முதலாம் சந்திப்பில்-5
அத்தியாயம்-5
நிலாவை பற்றி எண்ணி கொண்டே வந்தவன் சிரிப்புடன் வீட்டுக்கு வர
''என்ன அதிசயம் டா வரும் பொழுதே சிரிச்சுக்கிட்டு வர்ற என்ன ஆச்சுடா'' என்று மகனின் மலர்ச்சி அன்னையையும் தொற்றியது. அன்னை கேட்டதும் 'சே இப்படியா பிரகாஷ் கனவு உலகத்தில் தனியா சிரிச்சுகிட்டே வருவ.' என்றவன் ''ம்மா அது ஒன்னுமில்லை ம்மா.'' என்றான்.
''அது என்னவோடா நான் பார்க்கும் பொழுது இப்படியே சந்தோசமா இரு.. அது போதும்...'' என்றார்.
அம்மாகிட்ட இப்பவே நிலாவை பற்றி சொல்லிடலாமா.'' என தயங்கிநின்றான். முதலில் நிலாவிடம் பேசுவோம் என முடிவு செய்தான். பின்னர் குளித்து முடித்து ப்ரெஷ் ஆகி சாப்பிட்டு முடித்து டிவியில் அமர்ந்தான்.
''தாமஸ் அண்ணா நேற்று வந்தாங்கப்பா...'' என்றார் தாய். நிலா பற்றி பேசலாம் என ரூபன்யோசிக்க
''ரூபன் உனக்கு பொண்ணு பார்க்க கூட சொன்னேன்.'' என்றார்.
''என்ன சொன்னார்ம்மா.. ஏதாவது புது நியூஸ்?.'' என்று கேட்டான்.
''என்ன சொல்ல.. உன்னை விசாரிச்சார்... அப்பறம் எல்லாரையும் பற்றி சொல்லிட்டு இருந்தார்... ரூபன் உனக்கு ஒரு பொண்ணை பார்த்தோமே... நினைவு இருக்கா? நான் தான் அந்த பொண்ணோட போட்டோ கூட பார்க்கலை'' என்றார்.
ரூபன் இப்படி ஒரு பேச்சு ஆரம்பிக்க தானே கேட்டான். ''இருக்கும்மா தங்கநிலா...'' என்றவன் உடனடியாக நாக்கை கடிந்து கொண்டான். 'ஆஹா அம்மா நோட் பண்ணினாங்களா தெரிலை.' என மெல்ல நிமிர்ந்து பார்க்க
''டேய் பேர் எல்லாம் நல்லா நினைவு வச்சியிருக்க?'' என்றார்.
''ம்மா என் வேலையில் நிறைய நினைவு வச்சியிருப்பேன்... இது ஒரு பேர் நினைவு இல்லாமலா போகும்.... சரி அந்த பொண்ண பற்றி என்ன சொன்னார்...' என்ற கேள்வியில் நின்றான்.
''அதான் சொல்ல வந்தேன்.. அவர் அந்த பொண்ணை பற்றி சொல்லியதும் மனசு ரொம்ப உடைந்து போச்சுடா...'' என்று சொல்ல என்ன ஆச்சு நிலாவுக்கு?என புரியாமலே பார்த்தான்.
''என்னாச்சும்மா சொல்லுங்க...''என்றான்.
''அந்த பொண்ணோட அம்மா அப்பா இப்போ உயிரோட இல்லையாம்டா.. அப்பா லாரி விபத்திலும், அம்மா கேஸ் வெடித்தும் இறந்துட்டாங்களாம்...'' என்றதும் ரூபனுக்கு கவலை தாக்கியது.
''எப்பம்மா...?'' என்றான் சோகமாக.
''இரண்டும் ஒரே நாளில் தான் நடந்து இருக்கு... பார்றேன் அந்த பொண்ணு நிலைமை... கேட்கவே கஷ்டமா போச்சுடா... என்ன இருந்தாலும் அவளை பார்க்கலை என்றாலும் எனக்கு அந்த பொண்ணு மேல ஏதோ சொந்தம் மாதிரி அவளோட கவலை எனக்கு வந்துடுச்சு...'' என்றதும் ரூபனுக்கு மனம் மிகவும் வலித்தது.
