Forum

முதலாம் சந்திப்பில்...
 
Notifications
Clear all

முதலாம் சந்திப்பில்-1

2 Posts
2 Users
3 Reactions
167 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#89]

அத்தியாயம்-1

            சீனசுவரை போல தான், அந்த வீட்டின் வேலி சுவர் காட்சி அளித்திருக்கும். அந்த சுவரின் மேற்பரப்பில் கண்ணாடி துண்டுகள் கூட பதியப்பட்டு இருந்தது. ஆனாலும் அதனை பொருட்படுத்தமல் அங்கிருந்த சுவரை மிகவும் எளிதாக தாவி குதித்தான் அவன். 

                  எங்கும் இருளில் பூமி சூழ்ந்திருக்கும் இரவில், அவ்வீட்டில் ஒரு அறையில் மட்டுமே மின்னி எறியும் விளக்கின் ஒளியில் எகிறி குதித்தவனின் நிழல் பிம்பம் மட்டுமே தெரிய சுற்றி முற்றி பார்த்தான். 

            அவனின் நிழல் தவிர அவ்விடத்தில் யாரும் இல்லை என்ற ஏமாற்றத்தை தர, ''திருடன்... திருடன் பிடிங்க...பிடிங்க'' என்ற பெண்ணின் குரல் கேட்டு தன்னை சுற்றி ஒரு முறை பார்த்தவன்,  தன்னை தேடி அக்குரல் நெருங்கி வருவதை நொடியில் உணர்ந்தான்.

        மிதமான இருட்டில் மேகங்கள் நடுவில் மறைந்த நிலா வெளிச்சமின்றி சதி செய்ய, அவள் தனது அருகே வருவதும், அவள் குரல் தன்னை தான் திருடன் என கூறுவதையும் அறிந்து கடுப்பானவன் வேகமாக திரும்பி, ஏதோ பேச முயன்றான். 

             அந்த குரலின் சொந்தகாரியோ அவனை பிடித்திடும் முனைப்பில்,  திருடன் தப்பிக்க கூடாதென அவனை கட்டி கொண்டாள். வெள்ளை சேலையில் அவனை பிடித்துவள் கால்கள், சற்றே தடுமாறி கொண்டிருந்தாள்.
       தீடிரென ஒரு பெண்ணின் தீண்டலில் தடுமாறியவன் கீழே சாய, அவளும் அவன் மீதே விழுந்தாள். அவனோ சரியாக அவளின் இடையில் தனது வலிய கரத்தினை பிடித்து தன்னோடு சேர்த்து இழுத்து விழுந்தான்.

                  அவள் தன் மீது விழுந்ததையோ அவள் தன்னை திருடன் என்பதையோ அந்த நிமிடம் உணராதவன் பூ குவியல் ஒன்று தன் மீது படர்வதாய் மட்டுமே உணர்ந்தான். அதே நேரம் நிலா மேகத்தில் இருந்து மெல்ல நழுவி இருவரையும் எட்டி பார்க்க, நிலவொளியில் அவர்கள் இருவரின் முகமும் பளிங்காய் காண முடிந்தது.

'திருடன் இவ்வளவு அழகானவனா? இப்படியும் லட்சணமான திருடன் இருக்க முடியுமா? கண்களே கவர்ந்து இழுக்கிறது... இப்படி ஒரு சக்தி வைத்துக் கொண்டு இவன் எதுக்கு திருடனும்' என்று இமைக்காமல் பார்த்திருந்தாள் தங்கநிலா.

       'பௌர்ணமி அன்று அப்சராஸ் பூமிக்கு வரும் என்று சொல்வார்கள் அப்படி வந்த பெண்களில் ஒருத்தி தான் இவளா?' என்ற ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தான் ரூபன் பிரகாஷ்.

''எங்கம்மா திருடன்... எங்க...? பிடிச்சியா?''

