இடத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு வேற பஸ்ல ஏறி உட்கார முடியுமா. கிளம்பி போன பஸ்ஸை நினைச்சி தான், அய்யோ அதுல ஏறமுடியலைனு பீல் பண்ண முடியுமா? கடவுள் நாம போக எடுத்த டிக்கெட்டுக்குரிய பஸ் வர்றப்ப அதுல தானே போகணும்." என்றவள் பேச்சை கேட்டு அகிலன் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.

"என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா... நான் உங்ககிட்ட நாளைக்கே 'என்னை காதலிங்க'ன்னு கேட்க மாட்டேன். நேசிக்க சில மாதங்கள்.. வருஷம் கூட ஆனாலும் ஆகலாம்னு  எனக்கும் தெரியும். உங்களுக்கு எவ்வளவு நாள் வேணுமோ... அவ்வளவு நாள் எடுத்துக்கோங்க. நானும் எனக்கு தேவையான டைம் எடுத்துப்பேன்." என்றவளை கண்டு அகிலன் ஆச்சரியப்பட்டான்.

"ஏன் இவ்வளவு நம்பிக்கை? நான் மாறாம போயிட்டா. நீங்க அமெரிக்காவுல இருக்கறவங்க. இது குக்கிராமம். நமக்குள்ள செட்டாகுமா?" என்றான். 

காவ்யா சிரித்தாள் "நோ சொல்ல என்ன காரணம்னு நிறைய யோசிக்கறிங்க போல. நான் காதலிச்ச இனியன்... என்னை ஏமாத்திட்டான். ஆனா... நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறவர்... ஒரு பொண்ணை ஏமாத்த மாட்டார்னு நம்புறேன்." என்றதும் அகிலனின் நெஞ்சைத் தொட்டது.

"உங்களுக்கு தெரியுமா? எனக்கு உங்களை பிடிச்சதுக்கு இன்னொரு காரணம் மதுராவை நீங்க எந்தளவு விரும்பினிங்கனு தெரிந்தப்பிறகு தான். உங்க கண்ணும், மதுராவோட வாடிய முகமும் சொல்லிடுச்சு. 

  இனியனுக்கு எல்லாம் என்னை நேசித்தும், மதுராவை மணந்துட்டான். அவனுக்கு எதுவும் உறுத்தலை. ஆனா உங்களுக்கு ஒருத்தியை நேசித்துட்டு மறக்க முடியாம தவிக்கறிங்க பாருங்க. அந்த நேசமும் அந்த மனசும் எனக்கு கிடைச்சா, எனக்குனு வர்றப்ப, அதை அனுபவிக்கும் போது என்னை விட சந்தோஷமான ஒருத்தி உலகத்துல இருக்க முடியாது.

  ஒரு நல்ல மனிதனோட வாழணும்னு தான் ஆசைப்படறேன். பெரிய பணக்காரன் வேண்டும்னு இல்ல. வெளிநாட்டு வாழ்க்கையுமே வேண்டும்னு இல்ல. 

   என்னை மதிக்கிற... நான் மதிக்கிற... ஒருத்தர் லைப் பார்ட்னரா இருந்தா போதும்." என்றாள். அகிலன் காவ்யா பேசபேச ஸ்தம்பித்து நின்றான்.

அவள் சொன்ன ஒவ்வொரு காரணமும்... அவனுடைய குணத்தைப் பற்றித்தான் இருந்தது.

அகிலன் உடனடியாக எந்த வினையும் ஆற்றாமல் இருக்க, 

"இப்பவே பதில் சொல்லாதீங்க. உங்க மனசுக்கு எது சரின்னு தோணுதோ... அதை மட்டும் செய்யுங்க. எனக்காக... பரிதாபப்பட்டு... கல்யாணம் பண்ணிக்காதீங்க. ஆனா... மதுராவை நினைச்சு... உங்க வாழ்க்கையையே தண்டிச்சுக்காதீங்க.

அவரவருக்கு இந்த பூமில பிறந்தப்பவே ஒருத்தியை ஜோடி போட்டு தான் பிரம்மன் படைச்சிருப்பார்."

அகிலனின் உள்ளத்தை முழுவதுமாக உலுக்கியது.

முதல் முறையாக... ஒரு பெண்ணாக அவளை காணாமல், தன்னை உண்மையாகப் புரிந்துகொண்ட மனிதராக பாவித்தான். அவன் கண்களில் இருந்த குழப்பம் மெதுவாக சிந்தனையாக மாறியது.

