தகிக்கும் நிலவொன்று-4
🔥தகிக்கும் நிலவொன்று🌜
அத்தியாயம்-4
சிறை அலுவலகத்தின் பழைய சுவர்க் கடிகாரம் மதியம் மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
ஜன்னல் வழியாக வீசிய மெல்லிய காற்றில் மேசைமேல் கிடந்த கோப்புகளின் மூலைகள் லேசாக அசைந்தன.
யதுநந்தன் கொண்டு வந்திருந்த புத்தகங்களைப் பதிவு செய்து கொண்டிருந்தார் ஜெயிலர்.
"சார்... இந்த புத்தகங்களையும் ரெஜிஸ்டர்ல பதிவு பண்ணிடுறேன். இது அவங்களுக்கு மட்டும் தரணுமா. இல்லை.. எந்த கைதி கேட்டாலும் கொடுக்கலாமா?" என்று கேட்டு சிரித்தார்.
"யாரு வேண்டுமென்றாலும் படிக்கலாம் மேடம் முக்கியமா ஷ்ரத்தா படிச்சா அவங்க மனநிலை மாறும்னு நினைக்கறேன். அப்பறம் அவங்க மெடிக்கல் புக்ஸ் படிக்க கேட்டாங்க. தேர்ட் இயர். அதெப்படி மேடம் வாங்கி இங்க தரலாமா?" என்று கேட்டான்.
"அட அதுக்குன்னு சில பார்மாலிட்டிஸ் இருக்கு. நீங்க கொண்டு வாங்க. பார்த்துக்கலாம்" என்று கூறினார்.
பதிவு முடிந்ததும் ஜெயிலர் அவரை ஆச்சரியமாக பார்த்து,
"ஒரு விஷயம் கேட்கலாமா சார்?" என்றார்.
"கேளுங்க மேடம்" என்றான் யதுநந்தன்.
"தப்பா எடுத்துக்காதீங்க." யதுநந்தன் புன்னகைத்தான்.
"கேள்வி கேட்கறதுல தப்பே இல்ல மேடம்." ஜெயிலர் சில நொடிகள் தயங்கினார்.
"நீங்க வாதாடுற கேஸ்கள் எவ்வளவோ இருக்கும். எத்தனையோ கிளையன்ட்ஸ் இருப்பாங்க. எல்லாருக்குமே இப்படி தனிப்பட்ட அக்கறை காட்ட முடியாது. ஆனா... இந்த ஷ்ரத்தா மேடம் மேல மட்டும் ஏன் இவ்வளவு கவனம்?" என்றார். அறைக்குள் சில நொடிகள் அமைதி நிலவியது.
ஜன்னலுக்கு வெளியே இருந்த மரத்தின் இலைகள் மட்டும் சலசலத்தன.
யதுநந்தன் மெதுவாக நாற்காலியில் சாய்ந்தான்.
பிறகு மெல்ல சிரித்தான். "உண்மையைச் சொல்லணும்னா... நான் வாதாடுற எல்லாருக்காகவும் இப்படி ஓடி ஓடி உதவி பண்ண முடியாது. நீதிமன்றத்துல வழக்கு முடிஞ்சதும். அடுத்த கேஸ், அடுத்த கிளையன்ட்,
அதுதான் பெரும்பாலான வக்கீல்களோட வாழ்க்கை. அது தப்புன்னு சொல்லலை. அதுவும் ஒரு தொழில். ஆனா..."
அவன் கண்கள் எங்கோ வெறித்துப் பார்த்தன.
"இவங்க மட்டும் எனக்கு ஸ்பெஷல் தான்." என்றான். ஜெயிலர் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.
"ஏன்னா ஷ்ரத்தா.. என்னோட சீனியர் அட்வகேட் திவாகர் சாரோட மகள்." என்று ஷ்ரத்தா போலவே அவனும் சொன்னதையே திரும்ப கூறினான். அந்த பெயரைச் சொன்னபோது யதுநந்தனின் குரலிலேயே ஒரு மரியாதை ஒலித்தது.
