Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-7

11 Posts
10 Users
3 Reactions
117 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#182]

அத்தியாயம்-7

    கீர்த்தனா தன் கையால் ஒரு பிடி சாதத்தை பிசைந்து ஷ்ரத்தாவின் வாயருகே நீட்டினார்.

"வாயைத் திறம்மா." அந்த ஒரு வார்த்தையிலேயே ஷ்ரத்தாவின் இதயம் உடைந்து போனது.

வாயை திறக்க முடியாமல் நின்றாள். "என்னம்மா?" என்று கீர்த்தனா மெதுவாக கேட்டார்.

அடுத்த நொடியே ஷ்ரத்தாவின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் தட்டின் மீது விழுந்தன.

கீர்த்தனா பதறினார். "ஐயோ... என்னாச்சும்மா? நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா?" ஷ்ரத்தா வேகமாக கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

"இ... இல்லை..." என்றாள்.‌

  "அப்புறம் ஏன் அழற?"

சில நொடிகள் பேச முடியாமல் நின்றவள். மெதுவாக சிரிக்க முயன்றாள். "எனக்கு... அம்மா இல்லை.. சின்ன வயசுலயே இறந்துட்டாங்க." அவள் குரல் உடைந்தது.

"எனக்கு... எங்கப்பா மட்டும் தான் இருந்தார்... அவருக்கும் இன்னிக்கு தான் நினைவு நாள்." என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக் கொண்டாள்.

கீர்த்தனாவின் முகம் மெதுவாக வாடியது. அவரும் இறந்துவிட்டதாக ருத்ரன் கூறினானே. 

"எனக்கு அப்பாவுக்கு பிறகு எல்லாமே... சத்ரியன் தான்." அந்த பெயரைச் சொல்லும் போது அவள் குரல் தழுதழுத்தது. 

"இப்போ... அவரும் இல்ல... ரொம்ப நாள் கழிச்சு... யாராவது அன்பா பேசுறதும்... கையால சாப்பாடு ஊட்டுறதும்... செய்யவும், கண்ணுல தண்ணி வந்துடுச்சு.." என்று கூறி தலையை குனிந்தாள்.

கீர்த்தனாவின் கண்களும் கலங்கின. எதுவும் பேசாமல்...

அவளது கண்ணீரை தன் முந்தானையால் மெதுவாக துடைத்தார்.

"அழக்கூடாதும்மா... இந்த நிலையில் அழவே கூடாது"

என்று கூறியபடி மீண்டும் ஒரு வாய் உணவை ஊட்டினார்.

இந்த முறை... ஷ்ரத்தா அமைதியாக "ஆ..." என்று வாங்கிக் கொண்டாள். சிறு குழந்தையைப் போல.

  சற்று தொலைவில் நின்றிருந்த ருத்ரன். இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவன் முகம் இறுகியது.

ஆனால்... அவன் எதுவும் பேசவில்லை. அவனுக்குள் ஏதோ ஒரு போராட்டம் நடந்துகொண்டே இருந்தது.

"எத்தனாவது மாசம்மா?" என்று கீர்த்தனா மெதுவாக கேட்டார்.

"ஏழாவது மாசம் ஆரம்பிச்சிருச்சு." என்றாள் ஷ்ரத்தா.

"அடடா..." என்று கீர்த்தனா அவள் வயிற்றை பார்த்தார்.

"உங்க அம்மா இருந்திருந்தா... சொந்தக்காரங்க இருந்திருந்தா  இந்த நேரம் வளைகாப்பு நடத்தி இருப்பாங்க." என்றார் வருத்தமாக.

ஷ்ரத்தா கசப்பாக சிரித்தாள்.

"இந்த ஜெயில்லயா? வளைகாப்பா?" என்று கேட்டாள். இதே சத்ரியன் இருந்தால் ஒரு ஊர் அளவுக்கு இடத்தையே, கப்பலுக்குள் வைத்திருக்கும் அவனுக்கு, அறிந்தவர் தெரிந்தவரை வரவழைத்து பெரிய விழாவே கொண்டாடி இருப்பான். விஐபி ஆட்களும் செலிபிரெட்டிகளும் வந்து குவித்திட செய்வான். 

