தகிக்கும் நிலவொன்று-16
அத்தியாயம்-16
கார்த்திகா ஷ்ரத்தாவை சில நொடிகள் ஆழமாக பார்த்தாள்.
"உன் பாதுகாப்புக்காகத் தான் நான் இருக்கேன் ஷ்ரத்தா. ஆனா நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை. பிகாஸ் இங்கிருக்கற கைதிகள் கூட என் பாதுகாப்பில் இருக்கறவங்க. பை தி வே... போய் உன் வேலையை பாரு." என்று சுருக்கமாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்
அவள் சென்ற திசையையே பார்த்தபடி நின்ற ஷ்ரத்தா,
'இவங்க... உண்மையிலேயே சத்ரியன் ஏற்பாடு பண்ணி அனுப்பின ஆளா? இல்லை... ஜெயிலில் உள்ள கைதிகளை பாதுகாக்கும் ஒரு அதிகாரி தானா?' என்று மனதிற்குள் மீண்டும் கேட்டுக் கொண்டாள்.
அன்று முதல் கார்த்திகாவை இன்னும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள்.
அடுத்தடுத்த நாட்களில் அவளுக்கு சில விஷயங்கள் தெளிவாக தெரிய ஆரம்பித்தது.
குழந்தையை எல்லார் கையிலும் தான் கொடுத்தாலும், கார்த்திகா கொடுக்கவே விடமாட்டாள்.
ஒரு குறிப்பிட்ட கைதிகள், அவர்களிடம் மட்டும் தயக்கமின்றி குழந்தையை ஒப்படைப்பாள்.
சொல்லப்போனால் ஒருத்தி குளிப்பாட்டுவாள். ஒருத்தி துணி மாற்றுவாள். மற்றொருத்தி தூங்க வைப்பாள்.
ஆனால் அவர்களும் கூட அதிக நேரம் குழந்தையை வைத்திருக்க அனுமதி இல்லை.
கொஞ்ச நேரத்தில் மீண்டும் கார்த்திகாவே வாங்கிக் கொள்வாள்.
சிலரை தவிர வேறு யாராவது குழந்தையை தூக்க முயன்றாலே, எங்கிருந்தாலும் "வேண்டாம் குழந்தையை எல்லாரும் தூக்கி விளையாடாதிங்க. உடல்நிலை மோசமான அதுவேற பிரச்சனை" என்று ஒரே வார்த்தையில் தடுத்து விடுவாள்.
அது ஏதோ சாதாரண கண்டிப்பு போன்றும் தெரியவில்லை. பாதுகாப்பு வளையம் போல இருந்தது. அதை பார்த்த ஷ்ரத்தாவுக்கு, கார்த்திகா மீது இருந்த சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.
ஒருநாள் "கார்த்திகா..." என்று தயக்கத்துடன் அழைத்தாள்.
"என்ன?"
"ஹரிணியாவது வந்து பார்க்க முடியாதா? நான்... ரொம்ப பார்க்கணும்னு ஆசைப்படுறேன்." கார்த்திகா பெருமூச்சு விட்டாள்.
"உங்க லாயர் யதுநந்தன் சாரிடம் சொல்லியிருக்கிங்க தானே?" அவர் சொன்னதுக்கு வரலையே" என்றாள் ஷ்ரத்தா.
"அவர் சொன்னா கூட வரலை. நான் சொன்னா மட்டும் வந்துடுவாங்களா?" ஷ்ரத்தா கெஞ்சும் குரலில், "நீங்க சொன்னா வருவாங்கன்னு தோணுது... ஒரு தடவை ட்ரை பண்ணுங்க." என்றாள்.
கார்த்திகாவோ ''பார்க்கிறேன்."
என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
இப்படியிருக்கும் பட்சத்தில் ருத்ரன் வீட்டில். அவன் அறைக்குள் மொபைலில் ஷ்ரத்தாவின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் ராயனை தூக்கி சிரித்துக் கொண்டிருக்கும் படம்.
