முதலாம் சந்திப்பில்-9
அத்தியாயம்-9
ரூபன் தன் அலைப்பேசி எண்ணை குறித்ததால், எந்நேரம் என்றாலும், அவன் போன் செய்து பேசுவான் என ஆவலோடு இருந்தாள். நேரம் செல்ல செல்ல 'சே அவன் என் நம்பர் எல்லாம் நோட் பண்ணலை போல நான் தான் கிறுக்குத்தனமா அப்படி யோசிச்சு ஏமாந்துட்டேன்" என வருந்தினாள்.
ஆனாலும் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்தாள். அவள் எண்ணத்திற்கு ஏமாற்றம் தராமல், அன்று ரூபன் தங்கநிலாவிற்கு போன் செய்தான்.
''நி..நிலா...?'' என்றான் ரூபன்.
''ஆமா நீங்க...?'' என்றாள்.
''நான் ரூ..ரூபன் பிரகாஷ்.. நீ உடனே கிளம்பி.. நேச இல்லம் வா?'' என்று தயக்கமாய் பேசினான்.
''ஹலோ என் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சது? எதுக்கு என்ன அங்க வர சொல்றிங்க? நீங்க கூப்பிடற இடத்துக்கு எல்லாம் என்னால வர முடியாது. வைங்க'' என கோபமாக உரைத்தாள்.
''நிலா....'' என கத்தியவன். ''தயவு செய்து விளையாடாம சொன்ன இடத்துக்கு வா.. ஒரு முக்கியமான விஷயம்'' என துண்டித்தான்.
அவனின் குரல் ஏன் முதலில் திக்கியது.... பின்னர் ஏதோ சமாளித்து பேசியது போல இருந்தன. நான் வரலை என்றதும் கோவமா பேசி கட்டாயமா வர சொன்னான். என்னவா இருக்கும் என கிளம்பினாள்.
நிலா மனம் ஏதோ ஒரு வித தவிப்போடு தான் இருந்தாள். தன்னவன் குரல் அப்படியிருக்க பதறாமல் இருக்க முடியுமா? வெளியே அவனிடம் கோவமாக முகத்திரை அணிந்து திட்டினாலும் அவள் உள்மனம் அவனை அல்லவா விரும்புகின்றது. அதனால் நேரம் எடுத்துக்கொள்ளாமல் ஆட்டோ பிடித்து விரைந்தாள்.
போகும் இடமெல்லாம் ஆன்ட்டிக்கு ஏதாவது அன்னிக்கு மாதிரி மயங்கிட்டாங்களா? இல்லை அவங்களுக்கு எதாவது ஆபத்தா? ஐயோ கடவுளே... அப்படி எல்லாம் இருக்க கூடாது... நான் தான் அம்மா அப்பா இல்லாமல் கஷ்டம் அனுப்பவிக்கறேன்.. என் ரூபி அப்படி கவலை படக்கூடாது... அவங்க அம்மாவுக்கு உடல்நிலை நல்லா இருக்கனும் கடவுளே என வேண்டினாள்.
நேரங்கள் கூட போக்குவரத்து நெரிசலில் காலதாமதம் வேறு ஏற்பட ரூபன் மீண்டும் அழைத்தான்.
''எங்க இருக்க நிலா?'' என்றான்.
''வந்துட்டே இருக்கேன் ரூபன்.. உங்களுக்கு ஒன்றுமில்லையே...'' என்று கேட்க அவளின் கரிசனம் அவனின் இதயத்தில் இதம் பரப்பியது.
''இல்லை நிலா ஆனா நீ கொஞ்சம் அவசரமா வா''
''எதுக்கு வர சொன்னிங்க என்று சொல்லுங்களேன்''
''அது நீ வந்து பார்த்து தெரிந்துக்கோ நிலா'' என அணைத்தான்.
போக்குவரத்து நெரிசலில் அவளின் அவசரம் கண்டு வேகமெடுத்தாலும் விதி காலதாமதம் ஏற்படுத்தவே செய்தது. அன்று ரூபனுக்கு குண்டு அடிபட்டு ரத்தமெங்கும் வந்து சேர்ந்ததை எண்ணியெண்ணி அழ துவங்கினாள். அவளின் அழுகை வண்டி ஓட்டும் ஆட்டோ ஓட்டுனருக்கு கூட கவலையைதர வேகமெடுத்தார். சந்து பொந்தில் வண்டியை செலுத்தி ஒரு வழியாக அவ்விடம் வந்து சேர்ந்தார்.
பணத்தினை கொடுத்தவள் மீதி பணத்தை பெறாமலே சென்றாள். உடல் ஒரு வித நடுக்கம் வர மூச்சு முட்டியது.
