Forum

முதலாம் சந்திப்பில்...
 
Notifications
Clear all

முதலாம் சந்திப்பில்-3

2 Posts
2 Users
3 Reactions
97 Views
(@praveena-thangaraj)
Posts: 180
Member Admin
Topic starter
 
[#91]

அத்தியாயம்-3

    'அவளை போய் வேண்டாம் என்று சொல்லிட்டு வந்து இருக்கியே... நீ சரியான முட்டாள் உனக்கு இப்படி வெரப்பா காக்கி சட்டை போட்டுக்கிட்டு சுத்த தான் லாயக்கு.' என ரூபன் மனச்சாட்சி திட்டியது. 

''என்ன என்ன செய்ய சொல்ற எல்லோரும் மாதிரி அவள் என்னை கிண்டல் செய்யறா? அப்படியிருக்க அந்த நேரத்தில் எப்படி பிடிச்சுருக்கு என்று சொல்ல முடியும்.' என்றான் அவன்.

'அப்போ அவளை பிடிச்சியிருக்கு?' என்றது மனச்சாட்சி.
''ஹ்ம்ம் ஆமா ஆனா நானா எப்படி ஓகே சொல்லுவேன்... அவள் என்னை கிண்டல் செய்த பிறகு'' என்றான் ரூபன்.

'உனக்கு ரொம்ப ஈகோ ரூபன் அவளோ தான் சொல்லுவேன்' என்றதற்கு கண்ணாடியில் முறுவலுடன் அவனை கண்டு ''எங்க போயிட போறா பார்த்துடலாம்' என்றே பணியை தொடர்ந்தான்.
இங்கு நிலாவோ 'அவனுக்கு ரொம்ப திமிரு என்னை போய் பிடிக்கலை என்று சொல்லிட்டான். ஆனா எனக்கு அவனை பிடிச்சு இருக்கு ஆனா வீம்புக்கு நானும் பிடிக்கலை என்று சொல்லிட்டேன் அதை மீறி நாங்க சேருவோமா? என்றே கவலையோடு மெத்தையில் தனது ஹெர்டின் தலையணையை அணைத்துக் கொண்டு படுத்தாள்.

திவாகர்வின் தங்கை எப்பொழுதும் போல தனது கணவன் செயலால் சொல்லாமல் கொள்ளாமல் எப்பொழுதும் போல திவாகர் வீட்டுக்கு வந்து நின்றாள். இது அடிக்கடி நிகழும் ஒரு சம்பவம். ரேவதி எப்பொழுதும் தனது கணவரின் செய்கையில் அதிருப்தி அடைவார். அவர் கொஞ்சம் குடிப்பழக்கம் கொண்டவர். கையில் இருக்கும் பணத்தை எல்லாம் இழந்து குடித்துவிட்டு வந்து ரகளை செய்பவன். ரேவதி பொறுத்து பொறுத்து பார்த்து சில நேரம் சண்டையிட்டு அண்ணன் வீட்டுக்கு வந்து ஒப்பாரி வைப்பார்.

 தங்கைக்கு குழந்தை குட்டி என்று இல்லாததால் ரேவதி எப்பொழுது வந்தாலும் திவாகர் ஓரளவு புத்திமதி அறிவுரை ஆறுதல் எல்லாம் சொல்லி கொஞ்சம் நேரம் இருக்க வைத்து அனுப்புவார். சில சமயம் இரண்டு நாட்கள் கூட உண்டு. வராதே என்று சொல்லிவிட்டால் ஒரு முறை தற்கொலைக்கு முயன்றதால் தான் இப்படி வந்துவிட்டு போகட்டும் அவளுக்கும் யார் இருக்கா அவளின் நிலையை சொல்லி புலம்ப, என விட்டுவிட்டார். ரேவதி கணவருக்கு சொல்லி புரியவைக்கும் நிலை கடந்து இருந்தார்.

நிலா அவர்களை ஆறுதல் செய்தும் உணவு உண்டும் அன்றைய நாள் கழிந்தன.
தாமஸும் பாக்கியமும் போனில் விவரம் பரிமாறி கொண்டு வருத்தம் கொண்டார்கள்.

திவாகர்-அபிராமி இருவருமே தங்கள் மகள் நிலாவுக்கு இந்த வரன் முடிந்திடும் என்ற நம்பிகையிலிருக்க அது களைந்து போனது. நர்ஸ் உடையோடு நிலா செல்வதை தவிப்பாய் பார்த்தார்கள். அவர்களுக்கு ரூபனை அவ்வளவு பிடித்திருந்தது. 

அபிராமியோ இந்த ஒரு வாரத்தில் நிலாவுக்கு ரூபன் கணவர் என்று முடிவுகட்டி பேசியபடி இருந்தார். திவாகர் கூட அவனின் செயல் எல்லாம் சொல்லி அவனின் பணி பற்றி கூறி பெருமையாக புகழ்ந்து தள்ளினார்.