"நான் புதுசா கோர்ட்டுக்கு வந்த காலம். வழக்குல ஜெயிக்கணும் பணம் சம்பாதிக்கணும், பிரபலமான வக்கீலாகணும்.
அதுதான் என் கனவு. அப்போ... ஒரு நாள் திவாகர் சார் சொன்ன ஒரு வார்த்தை இன்னைக்கும் என் காதுல ஒலிக்குது." என்றவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
மெல்ல ஜெயிலர் பெண்மணியை பார்த்து "நீதிபதி இறைவன் தரும் தீர்ப்பை எழுதுபவர் என்றால்,
வக்கீல் அந்த நீதிக்கு வழிகாட்டும் விளக்காக இருக்க வேண்டும்." ஜெயிலரின் முகத்தில் மரியாதை தெரிந்தது.
யதுநந்தன் தொடர்ந்தான். "இன்னொரு தடவை... ஒரு குற்றவாளியை காப்பாத்துறதுக்காக பொய்யா வாதாட சொல்லி ஒரு பெரிய ஆள் என்னை அணுகினான்.
அப்ப நான் குழம்பி போய் திவாகர் சார்கிட்ட கேட்டேன். சார்... இது பெரிய கேஸ்.
ஜெயிச்சா பேரும் வரும், பணமும் வரும்னு... அப்ப... திவாகர் சார் என்னைப் பார்த்து சொன்னார். 'குற்றவாளியை காப்பாற்றுற திறமை பெரியது இல்லை யது. தப்பு செய்யாத ஒருத்தனுக்கு நீதி வாங்கித் தருறதுதான் ஒரு வக்கீலோட உண்மையான வெற்றி.'
யதுநந்தன் பேசும்போது, அவரது கண்கள் லேசாக நனைந்தன.
"அந்த நாளுக்கு பிறகு நீதிமன்றத்தை நான் வேற மாதிரி பார்க்க ஆரம்பிச்சேன். நீதிமன்றம் வாதாடுற இடம் இல்ல. ஒருத்தரோட வாழ்க்கையை காப்பாத்துற இடம். அதை எனக்கு கற்றுத் தந்தவர் திவாகர் சார்." என்றான் அவர் நினைவுடன்.
அந்த நேரம் அறைக்கு வெளியே நின்றிருந்த ஷ்ரத்தா. பெண்காவலருடன் அமைதியாக சிறைக்கு சென்று கொண்டிருந்தாள்.
அவ்வறையை தாண்டி உள்ளே செல்ல முனைந்தவளை "ஒரு நிமிஷம்..." என்று பெண்காவலர் நிறுத்தினார். ஜெயிலர் உள்ளே பேசிக் கொண்டிருப்பதால்,
வாசலிலேயே காத்திருக்கச் சொன்னார்.
அப்படியே நின்றிருந்த ஷ்ரத்தாவின் காதுகளில்
யதுநந்தனின் வார்த்தைகள் தெளிவாக விழுந்தன.
"சமூகம்.. நல்ல மனிதர்களை நல்லவர்களாக வாழ விடறதே இல்லை மேடம். திவாகர் சார்.. நேர்மையா இருந்தார் அதுக்காக எத்தனையோ கேலி, எத்தனையோ அவமானம், பிழைக்க தெரியாத வக்கீல், புத்தி இல்லாதவன்.. இப்படி நிறைய பேர் பேசினாங்க. ஆனா... ஒரு நாளும் அவர் பாதை மாறல. பட் கடைசியில்... இந்த சத்ரியன் கேஸ்ல தான் அவரோட நல்ல பெயரையும் இழந்தார்... உயிரையும் இழந்தார்.
அவரை காப்பாத்த முடியாதது இன்னைக்கும் வரைக்கும் என் மனசுக்குள்ள வருத்தமிருக்கு" என்றதும் அறைக்கு வெளியே நின்றிருந்த ஷ்ரத்தாவின் கண்கள் நனைந்தன.
