முதலாம் சந்திப்பில்-6
அத்தியாயம்-6
தனக்கு இப்படி ஆகிவிட்டது என்பதை ரூபன் தாயிடம் மறைத்து இருந்தான். அதையும் சொல்லி இருந்தான் நிலாவிடம்... பாக்கியம் ரூபனுக்கு முழுதும் குணம் ஆனதும் தான் தெரிவித்தான். தன்னை இது போல பார்க்க மனம் கலங்கி கொள்வார் என நிலாவிடம் சொல்லி இருந்தான்.
அப்பொழுது தாமஸ் அங்கிள் உள்ளே வந்து கொண்டிருந்தார். அவர் வந்ததும் நிலா
''வாங்க அங்கிள் என்ன இங்க.... உடம்புக்கு ஏதாச்சும்பண்ணுதா?'' என அக்கறையாய் கேட்டாள்.
''அதெல்லாம் ஒன்னுமில்லை மா... நீ ஹாஸ்டல் வராம இங்க ஒர்க் பண்றதா கேள்விப்பட்டேன்... அதான் பார்க்க வந்தேன்... பார்த்தா ரூபன் கூட இருக்க...'' என ரூபனை பார்த்து ''ஏன் ரூபன் உனக்கு இப்படி ஆகிடுச்சுனு அம்மாகிட்ட சொல்லலையா... ஒர்க் அதிகம் என்று சொல்லிட்டு வெளிய இருக்கறதா நம்பிட்டு இருக்காங்க... நீ என்னடா என்றால் கையில் குண்டுபட்டு இங்க இருக்க?'' என்றார்.
''அது போன தடவை அம்மா ஹாஸ்பிடல் வந்து கூடவே இருந்தாங்க ஒரே அழுகை தான் எனக்கு அது கடுப்பா ஆகிடுச்சு அங்கிள். அதான் இந்த முறை தெரிவிக்க கூடாது என்ற முடிவுல இருந்தேன்... பட் இங்க நிலா இருந்தாங்களா அதனால சுத்தமா சொல்ல தோணலை..'' என்றான் அவள் மீது பார்வை அகற்றாமல்.
தாமஸ் கவனித்து ''எங்க அவ அப்பா அம்மா போனதுக்கு பிறகு நிறைய நேரம் இங்க தான் இருக்கா... அதான் இப்பவும் அதே போல இருக்களோனு பார்க்க வந்தேன்... அவங்களுக்கு எல்லாமே இவ தான்... என்னை கடைசியா பார்க்க வரும் பொழுது கூட ஜோடியா வந்தாங்க... உயிர் போகும் பொழுதும் ஜோடியா போயிட்டாங்க..'' என்றார்.
''அங்கிள்.... அவங்க அம்மா வீட்டிலும் அப்பா ரோட் ஆக்சிடேன்ட்லையும் போனதா அம்மா சொன்னாங்க?'' என்று அவள் இருப்பதை எண்ணி நிறுத்தினான்.
''ஹ்ம்ம் ஆமாம் ப்பா.. திவாகர் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் 20 நிமிஷ பயணம் தான்... இரண்டு பேரும் ஒண்ணா தான் பைக்ல வந்தாங்க. அப்போ எப்படி அபிராமி வீட்டுக்கு போயிருக்க முடியும் உடனே திவாகர் கிளம்பி இருக்க முடியும்? திவாகர் வண்டி ஓட்டுற வேகத்துக்கு அவங்க இரெண்டு பேருமே ஒரே இடத்தில தான் இருந்து இருக்கனும் ஆனா வீட்டுக்கு எப்படி அபிராமி போனாங்க என்றே புரியல... ஆனா பாரு போனவங்க இரெண்டு பெரும் ஒரேடியா போயிட்டாங்க... கொஞ்சம் இந்த பிள்ளைக்காக ஒருத்தராவது உயிரோட இருந்து இருக்கலாம்'' என்றார்.
