Forum

மதுர ஜில்லா... மச்ச...
 
Notifications
Clear all

மதுர ஜில்லா... மச்சானே!-21

8 Posts
8 Users
6 Reactions
99 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#120]

அத்தியாயம்-21 

அடுத்த நாள் மதியம் அகிலன் வீட்டிற்குள் முடங்கி அமர்ந்து இருக்கவில்லை. வீட்டுக்குள் இருந்தாலும், ஒவ்வொரு சுவரும் மதுராவின் நினைவையே திரும்பத் திரும்ப அவனுக்குக் காட்டியது. இதற்கு வெளியே நாலு மனிதரை கண்டாலாவது மனம் மற்றதில் சாயுமென எண்ணினான்.

    'இப்படி இருந்தா மூச்சே முட்டிடும்.' என்று நினைத்தவன், அலமாரியில் இருந்த பழுப்பு நிற கோப்புப் பையை எடுத்துக் கொண்டான்.

அதில் பல நாட்களாக சேகரித்து வைத்திருந்த குறிப்புகள், புத்தகப் பட்டியல்கள், பதிப்பகங்களின் முகவரிகள் அனைத்தும் இருந்தன.

   தேர்தல் முடிவதற்கு முன்பே அவன் மனதில் ஒரு திட்டம் இருந்தது. அவன் ஏரியாவில் ஒரு நல்ல வாசிப்பு மையம் உருவாக்கணும். போட்டித் தேர்வு படிக்குற பசங்க வெளியூர் அலையாம இங்கயே படிக்கும் விதமாக, அந்த கனவை இப்போது நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்திருந்தது.

அதியமான் மகனைப் பார்த்தார். "வெளிய போறியா அகிலா?" மெலிதாக தலையசைத்தான்.

"மதுரைக்குப் போயிட்டு வர்றேன்ப்பா. பதிப்பகத்துல மொத்த விலைக்கு கொஞ்சம் புத்தகம் பேசிருக்கேன். மாணவர்களுக்கான புத்தகமும், போட்டித் தேர்வு புத்தகமும் வாங்கணும். அப்படியே நர்சரில மரக்கன்றும் வாங்கிட்டு வந்துடறேன்." என்றவனை மீனாட்சி பார்த்தார்.

மகன் இன்னும் வலியிலிருந்து மீண்டு சிரிக்கவில்லை என்றாலும் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதைவிட, வேலையில் மனதைச் செலுத்த நினைப்பதே அவருக்கு நிம்மதியாக இருந்தது. "பத்திரமா போயிட்டு வாடா."என்றார்.

மதுரை நகரம் செல்லும் இடங்களுக்கு முன், அவனது கிராமத்தில், தெருவுக்கு தெரு முச்சந்தியில் இனியன் மதுராவின் திருமண வரவேற்பு புகைப்படம் காட்சிக்கு இருந்தது.

அகிலனின் கை தானாகவே பிரேக்கை அழுத்த பைக் நின்றுவிட்டது.

  மதுரா உம்மென்ற முகத்துடன், பட்டு சேலையில் நகை நட்டு அலங்காரத்துடன் கோவில் சிற்பம் போல இருந்தாள். அவள் தோளில் உரிமையாக இனியன் கைகள் மாலையாக கோர்த்திருந்தது‌.

அடுத்த நொடியே அகிலனின் மார்புக்குள் யாரோ கத்தியால் கிழிப்பது போல வலி பரவியது.

அங்கே நின்றவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"கல்யாணம் ரொம்ப பிரமாதமாம்..."

"சாப்பாடு செமையா இருந்துச்சு..."

"அலங்காரம் பார்த்தியா... சினிமா கல்யாணம் மாதிரி... பொண்ணு தான் எப்பவும் சிரிச்ச முகமா இருக்கும். இப்ப கல்யாண ஆன அடக்கத்துல அமைதியா நிற்கு" 

"மாப்பிள்ளை வீட்டுக்காரங்க செலவுல குறைவே வைக்கல."

