மதுர ஜில்லா... மச்சானே!-25
அத்தியாயம்-25
அறைக்குள் நிலானியை இறுகப் பற்றிக் கொண்டு கதறி அழுதுக் கொண்டிருந்தாள் மதுரவாணி.
இளையமதி மட்டும் சிலையாக நின்றிருந்தார்.
கண்முன்னே தெரிந்த காட்சியில் மகளின் வீங்கிய கன்னம், சிவந்திருந்த தோள், கண்ணைப் பிடித்துக் கொண்டு துடித்த அவளின் நிலை, எல்லாமே சேர்ந்து அவரது மனதை நசுக்கியது.
"ம... மதுரா..." என்ற இளையமதியின் குரல் நடுங்கியது. மகள் மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள். அந்த பார்வையில் குற்றச்சாட்டு மட்டும் இருந்தது.
"நிலானி... கொஞ்சம் வெளியே இருடி." என்று இளையமதி கூற, தங்கை தயக்கத்துடன் வெளியேறினாள். வேல்விழியும் அமைதியாக வெளியே நின்றார்.
கதவு மெதுவாக மூடப்பட்டது.
அடுத்த நொடி... "மதுரா... என்னடி இது?" என்று நடுங்கியபடி அவளருகே வந்தார்.
பதில் பேசாமல் நின்றவள், ஒரு நொடி அன்னையைப் பார்த்தாள். தன் சேலையின் முந்தானையை விலக்கினாள்.
தோளில் நீளமாகப் பதிந்த விரல் தடங்கள். கழுத்தில் நகக் கீறல்கள்.இடுப்பைச் சுற்றி கருமையாகிப் போன அடையாளங்கள்.
அவற்றைப் பார்த்த இளையமதி பின்னோக்கி தடுமாறினார்.
"அம்மா... போதுமா? இதான்... நீங்க எனக்குப் பெருமையா அமைச்சு வைத்த வாழ்க்கை. இப்ப திருப்தியா?" இளையமதியின் முழங்காலே பலமிழந்தது.
"அய்யோ..." என்று வாயைப் பொத்திக்கொண்டு அழுதார்.
"ஏன்டி... இதையெல்லாம் முதல்லயே சொல்லல?" அந்தக் கேள்வியைக் கேட்ட மதுரா கசப்பாகச் சிரித்தாள்.
"சொன்னா மட்டும்? நீ தான்... எதையுமே காதுல வாங்க மாட்டியே. முதல்ல வந்தப்பவே சொன்னேன். இவர் என்னை கஷ்டப்படுத்துறார்னு. நீ என்ன சொன்ன? முதலிரவுல இதெல்லாம் சகஜம்'ன்னு சொன்ன." இளையமதியிடம் பதில் இல்லை.
"இன்னும் ஒண்ணு சொல்லட்டுமா? இனியன் மச்சான்.. வேண்டுமின்னே அகிலன் மச்சானை பழிவாங்கணும்னு என்னை கல்யாணம் பண்ணியிருக்கார்."
அந்த வார்த்தை இளையமதியை அதிர வைத்தது.
"என்னடி சொல்ற? அந்தளவு ஏன் போகணும்" என்று புரியாது கேட்டார்.
"உண்மை. நான் அப்பவே சொன்னேனே. பெரிய மாமாவோட வன்மம்... இப்ப... இனியன் மச்சான்கிட்டயும் இருக்கு. இப்ப திருப்தியா?"
இளையமதி அழுதார்.
மதுரா இத்தனை நாள் பேசாததை ரத்தின சுருக்கமாக தான் நிற்காமல் கூறினாள். ''இன்னும் நிறைய சொல்ல முடியும். ஆனா... சொன்னாலும் வேஸ்ட்." சிறிது நேரம் அமைதியாக நின்றாள்.
பிறகு மூக்குறிந்து "அட்லீஸ்ட்... நிலானியை... எழிலரசனுக்கு கட்டித் தர்ற யோசனையையாவது விட்டுடு. அவளாவது... பிழைச்சி போகட்டும். அவளை நல்லா படிக்க வை." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நடந்தாள்.
