Forum

முதலாம் சந்திப்பில்...
 
Notifications
Clear all

முதலாம் சந்திப்பில்-13

2 Posts
2 Users
0 Reactions
79 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#101]

அத்தியாயம்-13

அதிகாலையில்ரூபனின் அறைக்கு சென்று தான் குளிக்க சென்றாள் நிலா.  ஆனால் அவளின் பார்வை அவனை தவிர்த்திருந்தது.
'செம கோவத்தில் இருக்கா. அடிச்சதுக்கா இந்த கோவம்.. இல்லை அணைச்சதுக்கா? ஐயோ ஒன்றும் புரியலை. இந்த பொண்ணுங்க பற்றி அறிய தனியா ஒரு அகராதி வையுங்க கடவுளே. சரியான ஆங்காரம் பிடிச்சதுங்களா இருக்குங்க.' என்று புலம்பினான். 

நேரம் நகர பணிக்கு கிளம்பினாள் நிலா. அபிராமி ரூபனிடம் சேர்ந்து போக சொல்ல அவளும் அமைதியாக அவனோடவே கிளம்பினாள்.
''நீலு.... என் ப்ரபோஸுக்கு என்ன பதில்? எப்போ சொல்லுவ'' என வண்டியை மருத்துவமனை முன்னே நிறுத்தி கேட்டு முடிக்க,  எந்த பதில் இன்றி உள்ளே நுழைந்தாள். இரவு அறைக்கு வருவாள் கேட்டு கொள்வோம் என ரூபனும் சென்றான்.

மதியம் நேரம் எடுத்து விடுமுறை சொல்லி நிலா கிளம்பினாள். அவசரமாக மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் ஒரு இடத்தில் வாடகை பணம் எல்லாம் கொடுத்துவிட்டு தாயை காண சென்றாள்.

இந்த நேரம் வருவாளென அறியாமல், இரு பெரியவர்கள் பேசியபடி கதை அளந்தனர். 
''அம்மா கிளம்பு.. போகலாம்'' என்றாள் மொட்டையாக.
''எங்கடா ஹாஸ்பிடலுக்கா?'' என்று அபிராமி கேட்க,
''ஹாஸ்பிடல் எதுக்கும்மா? உனக்கு தான் நினைவு திரும்பிடுச்சே.. அப்பறம் என்ன? எனக்கு கல்யாணம் ஆகலை என்றதும் நீ தெளிவா புரிந்து கொண்ட.. அதுக்கு மேல என்ன? இனி உடல்நிலை சரியாகிய பின்னரும் இங்க ரூபன் சார், பாக்கியம் ஆன்ட்டி, எல்லோருக்கும் நம்மளால் எதுக்கு கஷ்டம் கிளம்பும்மா'' என்றாள். 

 பாக்கியதிடம் ''தேங்க்ஸ் ஆன்ட்டி அம்மா நினைவு தப்பிய சமயம், உங்க மருமகள் மாதிரி, அவங்க பேசியதை எல்லாம் பொருட்படுத்தாது இருந்தீங்க.. சாரும் அவரோட அறையில் இருந்தாலும், அதனை ஏற்று கொண்டார். இனி அந்த கஷ்டம் உங்களுக்கு வேண்டாம் கிளம்பறோம் ஆன்ட்டி'' என்று பேசவிடாமல் செய்தாள்.  

''இல்லை டா அம்மாவுக்கு இன்னும் க்ளியர் ஆகிடுசச்சு என்று நல்லா தெரியட்டும் அப்பறம் போகலாமே. அதுவும் இல்லாமல் ரூபன் இல்லாத சமயம்..'' என எடுத்துரைத்தார். 

''அம்மா ரொம்ப தெளிவா தான் ஆன்ட்டி இருக்காங்க... நீங்க அம்மா பேசியதை எல்லாம் கேட்டேன்.. அவங்க தெளிவா தான் உங்க பையன்‌ சொன்னபடி அவர் அறைக்கு அனுப்பி இருக்காங்க. ஆனா இனி வேண்டாம்... ஒரு பொண்ணு மனசில் அவளோட அம்மா உடல்நிலை சரியில்லை என்று எவ்ளோ வருத்ததில் இருப்பா? அவளிடம் போய் அவர்களை வைத்து கல்யாண செய்ய நாடகம் நடத்தியிருக்கார் உங்க பையன். வேண்டாம் ஆன்ட்டி போதும். அவர் என் அம்மாவை கொண்டு வந்து முன்ன நிறுத்தியாதே போதும். இனி நானே பார்த்து கொள்கின்றேன்'' என்றதும்,  ஆபிராமிக்கு மகள் தீவிரமாக முடிவெடுத்து இருக்க கண்டு அமைதியாக கிளம்பினார்.

 இதற்கு மேலும் திருமணம் ஆகாத ரூபனோடு தங்க சொல்லி வற்புறுத்த முடியாது. திருமணம் பற்றிய பேசும் இந்த சூழ்நிலையில், அவள் புரிந்து கொள்ளவும் மாட்டாள் என நிலாவோடு கிளம்பினார்.

