மதுர ஜில்லா... மச்சானே!-26
அத்தியாயம்-26
மறுநாள் காலை... பன்னீர் மரத்தின் நிழலில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தாள் நிலானி. அந்த பஸ் ஸ்டாப்பைப் பார்த்ததும் மனம் கனத்தது. 'இதை இனியன் மச்சான் ஊருக்காக வந்த புதிதில் கட்டி வைத்தார்னு எவ்வளவு பெருமையா சொல்லிட்டிருந்தோம். ஆனா... அதே வீட்டுல என் அக்கா கஷ்டப்படறாளே' என்று நினைத்தவளின் கண்கள் கலங்கின.
அப்போது அங்கு வந்தான் எழிலரசன். "என்ன நிலானி... அப்ப இருந்து பார்க்கறேன். பஸ் ஸ்டாப்பை உத்து உத்து பார்க்கற" என்று வந்தான். எழிலரசன் கொஞ்ச நேரம் முன் எதிரே கடையில் இருந்தான். கூடயிருந்த நண்பர்கள் சிலர் 'டேய் உங்க அத்தை பொண்ணு போய் பேசு. ரிசல்ட் வந்துச்சு' என்று அவர்களாவே பேச காரணம் கூறி அனுப்ப வந்து நின்றான்.
எதிரே நண்பர்கள் வேறு இவனையே பார்வையிட, அந்த ஜோரில் கேட்டுவிட்டான்.
நிலானிக்கு இருந்த கடுப்பில், "ம்ம்ம்.. பஸ் ஸ்டாப்பை தான் பார்த்தேன் இனியன் மச்சானோட பெருமை பேசுது. அதோட நேத்து வீட்டுக்கு வந்தேன். எங்கக்காவை இனியன் மச்சான் கொதிக்கற டீயை முகத்துல ஊத்தி, ரசித்ததையும் பார்த்தேன். ரொம்ப பெருமையா இருந்தது" என்று முகம் திருப்பி கொண்டாள்.
எழிலரசனை போக விட்டு நண்பர்கள் பின்னால் வந்தவர்களோ "ரிசல்ட் வாங்க போறியாம்மா?" என்று கேட்க அவள் தலையசைத்தாள்.
"எவ்வளவு மார்க்மா?" என்று கேட்க, மற்றவர்களிடம் முகத்தை காட்ட முடியுமா அதனால் பணிவாக மார்க்கைச் சொன்னாள்.
"சூப்பர்மா... உனக்கு நல்ல காலேஜே கிடைக்கும்." என்று எழிலரசனின் நண்பர்கள் புன்னகைத்தனர்.
அந்த சிரிப்பைக் கூட திருப்பிக் கொடுக்க முடியவில்லை நிலானியால்.
"டேய்.. ஒரு நிமிஷம் பேசிட்டு வர்றேன்" என்றதற்கு நண்பர்கள் கத்தி விட்டு நகர்ந்தனர்.
"நிலானி..." என்று எழிலரசன் அழைக்க, "ஒண்ணும் சொல்லாதீங்க. மச்சான்" என்று முடித்துவிட்டாள்.
அவ்வளவுதான் அதே நேரம் பேருந்து வந்தது.
நிலானி ஏறினாள்.
சில நொடிகள் கழித்து எழிலரசனும் அதே பேருந்தில் படிக்கட்டில் ஏறினான். முன்பு போல சாதாரணமாக அவளருகே போய் பேச மனம் வரவில்லை. இருவருக்கும் இடையில் ஒரு பெரிய சுவர் எழுந்தது போல இருந்தது.
அடுத்த நிறுத்தத்தில்... மார்க் ஷீட் வாங்க பள்ளிக்குச் செல்ல நிலானி இறங்கினாள்.
எழிலரசன் மட்டும் இன்னும் ஆறு நிறுத்தங்கள் தாண்டி கல்லூரிக்குச் செல்ல வேண்டியிருந்தது.
நண்பர்கள் மீண்டும்...