கதவுக்கு வெளியே அனைத்தையும் கேட்டபடி நின்றிருந்தார் வேல்விழி.
அவரது கண்களும் கலங்கியிருந்தன. மதுரா வெளியேறியதும் இளையமதியின் அருகே வந்து மெதுவாக அமர்ந்தார்.
"மதி..." என்றதும்... இளையமதி அவரது கையைப் பற்றிக் கொண்டு கதறினார்.
"என்ன மதினி இது. அண்ணன் பையன்னு தானே... நம்பி கொடுத்தேன். இப்படி இருப்பான்னு தெரியாம போச்சே.." வேல்விழி ஆழமாக மூச்சை விட்டார்.
"நீ... தப்பு பண்ணிட்ட மதி." இளையமதி நிமிர்ந்து பார்த்தார்.
"இந்த விஷயத்துல... நீ.. அண்ணனுக்கு தங்கச்சியா யோசிச்ச. மதுராவுக்கு அம்மாவா யோசிக்கலை. அதான்... இப்ப அவ பாவம் அவஸ்தைப்படறா." இளையமதி தலைகுனிந்தார்.
"நீங்க... அவளுக்கு ஆதரவா இருக்கலையா?" என்று கண்ணீரோடு கேட்டார்.
வேல்விழி மெதுவாகத் தலையசைத்தார்.
"ஒரு மாமியாரா இல்ல... ஒரு பொண்ணா... என்னால முடிஞ்ச நல்லதை... உன் அண்ணன் இல்லாத நேரத்துல... அவளுக்கு செஞ்சுட்டுதான் இருக்கேன். ஆனா... என் மகனையே.. என்னால மாத்த முடியல." சில நொடிகள் அமைதி நிலவியது.
அதை உடைத்த வேல்விழி... வேண்டுமென்றே பேச்சை மாற்றினார்.
"சரி... நிலானி... எவ்வளவு மார்க் எடுத்திருக்கா?"
அந்தக் கேள்வியில் தான். நிலானியின் முடிவைப் பற்றிக் கேட்கவே மறந்துவிட்டதை உணர்ந்தார் இளையமதி.
தன் துயரத்தில் இளைய மகளின் சந்தோஷத்தைக் கூட கவனிக்காமல் விட்ட குற்றவுணர்வு. அவரது நெஞ்சை இன்னும் கனமாக அழுத்தியது.
"நல்ல மார்க்கு தான். மேல் கொண்டு படிக்க வைக்கணும்." என்று கண்ணீரை உகுத்தினார்.
"நான் புறப்படேன் மதினி. மனசு சரியில்லை." என்று புறப்பட்டார்.
வேல்விழி சாப்பிட்டு போக கூற, "மனசே நிறைந்து பாரமா தான் இருக்கு." என்று அகன்றார்.
"மதுரா அம்மாவை தங்கையை சாப்பிட்டு போக சொல்லு." என்றார் வேல்விழி.
மதுராவோ "போகட்டும் அத்தை. இங்க ஒன்னும் வக்கில்லாம சாப்பிட நேந்து விட்டது நானாக மட்டும் இருக்கட்டும்." என்று சேலையை இடுப்பில் சொருகி இனியனுக்கு தான் சிக்கன் சூப் தயாரித்தாள்.
இளையமதி நேராக வீட்டுக்கு வந்து உடைந்தவராக அழுதார். யாரை குற்றம் சொல்லி அழுவார். முதல் குற்றவாளியே இளையமதியாக இருக்கும் பட்சத்தில்....
கல்யாண சுந்தரமும் வீட்டிற்கு வந்ததிலிருந்து இளையமதி அழுதபடியே இருக்க என்ன ஏதென கேட்டார்.
மகள் காட்டிய உடல் காயங்களும், அவள் சொன்ன வார்த்தைகளும், மனதை விட்டு அகலவே இல்லை. கல்யாண சுந்தரம் எவ்வளவோ கேட்டும், அவர் வாயைத் திறக்கவில்லை.
இறுதியில் அனைத்தையும் சொல்லிவிட்டு கதறி அழுதார்.