நிலா அபிராமி இருவரும் கிளம்பிய நொடியில் பாக்கியம் ரூபனுக்கு போன் செய்து முடித்தார்கள்.

கொஞ்சம் வீட்டுக்கு வர சொல்லி, வந்தவுடன் நிலா சென்றதை எல்லாம் சொல்லி முடிக்க ரூபன் தலையில் கை வைத்து சோபாவில் அமர்ந்தான்.
''என்னம்மா இப்படி பண்ணி இருக்கிங்க.. ஒன்னு என்கிட்ட அவளை லவ் பண்றியானு நேரா கேட்டு இருக்கணும். இல்லையா அத்தை உடல்நிலை சரியாகிடுச்சு என்றாவது சொல்லி இருக்கணும்...  இது என்ன விளையாட்டு?'' என்றான் கோபமாக.

''அது இல்லைடா... ஒரே அறையில் இருந்தா எப்படியும் ரொம்ப நாள் நீ தவிர்க்க மாட்ட கல்யாண பேச்சை எடுப்பனு தான்..'' என்று மகனிடம் திட்டம் போட்டதை தெரிவித்தார். 

''நான் நிலாவை லவ் பண்றேனு உங்களுக்கு தெரிந்துயிருக்கு அப்பறம் ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம் ல...என்னம்மா நீங்க.. அவள் ஏதோ நான் டிராமா ஆடறதா நினைச்சுக்கிட்டு இருப்பா. முதல் சந்திப்பு தான் மோதலா போச்சு இப்பவுமா?'' என்றான். 

''இப்ப என்னடா செய்ய? அவங்க எங்க போனாங்க என்றும் தெரியாதே' என்று வருந்தினார். 

''அவள் ஒர்க் பன்ற இடத்தில் கேட்டுப்பேன். பிரச்சனை அதில்லை என்னவோ நான் டிராமா ஆடி, என் ரூமுக்கு அவளை அனுப்பியதா மட்டமா நினைப்பா. போங்கம்மா'' என சலித்து டென்ஷனில் இருக்க பாக்கியம் அலைபேசி அடித்தது.

''ரூபன் நிலா போன் டா'' என அட்டேன் பண்ணினான். 

''அண்ணி நான் அபிராமி பேசறேன்'' என்றதற்கு,

''அத்தை நான் ரூபன்.. எங்க இருக்கிங்க?''

''நிலாவுக்கு தெரியாம பேசறேன் மாப்பிள்ளை. இந்த நம்பருக்கு அட்ரெஸ் அனுப்பி இருக்கேன்... பாருங்க அவள் வந்துடுவா நான் அப்பறம் பேசறேன்.'' என சட்டென துண்டித்தார் அபிராமி.  

பாக்கியமோ ''என்னடா நிலா தானே என்ன சொன்னா?'' என்றார். 

''நிலா எல்லாம் இல்லைம்மா'' என இன்பாக்ஸ் ஓபன் செய்ய அதில் இருந்த அட்ரெஸ் தனது போனில் போட்டோ எடுத்து விரைந்தான்.

இரும்பு கதவை தள்ளி, ரூபன் அவ்வீட்டினுள் நுழைந்தான்.  
''எங்க அத்தை அவ'' என்றான். 
''இந்த  அறையில" என்று சொல்லி முடிக்கும் முன் அங்கே கதவை திறந்து அவளின் முன் நின்றான்.

திறந்த கதவு தானாக மூடிக்கொள்ள ''இப்போ எதுக்குடி அவசர அவசரமா வேற வீட்டுக்கு வந்திருக்க? நான் நேற்று லவ் சொன்னது தப்பா? உன்னை அடிச்சாதாலயா? இல்லை நீ என்னை ஹக் பண்ணி மெய் மறந்து நின்றியே அதனாலயா?
நான் உன்னை லவ் பண்றேன் என்று நான் சொல்லாமலே உனக்கு தெரியும். ஏன் நீயும் விரும்பற, இல்லைனா எதுக்குடி எனக்கு குண்டு அடிபட்டதும் ஹஸ்பிடலில், ஹாஸ்டல் கூட போகாம அங்கயே தங்கி கவனிச்ச?

 அது மட்டுமா எனக்கு ஊசி போட, வேற எந்த நர்ஸ்ஸையும் அனுமதிச்சது இல்லை நீ.. திரும்ப அதுக்கு பேரு மனிதாபிமானம் மண்ணாங்கட்டி, அது இது என்று சொன்ன அவ்ளோ தான்.'' என விரலை நீட்டி எச்சரித்தான். 

அவன் வந்ததிலேயே அதிர்ந்து நின்ற நிலா, அவனின் இந்த காதல், அவளின் செய்கை விவரித்து பேச, கொஞ்சம் பதறி போயி, பேசமுடியாமல் நின்றாள்.

''அப்பறம் என்ன சொன்ன? என் அம்மாகிட்ட நான் உன்னை கல்யாணம் செய்ய நாடகம் செய்தேனா.? அதுவும்  உன் அம்மாவை வைத்து. அறிவிருக்கா இல்லையா? உங்க அம்மாவுக்கு நினைவு வந்திருக்கு என்றதே எனக்கு கொஞ்ச நேரம் முன்ன தான் தெரியும். அதுவும் நீ இங்க வந்து இப்படி செய்த காரியத்தில் தான்.

