மதுர ஜில்லா... மச்சானே!-18
அத்தியாயம்-18
மாடியறைக்குள் நுழைந்தவுடன் இனியன் கதவை சாத்தினான்.
அறை முழுவதும் புதிய மணமக்களுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கட்டிலில் சிவப்பு ரோஜா இதழ்கள் தூவப்பட்டிருந்தன. மூலை முழுவதும் மல்லிகைப்பூ வாசம் பரவியிருந்தது. சுவரில் வண்ண விளக்குகள் மங்கலாக ஒளிர்ந்தன.
அந்த அழகெல்லாம் மதுராவின் கண்களில் விழவே இல்லை. அவள் கதவோரமாகவே நின்றிருந்தாள். இனியன் எந்த வார்த்தையும் பேசாமல் ஏசியை இயக்கினான். சில நொடிகளில் அறையே குளிர ஆரம்பித்தது.
ஏற்கனவே பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த மதுராவுக்கு அந்த குளிர் எலும்பு வரை இறங்கியது.
இரண்டு கைகளையும் மார்போடு கட்டிக் கொண்டு, ஓரமாக நின்றாள். அவளது உதடுகள் லேசாகத் தந்தி அடிக்க ஆரம்பித்தன. அதை கவனித்த இனியன் மெதுவாக அவள் அருகே வந்தான்.
"என்ன... ஏசிலாம் இதுக்கு முன்ன யூஸ் பண்ணியது இல்லையா. இந்தளவு நடுங்கற?" என்றான்.
மதுரா மௌனமாக ஏசியை பார்த்து தலைகுனிய, "ஏய்... ஏசிலாம் யூஸ் பண்ணினியா இல்லையா?" என்று அதட்டும் தோணியில் கேட்க, "உபயோகிச்சது இல்லை மச்சான்" என்றாள்.
"அதுக்கேன் இந்தளவு யோசித்து பேசற. என்னைப் பார்த்தா பயமா இருக்கா?" என்று கேட்டான். மதுரா பதில் சொல்லவில்லை.
"நான் ஒன்னும் அந்நியன் இல்ல. உன் புருஷன்." என்று நினைவுப்படுத்தினான். அவள் இன்னும் அமைதியாகவே நின்றாள். அவளுக்கு அது நிகழ்ந்ததால் தானே இத்தனை வேதனை.
அந்த அமைதியே இனியனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
"எப்ப பார்த்தாலும் இந்த முகமா? கல்யாணமே பிடிக்காதவளாட்டும் இப்படி கல்லு மாதிரி நின்னா எப்படி?"
என்றவன் அவளது தோளைத் தொட முயன்றான். அவளுக்கு இவனோடு நடந்த கல்யாணம் பிடிக்கவில்லை தானே.!
இனியன் தீண்ட முயல், மதுரா உடனே ஒரு அடி விலகியதில் இனியன் முகம் இறுக்கமாக மாற்றியது. "நான் கிட்ட வந்தா மட்டும் விலகுற... இந்த பழக்கத்தை மாத்திக்கோ மதுரா."
என்றான் அழுத்தமாக.
மதுரா மீண்டும் கதவை நோக்கிப் பார்த்தாள். வெளியே இருந்து யாராவது வந்துவிடுவார்களா என்ற நம்பிக்கையோடு எதிர்பார்த்தாள்.
அவளது பார்வையையே கவனித்த இனியன்,
"இங்க யாரும் வரமாட்டாங்க."
என்று கூறிவிட்டு அவளது கையைப் பிடித்தான்.
மதுரா பயத்தில் தன்னை விடுவிக்க முயன்றாள்.
"ம..மச்சான்... விடுங்க.க." என்று அவளது குரல் நடுங்கியது.
இனியனுக்கு தேவையற்று அகிலன் அன்றொரு நாள் மதுராவை தீண்டியது நினைவில் வந்தது. கீழே வழிக்கிடும் என்று இடையை பிடித்தவன், அவனாக கையை எடுக்கும் வரை மதுரா விலகவில்லையே. இன்று தான் மணமுடித்து நின்ற பின்னும் விலகுவதில், எரிச்சல்கள் உருவாக, கோபமானான்.
அதே கோபத்தில் அவளை இழுக்க, மதுராவோ தயங்கி வரமறுக்க, அந்த இழுபறியில் மெத்தையில் விழுந்தார்கள்.
