முதலாம் சந்திப்பில்-12
அத்தியாயம்-12
இப்படியாக இரு நாட்கள் கழிய..
அன்று நிலா ரூபன் அறையில் அவன் வந்ததை கூட உணராமல் சுவாரசியமாக போனில் கேண்டி கிரஷ் விளையாடினாள்.
அவனும் என்கவுண்டருக்கு பதுங்கும் விதமாக, மெல்ல வந்த சுவடே தெரியாமல் சைலன்ஸர் கொண்ட கன்னை எடுத்து டேபிளில் வைத்தவன், மாற்று உடை எடுத்துக்கொண்டு குளியலறை சென்று, மாற்றி விட்டு வந்தான்.
அப்பொழுதும் அவள் தீவிரமாக விளையாட்டில் இருக்க, அவனோ எப்பொழுதும் போல அவளை ரசித்தவண்ணம் இருந்தான். அவள் விளையாட்டில் தோற்றதும் உதட்டை பற்களை வைத்து மெல்ல கடித்தாள்.
'ஐயோ அப்படி எல்லாம் கடிக்காதே டி. எனக்கும் உன் உதட்டை கடிக்கனும் போல தோன்றும்' என்ற அவஸ்த்தையோடு அவளை ஏக்கமாய் பார்த்தான்.
தன் அருகே நிழல் ஆடுவதை உணர்ந்து நிலா நிமிர அவன் தன்னை சமன் செய்தவாறு ''உட்கார் எதுக்கு எழுந்துக்கற'' என்று அவளுக்கு எதிரே சேரில் அமர்ந்தான்.
அவளோ ''எப்போ வந்திங்க சாரி நான் கவனிக்கலை'' என்றாள்.
''மேடம் ஏதோ சின்சியர் ஒர்க் பண்ணிட்டு இருக்கீங்க அதான் அமைதியா இருந்துட்டேன்'' என்று மேஜையில் இருந்த உலர் திராட்சை முந்திரியை எடுத்து மென்றான்.
'இவர் இங்க வந்து அறையில டிரஸ் மாற்றும் வரை நாம கவனிக்காமலா இருந்தோம். இவர் என்ன நினைச்சு இருப்பார்.. அய்யயோ அவர் இங்கயா டிரஸ் மாற்றினார்' என்றே விழி பிதுங்கினாள்.
அவள் தன் உடையை கவனித்து விழிக்க, ''முட்டை கண்ணை வச்சி முழிக்காத... நான் அங்க டிரஸ் மாற்றிட்டு வந்தேன் அதுவரை அப்படி என்ன விளையாடிட்டு இருக்க?'' என்றான் ரூபன்.
''என் ஃபிரண்ட் கேண்டிகிருஷ்ல என்ன விட 5 லெவல் பிஃபோர்ல இருக்கா. இந்த லெவல் கொஞ்சம் கஷ்டமாயிருக்கு. நாளைக்குள்ள அவளை விட அதிகமாக லெவல் ஜெயிச்சு காட்டனும்'' என்றாள் குழந்தையாக.
''நீ ஒரு நர்ஸ் இப்படி கேம் விளையாடிட்டு இருக்க?'' என்றான்.
அதற்கு நிலாவோ ''ஹாஸ்டல் இருக்கும் பொழுது நேரமே போகாது. அதான் இப்படி கேம் விளையாடி நேரத்தை ஓட்டுவேன். இப்பவும் அதேபோல. அம்மா வேறே இங்க இந்த ரூமில் இருக்க சொன்னாங்களா? இங்க என்ன செய்ய?'' என வருந்த அவளின் வருத்தம் போக்கும் விதமாக நெருங்கினான்.
''கொடு நான் விளையாடி வின் பண்ணி தர்றேன்'' என அவளின் அருகே அமர்ந்து கொள்ள ஒரே கட்டிலில் அருகருகே அமர்ந்து கொண்டு விளையாடியவனின் கவனம், அவளின் அருகாமையில் இருக்க, அந்த லெவல் தோற்று போனான்.
அடுத்ததும் விளையாடியும் தோற்கவும் நிலாவோ ''என்ன போலீசோ... ஒரு சின்ன கேம் அதை விளையாடி ஜெயிக்க முடியல.'' என போலியாக சலித்தாள். கூடுதலாக அவன் புஜத்தை உரிமையாய் தட்டினாள்.
அவனோ அவளது தீண்டலில், "என்ன சொன்ன" என்று விரட்ட அவளோ அந்த அறையிலே ஓட, அவனும் துரத்தினான்.