அப்படியிருக்க எப்படிடி ஏன் மேல இப்படி ஒரு பழியை சுமத்தற? உன் அம்மாவை உடல்நிலை காட்டி தான், உன்னை கல்யாணம் செய்து கொள்வேனு எப்படிடி நினைச்சே.?

நீ அன்னிக்கு அம்மானு கதறி அழுதப்ப உன்னை நெஞ்சில் சாய்த்தது எல்லாம்,  உன் கஷ்டம் அழுகையை குறைக்கணும் தான்டி துடிச்சேன். என்னை போய் உனக்கு நாடகம் செய்தேனு சொல்ற. 

ஆமா.. இங்க நீ தனியா வந்தா, நான் உன்னை விட்டு விலகி போவேனா.? நீ தனியா நின்று தவிக்கும் பொழுதே, உன் அருகாமையில் வச்சிக்கனும் என்றே முடிவெடுத்தவன் நான்.. உன் அழுகை வருத்தம் களைய முயற்சி செய்தவன். உன் மனசில் நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் இருக்கேன்...'' என்றதும் நிலா இவனுக்கு எப்படி என முழித்தபடி பார்த்தாள். 

''அன்னிக்கு உங்க அம்மாவை பார்த்து, அவங்க மயங்கி சரிந்ததும், நீ மயங்கி சரிஞ்ச. அப்ப கண்முழிச்சப்ப என் நெஞ்சில் தாண்டி சாய்ந்து ரூபி ரூபினு அழுத. நேற்று அடிச்சப்பவும் என்னையே கட்டி புடிச்சு நின்ற.

உனக்கு வேணுமின்னா சுயநினைவு இல்லாமல் போகலாம். எனக்கு இருக்கு... உன் மனசில் நான் இருக்கேன்... இனி கிறுக்குததனமா ஏதாவது நினைச்சு பேசி என்னை கொல்லாதே.'' என்று கத்த தனது முன் ரூபனிடம் தற்பொழுது பேசினால் நிச்சயம் விபரீதம் தனக்கு தான் என புரிந்து அமைதியானாள்.

''உன்னை இந்த நிமிஷம் கையை பிடிச்சு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகணும் என்று ஆசையிருக்கு. ஆனா நீ இங்க வந்ததும் எனக்கு ஒகே தான் ஊரரிய கல்யாணம் செய்யும் பொழுது பையன் பொண்ணு ஒரே வீட்ல இருக்க கூடாது தானே... ஒரே வாரத்தில் உன் கழுத்தில் தாலி கட்டி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்டி.. ஆனா அதுகுள்ள எனக்கு உன் பதில் வேணும் நீலு'' என வெளியேறினான்.

நிலா கண்கள் தானாக நீரை சுரந்து நின்றன. அது ஆனந்தத்திலா அல்லது எதனால் என்று அவளுக்கே வெளிச்சம்.
வெளியே வந்த ரூபன் ''சாரி அத்தை தெரிந்தோ தெரியாமலோ எனக்கும் நிலாவுக்கும் ஒரு வருஷம் இடைவெளி வந்துடுச்சு. இனி என்னால அவளை விட்டு கொடுக்க முடியாது. நான் ஒரு வாரத்தில் கல்யாணம் செய்ய ஏற்பாடு பண்ணிட்டு வர்றேன். அதுக்குள் அவளா என்னிடம் அவளோட மனசு சொல்லணும். சொல்லுவா வர்றேன் அத்தை'' என கிளம்பினான்.

அபிராமிக்கு மனம் இன்று தான் நிம்மதியடைந்தது. ரூபன் மனம் ஒரு வாரத்தில் கல்யாணம் என்றதும் மகளின் திருமணம் ஒன்றே ஆனந்தமென எண்ணி வாழும் தாயிக்கு உள்ளம் உவகை கொண்டது.

நிலா அறையில் ஜன்னல் வழியாக வந்த வானத்து நிலாவின் வெளிச்சத்தில் ரூபனின் முதல் முறை பார்த்த அன்றைய நிகழ்வில் எண்ணி அப்படியே உறங்கினாள்.

ரூபனும் தனது காதல் சொல்லி கல்யாணம் பேசி முடித்தும் அவள் அமைதியாக இருந்ததே நிம்மதி தர மகிழ்ந்தான். அவள் மறுத்தால் அவன் யோசிக்கலாம் அவளோ மறுக்காமல் இருக்க அதுவே அவனுக்கு தற்பொழுது உவகை ஆனது.

தொடரும் 

பிரவீணா தங்கராஜ் 


 
Posted : June 23, 2026 7:32 pm
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

போங்கடி, போங்கடி... நீங்களும் உங்க இழுத்தடிக்கிற காதலும்.

 

😄😄😄

CRVS (or) CRVS 2797


 
Posted : June 26, 2026 9:41 pm

Scroll to Top