தனித்துவிடப்பட்ட அறையில் அலங்கரிக்கப்பட்ட மெத்தையில், மதுராவோடு விழுந்தான் இனியன்.
மதுராவின் அலங்காரம் செய்த தெய்வீக அழகில், மல்லிப்பூ நறுமணத்திலும் கிறங்கியவன், அவள் தன் தீண்டலில் விலகவும், ஆக்ரோஷமாக அவள் மீதே படர்ந்தான்.
ஏற்கனவே ஏசியால் உதடு தந்தியடிக்க, இதில் பயத்தில் மேலும் மிரண்டவளது செவ்விதழ் செர்ரி பழத்தை நினைவுப்படுத்திட, முத்தமிடவே துடித்தான்.
மதுரா மறுக்கும் விதமாக தலையை வலது இடதென ஆட்டவும், முத்தமிட்டே ஆகவேண்டுமென்ற வெறி கூடியது.
மதுராவின் இரு கரத்தை தலைக்கு மேல் தன் கரத்தால் கடிவாளமிட்டு பிடித்து விட்டு இதழை முத்தமிட்டு நெருங்கினான்.
மென்னிதழ் முத்தத்தின் ஒற்றலே என்றாலும் மதுரா பயந்து ஓடும் நிலையிலிருக்க, சுனாமி போல ஒரு முத்த யுத்தம் நிகழ்த்தவும் பயத்தில் கண்ணை இறுக மூடி அழதிட செய்தாள்.
கண்களில் கண்ணீரை பற்றி எல்லாம், இனியனுக்கு அக்கறை வரவுமில்லை. அவள் தன்னை விலக்குவதாகவே மல்லுக்கட்டினான்.
ஒருவழியாக இதழில் பற்கடி கூடி, ரத்தம் வழியவும், உமிழ்நீர்சுவை வேறுபடவும் அவள் பஞ்சு மேனியிலிருந்து எழுந்தான்.
மதுராவுக்கு இனியனை மணந்ததே பேரதிர்ச்சி. இதில் அவனுடன் தனியறையில் நடுங்க நடந்து வந்தது இரண்டாவது அதிர்ச்சி.
தற்போது அதிகம் பேசாதவன் தன்னிடம் பாய்ந்து முத்தமிடவும், அவனது மொத்த எடையும் தாங்கயியலாதவளாக, பயந்து, அழுதவளிடம் கூடுதலாக அசுரத்தனமாக இதழில் முத்தமிட்டு உதட்டை கடித்து வைத்தவனை கண்டு பயந்தாள். மதுராவின் கண்களில் கண்ணீர் பெருகியது.
இதில் உடைகளும் அலங்காரங்களும் கலைந்துவிட்டது. அவளது முடியில் இருந்த மல்லிகைச் சரம் சிறிது கீழே விழுந்தது.
நெற்றிப் பொட்டு பாதியாக அழிந்தது. சேலையின் முந்தானை சற்றே கலைந்தது.
அதே நேரம்... "இனியா." என்று வேல்விழியின் குரல் கதவுக்கு வெளியே கேட்டது. இனியன் ஒரு நொடி செய்வதறியாது நின்றான்.
வேல்விழி மீண்டும் மீண்டும் கதவை தட்டி, "இனியா... கதவை திறடா." என்று அழைத்தார்.
மதுரவாணியின் அழுகையையும் அடக்க முடியாது, அன்னையின் வருகையையும் தடுக்க முடியாது, எரிச்சலுடன் கதவைத் திறந்தான்.
வாசலில் நின்ற வேல்விழியின் பார்வை நேராக மதுராவின் மீது விழுந்தது. கலைந்த பூ... அழிந்த பொட்டு... கலங்கிய கண்கள் நடுக்கத்துடன் நின்ற புதுமருமகளை கண்டதும் இரண்டு பிள்ளை பெற்ற புண்ணியவதிக்கு மகனது திருவிளையாடல் புரிந்துவிட்டது.
அனைத்தையும் ஒரே பார்வையில் பார்த்தவர் மகனை முறைத்தார். "ஏன்டா... என்னடா இது?" என்று சத்தம் போட்டார்.
இனியன் பேச்சற்று தலை குனிந்தான்.