ஏன் இந்த தமிழகத்தின் முதல்வரையே விழாவில் விஐபியாக நியமித்து இருப்பான். இன்றோ அவல நிலையாக நான்கு சுவருக்குள் கைதியாக என்று வருந்தினாள்‌.

"அதனால என்னம்மா?" என்று கீர்த்தனா இயல்பாகச் சொன்னார்.

"வளைகாப்பு நடத்த மனசு தான் வேண்டும். ஒரு நாள்... நானே உனக்கு வளையல் வாங்கிட்டு வந்து போட்டு விடுறேன். அப்ப ஐந்து வகை சாதம் அதுயிதுனு வீட்லயே மணக்க மணக்க செய்துட்டு வர்றேன். இதுக்கெல்லாம் கலங்குவாங்களா?" என்று அவளது தலையை வருடினார். 

அந்த நேரம் ருத்ரன் அங்கேயே நின்று ஷ்ரத்தாவை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது பார்வையை உணர்ந்த ஷ்ரத்தா பயந்து தலையை குனிந்தாள். அதை கவனித்த கீர்த்தனா. "ஏன் ருத்ரா... அவளை இப்படி முறைக்கற?" என்று கேட்டார்.

"உன் பகை... அவளோட சத்ரியன் கூட. அவர் தான் உயிரோட இல்லையே. ஏன்டா... இந்தப் பொண்ணை பார்த்தாலே கோபப்படற? இவளுக்கு என்ன தெரியும். காலேஜ் கூட முடிக்காத சின்ன பொண்ணு. வாயும் வயிறுமா வேற இருக்கா" என்றார்.

ருத்ரன் சிரிப்பில்லாமல் சொன்னான். "அம்மா.. இவ... லாயர் திவாகரோட மகள் இல்லைம்மா... நம்ம அப்பாவை கொன்ற கிங்பின் சத்ரியனோட மனைவி. அவன் செஞ்ச பாவத்துக்கு... இவளுக்கும் பங்கு கொடுக்க வேண்டியது இருக்கு. ஆக்சுவலி பெத்தவங்க செஞ்ச பாவம் பிள்ளைகளை சேர்ற மாதிரி சொல்வாங்க. ஆனா கணவன் செஞ்ச பாவமும் மனைவியை தான் சேரும். அதான்... இப்ப இங்க வந்து இந்த கஷ்டத்தை அனுபவிக்கறா" என்றதும் ஷ்ரத்தாவின் முகம் இறுகியது.

  "இவ அப்பன் மட்டும் சத்ரியன் கேஸை வாதாடாம இருந்தா இந்நேரம் உள்ள போயிருப்பான். ஏதாவது ஒரு ஞானோதயம் வந்து உயிரோட இருந்திருப்பான். அவன் என்னடானா நம்ம அப்பாவை சாகடிச்சிட்டு இப்ப அவனும் உயிரோட இல்லை. 

  பாவம். 

  அதான் இப்படி எல்லாமே முடிஞ்சுச்சு. சத்ரியன் எத்தனை பேரை கொன்றிருக்கான் தெரியுமா? அந்த பழி பாவம் எல்லாமே இவளுக்கும் இவளுக்கு பிறக்கற பிள்ளைக்கும் போய் சேரும்" என்று ருத்ரன் சாபம் போல உரைத்தான்.

ஷ்ரத்தாவுக்கு குழந்தைக்கும் பழி பாவம் சேரும் என்ற வார்த்தையில் கோபம் உண்டானது. திடீரென்று இருக்குமிடம், யாரிடம் பேசுகின்றோமென்றதை எல்லாம் மறந்து, "என் சத்ரியன் 126 குழந்தைகளை காப்பா"  என்று சொல்லிவிட்டு சடாரென்று நிறுத்திக் கொண்டாள்.

ஒரு நொடி அவளே அதிர்ந்தாள்.

அடுத்த வார்த்தையை விழுங்கிக் கொண்டாள். சில விநாடிகள் அமைதிக்குப் பிறகு அவள் மெதுவாக ருத்ரனை பார்த்தாள்.

"அப்படின்னா... உங்கப்பாவும்... ஏதாவது பாவம் செஞ்சாரா? அவரும் இறந்துட்டார்."

என்று கேட்டாள். ருத்ரனின் புருவம் சுருங்கியது.

