Forum

மதுர ஜில்லா... மச்ச...
 
Notifications
Clear all

மதுர ஜில்லா... மச்சானே!-24

6 Posts
6 Users
3 Reactions
116 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#139]

அத்தியாயம்-24

இனியனுக்கும் மதுரவாணிக்கும் திருமணமாகி பத்து நாட்கள் கடந்திருந்தன.
   இந்த பத்து நாட்களில் மதுரவாணியின் வாழ்க்கையே மாறியிருந்தது.
விடியற்காலையிலேயே எழுந்து விடுவாள். குளித்துவிட்டு ஈரமாய் வழியும் நீண்ட கூந்தலை அவசரமாக முடிந்து, வாசல் தெளித்து, பெருக்கி, பெரிய கோலம் போடுவாள்.
பிறகு தொழுவத்திற்குச் செல்வாள். ஆடுகள்... மாடுகள்... கட்டியிருந்த இடங்களை சாணம் அள்ளி சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி கழுவி, தீவனம் வைத்து முடிப்பாள்.
  அதன் பிறகு தான் சமையலறை. காபி... டீ... காலை உணவு கூட மதுராவே செய்ய ஆரம்பித்தாள். வேல்விழி எவ்வளவோ, எடுத்து கூறினார். ''மதுரா... இதையெல்லாம் நானே பார்த்துக்கறேன். நீ விடும்மா."
என்று கூறினாலும், "இல்ல அத்தை... நான் பண்ணிக்கறேன். எத்தனை நாள் வீட்ல ஒன்னும் செய்யாம இருக்கறது." என்று எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தாள்.

அவள் இவ்வளவு சீக்கிரம் எழுவதற்குக் காரணம் வேலை செய்யும் நோக்கம் அல்ல இனியன் கண் விழிக்கும் முன்பே அறையை விட்டு வெளியேறி விட்டால், அவன் நெருக்கத்திலிருந்து சில மணி நேரமாவது தப்பிக்கலாம் என்ற எண்ணம் தான்.
அது மட்டுமே அவளுக்கு கிடைத்த சிறிய ஆறுதல்.
அன்றும் அதே போலவே விடியற்காலையில் எழுந்து வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
    மாடியிலிருந்த ஜன்னலைத் திறந்த இனியன் கீழே எட்டிப் பார்த்தான்.
  வெள்ளைக் கோலப்பொடி தூவிக் கொண்டிருந்த மதுராவைக் கண்டதும் முகம் சுளித்தான். "ச்சே..." என்று சலிப்புடன் முணுமுணுத்தவன், "இவ எப்ப எழுந்து எஸ்கேப் ஆகுறாளேனு தெரியல. காலையிலேயே மூடை ஸ்பாயில் பண்ணிடுறா..."
என்று மீண்டும் கதவை அடைத்துவிட்டு படுக்கையில் விழுந்தான்.

எட்டு மணிக்குத்தான் மீண்டும் எழுந்தான். அதற்குள் மதுரா சமையலறையில் வேல்விழியோடு சேர்ந்து காலை உணவை முடித்திருந்தாள்.

ஆனால்... அவன் கீழே இறங்கும் நேரம் வந்ததும் அவளது உள்ளம் மீண்டும் பதறியது.
எப்படியும் அவன் அழைப்பான் என்று தெரியும். அதுபோலவே...
"மதுரா..." என்று மேலிருந்து அவன் குரல் வந்தது.
வேல்விழி திரும்பிப் பார்த்தார்.
"போம்மா... கூப்பிடுறான்." என்றதும் மெதுவாக மாடியேறினாள். அவள் உள்ளே வந்தவுடன் கதவைச் சாத்திவிட்டான்.

"காலையிலேயே குளிச்சிடற?" என்று கேட்டவன் அவளருகே வந்தான். மதுரா ஒரு அடி பின்னால் நகர்ந்தாள்.

"வேண்டாம்..." என்று மெதுவாகச் சொன்னாள்.
"என்ன வேண்டாம்?"
என்று சிரித்தவன் அவளது கையைப் பிடித்து இழுத்தான்.

"நா..நான் குளிச்சிட்டேன்." அவள் குரல் நடுங்கியது.

"அதனால என்ன?" அவளது ஈரக்கூந்தலில் முகத்தை புதைத்தவன், "இந்த ஷாம்பூ வாசனை... ரொம்ப பிடிச்சிருக்கு..." என்று கண்களை மூடி ரசித்தான்.