''உனக்கு எதுவும் ஆபத்து இல்லையே?'' 

"திருடன் கத்தி கித்தி வச்சிருக்க போறான்" என்ற குரல்கள் கேட்க இருவரும் விலகி, பின்னர் தங்கநிலாவோ அவன் ஓடிடுவான் என அவனை பிடிக்க கைகளை நீட்ட, அவனோ ஓடாமல் அப்படியே அவளையே பார்ப்பதை கண்டு, கைகளை அவனை பிடிக்காமல் அப்படியே நின்றாள்.

அவள் சின்ன பார்டர் கொண்ட வெள்ளை சேலை கட்டி போனி டெய்ல் போட்டு இருந்தாள். அவளின் ஒப்பனை அது மட்டும் தான். அப்படியிருந்தும் அவனுக்கு அப்பெண் ஏதோ வசியம் கொண்டு தன்னை இழுப்பதாக அவளையே இமைக்காமல் பார்த்தான்.

''அங்கிள் இவன் தான் அந்த வீட்டில் இருந்து குதிச்ச திருடன்'' என்றதும் சுற்றி இருந்தவர்கள் சிரிக்க, இவ்வளவு நேரம் அவளை ரசித்தவன் கோவத்தோடு முறைத்தான்.

''என்னம்மா தங்கநிலா... நீ திருடன் என்றதும் பதறி அடிச்சு வந்தோம் ஆனா நீ...'' என்று அவர் சிரிக்க
''அங்கிள் நிஜமாவே இவன் தான் திருடன் பார்க்க நல்லவர் மாதிரி தெரியலாம் ஆனா என் கண்ணால பார்த்தேன் இவர் தான்'' என்றதும்,
''ஷட் அப்... நான் உனக்கு திருடனா? என்னை பார்த்தா எப்படி தெரியுது?'' என்றான் அவன் மிடுக்காக.

''நல்லா அழகான... படிச்ச திருடன் மாதிரி தெரியற'' என்றாள் அவளும்.  

''நான்சென்ஸ்... அங்கிள் இந்த பொண்ணுக்கு என்ன பைத்தியமா?'' என்றான் கடுப்பை மறைத்தபடி. 

''ஹலோ யாருக்கு பைத்தியம்? நீ இந்த வீட்டில் இருந்து குதிச்ச நான் என் கண்ணால பார்த்தேன். பத்து மணிக்கு மேல ஒருத்தன் இந்த மாதிரி பெரிய வீட்டில் இருந்து குதிச்சா என்ன அர்த்தம்'' என அவளும் நியாயம் கேட்டாள். 

"மறுபடியும் மறுபடியும் திருடன்னு சொன்ன பல்லை உடைப்பேன்" என்றான் ரூபன் பிரகாஷ். 

''பிரகாஷ் நிறுத்து பாவம் தங்கநிலா நீ யாருனு தெரியாம பேசிட்டா... அம்மாடி நிலா இது ரூபன் பிரகாஷ்... நம்ம ஏரியா போலீஸ் அவன் நீ நினைக்கற மாதிரி திருடன் இல்லை. எனக்கு தெரிஞ்சவன் தான்'' என்றதும் அங்கிருந்த சிலரும் நகர்ந்தார்கள்.

நகர்ந்தவர்கள் சிரிப்புடன் ''போலீசை திருடன் என்று சொல்லுது அந்த பொண்ணு'' 

''இப்ப எல்லாம் ஒன்னு தான்'' என்று இருவர் பேசி செல்வது அப்பட்டமாக பிரகாஷ் காதில் விழுந்தது.

''அங்கிள் யாரிந்த பொண்ணு சரியான லூசு.''

''பிரகாஷ் நீ கட்டிக்க போற பொண்ணுப்பா பார்த்து பேசு.'' என்று அந்த பெரியவர் கூறிய அடுத்த நொடி அதிர்ந்தான். 

