Forum

முதலாம் சந்திப்பில்...
 
Notifications
Clear all

முதலாம் சந்திப்பில்-11

2 Posts
2 Users
0 Reactions
75 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#99]

அத்தியாயம்-11

பாக்கியம் அபிராமி இருவரும் என்ன பேசணுமோ எல்லாம் பேசி முடித்து உணவினை தாயார் செய்தனர்.
தயங்கி தயங்கியே சாப்பிட அமர அபிராமியோ ''என்ன தங்கம் நீ மாப்பிள்ளை சாப்பிட எடுத்து வைக்காமல் நீ சாப்பிட உட்காருற முதலில் மாப்பிள்ளைக்கு பரிமாறு'' என்றதும் நிலா ரூபனையும் அபிராமியையும் பார்க்க ரூபனும் ஒரு கணம் அதிர்ந்து பின்னர் மனதிற்குள் சந்தோசப்பட்டு கொண்டான்.

பாக்கியம் ''சாப்பாடு தானே ம்மா பரிமாறு...'' என சொல்லிவிட்டு அபிராமியிடம் ''அவளும் வேலைக்கு போறதால அலுப்புல சாப்பிட உட்கார்ந்தா சம்மந்தி'' என சமாளிக்க, அபிராமி ''ஓஹ்ஹோ'' என உண்ண துவங்கினாள்.

ரூபனுக்கு தயங்கி பரிமாற அவனோ 'இதுக்காக தானே காத்திருந்தேன் ரூபன் நீ கலக்கு டா.' என மனதில் அவன் அத்தை அபிராமிக்கு ஒரு நன்றியை சொல்லி கொண்டான்.

அடுத்து நிலாவும் சாப்பிட அமர்ந்தாள். நல்லவேளை இந்த அம்மா அவர் சாப்பிட்ட தட்டில் தான் சாப்பிடணும் என்று என்னை சொல்லல.. இல்லை அவ்ளோ தான் ஆனா அப்படி இருந்தாலும் என் ரூபி சாப்பிட்ட தட்டில் சாப்பிட்டு இருப்பேன்.

அபிராமி மாத்திரை விழுங்க அப்பொழுதும் உறங்காமல் பேசிக்கொண்டே இருக்க ரூபன் அவன் அலுவலக கேஸ் பைல்ஸ் பார்த்து, மூடிவைத்து உறங்க அறைக்கு செல்ல அபிராமியோ
''தங்கம் மாப்பிள்ளை தூங்க போயிட்டார் நீயும் போ அப்போ தான் காலையில் நீயும் வேலைக்கு போகணும்ல...'' என்றதும் நிலா அதிர்ந்தாள்.

 பாக்கியமும் அதிர்ந்தாலும் இந்த ஜோடியை சேர்க்க, நிலாவை பார்த்து ''போடா.. அம்மாவை நான் பார்த்துக்கறேன்....'' என கண்களில் தைரியம் மூட்டினர்.

''தங்கநிலா என்ன சும்மா போற குடிக்க தண்ணீர் பாட்டில் எடுத்துக்கிட்டு போ'' என்றதும் பாக்கியம் பக்கத்தில் இருந்த பாட்டில் எடுத்து கண்களில் என்ன செய்ய? என பரிதவிக்க அதனை புரிந்து கொண்ட பாக்கியம்
''நீ போ... அவங்க கொஞ்ச நேரத்தில் தூங்கிடுவாங்க அப்பறம் வா... ஒன்னும் பயப்பட வேண்டாம்'' என மென்குரலில் சொல்ல, நிம்மதியோடு ரூபன் அறைக்கு நுழைந்தாள்.

அப்பொழுது தான் குளித்து முடித்து ஷார்ட்ஸ் அணிந்து டவலில் முகத்தை ஒற்றி எடுத்து கொண்டே ரூபன் வர, நிலா அறைக்குள் வந்து கதவை சாற்றியது புரியாமல் பார்த்தான். 
''அ..அம்.. அம்மா... கல்யாணம் ஆகிடுச்சுனு உங்க ரூமுக்கு போ சொல்லி...'' என அவள் தடுமாற புரிந்தவன்
''ஹ்ம்ம்.. இதை எதிர்பார்க்கலை... உட்கார்'' என்றதும் திருதிருவென முழித்தவள் அமர தயங்கினாள். 

