Forum

முதலாம் சந்திப்பில்...
 
Notifications
Clear all

முதலாம் சந்திப்பில்-2

3 Posts
3 Users
3 Reactions
111 Views
(@praveena-thangaraj)
Posts: 180
Member Admin
Topic starter
 
[#90]

அத்தியாயம்-2

                   அதிகாலையில் எழுந்து முதல் வேலையாக, பிரெஷ் செய்து முடித்து, காபி குடித்தபடி பேப்பரை புரட்டினான்.
       அதில் 'போலீஸே திருடனாக மாறிய அவலநிலை.' என்ற தலைப்பில் செய்தி இருக்க வாசித்தவன் "டாமிட்" என்று கர்ஜீத்தான். 

அடுத்த பக்கம் திருப்ப 'சமீபத்தில் நடக்கும் சாமானியமான  ATM கொள்ளை நேற்றும் நிகழ்ந்தது. எப்பொழுதும் போல தப்பிக்கவிட்ட போலீஸ்.' என்ற செய்தியையும் காண பேப்பரை முடியவன் கண்முன் தங்கநிலா வந்து சென்றாள். அவளால் தானே திருடர்களை கோட்டை விட்டதாக எண்ணினான்.  

'அவளை யாரு அந்த நட்ட நடுராத்திரியில் அங்க வந்தா? தாமஸ் அங்கிள் கூட தான் வந்திருப்பா. இருந்தாலும் இரவில் இப்படி அவள் சுற்றினா என்ன ஆகறது ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்குமா?'  என்று திருடனை தப்பிக்க விட்ட எண்ணத்தை தாண்டி அவள் நலனை யோசித்தான். 

'என்ன காலையிலே அவள் ஞாபகம் சே உன்னை சந்திக்காம இருந்து இருக்கலாம். வேலையை தாண்டி முதல் முறை சொதப்பி இருக்கேன்' என்று தன்னையே திட்டிக் கொண்டு, ஹாலில் இருந்து அறைக்கு சென்றான்.
எப்பொழுதும் போல காக்கி உடை அணிந்து டேபிளில் அமர்ந்து நிமிர, தாய் பாக்கியம் அவனுக்கு ஊட்டிவிட்டார்.

''ம்மா நான் என்ன உங்களுக்கு குழந்தையா?'' என்று உணவை விழுங்கினான். 

''எனக்கு அப்படி தான் டா... ஆமா எதுக்கு காலையில் பேப்பர் ஹாலில் அங்கங்க சிதறியிருக்கு?''

''எரிச்சல் படுத்தறமாதிரி ஒரு நியூஸ் அம்மா'' என்றான். 

''சரி தாமஸ் அண்ணா போன் செய்தார்... நேற்று அந்த பொண்ணை பார்த்தியமே... எப்படி இருக்கா?'' என்று கேட்டார். 

''அவளால் தான்  நேற்று திருடர்களை கோட்டை விட்டதே.... சரியான லூசும்மா... என்னை போய் திருடனு சொல்லி கட்டி.. புடிச்சு..'' என்று நிறுத்தினான். 

''உனக்கு அந்த பொண்ணு பிடிச்சிருக்கா? அத மட்டும் சொல்லு ரூபன்'' என்று கேட்க வாசலில் கணேசன் நின்று சல்யூட் அடித்தார்.

''வாங்க அண்ணா சாப்பிடுங்க'' என்றான் பிரகாஷ்.

''இல்லை தம்பி சாப்பிட்டாச்சு... இன்னிக்கு காலையிலே மீட்டிங் சீக்கிரம் வர சொன்னிங்க'' என்றதும் ரூபன் எழுந்தவன்
''ஆமா அண்ணா... உங்களுக்காக தான் வையிட்டிங் கிளம்பலாம்'' என்று நொடியில் மாறி கேப் எடுத்து நடந்தான்.

''ரூபன்... இன்னும் நீ சரியா சாப்பிடலைடா.'' என்ற தாயின் குரலுக்கு
''வெளிய பார்த்துக்கறேன் ம்மா'' என கிளம்பினான்.