''சொந்தம் என்று வேற யாருமில்லையா ?'' என்றான் ரூபன்.
''திவாகருக்கு ரேவதி என்று தங்கை மட்டும் தான்... அவளும் அவளோட குடிகார கணவனும் தான். ஆனா ரேவதி இவங்க இறந்த செய்தி தெரியாதோ என்னவோ அந்த அம்மாவை காணோம்.... ரேவதி புருஷன் கூட ஏதோ சண்டை போட்டுக்கிட்டு எங்கோ போயிட்டாங்க என்று தகவல் தான் கிடைச்சது.'' என்றார்.
நிலா கண்கள் கண்ணீர் எல்லாம் வரவில்லை.. இந்த ஒரு வருடம் எல்லோரும் கேட்டு கண்ணீர் வடித்து எல்லாம் கடந்து இருந்தாள்.
''உங்க மாத்திரை'' என கொடுக்க ரூபன் வாயில் போட்டு, அவள் விழுங்க செய்து நீரை கொடுத்தாள். தாமஸ் அதனை கண்டு இருவரின் நெருக்கத்தை குறித்து கொண்டார். இது பாக்கியத்தின் காதில் சொல்லி முடிவு எடுக்க செய்ய வேண்டும்.
ஏற்கனவே இருவரின் ஜோடி பொருத்தம் கண்டு மனம் நிறைந்தவர்... இந்த முறை இவர்களிடம் கேட்பதற்கு பதில் பாக்கியத்தின் முடிவில் கேட்க வேண்டும் என கிளம்பினார்.
அவர் சென்றதும் ரூபன் நிலாவிடம் எதையும் கேட்கவில்லை. அவன் அவளின் நிலையை எண்ணி அவளோடு தான் திருமணம் செய்ய கேட்க வேண்டும். போன முறை போல ஏதேனும் மறுப்பில் முடிந்தால் என பொறுத்தான்.
ஒரு வருடம் பொறுத்தவனுக்கு இது சாத்தியம் தான்.
தாமஸ் நேராக சென்றது பாக்கியத்தின் வீட்டிற்கு தான்.
''வாங்க அண்ணா... உட்காருங்க...'' என வரவேற்றிட கொஞ்ச நேரத்தில் நிலா பற்றி சொல்லி முடித்தார்.
ரூபன் அங்கு இருப்பதையும்... சேர்த்தே.... இதை கேட்டு பாக்கியம் கலங்கி போனார்.
''பாருங்க அண்ணா அவனை போன முறை இப்படி ஆனப்பவே சொன்னேன்... இந்த வேலையே வேண்டாம் என்று கேட்டானா? அவன் நான் சொல்றதை எதையும் கேட்கறது இல்லை.... பொண்ணு பார்த்தா வேண்டாம் என்று சொல்றான்... வேலையும் விடமாட்றான் ... என் காலத்துக்கு பிறகு அவனை யார் தான் பார்த்துப்பாங்க..?'' என சேலையில் கண்ணீர் அழுத்தி துடைத்தார்.
''அதுக்கு தான் வந்திருக்கேன் மா... எனக்கு என்னவோ நாம அவனுக்கு முதலில் பார்த்தோமே நிலா அவளையே கட்டி வைக்கறது தான் நல்லதுனுபடுது... மருத்துவமனையில் கூட அவன் கூட அந்த பொண்ணு தான் இருக்கா... எனக்கு என்னமோ அவனுக்கு அவள், அவளுக்கு அவன்னு கடவுள் எழுதி வச்சி இருப்பதாகவேபடுது. எதுக்கோ நீயும் கொஞ்சம் கட்டாயப்படுத்தி கேட்டு பாரு.'' என்றே கிளம்பினார்.
மகன் மருத்துவமனை இருப்பதை கண்டு தாமஸ் கிளம்பும் பொழுதே பாக்கியமும் கிளம்பினார். நேராக வரும் பொழுது ரூபன் எழுந்து அமர்ந்து இருந்தான்.