ஒவ்வொரு வார்த்தையும்...

அகிலனின் காதுகளில் ஊசியாக இறங்கியது. அவன் மீண்டும் பைக்கை எடுத்தான்.

'இதோட மொத்தமா முடிஞ்சிருச்சு.' என்று மனதைத் தேற்றிக் கொள்ள முயன்றான்.

   யாரும் பார்க்கும் முன் வேகம் கூட்டி சென்றான். 

  மற்றொரு இடத்திலும் வேறு உடையில் இதே போல இருந்தது‌. அகிலனால் அதற்கு மேல் முடியவில்லை‌. வண்டியை நிறுத்திவிட்டு ஏறிட்டான். 

  அப்பொழுது ஒரு பெரியவர் "என்ன அகிலா... நீயும் உங்க அத்தை மகளும் கல்யாணம் கட்டிக்கிட்டிங்களா?" என்று மூக்கு கண்ணாடியை ஏற்றி ஏற்றி வந்தார். 

"தாத்தா..‌ அது மதுரா தான். ஆனா பக்கத்துல இருப்பது இனியன். அருளாளன் பெரிப்பாவோட பையன். எ..எனக்கு அண்ணன் முறை." என்றான்.‌

"அட... ஆமால.. அருளாளன் மவனுக்கு தான் கண்ணாலம்னு பேசிக்கிட்டாங்க. அதானே... உனக்கு கல்யாணம்னா நீ எனக்கு சொல்லியிருப்பியே.‌ நான் தான்யா கண்ணு சரியா தெரியாம போட்டோவுல இருப்பது நீனு தப்பா நினைச்சிட்டேன். மன்னிச்சிடுயா.." என்றார்.

"இருக்கட்டும் தாத்தா" என்று கண்ணீரை துடைத்து முடித்து பேச முயன்றான்.‌

   "ஏன் அகிலா... இந்த கண்ணாடில பார்வை தெரியலை. போன முறை ஏதோ முகாம் போட்டதால இந்த கண்ணாடி வாங்கியது. பிறகு ஹாஸ்பிடலுக்கு போகலையா. இந்த முறையும் முகாம் ஏதாவது இருந்தா சொல்லு. கையில காசுயில்லை. அப்படி ஏதாவது செக்கப் பண்ணினா தான் உண்டு. பாரு.... அண்ணன் அண்ணியை பார்த்து நீயும் உன் ஜோடினு தப்பா பேசிட்டேன்." என்று குறைப்பட்டார். 

  "தெரியாம தானே சொன்னிங்க. பரவாயில்லை. கண்ணுக்கு செக்கப் போக, மறுபடியும் முகாம் ஏற்பாடு செய்யறேன். அப்ப சொல்லி விடறேன்" என்றான்.‌

"பரவாயில்லையா... அது உன்ற அண்ணியாச்சே... ம்ம்... அண்ணன் பொஞ்சாதி என்னயிருந்தாலும் வயசுல சிறுசானாலும் இனியனை கட்டிக்கிட்டாளே. இனியன் வயசுல உன்னை விட பெரியவன்னு தானே. இனி அண்ணியும் மரியாதைக்குரியவளா போயிட்டாளே. 

  சரிப்பா... முகாம் நடத்தினா சொல்லு" என்று நடந்து சென்றார். 

  அகிலன் இம்முறை மதுராவை கவனித்தான். 'அண்ணி' இந்த முறையே அவனுக்கு அந்நியமாக தான் தெரிந்தது. மதுரவாணி தான் நேசித்த பெண். இனியனின் துணைவியாக அதுவும் இனியன் கைவளைவில் இருக்க, இனி ஏக்கமாய் பொறுமுவது அழகல்ல என்று புத்திக்கு நச்சென்று உரைத்துவிட்டு சென்ற பெரியவரை பார்வையிட்டான். எல்லாவற்றையும் மறக்க வேண்டும். மதுரா மீதான காதல் கசடு அடியோடு நீக்க வேண்டும் என்று முடிவெடுத்தான். 

