Forum

மதுர ஜில்லா... மச்ச...
 
Notifications
Clear all

மதுர ஜில்லா... மச்சானே!-19

7 Posts
5 Users
2 Reactions
129 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#115]

அத்தியாயம்-19

அகிலனின் வீட்டின் வாசலில் வெற்றி மாலை இன்னும் காய்ந்து கிடந்தது. ஆனால் அந்த வீட்டிற்குள் வெற்றியின் வாசனையே இல்லை.
மதியம் சமைத்த சோறு அப்படியே பாத்திரத்தில் இருந்தது. அடுப்பின் சூடு ஆறிப் போனதுபோல, அந்த வீட்டில் இருந்த நால்வரின் மனமும் சோர்ந்து கிடந்தது.

அகிலன் அறைக்குள் சென்றவன், கதவைச் சாத்திக் கொண்டதுதான். அதன்பிறகு வெளியே வரவே இல்லை.
மீனாட்சி எத்தனை முறை கதவுக்கருகே வந்து நின்றார்.

மீனாட்சி கை உயர்ந்து கதவைத் தட்ட நினைத்தார். ஆனால் மகன் அழுதுக் கொண்டிருப்பானோ என்ற எண்ணம் வந்ததும், மீண்டும் கை இறங்கிவிடும்.
ஹாலின் ஒரு மூலையில் தூரிகா அமைதியாக அமர்ந்திருந்தாள். காலையிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அதியமான் வீட்டுக்குள் இருந்தாலும், மீனாட்சி அவரிடமும் பேசவே இல்லை.

அந்தளவு மனம் உடைந்திருந்தது. 'எம்புள்ள வாழ்க்கை இப்படி ஆகுறப்ப... இவரு மட்டும் அண்ணன் வீட்டுக் கல்யாணத்துக்கு போயிட்டு வந்திருக்காரு.' என்ற அந்த எண்ணமே அவரை கணவரிடமிருந்து தள்ளி நிறுத்தியது.

அதியமான் அதை உணர்ந்தார். அதற்காக விளக்கம் சொல்லவில்லை. சில வேதனைகளுக்கு விளக்கம் சொல்ல முடியாது என்பதையும், சில கோபங்கள் காலம்தான் குறைக்க வேண்டும் என்பதையும் அவர் நன்றாக அறிந்திருந்தார்.

மாலை சூரியன் சாய ஆரம்பித்தது. மீனாட்சி நாலு டம்ளர் டீ போட்டு கொண்டு வந்தார். ஒன்றை தூரிகாவிடம் நீட்டினார். மற்றொன்றை அதியமான் முன் வைத்தார். இருவருமே பக்கத்தில் வைத்த டீயை தொடவில்லை.
இன்னொன்றை அகிலனுக்காக எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றார்.

கதவை மெதுவாகத் தட்டினார்.
"அகிலா... அகிலா" என்று அழைக்க உள்ளே அமைதி மட்டுமே.
"அகிலா கதவை திறடா." என்று அன்னை பதறவும், சில நொடிகளுக்குப் பிறகு கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

கதவைத் திறந்த அகிலனை பார்த்ததும் மீனாட்சியின் இதயம் சுருங்கியது. ஒரே நாளில் பல வருடங்கள் முதிர்ந்தது போல இருந்தான்.
தலை கலைந்திருந்தது கண்கள் சிவந்து வீங்கியிருந்தன. "டீ குடிடா..." என்று நீட்ட அவன் மறுப்பாய் தலையசைத்தான்.
"வேண்டாம்மா..." என்றான்.

"மதியமும் சாப்பிடல...
இப்ப டீயும் வேண்டாம்னா எப்படி அகிலா?" அவன் அமைதியாக நின்றான்.
மீனாட்சி குரல் உடைந்தது.

"அகிலா... நீ சரியானா தான் இந்த வீட்டுல இருக்க எல்லாரும் சரியாவோம். நீ இப்படி உடைஞ்சு நின்னா...
நாங்க யாரை பார்த்து நிம்மதி அடைவோம்?" என்றார். அவன் பார்வை தாயைத் தொட்டது. பிறகு தங்கை தந்தையை கண்டான். அவர்களும் டீயை குடிக்காமல் அருகே வைத்து அழகு பார்ப்பதை கவனித்தான். அத்துடன் மதியம் சாப்பிடாமல் இருப்பதை புரிந்துக் கொண்டான்.