அந்த மீட்டிங் அறைக்கு வரும் பொழுதே ''செய்தி பார்த்தியா நகைச்சுவையா இல்லை'' என்று ஒரு போலீஸ் கேட்க
''முதல் செய்திய சொல்றிங்களா அண்ணா'' என மற்றொருவன் கேட்க ரூபன் பிரகாஷ் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு உள்ளே நடந்தான். ரூபனை பிடிக்காத சிலர் எரிச்சல்படுத்தினார்கள். 

''என்ன ரூபன் நேற்றோடு முடியற கேஸ் உங்களால் எல்லாம் கேட்டு போச்சு. இவ்வளவு நாளா டீடைல் கலெக்ட் செய்து, இப்படி கைக்கு எட்டும் பொழுதுகோட்டை விட்டுட்டீங்களே...'' என்றார் மேலதிகாரி. 

''சார்... அது வந்து''

''சார் அது கூட பரவாயில்லை ஆனா இப்படி 'போலிஸே திருடனா?' என்று கேள்வி கேட்டு நகைச்சுவையா எழுதற அளவுக்கு டிப்பார்ட்மெண்ட்டை கேலிக்கு ஆகிட்டார்'' என்றார் ஒருவர். 

 பிரகாஷ் கோபமுற்று ''சார் இந்த ATM கொள்ளையாட்கள் அங்க தான், அந்த பங்களா தான் பணத்தோட,  அவங்க இருப்பதா கண்டு பிடிச்சதே நான் தான். ஆதியில் இருந்து முடியற வரை கண்டுபிடிச்சேன்.  இதுல ஏதோ என்னால கேஸ் இப்படி மிஸ் ஆகிடுச்சு என்று சொல்றிங்க.. நான் வந்து ஒரு மாசத்துல ஆட்கள் யாருனு கண்டு பிடிச்சேன் தானே? நீங்க ஆறு மாசமா ஒரு இம்ப்ருவ்மென்ட் இல்லாமல் இருந்த கேஸ்.

ஞாபகத்துல வைச்சிக்கோங்க. எண்ணி பத்தே நாளில் இந்த கேஸை முடிச்சு காட்டறேன்'' என்று நகைத்தவனிடம் பதில் அளித்தான். 

''சார் சீனியர் என்று பார்க்காம பேசறான். இதுக்கு தான் இவனிடம் கேஸ் கொடுக்க வேண்டாம் என்றேன்'' என்றார் அவர். 

''ப்ளீஸ்... இது நானும் ரூபனும் பேசிக்கறோம் இனி நீங்க போகலாம்'' என்றதும் மற்றவர்கள் கிளம்பினார்கள். 

''என்ன ரூபன் இது உங்க கோவத்தில் சீனியர் என்று பார்க்க மாற்றிங்க... வயசுக்காவது மரியாதையை தரணும்''

''சார் அவங்க என்னவேணுமென்றாலும் பேசலாம் நான் பேச கூடாதா? நான் அங்க வருவதை ஏற்கனவே யாரோ நம்ம டிபார்ட்மென்ட்ல இருந்து சொல்லி இருக்காங்க அதான் என்னால பிடிக்க முடியலை... பட் டென் டேஸ் டைம் கொடுங்க முடிக்கிறேன்'' என்றான். தப்பிக்கவிட்டு மீடியாவிலும் ரூபனை பற்றி கேலி செய்யும் விதமாக யாரோ ஒருவர் தங்கள் துறையிலேயே இருப்பதை அவரும் இலைமறையாக அறிவார். சந்தேகத்தின் பெயரில் யாரை கேள்வி கேட்க இயலும். அரசியல் பிரமுகர் உதவியில் மறைந்து கொள்வார்கள் என்பதை எல்லா மேலாதிக்காரியும் அறிவாரே.  

''ஓகே யங் மேன். கோவத்தை குறைச்சுக்கோ. விரைவில் செயலில் முடிச்சு காட்டு'' என்றதும் விடை பெற்றான்.

   'எல்லாம் அவளால... எல்லோரும் கேள்வி கேட்கறாங்க அவ ஒருத்தியாள' என்று பல்லை கடித்தான்.

