முதலாம் சந்திப்பில்-14
அத்தியாயம்-14
அடுத்த நாள் அமைதியாக கிளம்பி மருத்துவமனை சென்றாள் நிலா.
மாலினியிடம் ரூபனை பற்றி கூற, அவளோ உள்ளுக்குள் 'உனக்கு ரூபன் செய்யறது தான் சரி. இல்லை சேவை அது இது என்று பினாத்தி கொண்டு இருந்தவ. ஐயோ அவருக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்.'' என நினைத்தாள்.
சாப்பாட்டில் கோலம் போட்டுக்கொண்டு இருந்த நிலா ஒரு வழியாக உணவு உண்டு முடித்து கை அலம்பி வர எதிரில் வேணி, சுந்தரி வந்தனர்.
''என்ன நிலா கல்யாண பத்திரிகை எல்லாம் ரெடி. ஆனா ஒரு வார்த்தை சொல்லாமல் இருக்க.. எனிவே கங்கிராட்ஸ்...'' என வாழ்த்தினார்கள்.
''என்ன சொல்லறிங்க?'' என்று கேட்டவளிடம் வேணி புரியாமல் பத்திரிகை நீட்ட, அதனை வாங்கி பார்த்த நிலாவின் கண்கள் அதிர்ச்சியில் தெறித்தது. அதனை வாங்கிய மாலினி பத்திரிகை பார்த்து சிரிக்க, நிலா சுயநிலை அடைந்து திரும்பினாள்.
''இதை யார் கொடுத்தா?'' என நிலா கேட்க
''வேற யாரு உன் ஆளு தான்'' என்று சொல்ல ரூபன் அசால்டாக வந்து கொண்டிருந்தான்.
''இவனை.... யாரை கேட்டு இப்படி செய்யறான்... ஓவரா அட்வாண்டேஜ் எடுக்காறான் மாலினி'' என சொல்லியவள் அவன் அருகே வந்ததும் பேசாமல் இருந்தாள்.
''ஹாய் மா..லி..னி தானே... இந்தாங்க" என்று நீட்ட "என்ன நீலு சேர்ந்து கொடு...'' என்றதும் நிலா முறைத்து பேச வாய் எடுக்க,
''மாலினி கல்யாணதுக்கு வந்துடுங்க... அப்பறம் அடிக்கடி உங்க ப்ரெண்ட் இப்படி முறைக்க வேண்டாம் சொல்லுங்க. அது நல்லதுக்கு இல்லை'' என கூறினான்.
நிலா அவனிடம் பேச தயாராக டாக்டர் சித்திக் வர கண்டு அமைதியாக நின்றாள்.
சித்திக் அவரின் அறைக்கு செல்ல, ''ஒய்.... சித்திக் டாக்டருக்கு சேர்ந்து கொடுக்க வா'' என கையை இழுத்து கொண்டு போனான்.
''ஹாய் டாக்டர்''
''என்ன ரூபன் இப்ப எப்படி இருக்கு கை மற்றும் காதல்?'' என்று கேட்க நிலா தான் நெளிந்தாள். ஓரளவு நிலாவின் காதல் இவரும் அறிந்து இருந்தார்.
''கை சரியாகிடுச்சு டாக்டர். காதல் இதோ இதுல முடியும்'' என்று நீட்டினான். நிலாவை இடிக்க அவளுக்கு தானாக பாத்திரிகையில் கை வைத்தாள்.
''வாவ் மேரேஜ் ஆஹ் நிலா. சொல்லவே இல்லை...'' என வாங்கி வாழ்த்த,
''இல்லை டாக்டர் இது அவளுக்கே தெரியாமல் சர்பிரைஸே தான் அதான் முழிக்கிறா'' என்றான் ரூபன்.
''எனி வே கங்க்ராட்ஸ்... மை பாய்...'' என்று வாழ்த்த கொஞ்சம் போல பேசிவிட்டு நகர்ந்தார்கள்.
வெளியே வந்ததும் "எதுக்கு இப்படி செய்திங்க?'' என்று வெடித்தாள்.
''என்னது.. கேள்வி எல்லாம் கேட்கற. ணீ பேசவே பேசாத... பத்திரிக்கை கொடுக்கும் பொழுது அமைதியா நாகரீகம் கருதி வாயை முடினியா.. இப்படியே தாலி கட்டும் வரை சமத்தா இருக்கணும்'' என்றான் காட்டமாக.