வந்த இடத்தை உற்று நோக்கியே நடக்க அவளுக்குள் குழப்பமே வந்தன. எங்கும் சின்ன சிறு மலர்களும் அங்கங்கே முதியவர்களும் இருக்க குழம்பி போனாள். இங்க எதுக்கு ரூபன் வர சொன்னார்.
தங்கநிலா தோலை தொட்டு பார்க்க அவளோ யாரென்று அறியாமல் அச்சத்தோடு திரும்ப ரூபன் நின்று இருந்தான்.
அவனை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்வையில் கண்டவள் அவனுக்கு எதுவும் இல்லை என்றதும் பெருமூச்சு விட்டு தன்னை மீட்டெடுத்தாள்.
அவனோ அவளிடம் ஏதோ சொல்ல தயங்கி தயங்கி நிற்க பேசமுடியாமல் நின்றான்.
அப்பொழுது உள்ளே இருந்து ஒரு பணிப்பெண் வந்து ரூபனிடம்
''சார் அவங்க மறுபடியும் கத்த ஆரம்பிச்சுட்டாங்க... நீங்க பக்கத்தில் இருந்தா பெட்டரா இருக்கும்'' என்று சொல்ல, வருவதாக தலையசைத்தான்.
''யாருக்கு என்ன ஆச்சு? எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க? பதில் சொல்லுங்க என கேள்வி கேட்டு வர ரூபன் ஒரு அறையை கைக்காட்டி போக சொன்னான்.
அங்கே பார்க்க ஒரு முதியவள் தலை வீறி கோலமாக ''என் மாப்பிள்ளை எங்க? என் பொண்ணு எங்க? என்னை விடுங்க நான் போறேன்... என் பொண்ணை பார்க்க போறேன்.'' என அதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டே இருந்தார்.
நிலா புரியாமல் விழித்து ரூபனை பார்த்து ஏதோ ஒரு தாக்கத்தில் நிற்க அவனோ அவளின் தோளில் கையை வைத்து உள்ளே அழைத்து சென்றான்.
ரூபனின் இந்த தொடுகை எதையோ உணர்த்த அவள் அவனிடம் கேள்வி கேட்காமல் அவனோடு அவ்வறைக்குள் நுழைந்தாள்.
ஒரு நர்ஸ், அம்முதியவளுக்கு ஊசி போடா முயன்று மெல்ல மெல்ல செலுத்த அம்முதியவள் திரும்பி பார்க்க அங்கெ ரூபன் மற்றும் தங்கநிலா இருவரையும் ஒரு சேர கண்டு மனம் மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் கோடுகள் கன்னத்தில் வழிய புன்னகைக்க, நிலாவிற்கு அப்பொழுது தான் அது யாரென்றே தெள்ள தெளிவாக புரிந்தது.
''அம்மா.... அ..ம்.. மா........ அம்மா....'' என ஓடியவளை ரூபன் பின்னால் சென்று மெல்ல கையை பிடிக்க ஊசி மயக்கத்தில் அம்முதியவள்
''நிலா...வந்துட்டியா.. மாப்பிள்ளையும் நீயும் நல்லா... இருக்.. கி.. '' என்று சொல்லியவாறு மயக்கம் ஆனார்.
நிலாவோ மயக்க ஊசி எதுவுமே இல்லாமல் மயங்கி சரிந்தாள். அவளை தாங்கியவன் அருகே இருந்த பெட்டில் படுக்க வைத்தான்.
நிலாவின் தாயார் மற்றும் நிலா என்றிருக்க இங்கு ரூபனோ குழம்பி கொண்டிருந்தான்.
இவங்க எதுக்கு என்னை மாப்பிள்ளைனு சொல்லறாங்க? எனக்கும் நிலாவுக்கும் தானே கல்யாணம் நடக்கலையே... பின்ன எப்படி? இவங்க எப்படி உயிரோட இருக்காங்க? அப்போ நிலா வீட்டில் இறந்த பெண்மணி யார்?
இப்படியே யோசிக்க பாக்கியம் போன் செய்தார். அவர்களிடம் விஷயம் சொல்லி வர நேரமாகும் என அணைத்தான்.
நிலா தண்ணீர் தெளித்து மயக்கம் களைய ''ரூபன் அவங்க என் அம்மா அவங்க என் அம்மா அவங்க உயிரோட இருக்காங்க.. நான் அனாதை இல்லை.. எனக்கு என் அம்மா இருக்காங்க ரூபன்....'' என அவனது நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் வடித்தாள்.