அவனின் கையில் ஒரு நேரத்தில் அகபட்டு கொண்டவள் அருகே இருந்த துப்பாக்கி எடுத்து கையில் வைத்து நின்றாள்.
''நிலா கன்னை கொடு.'' என பயந்தான்.
''நோ கொடுக்க மாட்டேனே.'' என்று விளையாட, அவனோ பயத்தில் அவளின் கையை பற்றி மேலே துப்பாக்கி செலுத்த, அவளது விரல் துப்பாக்கி பிடியில் கைப்பட்டு தோட்டாக்கள் சிதறின.
அது சைலன்ஸ்சர் செலுத்திய விதமாக இருக்க, துப்பாக்கி சப்தம் வெளியே கேட்காமல் போனது. அப்படியிருந்தும் அதில் இருந்து எழுந்த புகைவாசமும் மேலே இருந்து விழுந்த சுவரும், நிலா கண்ணில்பட, இதயம் துடிக்க மறந்து போனது.
ஒரு நொடிக்குள் நிகழ்ந்த நிகழ்வில் நிலா அதிர்ந்து போக, அடுத்த நொடி
ரூபன் நிலாவை அறைந்தான். அவளோ ஏற்கனவே பயத்தின் பிடியிலிருந்தவள் அவனது அடியில் மயங்கி அவன் மீதே சரிந்தாள்.
துப்பாக்கியை பாதுகாப்பாய் வைத்தவன், அவளை கட்டிலில் கிடத்தி, அங்கே இருந்த நீரை அவளின் மீதே தெளிக்க, இமையை உருட்டி கண்களை திறந்தாள்.
ரூபன் நிற்பதை கண்டு ''சாரி ரூபி. அதுல இப்படி கன் ஃபயர் ஆகும்னு நினைக்கலை.'' என அவனை கட்டி கொள்ள, அவனோ அவளின் அணைப்பில் ''சாரி நீலு... கன் உன் மேல பட்டுடும் பயந்து தான் அடிச்சேன்'' என்றான்.
இருவரின் அணைப்பில் நிலா சற்று நேரத்தில் தன்னிலையுணர்ந்து அவனிடமிருந்து விடுபட, அவளின் விலகல் புரிந்து அவனும் விடுவித்தான்.
''சாரி நீலு இந்த நிமிஷம் சொல்லலாமா இல்லையா எனக்கு தெரிலை... ஆனா எனக்கு வேற சந்தர்பம் அமையுமோ என்னவோ? இந்த சந்தர்பத்தை இழக்க விரும்பலை. ஏற்கனவே ஒரு வருஷம் பட்டது போதும். எனக்கு மறுபடியும் நேரம் கடத்த பிடிக்கலை.
நீலு உன்னை விரும்பறேன்.... இப்ப இல்லை என் மேல பெளர்ணமி நிலவொளியில, மேல வந்து மோதினியே அப்ப.. அப்பதிலருந்தே...
என்ன என் ஈகோவாளா அப்போ உன்னை பிடிக்கலை என்று சொல்லிட்டேன் அது கூட நீ எங்கயும் என்ன விட்டு, எங்க போக போற, அதுகுள்ள லவ் சொல்வேனு இருந்தேன். பட் சூழ்நிலை என்னை கேலியாக காட்டியதில் கோவத்திலே சுத்திட்டேன். இதுல உனக்கு வேற வரன் என் நண்பனையே பார்க்கவும், அது முடியறதா தவறா எண்ணி நார்த் கிளம்பிட்டேன்... இங்க வந்த முதல் நாளே உன்னை ஏர்போர்ட்ல பார்ப்பேனு நினைக்கலை நான் வேற ஒருத்தனின் மனைவி நீ, என்று தான் அப்பவும் நினைச்சு ஒதுங்கி போனேன். இங்க வந்த அடுத்த நாளே தெரிந்தது உனக்கும் என் பிரெண்ட்டுக்கும் கல்யாணம் ஆகலைனு.
அப்பவே உன்னிடம் திரும்ப காதல சொல்ல நினைச்சேன் ஆனா உன் அப்பா அம்மா தவறியது தெரிந்தது. கொஞ்ச நாள் போகட்டும்னு இருந்தேன்.
இப்ப என் வீட்டுக்கு, என் ரூமில் உன்னை அனுப்பி சூழ்நிலை இப்படி விளையாடும் என்று சத்தியமா நினைச்சு பார்க்கலை... ஸ்டீல் ஐ லவ் யூ நீலு...'' என்று சொல்ல அவளுக்கு அந்த நேரம் எதுவும் பேச நாவரவில்லை.
