Forum

முதலாம் சந்திப்பில்...
 
Notifications
Clear all

முதலாம் சந்திப்பில்-10

2 Posts
2 Users
0 Reactions
108 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#98]

அத்தியாயம்-10

          அபிராமி வேறு ஓயாமல் கத்தி கொண்டிருக்க ''அம்மா கொஞ்சம் அமைதியா இருங்க ப்ளீஸ்... அவர் வருவார்'' என நிலா எடுத்துரைக்க ''இப்போ இப்போ வர சொல்லு மாப்பிளையை அப்போ தான் நம்புவேன்'' என விடாது புலம்பினார். 

''அவர் வந்துட்ட அமைதியா இருப்பியா?'' என்று நிலா கேட்க, 

''அவர் வந்துட்டா நம்பறேன்... சொல்றதை கேட்பேன்" என்றார். இதில் ஹாஸ்டலில் புகார் அதிகமாக, நிர்வாகி வேறு நிலாவிடம் வந்து
''நிலா உன் நிலைமை புரியுது பட் இங்க இருக்கறவங்க எல்லோரும் ரொம்ப திட்டறாங்க... உங்க அம்மாவை ஏற்கனவே இருக்கற ஆசிரமத்துக்கே அனுப்பலாமே'' என்று ஆலோசனை கூறினார். 

நிலா உக்கிரமாக பார்த்து விட்டு போனை எடுத்தாள். தாமஸ் அங்கிள் ஊரில் இல்லை என்றதும் அடுத்து ரூபனுக்கு அழைத்தாள். 
அவனும் உடனே எடுத்து ''சொல்லு" என்றான்.
''ரூபி நான் நிலா.''
''ஹ்ம்ம் தெரியுது சொல்லு நிலா என்றான்.
''அது அம்மா...''
''என்னாச்சு எதாவது பிரச்சனையா?'' என்றான். 

''ஹ்ம்ம் அம்மா தூக்கத்தில் அலறி... என்னென்னவோ பேசறாங்க, கத்தாறாங்க.. இங்க ஹாஸ்டல்ல எல்லோரும் அவங்களை கூட்டிட்டு போக சொல்லி ஒரே நச்சரிக்கறாங்க... என்ன செய்ய தெரிலை... தாமஸ் அங்கிள் ஊரில் இல்லை எங்க போறதேன்னு தெரிலை... அம்மாவ எங்கயாவது அனுப்ப சொல்லி பேசறாங்க. எனக்கு கஷ்டமா இருக்கு நான் தாமஸ் அங்கிள் வரும் வரை.. எங்க.. யாவது...'' என்று திணறி பேசினாள். 

''உன் திங்க்ஸ் பேக் பண்ணி இரு வர்றேன்'' என வைத்தான்.
''ம்மா இங்க பாரு அவர் வர்றார்.. இப்படி கத்தாதே...'' என்றதும்
''என்னது மாப்பிள்ளை வர்றாரா..அப்ப சரி." என அமைதியின் உருவமாக இருந்தார்.

நிலாவுக்கு என்ன செய்ய என்று புரியவில்லை... ரூபனை என் கணவனாக அல்லவா அம்மா நினைக்கறாங்க... அப்பா இறந்ததை கூட ஏற்றுக்கறாங்க ஆனா ஏன் எனக்கு கல்யாணம் ஆகலை என்றதை ஏற்றுக்க மாட்றாங்க..'' என காத்திருக்க போலீஸ் வண்டி வந்து நின்றது.

காக்கி உடையில் கம்பீரமாக உள்ளே வந்தான். அவனை பார்த்ததும் தான் அபிராமி நிம்மதி அடைந்தார்.

''மாப்பிள்ளை இது என்ன இடம் ஏன் என் பொண்ணு உங்க கூட தங்கலை." என்றார். 

