Forum

முதலாம் சந்திப்பில்...
 
Notifications
Clear all

முதலாம் சந்திப்பில்-4

1 Posts
1 Users
1 Reactions
92 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#92]

அத்தியாயம்-4

இதோ மூன்று நாட்கள் சாப்பிடாமல் கிடந்தது மயங்கி சரிந்தவளை தாமஸ் தான் பார்த்து அவள் வேலை செய்யும் இடத்திலே சேர்த்து பார்த்தார். கூட பணிபுரியும் மாலினி தான் பார்த்து கொண்டார்.

''ஏன் டி இப்படி இருக்க? கஷ்டம் தான் அதுக்காக இப்படி இருந்தா உன்னை யார் பார்க்கறது?''

''நான் யாருக்காக வாழனும் மாலு சொல்லு... எனக்கு என்று யார் இருக்கா? நானும் என் அப்பா அம்மா கூடவே போய்டலாம் ஆனா இன்னும் ஏன் இப்படி இருக்கேன்னு தெரிலை'' என்றாள் அழுகையோடு. 

''நீயே இப்படி சொல்லலாமா? நீ உயிரின் மதிப்பு தெரிந்தவள் தானே நீ... அப்படி இருக்க இப்படி பேசலாமா? நீ மற்றவர்களுக்கு சேவை செய் கடவுள் உனக்கு என்ன தரணுமோ அதை உனக்கு தருவார்'' என்றாள் மாலினி. 

''இனி எனக்குனு கடவுள் தருவதற்கு என்ன இருக்கு?'' என்றவளோ 'பிடித்த அவன் எங்கயோ போயாச்சு... அப்பா அம்மா கடவுளிடம் போயாச்சு' என மனதில் நினைத்தவள் அழுதுகொண்டே இருக்க, தாமஸ் தான் 'இனி அவள் வீட்டில் தனியாக இருக்க வேண்டாமென ஹாஸ்டலில் ஏற்பாடு செய்து விட்டார்.

ஒரு வருடம் போனது.

நிலா கடமைக்கு வேலை சென்றாலும் அவள் அங்கு சென்றதும் மனநிறைவுடன் பணிபுரிவாள். மக்களுக்கு இந்த நர்ஸ் முறையில் சேவை செய்வது கூட அவளுக்கு நிம்மதி அளித்தது.

ரூபன் பிரகாஷ் நினைவு, அப்பா அம்மா நினைவு என காலம் போய் கொண்டிருந்தது.

ரூபன் பிரகாஷோ தன்னை மாற்ற வேலையில் திணித்து கொண்டான். பிடிபடாத கேஸ் எதுயென தேடி தேடி பிடித்து அதில் வெற்றி கண்டான். அவன் நிலாவை மறக்க முயன்று அசுரவேகத்தில் தனது துறையில் முன்னேறினான்.

என்ன தான் பணியில் முன்னேறினாலும் தாயின் மனம் அவன் திருமணம் முடிந்து தந்தை என்ற ஸ்தானம் அடையவே நினைக்கும்.
''ஏன் பிரகாஷ் என்னடா இது இப்படி திருமணத்தை தள்ளி போட்டுக்கிட்டே இருக்க? எனக்கு என் காலம் முடியறத்துக்குள் உன் திருமணத்தை கண்குளிர பார்க்கணும். இப்படி யாரையும் போட்டோ பார்க்காமலே வேண்டாம் என்று சொல்ற...? காலேஜி படிக்கும் பொழுது எவளையாவது விரும்பினியாடா சொல்லு அவளையே போய் பெண் கேட்டு முடிக்கிறேன்'' என்று சொன்னார்.  

''ம்மா லவ் பண்றவங்களுக்கு இப்படி உன்னை போல ஒரு அம்மா கிடைச்சா போலீஸ் ஸ்டேஷனில் கல்யாணம் நடக்காது. ஆனா அம்மா எனக்கு அப்படி லவ் எல்லாம் இல்லை. அதுக்குன்னு பார்க்குற பொண்ணை எல்லாம் கட்டிக்கவும் முடியலை'' என்று பதிலளித்தான். 

''அப்போ என்ன தான் பண்ண போற?''