இன்று அவளை பார்க்கும் பொழுது ஏதோ ஒன்று குறைவாக தோன்றியது. அது அவளின் மகிழ்ச்சி தான்.. தந்தை தாய் இறந்த பின் அவளுக்கு சிரிப்பு குறைந்து விட்டது போல. என்னை பார்த்து முதலில் மின்னல் அடித்த அவளின் கண்கள் பின்னர் தவிர்த்தது எதனால.. கடவுளே...எனக்கு இது முதலில் தெரிந்தா அவளை பார்த்தும் பேசாமல் வந்திருக்க மாட்டேன்... ஏதாவது பேச முயன்று இருப்பேன்.
''ம்மா ஒன்னு சொல்லட்டுமா...''
''என்னடா மற்றவங்க பேச்சு பேசக்கூடாது அதனே... இனி பேச மாட்டேன் ப்பா'' என்றார் மகனுக்கு பயந்து
''அதில்லை ம்மா.. அவளை மார்னிங் ஏர்போர்ட்டில் பார்த்தேன். டூட்டி டிரஸ்ல தான் வந்திருந்தா..'' என்றான். அன்னை ஏதேனும் எண்ணிக்கொள்வாரோ என்றாலும் சொல்லி விட்டான்.
''ஹ்ம்ம் இப்போ நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் ஹாஸ்பிடலில் தான் இருக்கறாலாம்... ஹாஸ்டலில் தங்க வச்சியிருக்கார் தாமஸ் அண்ணா'' என்று சொல்ல சொல்ல எல்லாவற்றையும் காதில் வாங்கி கொண்டான்.
அறைக்கு வந்து கட்டிலில் விழுந்தவன் 'நிலா நீ எப்படி இந்த வலியை தாங்கின? கேட்ட எனக்கே மனசு தாங்கலை.. உன்னை இனியும் தனியா விட மாட்டேன் ஆனா அம்மாகிட்ட இப்போ பேசினா சரி வருமா? ஏதோ இரக்கத்தில் உன்னை கட்டிக்க முடிவு செய்தேன்னு நினைச்சுட்டா... முதலில் உன் மனசுல இடம் புடிக்கனும்டி.'' என நித்திரையில் ஆழ்ந்தான்.
அங்கு தங்கநிலாவோ இன்று அவனை பார்த்ததிலிருந்து ரூபன் நினைவே வாட்டி கொண்டு இருந்தது. இவனை பார்க்காமல் இப்படி பத்து மாதமாக இருந்த பொழுதே தனது நித்திரையை பறித்தவன். இன்று பார்த்த பின் அவளால் நிம்மதியாக தூங்க முடியுமா.?
அவனை கண்டா நொடி தனது மனம் அவனை கட்டிப்பிடித்து கதற துவங்க இருந்த மனதை, யாரோ ஒரு பெண் வந்தபின் தான் மாற்றி கொண்டாள்.
அந்த பெண் மட்டும் வராமல் போனாள். அவனை அணைத்து இருப்பேனோ என்னவோ.? கடவுளே நல்ல வேளை... அவனை பிடிக்கலை என்று சொல்லிட்டு போனாலும் இந்த மனசு என்னனு தெரிலை அவனையே சுத்துது... ஏன் அப்பா அம்மா எனக்குன்னு பார்த்த வரன் என்பதாலா.?
அம்மா அவனை என் கணவன் என்ற ரீதியில் பேசியிருந்தார்கள். அப்பா அவனை பற்றி பேசி பேசியே, என்னை அவனிடம் சாய்க்க வைத்து விட்டு போயிட்டார்.