''கூல் டவுன்... நிலா... இங்க ஒரு கேஸ் விஷயமா வந்தேன்... இவங்க ரோட்டில் என்னை பார்த்துட்டு என்னை மாப்பிள்ளைனு சொல்லி, உன்னை கேட்டு இப்படி தான் தொடர்ச்சியா கத்திட்டே இருந்தாங்க... எனக்கு என்ன பண்றதென்னே தெரிலை அதான் உனக்கு இன்போர்ம் பண்ணினேன்.. இவங்க நிஜம்மா உன் அம்மாவா இல்லாமல், நான் உன் அம்மா என்று சொல்லி கூப்பிட்டு உனக்கு ஏமாற்றம் வந்துடுமே என்று தான் எதுவும் சொல்லாமல் அழைச்சேன்.''
''என் அம்மா தான் ரூபன்... இவங்க என் அம்மா தான்...'' என அம்மாவின் தலையினை கோதினாள்.
''சரி நீ வந்ததும் உன்னை கூப்பிட்டு வர சொன்னாங்க வா'' என அழைத்து சென்றான்.
''அம்மா..'' என் அவள் சொல்ல
''இங்க தான் பக்கத்து பிளாக் போய் பேசிட்டு வந்துடுவோம் அதுவரை மயக்கமா தான் இருப்பாங்க'' என்றதும் அவளின் தாயினை முத்தமிட்டு அவனோடு சென்றாள்.
''உள்ள வாங்க ரூபன் பிரகாஷ்..இவங்க தான் நிலாவா?'' என்றார் அம்முதியவர்.
''ஆமா சார்...''
''உட்காரும்மா...'' என்றதும் மூவருமே அமர்ந்ததும் பேச ஆரம்பித்தார்.
''ஒரு வருஷம் முன்ன இருக்கும் நானும் எங்க நேச இல்லம் சேர்ந்தவர்களும் டூர் போயிட்டு வந்துட்டு இருந்தோம். தீடிரென எங்களுக்கு எல்லாம் ரொம்ப தாகமா இருந்தது என்று டீ குடிக்க ஒரு கடையில் நிறுத்தினோம். டீ குடிச்சுக்கிட்டு இருக்கும் பொழுது பக்கத்துல ஒரு பள்ளத்துல இந்த அம்மா உயிருக்கு போராடிகிட்டு இருந்தாங்க... உடனே அவங்களை தூக்கிட்டு எனக்கு தெரிந்த மருத்துவமனைக்கு அழைச்சுட்டு வந்தேன். போலீஸ்ல மிஸ்ஸிங் அப்ப எதுவும் இல்லை.
அதனால இவங்களை செக் பண்ணி உடல் நலம் சரி வர ஒரு மாசம் ஆச்சு....
அதுவரை அவங்க அன்கான்ஷியஸ்ல இருந்தாங்க அப்பறம் கொஞ்சம் சரியாகிடுச்சு. ஆனா யாரோடவும் பேசாமல் பிரம்பை புடிச்சு இருந்தாங்க இப்போ கொஞ்ச நாளா திடீரென என் மகள் நிலா வரன் பார்த்தோம் என் மாப்பிள்ளை ரூபன் பிரகாஷ் நான் அவங்களை பார்க்கணும்னு உளறினாங்க.... இதோ இன்னிக்கு இவரை பார்த்ததும் இவர் தான் என் நிலாவோட கணவர் எங்க வீட்டு மாப்பிள்ளைனு ஒரே ரகளை... இத்தனை நாளில் இவங்க இன்னிக்கு தான் இப்படி பீஹவ் பண்ணி இருக்காங்க அதுவும் இவரை பார்த்து ரொம்பவே...'' என்று நிறுத்த ஒரு டாக்டர் வந்து நின்றார்.
''இவர் தான் உங்க அம்மாவின் உடல்நிலை பார்த்துகிட்ட டாக்டர்'' என்று அறிமுகப்படுத்தினார்.
''அவங்களுக்கு எப்படி அடிபட்டது என்று தெரியுமா?''
''இல்லை டாக்டர் அப்பா அம்மா இரெண்டு பேருமே எனக்கு வரன் பார்த்துகிட்டு இருந்தாங்க. ஒரு நாள் அப்பா பிரெண்ட் தாமஸ் அங்கிள் பார்த்துவிட்டு வருவதா சொன்னாங்க... திரும்ப வரும் பொழுது அப்பா அம்மாவுக்கு விபத்து என்று சொல்லி....'' அழுத்தவளின் கையினை ரூபன் மெல்ல அழுத்த தொடர்ந்தாள்
''அப்பா விபத்துல இறந்துவிட்டதா சொன்னாங்க அம்மா கேஸ் வெடிச்சு வீட்டில் இறந்துவிட்டதா தகவல் வந்தது. அதனால தொலைந்து போனதா நான் நினைக்கலை.