''ஹலோ எவ்ளோ நேரம் இப்படியே கதவு பக்கம் நிற்ப? உட்கார் ஹாலில் என்கூட உட்கார்ந்தல அப்படி தான் இங்கும்'''
''இல்.. இல்லை.. அப்போ நீங்க யூனிபார்ம்...'' என தயங்கி பேச அவன் ஆடையை கவனித்தான்.

வேற்று மார்பில் நீர் துளிகள் நெஞ்சில் பதிந்திருக்க ஷாட்ஸ், அணிந்து இருக்கும் நிலை உணர்ந்து டீ ஷர்ட் எடுத்து அணிந்தான்.
''இப்ப ஓகே வா?'' என்றதும் நிமிர்ந்தவள் அவனை முதல் முறையாக டீ ஷர்ட் அணிந்து பார்ப்பதால் அப்படியே பார்க்க கண்கள் இரண்டும் காதல் மொழி பேச தன்னிச்சையாக தலை அசைத்தாள்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருக்க, ரூபன் பேச வேண்டும் என்றெல்லாம் தோன்றாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான். 'ஹ்ம்ம் கல்யாணம் முடிச்சு என் ரூமில் இப்படி நெளிந்து கொண்டு இல்லாமல் சகஜமா இருக்க வேண்டியவ... அன்னிக்கு பிடிக்கலைனு சொல்லி இப்போ இந்த நிலையில் வந்துடுச்சு.... பட் காட் கிரேட் திரும்ப என்னிடமே கொண்டு வந்து விட்டிருக்கார். இனி அதை எப்படியாவது நல்லவிதமா முடிச்சு கல்யாணத்தில் நிறுத்தணும்' என கணக்கிட்டான். 

அவளோ ''சாரி அம்மா இப்படி எல்லாம் பண்ணுவாங்க என்று எதிர்பார்கலை... அவங்க நிலைமை புரிஞ்சு இருந்தாங்க என்றால் நான் உடனே உண்மை சொல்லிடறேன். அதுவரை மன்னிச்சுடுங்க....'' என முடிக்க ரூபன் நிமிர்ந்து , ''பரவாயில்லை... '' என்றவன் முடிக்க தங்கநிலா அமைதியாக அவ்வறையின் ஒவ்வொரு இடமாக பார்த்து பார்வையை திசைதிருப்ப, என்ன நினைத்தானோ அங்கிருக்கும் இரண்டு ஜன்னல் கதவையும் திறந்தான்.
ஜன்னல் கதவை திறந்ததும் காற்று வேகமாக உள்ளே நுழைந்தது. தங்கநிலா தயங்கி தயங்கி
''தேங்க்ஸ்....'' என்றாள்.

இது எதுக்கு என்பது போல பார்வை பார்க்க ''அது நீங்க அம்மாவுக்காக அப்ப கூடவே இருந்திங்க ஹாஸ்டல் வந்து விட்டுட்டு போனிங்க.. அப்பறம் ஹாஸ்டல் இருந்த பொழுது பிரச்சனை என்றதும் உடனே வந்திங்க... இப்போ இங்க கூட்டிட்டு வந்ததும் இல்லாமல்.. அம்மாவுக்காக என்னை இங்க சகிச்சுக்கிட்டு இருக்கிங்க.. எல்லாத்துக்கும் தேங்க்ஸ்'' என்றாள் குனிந்தபடி.
சகிச்சுக்கிட்டு என்றதும் அவனுக்கு கோவம் வர முறைத்தவன் அவளை திட்ட பார்க்க அவளின் சேலையோ காற்றில் அசைந்து இடையை அவனுக்கு காட்டி கொடுத்தது.

கோவம் எல்லாம் மறந்து அதனை ரசித்தவன் பிறகு நிலைமை உணர்ந்து திரும்பினான்.
கொஞ்ச நேரம் பேசாமல் போக அம்மா தூங்கிருப்பாங்களா?'' என கவலையோடு கேட்டதும் ரூபனுக்கு அவளின் மனம் புரிந்தது.