அவளோ உடல் முழுவதும் உறைந்து நின்றாள். மறுத்துப் பேசினால் திமிறினால், அவன் இன்னும் முரட்டுத்தனமாக மாறிவிடுவான் என்பதை கடந்த பத்து நாட்களில் புரிந்து கொண்டிருந்தாள்.

அந்தப் போராட்டத்தையே மெதுவாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கியிருந்தாள். அதனால் அவனது நெருக்கத்தை பிடிக்காவிட்டாலும் பழகிக் கொண்டாள்.

அன்றைய மதியம்... அருளாளன் வீட்டின் முன்திண்ணையில் அமர்ந்திருந்தார்.

"இனியா..." என்று அழைத்தார்.
கைப்பேசியை பார்த்துக் கொண்டே வந்தான் இனியன்.
"என்னப்பா?" என்று கேட்டுவிட்டு எதிரே அமர்ந்தான்.

"நீ என்ன வேலை செய்யப் போற?" என்று கேட்க அவன் புரியாமல் பார்த்தான்.

அருளாளன் தொடர்ந்தார். "அந்த அகிலன்... பஞ்சாயத்து தேர்தல்ல ஜெயிச்சு பேரு வாங்கிட்டான். இப்ப சொந்த தரிசு நிலத்துல விவசாயம் செய்றான். ஊருக்கு மரம் நடுறான். கண் முகாம் நடத்துறான். ஏதாவது பண்ணிட்டே இருக்கான்.

  ஆனா நீ? காலையில லேட்டா எழுந்திரிக்க... சாப்பிடற..
ஊர் சுத்தற... வீட்டுக்கு வந்து ரூமுக்குள்ள அடைஞ்சிக்கற
இதுதானா?" என்றதும் அவரது ஒப்புமை அவனுக்கு எரிச்சலானது.

இனியனின் முகம் மாறியது.
"அப்பா..." என்று குரல் உயர்த்தினான். "சொல்லு." என்றார் அவருமே.

"நானும் காவ்யாவும் அமெரிக்கால கம்பெனி ஆரம்பிக்க பிளான் பண்ணியிருந்தோம். இங்க வந்து உங்க சம்மதத்தோட கல்யாணம் முடிச்சிட்டு அங்கயே செட்டில் ஆகணும்னு நினைச்சேன். ஆனா இப்ப இங்க ஸ்டக் ஆயிட்டேன். பரவாயில்லை. மதுராவிடம் அவளுக்கே தெரியாம வெற்றுப் பத்திரத்துல கையெழுத்து வாங்கிட்டேன். ஒரு வருஷம் முடியட்டும் விவாகரத்து கொடுத்துட்டு கிளம்பிடுவேன். அப்புறம் காவ்யாவோட சேர்ந்து கம்பெனிய பார்த்துப்பேன் என் ரீமேரேஜ் பண்ணிப்பேன்." என்றதும் அருளாளனின் முகம் சட்டென்று இருண்டது.

"அப்படின்னா... அப்பா... அம்மா எல்லாம் வேண்டாமா?" என்றார்.

"அதான் எனக்கு அடுத்து எழிலரசன் இருக்கானே. அவன் உங்க கூட தானே இருக்கான். அவன் பார்த்துப்பான்" என்றதும் அந்த பதில் அருளாளனுக்குப் பிடிக்கவில்லை.

இனியன் திருமணம் செய்துகொண்டு இங்கேயே குடியேறுவான். குழந்தைகள் பிறக்கும்... இந்த வீட்டின் வாரிசாக கூடவே இருப்பான்
என்று மனதில் போட்டிருந்த கணக்கு அனைத்தும் உடைந்தது. என்னயிருந்தாலும் முதல் பிள்ளை இனியன் தானே.

"சரி அதுக்காக இங்க இருக்குற வரைக்கும் வேலையே செய்யாம இருக்க முடியாது. ஏதாவது ஒரு தொழிலை பாரு." என்று எழுந்து சென்றார்.

இந்த உரையாடலை முழுவதுமாகக் கேட்டிருந்தார் வேல்விழி. மகன் தன்னை விட்டு மீண்டும் வெளிநாடு சென்றிடுவானோ என்று யோசித்தார். இதில் மதுராவை விவாகரத்து அளித்து செல்வானாமே. இது கூடவே கூடாது என்று சிந்தித்தார்.

மதியம் சமையலறையில் தனியாக நின்ற மதுராவிடம் மெதுவாக வந்தார்.

"மதுரா..." என்று வேல்விழி அழைத்ததும் அவள் திரும்பினாள்.

"அத்த?" என்று செவிமடுத்தாள்.