"என்ன சொல்ற?"

ஷ்ரத்தா அவனை நேராக பார்த்தாள். "எங்கப்பா... சத்ரியன் கேஸை வாதாடினதால பாவம் பண்ணார்னு சொன்னீங்களே. அப்படின்னா... உங்கப்பா ஏன் இறந்தார்? நீ ஏன் இப்படி சதா சர்வ நேரமும் சத்ரியன் இறப்பை பற்றி அறிய துடிச்சிட்டு இருக்க?" என்ற அந்த கேள்வி நேராக ருத்ரனின் நெஞ்சில் பாய்ந்தது. 

உண்மை தானே.. லாயர் திவாகர் நேர்மையான அதிகாரி. அவருக்கு இறப்பு பரிசாக வந்தது என்றாள். போலீஸ் அதிகாரி ராகவன் இறந்துவிட்டாரே. அவர் என்ன நேர்மை தவறினாரோ? என்று ஏளனம் செய்தாள். 

கீர்த்தனா கணவரை பற்றி பேசுவதை கூட புறம்தள்ளி, அதிர்ச்சியுடன்  மகனையும், ஷ்ரத்தாவையும் பார்த்தார். இதுங்க ஏன்‌ இப்படி முட்டி மோதி பேசிக் கொள்கின்றனர்.' என்று யோசித்தார்.‌

ருத்ரனின் முகம் கோபத்தில் சிவந்தது. ஒரு வார்த்தை கூட பேசாமல் அங்கிருந்து வேகமாக நடந்து சென்றான்.

ஷ்ரத்தா உடனே கீர்த்தனாவை பார்த்தாள். இவரை வைத்து கொண்டே ருத்ரனை மூக்குடைக்கும் விதமாக பேசியது தவறெனபுரிய "சாரிம்மா... எப்ப பார்த்தாலும், என்னை காயப்படுத்துறார். இன்னைக்கு... நீங்க இருந்தப் போதாவது... என்னை கஷ்டப்படுத்தாம இருந்திருக்கலாம். அவருக்கு என்னை பிடிக்கலன்னா... நான் என்ன செய்ய முடியும்? நானே... எந்த உறவும் இல்லாம... தனிமரமா நிக்கறேன்... நான் ஏதாவது தவறா பேசினா மன்னிச்சிடுங்கம்மா. இன்னிக்கு உங்க பிள்ளையோட அப்பா இறந்திருக்கார்னா.. எங்கப்பாவோட நினைவு நாளும் இன்னிக்கு தானே? எனக்கும் தந்தை இறந்த வலி இருக்காதா?" என்றாள்.

கீர்த்தனா அவளது தலையை மெதுவாக வருடினார்.

"உன் நிலையும் புரியுது. இன்னிக்கு அவன் அப்பா நினைவு நாள். அந்த வலிய உன்கிட்ட காட்டிட்டான். நீ வேற... அவன் தூக்கத்தில் கூட உச்சரிக்கற சத்ரியனான எதிரியோட மனைவி.‌ அதான் இஷ்டத்துக்கு பேசிட்டான். நான் வீட்டுக்கு போய் அவனை கண்டிக்கறேன். இனி இப்படி ஏதாவது கர்ப்பிணியை காயப்படுத்தாதேனு சொல்வி வைக்கறேன். உன் தந்தையும் இன்னிக்கு தான் இறந்தது அவனுக்கு நினைவிருக்காது." என்று ஆறுதல் கூறினார்.

  இதில் ஷ்ரத்தாவோ கூடுதலாக அந்த சந்தேகத்தை கேட்டு, கீர்த்தனாவுக்கு சந்தேகத்தை விதைத்தாள். 

"எப்பவுமே ஆசிரமத்துக்குத் தான் சாப்பாடு போடுவீங்களாமே. இன்னிக்கு மட்டும் ஜெயிலுக்கு ஏன் வந்தீங்க? வேற ஆசிரமம் கிடைக்கலையா? அல்லது வேற ஜெயிலுக்கு கூட போயிருக்கலாமே? அவர் வாரத்துக்கு ஒருமுறையாவது ஏதாவது காரணத்தோட வந்து என்னை காயப்படுத்தற மாதிரி பேசறார். அப்படியிருக்க இதே ஜெயிலுக்கு வந்து என்னை சந்திக்க காரணம் என்ன? ஆனாலும் அப்பா இறந்த நாளுக்கு இன்னிக்கு உங்களை மாதிரி ஒரு மனுஷியை சந்திச்சது சந்தோஷமாயிருக்கு " என்றாள் ஷ்ரத்தா. 