எதிரில் மாலினி வர அவளிடம் ''கூடவே இருந்து கொஞ்சம் நல்ல புத்தி சொல்லுங்க ரொம்ப பேசினா கட்டாய தாலி தான் அவளுக்கு...'' என்று சொல்லிவிட்டு சிட்டாய் பறந்தான். இங்கு நிலா எரிமலயாக நின்றாள்.
''இவனை எல்லாம் பெற்றார்களா இல்லை செய்தார்களா? நல்லா நெடு நெடுனு வளர்ந்து பேச்சை பாரு...'' என நிலா திட்டி கொண்டு இருக்க மாலினி சிரித்தாள்.
''எதுக்கு டி சிரிக்கிற...'' என்று நிலா கேட்க கண்களால் 'திரும்பி பார்' என்றதும், தன் பின்னால் திரும்பி பார்க்க, அங்கே ரூபன் கைகளை இடுப்பில் வைத்து ''நல்லா வக்கணையா பேசற... சொல்ல மறந்துவிட்டேன்.. என் பிரெண்ட் சிவாவோட மனைவிக்கு நாளை மறுநாள் வளைக்காப்பு. ஃபங்சனுக்கு என்னை இன்வைட் பண்ணி இருக்கான் நாளை மறுநாள் நீ என்னோட வர்ற.'' என்றான் கட்டளையாக.
''ஹலோ நான் எங்கயும் வர மாட்டேன்'' என அடம் பிடித்தாள் நிலா.
''உன்னை இங்க யாரும் வர்றியா இல்லையா கேட்கலை... வர்ற.. என்று கட்டளை கொடுக்கறேன் புரியுதா?'' என்றான் மிரட்டலாய்.
நிலா அமைதியாக நின்று முறைத்து கொண்டு இருக்க அதனை அலட்சியமாக கடந்து சென்றான்.
வெளியே வந்து பைக் ஸ்டார்ட் செய்த பின்பு தான் 'உப்ஸ்... இவளிடம் இப்படி கடினமா நடிக்கறதுக்குள் போதும் போதும் ஆகிடுச்சு.. பதிலுக்கு முடியாது அது இது என்று என்னை கிழிச்சு போட்டுடுவாளோனு பயந்தேன்.
குண்டு அடிபட்ட போது கூட இப்படி பயந்து சாகலை டி. உன்கிட்ட கல்யானம் செய்ய இப்படி பேசிட்டு, நீ என்ன ரியாக்சன் கொடுப்பனு தான் பயமா இருக்கு. கடைசியில் என்னை மனைவிக்கு பயப்பட வச்சிட்ட' என கிளம்பினான்.
''பாரு மாலினி அவனா பத்திரிகை கொடுக்கறான். யாரோ ஒருத்தரோட ஃபங்சனுக்கு வானு சொல்றான். நேற்றில் இருந்து ஒரு மார்க்கமா இருக்கான். அம்மா என்னடா என்றால் அவங்களுக்கு நினைவு வந்தது ரூபனுக்கு தெரியாது. அவரும் உன்னை போல தான் தெரிந்து கொண்டார் அதுவும் நான் வீட்டை விட்டு இங்க வந்ததால் தான் தெரிந்தது...சொல்றங்க....'' என வருந்தினாள்.
''கொஞ்சம் யோசிச்சு பாரு இப்படி அடாவடியா கல்யாண பத்திரிகை எல்லாம் அடிச்சு, உன் கையால கொடுக்க வைக்கிறவர், எதுக்கு ஒரே அறையில் உன்னை சந்திக்க பிளான் போடணும்? இது உங்க அம்மா அத்தை பிளான்னா தான் இருக்கும். அதுக்கு போய் ரூபனை நீ குற்றம் சுமத்தற அதான் அவர் அவரோட ஸ்டைல்ல புரியற மாதிரி சொல்றார்.'' என மாலினி ரூபனுக்கு ஆதரவு கரம் நீட்டி பேசினாள்.
''அப்போ ரூபன் பண்றது தப்பில்லையா? நான் இந்த கல்யாணம் செய்துக்கனுமா?'' என்று கேள்வி கேட்டாள்.
''ஹ்ம் அது எனக்கு தெரியாதுமா... குறிப்பிட்ட தேதியில் கல்யாணம் நடக்கும் அது மட்டும் புரியுது'' என நமுட்டு புன்னகையோடு நகர்ந்தாள்.
அடுத்த நாள் தொல்லை செய்யாமல் இருந்தான் அதற்கு அடுத்த நாள் ஞாயிறு வர வீட்டு வாசலில் வந்து நின்றான். நிலாவுக்கு தான் லேசாய் உதறல் எடுத்தது.