''என் லைப் ஸ்டைல்க்கு தனியா இருக்கறது தான் பெட்டர் என்னை இப்படியே விட்டுடுங்க'' என்று முடிவாய் சொல்ல பாக்கியம் கண் கலங்கி போனார்.
''ஏன் டா உன்னை படிக்க வச்சி ஆளாக்கி இப்படி ஒரு லெவல் வந்து பார்க்கவா இருந்தேன். உனக்குன்னு ஒரு குடும்பம் குழந்தை என்று தானே நான் ஆசைப்படறேன் அது தப்பா டா?'' என்று விடாமல் கேட்டார். 

''சரி நான் சென்னை மாற்றல் வாங்க போறேன். அங்க போய் திரும்ப பெண் பாருங்க ஆனா... என்கிட்ட எதுவும் கேட்காதீங்க... உங்களுக்கு ஓகே என்றால் முடிச்சுடுங்க'' என்று மனமின்றி சொல்லி கிளம்பினான்.

''எப்போ டா மாற்றல்?''  என்றதற்கு "ஒரு வாரம் இருக்கும்'' என்றான்

ஒரு வாரம் ஒரு யுகமாக.. பாக்கியம் தான் முதலில் சென்னை வந்தார். பிரகாஷ் ஏதோ பணிக்காரணமாக இன்னும் இரண்டு நாள் கழித்தே வர நேர்ந்தது.
பாக்கியம் வந்ததும் முதல் ஆளாக தெரிந்தவர்கள் எல்லாம் தேடி வந்து பார்த்து சென்றார்கள். அதில் ஒருவன் சிவா. பிரகாஷின் தற்பொழுதைய போன் எண்ணை வாங்கி பேசினான்.

''மச்சி சிவா டா... என்னடா சொல்லாம கொள்ளாம போய் ஒரு வருஷம் ஆளே காணோம்'' என்று ஆர்ப்பாட்டமாய் கேட்டான். 

''அது டூட்டி அப்படி டா. சரி உன் கல்யாண வாழ்கை எப்படி போகுது?'' என்று மனதை மறைத்து கேட்டான். 

''பைன் டா.. கொஞ்ச நாள் அவளுக்கு ரொம்ப கஷ்டமான நாட்கள் மூன்று மாசம் கழிச்சு தான் கல்யாணம் செய்தேன். நீ இங்க தானே வருவ ஒரு நாள் கூட்டிட்டு வர்றேன்'' என்றான். 

''ஹ்ம்ம் அம்மா நம்பர் கொடுத்தார்களா?'' என்று கேட்டான். 

''ஆமா டா நான் தான் கேட்டு வாங்கினேன். நீ நாளைக்கு வருவதா சொன்னதால் கால் பண்ணினேன். டேய் நீ வந்ததும் கால் செய். அங்க தான் என் ஒய்ப் ஒர்க் பண்றா நீ வரும் பொழுது பிக்கப் பண்ணிக்க சொல்லி இருக்கேன் உன்னை அவ ஏற்கனவே பார்த்து இருக்கா சோ கூட்டிட்டு வர்றேன் என்று சொல்லிட்டா... அதுக்கு தான் முக்கியமா போன் செய்தேன்'' என்று குறிப்பிட்டு கூறினான். 

''அவ..அவங்க எதுக்கு டா நானே வந்துடுவேன்... போலீஸ் கார் வரும்''
''பரவாயில்லை... உன்னை மீட்டி பண்ணனும் என்று சொன்னா அவ உன்கூட ஏதோ பேசணுமாம்'' என்று சொல்ல ரூபனுக்கு என்னவாருக்கும் என்ற ஆவல் தோன்றியது.

''சரி டா நாளைக்கு நேரில் பார்ப்போம் என அணைத்தான்.

சென்னை போகும் பொழுதே இதை எதிர்பார்த்தது தான் ஆனா இவ்வளவு குறுகிய காலத்தில் நிலாவை சந்திப்பதும் யோசனை. நிலா இப்பொழுது எப்படி இருப்பாள்? என மனதில் ஆசை தோன்றிட 'சே அவ சிவாவுக்கு சொந்தம்' என்று மனதை அடக்கினான்.

அவள் என்னிடம் என்ன பேச போகின்றாள்? ஒரு வேளை சிவா எனது புகைப்படத்தை நிலாவிடம் காட்டி ஏதேனும் பேச, ஒரு காலத்தில் தன்னை பெண் பார்க்க இவனுக்கும் பேசப்பட்டதை கூற தயங்கி, என்னை கண்டு முதல் வேலையாக சிவாவிடம், தங்கள் சந்திப்பை சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்த நினைத்திருப்பாளா? சரி எதுவாயிருந்தாலும் பார்க்கலாம் என தயாரானான்.