"மச்சி... அத்தை பொண்ணு உன்னை தான்டா திரும்பி திரும்பி பார்க்குது. ஆனா பயப்படறாடா." என்று கிண்டலடிக்க...
படியில் நின்றியிருந்தவன், அவனை தாண்டி இறங்கி சென்ற நிலானியைப் பார்த்தபடி யோசித்தான்.
'இவ ஏன் என்னைப் பார்த்து கூட பயப்படுறா...? இனியன் அண்ணனை மாதிரியே... என்னையும் நினைக்க ஆரம்பிச்சுட்டாளா?' என்று சிந்தித்தான்.
அவனே இன்று தான் இவளிடம் ஆசையாக பேச துவங்கினான். அதற்கே முட்டுக்கட்டை வந்து விழுந்திட நண்பர்களிடம் பேச்சை திசைதிருப்பி விட்டான்.
இங்கு நிலானி சென்றதும் இளையமதி அகிலன் வீட்டிற்கு
மதிய நேரம் சென்று நின்றார்.
மீனாட்சி வாசலில் மிளகாயை காயப் போட்டுக் கொண்டிருந்தார்.
"வாங்க மதினி" என்று மீனாட்சி உள்ளே அழைத்தார்.
அதியமானுக்கோ தங்கை இளையமதி மதுரா திருமணத்திற்கு கூட பத்திரிக்கை வைக்க வரவில்லை. மதுரா இனியன் திருமணம் முடிந்து இன்று தான் வந்திருக்க, எதையும் மனதில் நிறுத்தி கோபம் காட்டாமல் தண்ணீர் கொடுத்தார்.
"நிலானி பிளஸ்டூ முடிச்சதா பேசிக்கிட்டாங்க. மார்க் எவ்வளவு?" என்று ஆர்வமாகக் கேட்டார். அண்ணன் நிலானி படிப்பு மார்க் கூறுவதற்கு வந்ததாக நினைத்துக் கொண்டதை மதி நினைத்தார். கூடுதலாக சின்ன அண்ணனுக்கு தன்மீது கோபமில்லையே என்று உடைந்தார். இவரையா வெறுத்தோம் என்று.
இளையமதி மதிப்பெண்ணை சொல்ல... ''ரொம்ப நல்ல மார்க்."
என்று பாராட்டினார்.
தூரிகா ஓடிவந்து, "மதுரா எப்படியிருக்கு அத்தை. வந்திருக்கா" என்று கேட்டதுமின்றி வாசலை ஏறிட்டாள். இளையமதியின் கண்கள் கலங்கின.
அதை கவனித்த மீனாட்சி...
"என்னாச்சு மதி?" என்று கேட்டார். இளையமதியின் கண்ணீர் உடைந்தது. "என் மூத்த பொண்ணு... சரியாவாழலை மதினி." என்றார். அதன் பிறகு... மதுரா காட்டிய காயங்கள்... இனியனின் கொடுமைகள்... நேற்று கொதிக்கும் டீயை மேலே ஊற்றியது வரை அனைத்தையும் அழுதபடியே சொன்னார்.
அதை கேட்ட தூரிகா வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள்.
"அப்பவே எனக்கு பயமா இருந்துச்சு..." என்றாள். மீனாட்சியின் கண்களும் சிவந்தன. அதியமான் தலையைக் குனிந்தார். பெரிய அண்ணன் இந்தளவு செல்வதை கண்டு வெட்கினார்.
மீனாட்சியோ 'என் வயிற்றுல இருந்த உசுரு சண்டையில தெரியாம தான் போச்சுனு சொன்னிங்க. இதெல்லாம் கேட்டிங்களா... அவர் வேண்டிமின்னே குறுக்கால பேசறேன்னு என்னை தள்ளி விட்டிருக்கார்.
