முதலாம் சந்திப்பில்-15 (முடிவுற்றது)
அத்தியாயம்-15
கூரை பட்டுயுடுத்தி கோவிலில் மருதாணி கால்கள் அடியெடுத்து வைக்க, நிலா நடந்து வந்தாள்.
அந்த கோவிலுக்கு வருவோர் போவோர் முதல், நிலாவை திரும்பி பார்த்து, 'கல்யாண பொண்ணு அழகா இருக்கா' என்று பேசி செல்வதை கண்டு அபிராமி மனம் நிறைந்தது என்றால் அது மிகையில்லை.
அதே போல நெற்றியில் கங்கணம் கட்டிக்கொண்டு பட்டுவேஷ்டி சட்டையில் முழுக்கை பாதி மடித்து விட்டு, கையில் பூங்கொத்து வைத்து நொடிக்கு ஒரு முறை வாட்ச் பார்க்கும் ரூபனை சிவாவை
''டேய் ஒரு செகண்ட்க்கு ஒரு முறை டைம் பார்த்தால் அது அதிகமா காட்டாதுடா... உனக்கு அவசரம் என்றால் தாலி எடுத்துக்கிட்டு நிலா இருக்கும் இடம் போயிடு. அங்க போய் கூட தாலி கட்டு'' என்று மணமகன் தோழனாக சிவா கேலி செய்தான்.
''பேசுவ டா பேசுவ. அன்னிக்கே உனக்கு காட்டின பொண்ணை கல்யாணம் செய்யலைனு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா மும்பை பக்கமே போயிருக்க மாட்டேன்." என்றான் ரூபன்.
"ஆமா நீ ஈகோ பார்க்காம நிலாவை பிடிச்சு இருக்குனு சொல்லி இருந்தா கூட இவ்ளோ நாள் ஆகிருக்காது" என்று சிவா அவன் பங்கிற்கு வாறினான்.
''கடுப்ப ஏத்தாதடா... இந்த ஐயர் வேற புகையை உருவாக்கிக்கிட்டு'' என்று புகையை கையால் காற்றோடு முகத்திலிருந்து அனுப்ப மெனக்கெடுத்தான்.
''இங்க பாருங்கோ இது இப்படி தான் புகை வரும் அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். பாக்கியம் பையன் தானே... அவா எல்லாம் கோவில், சாமி என்று பக்தியா இருப்பா.. எப்படி தான் அவாளுக்கு பிறந்துட்டு பிரணான வாங்கறிங்களோ...'' என ஐயர் கடுகடுக்க, ரூபன் அதை எல்லாம் பொருட்படுத்தது நிலா வருகையினை விழியகற்றாமல் கண்டான்.
''தம்பி மந்திரத்தை திருப்பி உச்சரிக்கணும். அங்க என்ன பார்வை?'' என்றதும் ரூபன் அவர் கூறியதை திருப்பி படித்தபடி இருக்க, நிலா அடிக்கண்ணில் ரூபனை காண, அவனும் அதே நேரம், அதே போல செய்ய இருவரின் கண்கள் சந்தித்தது.
ரூபன் கண் சிமிட்டியதும் நிலா கண்கள் விலகி கொண்டது.
'கடவுளே இவனை பார்க்கவே கூடாது... எப்படி சேட்டை செய்யுறான்.' என தனக்குள் சொல்லி கொண்டவள், அதன் பிறகு அவனை பார்க்காமல் இருக்க, அவனோ இவள் பார்ப்பாள் என மீண்டும் பார்த்து பார்த்து ஏமாந்தான்.
கிருத்திகா நிறைமாசம் என்பதால் சிவா அவளை அழைத்து வரவில்லை.
இனிமையாக பாக்கியம் அபிராமி தாமஸ் சிவா இவர்களோடு ரூபனின் மேலதிகாரி, மற்றும் கூட வேலை செய்யும் ஆட்கள் என்று வந்திருந்தனர். அதே போல நிலாவின் மருத்துவ மனையில் உள்ள டாக்டர் சித்திக், மற்றும் நிலாவோடு வேலை செய்யும் மாலினி, வேணி, சுந்தரி, மற்றும் சொந்த பந்தம், நட்பு என்று திருமணத்திற்கு வந்திருந்தனர். ஒரே குறை தந்தை உயிரோடு இருந்து தன் திருமணத்தை காண முடியாமல் சென்றதை நிலா இந்த கணமும் நினைத்து பார்த்து கண்ணீர் வடித்தாள்.