வேல்விழியோ "கீழே எவ்வளவு சொந்தக்காரங்க இருக்காங்க. அதுக்குள்ள என்ன அவசரம்? ஜோசியக்காரன் தான் நாளும் கிழமையும் நேரத்தையும் குறிச்சி தந்திருக்கார். எல்லாம் முறைப்படி ராத்திரி நடத்திக்கோ" என்று அதட்டினார்.
இனியன் தவறை மறைத்தபடி,
"இல்லம்மா. அது வந்து..." என்று சொல்ல முயல, "போதும் நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். உங்கப்பா அப்பவே பொண்ணும் பையனையும் தனியா விடாத. ராத்திரிக்கு வரை அண்டாம பார்த்துக்க சொன்னார். நீ அதெல்லாம் நெருங்க மாட்டனு பார்த்தா, பந்தியை பார்த்ததும் பாயற. எல்லாம் ராத்திரிக்கு நேரம் குறிச்சதுல பார்த்துக்கோ. இப்ப அவளை கீழே கூட்டிட்டு வா." என்று அதட்டினார்.
இனியனோ அன்னை பேசியதில் தலையாட்டிட, மதுராவின் கையை மெதுவாகப் பிடித்துக் கொண்டு வெளியே அழைத்துச் சென்றார் வேல்விழி.
படிக்கட்டில் இறங்கும் போது தான் மருமகளின் முகத்தை நன்றாகப் பார்த்தார். "அடடா... பொட்டு கலைஞ்சிருக்கு." என்று கூறி அவளது நெற்றியைத் துடைத்தார்.
"போய் முகத்தை கழுவாம, மேலோட்டமா பொட்டை சரிப்படுத்தி வச்சிட்டு வாம்மா." என்றார். மதுரா அமைதியாக தலையசைத்தாள்.
ஆனால் இப்போது எப்படி அறைக்குள் திரும்பிப் போவது என்ற பயம் அவளை உள்ளுக்குள் உலுக்கியது.
அவள் தயக்கத்தோடு நின்றதைப் பார்த்த வேல்விழி,
"என்னம்மா?" என்று கேட்டார்.
மதுராவின் கண்கள் மீண்டும் கலங்கின. "அத்தை... அவர்..."
என்று தொடங்கினாள். முழுதாய் சொல்ல மதுராவால் முடியாது நின்றாள்.
வேல்விழி சிரித்தவர், "அட பைத்தியக்காரி..." என்று அவள் தலையை வருடினார். "இனியன் உன்னை ஆசையா கல்யாணம் கட்டியிருக்கான். அதான் கொஞ்சம் அவசரப்பட்டிருப்பான். புதுசா கல்யாணமான வீட்டுல இதெல்லாம் சகஜம்." என்றதும் மதுரா அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தாள்.
"இல்ல அத்தை... அவர்..." மீண்டும் ஏதோ சொல்ல முயன்றாள். வேல்விழி அவளை நிறுத்திவிட்டார்.
"இங்க பாரு மதுரா... இனியன் உன்னை நேசிக்க ஆரம்பிக்கறதும். நீ அவனை நேசிக்க ஆரம்பிக்கறதும். இரண்டுமே உன் கையில தான் இருக்கு. அவன் முரட்டுத்தனமானவன் தான். கொஞ்சம் அனுசரிச்சு போ.
எல்லாம் சரியாகிடும். கீழே வந்தவங்களுக்கு சாப்பாடு போட்டு கை முழுக்க ஸ்வீட் காரம் கொடுத்து அனுப்ப வேண்டியது இருக்கு" அந்த வார்த்தைகள் மதுராவின் குழப்பத்தை இன்னும் அதிகப்படுத்தின.
'இது அன்பென்ற ரீதியில் அவளால் எடுத்துக் கொள்ளமுடியவில்லை... நான் மட்டும் தான் காரணமில்லாம பயப்படுறேனா?' என்று மனம் தடுமாறியது.
அறைக்கு வந்து நின்றதும், இனியன் நகம் கடித்தபடி இருந்தான்.
அவனுக்கு எப்படி மதுரவாணியிடம் முத்தம் வைத்து விளையாடினோமென்று புரியவில்லை. காதலித்தது காவ்யாவிடம், இது போல நெருங்கியதில்லை.
