Forum

முதலாம் சந்திப்பில்...
 
Notifications
Clear all

முதலாம் சந்திப்பில்-7

3 Posts
3 Users
0 Reactions
98 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#95]

அத்தியாயம்-7

ரேணுகா முன் வந்து ரூபனிடம், ''சார் அவள் இப்படி பேச நாங்க தான் காரணம் நீங்க இங்க இருந்தவரை அவள் உங்களை ரொம்ப அக்கறையா கவனிச்சத்தை நாங்க கொஞ்சம் தவறா பேசிட்டோம். அதை கேட்டுட்டு  நிலா எங்களை ஒன்றும் சொல்லவில்லை. ஆனா உங்களை முகத்தில் அடிச்சது போல பேசறா?'' என சொல்ல சுந்தரியும் வேணியும் ''ஆமா சார்... மன்னிச்சுடுங்க.. அவள் இதுவரை அப்படி யாரிடமும் அக்கறை கொண்டது இல்லை... குழந்தைகளை தவிர்த்து... அதான் நாங்க பேசினோம் அவ ஹர்ட் ஆகிட்டா'' என்றதும்  தன்னவள் எதற்கு அப்படி போனாள் என்று விளங்க புரிந்து கொண்டவன். 

அவர்களிடம் ''லுக் சிஸ்டர்... எப்பவும் உண்மை தெரியாம பேசிடாதிங்க அதை திரும்ப எடுக்க முடியாது. அப்படியே எதுனாலும் நீங்க அவளிடம் நேரிடைய ஒரு தோழியா கேட்டு இருக்கலாம் அதை விட்டு... சரி விடுங்க போங்க...'' என நிலாவின் வருகைக்கு காத்திருந்தான்.

தன்னவள் இன்று எப்படியும் தன்னிடம் பேச மறுப்பாள், அவளிடம் கெஞ்ச கூடாது, அதே சமயம் அவளிடம் பேசாமல் திரும்பினால் அவளுக்கு அதே தாக்கம் வந்திடும் என யோசித்தான்.

நிலா அறை கதவை திறந்து வர ரூபன் அங்கேயே நிற்க கண்டு வேகமாக நடக்க ''ஒரு நிமிஷம் நிலா...'' என்றான். கோவத்தோடு திரும்ப அங்கே சுந்தரி வேணி ரேணுகா மூவருமே வேலை பார்ப்பது போல இருந்தாலும் நிலா அந்த போலீஸ்காரனிடம் கோவத்தோடு இருப்பதை அறிந்து அமைதியாக திரும்ப
''என்ன வேணும்.. உங்களுக்கு... எதுக்கு என் பின்னால வர்றிங்க?'' என்றாள்.  

''ஹலோ யாரு பின்னால வர்றாங்க? சித்திக் டாக்டர் உங்ககிட்ட தான் என்னோட ரிப்போர்ட் இருக்கறதா சொன்னார்... அதான் வாங்கிட்டு போக வந்தேன்.'' என்றதும் நிலா வேகமாக அவளின் உடமை வைக்கும் கப்போர்ட திறந்து அவனின் ரிப்போர்ட் எடுத்து கொடுத்தாள்.
வாங்கி கொண்டவன் அவளை திரும்பி கூட பார்க்காமல் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பினான்.

நிலா மனதில் 'நினைச்சேன் என்னடா இவன் என்னை பிடிக்கலை என்று தானே போனான் திடீரென தேடி வந்து பேசறானே என்று கொஞ்சம் ஏங்கிட்டேன்... நல்லவேளை சிஸ்டர் எல்லாம் பேசியதால் அவனிடம் கோவமா நடந்தேன்.. இல்லை நான் பேசறதை கண்டு இவங்களை போலவே அவனும் நினைச்சு இருப்பான்' என்று துவண்டாள். 

ஆனால் உள்மனம் அவன் பிடிக்கலை என்றாலும் அவனோட நியூஸ் பேப்பர் போட்டோ தானே கட் செய்து உன் ஹாஸ்டல் ரூமில் வச்சியிருக்க... அதுக்கு அப்போ என்ன அர்த்தம்? அவனை விரும்பறியா? அப்பறம் எதுக்கு அவனிடம் சொல்லாமல் மறைக்கிற? என்று கேட்டது... அதற்கு அவளோ இல்லை பிடிக்கலை என்றதும் விலகிடனும் நான் தேடி போய் என்றும் பேசக்கூடாது... இருக்கற நல்ல பேர் கெடக்கூடாது.
நமக்கு ஹாஸ்பிடல் சர்வீஸ் செய்து இப்படியே காலத்தை ஒட்டிடறது தான் சரி..' என முடிவெடுத்து மனதை வேறுபக்கம் திருப்ப சென்றாள்.