  தொப்பென சப்தம் கேட்க, இருவரும் ஒரே நேரத்தில் அந்த திசையை நோக்கித் திரும்பினர்.

  அகிலனோ சத்தம் வந்த திசையை கண்டு, "தென்னங்கீற்று விழுந்திருக்கு" என்றான். 

காவ்யா இதயமிருக்கும் பக்கம் கையை வைத்து நிதானித்தாள். இப்படி மேலிருந்து பொத்தென்று பேசிக் கொண்டிருக்கும் போது ஆளுயர தென்னங்கீற்று விழுந்தால் பயப்படாமல் இருக்க முடியுமா? அதுவும் தலையில் விழுந்தால் என்னாகும்?

  இவள் திகிலுடன் நிற்க  அகிலனோ அதற்கு மாறாக புன்னகை பூத்து தென்னம் மரத்தை உற்று உற்று பார்வையிட்டு "தென்னம் பூ பூத்திருக்கு." என்றான்.‌

பச்சை ஓலைகளுக்கு நடுவே... பொன்னிறத்தில் மடிந்து நின்றது தென்னம்பூ.

"சோ... இதுக்கு என்ன அர்த்தம்?" என்று காவ்யா கேட்டாள்.

அகிலன் முகத்தில் முதன் முறையாக ஒரு இயல்பான புன்னகை மலர்ந்தது.

"எங்க ஊர்ல... தென்னைமரம் பூத்தா... வீட்டுல நல்ல காரியம் நடக்கப் போகுதுன்னு சொல்வாங்க." என்றான்.‌

காவ்யா கண்களை பெரிதாக்கினாள்.

"அப்படியா?"

"ஆமா."

"அம்மா..." என்று அகிலன் சத்தமாகக் கூப்பிட்டான்.

அவன் குரலைக் கேட்டு... மீனாட்சி, அதியமான், ராஜாராம் மூவரும் வெளியே என்னவோ ஏதோவென வந்தனர். இவர்கள் பேசவும் நாசூக்காய் இந்தபக்கம் பாராது வேறு வேலையில் கவனம் செலுத்துவது போல நின்றியிருந்தனரே. 

"என்னப்பா?" என்று அதியமான் வரவும், "என்ன அகிலா" என்று மீனாட்சியும் வந்தனர். 

"அம்மா... நம்ம தென்னை.. பூத்திருக்கு..." என்று மேலே காட்டினான். மீனாட்சி ஒரு நொடி நம்பாமல் பார்த்தார்.

பிறகு... கண்கள் சந்தோஷத்தில் மலர்ந்தன.

"அடியாத்தி.. எத்தனை காலம் இந்த மரம் இருக்கு. இன்னிக்கு தான் பூவிட்டிருக்கே." என்று இரு கைகளையும் ஒன்றாக இணைத்துக் கொண்டார்.

"மதுரை மீனாட்சி தாயே... நல்ல சகுனம்..." என்று அதியமானும் மேலே பார்த்து புன்னகைத்தார்.

"நம்ம ஊர்ல வீட்டுத் தென்னை பூத்தா... வீட்டுல சுபகாரியம் தள்ளிப் போகாதுனு சொல்வாங்க" என்றார் அதியமான். ராஜாராமும் ஆர்வமாக மேலே பார்த்தார்.

"நாங்க வெளிநாட்ல வளர்ந்துட்டோம். இதெல்லாம் காவ்யாவுக்கும் தெரியாது." என்று ராஜாராம் கூற, மீனாட்சி சிரித்தார்.

"இது சாதாரண பூ இல்ல சார். தென்னை பூக்குறதே வீட்டுக்கு வளம் வரப்போகுதுன்னு பெரியவங்க சொல்வாங்க. பணம்... பெருமை... திருமணம்... புது சந்தோஷம்... ஏதாவது நல்லது கண்டிப்பா நடக்கும்." என்றார்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட காவ்யா... அறியாமலேயே அகிலனைப் பார்த்தாள்.

அவனும் அதே நேரத்தில் அவளைப் பார்த்தான்.

இருவரின் பார்வையும் ஒரு நொடி நேர்க்கோட்டில் சந்தித்தது. 'அப்ப நம்ம திருமணம் நடந்திடுமோ' என்று கண்கள் பேசிக்கொண்டது.