இத்தனை நாட்களாக அவள் கேட்டது. திவாகர் இறந்தார்... திவாகர் தோற்றார்... என்ற வார்த்தைகள் மட்டுமே.
யதுநந்தன் மட்யுமே தன் தந்தையைப் பற்றி
பெருமையாக பேசிக் கொண்டிருப்பதை கண்டு, அவளது மார்பு பெருமிதத்தில் நிரம்பியது.
"என்னோட சீனியர் என்னை தனியா விட்டுட்டு போயிட்டாரு. ஆனா... அவர் காட்டின பாதையில்தான் இன்னைக்கும் நான் நடந்துட்டு இருக்கேன். அதனால... அவரோட மகளுக்கு என்னால முடிஞ்ச உதவியை செய்யறது... கடமையில்லை நன்றிக்கடன்." என்றான்.
அந்த வார்த்தை ஷ்ரத்தாவின் இதயத்தை நேராகத் தொட்டது.
அவள் அறியாமலே வயிற்றின் மீது கை வைத்தாள்.
"உங்க தாத்தா திவாகர் தோற்கலை. அவரை இன்னும் யாரோ நினைச்சுட்டு இருக்காங்க" என்று அடிவயிற்றில் சொல்லிக் கொண்டாள். எப்பொழுதும் குழந்தையின் தந்தையை பெருமையை அல்லவா உரைப்பாள். இன்று தாத்தாவின் பெருமை.
அடுத்த நொடி அவள் நினைவு சத்ரியனிடம் ஓடியது.
"ஒரு நாள்... உங்கப்பா காப்பாத்தின அந்த நூற்றி இருபத்தாறு பெண் குழந்தைகளும், சத்ரியனை பத்தி தெரிய வரும். அப்ப உங்கப்பாவை பற்றி உலகத்துக்கு பெருமையா இதே போல சொல்லுவாங்க.
அப்போ... உன் அப்பா பெயரும் இதே மாதிரி உயர்ந்து நிற்கும்.' என்று நினைத்தவளின் உதட்டில் குறுநகை உதிர்த்தது.
பல மாதங்களுக்குப் பிறகு மனநிறைவு கலந்த சிறிய புன்னகை ஒன்று மலர்ந்தது.
----
மறுபுறம் ருத்ரன் ஷ்ரத்தா பேசியதையே நினைத்து நினைத்து பார்த்து பைக்கை வேகம் கூட்டினான்.
அந்த நேரம் வேகமாக வந்த கார் ஒன்று அவனை மோதியது.
ருத்ரன் சுதாரித்து வண்டியை தடுமாறி கீழே விழுந்து எழுந்துவிட்டான்.
ஆனால் இடது கையில் லேசான வலி உண்டானது.
ருத்ரன் பெயருக்கு ஏற்றவனாக கோபத்துடன் கார்காரனை நெருங்க, இன்ஸ்பெக்டர் உடையிலிருந்த ருத்ரனை கண்டு "சாரி சார்.. சாரி சார். வேகமா வந்திங்க. திரும்பறப்ப கவனிக்கலை. என் தப்பில்லை சார்" என்று பயந்தான்.
ருத்ரனோ தன் கவன சிதறலும் ஒரு காரணமென புரிந்ததால் எதிராளியை ஒன்றும் திட்டவில்லை. ஆனால் போட்டிருந்த காக்கி உடைக்கு ஏற்ப, "யார் நீ உன்னோட பயோ தா" என்று மிரட்டினான். ஏதேனும் தன் பணியில் தன்னை தாக்க வந்தவனோ என்ற எச்சரிக்கையில்.. "என் பெயர் சதிஷ் சார். ஐடீல வோர்க் பண்ணறேன். இது என் ஐடீ கார்ட் சார். ஓர்க் பிரஷர் சார். சரியா தூக்கமில்லை.. நீங்களும் வேகமா வந்ததில இடிச்சிடுச்சு" என்று ஐடி கார்ட் காட்டவும், ருத்ரன் ஆராய்ந்தான்.