'ரூபன்.... எதுக்கு டா என்னை அன்னிக்கு பார்த்த, உன் மேல மொத்தமா விழுந்த பொழுதும் சரி, நீ என் இடையில் கையை பதித்து பார்த்த பார்வையும் சரி, என்னால் மறக்கவே முடியலை. அம்மா அப்பாவுக்கு நீ தான் என் புருஷன் என்று முடிவெடுத்து இருந்தாங்க. தாயின் அரவணைப்பு வேண்டும் என்று தோன்றின.
அடுத்த நாள் காலையில் டூட்டியில் ஜாயிண்ட் செய்து முடித்தான். ஒரு வாரம் போகவும் சிலை கடத்தல் பற்றி கேஸ் பையில் செய்து அதிகாரியிடம் முன்னிறுத்தினான்.
தலைமை அதிகாரி ஆதாரம் இருக்கா என்று மட்டும் கேட்டார்.
ஆதாரம் இல்லாமல் ரூபன் பேசமாட்டான் என்பதை அனுபவத்தில் உணர்ந்த அவர் இருந்தும் அப்படி கேட்க ''இருக்கு சார்' என எடுத்து காட்டினான். ஆனால் ஆதாரங்கள் எல்லாம் அவன் ஒரு காபி வைத்துக் கொண்டான்.
தலைமை அதிகாரி சிலை கடத்தல் விவாகரத்திற்கு, அவனுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். ரூபன் அதற்கான வெற்றிக்கு காத்திருந்து கைது செய்ய மற்ற வேலையில் இறங்கினான்.
அன்று செவிலியர்கள் இருவர் குண்டு துளைத்து ஒரு போலீஸ் அட்மிட்டாகி இருப்பதை பேசியபடி செல்ல ஆபரேஷன் அறைக்கு மாஸ்க் அணிந்து வேகமாக சென்றாள்.
வழியில் அது ரூபனாக இருக்க கூடாது என்றெண்ணி பிரார்த்தனை செய்தாள். ஆனால் அவளின் பிரார்த்தனை கடவுளுக்கு எட்டவில்லை.
கையில் குண்டு துளைத்து ரத்தம் வழிந்து பாதி மயங்கிய நிலையில் இருந்தது ரூபன் தான்.
டாக்டர் சித்திக் நிலாவுக்கு தெரிந்தவன் என்றெண்ணி அமைதியாக மாறி அவரின் பணியினை மேற்கொண்டார். கூடவே இருந்த நர்ஸ் அனுப்பிவிட்டு நிலா அருகே உதவி புரிந்தாள்.
அரை மயக்கத்தில் இருந்த ரூபனுக்கு மங்கிய கண்களில் நிலா தெரிய அது அவனின் பிரம்பை என்றே முடிவு கட்டினான்.
டாக்டர் குண்டை எடுத்துவிட்டு ஆபரேஷன் முடிந்து சித்திக் கேள்வி கேட்டார்.
''என்ன நிலா உனக்கு தெரிந்தவரா?'' என்று அங்கிருந்த நர்ஸை அனுப்பிவிட்டு அவளிருக்க கேட்டார்.
''ஆமா டாக்டர்.'' என்று சொல்லும் பொழுதே கண்கள் கலங்கி போன சுவடு தெரிந்தது.
''அவர் கம்ப்ளீட் குணம் ஆகற வரை கூடவே கவனிச்சுக்கோம்மா'' என நகர்ந்தார்.
மயக்கத்தில் இருத்தவனின் அருகே நிலா மட்டும் இருக்கா, நிலா கண்கள் அருவியாய் பொழிந்தன.
'இவனுக்கு அடிபட்டா எனக்கு எதுக்கு அழுகை வருது. உன்னை அந்த அளவுக்கு விரும்பறேனா?' என அவளிடமே கேட்டு கொண்டாள்.
மருந்தை ட்ரிப்ஸ் மூலமாக ஏற்றி கூடவே இருந்தாள்.
ரூபன் கண் விழிக்கும் சமயம் தன் அருகே, மிக நெருக்கத்தில் சேரில் ஒரு நர்ஸ் அமர்ந்து இவனின் பெட்டில் சாய்ந்து உறங்குவதை கண்டான்.