அந்த கேள்வி கீர்த்தனாவுக்கே ஒரு நொடி யோசனையை தந்தது. கீர்த்தனா மகனை  திரும்பிப் பார்த்தார்.

தூரத்தில் நின்றிருந்த ருத்ரன் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாலும், அவன் பார்வை மட்டும் அடிக்கடி ஷ்ரத்தாவையே தேடிக் கொண்டிருந்தது.

அதை கவனித்த கீர்த்தனாவின் மனதில் ஒரு சிறிய சந்தேகம் பிறந்தது. 'வீட்டுக்கு போய் இவன்கிட்ட கேட்கணும்.' என்று மனதிற்குள் முடிவு செய்து கொண்டார்.

ஷ்ரத்தா தன் அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டாள். இன்று புது மனிதரை நல்ல குணவதியை சந்தித்த நிறைவுடன் ஷ்ரத்தா சென்றாள். 

மறுபுறம் சிறை வாசலுக்கு அருகே. ருத்ரன் தனக்குத் தெரிந்த ஒரு அதிகாரியிடம் பேசிக் கொண்டிருந்தான்.

"ஷ்ரத்தாவை பார்க்க வினோத் வரலையா?" என்றான்.‌

"இல்லை சார்.. வினோத் சமீபத்தில் வரலை. ஆனா லாயர் யதுநந்தன் வந்துட்டு போறார்." என்றான் ருத்ரனின் உளவாளி ஒருவன்.

"யதுநந்தன் மட்டும் வந்துட்டு போனானா?" என்று அதிர்ச்சி மாறாமல் தலையசைத்தான்.

"ஆமா சார்." 

"யதுநந்தன் ஏன் வர்றாரு? கேஸ் முடிஞ்சிடுச்சே. திவாகர் சாருக்காகத் தான் வாதாடினாரே. இன்னும் என்ன வேலை? அந்தளவு விசுவாசமா" என்றதற்கு அதிகாரி தோளை குலுக்கினார்.

"தெரியல சார். அந்த பொண்ணு ஷ்ரத்தா மேல தனி இன்ட்ரஸ்ட் காட்டற மாதிரி இருக்கு. மெடிக்கல் புக்ஸ் கூட வாங்கி வந்து கொடுத்தாரு. தூரத்திலருந்து ஷ்ரத்தாவையே கவனிச்சாரு." என்றதும் ருத்ரனின் கண்கள் சுருங்கின.

"வேற யாராவது வந்தா எனக்கு உடனே தகவல் சொல்லுங்க. குறிப்பா... வினோத் வந்தா... அந்த நிமிஷமே எனக்கு கால் பண்ணுங்க." என்று தெரிவித்தான். 

வினோத்திடம் மீண்டும் ஒரு விசாரணையை நிகழ்த்திட நினைத்தான் ருத்ரன். கேஸ் நிஷயமாக பேச வேண்டுமென்றால் சிங்கப்பூரை தாண்டி காலடி எடுத்து வைக்க மாட்டான். அதற்காகவே வரவிட்டு விசாரணை துவங்க நினைத்தான். 

"யெஸ் சார். அவர் வந்தா உடனடியாக சொல்லறேன்" என்று அதிகாரி நட்புடன் கைகுலுக்கினார்.

ருத்ரன் சிறைச்சாலையை ஒருமுறை திரும்பிப் பார்த்தான்.

"உண்மை... இங்கதான் ஒளிஞ்சிருக்கு..." என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு அமைதியாக அங்கிருந்து கிளம்பினான்.