அதேநேரம் போன் மணி அடித்தது.
தாமஸ் அங்கிள் தான். எடுக்கலாமா? வேண்டாமா? என்றபடி பட்டிமன்றம் வைத்து முடித்தான். அதற்குள் போன் மணியோசை அடித்து முடித்து நின்றது.
மீண்டும் மணி அடிக்க எடுத்தான். வயதில் பெரியவர் என்ற மரியாதைக்கு. 
''பிரகாஷ்... ஆர் யூ ப்ரீ?'' என்றார் தாமஸ் அங்கிள். 

''நோ அங்கிள்.. ஒர்க் கொஞ்சம் இருக்கு. ஹ்ம்ம் இருந்தாலும் சொல்லுங்க அங்கிள்.'' என்றான். 

''அப்படியா? இல்லை ஃப்ரீ ஆனதுமே நேர்ல பேசலாம்'' என்றார். 
''சரி அங்கிள். எங்க நேர்ல வரணும்?'' என்றான். 

''என் வீட்டில் தான் இருக்கேன் ரூபன். உனக்கு எப்ப சௌகரியமோ அப்ப வா?'' என்றார்.
''ஓகே வர்றேன் அங்கிள்'' என்று வைத்தான்.

'அங்கிள் எப்படியும் அந்த பொண்ணு விஷயமா தான் பேச கூப்பிட்டு இருப்பார்.... அதுக்கு பதில் சொல்லணும்.' என்று தனக்கான சில பணியை முடித்தே கிளம்பினான்.
         நேராக தாமஸ் வீட்டை அடைந்தான். காவலுக்கு இருக்கும் நாய் குரைக்க அவனோ அதனை கண்டுக்காமல் ஒரு பார்வை மட்டுமே வீச அது கப்சிப் ஆனது.
''அங்கிள் அங்கிள்...'' என்று கூப்பிட ''வர்றேன் பிரகாஷ் உட்கார்'' என்றார்.  

 அவனுக்கு டீ தயாரித்து கொண்டிருந்தார். ரூபனோ அங்கிருந்த நாளிதழை புரட்ட வேறொரு பேப்பரில் இதே போல எழுதியதை கண்டு, மூடிவைத்தான்.  நாய் மீண்டும் குலைக்க ஆரம்பித்தது. 

வாசலில் யாரென எட்டி பார்க்க ''உஸ்.... உஸ்... ப்ளீஸ் கத்தாதே... நீ கத்தினா எனக்கு ஹார்ட் பீட் எகுறுது... ப்ளீஸ் நான் தான் அடிக்கடி வருகின்ற ஆளாச்சே. நீ ஞாபகம் வச்சிக்கிக்கற ஜீவன் தானே ஏன் இப்படி கத்தற.'' என்று பம்மியபடி வர, அந்த வீட்டுக்கு காவல் காக்கும் அஜீவனோ இன்னும் பலமாக குரைத்தது.

முதலில் கட்டி இருக்கு என்று கேட் தாண்டி வந்தவள், அந்த டைகர் எழுந்து முன்னே வரவும் ''அச்சச்சோ நீ கட்டியிருக்கலையா.'' என ஓட முயன்றவள் கையில் இருந்த பிஸ்கெட் எல்லாம் உதறினாள். 

அவளை பின் தொடர்ந்த டைகரை கண்டு கண்மூடி ஓடியவள் இரும்பு போன்ற ஒன்றில் மோதினாள்.

கண்களை மூடியபடியே 'எந்த மடையன் இங்க இரும்பு கதவை வைச்சது.? ஐயோ டைகர் என்னை கடிச்சுடுச்சா?' என்று ஒற்றை கண்களை திறந்து பார்க்க எதிரில் இதுவரை அவளின் சேட்டையும் முகபாவனையும் ரசித்தவன் நொடியில், முகத்தில் சினத்தை வாடகை எடுத்துக் கொண்டு ருத்திர மூர்த்தியாக நின்றிருந்தான்.

'ஆஹா இவனா இதுக்கு டைகரே பெட்டர்.'' என்று யோசித்தவள் அவன் பார்வை சென்ற திசையில், அவனுக்கு பயந்து  டைகர் அடிபணிந்து ஓரமாக இருந்தது.
''ஏய் எதுக்கு எப்ப பாரு வந்து என் மேல மோதற...'' என்றான். 