வீட்டுக்கு வந்த மருமகளை இந்தளவு கொடுபமை பண்ணியதுல தெரியலை அவர் இதுவும் செய்வார் இன்னமும் செய்வார்." என்றார் மீனாட்சி. அதியமானுக்கு அண்ணன் தெரியாத்தனமாக தான் தள்ளி விட குழந்தை போயிருக்குமென்று இந்நாள் வரை நினைக்க, அதுவும் அண்ணனின் கனிவற்ற குணத்தில் அழிந்தது தான் என்று புரிந்தது. இவர்கள் என்றோ நடந்து முடிந்ததை பேசி முடிக்க, இவை அனைத்தையும் உள்ளறை ஜன்னல் வழியாகக் கேட்டுக் கொண்டிருந்தான் அகிலன்.
ஒவ்வொரு வார்த்தையும் அவனது நெஞ்சில் கத்தியாய் இறங்கியது.
மதுரா... அந்த அளவுக்கு கஷ்டப்படுகிறாளா? என்று கண்ணை மூடினான். இரண்டு துளி கண்ணீர் விழுந்தது.
அவனால் அதை தாங்க முடியவில்லை. தன்னை நேசித்ததை தவிர, எந்த குற்றமும் அறியாத பெண். அவளது சுட்டிகையான குணத்திற்கு ராணி போல வாழலாம். ஏன் இந்த இனியன் இப்படி வாட்டுகின்றான் என்று துவண்டான்.
அந்த நேரம்... இளையமதி கண்களை துடைத்து, எழுந்து நின்றார்.
"என் நிலானியை... படிக்க வைக்கணும்னு ஆசை இருந்துச்சு. இப்ப அந்த ஆசையே வேண்டாம்." அவளை... அகிலன் கட்டிக்கட்டும். அப்ப தான் பெரியண்ணாவுக்கு பதிலடியா இருக்கும். நிலானியாவது சந்தோஷமா இருந்தா போதும்." என்றார்.
வீட்டில் இருந்த அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
யாராலும் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை.
அப்போது அறைக்கதவு மெதுவாகத் திறந்தது. வெளியே வந்த அகிலன்... கண்களைத் துடைத்துக் கொண்டு,
"அத்தை..." என்ற ஒரே வார்த்தையுடன் நின்றான்.
அவனைப் பார்த்த அனைவரின் பார்வையும் அவன் மீது நிலைத்தது.
அகிலன் மெதுவாக,
"எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்காதிங்க அத்தை.
நிலானியைப் பற்றி முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி... முதல்ல மதுரா வாழ்க்கையை காப்பாத்துற வழியைப் பார்ப்போம். இனியனிடம் நிதானமா பேசி பாருங்க.
நிலானி பிளஸ் டூ படிச்சி முடிச்சிருக்கா. அவளையாவது காலேஜ் சேர்த்து விடுங்க. பணம் தேவைப்பட்டா அப்பா தருவார். அதை விட்டு சின்ன புள்ளைக்கு கல்யாணம் அதுயிதுனு இன்னொரு தப்பை.. பெரிய தப்பை மறுபடியும் செய்யாதிங்க. அது குழந்தை.. அதை போய் எனக்கா கட்டி வைக்க யோசிக்காதிங்க" என்றான்.
அந்த வார்த்தையில்...
இளையமதி மீண்டும் கதறி அழுதார். அதியமான் பெருமையாக மகனைப் பார்த்தார்.
"நீ இங்க தான் இருக்கியா ராசா? உன்னை வேண்டாம்னு, அவனை உசத்தியா நினைச்சேன் பாரு. இந்த மரமண்டைக்கு புத்தில பதியற மாதிரி காட்டிட்டான்.
கொதிக்கற டீயை மதுரா முகத்துல ஊத்திட்டான்." என்று துடித்தார்.
"புரிது அத்தை பெரிப்பாவுக்கு ஏன் என் மேல வெறுப்புனு தெரியலை. இனியனுக்கும் அந்த வெறுப்பை வளர்த்துட்டார். இப்ப அது மதுரா வாழ்க்கையை தான் சூறையாடுது. முதல்ல அவளை அடிக்கடி பார்த்து பேசி ஆதரவா நீங்க இருப்பதை தெரிவியுங்க. இனியனிடம் கையை நீட்ட வேண்டாம்னு எடுத்து சொல்லுங்க. அதை மீறினா ஏதாவது.." என்று பேசும் போது இடைவெட்டியது அருளாளன் அழைப்பு.