 திருமணம் ஆகாத ஒருவனோடு ஒரே அறையில் எவ்வளவு நேரம் தான் அவளும் இருப்பாள்.
''கொஞ்சம் இரு வர்றேன்." என வெளிய வந்து பார்க்க அங்கே பாக்கியமும் அபிராமியும் உறங்கி கொண்டிருந்தார்கள்.
சிரித்தபடி அறைக்கு வந்தவன் "அவங்க இரண்டு பேருமே தூங்கிட்டாங்க... நீ இங்க இருப்பதை மறந்து...'' என்றான். 

''நான் அப்போ வர்றேன்'' என நிலா வெளியேறினாள்.
'வர்றேன் என்று சொல்லிட்டு போகின்றாள் இன்று சம்பிரதாயமாக.. ஆனால் நிஜமாவே எனக்கானவளா உன்னை இதே அறைக்கு மனைவி ஸ்தானம் கொடுத்து உள்ளே வரவைப்பேன்... அதுக்கு காலம் ரொம்ப தொலைவில் இல்லை நிலா' என ஏக்கமாய் பார்வையிட்டு அனுப்பி வைத்தான். 

அதிகாலை எழுந்தவள் நெளிந்து பார்க்க பாக்கியம் சமைத்து கொண்டு இருந்தார். முகம் அலம்பி ப்ரெஷ் செய்து ''சாரி ஆன்ட்டி அது அசதியில் தூங்கிட்டேன்...''
''நைட் அம்மா தூங்கியதை சொல்ல மறந்துட்டேன்மா நானும் தூங்கிட்டேன்''
''ஹ்ம்ம் பார்த்தோம் ஆன்ட்டி அதான் நானே வெளியே வந்து தூங்கிட்டேன்''
''உன் அம்மா எதிர்க்க என்னை ஆன்ட்டி என்று கூப்பிடாதே சரியா?'' என்றார்  பாக்கியம். 
''சரிங்க அத்தை..'' என்றதும் பாக்கியம் சிரிக்க கூடவே நிலாவும் கலந்தாள்.

காலையில் எழுந்த அபிராமி குளித்து முடித்து அனிச்சையாக குங்குமம் எடுத்து வைக்க செல்ல சட்டென நினைவு வர பதறிவிட்டார் அபிராமி. பின்னர் அங்கிருந்த விநாயகர் படத்தில் வைத்து விட்டு மகளை கண்டார்.
மெல்ல மெல்ல பூமி பிளவு கொள்வதாய் தோன்றியது அபிராமிக்கு.... ஏன் என்றால் தங்கநிலா கழுத்தில் சின்ன மெல்லிய செயின் மட்டுமே இருந்தன. அப்படியென்றால் தாலி கொடி எங்கே? என்று அவளிடம் கேட்காமல் அமைதியாக நடப்பதை கண்டார்.

எழுந்ததிலிருந்து தன்னையே சுற்றி இருக்கும் மகள்.. அறையில் அவளின் கிளிப் சீப், பொட்டு என்று ஒன்று கூட இல்லை.... எல்லாம் ஒரு திருமணம் ஆகாத இளைஞன் அறை போல இருப்பதாக தோன்றியது. நேற்று நடந்த நிகழ்வை யோசித்து பார்த்தார் அபிராமி... அப்போ நேற்று வரை நிலா ஹாஸ்டல் தான் இருந்திருக்கா? 

இன்று எனக்காக இங்கு வந்திருக்கா... அப்போ இவங்களுக்கு திருமணம் ஆகவில்லையென அமைதியாக, அவளிடம் கேட்க முடியாமல் இருந்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் புரிந்தது. அவள் தனக்கு உடல் நலம் சரியில்லையென எதையோ மறைக்கின்றாள்
எப்படியும் முழு உண்மை நிலா தெளிவாக கூற மாட்டாள் பாக்கியம் மட்டுமே சொல்ல வைக்க வேண்டும்...அதற்கு மகள் அலுவலகம் செல்ல தூரிதப்படுத்தினர்.
''நீயும் மாப்பிள்ளை கூடவே கிளம்பு நிலா... என் ரிப்போர்ட்ஸ் எல்லாம் உங்க டாக்டர்க்கிட்ட காட்டு அப்படியே பேசிட்டு வா..'' என்றார். 