இந்த முறை அகிலன் பார்வையை உடனே திசை திருப்பவில்லை. அவன் உதட்டில் மெதுவாக ஒரு சிரிப்பு மலர்ந்தது.

அதைப் பார்த்த மீனாட்சி... மனதிற்குள் இறைவனை நினைத்து கண்களை மூடிக் கொண்டார். 'அம்மா... என் மகன் இத்தனை நாளைக்கு பிறகு சிரிக்கறான்... இந்த சிரிப்பு அவன் வாழ்க்கை முழுக்க நிலைக்கணும்.' என்று மனமார வேண்டிக்கொண்டார்.

தென்றல் காற்று வீசியது. தென்னம்பூ மெதுவாக அசைந்தது.

இந்த அற்புதமான நாளிலேயே மற்ற விஷயத்தை பேசினார்கள்.

   வீட்டில் தூரிகாவுக்கு மட்டும் அண்ணனின் இந்த திருமணம் பிடிக்கவில்லை. 

   இனியனை விரும்பியவள் அகிலன் அண்ணனை தானாக வந்து மணக்க கேட்டது ஏதோ தவறாகவே நினைத்தாள். அவள் சொல்லுக்கு இங்கே அம்மா அப்பா செவிமடுக்காமல் இருக்க, அண்ணனும் பெற்றவர் எண்ணத்திற்கு விட்டுவிட்டாரே என்று கோபமானது. 

  இதற்கு அண்ணனிடம் கோபம் காட்டாமல் இருந்தாலாவது தனது பேச்சை கேட்டிருப்பாரோ என்று நினைத்தாள். 

   எப்படியும் ரிஷப்ஷன் இங்கு வைப்பதில்லை. கல்யாணம் மட்டுமே ஊரும், உற்றார் உறவினரும் என்று அழைப்பிதழை அடிக்க பேசினார்கள்.

  அதுவரை ஒரே வீட்டில் மாப்பிள்ளையும் பொண்ணும் இருக்கமுடியாதென்ற காரணத்தால் அகிலனின் பண்ணை வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடுகள் நிகழ்ந்தன.‌

  அது சற்று ஒதுக்குப்புறமாக தங்கும் வசதியுடன் தான் இருந்தது. அதற்கும் அகிலன் தான் இருவரையும் காரில் அழைத்து சென்று இறக்கினான். கூடவே நண்பன் ரகுவிடம் மணக்க போகும் பெண் என்று அறிமுகப்படுத்தினான்.‌

  அவனோ 'மச்சி... அன்னிக்கு என்னடா சம்பந்தமேயில்லாம இவங்களை கூட இருந்தாங்களேனு நினைச்சேன். வாழ்த்துகள் டா." என்று மனதார வாழ்த்தினான். 

   பிறகு மற்ற தேவைகளை பார்த்து செய்துவிட்டு காவ்யாவுக்கும் ராஜாராமுக்கும் வேலைக்கு ஒரு பெண்ணை அங்கே நிறுத்தினான்.

  எல்லாம் சரியாக அமைந்தப்பின் அகிலன் புறப்படுவதாக நகர, "ஒரு நிமிஷம்." என்றாள் காவ்யா. 

  அகிலன் நிதானமாக திரும்பி என்ன என்பது போல பார்வையிட, "இல்லை.. சொல்லறேன்னு என்னை தப்பா நினைக்க கூடாது. 'டிட் பார் டட்'னு" என்று இழுத்தாள். 

"சொல்லுங்க" என்றான் அகிலன். ஏதோ இனியனை எரிச்சல் படுத்தும் செயலை செய்ய முற்படுவதாக சந்தேகித்தான். 

"அந்த தெருவுக்கு தெரு கட்அவுட்ல ஜோடியா பிக்சர் வச்சாங்களே. அப்படி... எனக்கும் வேண்டும். நம்ம சேர்ந்து எடுத்து வைக்கணும்." என்றாள். 

  அகிலனோ 'பழிக்கு பழி'யே தான் என்று சிறிது யோசித்தான். 