"இப்பவும் சொல்லறேன்...
அவளுக்கு இந்த வீட்டுல விளக்கேத்துற கொடுப்பினை இல்லை. மதுரவாணி உனக்கானவ இல்லை அகிலா.
நம்ம வீட்டுக்கு வர்ற மகராசி, இனி தான் நம்ம கண்ணுல படுவாளோ என்னவோ" என்று கூறவும், ஒவ்வொரு வார்த்தையையும் தன்னைத் தேற்றிக் கொள்ளவே சொன்னார் மீனாட்சி.

அகிலனுக்கு அது புரிந்தது. தன்னைவிட... தாய், தந்தை, தங்கை மூவரும் தான் அதிகம் துடிக்கிறார்கள். அதனால் டீயை வாங்கி தொண்டையில் சரித்தான்.

இரவு ஏழுமணிக்கே மீனாட்சி மீண்டும் சாப்பாடு பரிமாறினார்.
"வா..." என்று அழைத்ததும், இந்த முறை அகிலன் மறுக்கவில்லை. அமைதியாக வந்து அமர்ந்தான்.

மீனாட்சி கையால் சோற்றைப் பிசைந்து அகிலன் வாயில் வைத்தார். நான்கு வாய் சாப்பிட்டவனுக்கு அதற்கு மேல் இறங்கவில்லை.

"போதும்மா..." என்று மெதுவாக எழுந்தான். அடுத்ததாக மீனாட்சி மகள் தூரிகாவுக்கு ஊட்டினார். அவளும் கண்ணீரோடு விழுங்கினாள். மதுராவோடு அத்தை மகள் என்று பழகியிருந்தால் வலித்திருக்காது. இவளும் அவளும் 'அகிலனை மணக்கும் அண்ணியாக' நிறைய பேசி விளையாடி சீண்டியதால் வருந்தினாள்.

பிறகு தட்டை அதியமான் பக்கம் நகர்த்தி, மகளைப் பார்த்து கண் காட்டினார். அதில் தந்தைக்கு நீ ஊட்டிவிடு என்ற அர்த்தம் இருந்தது.

தூரிகா அமைதியாக தந்தைக்கு ஊட்டினாள். மகள் கையால் இரண்டு வாய் சாப்பிட்ட பிறகுதான் அதியமான் தட்டையை வாங்கினார்.

மீனாட்சியோ எழுந்து, வீட்டிலிருந்த மாடுகள், நாய்கள், கோழிகள் என ஒவ்வொரு ஜீவராசிக்கும் உணவை வைத்துவிட்டு வந்தார்.
அனைவரையும் பார்த்துக் கொண்ட பெண்... தன்னைக் கவனிக்க மறந்துவிட்டார்.
இரவு மேலும் ஆழ்ந்தது.

அறைக்குள் வந்த அதியமான்...
மனைவி இன்னும் சாப்பிடாமல் அமர்ந்திருப்பதை பார்த்தார்.
எதுவும் பேசாமல்... தட்டில் சோற்றைப் பிசைந்து அவள் அருகில் வந்து அமர்ந்தார்.

"மீனா.. என்னை மன்னிச்சிடும்மா." என்று அழைத்தார். அவ்வளவுதான். அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் அணை உடைந்தது.
கணவர் தோளில் சாய்ந்து கதறினார்.

"அய்யோ... எம்புள்ள மனசுல மதுரா இருக்காளே... நான் எப்படிங்க மாத்துவேன்? அவ மணமேடையில துடிச்சி நின்றுயிருப்பா. இங்க இவன் துடிக்கிறான். ஏங்க இந்த வலி எம்புள்ளைக்கு." என்று கதறினார். அதியமான் கண்களும் கலங்கின.

அவள் தலையை வருடியபடி,
"நீயே சொன்னியே... வலி குறைய காலம் வேணும்னு.. நீ சொன்னாப்ல... அகிலனுக்கு ஏத்த புள்ளய தேடுவோம்.
மதுராவுக்கு அந்த கொடுப்பினை இல்லை."
என்றாலும் குரலில் நம்பிக்கை இல்லை.