"ஓகே.. கிளம்பு" என்று கூற, "உங்களால வண்டி ஓட்ட முடியுமா?" என்று கேட்க, ஹாஸ்பிடல் வரை நான் வேண்டுமின்னா அழைச்சிட்டு போகவா?" என்று கேட்க, அங்குமிங்கும் பார்த்துவிட்டு கை வலியுடன் சரியென்று காரில் ஏறினான்.
பைக்கை அங்கிருந்த இடத்தில் லாக் செய்து விட்டு, போலீஸ் ஏட்டு ஒருவரிடம் வந்து எடுத்து செல்ல உத்தரவிட்டான். ருத்ரனுக்கு ஏதோ கையில் வலியின் அளவில் என்னவோ ஆனதாக யூகித்திருந்தான்.
சதிஷ் என்பவனோ மருத்துவமனையில் அழைத்து சென்று, ருத்ரனுக்கு கையில் மாவுக்கட்டு போட்டுக் கொண்டு உதவினான்.
வெளியே வந்த ருத்ரன், இடது கையை கழுத்தில் தொங்கவிட்ட ஸ்லிங்குடன் மெதுவாக வீட்டில் விட்டுவிட மட்டும் கூற, சதிஷோ கண்டிப்பா சார்." என்று அழைத்து சென்று ருத்ரன் வீட்டுக்கு வெளியே விட்டுவிட்டு சென்றான்.
ருத்ரன் வீட்டு வாசல் திறந்த சத்தம் கேட்டதும் "ருத்ரா வந்துட்டியா.." என்று சமையலறையிலிருந்து அவன் அம்மா கீர்த்தனா ஓடிவந்தார்.
மகனின் கையை பார்த்ததும்... "அய்யோ... என்னடா இது" என்று வாயைப் பொத்திக் கொண்டார்.
"கைக்கு என்னாச்சு?"
"ஒண்ணுமில்லம்மா."
"ஒண்ணுமில்லையா? இதுக்கு பேரு ஒண்ணுமில்லையா?" என்று பதறியவர் அவன் கையை மெதுவாகத் தொட்டார்.
"எப்படி ஆச்சு?" ருத்ரன் சோர்வாக சோபாவில் அமர்ந்தான்.
"வண்டில வரும்போது ஆக்சிடெண்ட். ஐடீ பையன் ஒருத்தன் கார்ல இடிச்சிட்டான். அவன் மேல தப்பில்லை. நான் தான் ஏதேதோ கவனசிதறலோட வந்துட்டேன். அவனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் இங்க வந்து விட்டுட்டு போயிட்டான். உள்ள வர சொன்னா வேலையிருக்குனு யூனிபார்ம் பார்த்து பயந்து ஓடிட்டான்" என்றான்.
"ஏன்பா.. கவனமா இருக்க கூடாதா? ஹாஸ்பிடல்ல என்ன சொன்னாங்க" என்று கையை தொட்டார்.
"லேசா பிராக்சர்." என்று கூற அதைக் கேட்டதும்
கீர்த்தனாவின் கண்கள் கலங்கின.
"உங்க அப்பாவையும் இப்படித்தான்." அவர் சொல்ல முடியாமல் நின்றார்.
கண்களில் நீர் தேங்கியது.
"ஒருத்தரை இந்த போலீஸ் வேலைக்கு அனுப்பி நான் இழந்ததே போதும். இப்ப நீயுமா?
இந்த வேலையை விட்டுடு ருத்ரா." என்றார்.
அவன் மெதுவாக தலையை உயர்த்தினான்.
"அம்மா... இந்த வேலைய நான் சம்பளத்துக்காக செய்யல. அப்பாவுக்காக அவரோட இடத்துக்கு வந்திருக்கேன்.
இப்ப..." அவன் முகம் இறுகியது.
"அவரை கொன்றவனை பழிவாங்கத்தான் இருக்கேன்"
அவன் குரலில் இருந்த வெறுப்பு கீர்த்தனாவை நடுங்க வைத்தது.