''இல்லை மா உங்களை இப்போ தானே பார்த்தேன் உங்க கூடவே இருக்கேன்'' என்றாள் மகள்.
''இல்லை நீ போய்ட்டு வா...'' என பிடிவாதம் பிடிக்க நிலா கிளம்பினாள்.

 அபிராமி சொல்லியது போல அவர்கள் ரிப்போர்ட் எல்லாம் எடுத்து கொண்டு கிளம்ப, ஆனால் குளிப்பதற்கு ரூபன் அறைக்கு அல்லவா செல்ல வேண்டும் என முழித்தாள். 

''போ மாப்பிள்ளை ரெடி ஆகறதுக்குள் கிளம்பு அப்போ தானே உன்னை அழைச்சுட்டு போவார்'' என்று சொல்லியதும் அறைக்குள் நுழைந்தாள்.
அவளை பார்த்ததும் ஏதோ காரணம் என புரிந்து ''என்ன ஆச்சு?'' என்றான் ரூபன்
''அது அம்மா உங்களோடவே வேலைக்கு போக சொல்லிட்டாங்க.."
'' ஓகே நோ ப்ரோப்ளம்...'' என்றதும்
''நான் குளிக்கணும்'' என்றதும் நிமிர்ந்தவன் அறையின் குளியலறையை பக்கம் கையை கட்டினான்.
''அங்க டிரஸ் சேஞ்சு பண்ணிக்கலாம் ஸ்பேஸ் இருக்கு இல்லை நான் வெளியே போகணும் என்றாலும் ஓகே'' என்றான்.

குளியலறையை எட்டி பார்த்து விட்டு "இல்லை டிரஸ் மாத்தறதுக்கு இடம் இருக்கு இதே போதும்." என சோப்பை எடுத்தாள். 

'அதானே பார்த்தேன் எங்கட நம்ம சோப்பு யூஸ் பண்ணுவாளா? என அங்கலாய்க்க, அவளோ டவல், ஆடை எடுத்து கொண்டு கிளம்பினாள்.
பதினைந்து நிமிடம் கழித்து வெளியே வர அதற்கு முன்னதாகவே அவளின் வாசம் அவனின் மீது தாக்கியது.

'இப்படி எல்லாம் நடக்கும் என்று கனவுல கூட நினைக்கலை... கடவுளே இதே ரீதியில் போச்சு அவ்ளோ தான்.' என புன்னகைக்க முயன்றான்.
அவளோ தலை வாரி முடித்து நின்றாள்.

''தேங்க்ஸ் ரூபன்... அப்பறம் அம்மா ஏதாவது பேசினா மன்னிச்சுடுங்க'' என அறை கதவை திறந்தாள்.
அபிராமி இருவரையும் இம்முறை ஆராய நிலா நெற்றியில் குங்குமம் இட சொல்ல நிலா கொஞ்சம் தயங்குவது கண்ணில்பட்டது. ரூபன் அவர்கள் சொல்லியதில் பகீரென உணர்ந்தாலும் அவளுக்கு குங்குமம் இட்டான். நெற்றில் இட சொல்ல ''வேண்டாம் அத்தை அவள் வேலைக்கு செட் ஆகாது" என்றான்.  

இருவரும் நடிப்பதில் போகட்டும் பிறகு பாக்கியத்திடம் கேட்டு கொள்வோம் என அமைதியாக சாப்பிட்டார்கள்.
பின்னர் இருவருமே கிளம்பினார்கள். இருவரும் சென்ற பின்னர் பாக்கியத்திடம் வந்து நின்றார் அபிராமி.