அகிலனை பழிவாங்க மணந்து நின்றோம். ஆனால் அகிலன் இந்த பக்கமே வராததில், எப்படி பழிவாங்க என்று குழம்பியவனுக்கு, மதுரவாணி விலகி செல்லவும் அவளை அவ்வாறு நெருங்கி விட்டோமென்றது புரிந்தது.
ஆனாலும் முத்தம் வைக்கும் அளவிற்கு சென்றதும் ரத்தம் வரும் வரை கடித்து வைத்ததும் அவனே அறியாதது. அந்தளவா மதுரா மீது வன்மம் என்று என்ன திரும்ப வந்து நின்றாள்.
"அ.. அத்தை... தலை கலைந்து இருக்கு சரிப்படுத்திட்டு வரச்சொன்னாங்க. தயவு செய்து கிட்ட வாராதிங்க" என்றாள்.
இவனிடம் கிட்ட வராதே என்றால் ஏனோ மனதில் எரிமலை தான் உருவானது. "ஏன்.. வந்தா என்ன?" என்று அதட்டலுடன் நெருங்க, அங்கே நிலானி ஓடி வந்தாள்.
"அக்கா... அத்தை ஏதோ உனக்கு தலை சிலுப்பிட்டு இருக்கு ஒழுங்குப்படுத்த சொன்னாங்க" என்று மூச்சு வாங்க ஓடி வந்து அருகில் நின்றாள்.
மதுராவோ இதுதான் சாக்கு என்று, "இதோ இங்க.." என்று பூவை காட்ட, "அச்சோ... ஏன்கா.. இது இப்படி அவுந்துடுச்சு. ஏசி ரூம் என்றதால நல்லா பெட்ல படுத்து தூங்க வந்துட்டியா?" என்று கேட்டபடி அக்கா மனதை புரியாது பேசி, சரிப்படுத்த முயன்றாள்.
"இந்தா... பொட்டு கூட இலுப்பி வச்சியிருக்க" என்று கைகுட்டையால் துடைத்து வட்ட வடிவமாக மாற்றினாள்.
"சீலையை கூட கசக்கி வச்சியிருக்க. அம்ம பார்த்துச்சு அதுக்கும் திட்டும்." என்று மடிப்பை சரிப்படுத்த, இனியன் கையை கட்டி ஜன்னல் பக்கம் பெருமூச்சை வெளியிட்டான். மதுராவை நெருங்க முடியாத தகிப்பு உள்ளே இருந்தது.
நிலானி மெதுவாக இடத்தை ஆராய்ந்து முடிக்க, "ஏ அக்கா ஏசி சில்லுனு இருக்குல்ல" என்று கேட்டுவிட்டு 'அச்சி' என்று தும்ப ஆரம்பித்தாள்.
''பாரு... கொஞ்ச நேரம் நின்றதுக்கே தும்பல் வந்துடுச்சு. என்னை விட உனக்கு குளிர்ச்சி ஒத்துக்காதே. எப்படி இவ்ளோ நேரம் நிற்க" என்று கேட்டாள்.
மதுரா இனியன் மச்சானை காணவும், நிலானிக்கு லேசான அசௌகரியம் நேர, நான் கீழே போறேன்.'' என்றாள்.
"நிலானி... கூடவேயிரு" என்று மதுரா போகாதே என்று கெஞ்சுவதை இனியன் கண்டுவிட்டான்.
இதுவரை நிலானி இருப்பதால் அமைதிக்காத்த இனியன் நாகரிகத்தை எல்லாம் மூட்டைக்கட்டி விட்டு, "நிலானி நீ வெளியே இரும்மா. நான் மதுராவிடம் கொஞ்சம் பேசணும்." என்று அனுப்பினான்.
நிலானி திரும்பிச் செல்லும் போது அக்காவின் கையை இறுகப் பற்றினாள்.
அந்த ஒரு பிடியில்... மதுராவின் பயம் முழுவதும் இருந்தது.
நிலானி மெதுவாக கையை விடுவித்து கீழே ஹாலுக்கு வந்தாள்.
அங்கே எழிலரசன் டிவியில் ஏதோ இணைக்க முயன்று கொண்டிருந்தான்.