"இனியன் இன்னும் உன்னை கஷ்டப்படுத்துறானா?" என்று கேட்க, மதுரா பதில் சொல்லவில்லை. 'அதை சொன்னா மட்டும் நீங்க உங்க பையனை அடக்குவிங்களா? இல்லை.. அவர் தான் காது கொடுத்து கேட்பாரா? என் தலைவிதி' என்பது போல மௌனமானாள்.

"மதுரா சொல்லறேன்னு தப்பா நினைக்காத. ஒரு புள்ளையை பெத்துக்கொடு. அதுக்கப்புறம் அவன் ஆட்டம் கொஞ்சம் அடங்கிடும்." என்றதும் மதுரா அமைதியாகவே பார்த்தாள்.
'இதை என்னிடம் சொல்லுறதுக்கு பதிலா...
உங்க பையன்கிட்ட சொல்ல வேண்டியது தானே? ஏற்கனவே பாய்ந்து திரியறார். இதுல அதுவொன்னு தான்‌ குறை' என்று அவளது கண்களே கேட்டன. ஆனால்... உதடுகள் திறக்கவில்லை.

---

அதே நேரத்தில்... ஊரின் அரசு மேல்நிலைப்பள்ளியில் அகிலன் ஏற்பாடு செய்திருந்த இலவச கண் பரிசோதனை முகாம் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
வயதானவர்கள்... பெண்கள்... பள்ளி மாணவர்கள்... என்று வரிசையாக அமர்ந்து பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். "மெதுவா வாங்க..." "அடுத்தவர் உள்ள வாங்க..." என்று மருத்துவக் குழுவினரை ஒருங்கிணைத்தபடி அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தான் அகிலன்.

அவன் முகத்தில் பல நாட்களுக்கு பிறகு ஒரு சிறிய திருப்தி தெரிந்தது.

ஊருக்காக ஏதாவது செய்கிறோம் என்ற நிறைவு. அவனது மனக்காயத்தின் மீது மெதுவாக மருந்தாய் படரத் தொடங்கியிருந்தது.

அப்பொழுது டீ கப்பை தட்டில் வைத்து ஹாலில் இருந்த இனியனுக்கு நீட்டினாள் மதுரவாணி.

    இனியன் ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்தவன், தெருவில் அகிலன் நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமிற்கு கூட்டம் கூட்டமாக மக்கள் செல்வது அவன் கண்களில் பட்டது.
அதுவே அவனது எரிச்சலை இன்னும் அதிகப்படுத்தியது.
அருளாளன் சொன்ன வார்த்தைகள் வேறு காதில் ஒலித்துக் கொண்டிருந்தன.
"அகிலன் பேரு வாங்கிட்டு இருக்கான்... நீ என்ன செய்யற?" என்று ஏசினாரே.

தன் கோபத்தை அடக்க முடியாமல் நின்றவனிடம்,
"டீ ரொம்ப நேரமா ஆறுது" என்று மெதுவாகக் கோப்பையை நீட்டினாள் மதுரா. ஆறினால் அதற்கும் திட்டுவிழும். நீ பாட்டுக்கு வச்சிட்டு சொல்லாம போனா அந்த டீ யாருக்காம்?' என்று அதற்கும் திட்டி வாங்கியிருந்தாள்.

கோப்பையை வாங்கியவன் ஒரு மிடறு கூட குடிக்கவில்லை.
அவளைப் பார்த்தபடியே,
"கீழே என்ன நடக்குதுன்னு தெரியுமா?" என்றான்.

மதுரா புரியாமல் பார்த்தாள்.
"உன் காதலன்..." அந்த வார்த்தையிலேயே அவள் முகம் சுருங்கியது. "...அகிலன் கண் முகாம் நடத்துறானாம்." அவள் அமைதியாகவே நின்றாள்.

"ஊரே போயிட்டு அவனை பாராட்டுது. நீயும் போறியா?" என்ற அந்தக் கேள்வியில் மதுராவின் புருவம் சுருங்கியது.

மதுரா மௌனமாய் 'இவருக்கு வேற வேலை இல்லை' என்ற ரீதியில் இருந்தாள்.

"அவனைப் பார்க்கத்தான் கேட்கிறேன். ரொம்ப நாளா மச்சானை பார்க்காத ஏக்கம் இருக்கும்ல. உன்னிடம் போன் கூட இல்லை." என்றான்.

மதுரா அவன் பேசியதை தாங்கியவளாக மெதுவாகத் தலையசைத்தாள். "எனக்கு யாரையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை." என்றாள்.