   அவனுக்கு இன்றைய நாளில் ஷ்ரத்தாவை கண்டது எரிச்சலாகியிருக்க வேண்டும். ஆனால் அன்னை சட்டென வேறு எங்கேனும் சாப்பாடு தந்துவிட ஏற்பாடு வைப்போம் என்று கேட்க, ஷ்ரத்தா இருக்கும் சிறைக்கு சட்டென்று கேட்டு, அவளை பார்க்க வந்ததே ருத்ரன் தான். அப்படியிருக்க தலைகீழாக தண்ணி குடித்தாலும் ருத்ரன் இன்றும் ஷ்ரத்தாவை காண வந்துவிட்டான்.‌ மகனாக தான் இந்த சந்திப்பை நிகழ்த்தவும் கீர்த்தனா ஒருபுறம் மகனது பார்வையில் கண்ட நுணுக்கத்தால் அதையே சிந்தித்து வந்தார்.‌

 ருத்ரன் கீர்த்தனா இருவருமே வீடு வரும்வரை பேசவில்லை. கேப்பிற்கு பணத்தை தந்துவிட்டு, "அம்மா.. அவ நம்ம அப்பாவை கொன்ற சத்ரியனோட காதலினு தெரிந்தும் எப்படிம்மா அவளுகாகு ஊட்டி விட்டிங்க?" என்று கீர்த்தனா கேட்கும் முன் அவன் ஒரு கேள்வியை முன் வைத்தான்.‌

"ஏன்னா.. அவ உங்கப்பா அப்பா இறப்புக்கு காரணமில்லை. அவங்கங்க செய்த பாவம் தான் அவங்க அவங்களை துரத்தும்னு நம்பறேன். 

   உங்கப்பா சர்வீஸ்ல இருக்கறப்ப, பிகினிங் ஸ்டேஜ்ல வேலைக்கு சேர்ந்தப்ப எல்லாம், ஏதாவது கேஸ் கிடைக்காட்டி பழைய கைதிகளை பிடிச்சு இழுத்துட்டு வந்து கேஸை முடிச்சிட மேலிடம் உத்தரவு தரும். உங்கப்பா அதை மறுத்து பேசாம நிறைய முறை எந்த தப்பும் செய்யாதவங்களை, அரஸ்ட் பண்ணிருக்கார். 

  அப்ப எல்லாம் இந்த பாவம் என்னைக்கு என்னை துரத்துமோனு அடிக்கடி சொல்வார்.

  அவர் இல்லாதது வருத்தமா இருக்கு. அதுக்காக எந்த தப்புமா செய்யாத கர்ப்பிணி பொண்ணிடம் கோபத்தை காட்டி என்ன மனநிறைவு பெறுவோம் சொல்லு. 

   அந்த பொண்ணு ஏற்கனவே எத்தனை வலியை சுமக்கறாளோ?  

   நம்மளால் முடிந்தவரை வாழற காலத்துல நல்லதை செய்துட்டு போகணும் ருத்ரா." என்றார்.‌

ருத்ரன் லேசான வருத்தத்துடன் நின்றான். ஷ்ரத்தா சிறையில் இருப்பதே அவளுக்கான தண்டனை தான்.‌

இதில் தான் வேறு எரிமலையை அவள் தலையில் கவிழ்ப்பதை உணர்ந்தான். 

   அதற்காக அன்னை போல தியாகத்துடன் அவனால் அவளை காண இயலாது. போட்டிருக்கும் காக்கி உடைக்கு சத்ரியன் இறப்பு தெளிவாக தெரிய வேண்டும்.' என்ற எண்ணம் வரவும் அறைக்கு செல்ல திரும்பினான்.

கீர்த்தனாவோ ''ஏன்‌ ருத்ரன் அந்த பொண்ணா மேல இருப்பது கோபமா அனுதாபமா? அவளை அடிக்கடி சந்திக்கறியாம். வாரத்துக்கு ஒருமாறை வந்து திட்டிட்டு போறதா ஷ்ரத்தா சொல்லறா. ஏன்பா.. அவளை பார்க்காம தூக்கம் வரலையா? துக்கம் அடங்கலையா. இன்னிக்கு தான் அவங்க அப்பாவோட இறந்த நாளும் அதை நீ மறந்துட்டு காயப்படுத்திட்ட." என்றதும் ருத்ரன் அன்னையை கூர்ந்தான். 

  அவளை பார்க்காமல் தூக்கம் வரலையா என்றதும் அதிர்ந்தா

ன். அவள் தந்தையையும் இன்று தானே பறிக்கொடுத்தது நினைவின்றி அவளை காயப்படுத்தியதில் வருந்தினான். 