''நீங்க வருவதால் வீடு நீட் பண்ணலை அத்தை அதான் கொஞ்ச நேரம் இங்க இருக்க சொன்னேன். இதோ நம்ம வீட்டுக்கு போகலாம்'' என சமாளித்து சொல்ல தலையை தலையை ஆட்டி கிளம்பினார் நிலா அன்னை.

''அம்மாவுக்கு போன் செய்துட்டேன் நிலா அவங்க உங்களை வரவேற்க இருக்காங்க நாம வீட்டில் போய் பேசிக்கலாம்'' என்றதும் சரியென தலையசைத்து கிளம்பினார்.

இதுவரை அமைதியாக இருந்த ஹாஸ்டல் பெண்மணி ''அப்போ தங்கநிலா கல்யாணம் ஆனவளா? ஏன் இங்க தங்க வச்சிங்க?'' என கேட்டதும் ரூபனோ நிலா அங்கில்லை என்றதும் ''கல்யாணம் ஆனவள் இல்ல.. ஆகா போறவ.'' என் சொல்லிவிட்டு கண்ணாடி அணிந்து கிளம்பினான்.

வண்டியில் பலத்த அமைதி அபிராமிக்கு ரூபனை பார்த்ததும் நிறைவை தர மகளையும் அவனையும் பார்த்து பூரித்தபடி வந்தார்கள்.
ரூபன் வீட்டின் கேட் அருகே பாக்கியம் வரவேற்க தயாராகி நின்றார். தனது மகன் முன்பு தாமஸ் அண்ணா பார்த்த பெண்ணோடு, வீட்டுக்கு அவன் அம்மாவோடு வருகின்றான் என்றதும் அவர்களுக்குள் ஒரு மகிழ்ச்சி மகன் சாமானியமாக ஒரு பெண்ணை அழைத்து வர மாட்டான்.

அப்போ அந்த பொண்ணு பிடிச்சிருக்கா? எதுக்கோ அந்த பெண் வரட்டும் நேரில் இரண்டு பேர் ரியாக்ஷன் பார்த்தாலே கண்டுபிடிச்சுடலாம்.
ரூபன் இறங்கி கையை நீட்ட நிலா தயங்கியே கையை கொடுத்தாள். பின்னர் இறங்கி தாயை அழைத்து வந்து கேட்டின் அருகே போக, பாக்கியம் முகம் மலர்ந்து இருந்தது.

'இந்த பொண்ணா? இவளை தானே அன்னிக்கு நான் இவனிடம் பேசினேன். அப்போ அவன் முறுக்கிக்கிட்டான். சே அவன் அன்னிக்கு இவளை பார்க்கவே இல்லை... பேர் என்ன சொன்னான் தங்கநிலா.' என்றெண்ணி "வாம்மா....'' வாங்க...'' என இருவரையும் அழைத்து உள்ளே சென்றார்கள்.

தங்கநிலாவுக்கு அன்று வந்துவிட்டு ஓடிய நினைவு வந்தது. இருந்தும் தாயின் நிலை அதற்கு மேல் யோசிக்கவைக்கவில்லை.
''ம்மா அது நிலா.. அவங்க அம்மா அபிராமி... போன்ல...''
''புரியுது போ.. இனி நான் பார்த்துக்கறேன்... வாங்க எப்படி இருக்கிங்க'' என அபிராமியை தாங்கி கொண்டே அழைத்து வர, நிலா பாக்கியத்தை பயந்து  பார்த்தாள்.

இவங்க நல்லவங்க பட் என்னை இப்படி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டார் அவங்க அதுக்கு என்ன நினைச்சுக்கிட்டாங்க தெரியலை... அவங்களுக்கு என்னை நினைவு வரலையா? என பம்மினாள். 