"உங்க அப்பா உயிரோட இருக்கும் பொழுதே என்னை போட்டோவில் பார்த்திருப்பார் நிலா. அவருக்கு என்னை பிடிக்கும்னு தாமஸ் அங்கிள் சொல்வார். அதனால் உங்க அப்பா ஆசி நமக்கு இருக்கும். அவர் மனசு சந்தோஷப்படும்" என்று ரூபனே நிலா மனதை சாந்தப்படுத்தினான்.
கோவிலிலிருந்து ரூபன் வீட்டில் விளக்கேற்றி முடிக்க, தாமஸ் அங்கிள் மட்டும் தவிர்த்து எல்லோரும் அங்கே கல்யாண சாப்பாட்டு சாப்பிட்டு கிளம்பினார்கள்.
தாமஸ் அங்கிள் அவரோ ''ஒரு வார்த்தை அப்பவே என்னை பார்த்து தனியா நிலாவை பிடிச்சிருக்கு. கொஞ்சம் அவளோட விளையாடி அப்பறம் கல்யாணம் செய்துக்கறேன் சொல்லி இருந்தா கூட , அப்பவே கல்யாணம் நடந்து இருக்கும் எல்லாம் பகவான் எப்போ எது நடக்கணும் என்று விதி எழுதி முடிச்சு இருக்காரோ நல்லதே நடந்துடுச்சு'' என்றார் அவரும்.
நிலா ரூபன் இருவரும் அவர் பேச ஒருவருக்கொருவர் பார்த்து விழித்தார்கள். இப்படி தான் நடக்கவேண்டும் என்று விதி போல.
நேரம் நகர, இரவு, மிக எளிமையாக அலங்கரித்த கட்டிலில் ரூபன் அமர்ந்து இருக்க, நிலா கையில் பாலினை திணித்த பாக்கியமோ, "கல்யாணம் தான் ஒரு வருஷத்துக்கு தள்ளி போட்டுட்டிங்க. ஆனா எனக்கு ஒரு பேரனோ பேத்தியோ மட்டும் தள்ளி போடாம பெற்று கொடுங்க. அதை நாங்க இருவரும் வளர்த்து ஆளாக்க காத்திருக்கோம்"என்றதும் நிலா அமைதியாக தலையை ஆட்டினாள்.
''என்னடா இந்த அத்தை இப்படி ரூமுக்கு போறதுக்கு முன்னாடி கேட்கறேன்னு கோபித்து கொள்ளாத.
உங்க மாமா இறந்த பிறகு அவன் ஒருத்தனை வளர்த்து ஆளாக்கி வளர்க்கறது மட்டும் தான் வாழ்க்கை என்று ஆகிடுச்சு. இவனும் கொஞ்சம் வளர்ந்ததும், எனக்கு இந்த வீட்டில் வேலையும் இல்லை, வாழ்க்கை இல்லை. ரொம்ப சுவாரசியமா லைப் இல்ல. அதான் நீ ஒரு குழந்தை பெற்று கொடு. அது முழுக்க எங்க பொறுப்பில் இருக்க, எங்களுக்கும் அதுல ஒரு நிறைவு வரும்'' என்றதும் அபிராமி நிலா கையினை பற்ற, தாயும் அதே தான் எதிர் பார்க்கின்றார்கள் என புரிந்தது.
மெல்ல சம்மதமாய் தலை மட்டும் அசைத்து கொண்டாள்.
ரூபனின் அறைக்குள் அடியெடுத்து செல்ல, அங்கே ரூபன் கைகளை கட்டி கொண்டு நின்றான்.
"அன்னிக்கு இனி என் அறைக்குள் வரணும்னா, விரைவா மனைவி ஸ்தானம் கொடுப்பேன்னு சொன்னேன் கொடுத்துட்டேன்" என அவளிடம் சொல்ல, அவளோ காலில் தொட உணர்வு பெற்றவன்.
''ஏய் இப்போ என்ன செய்த?'' என்றான்.
''அத்தை அம்மா இப்படி தான் காலில் விழ சொன்னாங்க விழுந்தேன்'' என பாலை நீட்ட வாங்கி பருகியபடி, பதிலுக்கு நீட்ட மறுக்காமல் மொத்த பாலையும் குடித்து முடித்தாள்.
''வேற எதுவும் சொல்லலை'' என ரூபன் சிரிக்க,
''ஹ்ம்ம சொன்னாங்க. நீ தூங்கும் போது, ரூபன் கை காலை உன் மேல போட்டா, அவன் கன் வச்சி, அவனை சூட் செய்திட சொன்னாங்க'' என்றாள்.
''என்ன மேடம் ரொம்ப திமிரா பேசற மாதிரி இருக்கே'' என்றான்.
''வெளியே பேசியதை ஓட்டு கேட்டுட்டு தானே வந்து, சமத்தா உட்கார்ந்து இருந்திங்க... அப்பறம் என்கிட்ட வேற கேட்கறிங்க'' என்றாள் நிலா.