இங்கு ரூபனோ 'போச்சு எல்லாம் போச்சு பிடிக்கலை என்று வாயை விட்டு ஏற்கனவே ஒரு வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்.. சரி இப்போ போய் பேசி பழகி லவ் பண்ணலாம் என்றால், எனக்கும் லவ்-க்கும் சுத்தமா செட் ஆகாது போல... ஒரு அடி அவகிட்ட போனாலே பத்தடி தூரமா போறா... எனக்கு இது தேவையா? ஆசை ஆசையா பார்க்க வந்தேன்.. இப்படி ஆகிடுச்சே... இப்போ என்ன செய்ய? நல்ல வேலை என் ரிப்போர்ட் வாங்க வந்தேன் என்று சமாளிச்சு கெத்து காட்டியாச்சு.... ஆனா அவளோட இப்படியே பழகினேன்.. நிச்சயம் என்னை திரும்பி கூட பார்க்க மாட்டாள் அது நல்லாவே தெரியுது.

மனசு முழுதும் லவ் வச்சிக்கிட்டு அவளை நார்மலா பார்க்கிறதே எனக்கு கஷ்டமா இருக்கு... இதுக்கு என்ன தான் தீர்வு எடுக்க என்றே தெரிலை...
பேசாம அம்மாகிட்ட போய் நான் முன்ன பார்த்த பொண்ணு நிலாவை விரும்பறேன் கட்டி வைங்க என்று அம்மாகிட்ட கேட்டா? நிச்சயம் தாமஸ் அங்கிள் கையில் காலில் விழுந்தாவது ஓகே வாங்கிடுவாங்க... அம்மாவுக்கு என் கல்யாணம் அவ்ளோ முக்கியம் ஆனா இது போலீஸ்காரனா இருந்துகிட்டு சின்னப்புள்ள தனமா இருக்கும்... இவ்ளோ நாள் காத்திருந்து இத லவ் மேரேஜ் மாற்றி காட்ட கூட எனக்கு துப்பில்லையா? என்று என் மனசாட்சியே காறி துப்பும்... அவளிடம் இப்போ வேண்டாம் கொஞ்சம் விட்டு பிடிக்கணும்.. ஆனா காலம் போகுதே... ஐயோ ஐயோ இப்படி புலம்ப விட்டுட்டியே நிலா.' என பைக்கில் பறந்தபடி போனான்.

மதியம் ஒன்றாக சாப்பிடும் பொழுது ரேணுகா சுந்தரி வேணி என்று அமர நிலா நிமிராமல் சாப்பிட்டு முடிக்க எழுந்து கொள்ளும் பொழுது கைகளை பற்றி நிறுத்தினாள் ரேணுகா. மாலினி ஒன்றும் புரியாமல் எல்லோரையும் பார்க்க.
''சாரி நிலா... நாங்க பேசியது தப்பு தான் நீ நார்மலா இல்லை அந்த போலீஸ்காரன் இங்க இருந்து போற வரை நீ ஏதோ கவலையா தான் இருந்த.. ரொம்ப அக்கறை இருந்துச்சு அதான் அப்படி பேசிட்டோம் பட் தப்பு தான் உங்கிட்ட கேட்டு இருக்கனும்... உன்னை தப்பா பேசியத்துக்கு ரொம்ப சாரி நிலா'' என்றதும் அவளையே மன்னிப்பை வேண்டிட மாலினி அவர்களுக்குள் நடந்தவையை கேட்க சுந்தரி எல்லாம் சொல்லி அவளும் மன்னிப்பு வேண்ட மாலினிக்கு தலைக்கு மேல கோவம் பொங்கியது.

''உங்களுக்கு எப்படி இப்படி பேச தோணுச்சு... உங்களுக்கு ஒன்னும் தெரியுமா அந்த ரூபன் தான் நிலாவுக்குனு கல்யாணம் செய்ய, அவளோட அப்பா அம்மா பார்த்த பையன்... அவர் பிடிக்கலை என்று போயிட்டார்.. அதுக்கு பிறகு அடிபட்டு இங்க தான் அவள் பார்த்து இருக்கா.. அவர் பிடிக்கலை என்றாலும் அவருக்கு குண்டு அடிபட்டு பார்த்ததும் கொஞ்சம் கலங்கிட்ட... அவ்ளோ தான்... ஏன் அவள் அப்பா அம்மா பார்த்த பையன் என்ற எண்ணத்தில் கொஞ்சம் மனசு அக்கறை காட்டியது தப்பா சொல்லுங்க.'' என்றதும் நிலா அமைதியாக கண்கள் நீரை சுரந்தன.
அப்பொழுது தான் தங்கள் பேசிய உண்மையான காயத்தை உணர்ந்தார்கள். மூவருமே ''ரியலி சாரி'' என்றே கையை பிடிக்க நிலா கண்களை அழுத்த துடைத்து.