''உட்காரு நிலா... அன்னிக்கு மாதிரி ஓடிடமாட்டல இரு காபி கலக்குறேன்.'' என்றதும் அவர்களுக்கு தன்னை தெரிந்து இருக்கு என அம்மாவை பார்த்தாள்.
அபிராமி சுற்றி முற்றி எதையோ தேடியபடி யோசிக்க
''என்னம்மா பண்ணுது ஏதேனும் வேண்டுமா?'' என நிலா கேட்க
''இல்லை உங்க கல்யாணம் அப்போ நான் மருத்துவமனையில் இருந்து இருப்பேன்.. ஆனா கல்யாண போட்டோ இல்லையே வீட்டில்" என்றதும் நிலா அச்சத்தில் பேச்சிழந்து நின்றாள். 

''அது....அதும்மா''
''போட்டோ வீடியோ எல்லாம் உங்க வீட்டில் எறிந்த தீவிபத்தில் அழிஞ்சுடுச்சு அத்தை'' என வெகு இயல்பாய் கூறினான் ரூபன். 
''என்ன வீடு தீவிபத்து ஆச்சா?''
''ஹ்ம்ம் ஆமா அத்தை அதுல உங்க நாத்தனார் ரேவதி அவங்க இறந்துட்டாங்க.. மாமா இறந்த அன்று தான். அதான் நீங்க என்று முடிவு செய்து விட்டோம் இப்போ தான் புரியுது மாமா இறந்த அன்று நீங்க வேற ஆஸ்பத்திரில இருந்து இருக்கிங்க, வீட்டில ரேவதி அவங்க இறந்தது''  

''அண்ணன் விட்டுட்டு தங்கை போயி சேர்ந்துட்டாளா? என்னையும் அவர் கூட்டிட்டு போயி இருக்கலாம்'' என்றதும் நிலா அழுதாள்.  

''உங்க பொண்ணு நிலா அழுவரா அத்தை அப்படி பேசாதிங்க அவளுக்கு நீங்க தானே ஆதரவு இப்போ'' என்றதும் கண்ணீர் துடைத்து அபிராமி
''ஆமாம்மா இனி அப்படி பேசலை... உன் வீட்டுக்கு முதல் முறை வந்து இருக்கேன்... இனி அப்படி பேச மாட்டேன்..'' என நிலாவிடம் கூறி கன்னத்தில் தட்டி கொண்டார்.

பாக்கியம் இரவென்றாலும் காபி எடுத்து வந்து நீட்ட அபிராமி வாங்கி பருகி "என் மகளை நல்லா பார்த்துக்கிட்டிங்க நன்றிம்மா'' என்றதும் பாக்கியம்
''அதுக்கு எதுக்கு நன்றி... நீங்க இனி நல்லா ரெஸ்ட் எடுங்க அப்போ தான நல்லா இருக்கும் உடம்பும் மனசும்'' என்றதும் இருவர் பேசி கொள்ள ரூபனோ கண்களில் நிலாவிடம் தனியாக பேச அழைத்தான்.

புரியாமல் குழம்பி நிற்க பாக்கியம் சிரித்தபடி நிலா ரூபன் கூப்பிடறான் பாரு போய் என்னனு கேளு" என்றார்.  அவளை அவன் இருக்கும் பக்கம் அனுப்ப பார்க்க அவளோ "நானா? இல்லை..'' என தடுமாற
''போ இனி நான் இங்க சம்மந்தியம்மாகிட்ட பேசிட்டு இருக்கேன் நீ மாப்பிளையை கவனி'' என அனுப்ப நிலா மயக்கம் வராதா குறையோடு எழுந்து ரூபன் அருகே போனாள்.

''எதுக்கு என்னைஇப்படி கூட்டிட்டு வந்திங்க?''
''என்ன?''
''அது கண் அசைத்து...''
''ஐயோ தனியா பேசணும் என்றதும் அப்படி கூப்பிட்டேன்... ஏன் நீ என்ன நினைச்ச...?'' என்றான் ஒரு மாதிரி பேச்சால்
''நத்திங் சொல்லுங்க...'' என்றாள்.