"ஆனா... அவன்தான் செத்துட்டான்னு சொன்னியே.. அப்படித்தான் நியூஸ்லயும் வந்தது." என்றதும் ருத்ரன் உதட்டை கடித்தான்.
"அப்படித்தான் சொல்றாங்க. ஆனா... எனக்கு நம்பிக்கை வரலைம்மா." என்றான்.
"ஏன்ப்பா?" என்றார் கீர்த்தனா.
"அந்த பொண்ணு... ஷ்ரத்தா. அவள்தான். அவளோட கண். அவ பேசுற விதம். அவ சத்ரியனைப் பற்றி பேசுற ஒவ்வொரு வார்த்தையும்...
எனக்கு ஏதோ மறைக்கற மாதிரி இருக்கு." என்று பேச கீர்த்தனா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.
"ஒரு பொண்ணு... உயிருக்கு உயிரா காதலிச்சவனை... அவ்வளவு சுலபமா சுட்டுக் கொன்றிருப்பாளா? என்னால நம்ப முடியல. அதுவும்... இன்னைக்கும் அவன் பேரை யாராவது தப்பா பேசினா கூட உயிரைக் எடுக்கற மாதிரி கோபப்படுறா. இப்படி இருக்கறவ... அவனைக் கொன்றிருக்க மாட்டா. எங்கயோ... ஏதோ... தப்பு இருக்கு." என்றவன் சுவரை வெறித்துப் பார்த்தான்.
"அப்ப நியூஸ்ல பார்த்தது, அந்த பொண்ணு சொன்னது" என்று கேட்டார் கீர்த்தனா.
"எனக்கு தெரியலம்மா... ஆனா.. ஒரு நேரம் சத்ரியன் செத்திருப்பானு தோணுது. ஏன்னா.. என் கண் பார்த்த ஆதாரம் அவன் இறந்துட்டான்னு சொல்லுது... ஆனா என் போலீஸ் உள்ளுணர்வு அவன் இன்னும் உயிரோட இருக்கான்னு கத்துது. இந்த இரண்டுல எது உண்மைன்னு தெரியல." சில நொடிகள் பேச்சற்று போனான்.
மீனாட்சி அவன் அருகில் வந்து அமர்ந்தார். "அது உண்மையா இல்லையா தெரியாது. ஆனா... நீ இந்த கோபத்துல உன்னையே அழிச்சிக்காத. முதல்ல உடம்பை கவனி. கைக்கு கட்டு போட்டிருக்காங்க. டாக்டர் என்ன சொன்னாங்க?" என்று கேட்டார்.
"நாலு வாரம் ஸ்லிங். ஆறு வாரம் எடை தூக்கக்கூடாது புல் ரெஸ்ட் வேண்டும்." என்றான்
"அப்பாடி" என்று கீர்த்தனா மகன் கூறவே வீட்டிலேயே இருப்பான் என்று சந்தோஷப்பட, "டெஸ்க் டூட்டி போடுவாங்க அல்லது மெடிக்கல் லீவு இருக்கும் பாத்துக்கலாம்." என்றான்.
மீனாட்சி ஆழமாக மூச்சுவிட்டார். "எனக்கு ஒரே ஒரு ஆசை. உனக்கு ஒரு நல்ல பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சுட்டா... நீ இப்படியெல்லாம் கோபத்தோட இந்த ஷ்ரத்தா பின்னாடி சுத்த மாட்ட." என்றார்.
அந்த வார்த்தை ருத்ரனுக்கு எரிச்சலைத் தந்தது.
"அம்மா... இப்ப இது தான் முக்கியமா? என்னோட கல்யாணத்தை பத்தி இப்ப பேசாதிங்க. அப்பா இறப்புக்கு இது தான் சரியான முடிவுனு எனக்கு எப்ப தோணுதோ.. என் மனசுக்கு நீதி கிடைக்கிற வரைக்கும்... இந்த வீட்டுல அந்த கல்யாண பேச்சே வேண்டாம்." என்று சொல்லிவிட்டு எழுந்து தன் அறைக்குள் சென்றான்.