 எல்லாம் இப்பொழுது கானலாகி போனது.

பெருமூச்சோடு சரி இன்னோரு வரன் வரமலா போகும்... தங்க விக்கிரகமாக இருக்கும் இவளுக்கு ராஜவாக ஒருவன் வருவான்' என தாமஸிடம் வேறு வரன் பார்க்க சொல்லிவிட்டார்கள்.

தாமஸிற்கோ இவர்களின் இருவரின் பொருத்தம் தவிர்த்து பார்க்க தோன்றாமல் திவாகர் பேச்சுக்காக வேறு வரன் ஒன்றை பார்க்க துவங்கினார்.

காலையிலே ஹாஸ்பிடலில் அடம் பிடித்து மருந்து போட, மறுக்கும் குழந்தை ஒன்று, இவள் வந்ததும் சமத்தாக மாத்திரை போட்டு கொள்ள, 'சௌமி குட்டி குட் கேர்ள்' என கூறி நிலா நகர்ந்தாள்.

ATM கொள்ளைகாரர்கள் இருந்த பகுதிக்கு மீண்டும் ரூபன்பிரகாஷ் சென்று அங்கு பக்கத்தில் யாரின் வீட்டிலாவது cctv கேமரா இருக்கா என்று பார்த்து கொண்டிருக்க அவனின் பள்ளி தோழன் சிவா வந்து நின்றான்.

''என்னடா மச்சான் இங்க?'' என்று பிரகாஷ் தோளில் கைவைக்க சட் டென திரும்பியவன்
''ஹாய் மச்சி என்ன டா ஆளே அடையாளம் தெரிலை''

''டேய் அதை நான் கேட்கணும்... இங்க இருந்து கொண்டு வர கூட, உன்னால முடியல. அம்மாவ பார்த்தேன் எதோ உனக்கு வரன் பார்த்தா சொன்னாங்க? முடிஞ்சாத டா?'' என்று சிவா விசாரித்தான். 

''அது.. இல்லை ஆனா முடியும். ஆமா உனக்கு பொண்ணு பார்க்கிறதா கேள்விப்பட்டேன்'' என்று ரூபனும் விசாரித்தான். 
''உனக்கு யாருடா அது சொன்னது நிச்சயம் நீயா கேட்டு தெரிஞ்சுக்க சான்ஸ் இல்லை... வேலை வேலை என்று ஓடற'' என்று சிவா நண்பனை வாறினான்.  

''ஹ்ம்ம் ஆமா டா கொஞ்சம் காம்ப்ளிகேட் கேஸ் அதனால பிஸி, உங்க வீட்ல பக்கத்தில் இருக்கிறாரே கணேசன் அண்ணா அதான்டா எனக்கு டிரைவர் ஒர்க் பார்க்கறாருல அவர் சொன்னார்'' என்றான் ரூபன். 

''அதானே பார்த்தேன்... பொண்ணு பார்த்துகிட்டு இருக்காங்க இப்போ ஒரு பொண்ணு போட்டோ தாமஸ் அங்கிள் கொடுத்தார் பார்க்க நல்லா துறுதுறுனு இருக்கு அவள் கண்ணு நர்ஸ் டா'' என போட்டோ எடுத்து நீட்ட பிரகாஷ் கொஞ்சம் அதிர்ந்தான். 

ஏன் என்றால் அது நிலா. ''அந்த பொண்ணு என்ன சொல்லுதோ... '' என முடிக்க "என்ன டா அப்டியே முழிக்கற" என்றான் சிவா. 

''நத்திங்க் மச்சான் கொஞ்சம் வேலைனு சொன்னேனே...  நான் கிளம்பறேன்'' என நழுவிட cctvயில் சிக்கிய நபர்கள் யாரின் உதவியால் சென்றார்கள் என்று அறிந்தும், அதனை சரி செய்ய போகாமல், 'அவள் வேண்டாம் என்று சொன்னது நான் தான். ஆனா அது விளையாட்டுக்கு அப்போ சொல்லிட்டேன். இப்போ சிவா அந்த பொண்ணு போட்டோ வச்சி இருக்கான் இப்போ போய் இல்லை எனக்கு அவளை பிடிச்சிருக்கு என்று எப்படி சொல்ல? முதலில் அந்த பொண்ணுக்கு என்னை பிடிக்கலை" என அறையில் தனிமையாக நடந்தவன்.