''வாட்''

''ஆமா பிரகாஷ் உனக்கு உங்க அம்மா, என்னை பொண்ணு பார்க்க சொன்னாங்கல, நான் பார்த்த பொண்ணு தான் தங்க நிலா... நர்ஸ்.. இப்போ தான் அவசரம்னு என் வீட்டுக்கு வந்தா'' என்று எடுத்துரைத்தார் அப்பெரியவர். 

            'தன்னை ஒரு வாரம் கழித்து பொன்னு பார்க்க வருவதாக சொல்லிய தந்தையின் தோழன் தாமஸ் அங்கிள் பார்த்து வைத்திருப்பது இவனையா? இவனையா நான் திருடன் என்று சொன்னேன்' என விழிபிதுங்கி நின்றாள் தங்கநிலா.

அதே சமயம் ''சார்.. நீங்க சொன்ன இடத்துக்கு வந்துட்டேன்... எங்க இருக்கீங்க சார்?'' என்ற வாக்கி போனில்

''அங்கயே இருங்க கணேசன் அண்ணா இதோ வந்துடறேன்'' என்று வாக்கி போனில் தெரிவித்தவன்.

''அங்கிள் எனக்கு வேலை இருக்கு நான் அப்பறம் பேசறேன்'' என்று கடிகாரத்தை பார்த்து சொல்லிவிட்டு, அவளை முறைத்தபடி சென்றான்.

 மீண்டும் அதே போல மற்றொரு வீட்டின் சுவற்றில் ஏறினான் மறுப்பக்கம் குதித்தான். அந்த பக்கம் போலீஸ் கார் கிளம்பும் ஓசை கேட்டது.

''என்னம்மா நீ... உங்க சந்திப்பு இப்படி ஆகிடுச்சு? இவனுக்கு தான் உன்னை கட்டி கொடுக்க உங்க வீட்டில் பேசினேன். அடுத்த வாரம் பொண்ணு பார்க்க வரதா சொல்லி இருந்தாங்க.'' என்று குறைப்பட்டார்.  

''அங்கிள் நீங்களே சொல்லுங்க இப்படி திடுதிப்புனு ஒரு பெரிய வீட்டிலருந்து குதிச்சு வெளிய வந்து சுத்திமுற்றி பார்த்தால் எப்படி தோணும்? அதான் அப்டி திருடனு கத்தினேன்.'' என்று தன் செய்கைக்கு காரணம் மொழிந்தாள். 

''அவன் போலீஸ்காரன் அவன் என்ன காரணத்துக்காக அப்படி வந்தானோ? அப்படி வருவதிலும் அவனை குறை சொல்ல முடியாது. சரி நீ முதலில் கிளம்பு மணி பதினொன்னுக்கு மேல  ஆகுது வீட்ல விட்டுட்டு கிளம்பறேன்'' என்றார் தாமஸ் அங்கிள். 

''ஐயோ அங்கிள் இன்னும் மூணு தெரு தானே நானே போயிடுவேன் வேணுமின்னா போனில் உங்களுக்கு கால் பண்ணி பேசிட்டே போறேன் ஓகே வா நீங்க கிளம்புங்க'' என்று தாமஸ் அங்கிளை வழியனுப்பினாள்.

தங்கநிலா ஒரு பிரைவேட் ஹாஸ்பிடலில் நர்ஸஸாக பணிபுரிக்கின்றாள்.  திருமண வயதில் இருக்கும் அழகான மங்கை. தாய் தந்தை பார்த்து முடிக்கும் பையன் வருவான் திருமணம் செய்து, அவனை காதலிக்க வேண்டும் என்று இருந்ததால் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை.

ரூபன் பிரகாஷ் அவனுக்கு இருக்கும் போலீஸ் வேலையில் யாரையும் காதலிக்கவில்லை. அவனின் காதல் முழுதும் அவன் உயிராக எண்ணும் பணி தான். 