வரலை என்று சொன்னா என்ன செய்வான்? என யோசித்து பயந்து அறையில் பதுங்கியிருக்க, அவனோ அபிராமியின் அனுமதியுடன் அறைக்குள் வந்து கதவின் மேல் கையை வைத்து, லூக்கை விட முட்டி கட்டி கொண்டு திரும்பிக் கொண்டாள்.
''அப்போ வர மாட்ட?'' என்று நக்கலாய் கேட்க, ஆமோதிப்பாய் நிலா மௌனம் காத்தாள்.
ரூபனோ கதவை தாழிட்டு இருந்தான். நேராக அவளின் செல்ஃப் கப்போர்ட் திறக்க அதில் மேலேயே மயில் கலர் பச்சை சேலை இருக்க கண்டவன் மனதில் 'ஆஹா மேடம் டிரஸ் எல்லாம் செலக்ட் பண்ணிட்டு தான் உட்கார்ந்து இருக்காளா?' என்றெண்ணியவன், அவளை பார்க்க, அவளோ என்ன சத்தமே இல்லை?' என்று திரும்ப கதவு மூடியிருக்க போயிட்டானா என கவலையோடு மாறினாள்.
''போகலாம் செய்யலை இங்க தான் இருக்கேன்." என்று அவள் பின்னால் குரல் கொடுக்க,
''இப்ப எதுக்கு கதவு எல்லாம் அடைச்சு இருக்கிங்க... வெ.. வெளியே போங்க.'' என்று தடுமாறினாள்.
''பின்ன இங்கயே இருக்க முடியுமா? நீ டிரஸ் சேஞ்ச் பண்ணனுமே. பட் உனக்கு அப்ஜெக்ஷன் இல்லைனா இருக்கேன்'' என குறும்பாய் சிரித்தான்.
''நான் எங்கயும் வரலை'' என்று நிலா அவன் சிரிப்பால் கோபம் கொண்டாள்.
''வரலை என்றுதான் இந்த சேலை எடுத்து வச்சியிருக்கயா நிலா? நமக்குள் இந்த ஈகோ வேண்டாம்டி. முதல் முறையும் இப்படி தான் எனக்கு நடந்த நிகழ்வில் நீ கேலி செய்து சிரிச்ச'' என்று பழைய நினைவை கிளறினான்.
கைகடிக்காரத்தை பார்த்து ''11க்கு ஃபங்சன் நிலா. மணி பத்து ஆகுது'' என சலித்து கொண்டு நின்றான்.
நிலாவுக்கே பாவமாக போகவும், உடை மாற்றுவதற்காக ''வெளியே போங்க...'' என்றாள்.
அவனுக்கோ தன்னை ஏற்காமல் வெளியே செல்ல கூறுவதாக நினைத்து, ''என்னடி நானே உனக்கு சேலை கட்டி இழுத்துட்டு போகணும் என்று ஆசையா? பொறுமையா தானே சொல்லறேன். என் ப்ரெண்ட் சிவா வீட்டுக்கு தானே..'' என்று கோவத்தில் பேசி கொண்டே போகவும்,
''ஐயோ அதுக்கு தான் வெளியே போக சொல்றேன்... சேலை கட்ட வேண்டாம்'' என்றதும்வெளியேறினான்.
''இவன் இஷ்டத்துக்கு ஆடறான்... இந்த அம்மா வேற நல்லா வேடிக்கை பார்த்துகிட்டு வெளிய இருக்காங்க...'' என அன்னையை திட்டியபடி சேலை மாற்றினாள்.
மயில் பச்சை சேலையில் கிளம்பி தயாராக, கழுத்து ஒட்டி ஒரு நெக்லஸ் மட்டுமே அணிந்து, சின்ன கம்மலை கழட்டி வைத்து பெரிதாக ஒன்றை அணிந்தாள்.
குட்டி பொட்டு வைத்து உதட்டு சாயம் மட்டும், அதுவும் பட்டும் படாமல் உதட்டில் தீட்டி வெளியே வர, மாடியில் இருந்து அபிராமி போணும் கையுமாக வந்திருந்தார்கள்.
நிலா மனதில் 'இந்த அம்மா அத்தை கூட சேர்ந்து இங்க இருந்து ரன்னிக் கமெண்ட்ரி கொடுக்குதே இருகட்டும் வந்து பார்த்துக்கலாம்..' என நிற்க ரூபன் தான் உட்கார்ந்த இடத்திலே, இருக்கும் இடம் மறந்து நிலாவை பார்த்துரசித்தான்.