"பொய் உனக்கு அவனை பார்க்க உள்ளுக்குள்ள ஆசையிருக்கும்.." என்றான்.

"உங்க நினைப்புக்கு நான் பொறுப்பில்லை." என்றாள் கோபமாக மதுரா.

"நம்ப முடியலையே." என்று இனியன் மேவாயை தொட்டு பார்த்தான்.

"நம்ப வேண்டிய அவசியமும் இல்லை. உங்களை மாதிரி ஜென்மத்துக்கு தினமும் நெருப்புல நின்னு என்னை நல்லவளா காட்டிக்க முடியாது." அந்த பதில் இனியனை இன்னும் சீண்டியது. 'உங்களை மாதிரி ஜென்மம்' என்ற வார்த்தை இனியனை தாக்கியது.

கையில் இருந்த டீக் கோப்பையை திடீரென அவள் மீது வீசினான்.

"ஆ..." என்று அலறியபடி மதுரா இரண்டு அடி பின்னால் தள்ளாடினாள்.

டீ முழுவதும் அவள் தோள், கழுத்து, கை மீது சிதறியது.
நல்லவேளை... டீ சற்று ஆறியிருந்தது. இல்லையென்றால் பெரிய தீக்காயமாக மாறியிருக்கும்.

ஆனாலும் சூட்டின் எரிச்சலில் துடித்தாள். அதைவிட கோப்பையிலிருந்து பறந்த தேயிலைத் துகள் ஒன்று அவளது வலது கண்ணுக்குள் சென்று உறுத்தியது.

"அம்மா..." என்று கண்ணைப் பிடித்துக் கொண்டாள்.
கண்ணிலிருந்து தண்ணீர் வழிந்தது.

"பாரு... அந்த கடவுளே வழிகாட்டறார்." என்று அவளை நோக்கி சிரிப்பில்லாமல் நின்றான் இனியன். "உன் காதலன் அகிலன் நடத்துற கண் முகாம் உனக்காகத்தான் போல." என்று அர்த்தமின்றி பேசினான்.

அந்த ஒரு வாக்கியம் மதுராவின் பொறுமையை உடைத்தது. இதுவரை அழுதவள்... முதல் முறையாக அவனை நேராகப் பார்த்தாள்.

"ஏன்... நான் எதுவும் பேசாத நேரத்தில கூட அகிலன் மச்சானை என்னோட சேர்த்து இணைத்து இழுத்து பேசுறீங்க? அவரும் நானும் காதலிப்பதா வெளிப்படையா பேசியது கூட இல்லை." என்றாள் நேரிடையாக. இனியன் முகம் இறுகியது.
"அகிலன் மச்சான் வாழ்க்கையை பார்த்துட்டு இருக்கார். நான்... என் வாழ்க்கையை தாங்கிக்கிட்டு இருக்கேன். நீங்களா தான்... ஒவ்வொரு தடவையும்... எங்களை இரண்டு பேரையும் சேர்த்து பேசுறீங்க. உங்களுக்கு அசிங்கமா இல்லையா?" என்றவளது குரல் உயர்ந்தது.

இனியன் முறைக்க "அவர் பேரை சொல்லி என்னை காயப்படுத்துறீங்க... என்னை அடிக்கறீங்க... அவரையும் விட மாட்டீங்க... இதுல என்ன கிடைக்குது உங்களுக்கு?" என்று கேள்விகளை துளைக்க,
'பளார்' என்ற அறை இனியனின் கை அவள் கன்னத்தில் விழுந்தது.

அந்த அறையில் ஒலித்த சத்தத்தோடு மதுராவின் தலை ஒரு பக்கம் சாய்ந்தது. உதட்டோரம் லேசாக ரத்தம் கசிந்தது. கண்ணைப் பிடித்தபடியே சுவரில் சாய்ந்து நின்றவள் கதறி அழ ஆரம்பித்தாள்.

அந்த நேரமே... வீட்டு வாசலில் இருந்து, "அக்கா..." என்று நிலானியின் குரல். "அக்கா... ரிசல்ட் வந்துடுச்சு... நான் பாஸ் ஆயிட்டேன்..." கையில் இனிப்பு பெட்டியுடன் உற்சாகமாக உள்ளே வந்தவள், மச்சான் அக்காவின் நிலையை கண்டாள்.
  இளையமதியுடன் தான் வந்திருந்தாள். "மதுரா."
என்று அழைத்தபடியே அறை வாசலை அடைந்த இளையமதி, உள்ளே மகள் அறை வாங்கிய காட்சியைப் பார்த்து உறைந்து நின்றார்.