"பெரிய அண்ணன் தான்" என்று எடுத்து காதில் வைத்தார்.
"எம்மா மதி... உன் புருஷனுக்கு கிறுக்கு பிடிச்சிடுச்சா. ஏதோ பெண் போலீஸை அழைச்சிட்டு வந்துட்டு, மதுராவை நாங்க கொடுமைப்படுத்துவதா புகார் எடுக்க சொல்லி இனியனை உள்ள தள்ள சொல்லறான்." என்று எகிறினார்.
ஸ்பீக்கரில் போட்டிருக்க, அது அங்கிருந்தவர்களின் செவியிலும் விழுந்தது. மறுபுறம் மதுராவே "இங்கபாருங்க.. எங்கப்பா என் மேல பாசத்துல ரொம்ப துடிக்கறார். சாதாரணமா டீ தண்ணி மேல பட்டுடுச்சு. அதுக்கு போய் இப்படி பேசறார். இனியன் மச்சான் என்னை ஒரு கொடுமையும் பண்ணலை. அப்படி பண்ணினா எனக்கு வாய் இருக்கு. நானே வந்து புகார் தர்றேன். இப்ப போங்க.. வந்துட்டிங்க... முடிஞ்சி போனதுக்கு மூக்கு சிந்த" என்று பேசுவது கேட்டது.
"மதி நீ ஒருக்கா வா." என்று துண்டித்தார்.
அகிலன் மதுரவாணி குரலில் இருந்த தெளிவை கண்டு, "அத்தை.. அதான் மதுரா சொல்லுதே. அது தெளிவாகிடுச்சு அத்தை. நீங்க குழப்பாதிங்க. ஆனா மாமா அவளுக்குனு போய் நின்றதுல சந்தோஷம். திரும்ப பெருசா எதுவும் இனியன் யோசிக்கமாட்டான்
எதுக்கும் பிரச்சனை பெருசாகாம பாருங்க. இனியன் இனி கேட்க வாய்ப்புண்டு." என்று எடுத்துரைத்தான்.
இளையமதியோ பெரிய மகளின் வாழ்வே அந்தரத்தில் ஊஞ்சலாட, நிலானி வாழ்வை பற்றி பேச வந்த மடத்தனம் புரிந்தது.
"முதல்ல போங்க. மதுராவை பாருங்க. இந்த வீட்டை பொறுத்தவரை எங்கப்பாவுக்கு அண்ணனும் சரி, தங்கையும் சரி, விரோதிங்க இல்லை விருந்தாளிங்க தான் சொந்தம் மட்டும் தான்." என்று கூறவும், இளையமதி அகிலனின் முன் கையை எடுத்து கும்பிட்டார்.
"அய்யோ அத்தை. முதல்ல மதுராவை பாருங்க. என்ன தான் திடமா பேசினாலும், அது பேசிட்டு உடைந்துடும். மனசு பூஞ்சை மாதிரி" என்றான்.
இளையமதியோ சின்ன அண்ணன் வீட்டு மனிதரை கண்டு விடைப்பெற்றார்.
மதுராவை காண தான் ஓடினார்.
தூரிகாவோ "இதெல்லாம் நடக்கும்னு தான், போராடி சண்டை வந்தாவது கூட உன்னை மதுர கழுத்துல தாலி கட்ட சண்டைப் போட்டது. இப்ப... நான் பயந்தது போலவே நடந்துடுச்சு. எல்லா பிரச்சனையும் நடந்து பொண்ணுங்க அழுது கண்ணீர் வடிச்சா தான் உங்களுக்கு நிம்மதியா இருக்கும்ல" என்று அண்ணனை பார்த்து கேட்டாள்.
மீனாட்சியோ "தூரிகா... என்ன பேசற. உங்கண்ணன் கல்யாணத்தை நிறுத்த போலன்னா மதுராவால பேச முடியாதா. இதோ இப்ப பேசினாலே... இனியன் மேல தம்பில்லைனு இதே வாய் அகிலனுக்காக பேசியிருக்கலாம்ல?" என்றதும் தூரிகா அமைதியானாள்.