''சாரி எல்லாம் வேண்டாம் அக்கா... இனி யாரையும் பேசும் பொழுது யோசிச்சு பேசுங்க...'' என எழுந்து சென்றாள். 

சுந்தரியும் வேணியும் கிளம்ப ரேணுகா மாலினிமுன் நின்று ''நிலாவுக்கு அந்த போலீஸ்காரனை பிடிக்குமோ என்னவோ தெரியாது ஆனா அவளுக்கே தெரியாம அவன் மீது அக்கறை இருக்கு அது உண்மை மாலினி.. நிலா லைப் இப்படியே இருக்க கூடாது நீ உன் ப்ரெண்ட் கூட கேளு... அவர் பார்வை கூட அவளோட பேச வந்த ஆவல் இருந்துச்சு... முன்ன ஏதோ காரணத்துல பிடிக்காம போயிருக்கலாம் ஆனா இப்போ அவங்க மனசில் புதுசா ஏதாவது தோன்றி இருக்கலாம்... என்ன அவர்களுக்கே அது தெரிலையோ என்னவோ... நீ பேசி பாரு அவள் மனசு கஷ்டப்படாம.. ஓகே'' என ரேணுகா நகர்ந்தாள்.

மாலினிக்கும் தோன்றியது தான் ரூபன் அட்மிட் ஆனதும் ரொம்பவே துடித்தாள். ஹாஸ்டல் கூட போகாமல் இங்கயே இருந்து கண்ணும் கருத்துமாக அவனை பார்த்து கொண்டாள். அவனுக்கு நல்ல உணவாக வாங்கி வர வெளியே சென்றாள். இங்கு இருக்கும் கேன்டீன் போதும் என்று எப்பொழுதும் சாப்பிடும் அவளே தான்.

அன்று அவனை டவல் பாத் எடுக்க வைக்கும் பொழுது முதலில் போக மறுத்தவள் பிறகு மற்றவர்களையும் போக விடாமல் தடுத்துவிட்டாள். அவளே செய்த பொழுதும் அவனின் கண்களை கூட பார்க்க மறந்து தவிர்த்து வந்து நின்றாள். டவல் பாத் தான் அதற்கே மூச்சுமுட்டி அறைக்கு வந்து நின்றாள். 

இதுவரை அப்படி அவள் ஆனதே இல்லை. மாலினிக்கு நிலாவிடம் இன்று பேசுவதை விட நாளைக்கு பேசி கொள்ளலாம் என விட்டு பிடித்தாள்.

மதியம் விடுமுறை சொல்லிவிட்டு தனது மனம் போன போக்கில் நடக்க தனக்கு முன் சென்று கொண்டிருந்த பெண்மணி தள்ளாடி தள்ளாடி நடக்க கண்டாள். 

ரூபனை பற்றியே எண்ணி கொண்டு வந்தவள் அப்பெண்மணியை கண்டு வேகமாக ஓடினாள்.

நிலா அருகே செல்ல அப்பெண்மணி மயங்கி சரிய சரியாய் இருந்தது. நிலா வேகமாக அப்பெண்மணியை தாங்கி பிடித்து ''அம்மா என்னாச்சு...?'' என மடியில் வைத்து கேட்க, கண்கள் சொருக இருந்த பெண்மணியை பார்த்து கையில் இருந்த நீரை முகத்தில் தெளித்து குடிக்க வைத்தாள்.

''லோ சுகர்... அதான்'' என சொன்னதும் பக்கத்தில் இருந்த கடையில் மிட்டாய் ஒன்றை வாங்கி சுவைக்க கொடுத்தாள். அதிலே எழுந்த அப்பெண்மணியை அருகே ஒரு திண்டில் அமர வைத்து கொஞ்ச நேரம் இருக்க வைத்தாள்.
''ரொம்ப நன்றி...'' என்றதும்
''நன்றி எல்லாம் எதுக்கும்மா. என் அம்மா வயசு உங்களுக்கு... எதுக்கு இப்படி வெயிலில் வெளிய வர்றிங்க... அப்படியே வந்தாலும் துணைக்கு யாரையாவது அழைச்சுட்டு வந்து இருக்கலாமே?'' என கரிசனையாக கூறினாள். 