'அப்போ எப்படி இவங்க...?''
''அது அது ஒரு வேளை என் அத்தை ரேவதியா இருக்கலாம் சார். ஏன்னா அவங்களும் அன்றைய தேதில இருந்து நான் பார்க்கலை முதலில் அவங்க மாமாவுக்கு பயந்து எங்கயாவது போயிட்டாங்கனு நினைச்சேன். இப்ப அம்மாவை பார்த்ததும் தான் ஒரு வேளை அவங்க ரேவதி அத்தையா இருப்பாங்களோனு டவுட் ஆகுது.'' என்று தெளிவாக்கினாள்.
''ஹ்ம்ம் ஓகே ம்மா இவருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?''
''அவங்க கடைசியா எனக்கும் இவருக்கும் கல்யாணம் நடக்கும் என்று சதா புலம்பிட்டு இருந்தாங்க... இவருக்கும் எனக்கும் தான் திருமணம்னு முடியற நிலையில் இரெண்டு பேருக்கும் பிடிக்காமல் மறுத்துட்டோம்... அதை நான் இவங்ககிட்ட சொல்லலை... தாமஸ் அங்கிள் சொல்லுவார்னு விட்டுட்டேன்... பட் தாமஸ் அங்கிள் சரியா சொல்லலையா என்னனு தெரியலை. அம்மா அதனால் இவருக்கு எனக்கும் கல்யாணம் நடந்திருக்கும்னு நினைச்சுகிட்டே இருந்திருப்பாங்க போல தாமஸ் அங்கிள் வீட்டுக்கு போனதும் அவர் விஷயத்தை சொல்லி இருந்தார்.. வேற வரன் ஒன்றும் பார்த்தா சொல்லி அவர்களுக்கு என் போட்டோ கொடுத்ததா சொன்னார் பட் அம்மா அப்பாவுக்கு அதுல அவ்ளோ இஷ்டம் இல்லை... அப்பறம் விபத்து நடந்து. எல்லாம் பிரிஞ்சுட்டோம் அம்மா அப்பா இரண்டு பேருமே இறந்துட்டாங்க. பட் இப்ப அம்மா.'' என்றே கூறி முடிக்க
''ஓகே ம்மா இப்போ உன் அம்மா கண்டிஷன் என்னனா அவங்க இவருக்கும் உனக்கும் கல்யாணம் நடந்ததா ஆழ்மனசில் பதியவச்சி இருக்காங்க அதனால் தான் இவரை பார்த்ததும் மாப்பிள்ளைனு சொல்லிட்டு இருக்காங்க... இருக்கட்டும் அவங்களுக்கு அதே சொல்லி வைங்க இல்லைனா மறுபடியும் மனசு குழம்பி போயிடுவாங்க.. கொஞ்ச கொஞ்சமா அவங்க விபத்து நிகழ்வு நினைவு வரும் அப்போ அவங்களே புரிஞ்சுப்பாங்க... அதுவரை நீங்க கணவன் மனைவினு சொல்லி இருங்க அதுல ஒன்னும் பிரச்சனை இல்லியே...'' என்று முடிக்க நிலா ரூபனை தயங்கி பார்த்தாள்.
''அப்படி பத்திரமா பார்த்துகிட்டே அவங்க நிலைமை நல்லா ஆகிடுமா?'' என்று ரூபன் கேட்டான்.
''சூர்.... அவங்களுக்கா நினைவு வந்தா நல்லது தான்''
''நான் அம்மாவை கூட்டிட்டு போகலாமா?'' என்று ஆசையாக நிலா கேட்டாள்.
''தாராளமா கூட்டிட்டு போங்க மருந்து மாத்திரை மட்டும் தவறாம கொடுங்க. அவங்களே ரெக்குர் ஆகிடுவாங்க...'' என்றதும் தாயினை காண சென்றார்கள்.
ரூபன் அருகே இருக்க நிலா அபிராமியை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டாள்.
கண்ணீர் துளிகள் கன்னத்தில் நிறைக்க தாயின் முகத்தினை பார்த்து கொண்டிருந்தாள்.
ரூபனிடம் தான் அபிராமி என் பொண்ணு நல்லா சமைக்கிறாளா உங்க அம்மாவுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கறாளா? அவள் வேலைக்கு போறது உங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே? என்று விடாது கேட்க நிலாவோ
''ம்மா கொஞ்ச நேரம் தூங்கு அவரை தொந்தரவு செய்யாதே உனக்கு ஸ்ட்ரைன் பண்ணினா உடல்நிலை பாதிக்கும்'' என்று மடியில் சிறு குழந்தை போல பாதுகாத்தாள்.