அந்த படத்தை மீண்டும் மீண்டும் பெரிதாக்கி பார்த்தான்.
ஷ்ரத்தாவின் முகத்தை, கண்களை, புன்னகையை...
மீண்டும் மீண்டும் ரசித்தான்.
அவன் உதடுகளில் தன்னை அறியாமல் புன்னகை மலர்ந்தது. அந்த நேரம் கதவு திறந்து மகனை சாப்பிட அழைக்க வந்த கீர்த்தனா உள்ளே வந்தார்.
மகன் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்ப்பதை கண்டு ஆர்வமாக வந்தவர், அந்த புகைப்படம் ஷ்ரத்தா என்றதும் ஆச்சரியம். இதில் மகன் மையலோட பார்க்க அதிர்ச்சியடைந்தவராக "ருத்ரா..." என்ற சத்தம் கேட்டதும், ருத்ரன் பதறி மொபைலை பின்னால் மறைத்தான். "என்னடா பண்ற?"
"அது... போன்ல இருக்குற போட்டோஸ் பாத்துட்டு இருந்தேன்ம்மா." என்று தடுமாறினான்.
கீர்த்தனா அவன் முகத்தையே பார்த்தார். "போட்டோஸ் பார்த்தா... எதுக்கு இப்படி பயந்து பின்னால மறைக்கற?"
ருத்ரன் பதில் சொல்லவில்லை.
"ஷ்ரத்தா போட்டோவ தானே ஜூம் பண்ணி பாத்துட்டிருந்த?"
என்று நேராக கேட்டார்.
ருத்ரன் தலையை குனிந்தான்.
"அதெல்லாம் இல்லம்மா... ஜஸ்ட்... ஸ்டோரேஜ் க்ளியர் பண்ணினப்ப அவ போட்டோ முன்னால வந்துடுச்சு. அவளை பார்த்தேன்" என்று சமாளித்தான்.
"போதும்." என்று கீர்த்தனா நிறுத்தினார்.
"நீ சும்மா பார்த்திருந்தா இந்த தடுமாற்றமே இருக்காது. நான் வர்றப்ப ரசிச்சு சிரிச்சுட்டு இருந்த. உன் கண்ணுல வேறொரு ரசனை இருந்துச்சு. உன் மனசுல தப்பான எண்ணம் இருக்கிறதால தான் பயப்படுற. இது சரியில்லை." என்றதும் ருத்ரன் மெதுவாக தலையை குனிந்தான்.
சில நொடிகள் கழித்து... "எனக்கு... அவளை பிடிச்சிருக்கு அம்மா." என்றான்.
கீர்த்தனா அதிர்ச்சியில் அவனை பார்த்தார்.
"என்னடா சொல்ற? ஷ்ரத்தாவையா.." என்று பதறினார். ருத்ரன் ஆமென்று தலையாட்டினான்.
"அவ கல்யாணமானவ டா! குழந்தையும் இருக்கு." என்று ஏதோ தெரியாத விஷயம் சொல்வதாக எடுத்துரைத்தார்.
"அவ கல்யாணமானவளா இருக்கலாம். குழந்தை இருக்கட்டும். ஆனா...
சத்ரியன் இல்லையே." என்றான்.
"டேய்... நீதானடா அவன் உயிரோட இருக்கலாம்னு சொன்ன?" என்று மகனின் பேச்சை கேட்டு ஆடித்தான் தடுக்க முனைந்தார்.
"இல்லம்மா... இப்ப நான் விசாரிச்ச வரைக்கும்...
அவனுக்கு உயிரோட இருக்க வாய்ப்பே இல்ல." அவன் மெதுவாக அமர்ந்தான்.
"அவன் தொட்டிருக்குற கேங்...வேர்ல்ட் லெவல் நெட்வொர்க்.
அதுல மாட்டினவங்க உயிரோட வந்த வரலாறே இல்ல. ஏன் எங்க டிப்பார்ட்மெண்ட் கூட தொட முடியாத இடம். அதனால... அவன் உயிரோட இருக்க முடியாது. ஷ்ரத்தா விடோ." என்றான்.