கதவு மூடிய சத்தம் வீட்டையே அமைதியாக்கியது.
வெளியே நின்ற கீர்த்தனா கணவனின் புகைப்படத்தைப் பார்த்து மெதுவாக கண்
ணீர் துடைத்தார்.
"உங்க குணமே.. உங்க பையனுக்கும் வந்துடுச்சுங்க.." என்று புகைப்படத்தை நோக்கி மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தார்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Kindly Register Login to Read
Thank u
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 4)
ஒருவேளை, திவாகர் அவர் சொன்ன வாசகத்தை அவரே மீறினதால் தானே, மரணத்தை விலைக்கு வாங்கினாரோ என்னவோ ? ஆனால் அவர் சத்ரியனுக்காக வழக்காடினதால் எதிரிகளால போட்டுத் தள்ளப்பட்டார், சத்ரியனுக்காக வழக்காடலை என்றாலும் அவனே போட்டுத் தள்ளியிருப்பான்.
எப்படியும் உயிரோட இருந்திருக்க முடியாது தான். எப்ப நேரான பாதை மாறுதோ, அப்ப நம்ம பயணமும் மாறிப்போயிடறது.
எனக்கு ஒண்ணு புரியலை, அம்புட்டு கொலை, கொள்ளை, கட்டபஞ்சாயத்து எல்லாத்தையும் பண்ணிட்டு ஒரேயொருத்தடவை நூத்தி இருபத்தியாறு பிள்ளைகளை காப்பாத்தினதால..
சத்ரியன் பண்ண அட்டுழியம் எல்லாம் இல்லைன்னு ஆகிடுமா என்ன ? ஆனால், அத்தனை கேஸ்லயும் நேர்மையை கடைப்பிடிச்ச திவாகர் ஒரேயொரு வழக்குல, அதுவும் சத்ரியனுக்காக வாதாடப் போய் கடைசியில நல்ல பெயரையும் இழந்து, உசிரையும் இழந்தாரு தானே..? அப்ப எது நல்லது, எது கெட்டது ? எப்படியும் ஒரு டம்ளர் பாலுல ஒருத்துளி விஷம் கலந்தாலும் உசிர் போறது திண்ணம் தானே..? இல்லை ஒரு துளி மட்டும் கலந்ததால கொஞ்சுண்டு மட்டும் உசிரு போகுமா..? இதுல இந்த ஷ்ரத்தாவுக்கு பெருமை பீத்தல் வேற. இதை பிள்ளைக்கிட்ட வேற பீத்திக்கிட்டிருக்கா பாருங்களேன்.
😊😊😊
CRVS (or) CRVS 2797
Rudhran oda kelvi vidai eppo kidakkum.nu theriyala aana avan athu varaikkum amaithi ah iruku ah matan nu mattum nallavae theriyuthu.
Inga nallavan ketavan yarumae illa avanga seiyura seyal than nalla tha yum keta thu yum theemanikuthu yen na divagar avar last ah aniyathuku thunai ponathuku oda vilavu avar oda uyir ah mattum illa avar ponnu oda vazhkai ah yum mathivittututu .
Chathriyan kollai meratal nu avan avolo thappu pannan aana oru oomai ku avan panna thappuku avan 120 kuzhandhai ga la kapathi irundhalum avanukum thandanai than kedichithu inga thandanai common than aana ippo vum divagar ku nallavar nu per iruku but Chathriyan andha kuzhanthai kapathinathu theriya vandha lum avan gangster kollai karan na ra thu mara thu la yen rudhran yae appadi than solluva n yen avan appa ah va konnathu Chathriyan than ah .
-
தகிக்கும் நிலவொன்று-17
21 minutes ago
-
தகிக்கும் நிலவொன்று-16
15 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-8
17 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-7
17 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-6
18 hours ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 0 Online
- 329 Members