மீனாட்சியோ "மதுராவுக்கு என்ன ராசாத்தி... படிப்பு மட்டும் மண்டையில ஏறலை. ஆனா எம்புட்டு நல்ல புள்ள...
எம்புள்ளைக்குத்தான் வாய்க்கல." என்று மீண்டும் அழுதார்.
''என் தங்கைக்கு... நம்ம மகன் அந்தளவுக்கு உசத்தியா தெரியாம போயிட்டானே. நான் தான் ஏதோ பாவம் செய்துட்டேன்'' என்று அந்த ஏக்கம் வார்த்தைகளில் வழிந்தது.

மீனாட்சியோ மெதுவாக,
"அகிலனை உசத்தியா நினைக்கறவ... ஒரு நாள் அவன் வாழ்க்கையில வருவா. அந்த நாளும் ரொம்ப தூரமில்லை." என்றார். அந்த வார்த்தையை இறுகப் பற்றிக் கொண்டார் அதியமான்.

மீனாட்சி பூஜை அறைக்குள் சென்று 'மதுரை மீனாட்சி அம்மன் படத்தின் முன் ஒரு ரூபாய் நாணயத்தை முடித்து வைத்து, "எம்புள்ள மனசுக்கு நல்ல வாழ்க்கை குடும்மா... அப்படி அவன் மனசுக்கு ஏத்த மகராசி வந்துட்டா துலாபாரம் ஏத்தி அவளோட எடைக்கு எடை நாணயமும், தானியமும் உனக்கு காணிக்கை வைக்கறேன்" என்று கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டார். இதுவரை மதுராவை தவிர அகிலனுக்கு ஒரு பெண் என்று யாரையும் கண்டதில்லை. இனி அகிலனுக்காக படைக்கப்பெற்ற பெண் எங்கோ இருப்பாளே. அவளை கடவுள் தான் காட்ட வேண்டும் என்று கண்ணீர் மல்கினார்.

---

அதே நேரத்தில்... மறுபுறம் இனியன் வீட்டில் உறவினர்கள் ஒருவர் பின் ஒருவராக கிளம்பிக் கொண்டிருந்தனர்.
வீட்டில் சிரிப்பும், பேச்சும் குறைந்து. இரவு மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது.

வேல்விழி மதுராவை மீண்டும் அலங்கரித்து முதலிரவுக்கு தயார் செய்து இனியன் அறைக்கு அனுப்பினார். அதற்கே நேரம் சரியாக அமைந்தது.

கையில் பால் டம்ளர் ஏந்தி,
கால்கள் மட்டும் முன்னே சென்றன. மனம் இனியன் முன் செல்லவே மறுத்தது.

அறைக்குள் நுழைந்தவுடன் இனியன் அவளை எதிர்பார்த்தபடி நின்றிருந்தான்.

மதுராவின் விரல்கள் நடுங்கின.
அவள் நீட்டிய பால் டம்ளரை வாங்கி அருகிலிருந்த மேசையில் வைத்தான்.

அறைக்குள் சில நொடிகள் அமைதி. அந்த அமைதியே மதுராவுக்கு பயமாக இருந்தது.
அவன் மெதுவாக ஒரு அடி முன்னே வந்தான். அவள் ஒரு அடி பின்னே சென்றாள். அவளது தயக்கமும், நடுக்கமும், விலகிப் போகும் முயற்சியும்... அனைத்தையும் கவனித்த இனியனின் முகத்தில் புரியாத ஒரு இறுக்கம் தோன்றியது.

தன்னை இது போன்ற சூழலில் நெருங்கி வந்தால் பின்னால் நடப்பது சாதாரணமாக பெண்ணின் சுபாவமாக கூட இருக்கலாம். இனியனோ தவறாக எண்ணிக் கொண்டு அல்லவா நெருங்குகின்றான்.‌

மதுரவாணியை பார்த்து, "இதுல கையெழுத்து போடு" என்றான்.

"எ..என்னது?" என்று புரியாமல் பார்வையிட்டாள்.

"உனக்கும் எனக்கும் சட்டபடி‌ கல்யாணம் ஆனதாக பத்திரம். பொதுவா மண்டபத்துல யார் யாருக்கு கல்யாணம் ஆச்சுனு கையெழுத்து வாங்குறது தான். காலையில நம்மிடம் வாங்க மறந்துட்டாங்களாம். இப்ப நினைவு வர்றப்பவே வாங்கிடலாம்னு பேப்பர்ஸை இங்க வச்சிட்டேன்." என்றான்.