கீர்த்தனாவின் முகம் கோபத்தில் சிவந்தது. "அதனால நீ அவளை கட்டிக்கணுமா?" என்றார்.
"அம்மா.. ஏன் அதுல தப்பென்ன?." என்றான்.
"நீ அவ மேல பாவம் பார்க்க வேண்டிய அவசியம் என்னடா. ருத்ரா இது பெரிய தப்பு" என்றார்.
"அப்போ... நீயே ஏன்ம்மா அவளுக்கு வளைகாப்பு வளையல் போட்ட? குழந்தை பிறந்தப்ப கூடவே இருந்த?
அவளுக்காக ஓடின? அதெல்லாம் அவளையும் என்னையும் கனெக்ட் பண்ணுதும்மா" என்றான
"டேய் அது மனிதாபிமானம்டா" என்றார்.
"இல்லைம்மா... அவளை விதி நம்மளோட தொடர்புப்படுத்தி, வச்சதே.. நானும் அவளும் இணைய தான். எனக்கு நேசம் பிறந்த மாதிரி அவளுக்கும் ஒரு நாள் என் மனசை திறந்து காட்டுவேன்." என்றதும் மகனது அபத்தமான பேச்சை கேட்டு கீர்த்தனா கண்களை மூடிக் கொண்டார்.
"உனக்குன்னு ஒரு நல்ல பொண்ணை நான் பார்த்து கல்யாணம் பண்ணணும்.
அதை செய்யாததால...
இப்ப பார்த்த பொண்ணு மேல ஆசை வந்துருக்கு. இது காதல் இல்லை.." என்று மறுத்தார்.
"அது ஆசை இல்லம்மா." ருத்ரனின் குரல் உறுதியானது.
"அது நேசம். காதல் தான்
அவளை நேசிப்பதை கொச்சைப்படுத்தாதிங்க." என்றான் கோபமாக.
"நீயே உன்னை கொச்சைப்படுத்திக்கிற.. இந்த எண்ணத்தோடதான் அவ முன்னாடி நின்னு உதவி செஞ்சியா? உனக்கு வெட்கமா இல்ல?" என்று கோபமாக மாறினார் கீர்த்தனா.
ருத்ரன் சில நொடிகள் அமைதியாக இருந்தான். பிறகு மெதுவாக, "நீங்க வேற பொண்ணு பார்க்க ஆரம்பிச்சா. யாராயிருந்தாலும் சபைக்கு நேராவே பிடிக்கலன்னு சொல்லிடுவேன்.
எனக்கு... ஷ்ரத்தாவும் ராயனும் போதும்." என்றான்.
அந்த வார்த்தை கீர்த்தனாவை உடைத்தது. "எப்படிடா...
இப்படி ஒரு முடிவு எடுத்து பேசமுடியுது" என்று கீர்த்தனா அதே கோபத்துடன் கேட்டார்.
"எப்ப எடுத்தேன்னு தெரியல.ஆனா... மாத்த முடியாது அம்மா" என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.
தன் பிறகு இரண்டு நாட்கள் தாயும் மகனும் சரியாக பேசவே இல்லை.
கீர்த்தனா மனதிற்குள், 'இன்னும் மூணு வருஷம் ஷ்ரத்தா ஜெயில்ல இருப்பா. அதுக்குள்ள என் பையன் மறந்துடுவான். மறக்கடிக்கற மாதிரி ஒரு பொண்ணை பார்க்கணும்.'
என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டார். அதனால் தெரிந்தவர் தெரியாத தரகர் என்று எல்லோரிடமும் நல்ல வரனை பார்க்க கூறியிருந்தார்.
ருத்ரன் மட்டும்... தனக்குள் வேறு உலகத்தில் இருந்தான். 'ஷ்ரத்தா என்னை ஏற்றுக்க மாட்டான்னு நல்லா தெரியும். ஆனா... ஒருநாள்... என் மனச புரிஞ்சுக்குவா.' என்று நினைத்து தனியாக சிரித்துக் கொண்டிருந்தான்.