கண்ணாடியில் 'அன்னிக்கே அவளை பிடிச்சிருக்கு என்று சொல்லி தொலைச்சு இருக்கலாம்... எல்லாம் விதி சே' என அமர்ந்தவன் மனதை மாற்றி கொண்டு எழுந்து உத்தியோகத்துக்கு கிளம்பினான். cctv புட் ஏஜ் வைத்து அவர்களின் கூடவே இருக்கும் சக அதிகாரியை கைது செய்து கேட்க வேண்டிய முறையில் விசாரிக்க, ATM ஆட்களுக்கும் அவருக்கும் உள்ள நட்பு கொண்டு திருட்டுக்கு உடந்தை என்று ஒப்புக் கொண்டார். அதன்பிறகு கொள்ளையர்கள் எங்கு இருக்கின்றார்கள் என தெரிவிக்க, அவர்களை கையும் களவுமாக பிடித்தான்.

அவர்களை பிடித்த கையோடு பிரஸ் மீட் செய்து கொள்ளயர்களின் முகத்திரை கிழித்தான். எல்லோருமே கல்லூரி படித்த இளைஞர்கள். அவர்களின் அறிவு நேர்பாதையில் சென்றால் நன்றாக இருந்து இருக்கும். ஆனால் ஒரு சிறு திருட்டுக்கு உள்ளே வந்து, போலீசிலும் கெட்டவர் உதவி இருக்க இப்படி மாறி அகப்பட்டு கொண்டார்கள். 

அடுத்த நாள் காலையில் பேப்பரில் ரூபன் பிரகாஷ் கொள்ளையர்களோடு நின்று புகைப்பட செய்திகள் எல்லா பத்திரிகைகளில் வெளியே வந்தன. நிலா கூட அதனை படித்து பார்த்து அவனின் செய்தி வெளியான பேப்பரில் அவனது புகைப்படத்தை கத்தரித்து பர்சில் வைத்து கொண்டாள். அவளின் மனசாட்சி 'இவ எதுக்கு எடுத்து வைத்து இருக்கின்றாள்' என்று கேட்க அதற்கு சும்மா' என சொல்லி அடக்கினாள். மனதிற்கு தெரியாதா என்ன?

ரூபன் டியூட்டி முடித்து வரவும், பாக்கியம் வந்து சிவாவுக்கு திருமணம் உறுதி ஆனதை சொல்லி சென்றார். ரூபன்பிரகாஷ் மனதால் நொறுங்கி போனான். 

இங்கே இருந்தால் எப்படியும் நண்பன் திருமணத்திற்கு போக வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம் என்றெண்ணியவன், ட்ரான்ஸ்வெர் வாங்கினான். அவனின் திறமைக்கு எவ்விடம் என்றாலும் ட்ரான்ஸபெர் கொடுக்கப்பட்டது.  

"புரியாத மொழி இருக்கும் இடம் எதுக்கு டா அங்க" என்று அன்னை கேட்டதுக்கு 'அங்க தான் போஸ்டிங்' என சொல்லி விட்டான்.

போனில் சிவா தனக்கு திருமணம் என்று கூறும் சமயம் மும்பை பறந்திருக்க, 'நேரமிருப்பின் வருவதாக வாக்கு கொடுத்தான் ஆனால் நிச்சயமா போக மாட்டான்.

இங்கே நிலா வீட்டில் ஆம்புலன்ஸ் வந்து நின்றது. தன் வீட்டில்  இரு பிணங்கள் மூடிய படி கிடைக்க, நிலா கண்கள் அழுது அழுது சிவந்து கிடந்தது. 
ஒரே நாளில் தனது வாழ்க்கை தலைகீழாக மாறும் என்று யாராவது சொல்லி இருந்தால் நம்பியிருக்க மாட்டாள் ஆனால் இன்றோ அது தான் நடந்தது.

தந்தை ஒரு லாரி விபத்தில் ஸ்பாட்டிலே இறக்க தாயோ வீட்டில் கேஸ் வெடித்து இறந்து கிடந்தார்கள். எப்படி தான் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமல் ஒன்றாகவே சென்றார்களோ என வந்தவர்கள் சொல்லி அழ நிலாவுக்கு கண்ணீர் நிற்காமல் வந்தன.

நிலா நிறைய இறப்பு பார்த்து இருக்கின்றாள் தான். பணியில் அவளுக்கு அது எல்லாம் கஷ்டமாக கூட இருக்கும் .சில நேரம் யாரேனும் நன்றாக பழகிய பேஷண்ட் இறந்தால் அன்று சாப்பிட கூட மாட்டாள் அப்படி இருக்க தாய் தந்தை என்று  இருவருமே பறிகொடுத்து எப்படி உணவு விழுங்குவாள். ஒரே நாளில் தனிமரமாக நின்றாள். 

தொடரும் 

பிரவீணா தங்கராஜ். 


 
Posted : June 23, 2026 6:22 pm
SOURABH and priyameenu reacted
(@priyameenu)
Posts: 3
New Member
 

கள்வர்களை பிடித்து கொடுத்துட்டு மனம் கவர்ந்தவளை விட்டு கொடுத்துவிட்டு போயிருக்கான். 


 


 
Posted : June 24, 2026 7:17 pm

Scroll to Top