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்

‌தி லீடருக்கு ஒரு முகநூல் ரிவ்யூவும் வரலை. எங்கயும் பதிவு செய்யவே சோம்பலாகுது. 🥺


 
Posted : July 17, 2026 7:12 am
(@dharsinipriya)
Posts: 59
Trusted Member
 

Super sis nice epi semmaiya pogudhu story 👍 👌 😍 endha angle la partha correct dhan evan en adikadi shratha va thititu parthutey erukan oru Pakkam endha yadhunandhan vera enna dhan nadakumo parpom 🤔 🧐 


 
Posted : July 17, 2026 8:26 am
(@guna-sundari)
Posts: 56
Trusted Member
 

Story going well.sis. Rutheran always tease her. But shardha wont accept him. Very intresting sis. We cant predict the story. It has lots of twist and turns sis. Eagerly waiting for next episode sis 


 
Posted : July 17, 2026 9:18 am
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 7)

இதுக்குத் தான் சொல்றது, பொம்பிளைங்க கிட்ட எந்த ரகசியமும் தங்காதுன்னு.
பாருங்க சைக்கிள் கேப்ல சத்ரியனை போட்டுக்கொடுக்க போயிட்டாள்.

ஆனால், ஷ்ரத்தா ஒரு பாயிண்ட்டை சரியாவே கேட்டிருக்காள். திவாகர் சத்ரியனுக்காக வாதாடி இறந்தார்ன்னா, அப்ப ராகவனும் ஏதோ தப்பு செய்யப்போய்த்தானே
மரணத்தை சம்பளமா வாங்கிக்கிட்டாரு. இனி அந்த பாயிண்ட் ஆஃப் வ்யூவில ருத்ரன் யோசிச்சால் ஏதாவது ஞானதோயம் கிடைக்குமோ என்னவோ..?

😊😊😊
CRVS (or) CRVS 2797


 
Posted : July 17, 2026 10:23 am
(@subhakumar85)
Posts: 44
Eminent Member
 

Just miss la pecha maathita.. avan than triger panran nee nidhanama eru ma..


 
Posted : July 17, 2026 10:25 am
(@priyarajan)
Posts: 11
Active Member
 

Interesting waiting for nxt epi 


 
Posted : July 17, 2026 10:32 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 49
Trusted Member
 

Shardha oda varthai ah rudhran seri ah gavanikka la illa na andha 126 kuzhandhai nu sonnathu ah enna nu yosikka aarambichi irupan .

Rudharan aval ah tease panna poi last ah ava keta kelvi ku bathil illa ma vandhutan ava appa divagar Chathriyan kaga vathada poi erandhutaru na appo ivanga appan raghav sethathukum avar seiyutha yetho oru pavam than ah karanam 


 
Posted : July 17, 2026 10:44 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 49
Trusted Member
 

Shardha nalla vela muzhusa solla illa na andha rudhran 126 kuzhandhai nu sonnathu ah kandupidichi irundhu irupan .

Rudhran ava ketathu seri than ah ava appa thappu pannathu na la erandha ah na appo ivan appa raghavan um ethachum pavam pannathu na la than erandhu poitaru nu sollurathu seri than ah 


 
Posted : July 17, 2026 10:59 am
(@kalidevi)
Posts: 56
Trusted Member
 

SHRADHAKUM EVLO VARUTHAM IRUKUNU YOSIKAMA RUTHRAN ROMBA PANRAN IPO SHARADHA KETA VARTHAILA IRUNTHU YOSICHI THEDANUM ADUTHATHA , BUT ETHO ORU PERIYA TWIST VACHI IRUKINGA SISSY


 
Posted : July 18, 2026 11:33 am
(@kothaihari)
Posts: 54
Trusted Member
 

அய்யோ இந்த ருத்ரன் யதுநந்தன் யாரையும் ஷ்ரத்தாவோட ஜோடியாக வேண்டாம். ..


 
Posted : July 22, 2026 2:03 am
(@krishna-krishna)
Posts: 8
Active Member
 

@praveena-thangaraj சூப்பர் மா வாழ்த்துக்கள்


 
Posted : July 26, 2026 3:49 pm

Scroll to Top