இருசக்கர வாகனத்தை இயக்கி, மதுரை மாநகரத்தினுள்,  வாகன இரைச்சலுக்குள் அகிலனின் பைக் மெதுவாகச் சென்றது.

   முதலில் பெரிய பதிப்பகம் ஒன்றிற்குள் நுழைந்தான்.

அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்ததும் அவன் முகத்தில் சிறு ஒளி தெரிந்தது.

"சார்... பள்ளி மாணவர்களுக்கான புத்தகம், கல்லூரி ரெஃபரன்ஸ் புக், டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, குரூப்–4, போலீஸ், ரயில்வே... எல்லாத்துக்கும் தனித்தனியா லிஸ்ட் தயார் பண்ணியிருக்கேன்." என்று கோப்பை நீட்டினான். கடைஉரிமையாளர் பட்டியலைப் பார்த்துவிட்டு...

"நல்ல விஷயம் தம்பி. இவ்வளவு புத்தகம் வாங்குறீங்கன்னா மொத்த விலைக்கே கொடுத்துடுறோம். முக்கால்வாசி இங்கனயே இருக்கு மீதி கூட பக்கத்தில தெரிந்த கடையில இருக்கு சொல்லி, கொண்டு வந்துடறேன்." என்றார்.

அடுத்த ஒரு மணி நேரம்...

ஒவ்வொரு புத்தகத்தையும் புரட்டிப் பார்த்து தேர்வு செய்தான் அகிலன்.

ஊரிலிருந்து பட்டதாரிகளாக வரப்போகும் மாணவர்களின் முகங்கள்தான் அவன் கண்முன் வந்தது.

"இந்த புக் நல்லா போகும் சார்..."

"இது புதிய எடிஷன்..." என்று கடைக்காரர் சொல்லிக் கொண்டேயிருந்தார்.

   அனைத்தையும் முடித்து ரசீது போட்டுவிட்டு வெளியே வந்தான். அங்கிருந்து நேராக நர்சரிக்குச் சென்றான்.

வேம்பு, புங்கை, பூவரசு, வாகை...

பூக்கும் செடிகள். நிழல் தரும் மரங்கள்... ஒவ்வொன்றையும் பார்த்து தேர்வு செய்தான்.

"இதெல்லாம் பள்ளி வளாகத்துக்கும்... தெருவோரத்துக்கும்." என்று தனித்தனியாகப் பிரித்து வைத்தான்.

     மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. ரகு குட்டியானை வண்டியை எடுத்துவர, புத்தகங்களும், மரக்கன்றுகளும் அதில் ஏற்றினான். ரகு கூட நண்பனை அடிக்கடி கூர்ந்தான். அகிலன் மனதில் வலி இருப்பதை காட்டிக்கொடுத்தது. அதற்காக நடந்து முடிந்ததை மாற்ற முடியாதே. மதுராவை தவிர்த்து அவன் பஞ்சாய்த்து வேலையில் இதெல்லாம் முழ்கிக் கொள்வதே நல்லதென நினைத்தான். அதனால் பேச்செல்லாம் குறைத்து கொண்டு வேலை விஷயம் மட்டும் கேட்டுக் கொண்டான்.

   மீண்டும் ஊருக்கு திரும்ப, அவனது கண்ணில் இனியன்-மதுரா புகைப்பட பேனர் பதிந்தது. முன்பு நின்று கொண்டிருந்தது போல நிற்கவில்லை. மாறாக அதை கடந்து வந்திருந்தான். லேசான கண்ணீர் இப்பொழுதும் துளிர்த்தது. ஆனால் அந்த தெருவை கடந்துவிட்டான். 