ஒரு கையால் கண்ணைப் பிடித்தபடி... மற்றொரு கையால் கன்னத்தைத் தாங்கியபடி...
அழுகையை அடக்க முடியாமல் நடுங்கிக் கொண்டிருந்தாள் மதுரவாணி.
   அவளது சேலையில் டீ சிந்திய தடங்கள், சிவந்திருந்த தோள்,
வீங்கிய கன்னம், அனைத்தையும் பார்த்த நிலானியின் முகம் திகைப்பில் ஆழ்ந்துப் போனது.

"அக்கா..." என்று ஓடிவந்து மதுராவைக் கட்டிக் கொண்டாள்.‌ அப்போது மதுராவின் அடக்கி வைத்திருந்த அழுகை முழுவதுமாக உடைந்து வெளிப்பட்டது.

   நிலானி இனியன் மச்சானை எரிப்பது போல பார்வையிட்டாள். 'மகள் நன்றாக வாழ்கிறாள்' என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டிருந்த இளையமதியின் நம்பிக்கை, அந்த ஒரே காட்சியில் சிதறிப் போனது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

அகிலனின் ஜோடி 30வது அத்தியாயத்துல இருந்து வருவா. வெயிட் பண்ணுங்க‌. கமெண்ட்ஸ் பண்ணுங்க. 


 
Posted : July 5, 2026 9:33 am
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

மதுர ஜில்லா..மச்சானே ..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 24)

சபாஷ்..! இனிமே மதுரா தயங்காம இனியனை லெஃப்ட் அண்ட் ரைட் உடனுக்குடன் கேட்டுடணும்,
முடிஞ்சா பதிலுக்கு திருப்பி அடிக்கவும் செய்யலாம். மதுரா தன்னோட தம்பி அகிலனை விரும்புறான்னு தெரிஞ்சுக்கிட்டே, அகிலனை பழி வாங்குறதுக்காக மதுராவை கல்யாணம் பண்ணிக்கிட்டு, அவ கூட நிதைக்கும் படுத்துக்கிட்டே, குடும்பம் நடத்திக்கிட்டே...
அவளை திரும்பவும் அகிலனோட இணைச்சு வைச்சுப் பேசுறான்னா
இந்த இனியனுக்கு எம்புட்டு கொழுப்பு இருக்கணும், அந்த கொழுப்பை இறக்கணும்ன்னா
அவனை நாலு தர்ம அடி கூட போடலாம் தப்பேயில்லை.

இப்ப மட்டும் மகள் அடி வாங்குறதைப் பார்த்துட்டு ஆத்தக்காரி அப்படியே உருகி கரைஞ்சிடுவாள் பாருங்க, அட போங்க, போய் ஆக்கப்பூர்வமான வேலையைப் பாருங்க

😔😔😔
CRVS (or) CRVS 2797


 
Posted : July 5, 2026 9:59 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 49
Trusted Member
 

Madhura vum.akilan um nesichaga than aana atha avanga varthai ah velipaduthi kooda ah illa aana ivan atha therinchi kalyanam panni valukattaiyam ah ava kooda vazhavum kooda avalukae theriyama divorce paper la sign vangi innum.oru varushathula kaviya ah kalyanam pannikitu foreign ah la yae settle aavan nu sollura indha jenmam Madhura ah akilan kooda serthu vacha pesuna ava ketu kitu chumma irukanum ivan ah ne pesunathuo oda vittu iruku ah koodathu madhura nallu arai yum.sethu kuduthu irukanum .

 

Adeiyappa madhi avangalukku apadiyae thai pasam pothu kitu varutho ippo than ava venam nu solli yum ivan thalai la katti vachathu indha amma than ah 


 
Posted : July 5, 2026 3:04 pm
(@dharsinipriya)
Posts: 59
Trusted Member
 

Super sis nice epi semmaiya pogudhu story 👍 👌 andha Amma eppo parthu mattum enna solla pogudhu adjust panni vaazhu nu dhan pesa pogudhu🙄


 
Posted : July 5, 2026 3:45 pm
(@kalidevi)
Posts: 56
Trusted Member
 

ipovathu puriuma avanga amma ku pavam madhura ku etho ellathaium thangitu vazha ninaikura athaium pana vida matran  ivan ninachatha nadatha avala kodumai panran


 
Posted : July 6, 2026 3:30 pm
(@kothaihari)
Posts: 54
Trusted Member
 

இனியன் மனிதன் இனம் தானா


 
Posted : July 21, 2026 11:29 pm

Scroll to Top