தங்கநிலா வீட்டுக்கு வந்ததும், தாமஸ் அங்கிளுக்கு தான் வீடு வந்து சேர்ந்ததாக சொல்லிய பின் உறங்க செய்ய முயன்றாள். அவள் அறையில் உறக்கம் வராமல் அவள் மனம் சதி செய்தது.
     'ப்பா கண்ணா அது? அப்படியே ஆளையே இழுக்குது. நிலா இப்படி அவனிடம் முதல் முறையிலே விழுந்துட்டியே! அவன் உன்னை என்ன நினைப்பான்? இதுல திருடன் என்று சொல்லி அவனை கடுப்பேத்தி விட்டுட்டியே? அவனை பார்த்தால் அப்படியா தெரியுது? ராஜ கலை முகத்துல இருக்கு என்று சொல்வாங்க அது அவனுக்கு நல்லா பொருந்தும். நீ தான் ஒர்க் முடிஞ்சு அப்படியே போனி டெய்ல் போட்டுகிட்டு போன, பார்க்க  அசிங்கமா இருக்கேனோ? என்று அவசரமாய் மின்விளக்கை போட்டு கண்ணாடியில் அவள் வதனத்தை பார்த்தாள். 

 கண்ணடியோ அவளை கொஞ்சம் வாடி வதங்கி இருப்பதாய் காட்டியது.  அவளாகவே தன்னை அழகற்றதாக கருதி, 'அவன் அப்பவே முறைச்சான் போச்சு.. இனி அவனுக்கு உன்னை பிடிக்குமா என்பது சந்தேகம் தான்' என தவறாய் யோசித்து வருந்தி, அவளை அறியாமல் நேரம் கழித்துதுயில் கொண்டாள்.

இங்கு ரூபனோ 'தான் தேடி வந்த ATM கொள்ளையர்கள் தப்பித்துவிட்டதை விட தன்னை ஒருத்தி திருடன் என்று சொன்னது கோபத்தை தர, தனது அறையில் நடையோ நடை நடந்தான். ரொம்ப அழகா இருந்தா அந்த பொண்ணு. இதுல பொண்ணு பார்க்க இருந்தவ, என்ன சோதனை டா ரூபன். அவளுக்கு ஏன் என்னை பார்த்து திருடன் என்று தோணுச்சோ. அவ்ளோ மோசமா வா இருக்கேன்.' என அவனும் கண்ணாடியில் பார்க்க, அவனின் பாதி மடித்து விடபட்டமெரூன் சட்டை, சாண்டல் பாண்ட் அவனின் மிடுக்கை இன்னும் கூட்டி காட்டியது. போலீஸ் என்றாலே உயரம் இவன் ஆறடி ஆண் மகனாக கண்ணாடி பிம்பதில் தெரிய 'நல்லா தானே இருக்கேன் அப்பறம் ஏன் திருடன் என்று சொன்னா?'' என்று யோசித்தவன், அவன் மேல் அவள் விழுந்த பொழுது, தான் அவளின் இடையில் பற்றிய கரத்தினை நினைத்து பார்த்தான். 'என்ன வளைவு டா அது... சிக்கின மாட்டிக்குவா ரூபன் பிரகாஷ்.' என்று சொல்லி கொண்டவனுக்கு தெரியவில்லை ஏற்கனவே அவன் விழுந்துவிட்டான். 

தொடரும்.

பிரவீணா தங்கராஜ்


 
Posted : June 23, 2026 6:17 pm
SOURABH and priyameenu reacted
(@priyameenu)
Posts: 3
New Member
 

முதலாம் சந்திப்பில் போலீசுக்காரர் திருடனா மாடிக்கிட்டாரா தங்க நிலாகிட்ட. 😍😍 பொண்ணு பார்க்குற வைபவம் சம்பவமா ஆகிட்டே! 🤣 

 


 
Posted : June 24, 2026 6:56 pm

Scroll to Top