விடுதி வரும் நேரம் அபிராமி உறங்கி போனார்... மெல்ல பெட்டை ஆண் மருத்துவர் தூக்கி கொண்டு அறைக்கு விட்டுவிட்டு சென்றார்கள்.
ரூபன் தான் நிலாவை பார்த்து ''ரொம்ப யோசிச்சு அழுது மனசை போட்டு குழப்பிக்காதே.... அதான் அம்மா வந்துட்டாங்களே.. நிம்மதியா தூங்கு... அப்பறம் எதுனாலும் கால் பண்ணு வர்றேன்... அப்பறம்... அது... சரி கிளம்பறேன்'' என வெளியேறினான்.
நிலாவோ அவன் பேசியத்துக்கு எல்லாம் மெல்ல தலையினை அசைத்தாள். இவனிடம் எப்படி போய் என் துயரம் தீர்க்க அவனின் மார்பில் ஒடுங்கினேன். அவளின் தாயின் பார்த்து இன்னும் நம்ப முடியாமல் இருந்தாள். தாயின் முடியினை கோதி உயிர் போல் பாதுகாக்க செய்தாள்.
அரை மணி நேரம் போன பின் எழுந்த அபிராமி ஒரே கூச்சலிட்டபடி அலறி எழுந்து கத்த துவங்கினாள். 'இல்லை... இல்லை... என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு... அவர் தான் மாப்பிள்ளை... என் புருஷனுக்கு ஒன்னும் ஆகலை... ஐயோ விபத்து நடந்துச்சே என்ன செய்ய என் புருஷன்... என்று கத்த ஹாஸ்டல் எல்லோரும் அவளின் அறையில் சூழ்ந்தார்கள்.
தங்கநிலா சூழ்நிலை சமாளிக்க முடியாமல் தவித்தாள்.
''அம்மா இங்க பாரு.. ம்மா நான் சொல்றதை கேளு'' என்றதை அபிராமி கேட்பதாக இல்லை
''அப்பா அப்பா இறந்துட்டார் அப்படி தானே.. மாப்பிள்ளை எங்க? ஐயோ மாப்பிள்ளை எங்க என்று விடாது கேட்டார்
''அது அது வந்தும்மா வேலைக்கு போய் இருக்கார் வந்துடுவார்...'' என்று சமாளித்து கூறினாள்.
தனது தாய்க்கு மீண்டும் அதிர்வு கொடுக்க கூடாது என்று சொல்ல அவர்களோ
''எப்போ வருவார் நான் பார்க்கணும்... ஆமா இது என்ன இடம்... உன் வீடா? இல்லை பார்க்க அப்படி இல்லையே... இவங்கல்லாம் யாரு..?''
''ஹாஸ்டல் பெண்மணி எங்க? எதுக்கு பயித்தியம் எல்லாம் தங்க வச்சி எங்களை உயிரை வாங்கறாங்க..'' என்று பலர் பேச ஹாஸ்டல் பெண்மணியோ நிலாவிடம்
''என்னாச்சு நிலா அவங்க அமைதியா இருப்பாங்க என்று தானே இருக்க விட்டேன்.. என்ன இப்படி அலறி கத்தறாங்க?''
''இல்லை மேம் அவங்க நிலைமை தான் சொன்னென்னெ''
''சொன்ன ஆனா இப்படி அலறி கத்தினா என்ன செய்ய இங்க படிக்கவும், வேலை செய்யற பெண்களும் தான் அதிகம் இப்படி கத்தினா அவங்களுக்கு தொந்தரவு தானே?'' என்றதும் ஒரு பக்கம் தன் தாய் எப்படி அமைதி படுத்துவது என்று புரியாமல் மறுபக்கம் இந்த கூட்டம் ஹாஸ்டல் பெண்மணி வேறு அன்னையை அனுப்ப கூறிட, செய்வதறியாமல் விழித்தாள்.
தொடரும்
பிரவீணா தங்கராஜ்
-
முதலாம் சந்திப்பில்-15 (முடிவுற்றது)
3 weeks ago
-
முதலாம் சந்திப்பில்-7
4 weeks ago
-
முதலாம் சந்திப்பில்-2
1 month ago
-
முதலாம் சந்திப்பில்-14
1 month ago
-
முதலாம் சந்திப்பில்-13
1 month ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 2 Online
- 329 Members