அதை பார்த்த சேகர், "என்ன சார்? தனியா சிரிக்கறீங்க?" என்று கேட்டான்.
"ஒன்னுமில்லை சேகர்." என்றவன் பேச்சை மாற்றினான்.
"சார்... கேட்கணும்னு இருந்தேன்.. இப்பல்லாம் அந்த கேங்லீடர் சத்ரியன் விஷயம் பத்தி எந்த தகவலும் சேகரிக்க போகலையா சார். சத்ரியன் விஷயம் என்னாச்சு சார்?" என்று சேகர் ஆவலாக கேட்டான். ஒரு பிளாட் கிடைக்கும் யோகம் தள்ளிக் கொண்டே செல்கின்றதே.
"என்னை விட ரொம்ப ஆர்வமாயிருக்க?" என்றதற்கு, தலையை சொரிந்து, 'உங்களுக்கு காரோட்டிட்டு இருக்கறப்ப போரடிக்கும். நீங்க என்னிடம் ஷேர் பண்ணுவதால தெரிந்துக்க ஆசை சார்" என்று சந்தேகம் வராது கூறினான்.
ருத்ரனோ "சத்ரியன் செத்துப் போயிருப்பான் சேகர்" என்று உறுதியாக சொன்னான் ருத்ரன்.
"அவன் கப்பல்... நடுக்கடலில். சிதறடிக்கப்பட்டிருக்கு. இங்க ஷ்ரத்தா கையால சாகடிக்கப்பட்டு இறந்த அன்னிக்கு தான்.
இங்க இறந்ததா நியூஸை கிரியேட் பண்ணிட்டு, அவனோட கப்பல்ல பயணம் செய்திருக்க பிளான் பண்ணிருக்கலாம். சத்ரியன் தொட்ட இடம் ரொம்ப பெரிய நெட்வொர்க் அதுல ஏதோவொரு குரூப் சத்ரியன் கப்பலில் தப்பிப்பதை கணிச்சிருக்கும். கப்பலையே பிளாஸ்ட் பண்ணிருக்காங்க. அந்த நெட்வொர்க் ஆட்களிடமிருந்து,
தப்பிச்சிருக்க வாய்ப்பே இல்ல. ஏன்னா நம்ம டிபார்ட்மெண்ட் சிலரை முழுங்கி ஏப்பமிட்ட இடம். ஐரீன் கேஸ் விஷயமா கேட்டப்ப படுபயங்கரமா சொன்னானுங்க."
சேகர் அதையெல்லாம் சேகரித்தவனாக, அந்த தகவலை அப்படியே சேகர்.
தனக்கு மேலிருந்த மர்ம நபரிடம் தெரிவித்தான்.
அவனும் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.
"தீயில சாகலன்னாலும்... இப்படி செத்ததா சொல்லிட்டு கப்பலில் புறப்பட்டு அந்த கப்பல்லயே செத்திருக்கலாமோ" என்று யோசித்தான். ஏனெனில் குழந்தைகள் அந்த கப்பலில் ஏற்றிய பதிவு, அந்த கப்பல் வெடித்த போதும் கிடைத்தது.
அப்படியென்றால் குழந்தைகளோடு சத்ரியன் அதில் மாண்டிருப்பானோ? என்று சிந்தித்தனர்
பிறகு மெதுவாக, 'ஷ்ரத்தாவுக்கு குழந்தை பிறந்திருக்கும் போது,
சத்ரியன் உயிரோட இருந்தா, நிச்சயமா அவர் உயிர்ல முளைச்ச குழந்தையை வந்து பாத்திருப்பான் இல்லையா? இப்ப வரை பார்க்க வரலை.' என்று சிந்தித்தான்.
மறுநொடியே அவன் கண்கள் கூர்மையானது. 'ஒரு வேலை...ஷ்ரத்தாவுக்கு ஆபத்து வந்தா. அந்த சத்ரியன் வெளியே வர்றானான்னு சோதிச்சிட்டா?' என்ற சந்தேகம் முளைக்க, 'ஆஷாவை அனுப்பிப் பாருங்க." என்றான் தனக்கு கீழேயுள்ளவர்களுக்கு.