''என் பையனை தவிர்த்து எனக்குன்னு யாருமில்லை மா... அவனும் உத்தியோகம் அது இதுனு சுற்றிட்டு இருப்பான்... இன்னிக்கு கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்துட்டேன்...அதான்'' என பழக்கூடையை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு நடந்தார். 

''கொடுங்க ம்மா நான் தூக்கிட்டு வர்றேன்... நானும் இதே வழி தான்'' என்றதும் அப்பெண்மணி கொடுத்துவிட்டார்.
''உனக்கு சிரமம் கொடுத்துட்டேன்...''
''அதெல்லாம் பரவாயில்லை மா என் அம்மா வயசு தானே உங்களுக்கும்'' என நடந்து கொண்டு வந்தார்கள். 

இரு தெரு சென்றதும் ஒரு வீட்டின் முன் கேட்டை திறந்து அப்பெண்மணி நடக்க பழக்கூடை கொண்டு வந்து வைத்தாள்.

''உள்ள வாம்மா...'' என்றாள் அம்முதியவள்.
''இருக்கட்டும் அம்மா நான்......''
''இது வரை வந்து உதவி செய்த ஒரு வாய் காபி தண்ணீர் குடிச்சுட்டு போ உள்ள வாம்மா' என அழைக்க நிலா உள்ளே வந்தாள்.

கூடவே பழக்கூடை தூக்கி கொண்டு வந்து பிரிட்ஜ் அருகே வைத்தவள் நிமிர்ந்தாள்.
அங்கே காக்கி உடையில் கம்பீரமாக போட்டோவில் காட்சி அளித்தது ரூபன் பிரகாஷ் தான். 

இன்னொரு புகைப்படத்தில் அவனும் இந்த முதியவளும் இருக்க பார்வை அப்படியே அப்பெண்மணியை பார்த்தாள் .

''அது என் பையன் ரூபன்.... போலீசா இருக்கான்'' என நீரை கொடுக்க வாங்கி பருகினாள்.

இனி இங்கு இருப்பது நல்லதல்ல என்று  தோன்றவும்''சரிம்மா நான் கிளம்பறேன்'' என தங்கநிலா ஓட்டமெடிக்காத குறை. 

''கொஞ்ச நேரம் இரும்மா என் மகனுக்கு போன் பண்ணி இருக்கேன் வந்துடுவான் பார்த்துட்டு போ'' என்றார் பாக்கியம். 

''அய்யயோ... இல்லை ஆன்ட்டி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு உடனே போகணும்.... உடம்பை பார்த்துக்கோங்க...'' என வெளியேறினாள்.
''ஹ்ம்ம் சரிம்மா இதான் விடு ஒரு நாள் நேரம் இருக்கும் பொழுது வா'' என அனுப்ப தங்கநிலா வேகமாக வெளியேறி அவளின் ஹாஸ்டல் வந்து சேர்ந்தாள்.

உப்ஸ் அது ரூபன் வீடா? இந்நேரம் கல்யாணம் முடிஞ்சு அவனின் மனைவியா இருந்தா இப்போ நான் அங்கயிருந்து இருப்பேன் ரூபி.

அங்கு அவனோ ''அம்மா அம்மா... என்னாச்சு மயங்கிட்டேன்டா கொஞ்சம் வீட்டுக்கு வா சொன்னிங்க'' என பதறி அடித்து வந்தான்.

''ஒன்னுமில்லைடா கொஞ்சமா மயங்கிட்டேன்.. ஒரு பொண்ணு வந்து வீட்டில் விட்டுட்டு போனாள்''
''பொண்ணா?''
''ஹ்ம்ம் ஐயோ பேரை கேட்டு கூட வச்சிக்கலை... ஒரு தேங்க்ஸ் கூட சொல்லலை''
''ஏன் ம்மா வீட்டுக்கு வந்து விட்டுட்டு உதவி செய்து போயிருக்கா ஒரு தேங்க்ஸ் கூட சொல்லையா... என்ன அதிசயம் நீங்க அப்படிப்பட்ட ஆளு இல்லையே''
''வந்தவ மகாலட்சுமி மாதிரி இருந்தா.... அவளை பார்த்து ...''
''போதும் இனி நான் சொல்லட்டுமா... அவளை என் பக்கத்தில் வச்சி கற்பனை பண்ணி பார்த்து இருப்பிங்க... ஏன்ம்மா இப்படி இருக்கீங்க'' என சலித்து பேசினான். 