மதுராவிடம் பணம் காசு சொத்து பத்திரமா இருக்கின்றது. இனியன் அபகரிக்க? அதனால் குழப்பமும் தயக்கமுமாய் எட்டி பார்த்தாள்.

மேலே காலையில் அவளுக்கும் இனியனுக்கு நடந்த கல்யாண மண்டபத்தின் பெயரை எழுதி அதில் விலாவரியாக இருந்ததை கண்ணுற்றாள்.
அதில் இனியன் கையெழுத்து போட்டதையும் கவனித்து கையெழுத்து போட முனைந்தாள்.

அவள் கை பேனாவை எடுக்க, இங்கே இனியன் அவளது கழுத்தில் ட்ரிம் செய்யப்பட்ட மீசை குத்தும் விதமாக முத்தங்களை வழங்கினான்.

ஒரு புறம் பேனாவில் கையேழுத்து, மறுபுறம் இனியனின் செய்கை என்று இரண்டிலும் மாறி மாறி பயத்தில் கவனக்குறைவுடன் கையெழுத்திட்டாள்.

இனியனோ முத்தம் வழங்கியவனாக, "இங்க ஒரு சைன்.. இதுல.. இதுல" என்று வாங்கிக் கொண்டிருக்க, அதற்கேற்ப முத்தங்களையும் கழுத்தின் வளையத்தில் மொட்டு போல வைத்து வைத்து இம்சை செய்தான்.

இனியன் முத்தம் வைத்தபடி தனக்கான வெற்று பத்திரத்திலும் இடையிடையே வைத்து மதுரவாணியிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டான்.

அதன் பின்னே நிம்மதியடைந்தான். விவாகரத்து வாங்க வெற்று பத்திரத்தில் பிற்காலத்தில் கையெழுத்து போடாமல் சண்டித்தனம் செய்தால் கஷ்டமென்பதால், தனக்கான விஷயத்தில் தெளிவாக தான் இனியன் காய் நகர்த்தினான்.

பேனாவை மூடி மதுரா நிற்க, பத்திர பைலை பூட்டி பீரோவில் பத்திரமாக வைத்தவன், அங்கே ஒளிர்ந்த அறையின் பெரிய விளக்கை அணைத்தான்.
மங்கலான ஒளி மட்டும் எரிந்தது. மதுராவுக்கு அந்த இருள், அறையைவிட, தன் வாழ்க்கையே இருண்டு போனது போன்ற உணர்வைக் கொடுத்தது.

மதுரவாணி உதடு தந்தியடிக்க, அந்த இரவு அவள் இனியனின் வசத்தில் விழுந்தாள். அவளது கண்ணீரை இனியன் பொருட்படுத்தவேயில்லை.

''மச்சான்... வேண்டாம் மச்சான்." என்று கண்ணீரோடு கூறிட, "என்ன வேண்டாம். ஆங்... எங்கம்மாவும் அத்தையும் உன்னிடம் ஏதேதோ சொல்லி விட்டாங்க. இப்ப மறுத்தா எப்படி. கையை எடு மதுரா" என்றான். சேலை முந்தானையை பற்றிக் கொண்டு மறுத்துக் கொண்டிருக்க, "மதுரா... ஒருமுறை தான் சொல்ல முடியும். பிடிவாதம் பிடிச்ச... அப்பறம் காலையில நடந்துக்கிட்ட மாதிரி முரட்டுத்தனமா நடக்கும். பிறவு என்ன குற்றம் சொல்ல கூடாது." என்றான் கட்டளையாக.