தந்தை பெரும்பாலும் பிரச்சனையை தவிர்க்க கூறுவாரே. இவளோ ஏத்தி விடும் வகையில் கூறினால் மதுரா இதனால் பாதிக்கப்படுவாளா?' என்று அகிலன் யோசிக்க, பக்கத்திலிருந்த ரகுவோ ''அட நம்ம மச்சான் கல்யாணம்... தூள் படுத்திட மாட்டோம். முன்னயாவது வெறும் அகிலன். இப்ப நம்ம பஞ்சாயத்துல ஜெயித்து பெயரை வாங்கியவனாச்சே. சும்மா.. தெருவுக்கு தெரு வச்சி அசத்திட மாட்டேன். 

  நீங்களும் அகிலனும் இருக்கற போட்டோ மட்டும் தந்துடுங்க" என்றான். காவ்யா புன்னகைக்க, அகிலனோ "ஏன்டா... முதல்ல வண்டியை எடு. யோசித்து செய்யலாமுங்க" என்று கூறினான். 

காவ்யாவோ முகம் வாடி மறுக்க போகின்றான் என்று புரிந்து அமைதியாள்.

தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

 


 
Posted : July 16, 2026 6:41 am
(@dharsinipriya)
Posts: 59
Trusted Member
 

Super sis nice epi 👍 👌 😍 renduperum seraporadhu romba happy pa Akilan sammadhipaan nu nenaikave ella😀 kandipa banner vechi andha iniyan na verupethanum pa🥰 aana madura va nenacha than konjam kashtama eruku🥺


 
Posted : July 16, 2026 8:24 am
(@guna-sundari)
Posts: 56
Trusted Member
 

Wow akilan accept for the marriage. But eniyan will do any confusion? Very intresting sis.


 
Posted : July 16, 2026 9:18 am
(@subhakumar85)
Posts: 44
Eminent Member
 

Athellam marukka maatan.. 


 
Posted : July 16, 2026 11:52 am
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 35)

காவ்யா சொல்றதும் ஒரு விதத்துல நியாயம் தான், முதல் காதலை யாராலேயும் மறக்க முடியாது தான். அதுக்காக அங்கேயே தேங்கிடவும் முடியாது தான். ஆனால் அந்த முதல் காதலான மதுரா இனியன் விஷயத்துல சம்பந்தப்பட்டவங்க ஒரு உறுத்தலோடான வாழ்க்கையைத் தானே கடைசி வரைக்கும் வாழணும். ஏன்னா, காவ்யாவோட கடந்தகாலமும் மதுராவோட கடந்த காலமும் தானே நிகழ் காலத்துலயும், இனி வரும் எதிர்காலத்துலயும் இணையப் போறாங்க. இதுல யாராவது ஒருத்தர் இன்னமும் தங்களோட கடந்த காலத்துலயே தேங்கி நின்னுட்டால் வாழ்க்கை இன்னும் சிக்கலாயிடும் தானே ? அப்படி எதுவும் ஆகாமல் இருந்தால் சரி தான். இந்த ரைட்டர் ஜீ வேற, வேற ஹீரோயினை இறக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டு இந்த கதையை எழுத உட்கார்ந்துட்டாங்கன்னு நினைக்கிறேன். அவங்களுக்கு இதே பெட்ரோமாக்ஸ் லைட் தான் வேணும் போல. அப்புறம் கடவுள் விட்ட வழி.

அதானே, எதுக்கு இந்த சீண்டி விடற வேலையெல்லாம், இனியனை கடுப்பேத்தப்போய்
அது மதுராவை வருத்தப்படுத்தும் தானே. ஒரு நல்ல பெண்ணோட மனசு சங்கடப்பட்ட அது யாரோட வாழ்க்கைக்கும் நல்லதில்லைத் தானே..?

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : July 16, 2026 3:12 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 49
Trusted Member
 

Kaviya pesurathu ellam seri ah than iruku aana ithula enna na ivanga past life present ah affect panna ma irukanum athu than konjam yosanai ah vae irukku yen na iniyan akilan madhura kaviya ellar um parthuka vaipu athigam apadi aacident ah meet pannum pothu kooda sangadam varama irundha seri 


 
Posted : July 16, 2026 4:43 pm
(@kalidevi)
Posts: 56
Trusted Member
 

avlo yosicha akailan thennam poo poothu iruku nu pathutu udane othukittan ithu ena dasari eppadium kalayanam panama iruka mudiyathu kaviya va ellarkum pidichiduchi vera nadaktum


 
Posted : July 16, 2026 5:00 pm
(@kothaihari)
Posts: 54
Trusted Member
 

காவ்யா செம....


 
Posted : July 22, 2026 12:38 am

Scroll to Top