அதைக் கேட்ட கல்யாண சுந்தரத்தின் முகமே மாறிப்போனது.
"என்ன சொல்ற மதி...?" என்று அதிர்ச்சியுடன் எழுந்தார்.
"நம்ம பொண்ணு... அந்த அளவுக்கு கஷ்டப்படுறாளா?"
இளையமதி தலையசைத்தார்.
"நான்... நான் தான் அவளைக் கெடுத்துட்டேன்..." என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார் அன்னையாக.
கல்யாண சுந்தரத்தின் முகத்தில் கோபம் ஏறியது. உடனே கைப்பேசியை எடுத்து
அருளாளனின் எண்ணை அழுத்தினார். சில ரிங்குகளுக்குப் பிறகு அருளாளன் ஏற்றார்.
"சொல்லு மாப்பிள்ளை..." என்ற அருளாளனின் குரல் கேட்டது.
கல்யாண சுந்தரம் சுத்தி வளைத்து பேசாமல் நேரடியாகக் கேட்டார்.
"மாப்பிள்ளை... எம்மக மதுராவை உங்க பையன் அடிக்கிறானாமே?" அந்தப் பக்கம் சில நொடிகள் அமைதி.
பிறகு... "யாரு சொன்னா?" என்றார் அருளாளன்.
"யாரு சொன்னா என்ன? என் பொண்ணு உடம்பு பூரா காயமா இருக்கு. அவங்களுக்குள் நடக்கறது பெரியவங்க உங்களுக்கு தெரியுமா தெரியாதா?" என்று கேட்க அருளாளன் சிரித்தார்.
"மாப்பிள்ளை... நீ உன் பொண்ணு சொல்றத மட்டும் கேட்டு பேசாத. அவ நல்லாத்தான் இருக்கா. மூணு வேளையும் சாப்பிடறா. நகை நட்டு போட்டு மகாராணி மாதிரி இனியன் வச்சிருக்கேன்." அந்தப் பதில் கல்யாண சுந்தரத்தின் கோபத்தை அதிகப்படுத்தியது.
"அடிக்கிறதும் காயப்படுத்துறதும் இதெல்லாம் நல்லா வாழ வைக்கறதா?" என்று சத்தமாகக் கேட்டார்.
அருளாளனின் குரலும் மாறியது.
"நீ என்ன.. என்னை விசாரணை பண்ணறியா? உன் மக வெளியே வந்து என்ன சொன்னாலும் அதை நம்பிடுவியா? கல்யாணம் ஆன புதுசுல... புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். அதுல தலையிடாத."
கல்யாண சுந்தரம் பற்களைக் கடித்தார்.
"அவ உடம்புல இருக்கற காயத்தை இளையமதி பார்த்துட்டு சொல்லி தான் பேசறேன்." என்றார்.
"காயமா? அதெல்லாம் புதுசா... வாழ்க்கையில வர்றது. அதுக்காக இப்படி உலகம் அழியற மாதிரி பேச வேண்டிய அவசியம் இல்லை." அந்த வார்த்தை கல்யாண சுந்தரத்தை இன்னும் கொதிக்க வைத்தது.
"அருளாளா... நீ மனுஷனா?" என்று கேட்டார்.
அருளாளனும் விடவில்லை.
"நீ மட்டும் பெரிய யோக்கியனா?" என் தங்கச்சிக்கு போட்ட நகை எங்க? ஒண்ணு ஒண்ணா அடமானம் வைச்சு தின்னது யாரு? பாதி சொத்தை... உன் வீட்டு சொந்தபந்தத்துக்கு நல்லது பொல்லதுன்னு காலி பண்ணினது யாரு? இப்ப வந்து... என் வீட்டை கேள்வி கேட்கற." கல்யாண சுந்தரம் பேசாமல் நின்றார்.