வீடு முழுவதும் சிரிப்பும் பேச்சும் நிரம்பியிருந்தது. நிலானி அன்னையை தேடி நடந்தாள்
இனியன் நிலானி சென்றதும், "அதென்ன என்ன கண்டா ஓடற. தங்கச்சி கூடவே இருக்கணுமோ? எல்லாம் ராத்திரி வரை இருப்பாங்க. அப்பறம்... என் கூட மட்டும் தான் இங்க இருக்கணும். எல்லாத்துக்கும் தயாராகு" என்று ஏதோ முடிவுக்கட்டி பேசியவனாக படியில் இறங்கியிருக்க, மெதுவாக அவன் கூறியதை உள்வாங்கியவளுக்கு ஜீரணிக்க இயலாது இறங்கினாள். கீழே கல்யாணத்திற்கு வந்த கூட்டத்தின் நடுவே, தனிமைப்பட்டவளாக நின்றது மதுராவின் மனம்.
இதில் இளையமதியை தேடி வந்தாள்.
"அம்மா... அம்மா.." என்று கூப்பிட, "என்னடி இங்க தலைக்கு மேல வேலை இருக்கு. சும்மா அம்மா அம்மானு" என்று வந்தார்.
"அம்மா... ஏன்மா இந்த கல்யாணம் பண்ணி வச்ச?" என்றாள்.
இளையமதிக்கோ கோபம் வந்திட, "என்னடி குறைச்சல்? ரூம்ல செத்த நேரம் நின்னா கூட குளிருது ஊட்டிக்கணக்கா இருக்குனு நிலானி சொன்னா. இந்தா.. இங்க பாரு உன்னை ஒன்னும் ஒன்னுமில்லாதவனுக்கு கட்டித்தரலை.
இனியன் படிச்சவன்.. அதுவும் வெளிநாட்ல படிச்சிருக்கான்.
வீட்டுக்கு மூத்த பையன். நீ மூத்த மருமகளா இங்க வந்திருக்க. எங்க மதினிக்கு பிறவு நீ தான் இந்த வீட்டை ஆளறது.
பரிசம் போட்டப்பவே ஐந்து பவுன் போட்டாங்க. இப்ப தாலி செயினே ஒன்பது சவரம். நீ போட்டிருக்கியே நகை.. அதெல்லாம் எங்க வீட்டு பரம்பரை நகை. அதெல்லாம் மதினி உனக்கு போட்டு அழகுப் பார்த்திருக்கு.
கட்டிய சீலையே ஐம்பதாயிரம் தெரியும்ல.
எங்க வசதிக்கு மீறிதான் இந்த இடம்" என்றார்.
"எனக்கு தான் பனில நின்னாலே சளி பிடிக்கும். எனக்கு ஏசி எதுக்கும்மா? நானா கேட்டேன் நகை நட்டை. எதுவுமே நான் ஆசைப்பட்டதை தரலை. ஆனா அதை விட நல்லதுனு நல்லதுனு எனக்கு பிடிக்காததை தந்து வச்சியிருக்க." என்று அழுதாள்.
இளையமதியோ மகளை தனியாக கைப்பிடித்து அழைத்து, "என்னடி தாலி ஏறியிருக்கு. இன்னும் அந்த அகிலனை நினைச்சிட்டு இருக்கியா? வார்த்தையெல்லாம் ஏசற. ஆசைப்பட்டதை தரலைன்னு. இந்தா... இங்க என் சின்ன அண்ணன் உறவு அந்தரத்துல இருந்தா கூட பரவாயில்லைனு உன்னை இந்த வீட்டு ராணியா நிற்க வச்சியிருக்கேன். இனியனிடம் எசகுபிசகா பேசி வாழ்க்கையை சீரழிக்காத. இன்னொரு முறை ஆசைப்பட்ட வாழ்க்கை அதுயிதுனு பேசாத." என்றார்.
லேசாக கண்ணீரை துடைத்திட, இளையமதி கையை கொண்டு சென்றார்.
"இந்த உதட்டு சாயம் வேற" என்று சேலையில் மகளது உதட்டை துடைக்க, மதுராவோ, "அம்மா.. நான் என்ன சொல்ல வர்றேன்னு காதுல வாங்காம பேசறியே.. உன்கிட்ட என்னத்த சொல்லறது.
புரியற மாதிரி ஈஸியா சொல்லணும்னா... நீ துடைக்கறது உதட்டு சாயம் இல்லை. என் ரத்தம்" என்றாள் மதுரவாணி.