--

மறுபுறம் இனியன் வீட்டில் மதியம் தாண்டியும் மதுரவாணி அறையை விட்டு வெளியே வரவில்லை. அவள் எப்போது விழிப்பாள் என்று குட்டி போட்ட பூனைபோல அறை வாசலையே சுற்றிச் சுற்றி வந்தான் இனியன்.

அவள் கண்களைத் திறந்த அடுத்த நொடியே... அவன் முகத்தில் நிம்மதி மலர்ந்தது.

"ஓ மை காட்... முழிச்சிட்டியா?" என்று கேட்க மதுரா மெதுவாக எழுந்தாள். 

''மறுபடியும் தூக்கிட்டியா அதான்." என்றதும், காய்ச்சல் பரவாயில்லையா?" என்று கேட்டு முடிக்க, தலையை ஆட்டினாள்‌. 

"ஆக்சுவலி எக்ஸாம் டைமுக்கு சிலருக்கு எக்ஸாம் பீவர் வருமாம். உனக்கு அது மாதிரி வந்துடுச்சா?" என்று கேட்டு வைத்தான். 

  எதுவும் பேசாமல் இமைகள் படபடவென அடிக்க, இதயம் துடிக்க இருந்தாள்‌. 

    "நான் கீழ போறேன்." என்று எழுந்தவளிடம் "எதுக்கு? இங்க இரு" என்று கூற, மதுரா தப்பிக்கும் நோக்கதில் எழுந்தாள். 

  இனியன் போதாத நேரம், அவள் சேலையை பிடித்திட,  மதுரா அரை நினைவில் இருந்த நேரம், வேல்விழி கட்டிவிட்டதால் இனியன் தீண்டவும் அவிழ்ந்தது. 

மதுரா சேலை அவிழவும், "ப்ளீஸ் என்னை திரும்ப திரும்ப காயப்படுத்தாதிங்க." என்று சேலையை பிடித்து அமர, "ஏய்... டிஸ்கஸ்டிங். ஜஸ்ட் டச் பண்ணினேன். என்னவோ என்னை கேவலப்படுத்தற. ஐ ஹேட் திஸ். என்னடி... நினைச்சிட்டு இருக்க?" என்று கத்திட, "இனியா... மதுராவை அழைச்சிட்டு கீழே வாடா. இளையமதி அத்தை கல்யாண சுந்தரம் மாமா வந்திருக்கார்‌" என்று வேல்விழி குரல் தந்தார். 

"ஆ..‌ வர்றேன்மா" என்று கத்திவிட்டு, "இங்க பாரு... எங்கம்மாவிடம் என்னை அசிங்கப்படுத்தின மாதிரி அத்தையிடம் மாட்டிவிடாத.. அப்படி மாட்டிவிட்ட, இதை விட அதிகம் அனுபவிப்ப. கிளம்பி வா" என்று அதட்டினான். 

"சேலை ஒழுங்கா கட்டணும். நீங்க வெளியே போங்க" என்றாள். 

இனியனோ "பரவாயில்லை.. நான் இங்க இருக்கேன். நீ கட்டு." என்று மெத்தையில் பெருமாளை போல படுத்துக் கொண்டு தலைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டான். 

   இரவில் மின்விளக்காவது அணைந்திருந்தன. இப்பொழுது அறைறெங்கும் வெளிச்சம் பரவியிருக்க, சேலை கட்ட தயங்கினாள். 

"ஹலோ... டைமாகுது." என்று கடிகாரத்தை காட்டி பேசினான். 

  இனியன் இங்கிருந்து செல்ல போவதில்லை என்று புரிந்திடவும், அங்கே ஓரமாய் சுவர் பக்கம் சென்று சரிப்படுத்த துவங்கினாள். 

   இனியன் மெதுமெதுவாக மதுராவை ஓரக்கண்ணால் பார்த்து நின்றான். 