அம்மா.'' என ரூபன் வரவேற்றான்.
''அப்படி கூப்பிடதடா நான் எதுக்கு இருக்கேன். இப்படி நீ கட்டிலில் படுத்து கிடைக்கும் பொழுது உனக்கு என்ன ஆச்சு என்று கூட தெரியாம வீட்டில் இருக்கேன்'' என அழுதார்.
''அம்மா தயவு செய்து அழாதீங்க போன தடவை அழுதே எனக்கு செம கடுப்பா இருக்கு...'' என்று கூற பாக்கியம் ஏதோ தேடி பார்க்க
''எங்கடா அவ?''
''யாரு...?'' என்றான் ரூபன்.
''அதான் டா தாமஸ் அண்ணா சொல்லிய பொண்ணு நிலா....'' என்று விசாரித்தார்.
''அடிபட்ட நேரம் இருந்து இப்பவரை இங்க தான் இருந்து கவனிச்சா.... எனக்கு கொஞ்சம் சரி என்றதும் ஹாஸ்டல் இப்போ தான் போன ஏன்ம்மா?'' என்றான்.
பாக்கியமோ ''ஒன்னுமில்லை சும்மா தான் கேட்டேன்'' என சொல்லி கொண்டார். மனதில் 'சே அவளை பார்க்க தான் ஓடி வந்தேன் இப்போ அவள் இல்லையா? ஹ்ம்ம் எனக்கு அவளை பார்க்க கொடுத்து வைக்கலை' என எண்ணி பேச கிளம்பும் நேரமும் வந்தது.
ரூபனுக்கு நிலா இருந்தால் சொல்லிவிட்டு செல்ல எண்ணி இருந்தான் ஆனால் அவளோ இந்த நேரம் பார்த்து ஹாஸ்பிடல் இருந்து ஹாஸ்டல் சென்றுள்ளாள்.
அவனுக்கு தெரியாது இவனுக்கு டிஸ்சார்ஜ் என்றதும் அவன் கிளம்புவதை எண்ணி கலங்கி அவள் இன்று ஹாஸ்டல் சென்றாள்.
வீட்டுக்கு வந்ததும் பாக்கியத்திடம் நிலா பற்றி சொல்ல எண்ணி வேண்டாம் என உள்ளுக்குள் நினைத்தான். முதலில் நிலாவிடம் மன்னிப்பு கேட்டு பிறகு காதல் சொல்லி ,அம்மாவிடம் சொல்ல வேண்டும்' என முடிவெடுக்க அவனின் முடிவு செயல்படுமா என்று காலம் முடிவெடுக்கும்.
இப்படி ஒவ்வொரு மனநிலை எல்லாம் மாற்ற நேரம் கூடி வருமா? ரூபனுக்கு வந்ததும் தீர்க்க வேண்டிய வேலையாக பல இருந்தன.
அதை எல்லாம் தாண்டி அவனுக்கு நிலா நினைவு தாக்கியது. எப்பொழுதும் உறக்கத்தில் கனவில் அவள் அன்று முதல் முறை சந்திப்பின் பொழுது அவன் மீது படர்ந்த நிலையும் அவன் அவள் இடை பற்றிய நிலையும் உறக்கம் வராமல் படாத பாடுபடுத்தும். கொஞ்ச நாள் அதன் தாக்கம் தன்னை தீண்டாமல் இருக்க மும்பையில் இரவிலும் டியூட்டி பார்த்தான்.
இப்பொழுது நிலா திருமணம் ஆகாதவள் என்றதும் மீண்டும் அவளின் நினைவு தாக்கியது. நான்கு நாட்கள் ஆனது. அவன் முன்பு போல தோற்றம் கொள்ள உடை உடுத்தி வழக்கம் போல பணிக்கு தயாரானான்.
''டேய் இப்போ தான் குண்டு அடிபட்டு நல்லாச்சு கொஞ்சம் நல்லானதும் கிளம்பிட்ட?'' என்றார் பாக்கியம்.