''ஹ்ம்ம் அது டாக்டர் என்ன சொன்னங்க என்று சொல்ல வந்தேன். அது உங்க அம்மா ரொம்ப டிப்ரஸ்ல இருக்காங்க... ஒரு வருடம் கணவரை இழந்தது பிரம்பை பிடிச்சது போல, உள்மனசு ரொம்ப பதிச்சு இருக்கு... கணவர் கண் எதிரில் விபத்து ஏற்பட்டதால் அதை அவங்க உங்க அப்பா இறந்ததை ஏற்றுக்காரங்க பட் உனக்கு கல்யாணம் பேச்சு எடுத்தது என்னை அவங்க மாப்பிள்ளையா நினைச்சு ஆழ்மனசில் உன் கணவரா பதிய வச்சி இருக்காங்க..
அதனால் உடனே இப்போ அப்படி இல்லை கல்யாணம் நடக்கலை என்பது எல்லாம் சொன்ன, மறுபடியும் மனசு உடைஞ்சு முன்ன மாதிரி ஆகா வாய்ப்பு இருக்கு.
அதனால கொஞ்சம் நமக்கு கல்யாணம் ஆனதாவே அவங்களிடம் சொல்ல சொன்னார் டாக்டர்... கொஞ்சம் நினைவு முழுசா அவங்க யோசிச்சு தானா கேட்கும் பொழுது உண்மை சொல்ல சொல்லறாங்க... இப்போ என்ன செய்ய என்று நீ தான் சொல்லணும்... பீகாஸ் முடிவு உன்னோடையது... உங்க அம்மா ஏமாற்றி பிறகு உண்மை தெரியறதை விட இப்பயே சொல்லிடறது என்றாலும் ஓகே இல்லையா டாக்டர் சொல்படி, கொஞ்ச நாள் பார்க்கலாம் என்றாலும் ஓகே...?'' என நிறுத்தி அவளை ஏறிட்டான். 

''இதனால உங்களுக்கு பிரச்சனை இல்லையா?''
''எனக்கு என்ன பிரச்சனை... உனக்கு தான் எதனால் வரலாம்... '' என சொல்ல கொஞ்ச நேரம் அமைதியாக யோசித்தவள்
''டாக்டர் சொன்னது போல செய்யலாம் உங்களுக்கு பிரச்சனை இல்லைனா.''
''ஹ்ம்ம் ஓகே எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.. அப்படி டாக்டர் சொல்ற மாதிரி நடக்கணும் என்றால் நீ இங்க தான் இருக்க முடியும்... ஏன்னா அவர்களை பொறுத்தவரை இது உன் புகுந்த வீடு'' என்றதும் நிலா அவனை ஏறிட அவனும் சளைக்காமல் பார்த்தான்.
''ஹ்ம்ம்'' என்றாள்.

'ஹ்ம்ம்மா? அடிப்பாவி இப்படி இருந்தா என் நிலைமை? சட்டுபுட்டுனு என் லவ் ஓகே சொல்லுடி இது உன் புகுந்த வீடா நிரந்தரமா மற்றறேன் ' என்பது போல மனதோடு பேசினான்.  
நிலாவுமே, 'சொன்னாலும் சொல்லலானாலும் மனசில் உன்கூட வாழறேன் ரூபி.... இது என் புகுந்த வீடு தான்' என அவளும் மனதோடு சஞ்சரித்தாள். 

தொடரும் 

பிரவீணா தங்கராஜ் 


 
Posted : June 23, 2026 6:42 pm
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

ரெண்டு பேரும் இப்படி மனசுக்குள்ளேயே பேசி குடும்பத்தை நடத்தினால்..

நிசத்துல எப்பத்தான்நடத்துறது ?

 

😃😃😃

CRVS (or) CRVS 2797


 
Posted : June 26, 2026 6:29 pm

Scroll to Top