''எதுக்கு இப்படி குடும்பமா நடிக்கறிங்க? எனக்கு திரும்ப ஏதாவது ஆகிடுமென்றா?'' என்று கேட்க புரியாமல் பாக்கியம் விழித்தார். 
''என் மகளுக்கு இன்னும் திருமணம் ஆகலைனு புரிஞ்சுக்கிட்டேன். ஆனா ஏன் நடிக்கறிங்க?'' என்றார். 

''அபிராமி உங்களுக்கு எல்லாம் நினைவுயிருக்கா? உடல்நிலை ஏதும் பாதிப்பு இல்லையே?'' என்று பதற அதே சமயம் தாமஸ் வந்து நின்றார்.
''வாங்க அண்ணா... என இருவரும் வரவேற்றார்கள்.

''எப்படி இருக்க அபிராமி... இப்படி ஒரு அதிசயம் நடக்கும்னு நம்ப முடியலை ஆனா ரொம்ப நிம்மதியா இருக்கு...'' என்றார். 
''அண்ணா என் மகளுக்கும் இவங்க பையனுக்கும் திருமணம் நடக்கலை தானே?'' 
''இல்லைம்மா'' என்று சொல்ல மனம் வருந்தினாள். கொஞ்சம் கவலையோடு கண்ணீர் துடைத்து பாக்கியத்திடம்
''என் மகள் நடிக்கறா அது எனக்காக. உங்க பையன் ஏன் நடிக்கிறார்?அவர் உண்மை சொல்லிட்டு போயிட்டே இருக்கலாமே.. ஏன் சகிச்சுக்கணும்'' என அபிராமி பாக்கியத்திடம் கேட்டார்.

''ஏன்னா ரூபன் பிரகாஷ் நிலாவை விரும்பறான்... ஆனா யாரிடமும் சொல்லலை'' என்று தாமஸ்ஸிடம் இருந்து பதில் வந்தது.
''அண்ணா நீங்க சொல்றது உண்மையா ரூபன் நிலாவை விரும்பறானா?'' என பாக்கியம் சந்தோஷமாய் கேட்டார்.

''ஹ்ம்ம் எனக்கே இன்னிக்கு இப்போ வரும் பொழுது தான் தெரியும் சிவா தான் சொன்னான். ரூபன் ஊரில் இருந்து வந்த அன்று போயி பேசியிருக்கான். அப்போ ரூபனே அவனிடம் சொல்லிருக்கான்'' என்றார் தாமஸ்.

''ஏன் முன்ன பிடிக்கலை என்று சொன்னான்."
''அது ஒன்றுமில்லை அபிராமி அவன் பேப்பரில் வந்த செய்தி பார்த்து நிலா சிரிச்சிருக்கா அதை பார்த்து அப்போ கடுப்பாகி அப்படி பேசிட்டு இருப்பான். இப்போ லவ் என்று சொல்றான் ஏன் பாக்கியம் உங்கிட்ட எதுவும் சொல்லலையா?''
''இல்லை அண்ணா ஆனா அவன் குணத்துக்கு எதிரா தான் இருக்கான். இல்லை என்றால் ஒரு வயசு பொண்ணு கூட்டிட்டு வீட்டுக்கு வருவானா? இல்லை நேற்று தனியா அபிராமி சொல்றாங்க என்பதுக்காக அவள் அறைக்கு அனுமதிச்சு இருப்பானா? நீங்க சொல்ற மாதிரி அவனுக்குள் லவ் இருக்கு. ஆனா நிலா மனசில் என்ன இருக்குனு தெரிலை'' என்றார் பாக்கியம்.

''அவள் மனசில் கொஞ்சம் மாப்பிளை பற்றி நல்ல அபிப்ராயம் இருக்கும் இல்லை என்றால் நான் புத்தி இல்லாமல் அவர் அறைக்குப்போ என்றதும் தயங்கி போயிருப்பாளா?'' என்றார் அபிராமி.
''இப்போ நீங்க என்ன சொல்லிறிங்க அப்போ நேற்று நைட் பேருமே ஒரே அறையில் இருந்தார்களா?'' என்றார் தாமஸ். 