''ம்மா முக்கியமானவங்களை பார்க்க போறேன் இந்த வேலை ரொம்ப முக்கியம்'' என பீடிகை போட்டு கிளம்பினான்.
எப்பொழுதும் தனது அலுவலக வண்டி வந்து காத்திருக்க இன்றோ அவனின் இருசக்கர வாகனத்தை உயிர்பித்தான்.
நேராக அந்த வண்டி நின்றது நிலா பணிபுரியும் மருத்துவமனைக்கு தான்.
மருத்துவனையில் வந்து சேர்ந்த ரூபனை அங்கிருந்த மற்ற பெண்கள் கண்கள் விழுங்கி பார்க்க, அவனோ நிலாவை தேடியபடி நின்றான்.
எல்லா நர்ஸ்ஸூம் இருக்காங்க என்னை ஏங்க வைக்கிற அவயெங்க? என்றவன் மனதில் நினைத்து ஒரு பெண் செவிலியிடம் கேட்க, அவனை வினோதமாக பார்த்து இன்னும் எண்ட்ரன்ஸ்புக்ல சைன் இல்லை வரலை போல' என கூறி சென்றாள். ரிசப்ஷன் சேரில் அமர வெளியே பார்வை பதித்தான்.
நர்ஸ் உடை மாற்றும் இடத்தில் சென்ற ஒருவள் மற்றொருவளிடம்
''ஏய் அன்னிக்கு நிலா ஒரு போலீஸ்காரனுக்கு விழுந்து விழுந்து கவனிச்சலே அவன் நிலாவை மடக்கிட்டான் போல காலையிலே வந்து அவளை தேடறான்....'' என்றாள் சுந்தரி.
''அவன் மட்டுமா மடங்கிட்டான் நிலாவும் தான் ரொம்ப நல்லவள் மாதிரி அமைதியா இருந்தா இப்போ போலீஸ்காரன் என்றதும் என்ன நினைச்சாளோ, அவனை ரொம்ப தான் கவனிச்சா... நான் ஒரு இன்ஜெக்ஷன் தான் போட போனேன் தடுத்து அவளே ட்ரிப்ஸ்ல போட்டுட்டா... அப்பவே எனக்கு ஏதோ தோணுச்சு...'' என்றாள் வேணி.
''ஏய் என்னப்பா நீங்க அவள் ஒன்னும் அடிக்கடி ஆளை மாற்றும் ஆளும் இல்லை அழகா இருக்கான் என்று வழியறவளும் இல்லை அவர்களுக்குள் வேற என்னவோ.... நிலாவுக்கு ஏற்கனவே அவனை தெரியும் போல... நீங்களா எதையும் தவற பேசா... தி...'' என ரேணுகா முடிக்கும் முன்னே நிலா அங்கிருந்த ஆடை மாற்றும் அறையில் இருந்து அமைதியாக வெளியே வந்தாள்.
அங்கிருந்த யாரின் முகத்தையும் அவள் நேராக பார்க்கவில்லை.... மற்றவர்களும் பேசிய பேச்சுக்கு பயந்து அமைதியாக இருக்க செய்திட, நிலா வெளியேறினாள்.
''போச்சு எல்லாம் அவள் இருக்கா என்று தெரியாம பேசியாச்சு அவள் நம்மளை புகார் சொல்ல போறா...'' என்றாள் சுந்தரி
''சே சே அவள் அப்படி செய்யற ஆள் கிடையாது... மணி அவளிடம் லவ் சொல்லி டார்ச்சர் செய்தப்ப அவனை புகார் செய்யலை... அட்வைஸ் தான் பண்ணி அனுப்பினா...'' என ரேணுகா இம்முறையும் நிலாவுக்கு பரிந்தபடி பேசினாள்.