அவளுக்குள்ளும் காதல் உள்ளது தான். ஆனால் இன்று அவனை அணைத்து கொண்டு காதலை பகிர முடியாமல் போனது. கொஞ்ச நேரம் முன் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டாள்.
நிலா மனதில் தான் எந்த நிலையென புரியாமால் தவித்து, அவளை நிறுத்தி கேட்கவும் முடியாது நின்றான்.
அறையில் இருந்து வேகமாக வந்தவள் பேயறைந்தது போல அமைதியாக அமர்ந்தாள்.
அவளுக்குள் ரூபியை அணைத்தது மட்டுமே ஓடி கொண்டிருந்தது. அவனுக்குமே அவளை அணைத்தது மட்டுமே எண்ணி மகிழ்ந்தான்.
ரூபன் காதலை சொல்லி விட்டான். விதி ஆடும் இந்த கண்ணாமூஞ்சி ஆட்டத்தில் நிலா தான் ஒரு பதில் தந்து முடிக்க வேண்டும்,
எப்படியும் இன்றோ அல்லது நாளையோ காதலை சொல்லுவாள் என்றே ரூபன் நம்பினான். அதனால் இரவு உணவை முடித்து உறங்க சென்றான்.
நிலா அறைக்கு வருவாளென காத்திருந்தவன். அவள் அன்னை மடியிலே உறங்க கண்டு, அவர்களும் மகளது முகம் யோசனையில் இருக்க, அறைக்கு செல்ல சொல்லாமல், கடத்த, நிலா அன்னை மடியில் உறங்கினாள்.
சொல்ல போனால் உறங்குவது போல நடித்து இமையை மூடினாள். தாயின் மடியில் படுத்தவள் உறங்கிவிட்டாளென அன்னையர்கள் இருவருமே பேச துவங்கினார்கள்.
''என்ன அண்ணி நிலாவை ரூபன் அறைக்கு போக சொல்லலையா?'' என்று பாக்கியம் கேட்டார்.
''புத்தி பேதளிச்சு இருந்தப்பா சுலபமாக போக சொல்லிட்டேன்.... எப்ப நிலா கல்யாணம் ஆகலை என்று நினைவு தெரிந்ததோ, எனக்கு அந்த அறைக்கு போனு வற்புறுத்த முடியலை.... அதுவும் நிலா கொஞ்சம் யோசனையா இருந்தா'' என்றார் அபிராமி.
''என்ன அண்ணி... அப்பறம் எப்படி இவங்களுக்கு கல்யாணம் செய்ய முடியும்?'' என்றார் பாக்கியம்.
''இன்னிக்கு ஒரு நாள் நிலா என் மடியில் உறங்கட்டும் அண்ணி. வேற ஐடியா யோசிப்போம். கல்யாணம் ஆகாத பொண்ணை அங்க அனுப்ப மனசுக்கு சரியாபடலை'' என சொல்லிவிட்டார்.
உறங்குவதை போல இருந்த நிலாவோ அன்னைக்கு நினைவு நன்றாக தெளிந்துவிட்டது என நிம்மதி அடைந்தாள். ஆனாலும் இவர்கள் இப்படி நடிப்பார்களென்று எண்ணவில்லை... இந்த நடிப்பில் ரூபனும் சேர்த்தியென தவறாக எண்ணி கொண்டாள்.
தான் தாயின் நிலைக்குறித்து எப்படி கலங்கினாள். இவனோ காதல் என்ற வலைக்குள் தன்னை சிக்கவைக்க, தன் அன்னையும் சேர்த்தே இப்படி செய்ய வைத்து இருக்கின்றான் என்று அவள் மனம் எண்ணியது.
எதையும் எழுந்து கேட்க முடியவில்லை... அவளின் மனம் மிகவும் சோர்ந்து போனது. ஆனால் நாளை ஒரு முடிவெடுத்தபடி தான் உறங்கினாள்.
ரூபனோ தவித்து போனான். இப்ப என்ன தான் அந்த மண்டைக்குள்ள யோசிப்பாளோ? இவளை எல்லாம் எப்படி தான் சமாளிக்க போறேனோ... இந்த தாலி மட்டும் கட்டிட்டேனா போதும் மீதியை சமாளிச்சுடுவேன்.' என்றான் மனதோடு.
தொடரும்
பிரவீணா தங்கராஜ்
-
முதலாம் சந்திப்பில்-15 (முடிவுற்றது)
3 weeks ago
-
முதலாம் சந்திப்பில்-7
4 weeks ago
-
முதலாம் சந்திப்பில்-2
1 month ago
-
முதலாம் சந்திப்பில்-14
1 month ago
-
முதலாம் சந்திப்பில்-13
1 month ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 2 Online
- 329 Members