''மாப்பிள்ளை அவ ரெடியாகிட்டா 11 மணிக்கு தானே கிளம்புங்க'' என்று அபிராமி உலுக்கவும், வழிந்து கொண்டிருந்த நிலை கண்டு கிளம்பினான்.
பைக்கில் அவளை ஏற்றி கொண்டு கண்ணாடியில் அவளை பார்த்துக்கொண்டே வண்டியை செலுத்தினான்.
''கொஞ்சம் ரோட்டை பார்த்து வண்டியை ஒட்டுங்க'' என்றாள் நிலா.
''என்னைக்கும் இப்படி இல்லாமல் இன்னிக்கு வேற மாதிரி இருக்க அதான்.. பார்த்துக்கிட்டே இருக்கேன்.'' என்றான்.
''நான் நர்ஸ் இப்படி டெய்லி மேக்அப் பண்ணிட்டு போனா நல்லாவா இருக்கும்.. பேஷண்ட் ரத்ததில் இருப்பான்.. உயிருக்கு போராடிகிட்டு... இருக்கறவங்க, கஷ்டதுல இருக்கும் பொழுது, நான் இப்படி போனா அவங்க என்ன நினைப்பாங்க..'' என்றதும் அவனுக்கு அது புரிந்தது.
''நல்லா தான் மற்றவங்களை பற்றி யோசிக்கிற... கொஞ்சம் என்னை பற்றியும் யோசி '' என சொல்லியவன் கண்ணாடியில் பார்க்க அங்கே நிலா சத்தமில்லாமல் சிரிப்பதை கண்டவன் மனம் நிம்மதியடைய அதே நேரம் சிவா-கிருத்திகா வீடு வர நிறுத்தினான்.
''டேய் இன்னிக்கு தான் டா யூனிபோர்ம் இல்லாமல் உன்னை பார்க்கறேன் என சிவா ரூபனை கிண்டலடிக்க ''வாங்க'' என நிலாவையும் அழைத்தான்.
சிவா தான் ''என்னடா கல்யாண பத்திரிகை ரிசல்ட் பாசிட்டிவ் போல'' என்றான்.
''எப்படி சரியா சொல்ற.?''
''உன் முகம் தான் பிரகாசமா இருக்கே அண்ட் அவங்களும் இங்க தெரியாத ஃபங்சன் வந்து இருக்க மாட்டாங்க... சோ லவ் இருக்கு டா சரி நீ நிலாவுக்கு கம்பெனி கொடு வந்துடறேன்'' என கிருத்திகவை காண நகர்ந்தான்.
கொஞ்ச நேரத்தில் வளைக்காப்பு ஆரம்பமானது.
ரூபன் நிலா கொஞ்சம் காலி இருக்கைக்கு தள்ளி தனியாக அமர்ந்திருந்தார்கள்.
"நீயும் நானும் தாமஸ் அங்கிளிடம் நமக்குள்ள கல்யாணம் வேண்டாம் பிடிக்கலை என்றதும் அவர் உன் போட்டோவை எடுத்து சிவாவிடம் தந்துட்டார். அவனை சந்திச்சப்ப 'வீட்ல பொண்ணு பார்த்து இருக்காங்கடா. தாமஸ் அங்கிளுக்கு தெரிந்த பொண்ணுனு உன் போட்டோவை கையில வச்சி எனக்கு காட்டினான்." என்றதும் நிலா அதிர்வாய் ரூபனை கண்டாள்.
ரூபனோ சிவா-கிருத்திகாவை பார்த்து, "எனக்கு உன்னை முதல் முறையே பிடிச்சிடுச்சு நிலா. அந்த வானத்து வெளிச்சத்தில் நிலவொளியில், உன் முகம் என் மனசுல ஆழமா பதிந்து போச்சு. நீ என்னை நியூஸ் பேப்பர்ல வந்த செய்தியால சிரிக்கவும் தான் பிடிக்கலனு சொன்னேன். ஆனா என் பிரெண்ட் மனைவியாக போறனு தப்பா நினைச்சு கோழையா மும்பை ஓடினேன். காட் கிரேஸ் அவனுக்கு தாமஸ் அங்கிள் உனக்கு என்னை பார்த்ததை சொல்லவும் ரிஜக்ட் பனண்ணிருக்கான்.