''ஹலோ பார்த்துக்கிட்டு தானே இருந்திங்க. டைகர் இப்படி கத்தினா பயந்து...'' என்றவளை இடைவெட்டி
''நீ பயப்படற... நடுராத்திரி பேய் வர்ற நேரத்துல நேற்று வந்தவளுக்கு ஐந்தறிவு ஜீவனை பார்த்து பயப்படற... நம்பிட்டேன்... நீ வேணுமின்னே தான் இப்படி பண்ற...'' என்று குற்றம் சுமத்தினான். 

''ஆமா ஆமா நடு ராத்திரி உங்களை தேடி வந்து இடிக்கறேன்... உங்க மேல மோதி விழ ஆசை பாருங்க. அதே மாதிரி காலையில் எழுந்ததும் உங்களை தேடி வந்து கல்லு மேல விழ ஆசை படுவாங்களா?'' என அவளும் பதிலடி கொடுத்தாள். 
''வழி விடுங்க நான் அங்கிள் பார்க்க வந்தேன்.'' என அவனை சுற்றி கொண்டு போக, அவனோ மந்திரித்து விடப்பட்ட கோழி போல அவள் பின்னாடி சென்றான்.

''வாம்மா நிலா உன் குரல் கேட்டதும் உனக்கு சேர்த்து டீ போட்டேன்'' என்று தாமஸ் அங்கிள் வந்தார்.

''என்ன அங்கிள் உங்களுக்கு ஏன் சிரமம்... நான் தான் வர்றேன்னு சொன்னேனே...'' என்றாள். 

''பரவாயில்லை நிலா... ரூபன் டீ எடுத்துக்கோ'' என அவனிடமும் நீட்ட வாங்கி பருகினான்.

''அங்கிள் நைட் டுவெல்கிட்ட என்ன நகர்வலம்...?'' என்று ரூபன் கேட்க,
''அதையேன்ப்பா கேட்கற.. எப்பவும் இன்சுலின் போட்டுப்பேன் அப்போ தான் எனக்கு உடல்நிலை சரியா இருக்கும். நேற்று காலியாகிடுச்சு.  

சரி நாளைக்கு வாங்கிக்கலாம்னு இருந்தேன். ஆனா பத்தரை மணிக்கு மேல உடம்பு முடியலை. தங்கநிலா அப்பா திவாகருக்கு போன் போட்டு வாங்கிட்டு வர சொல்லலாம்னு அவனுக்கு கால் செய்தேன். ஆனா நிலா தான் போன் எடுத்தா... திவாகர் அப்போ தான் தூக்கமாத்திரை சாப்பிட்டு தூங்கினான் போல. 

 அதனால நிலாவே வாங்கிட்டு வருவதா சொன்னா. எனக்கு ராத்திரி நேரத்தில் வரவேண்டமுனு சொல்ல நினைச்சேன் ஆனா முடில... அவளும் வந்து ஊசி போட்டு கொஞ்சம் உடல்நிலை சரியானதும் நிலா தனியா போறதா புறப்பட்டா. அந்த நேரத்தில் எப்படி தனியா அனுப்ப? அதனால தான் பாதி தூரமாவது வர்றேன்னு வம்படியா வந்தேன், அப்ப உன்னை சந்திச்சோம். அதுக்கு பிறகு நிலா வீட்டுக்கு போனதும் போன் செய்தா அதுக்கு பிறகு தான் நிம்மதியே...'' என்றார். 

''அங்கிள் இப்போ எப்படி இருக்கு? அப்பா வருவதா இருந்தார் ஆனா வேலை வந்துடுச்சு அதனால என்னை பார்த்து வர சொன்னார்'' என்று கூறினாள். 

''இப்ப பரவாயில்லை ம்மா''

''ஏன் அங்கிள் எல்லாம் ஸ்டாக் வாங்கி வச்சிக்க கூடாதா?'' என்றான் ரூபன். 

''அப்படி தான் வச்சிப்பேன் நேற்று மறந்துவிட்டேன் ரூபன்." என்றார். 