இளையமதிக்கு தூக்கிவாறிப் போட்டாலும், அங்குமிங்கும் பார்வையை செலுத்தி மகள் செல்வதை பார்த்தார். இது மகள் தனக்கு தானே உண்டாக்கிய காயம் போல தெரியவில்லையே. அவள் பேசுவதை பார்த்தால்.... என்று இனியனை கவனிக்க அவனோ அதேநேரம் மதுரா வரவும், சிரிப்பை தேக்கி "எங்க போயிட்ட" என்று பரிவாய் கேட்டான்.
இளையமதிக்கும் வேல்விழி போல தான் எண்ண தோன்றியதே தவிர தவறாக கருத்தில் பதியவில்லை.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
மதுர ஜில்லா..மச்சானே ..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 18)
காய்ஞ்ச மாடு அப்படியே கம்பம்கொல்லையில பாயுறதைப் பார்த்தால், இந்த இனியன் ஏற்கனவே காவ்யாவை உசிருக்கு உசுரா லவ் பண்ணினவன் தானான்னு சந்தேகம் வருது.
ஒருவேளை, அங்க அதெல்லாம் பலிக்கலைன்னு இங்க மதுரா கிட்ட தன் வித்தையெல்லாம் காட்டுறானோ என்னவோ ?
எனக்கென்னவோ, இனியும் மதுரா இப்படி புலம்புறதை விட்டு கிடைச்ச வாழ்க்கையை தக்க வைச்சுக்கிறது தான் நல்லதுன்னுத் தோணுது. இனியாவது, இனியனோட அந்த ஒரு வருச ப்ளான் சக்ஸஸ் ஆகாமால் காவ்யவோட போக விடாமல் தடுத்து அவனை தன் பக்கம் திசை திருப்பறது தான் நல்லதுன்னுத் தோணுது. ஏன்னா, இனி அவ அகிலனோட அண்ணி முறையாகிட்டாள். அண்ணி அம்மா ஸ்தானம். ஸோ.. இஷட்டப்பட்ட வாழ்க்கை கிடைக்கலைன்னா, கிடைச்ச வாழ்க்கையை கையை விட்டுப் போகாமல் காப்பாத்திக்கிறது தான் நல்லது.
😔😔😔
CRVS (or) CRVS 2797
மதுர ஜில்லா..மச்சானே ..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 18)
காய்ஞ்ச மாடு அப்படியே கம்பம்கொல்லையில பாயுறதைப் பார்த்தால், இந்த இனியன் ஏற்கனவே காவ்யாவை உசிருக்கு உசுரா லவ் பண்ணினவன் தானான்னு சந்தேகம் வருது.
ஒருவேளை, அங்க அதெல்லாம் பலிக்கலைன்னு இங்க மதுரா கிட்ட தன் வித்தையெல்லாம் காட்டுறானோ என்னவோ ?
எனக்கென்னவோ, இனியும் மதுரா இப்படி புலம்புறதை விட்டு கிடைச்ச வாழ்க்கையை தக்க வைச்சுக்கிறது தான் நல்லதுன்னுத் தோணுது. இனியாவது, இனியனோட அந்த ஒரு வருச ப்ளான் சக்ஸஸ் ஆகாமால் காவ்யவோட போக விடாமல் தடுத்து அவனை தன் பக்கம் திசை திருப்பறது தான் நல்லதுன்னுத் தோணுது. ஏன்னா, இனி அவ அகிலனோட அண்ணி முறையாகிட்டாள். அண்ணி அம்மா ஸ்தானம். ஸோ.. இஷட்டப்பட்ட வாழ்க்கை கிடைக்கலைன்னா, கிடைச்ச வாழ்க்கையை கையை விட்டுப் போகாமல் காப்பாத்திக்கிறது தான் நல்லது.
😔😔😔
CRVS (or) CRVS 2797
Velvizhi avangaluku theriyama illa seri eppadi aachum.samalipom.nu Madhura kita apadi.pesuna ga aana indha illamathi sothu kum.iniyan velinattu la padichavan nu than ah Madhura oda manasu ah yum.pakka ma chinna annan oda family yae othuki vachitu ipadi panna ga enna ivanga panathuku avanga ponnu anubavaikira ah .
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
18 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
23 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 763 Posts
- 1 Online
- 329 Members