மும்பையில இருந்து ரிட்டர்ன் வந்ததும் என் வொய்ஃப் உன்னை பிக்அப் பண்ணிட்டு உன்னோட பேசணும்னு சொல்லி புதிர் போட்டான். மனசுக்குள் உன்னை சிவா மனைவி என்று நினைச்சு தான் ஏர்போர்ட்ல பார்த்தேன். பட் கிருத்திகா வந்து சிலை கடத்தல் பற்றி பேசினாங்க. எனக்கு அப்ப எல்லாம் அப்பாடா நிலா ஸ்டில் மேரேஜ் ஆகாம எனக்காக இருக்கானு சந்தோஷப்பட்டேன்." என்றதும், நிலா கதை கேட்பதில் மௌனமடைந்தாள்.
"சிலை கடத்தல் விஷயமா குண்டு பாய்ந்து ஹாஸ்பிடலில் வந்து உன்னை சந்திச்சப்ப லவ் சொல்லலாம்னு பார்த்தேன். உன் அப்பா அம்மா தவறியதா தாமஸ் அங்கிள் சொன்னார். உன்னிடம் என் காதலை சொல்லி உனக்கு ஆறுதலா இருக்க நினைச்சேன். தேங்க் காட் அத்தை உயிரோட இருக்காங்க. பட் பிராமிஸ்ஸா அத்தைக்கு நினைவு வந்தது எனக்கு தெரியாது. என் ரூம்ல உன்னை சங்கடத்துல நான் தள்ளலை." என்றான்.
நிலா எல்லாவற்றையும் கேட்டு அமைதியாக கிருத்திகாவை கண்டாள். ஃபங்சன் வந்துவிட்டு உணர்வை கட்டுக்குள் வைக்க வேண்டுமே!
அவளது பார்வை கிருத்திகா சிவாவை காண ''ஹ்ம்... நாம எப்ப ஃபேமிலி ஆகறது'' என்றதும் தலை கவிழ்ந்தாள்
நண்பன் தன்னையே காணவும் சிவா ரூபன் பக்கம் வந்தான். என்னடா ரொமான்ஸ்ஸா?'' என்றான்.
''விளையாடாதே சிவா. இவளே இன்னிக்கு தான் என்கூட வந்திருக்கா... ஆனா லவ் பற்றி கேட்டா நோ ரெஸ்பான்ஸ்.'' என்றான் ரூபன்.
''என்னம்மா... ஓகே சொன்னா தான் என்னவாம்? அவன் ஸ்டேஷன் ஹாஸ்பிடல்னு உனக்காக நடையோ நடை நடக்கறான்..'' என்றான் சிவா.
''ஐயோ அண்ணா அதெல்லாம் ஓகே சொல்லாமல் தான் ஒரு வாரத்தில் கல்யாணம் என்று ஆடறாரா?''
''சிவா அவ வாயலா இன்னும் அக்சப்ட் பண்ணலைடா...'' என ஆரம்பிக்க
''அடேய் உங்க பிரச்சனையை நீங்க பேசி முடிவெடுங்க. இப்ப போட்டோ எடுத்துடலாம்" என புகைப்படம் எடுக்க அழைத்து சென்றான் சிவா.
கிருத்திகா கூட புகைப்படம் எல்லாம் எடுத்து நட்பு பாராட்டி கொண்டு உணவு உண்ண பந்திக்கு சென்றார்கள்.
''ஏய்.... லவ் பண்றதானாடி அதை நீயா சொல்ல என்னவாம்'' என்றான்.
அவளும் கண்கள் கலங்கி ''லவ் பண்றேன் இப்ப இல்லை... உன்னை போல முதல் முறை பார்த்தப்பவே. ஏன்னா உன் போட்டோவை இப்படி பைத்தியக்காரி மாதிரி கட் செய்து, பர்ஸ்ல வச்சி சுத்திட்டு இருக்க மாட்டேன்" என்று உள் ஜிப்ல இருந்து ATM கொள்ளையை கண்டு பிடித்த அன்று வெளியாகிய பேப்பர் கட்டில், ரூபன் புகைப்படத்தை வைத்திருப்பதை எடுத்து காட்டினாள்.
தொடரும்
பிரவீணா தங்கராஜ்
-
முதலாம் சந்திப்பில்-15 (முடிவுற்றது)
3 weeks ago
-
முதலாம் சந்திப்பில்-7
4 weeks ago
-
முதலாம் சந்திப்பில்-2
1 month ago
-
முதலாம் சந்திப்பில்-13
1 month ago
-
முதலாம் சந்திப்பில்-12
1 month ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 2 Online
- 329 Members