கொஞ்சம் எழுந்து கொள்ள முயற்ச்சிக்க அதன் அசைவில் கண் விழித்த நிலா நிமிர்ந்தாள்.
''நிலா..'' என்று சொன்னவன். பிறகே அவன் நடப்பை உணர்ந்து
''என்னாச்சு எதுக்கு எழுந்துக்கறிங்க..? ஸ்ட்ரேயின் பண்ணிக்காதிங்க படுங்க... என்ன வேணும் சொல்லுங்க?'' என பதறினாள்.
''இல்லை சாய்ந்து உட்காரணும்'' என்று காரணம் சொன்னதும் அவனுக்கு உதவி செய்தாள்.
''நீ இங்க தான் ஒர்க் பண்றியா?'' என்று இவளை இங்கே கண்டதில் குண்டு பாய்ந்ததை கூட மறந்தான்.
''ஹ்ம்ம்......''
''தண்ணீர் வேணும்'' என்றான். நிலா அவளின் பேக் எடுத்து அதில் இருந்த நீரை கொடுக்க வாங்கி பருகினான்.
அவளிடம் எப்படி அவளின் தாய் தந்தை பற்றி கேட்பது என்று யோசித்தவன்.
''நீ எப்படி இருக்க?'' என்றான்.
''ஹ்ம்ம் நல்லா இருக்கேன்....... நீங்க'' என்றாள்.
''ஹ்ம்ம் குட். நேற்று கொஞ்சம் கவனம் சிதறிடுச்சு.... அதான் குண்டு பட்டுடுச்சு...''
''என்னாச்சு கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்ல?'' என்றவள் கண்ணீர் சட்டென மறைந்தாள்.
''பச் ....... சிலை கடத்தல் ரொம்ப நாளா இருந்துச்சு.... அவங்களை பிடிக்க போகும் பொழுது எதிர்பாராத விதமா குண்டு பட்டுடுச்சு... அவங்ககிட்ட கன் இருக்கும் என்று யோசிக்கலை.. சடனா கைது செய்வதால் இருக்காதுனு நினைச்சேன். வச்சி இருந்தாங்க... இட்ஸ் மை மிஸ்டேக்'' என்றவன் அவளை நர்ஸ் உடையில் பார்த்தான்.
சேலை தான் உடை என்றாலும் அவன் அன்று தீண்டிய இடையை பார்வையால் தேடினான். அதுவோ அவளின் சேலையால் முழுதும் மறைந்து இருந்தது.
''அன்னிக்கே உங்கிட்ட பேசணும் என்று இருந்தேன்.'' நிலா பார்வை நிமிர அவன் எப்படி ஆரம்பிக்க என மீண்டும் தடுமாறினான்.
''அன்னிக்கு தான் மறுபடியும் வந்தேன்... ஏர்போட்ல.. இங்க.... உன்னை சந்திப்பேன் என்று நினைச்சேன்... ஆனா வந்த உடனே என்று நினைக்கலை.. அதான் பேச்சு வரலை... இப்போ எங்க இருக்க?'' என்று கேட்டதும் அவளுக்கு புரிந்து விட்டது. தாய் தந்தையர் இறப்பு அவனுக்கு தெரிந்து இருக்கின்றது. தாமஸ் அங்கிள் சொல்லாமல் இருப்பாரா?!
''ஹாஸ்டல்...'' என கூறியவள் எதுவும் கூற முடியாமல் தவிக்க அவன் கேட்க முடியாமல் தவித்தான்.
இருவரின் மன இறுக்கம் புரிந்தோ என்னவோ அதேநேரம் ஒரு குழந்தை மருந்தை குடிக்க மறுத்து நின்றது. அடுத்த அறையில் இருக்கும் சிறு குழந்தை வேறொரு நர்ஸ் வந்து ''தங்கநிலா அந்த குட்டி வாலு இன்னிக்கும் மருந்து சாப்பிட மறுக்குது நீ போய் பார்றேன்'' என்றதும் ஓடினாள்.
''சாரி சார் அவள் போன ஏமாற்றி ஊட்டிடுவா... அதான்'' என நகர்ந்தார் அப்பெண்மணி.