               அடுத்த நாள் ஏர்போட்டில் இறங்கி வந்தவன் சுற்றி முற்றி தேட நர்ஸ் உடையில் ஸ்கூட்டியில் நிலா வந்து கொண்டிருந்தாள். வண்டியை நிறுத்திவிட்டு வேறுபக்கம் பார்த்திருக்க, நிலாவை கண்டு, அலைப்பாயும் மனதோடு "அடக்கடவுளே இவள் சிவா ஒய்ப் என்று சத்தியமா என்னால பார்க்க முடியலை... பேசாம இப்படியே திரும்பி போய்டலாமா...?" என  திரும்பினான். 

''ஹலோ ரூபன்'' என்றே குரலில் நிலாவுக்கு  மறுபுறம் குரல் கேட்க திரும்பினான்.
ஏர்ஹோஸ்டர் உடையில் ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள்.

"ரூபன் பிரகாஷ்...?'' என்றதுமே நிலா திரும்பி பார்க்க பிரகாஷ் நிலாவை பார்க்க நிலா கண்கள் சட்டென கலங்கி திரும்பி நின்றாள்.

''ஹாய் அம் கிருத்திகா... சிவா ஒய்ப்... நீங்க இங்க வந்ததும் காக்க வைக்க கூடாதுனு ஓடி வந்தேன்... கிளம்பலாம் உங்க கூட நிறைய பேசணும் இங்க வேண்டாம்'' என்றிழுக்க பிரகாஷ்க்கு நிம்மதி படர்ந்தது. 

சிவா மனைவி நிலா இல்லை என்றதாலும் அவளின் கழுத்தில் சின்ன செயின் மட்டும் கண்டதாளா? என்று அவனே அறிவான்.
வேகமாக கேப் அருகே வந்தவள் ஒரு பைலை அவனிடம் நீட்டினாள். 

"முதலில் இதை படிங்க அப்பறம் பேசுவோம்'' என்று கிருத்திகா கொடுக்க வாங்கி படித்தான்.

வெளி நாட்டிற்கு சிலைகளை கடத்தும் சில விஷயம், கிருத்திகா அதற்கான ஆதாரம் கொண்ட பைலை தான் ரூபன் பார்த்து கொண்டிருந்தான்.
''இவ்ளோ டீடெயில்ஸ் இருக்கே நீங்க இதை மேலிடத்தில் கொடுத்து இருக்கலாமே?'' என்றே கேட்க
''அங்க யார் நல்லவங்க யார் கெட்டவங்கனு தெரிலை... சிவாகிட்ட சொன்னதுக்கு உனக்கு எதுக்கு இது ரிஸ்க் எடுக்காதேனு சொல்றார்... ஆனா நம்ம நாட்டின் பொக்கிஷம் மற்ற நாட்டுக்கு விலைக்கு போகும் பொழுது பார்க்க கஷ்டமா இருக்கு... ஏன்னா நான் ஆன்ட்டிக் காலெக்ஷன் விரும்பறவ... அதனால தாங்க முடியலை... சிவா தான் என் ப்ரெண்ட் ரூபன் இருந்தா சொல்லி இருப்பேன்னு சொன்னார். அதனால தான் நீங்க வந்ததும் முதலில் சந்திக்கணும்னு சொல்லி அடம் பிடிச்சு வந்துட்டேன். சாரி உங்களுக்கு தொந்தரவு கொடுத்து...'' என்றாள் கிருத்திகா. 

''சே சே அப்படி இல்லை உங்களை சந்திச்சது எனக்கு நிம்மதி தான்''
''என்ன?''
''அது புரியாது உங்களுக்கு. சரி... இந்த பைல் என்கிட்ட இருக்கட்டும் இதுக்கு கொஞ்ச நாளில் முடிவு கட்டிடறேன்... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க யாரிடமும் மாட்டிக்காதிங்க'' என தலையை அசைக்க வீடும் வந்தது.

''உள்ள வாங்க உங்க பிரெண்ட் சொல்லாமல் கொள்ளாமல் போனதுக்கும் கல்யாணத்துக்கு வராததற்கும் திட்ட காத்திட்டு இருக்கார்'' என்று வரேவேற்றாள். 