   அடிபாதம் முதல் கற்சிலையில் கண்ட அங்க வளைவுடன், கிறக்கம் வைக்கும் அழகில் இருந்தவளது உடலில் ஆங்காங்கே தடிப்பும் இரத்த சிவப்பும் இருந்தது. 

  தனது கைங்கர்யம் என்று எண்ணியவனுக்கு, 'இதுக்கு தான் என்னை கண்டாலே மிரளுறா.' என்று நகம் கடித்தான். 

    நான் ஏன் இவளிடம் அத்துமீறிட்டு இருக்கேன்' என்று யோசனைக்கு சென்றதும் அவசரமாய் மதுரா சேலை அணிந்து, கீழே செல்ல ஓடினாள். 

இனியன் அதை கவனித்துவிட்டான். 

"ஏய்.. எங்க ஓடற. அவசரமா இரு.. சேர்ந்து போகலாம்" என்று டீஷர்ட் அணிந்தான். 

   காலையில் அவசரத்திற்கு அணிந்ததை தான் குளித்து விட்டு கழற்றி எறிந்தான். பனியனோடு இங்கும் அங்கும் உலாத்தியவன், டீஷர்ட் அணிந்திடவும், மதுரா கையை பிடித்தான். 

அதே அழுத்தமான பிடி, என்னை விட்டு ஓடவும் முடியாது ஓளியவும் முடியாதென்ற பிடி. மதுராவுக்கு அதுவுமே வலியை தந்தது. இரவெல்லாம் கைவிரலை ஓடித்திடும் அளவிற்கு இறுக பற்றியதும் இனியன் தானே. 

  "க.. கை.. வலிக்கு." என்று முகம் சுணங்க, "உனக்கு எல்லாம் வலிக்கும். நான் தொட்டா இதே தான் சொல்வ. இதே அவன் தொட்டா இனிக்க்க்." என்று வாயை மூடினான். 

  வார்த்தை அகிலன் என்று விழுந்திடாமல் தடுத்து விட்டான்.

   மதுராவோ பாதியில் விட்ட வார்த்தையில் குழம்பியிருந்தாள். 

  இவருக்கு என்ன தான் பிரச்சனை? கடவுளே.. என்று அன்னையை கட்டிக்கொள்ள ஓடினாள். 

இனியன் விட்டால் தானே. கண்ணீர் மழை பொழிய, "அம்மா.." என்று பள்ளியிலிருந்து குழந்தையை அழைத்து சொல்லும் அன்னை வந்து விட்ட நிலையில் தான் மதுரவாணி இருந்தாள். 

வேல்விழியோ ''நான் சொல்லிட்டேன் மதி.. புள்ள பயந்திருந்தா, நீ கொஞ்சம் புத்திமதி சொல்லு. இனியனை தப்பா நினைச்சிக்க போறா'' என்று கூறியதும், இளையமதி ''சரிங்க மதினி" என்றார். 

"ஏன்டி... ஒரு நாள் தானே பிரிந்த. எதுக்கு இப்படி தேம்பி அழற" என்று அணைத்துக் கொண்டார்.

"அம்மா... நான் நம்ம வீட்டுக்கே வந்துடறேன் அம்மா." என்று அணத்த, "ம்கூம்.. திரும்ப என்ன பேச்சு மதுரா. மதினி என்ன நினைப்பாங்க. இனியன் வேற உன்னையே பார்க்கறார்." என்று சுட்டிக்காட்ட மதுரா அஞ்சினாள். 

இனியன்‌ பார்வை அவளை தான் துளைத்திருந்தது. எங்கே தன்னை பற்றி ஏதாவது உரைத்து விடுவாளோ என்ற பயத்தை மறைத்தவனாக, அவள் உதடு திறக்கும் ஒவ்வொரு நொடியையும் அவன் கவனித்துக் கொண்டிருந்தான். தன்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட வெளியே வந்தால் விடமாட்டேன் என்ற இறுக்கம்  ஏதாவது சொல்லட்டும் அப்பறம் அதுக்கும் ரிவேன்ஜ் எடுப்பேன் என்றது அவன் மனம்.