மதுராவுக்கு அவன் எடுத்து கூறியும் எளிதாக தன்னை ஒப்படைக்கவும் மனமில்லை. கல்யாணமே பிடிக்காத பொழுது கூடல் எவ்விதத்தில் ஏற்பாள். இனியனின் ஆக்ரோஷமான எல்லை மீறலில் தான் துடித்தாள்.
இனியனாக அவனாக அவளை விடுவித்து கண்ணை மறைத்த காமம் அடங்கியதும், உறங்கினான். மதுராவோ ஆங்காங்கே கடிப்பட்டு வலியை பொருத்து, இனி வரும் நாட்களும், எப்படி இருக்கும் என்ற அச்சத்தோடு தன் விதியை எண்ணிக் கொண்டே உறங்காமல் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக விசும்பி அடங்கியது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்‌


 
Posted : June 30, 2026 9:33 am
(@Guna Sundari)
Posts: 9
 

Omg. Madura your life starts with eniyan go with the flow. Accept this life. Akilan soon u will find ur better half. Very intresting sis.


 
Posted : June 30, 2026 9:59 am
(@kalidevi)
Posts: 56
Trusted Member
 

intha mariyana oru vazhkai entha ponnukum amaiya kudathu


 
Posted : June 30, 2026 10:04 am
(@Dharsini Priya)
Posts: 4
 

Romba emotional epi sis 🥺 🥺 endha iniyan enna mirugam ah cha😠 akilan romba odanji poitan paavam😕 kandipa iniyan edhukellam anubavikkanum pa😐


 
Posted : June 30, 2026 10:41 am
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

மதுர ஜில்லா..மச்சானே ..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 19)

அட கண்றாவியே...! இந்த இனியன் என்ன புராணா காலத்துல வர, இரணியன், நரகாசுரன் அரக்கன்ங்க மாதிரியே நடந்துக்கிறான்..? அவங்க கூட ஜனங்க கிட்டத்தான் அப்படி ஈவு இரக்கமில்லாமல் நடந்திருப்பாங்க போல, ஆனால் இவன் தொட்டுத் தாலி கட்டின பொண்டாட்டி கிட்டயே இப்படி நடந்துக்கிறானே...? ஒரு வேளை, இந்த இனியன் அந்த அரக்கன்ங்களை விட கேவலமானவனா இருப்பானோ, அதான் பொண்டாட்டி கிட்ட தன் வீரத்தையும் ஆண்மையையும் காட்டுறானோ ? சீக்கிரமா அந்த அமெரிக்கா அழகி காவ்யாவை களத்துல இறக்கி விடுங்க, அப்பத்தான் இவனோட கொட்டமும் அடங்கும், முகத்திரையும் கிழியும், அவளும் வந்து காறித்துப்பிட்டு போவாள்.

அதே மாதிரி, சீக்கிரமா அகிலனுக்கும் அந்த குடும்பத்துக்கும் ஏத்தவளை களம் இறக்கி விடுங்க, அப்பத்தான் அகிலனும் அவனோட குடும்பமும் கொஞ்சமாச்சும் சந்தோஷமா இருப்பாங்க. இல்லைன்னா இப்படித்தான் மொத்த குடும்பமும் அழுக்காச்சியாவே இருப்பாங்க.

அட..நீங்க என்ன ஹீரோவை அழ விட்டு, சோகத்துல மூம்க விட்டு, வில்லனுக்குப் போய் கல்யாணம், கருமாதின்னு எல்லா சந்தோஷத்தையும்  கொடுத்திட்டிருக்கிங்க...?
இதெல்லாம் நல்லதுக்கில்லை..
ஆமா, சொல்லிட்டேன். முதல்ல
அந்த வீணாப்போனவன் மதுரா கிட்ட வாங்குன கையெமுத்து பத்திரத்துக்கும், வெத்து காகிதத்துக்கும் வால்யூ இல்லாத மாதிரி பண்ணுங்க. இந்த லஷ்ணத்துல குழந்தை வேற வந்திடுமோன்னு
எங்களுக்கு பக்பக்குன்னு இருக்குது போங்க.

😔😔😔
CRVS (or) CRVS 2797


 
Posted : June 30, 2026 1:06 pm
(@Priyadharshini Chelvam)
Posts: 2
 

Akilan lam pavam ila. Akilan kolai. Just like iniyan Akilan is also selfish. Sandharpavadhigal. Avanuku aval virumburanu theriyum. Therinjum summa irukana he dont deserve her


 
Posted : July 1, 2026 9:35 am
(@kothaihari)
Posts: 54
Trusted Member
 

இனியன் பண்ற தவறுக்கு காவ்யா சரியான பதில் தரனும்


 
Posted : July 21, 2026 11:01 pm

Scroll to Top