''சரி அங்கிள் நான் கிளம்பறேன்." என்று வந்த காரணம் அறியாமலே  எழுந்தவனை
''ரூபன் உன்னை வர சொன்ன விஷயம்." என்று நிலாவை பார்த்தவர்,
''இரண்டு பேரும் இங்க இருக்கிங்க ரெண்டு பேர்கிட்டயும் ஒரே கேள்வி தான் கேட்க போறேன்.  நேற்று சொன்ன விஷயம் தான். உங்களுக்கு ஒருவருக்கு ஒருவர் பிடிச்சிருக்கா?'' என்றதும் நிலா தலையை குனிந்து யோசிக்க, ரூபனோ அவளை கண்டு தாமஸை கண்டும் யோசிக்க முடியாமல் தவித்தான்.

''அங்கிள் வீட்டில் அம்மாகிட்ட.'' என்று சிறுவனை போல பதில் அளித்து ஓட முயன்றவனை ''என்ன ரூபன் வீட்டில் உங்கம்மா நீ யாரை ஓகே சொல்லுவ என்று இருக்காங்க நீ தான் பதில் சொல்லணும்'' என்றதும் டைகர் குலைத்தது. 

 ''ஒரு நிமிஷம் டைகர் கூப்பிடுது பார்த்துட்டு வர்றேன்" என நகர்ந்தார்.

சும்மாவே அமைதியாக இருந்த நிலா நாளிதழை புரட்ட, அதில் வந்த செய்தியை கண்டு நமட்டு புன்னகை செய்ய, இதுவரை யோசனையில் இருந்தவன் அவளின் சிரிப்பில் கோவத்தை உண்டு செய்தது. 

 ''என்ன முடிவு ரூபன்?'' என்று தாமஸ் அங்கிள் கேட்க,
''அங்கிள் எனக்கு இந்த பொண்ணை பிடிக்கலை.'' என்றான். 

 இதுவரை அமைதியாக இருந்த நிலா உடனே அவனின் பதிலில் அவளும் பிடிவாதமாக ''அங்கிள் எனக்கும் இவனை சுத்தமா பிடிக்கலை... என் முடிவும் சொல்லிட்டேன்'' என அவளும் வீம்பாக சொன்னாள். 

தாமஸுக்கு இப்பொழுது கேட்டிருக்க கூடாதோ என்று தோன்றியது.
''அங்கிள் வேற ஒன்னுமில்லை என்றால் நான் கிளம்பறேன் எனக்கு ஒர்க் இருக்கு. நெத்தே ஒரு கொள்ளையடிக்கும் கும்பலை ஒரு லூசுல தவறவிட்டேன்'' என்று எழுந்தவனுக்கு முன்னால் ''அங்கிள் எனக்கும் ஒர்க் இருக்கு நான் ஒன்னும் வெட்டி ஆபிசர் இல்லை. ஆட தெரியாதவனுக்கு தெரு கோணலாம். தப்பிக்க விட்டது அவரு. இதுல நான் என்ன செய்தேன்? பச் நான் கிளம்பறேன்'' என வேகமாக கிளம்பினாள். லேசாக அவள் கண்ணில் கண்ணீர் துளிகளை மறைத்து ஓடினாள். 

தாமஸுக்கு இப்பொழுது இருவரையும் நிறுத்தி பேச மனமில்லாமல் அமைதியாக கிளம்ப வழியனுப்பினார்.
நிலா வெளியே வந்தாலும் டைகர் இருப்பதை கண்டு மெதுவாக பதுங்கி நடக்க, ரூபனோ அவளை நக்கல் பார்வையோடு கடந்தான்.
அவன் ஒரு பக்கமும் அவள் ஒரு பக்கமும் தனிதனியாக கிளம்பினார்கள்.

தொடரும்

பிரவீணா தங்கராஜ்


 
Posted : June 23, 2026 6:20 pm
SOURABH and priyameenu reacted
(@priyameenu)
Posts: 3
New Member
 

இரும்பு கேட்ட விட டைகர் கிட்ட கடிவாங்கறது மேல் -நிலா. 😂

என்ன முட்டிக்கிட்ட ரெண்டும் வேறு வேறு பாதையில் போகுது. 


 
Posted : June 24, 2026 7:08 pm
(@Anonymous)
Posts: 0
 

@praveena-thangaraj ⭐⭐⭐⭐⭐💞💞👌👌👌👌


 
Posted : June 26, 2026 11:28 pm

Scroll to Top