''உனக்கு எப்படி தெரியும்''
''உங்க நிழல் தான் கதவு பக்கத்திலே இருந்தது''
''அடிப்பாவி ஹ்ம்ம எல்லாம் நோட் பண்ணிட்டு தான் வந்து இடக்கா பேசற.''
''பின்ன உங்களை மாதிரி பிராட் வேலை பார்க்குறவங்களை எல்லாம் அப்படி தான் டீல் பண்ணனும்''
''நான் என்னடி பிராடு தானம் செய்தேன்...''
''என்ன செய்யலை... யாராவது கல்யாணம் பத்திரிகை அடிச்சு முடிக்கிற வரை கல்யாண பொண்ணுக்கு தெரியாம இருக்குமா? அதுவும் ஒரு வாரத்தில, எனக்கு தெரியாம திடுதிப்னு நீட்டனிங்க.'' என்றதும்,
''ஆமா ஐ லவ் யூனு ஒரு வார்த்தை சொன்னியா.? உனக்கு ஒரு வாரம் டைம் கொடுத்தேன் ஆனா மேடம் அதுக்கு ரெஸ்பான்ஸே பண்ற மாதிரி தெரிலை அதான் உனக்கு எல்லாம் அடிதடி ரூட் தான் பெஸ்ட்னு தோணுச்சு. அப்பறம் தான் நியூஸ்ல இருந்த என் போட்டோவை காட்டி காதலை ஒத்துக்கிட்ட'' என்றான்.
''ஆமா.. என் மனசில் உங்களுக்கான இடம் இல்லாமல் போனா என்ன செய்து இருப்பிங்க?'' என்று கேட்டாள்.
''அதான் உன் மனசில் நான் இருக்கேனு நல்லா தெரியுமே. அந்த தைரியம் தான்.'' என்றதும் நிலா புன்னகைத்தாள்.
அதனை கண்டவன் ''ஏய் பிராடு... கேடி... எதுக்குடி இப்படி எல்லாம் பேசி நேரத்தை ஓட்டலாம் என்று நினைக்கற... என்னை முதல் முறை பார்த்து திருடன்னு சொன்னல, இப்ப அதுக்கு தண்டனை அனுபவி'' என அவன் அவளை பிடிக்க, அன்று இதே அறையில் ஓடியது போல நிலா ஓட, ரூபன் துரத்தி பிடித்தான்.
அங்கே பேச்சுக்கு தடை செய்து, ரூபன் கள்வனாக அவளை களவான்டான். நிலாவும் விரும்பியே அந்த கள்வனிடம் தன்னை தொலைத்தாள்.
நான்கு மாதம் கழிய, நிலா தலை சுற்றல் வாந்தியெடுக்க பாக்கியம், அபிராமி அதனை கண்டு மகிழ்ச்சியில் மிதக்க செய்தார்கள்.
நிலா சாப்பிட ஏதேனும் செய்து அவளுக்கு ருசி பார்க்க, நேரம் கடக்க அபிராமியும் மகளோடு வந்து, தங்கி, கவனிக்க ஆரம்பித்தார்கள்.
ஒரு அன்னைக்கு இரு அன்னைகள் தாங்க, தங்கநிலா சத்தான உணவிலும் தாய்மையிலும் பூரிப்பில் நாட்கள் செல்ல, ரூபனோ மகன் பிறந்தால் இலக்கியன் என்றும், பெண் குழந்தை பிறந்தால் இளந்தளிர் என்று வைக்க முடிவெடுத்தான்.
ரூபன் கள்வனாக, நிலா கண்ணில் தோன்றி, அவனது காதலியாக நிலா மாறி ஒரு இளந்தளிருக்கு தாயாக மாறினாள்.
💙சுபம்💙
-பிரவீணா தங்கராஜ்
தங்கள் விமர்சனத்தை நாவல் discussion பகுதியில் முன் வைக்கலாம்.
Wonderful.story sis. Awesome narration sis. Ruby smart guy. Short and sweet story sis. Keep.rocking sis.
சூப்பர், எப்படியோ கள்வனின் காதலியைமனைவியா கரம் பிடிச்சிட்டான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Wonderful story sis. Short and very sweet❤️❤️❤️❤️❤️
-
முதலாம் சந்திப்பில்-7
4 weeks ago
-
முதலாம் சந்திப்பில்-2
1 month ago
-
முதலாம் சந்திப்பில்-14
1 month ago
-
முதலாம் சந்திப்பில்-13
1 month ago
-
முதலாம் சந்திப்பில்-12
1 month ago
- 25 Forums
- 215 Topics
- 754 Posts
- 1 Online
- 329 Members