அருளாளன் தொடர்ந்தார். "உன் மக... வெளியே இருந்து பார்க்கறதுக்கு கஷ்டப்படுற மாதிரி தெரியும். ஆனா.. தங்கத்துல இழைச்சு வச்சிருக்கான் என் மகன். என் பையன் கொஞ்சம் முரட்டுத்தனம். அதுக்கு உன் மக மிரள்றா. அதை பெருசு பண்ணாத. குழந்தை குட்டினு வந்தா சந்தோஷப்படு" என்று கூறிவிட்டு கல்யாண சுந்தரத்துக்கு அதற்கு மேல் பேசவே பிடிக்காமல் அழைப்பை துண்டித்தார்.
கைப்பேசியை மேசையில் போட்டவர், கோபத்தில் மூச்சு விட்டார்.
"மதி... உங்கண்ணன் போனை வச்சிட்டார்." என்றார் சுந்தரம்.
"இது இனிமே நம்ம குடும்பத்துக்குள்ள மட்டும் இருக்குற விஷயம் இல்ல. நம்ம பொண்ணு வாழ்க்கை. அவளை அப்படி விட்டுட முடியாது." என்றார் உறுதியுடன்.
அந்த வார்த்தையைக் கேட்ட இளையமதியின் கண்களில் மீண்டும் கண்ணீர் வழிந்தது.
இந்த முறை... அந்தக் கண்ணீரில் குற்றவுணர்வோடு சேர்ந்து, மகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பும் கலந்திருந்தது.
ஒன்று பெரியண்ணனுக்கு பாடம் புகட்ட வேண்டும். இல்லையேல் மகளை மீட்க வேண்டும். மகளை மீட்டு வீட்டில் அழைத்து வந்தால் ஊர் உலகம் அதற்கும் வாயுக்கு வந்தபடி பேசும் என்பதால், பெரியண்ணன் மனதை காயப்படுத்தும் விதமாக சிந்தித்தார்.
இங்கு மதுராவோ இனியன் கைவசத்தில் அறை வாங்கி நின்றிருந்தாள். முன்பு போல உடைந்து விடுபவள் போல அழுது தேம்பவில்லை. இனியனோ அடித்துவிட்டு "அத்தை வர்ற நைஸா என்னை டிக்கர் பண்ணி கோபப்படுத்திட்டல்ல? அடிச்சதும் உனக்கு சாதகமா பேச வந்துட்டாங்க. இதானே உன் பிளான். அகிலனை சொன்னதும் என்னை கெட்டவனா அத்தை முன்னாடியும் உன் தங்கை நிலானி முன்னாடியும் கெட்டவனா காட்டிட்டல?" என்றான்.
"நான் யார்கிட்டயும் உங்களை கெட்டவனா காட்ட வேண்டிய அவசியமில்லை. நீங்க செய்ற ஒவ்வொரு காரியமும்... உங்களையே கெட்டவனா காட்டிக்கிட்டு இருக்கு." என்றாள்.
"என்னடி வாய் நீளுது. உங்க வீட்ல உனக்காக பேசுவாங்கனு தைரியமா?" என்றான்.
மதுரவாணியோ "சேசே... இப்பவும் எங்கம்மா எனக்காக யோசிக்கும். பயப்படும்... பெரியண்ணனிடம் பகைச்சிக்கிட்டா எங்க நீங்க அத்துவிட்டுடுவிங்கனு பயந்து நடுங்கும். ஆனா நீங்க அத்துவிடலாம் தயங்க மாட்டிங்கனு தெரியும். அதைமீறி சும்மா இருக்கேன். ஏன்னா... வலியும் வேதனைமும் பழகிடுச்சு. சொரணை இல்லாம போகுதுனு கூட சொல்லலாம். ஆங்... அகிலன் மச்சானை பார்க்க காரணம் தேடிட்டு போகாம இல்லை. பார்க்கணும்னு தோணுச்சினா நேர்ல போற அளவுக்கு இந்த மதுராவுக்கு தில்லு இருக்கு. கண்ணுக்கு முகாம் நடத்தற இடத்துல போயிதான் பார்க்கணும்னு அவசியமில்லை.