''அச்சச்சோ இல்லை அண்ணா... அவன் கொஞ்ச நேரத்தில் வெளிய வந்து பார்த்திருப்பான் போல அதை நிலாகிட்ட சொல்லி இருப்பான். நிலா வெளியே வந்து எங்களோட இருந்தா காலையில் அபிராமி எழுந்ததும் இப்ப தான் எழுந்ததா காட்டிகிட்டா'' என்றார் பாக்கியம்
''ஹ்ம்ம் அப்போ அபிராமிக்காக ஒருத்தர் ஒருத்தர் உதவி செய்யறாங்க?'' என்றார் தாமஸ். 

''ஏன் அண்ணா இவங்களை என்ன செய்ய மறுபடியும் கல்யாணம் செய்ய பேச்சு எடுக்கலாமா?''
''ஹ்ம்ம் எடுத்து என்ன செய்ய அப்போவும் இல்லை என்றே சொல்லுவாங்க.. நீங்க பேசாம அவங்க வாய்ல காதலை சொல்ல வைங்க'' என தாமஸ் ஆலோசனை கூறினார். 

''அது எப்படி அண்ணா அவங்க வாயால சொல்ல வைக்கறது?'' என்று பாக்கியம் கேட்க, தாமஸ் அபிராமியை பார்த்தார். 

''இப்போ அவங்க உனக்கு நினைவில்லைனு நாடகமாடுறாங்க அதையே கண்டினியூ பண்ணுங்க. எப்படி ஒரே அறையில் தினமும் நடிக்க முடியும்? ரூபன் அதுக்கு ஒரு முடிவுக்கட்ட செய்வான் தானே?'' என்றதும் பாக்கியம் இது சரி தான் என தலையை அசைக்க அபிராமி யோசித்தார். 

''என்ன இருந்தாலும் அவள் பெண்.'' என தயங்க பாக்கியம் முன் வந்து
''எந்த சூழ்நிலை என்றாலும் என் மகன் முறை தவற மாட்டான் அண்ணி... நம்புங்க'' என்றதும் அபிராமியும் நாடகத்தில் இணைந்தார்கள்.

பாக்கியம் அபிராமி தாமஸ் மூவருக்கும் தங்கள் காதல் தெரிந்து விட்டதை அறியாமல் ரூபன் இதில் தானாகவே நடிக்க ஆரம்பித்தான். என்ன நிலா தான் எதையும் அறியாமல் 
இதை எல்லாம் அறியாமல் சித்திக்கிடம் நிலா தாயின் ரிப்போர்ட் பார்த்து அவன் கூறுவதை கேட்டாள்.

அதில் அவளுக்கு கவலையே தந்தது. அன்னைக்கு தானாக நினைவு வந்தால் மட்டுமே தீர்வு உண்டு என்று சொல்லி, மருந்து மாத்திரை மட்டும் அதே எடுத்துக்கொள்ள சொன்னார்.
மாலினியிடம் ரூபன் வீட்டுக்கு வந்து இருப்பது வரை சொல்லி முடித்தாள். அதையெல்லாம் கேட்டு முடித்த மாலினிக்கு மனதில் ஒன்று தோன்றியது. 

 நிலா-ரூபன் உறவு ஏதோ ஒரு ஜென்மத்தில் பயணிக்கின்றது என்பது மட்டுமே. மாலினிக்கு புரிந்தாலும் நிலாவிடம் சொல்ல தயங்கினாள். அவளே தாயின் நலத்தில் கவலையில் இருப்பதால்...

ரூபனுக்கு மனமெல்லாம் சந்தோஷத்தின் வாசம் வீசியது. நிலா பணி முடித்து தனது வீட்டிற்கு வருவாள் என வழக்கத்துக்கு மாறாக வீடு வந்து சேர்ந்தான் ரூபன் பிரகாஷ்.
பாக்கியம் நம்ப முடியாமல் தான் பார்த்தார். இல்லையா பின்ன எப்பொழுதும் பணிக்காரணமாக மணி பதினொன்று வந்து சேரும் அவன் இன்று எட்டுக்கே வந்து நிற்க.
நிலாவோ ஏழுக்கு வந்து தாயின் அரவணைப்பில் கட்டு உண்டு இருந்தாள். பாக்கியத்திடம் சிறுசிறு உதவி செய்து முடிக்க ரூபன் வந்ததும் இடம் தெரியாமல் பதுங்கினாள். 