சிறைச்சாலைக்குள் ஆஷா செல்வதற்கான திட்டங்களும்,
ஷ்ரத்தாவை கொல்லும் திட்டமும் அமைதியாக ஆரம்பிக்கப்பட்டது.
ஆஷா அதனால் வரதட்சணை தரமறுத்ததால் கணவரும் மாமியாரும் கொடுமைப்படுத்துவதாக கொன்றுவிட்டு வந்த வழக்கில், கொலை செய்ததற்கான தண்டனைப் பெற்று சிறைக்குள் வந்தாள்.
ஷ்ரத்தா அறையில் அவளிருக்கும் பிரிவில், வராண்டாவில் ஏற்கனவே கைதிகள் இருக்க, ஆஷா சிறைச்சாலைக்குள் ஷ்ரத்தாவோடு நெருங்கி, வருகைக்கு காத்திருந்தாள்.
பெரும்பாலும் குளியலறையிலும் சமையலறையிலும் எல்லாம் பிரித்து தந்து வேலை வாங்கும் அதிகாரிகளால் பொதுவான சந்திப்பு அமைவது சாப்பிடும் நேரம் மட்டுமே.
அதுவும் அவரவர் குழுவாக தான் அமர்ந்து கொள்வார்கள்.
அரிதாக தான் ஒருத்தி மற்றொருத்தியுடன் நேரம் செலவிடுவார்கள்.
ஆஷா ஷ்ரத்த வையோ அல்லது குழந்தையையோ அழிக்க நேரம் பார்த்து திரிந்தாள்.
அன்று காமராஜர் பிறந்தநாள் என்று அந்த வாய்ப்பு தாராளமாகவே அமைந்தது.
கைதிகளை வரிசையாக இடைவெளியிட்டு அமர வைத்து அங்கே வந்திருந்த விருந்தினர்கள் பேசினார்கள்.
ஷ்ரத்தா அடிக்கடி பீடிங் கொடுப்பதால் கடைசியில் தான் அமர்ந்திருந்தாள். குழந்தை அழவும், தனித்து சென்று அமுதமூட்ட சென்றாள்.
ஆஷா உடனே எழுந்து ரெஸ்ட்ரூம் போவதாக கையை காட்டிவிட, கார்த்திகா 'ஞானாசூன்யம் போய் தொலை' என்று அனுப்பி வைத்தாள்.
ஆஷா சிறையில் ஆங்காங்கே பதுக்கி வைத்த பொருட்களை கையில் எடுத்துகொண்டு மறைத்தபடி ஷ்ரத்தாவை நெருங்கினாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 16)
அடேய் ருத்ரா..! ஷ்ரத்தா மேல உனக்கு நேசம் வந்தது தப்பேயில்லை. அதை நீயே வைச்சுக்க., ஆனா ஷ்ரத்தா சத்ரியனைத் தவிர வேற யாரையும் நேசிக்க மாட்டாள். அது தான் உண்மை.
ஓ.. சிறைக்குள்ளயே ஷ்ரத்தாவை போட சதி நடக்குதோ, போடட்டும், போடட்டும், போட்டுத்தான் பார்க்கட்டுமே. ஆனால் பாவம் ஆழம் தெரியாமல் காலை விட துணிஞ்சிட்டாங்கப் போல. வினை விதைத்தவன் வினையை அனுபவிச்சுத்தானே ஆகணும்.
😊😊😊
CRVS (or) CRVS 2797
-
தகிக்கும் நிலவொன்று-17
25 minutes ago
-
தகிக்கும் நிலவொன்று-8
16 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-7
16 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-6
16 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-5
17 hours ago
Recently viewed by users: kothaihari 54 minutes ago.
- 25 Forums
- 215 Topics
- 754 Posts
- 1 Online
- 329 Members