என்ன... தேர்தல் முடிஞ்சதும் பழசையெல்லாம் மறந்துட்டு ஊருக்காக ஓடுறவரை... மறுபடியும் என்னால ஏன் காயப்படுத்தணும்? அது கண் முன்ன போய் விழ எனக்கென்ன பைத்தியமா? ஏற்கனவே நம்ம கல்யாணத்துக்கு முன்ன அகிலன் மச்சானை முடிந்தளவு காயப்படுத்தி பேசியிருக்கேன். இதுக்கும் மேல அகிலன் மச்சானை காயப்படுத்த மாட்டேன். அதான் அந்த வேலையும் நீங்களே பார்க்கறிங்களே." என்று வீட்டை துடைத்து முடித்தாள்.
அருளாளன் அங்கே மதுரா பேசியதை கேட்டவர், வேல்விழியை தான் முறைத்தார். அவரை பொறுத்தவரை இதுவரை இந்த வீட்டில் யாரும் எதிர்த்து பேசியதில்லையே. மதுரா வாய் திறந்தால் முதலுக்கே மோசமாகலாமென யோசித்தார்.
இனியனை தான் தனியாக அழைத்து கொண்டு சென்று திட்டம் தீட்ட தோட்டத்திற்கு வரக்கூறி கண்காட்டி அருளாளன் அவ்விடம் விட்டு விரைந்து சென்றார்.
இனியனோ மதுராவை முறைக்க, மதுராவோ "ரொம்ப முறைக்காதிங்க.. ராத்திரி தலைகானியை கட்டிட்டு தான் தூங்கணும். ஏன்னா நான் வீட்டுக்கு தூரம்." என்று நக்கலாய் உரைத்தாள். உடலால் அவளை நெருங்க முடியாதே!
வேல்விழியோ ஒரு குழந்தை குட்டி உருவானால் கூட பிரச்சனை தற்காலிகமாக மறையும்.
அதற்கும் வழியின்றி போனதை கேட்டு நொடிந்தார்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
அகிலன் ஜோடி 30 வது எபிக்ல வரும். காத்திருந்து வாசியுங்கள்.
மதுர ஜில்லா..மச்சானே ..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 25)
இப்ப அழுது, புலம்பி என்ன பிரயோஜனம் ? அப்ப பெரியணணன் வீட்டு பணமும், நகையும் தான் பெருசா தெரிஞ்சது. உறவு பெருசா தெரிஞ்சிருந்தா, சின்ன அண்ணன் வீட்டுக்கு இல்ல மருமகளா அனுப்பி இருப்பாங்க.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பிரயோஜனம் ?
இந்த மதுராவும் தான், அப்ப கண்டபடி பேசி அகிலன் மனசைப் காயப்படுத்தினதிக்கு, எனக்கு உன்னைய மட்டும் தான் கல்யாணம் கட்டிக்க பிடிக்கும் மச்சான் என்கிற உண்மையைச் சொல்லியிருந்தால், இந்த நரகத்துல இருந்து முன்னாடியே தப்பிச்சிருக்கலாம் தானே...? எப்படி பேசணுமோ, அப்ப வாயை இறுக மூடி வைச்சிட்டு, இப்ப மட்டும் பேசி என்னத்தை பெருசா கிழிக்கப் போறாள்ன்னு தெரியலை.
😔😔😔
CRVS (or) CRVS 2797
Madhi avanga ippo azhuthu endha use um illa velvizhi avanga sonnathu pola annaiku ivanga madhura ku amma ah va yosichi irundha ava manasu athula irundha aasai yum than therinchi kum.atha vittutu ippo azhuthu enna aagida poguthu .
Madhura innaikku ne pesunathuku kalyanathuku munnadi pesi irundha ivolo kastam illa already appan um pillai yum thitam theeti than indha alavuku iruku innum enna thitam theeta pora ga nu theriyala
oru ponnu ena solla vara nu kekama vitu ipo kanala patha tha theriutha athuvum aatharathoda kamicha tha puriuma ipo aluthu mattum ena use iruku aana intha time la madhura thairiyama pesura athu tha highlight nee avala kasta paduta ninaikura iniya aana paru nee mari ava kuda tha vazha pora . inum 5 epi wait pannanuma akilan jodi ku
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
39 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
22 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