"இந்த உலகத்துல எது நடந்து முடியணும்னு எழுதி இருக்கோ அதெல்லாம் எழுதியபடி தான் நடக்கும். எதுவும் மாத்த முடியாது. அதை புரிந்துக்கோ. வந்துட்டா.. சொந்த அண்ணனை குறை சொல்ல. என் மகன் என்ன தப்பு பண்ணினான்?" என்றார்.
அதே ஆவேசத்துடன், "என்னங்க... அகிலனுக்கு பொண்ணு பாருங்க. நாளைக்கு நிலானியை கட்டிக்க உங்க தங்கை இக்கட்டை கூட்டினா நீங்க அதுக்கும் தலையாட்டுவிங்க. என் பையன் அகிலனுக்கு மதுராவும் வேண்டாம் நிலானியும் வேண்டாம். சொல்லறது புரிதா? அதை தவிர்த்து எவ மருமகளா வந்தா கூட எனக்கு சந்தோஷம்" என்று கூற, அதியமான் ஒரு முடிவுடன் சரியென்றார்.
அகிலனோ தன் கல்யாண கனவுகள் மதுரவாணியோடு முடிந்துவிட்டது. இனி அந்த பகுதி கானல் நீர். தனக்கென வரப்போகும் பெண் தாய் தந்தையே முடிவெடுக்கட்டும் என்று அமைதியானான்.
தூரிகாவும் தன் கருத்தை முன் வைக்கவில்லை.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
Kindly register login pls. Share ur comments too
மதுர ஜில்லா..மச்சானே ..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 26)
கல்யாணத்துக்கு பத்திரிக்கை கூட வைக்காமல் பெரியண்ணன் பின்னாடி ஓடி ஒளிஞ்சுக்கிட்ட தங்கச்சி, இன்னைக்கு மகளுக்கு ஒரு பிரச்சினைன்னவுடனே சின்ன அண்ணனை தேடி வந்துட்டாள் பாருங்களேன், அதுவும் அது போனால் இது, இது போனால் அதுங்கிற மாதிரி, இப்ப சின்ன மகளை சம்பந்தம் பேச வந்துட்டாங்க பெருசா. ஆனால், அகிலன் சூப்பராவே பதிலடி குடுத்திருக்கான். நிலானிக்கு இருக்கிற புத்தி கூட இளையமதிக்கும் கல்யாணசுந்தரத்திற்கும் இல்லாமல் போனதால் தான் இத்தனை பிரச்சினையே.
அட பரவாயில்லையே..! மதுராவுக்கு இப்ப மூளை நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சுன்னு தோணுது.
இனிமேல் நிலைமையை சமாளிச்சிப்பாள்ன்னு தோணுது.
கிராமத்து பொண்ணுங்க ரொம்ப தெளிவானவங்க.
😔😔😔
CRVS (or) CRVS 2797
Madhi avana ipadi than yosipaga nu nenacha mathiri yae panra ga ah paren indha amma eppo vum yosikka vae seiya mataga la first mathi next nilani ivanga pattuku kalyanam panni vachitu poiduvaga vazhura thu yaru already ivanga pannathu ku than madura avasathai padura ah aana akilan ne super ah pesuna da .
Thooriga unnoda friend ku support panran nu unga annan ah kayapaduthatha unga amma pesunathu correct than ah ava annaiku pesa vendiya edatula pesama vittathu ku akilan enna panna mudiyum parpom madhura thelivu ah pesuna mathiri than iruku andha thelivu ava vazhkai ah kapathum ah nu parpom
ponnu kasta paduranathum inga odi vanthutanga athuvum chinna ponna ivanuku kalyanam pani vaikirenu periya ponu vazhkaiku oru mudivu panrathuku illama vegama antha anna paiyan tha perusunu poga therinjithu la athuvarai madhURA KU ONUNATHUM AVANGA APPA ivlo fast ah varare papom iniyan ithuku baya padurana nu
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
39 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
22 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