கொஞ்சம் கடினப்பட்டு எழுந்த ரூபன், பக்கத்து அறைக்கு சென்று எட்டி பார்த்தான்.
நிலா அதற்குள் ஒரு நிலா கதை கூறி முடித்து மருந்தை புகட்டி முடித்தாள்.
''நிலா ஆன்ட்டி உங்க ஸ்டோரி சூப்பர்.'' என்று அவளின் கன்னத்தில் முத்தமிட்டது. நிலா மகிழ்ச்சியோடு அவளின் கன்னத்தில் முத்தமிட்டு திரும்பி நடக்க ரூபன் மென்னகையோடு எதிரே இருக்க வெட்கம் கொண்டு வெளியேற ''கியூட்......'' என்றான்.
''என்ன....?'' என்றாள் அவள்.
''இல்லை ரொம்ப அழகா மருந்து கொடுத்த... அந்த குட்டி பாப்பா பேர் என்ன'' என்றான்.
''கனி...'' என அவனை அறைக்குள் நுழைந்ததும் ''நீங்க எதுக்கு ஸ்ட்ரையின் பண்ணிட்டு வந்திங்க... குண்டு எடுத்து இருக்கு பெயின் இருக்கும். டாக்டர் வந்தா என்னை திட்டுவார். நீங்களும் இப்படி ஒஓய்வு எடுக்கமா எழுந்துக்க கூடாது'' என்றாள்.
அவனை மெத்தையில் ஏற உதவி புரிந்து கொண்டு, அவனோ இடையை பற்றி தள்ளாடி ஒரு வழியாய் அமர்ந்தான்.அவளுக்கோ அவன் இடையை பற்றியதும் இதயம் தாறுமாறாக எகிறியது.
''பச் இது முதல் தடவை இல்லை....'' என்றான். இவன் எதை பற்றி சொல்றான் இடையை பற்றியதா...? என்று யோசிக்க
''குண்டு உடலில் பாய்ந்தது... ஏற்கனவே மும்பைல ஒரு முறை பட்டு இருக்கு ஆனா அது நெஞ்சில்ல' என்றதும் நிலா துடித்து நிமிர்ந்தாள்.
''என்ன சொல்றிங்க... எதுக்கு இப்படி உயிர்ல விளையடரிங்க..?'' என்றாள். கூடுதலாக அவனின் சட்டை பட்டன் திறந்து தேடினாள்.
அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அவளோ பதட்டத்தில் அவனின் நெஞ்சில் கண்கள் பதித்து தேட ஒரு தையல் இருந்த அறிகுறி மட்டும் இருந்தன.
''இப்பவும் இங்க பெயின் இருக்கா??' என்று நிலா கேட்டாள்.
''இல்லை...... அது நடந்து ஒரு ஆறு மாசம் இருக்கும்... ஒரு மாசம் ட்ரீட் மென்ட் எடுத்தேன்... நொவ் கம்ப்ளீட் கிளீயர்...'' என சிரிக்க அவனின் சிரிப்பில் தான் தனது செய்கை உணர்ந்தாள் தங்கநிலா.
''சாரி.. நர்ஸ் என்பதால் உடனே உங்களுக்கு வலி இருக்கானு ஆராய்ந்தேன்.'' என மழுப்பினாள்.
''இட்ஸ் ஓகே...'' என்றான்.
ரூபனை பக்கத்தில் இருந்து பார்த்து கொண்டாள். காலை மாலை இரவு என்று அங்கே இருந்து பார்த்துக் கொண்டாள்.
தொடரும்
பிரவீணா தங்கராஜ்
-
முதலாம் சந்திப்பில்-15 (முடிவுற்றது)
3 weeks ago
-
முதலாம் சந்திப்பில்-7
4 weeks ago
-
முதலாம் சந்திப்பில்-2
1 month ago
-
முதலாம் சந்திப்பில்-14
1 month ago
-
முதலாம் சந்திப்பில்-13
1 month ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 2 Online
- 329 Members