பாக்கியமும் அபிராமியும் ஒருவர் ஒருவர் பார்வையில் பரிமாறி கொண்டார்கள்.
''அண்ணி என் பையன் ஸ்பீடா இருக்கான்... எப்பவும் பதினொன்று வருபவன் மருமகளால் எட்டுக்கே வந்திருக்கான்.. மருமக தான் சரியில்லை... பாருங்க பதுக்கி போயிருக்கா.'' என்றார் பாக்கியம். 
''அதுக்கு நான் என்ன செய்ய அண்ணி. அவள் சுபாவம் அப்படி... என்ன இருந்தாலும் மாப்பிள்ளை ஆம்பள. என் பொண்ணு கூச்சம் பயம் எல்லாம் இருக்குமே''
''ஐயோ அண்ணி இப்படி இரண்டும் இருந்தா எப்போ நாம கல்யாண சாப்பாடு சாப்பிடறது. பேரன் பேத்தி எடுக்கறது.? உங்களுக்கு எப்படியோ எனக்கு என் பையனின் வரிசை பார்த்துட்டு தான் நிம்மதி..அதுக்கு குயிக்கா கல்யாணத்தை முடிக்கணும். இதுங்க அவங்க காதலை உணர்ந்து அதுக்கு பிறகு ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லுவாங்கனு எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு வருஷத்தை வேஸ்ட் பண்ணின ஆட்கள் இவங்க. நம்ம அவங்களை பண்ற டார்ச்சர்ல அவங்களாவே லவ் சொல்லி நம்மகிட்ட கல்யாணம் ஏற்பாடு சொல்ல வைக்கணும்'' என்றதும் அபிராமி அரை மனதாய் ஒப்புக்கொண்டார்.

மெல்ல நடந்து நிலாவிடம் ''மாப்பிள்ளை வந்துட்டார் அவருக்கு தேவையானதை எடுத்துக்கொடு இங்க வந்து நிற்கற'' என்றார் அபிராமி.  அன்னை சொன்னதால் திருதிருவென முழித்து நிலா ரூபன் அறைக்கு  சென்றாள்.
கதவை தட்ட போக அபிராமி பார்ப்பதை அறிந்து தட்டவும், முடியாமல் கதவை திறந்தாள்.

கடவுளே ரூபன் நேற்று இருந்த கோலம் எல்லாம் இல்லாமல் நார்மலா இருக்கனும் என்ற வேண்டுதலோடு சென்றாள்.
நிலா உள்ளே வர மாட்டாள் என கதவை திறந்து ரூபன் வரவும், நிலா அபிராமியை பார்த்தபடி கதவை திறக்க, இருவருமே மோதி நின்றார்கள்.

 நிலாவுக்கு தான் இதயம் வெளியேறிவிடும் அளவும் பயம் கவ்வியது. ரூபன் தவறாக நினைத்து கொண்டாலும் சரி, இல்லை பாக்கியம் ஆன்ட்டி தவறாக எண்ணினாலும் தனக்கு அசிங்கம் என பதறினாள்.

ரூபனோ ''சாரி நிலா பார்க்கலை.'' என்றவன் அபிராமி இருப்பதை அறிந்து ''கொஞ்சம் தண்ணீர் வேணும் நிலா'' என அதிகாரமாய் உரிமையாய் ஏவல் செய்தான்.
ரூபன் மனம் தவறாக எண்ணவில்லை என்ற நிம்மதியோடு கிச்சன் சென்றாள். பாக்கியம் பார்க்க அவனோ
''அவன் வேணுமின்னா இடிச்சு இருக்க மாட்டான்.. கவனிக்கலை'' என்றே சொன்னதும் முழு நிம்மதியை அடைந்தாள். 

''நானும் பார்த்து நடந்து இருக்கனும் அத்தை அம்மா பார்க்கறாங்க என்ற பயத்தில் முன்னால பார்க்காம கதவை திறந்துவிட்டேன். தப்பு என் மேலயும் தான்'' என நிலா நீரை எடுத்து கொண்டு போனாள்.