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்

   வாசிப்பவர் அப்படியே கமெண்ட்ஸ் போட்டா அனனிமஸ் கமெண்ட்ஸா பேகும். லாகின் செய்து போட்டிங்கன்னா உங்க பெயரை காட்டும். அதனால லாகின் பண்ணி  பெயரை காட்டினா ந் சந்தோஷப்படுவேன். பிகாஸ் உங்க பெயர் மனதகல் பதியும். 

யாராவது ரெஜிஸ்டர் பண்ணலைன்னா பண்ணுங்க. அது எனக்க ஆதரவா நினைக்கறேன். 


 
Posted : July 2, 2026 6:58 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 49
Trusted Member
 

Akilan move on aaga aarambichitan even avanuku innum varutham irundhalum. 

Enna inga madhura oda nilamai rombha mosam oruthar um ava unarvu ah yum purinchika matraga ava vali ah yum yosikka matraga atleast velvizhi aachum kandichaga ippo arulaalan ah la athuvum pochi iva nilamai enna aagumo


 
Posted : July 2, 2026 9:08 am
(@niranjana)
Posts: 4
New Member
 

Intha iniyan en ippadi psycho mathiri panuran.. Pavam madhuraa.. 


 
Posted : July 2, 2026 9:10 am
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

மதுர ஜில்லா..மச்சானே ..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 21)

பரவாயில்லை, அகிலன் ஒருவழியா தேறிக்கிட்டான்.
எப்படியும் தேறிக்கிட்டுத்தானே ஆகணும். ஆனால் சில குசும்பு பிடிச்சவங்க சீண்டாமல் இருந்தால் சரி. அப்படியே சீண்டினாலும் கண்டுக்காமல் போகவும் கத்துக்கணும். முக்கியமா இனியன் கிட்ட

இந்த இனியனை எந்த லிஸ்ட்ல சேர்க்கிறதுன்னே, கன்ஃப்யூசனா இருக்குப் போங்க. பேசாமல் நாயகன் கமல் மாதிரி அடேய் இனியா, நீ நல்லவனா, கெட்டவனா ? ன்னு வந்து அட்டெனஸ் போட்டுட்டு போ ராசா.

இந்த மதுரா இன்னும் ஸ்கூல் புள்ளையாவே இருக்காளட, இனி எல்லாததையும் மாத்தியோ, ரப்பர் வைச்சு அழிச்சோ எழுதவா முடியும்., இவளும் சீரணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கையை அதன் போக்குல வாழ கத்துக்க வேண்டியது தான்.

😔😔😔
CRVS (or) CRVS 2797


 
Posted : July 2, 2026 10:12 am
(@subhakumar85)
Posts: 45
Eminent Member
 

Sariyana revenge ku poranthavane yethukeduthaalum revengeam.. 


 
Posted : July 2, 2026 11:33 am
(@sourabh)
Posts: 5
Active Member
 

அப்படியே நம்ம அகிலனுக்கு ஹீரோயின் அறிமுகபடுத்துங்க


 
Posted : July 2, 2026 7:22 pm
(@kalidevi)
Posts: 56
Trusted Member
 

ella thappum panitu nee panrathu thappu ilatha maiye nadanthukira iniya rendu manasa kasta paduthi jeichita nalla tha unaku intha unmai kaviya ku therinja inga vanthu una ena panuva nu pakanum appa va mariya vanmatha vachtu iruka


 
Posted : July 3, 2026 3:23 pm
(@kothaihari)
Posts: 54
Trusted Member
 

பாவம் மதுரா பெண் பாவம் இந்த குடும்பத்தை சும்மா விடாது


 
Posted : July 21, 2026 11:11 pm

Scroll to Top