''சரி அப்படியே இருந்தாலும் அவள் அந்த போலீஸ்காரனிடம் தனிப்பட்ட அக்கறை செலுத்தினா என்பது உண்மை தானே... ஆபரேஷன் தியேட்டர்ல அவ அழுதா. டாக்டர் சித்திக் கூட அவளிடம் தெரிந்தவரா என்று கேட்டார்... நாமளும் அதே தானே பேசினோம்... அப்போ தப்பு என்ன?'' என்றாள் வேணி.
''டாக்டர் கேட்டது வேற, நாம பேசிய முறை வேற அக்கா, என்ன இருந்தாலும் இந்நாள் வர அவளிடம் நல்லா பழகிட்டு நாம பேசியது தப்பு தான். இதை அவளிடமே கேட்டு இருக்கலாம்'' என ரேணுகா செல்ல, சுந்தரி மற்றும் வேணி இருவரும் தவறு தானோ என்றே எண்ணி வருந்தினார்கள்.
நிலா ரிசப்ஷன் அருகே வந்து கையெழுத்து போட்டு ரூபனை பார்க்காமல் செல்ல, ரூபனோ அவளை வழி மறித்து நின்றான். அவளோ முறைக்க அவள் எதற்கு முறைக்கின்றாள் என அறியாமல் ரூபன் பேசினான்.
''ஹாய் உனக்காக தான் வெயிட் பண்ணினேன். அன்னிக்கு உங்கிட்ட சொல்லாமல் கிளம்பிட்டேன். தேடினியா? நீ போன கொஞ்ச நேரத்தில் அம்மா வந்தாங்க உன்னை பற்றி கேட்டாங்க உன்னை பார்க்க... ரொம்ப ஆசைபட்டாங்க....'' என்றதும் அவள் கண்கள் கூர்மையோடு பார்க்க ''ஐ மீன் அம்மா என்னை கவனிச்சுக்கிட்ட உன்னை பார்க்க ஆசைபட்டாங்க...'' என நிறுத்தினான்.
''ஓகே. இப்ப வழி விடுங்க...'' என எதற்கும் பதில் சொல்லாமல், அதே சமயம் அவன் என்ன பேசினான் என்று பொருட்படுத்தாமல் செல்ல பின்னாடியே வந்தான்.
''என்னாச்சு? தலைவலியா? ஒரு மாதிரி இருக்க?'' என்றான்.
அதே நேரம் வேணி சுந்தரி மற்றும் ரேணுகா மூவரும் வந்து நிற்க நிலாவோ ''என்ன சார் வேணும் ஏதோ தெரிந்தவர் அதனால் கூடவே இருந்து பார்த்துக்கிட்டேன். அதுக்கு இப்போ என்னை தேடி வந்து வழிமறிச்சு பேசிட்டு இருக்கிங்க? லுக் எனக்குன்னு யாருமில்லை என்றாலும் ஏதோ நல்ல பேர் சேமித்து வச்சியிருக்கேன். இப்படி பின்னாடி வந்து பேசி அதை ஸ்பாயில் பண்ணிடாதிங்க... நல்ல பேரை ஒரு முறை இழந்தால் திரும்ப அந்த நல்ல பேர் எடுக்க முடியாது.'' என கத்திவிட்டு, அங்கிருந்த அறைக்கு சென்று ஒரு குழந்தைக்கு இன்ஜெக்ஷன் போட போனாள். கூடவே அக்கதவை சாற்றினாள்.
ரூபனுக்கு ஒன்றும் விளங்கவில்லை அவன் அவளை பிடிக்கவில்லை என்று, அவளிடம் நேரிடையாக சொன்ன அன்று கூட இவ்வாறு முகத்தில் அடித்தது போல பேசவில்லை இன்று ஏன்?
தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
-
முதலாம் சந்திப்பில்-15 (முடிவுற்றது)
3 weeks ago
-
முதலாம் சந்திப்பில்-7
4 weeks ago
-
முதலாம் சந்திப்பில்-2
1 month ago
-
முதலாம் சந்திப்பில்-14
1 month ago
-
முதலாம் சந்திப்பில்-13
1 month ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 2 Online
- 329 Members