அவள் அத்தை என்றதுமே பாக்கியம் மனம் குளிர்ந்தது. 'சே இந்த நிலாவை ஏன் இப்படி சோதிக்கற... என் பையன் கூடிய சீக்கரம் காதலை சொல்லிடனும். இப்படி அவர்களை பார்க்க கடினமா இருக்கு' என பெருமூச்சு கொண்டார்.

ஹாலில் வந்த பாக்கியம் ஏன் டா வெளியே எங்காவது போறியா?'' என்று  கேட்டார். 
''இல்லைம்மா'' என்றான் ரூபன். 

''அப்போ டீ ஷர்ட் போட்டு இருக்க?'' என்றதும் நிலாவை பார்க்க பாக்கியத்திற்கு புரிந்து போனது. இவள் எதிரில் ஷர்ட் போடாம இருக்க கூடாதுனு போட்டு இருக்கானா? நிலாவும் அவனை மெச்சுதலாக எண்ணினாள்.

அபிராமி பாத்ரூம் செல்ல பாக்கியம் இருவரிடம் வந்து ''பிரகாஷ் நிலா அம்மா உங்க அறையில் சென்று நிலா துணியில் சேலை எடுக்க போனாங்க அப்போ உன் திங்க்ஸ் மட்டும் பார்த்து அவளுடையதை கேட்டாங்க பீரோவில் இருக்குனு சமளித்துட்டேன். அதனால அவளோட டிரஸ் உன் பீரோவில் வச்சிடு... அப்பறம் காலையிலே நிலா கழுத்தில் தாலி என்ன மாடல்னு கேட்டாங்க. அதனால இந்த செயின் அவங்க வரதுக்கு முன்ன அவ கழுத்தில் போடு'' என்று நீட்ட ரூபன் குழம்பி போனான்

 நிலாவோ சிலையாக மாறி போனாள். ஆனால் அபிராமி கதவை திறக்கும் சப்தம் கேட்க இருவருமே சுதாரித்து கொண்டார்கள்.

ரூபன் அவசரமாக அந்த செயின் எடுத்து நிலா கழுத்தில் அணிவித்தான். அணிவித்தவன் அப்படியே அவளையே பார்க்க அவளோ அப்படியே அவனை தான் இமைக்காமல் பார்த்தாள்.
கொஞ்சம் ஏதோ உணர்வுக்கு உயிர் கொடுத்த நிம்மதியில் பாக்கியம் நகர அபிராமியும் அமைதியாக கிச்சனுக்கு போனார்.
ரூபனோ அத்தைக்கு டவுட் வர கூடாது என்று நிலாவை விலகி விட்டு டிவியில் கண்களை பதித்தான். 

நேராக நிலா அறைக்கு சென்று அவனின் உடமைக்கு பக்கத்தில் இவளது சேலையினை சிலது எடுத்து வைத்தாள்.
கடவுளே அம்மாவுக்கு விரைவில் நினைவு திரும்பணும்... ரூபன் அருகாமை இருந்து பழகிட்டேன் என்றால் என்னால அப்பறம் தனித்து வாழ முடியாது. அவன் அருகாமை மனசு ஏங்க ஆரம்பிக்கும் என வேண்டினாள். ஏற்கனவே அவனின் அருகாமையில் மனம் படாத பாடுபட்டு கொண்டிருப்பதை உணராமல்....

இரவு உணவையும், நேற்று போலவே ரூபனுக்கு நிலாவே பரிமாற சொல்லிட, அவள் வேறுவழியின்றி பரிமாறினாள். அடிக்கடி ரூபன் பார்க்கும் பார்வை அவள் கவனிக்காமல் போனாள். 

தொடரும் 

பிரவீணா தங்கராஜ் 


 
Posted : June 23, 2026 6:46 pm
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

அடப்பாவிங்களா ! இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்குறதுக்காக என்னவெல்லாம் நாடகம் போட வேண்டியிருக்குது.

 

😃😃😃

CRVS (or) CRVS 2797


 
Posted : June 26, 2026 9:29 pm

Scroll to Top