''ஹாய் டா எப்படி இருக்க? கல்யாணத்துக்கு வருவேன் பார்த்தா இப்போ வர்ற? அம்மாவை பார்த்து பேசினேன் உன் கல்யாணம் பார்க்கனும் எவ்வளவு ஆசையா இருக்காங்க ஏன் டா இப்படி பிடி கொடுக்காம இருக்க?'' என்று வந்ததும் உரிமையாய் திட்டினான். 

''ஹாப்பி மேரீட் லைப்டா சாரிடா உன் கல்யாணத்துக்கு வராததற்கு காரணம்...'' என்றவனை தடுத்தான்.  ''ஒரு காரணமும் வேண்டாம்டா என் கல்யாணம் முடிந்து 10மாசம் ஆக போகுது" என்று செல்லமாய் கோபித்தான். 

''உன்னோட மேரேஜ் கிப்ட்...'' என்று ரூபன் கொடுக்க சிவா பெற்று கொண்டான். 

''தேங்க்ஸ் டா உன் மேரேஜ் எப்போடா அத சொல்லு.... அம்மா பாவம்... புலம்பி தள்ளறாங்க அவங்களுக்கும் ஆசை இருக்கும்ல டா'' என்று  சொன்னதும் ரூபன் பிரகாஷ்க்கு நிலாவை இனி கை நழுவவிட கூடாது என்று முடிவு காட்டினான். 

''ஹ்ம்ம் பண்ணிடலாம்... என்கிட்ட நீ கட்டிய போட்டோல பொண்ணு வேறயாச்சே அப்பறம் எப்படி கிருத்திகா'' என்று தயக்கம் உடைத்து கேட்டான். 

''நானே கேட்க நினைச்சேன்டா அந்த போட்டோ கையில் இருந்தது நீ போனதும் தாமஸ் அங்கிள் வந்தார். முதலில் அந்த பொண்ணை உனக்கு பார்த்ததாகவும் அப்பறம் அந்த பொண்ணுக்கும் உனக்கும் ஏதோ சண்டைனு சொன்னார். உன்னை போய் பிடிக்கலை என்று சொல்லிட்டாளே அவ்ளோ திமிரா என்று நான் தான் அப்பா அம்மாகிட்ட வேற பொண்ணு பாருங்க என்று சொன்னேன் ஆமா ஏன் அதை நீ அன்னிக்கு சொல்லலை...'' என்று விசாரித்தான். 
''ஓஹோ டேய் அப்போ அந்த பொண்ணு மட்டும் என்னை பிடிக்கலை என்று சொல்லலை நானும் தான் வேற கோவத்தில் அவளை முதலில் வேண்டாம் என்று சொன்னேன். அதுக்கு பதில் தான் அவ என்னை பிடிக்கலை என்று சொல்லி இருக்கணும்... அவளை இன்று கூட பார்த்தேன் தாமஸ் அங்கிள்கிட்ட அவளை பற்றி விசாரிச்சு கல்யாணம் பண்ணனும்.. இவ்ளோ நாள் அவளோட உனக்கு மேரேஜ் ஆகிடுச்சுனு நொந்துட்டேன்.'' என்றவனின் பேச்சில் வலியும் இன்று அவளை கண்டதில் ஆனந்தமும் கவனித்தான் சிவா. 

 ''டேய் அவளை அப்போ அவ்ளோ பிடிக்குமா?'' என சிவா கேட்க வெட்க புன்னகைத்தான்.

''என்னது வெட்கமா? ஐயோ ரூபன் உனக்கு வெட்கம் கூட வருமா? எனி வே காங்கிராட்ஸ் டா'' என நண்பன் வாழ்த்து சொல்ல,  அடுத்த தங்கள் வீட்டுக்கு பயணம் ஆனான்.
வீட்டுக்கு வருவதற்குள் ஆயிரம் முறை நிலாவை நினைத்து விட்டான். "ஏன் டி என்னை இப்படி மாற்றிட்ட இனி உன்னை விட்டு இருக்க முடியாது." என்று பிதற்றல் மொழியோடு மனதில் பேசினான்.

தொடரும்

பிரவீணா தங்கராஜ் 


 
Posted : June 23, 2026 6:23 pm
SOURABH reacted

Scroll to Top