''பிரகாஷ் அவளை நீ பார்த்தா இப்படி பேசி இருக்க மாட்ட, எப்பவும் உன்னை கல்யாண கோலத்தில் வச்சி ஜாதகம் வந்த பெண்ணை நினைச்சு ஜோடி பொருத்தம் பார்ப்பேன் எல்லாம் கொஞ்சம் கூட பிடிக்காது ஜோடியா சேர்ந்தே நிற்க கூட கற்பனை வராமல் தவிப்பேன்... ஆனா இன்னிக்கு வீட்டுக்கு வந்த அந்த பொண்ணை பார்த்து அப்படியே யோசிச்சேனா.. என்ன அதிசயம் அவளோட நீ மணக்கோலத்தில் பொருத்தமா இருக்க..'' என்றார். 
''அம்மா.'' என கத்தினான். 

''உண்மையை சொன்னா அவள் தான் உன்னை விட அழகா இருந்தா... அதுல அவள் பேரை கேட்க முடியலை'' 
''உங்களுக்கு வேற வேலையே இல்லை... எப்ப பாரு கல்யாணம் அது இது என்று''
''டேய் சிசி டிவி கேமராவில் அவள் இருப்பா போய் பார்த்து எங்க இருக்கா என்று விசாரிச்சுட்டுவாடா அவளை கல்....''

''நிறுத்தும்மா...... உனக்கு என்ன என் கல்யாணம் நடக்கணும் அவளோ தானே... பொறுமையா இருங்க என் அடுத்த பிறந்த நாள் வருவதற்குள் குடும்பஸ்தனா உங்க முன் நிற்பேன்.. ஆனா அதுக்காக ரோட்டில் எவ போனாலும் என்கூட கற்பனையில் கல்யாணம் செய்து வைக்காதிங்க...'' என்றே கத்திவிட்டு கிளம்பினான்.

பாக்கியமோ 'இப்போ என்ன சொன்னேன் என்று கத்திட்டு போறான். அம்மா வயசில் ஒருத்தர் நமக்கு ஹெல்ப் பண்ணினா நமக்கு அவர்களை பார்த்தா அம்மாவா தோணும்... ஒரு குழந்தையை பார்த்தா கல்யாணம் ஆனவங்க மனசில் நமக்கும் இப்படி ஒரு குழந்தை இருந்தா நல்லா இருக்கும் நினைப்பாங்க. அதே போல தானே இப்போ என் மனசு கல்யாண வயசில் இருக்கற பொண்ண பார்த்ததும் இவள் என் மகனுக்கு பொருத்தமா இருக்குமானு பார்க்கிறேன். ஏன் இதே ஒரு பொண்ணை பார்த்து நமக்கு வருகின்றவள் இப்படி இருக்கனும்னு சில ஆன் பிள்ளைக்கு தோணுமே அப்படி தானே இதுவும்.

அந்த பொண்ணை பார்த்தேன் ரூபனுக்கு நல்ல பொருத்தமா இருந்தாலே என்று மனசில் பட்டதை அவனிடம் சொன்னேன். என்னைக்கும் இல்லாமல் இன்னிக்கு இந்த குதி குதிச்சுட்டு போறான்... இவன் எப்ப கல்யாணம் செய்து இந்த வீட்டுக்கு மருமகள் ஒருத்தி வந்து, அதுக்கு பிறகு பேரன் பேத்தி எடுக்கறது... ஹ்ம்ம் எல்லாம் இவனை சொல்லணும் சொல் பேச்சை கேட்காம அவன் இஷ்டத்துக்கு வளர்ந்து இருக்கான்'' என புலம்பியபடி பாலை சூடுபடுத்த சமயலறையில் சென்றார் பாக்கியம்.
அவர்களுக்கு தெரியவில்லை வீட்டுக்கு வந்த பெண்ணின் பெயரை கேட்டு அவனிடம் சொல்லி இருந்தால் அவனே அவர்கள் பேச்சுக்கு மறுவார்த்தை இன்றி கல்யாணம் செய்ய ஒப்பு கொண்டிருப்பான் என்று.

தொடரும் 

பிரவீணா தங்கராஜ்  


 
Posted : June 23, 2026 6:34 pm
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 
  • அட ராமா ! கல்லை கண்டால் நாயைக் காணோம், நாயை கண்டால் கல்லை காணோம்... இப்படியே போயிட்டிருக்கே.

😀😀😀

CRVS (or) CRVS 2797


 
Posted : June 26, 2026 3:48 pm
(@Anonymous)
Posts: 0
 

🤣


 
Posted : June 27, 2026 10:45 am

Scroll to Top