Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-15

9 Posts
9 Users
4 Reactions
44 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#222]

அத்தியாயம்-15

குழந்தை பிறந்து அன்று முப்பதாவது நாள். குழந்தைக்கு பெயர் வைக்கும் நாளாக இருந்தது.

     யதுநந்தன் மெதுவாக ஷ்ரத்தாவின் அருகில் வந்து நின்றான்.

"ஷ்ரத்தா..." அவள் முகம் நிமிர்ந்து பார்த்தாள்.

"யது சார்... வினோத் அண்ணாவை குழந்தைக்கு பெயர் வைக்க வரச் சொல்லிட்டிங்க தானே? ஹரிணியும்... வினோத் அண்ணாவும் வருவாங்க தானே? ஒருவேளை... வினோத் அண்ணாவே ஏதாவது பெயர் யோசிச்சு வச்சிருப்பாரா? அவங்க ஏர்போர்ட் ரீச் ஆகிட்டாங்களா?" என்று ஒரே மூச்சில் கேட்டாள்.

    யதுநந்தனின் முகம் மாறியது.

"நிறைய ட்ரை பண்ணேன் ஷ்ரத்தா... வினோத்தை இன்னும் கான்டாக்ட் பண்ண முடியலை. ஹரிணியும் சில காரணங்களால வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க." அவன் சற்றே புன்னகைக்க முயன்றான்.

"நீயே குழந்தைக்கு பெயர் வை. நாம எல்லாருக்கும் சாக்லேட் கொடுத்து இந்த நாளை சந்தோஷமா கொண்டாடலாம்." என்றதும் அந்த வார்த்தை முடிந்த அடுத்த நொடியே,

ஷ்ரத்தாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

உயிரே உடைந்து போனது போல அழ ஆரம்பித்தாள்.

"ஷ்ரத்தா." என்று கார்த்திகா பதறினாள். ஆனால் ஷ்ரத்தா அழுகை மட்டும் அதிகரித்தது.

"என்னால என் குழந்தைக்கு பெயர் வைக்க முடியாது." என்று தலையசைத்தாள்.

அப்போது கீர்த்தனா அவளருகில் வந்து அமர்ந்தார்.

"என்னம்மா... ஏன் இப்படியெல்லாம் அழற?"

ஷ்ரத்தா பதில் சொல்ல முடியாது தவித்தாள். கீர்த்தனா மெதுவாக அவள் கையை வருடினார்.

"உங்க வினோத் அண்ணாவுக்கு ஏதாவது முக்கியமான வேலை இருந்திருக்கலாம். அவர் ஒன்னும் உன் சொந்த அண்ணா இல்லையேம்மா.. அவருக்கும் வாழ்க்கை இருக்கு. அதனால வர முடியாம போயிருக்கலாம்." என்றதும், அதைக் கேட்ட ஷ்ரத்தா வேகமாக தலையசைத்தாள்.

"உயிர் போற வேலையா இருந்தாலும், அவர் இங்க வந்திருப்பார் அம்மா. அவருக்கு ஏதோ ஆகிடுச்சோனு பயமாயிருக்கு" அறை முழுவதும் அமைதியாகியது.

கார்த்திகா மெதுவாக முன்வந்தாள். "லுக் ஷ்ரத்தா... உடம்பை கெடுத்துக்காதீங்க. குழந்தைக்கு பெயர் வச்சிட்டு... நல்லபடியா இந்த நாளை முடிப்போம்." என்றாள். 

ஆனால் ஷ்ரத்தா மறுபடியும் அழ ஆரம்பித்தாள்.

"எல்லாரும்... என்னை விட்டு போயிட்டாங்க... எனக்கு யாருமே இல்ல... நான் மட்டும் ஏன் வாழணும்... என் குழந்தைக்கு ஏன் இந்த நிலைமை." என்று தேவையின்றி கதறினாள்.

அவ்வளவு நேரம் அமைதியாக நின்றிருந்த ருத்ரன் திடீரென்று முன் வந்தான்.

"இப்ப யாரு உன்னை விட்டு போனது? உன் கூட தானே இருக்காங்க" என்றவன் குரல் சற்றே அதட்டலாக இருந்தது.

ஷ்ரத்தா அழுதபடியே பார்த்தாள். ருத்ரன் மெதுவாக அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான்.

"அன்னைக்கு... என்னிடம் என்ன சொன்ன?" ஷ்ரத்தா குழப்பமாக பார்த்தாள்.

"சத்ரியன் உயிரோட இருக்கார்னு நினைச்சா.. உயிரோட இருக்கார். உன் மனசுல. உயிரோட இல்லன்னு நினைச்சா... இல்ல. அப்படின்னு நீதானே சொன்ன."

ஷ்ரத்தாவின் கண்கள் மெதுவாக விரிந்தன.

"இப்ப சொல்லு... உன் மனசுல... சத்ரியன் உயிரோட இருக்காரா?" என்று பார்க்க ஒரு நொடி... அவள் கண்களை மூடினாள்.

பிறகு மெதுவாக...

"ஆமா. என் சத்ரியன் என் மனசுல உயிரோட வாழறார்." என்று தலையசைத்தாள்.

"அப்ப." ருத்ரன் குழந்தையை பார்த்தான். "அவரோட மகனுக்கு... பெயர் வை." என்றான்.

அந்த ஒரு வார்த்தை ஷ்ரத்தாவின் மனதை அமைதிப்படுத்தியது.

அவள் கண்ணீரை துடைத்தாள். குழந்தையை கைகளில் வாங்கினாள்.

சிறிது நேரம் அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிறகு மெதுவாக "சத்ரியனுக்கும் எனக்கும் பிறந்த குழந்தைக்கு நான் ராயன்-னு பெயர் வைக்கறேன்." என்றாள்.

அங்கிருந்த அனைவரும் அவளை பார்த்தனர்.

"ராயன்." என்று மீண்டும் சொன்னாள்.

"தலைவன் அரசன்... ராயன் என்ற பெயருக்கு அதுதான் அர்த்தம் ம்ம்.. சூப்பரா தான் பெயர் வைக்கற" என்றான் ருத்ரன்.

கீர்த்தனா குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டார்.

"ராயன்.. நல்லாயிருக்கு." என்றார். அதிலும் மகன் ஷ்ரத்தாவை அதட்டி தொட்டு நிறுத்தி, ஏதேதோ பேசி அவளை சாந்தப்படுத்தியதை கண்டு ஆச்சரியப்பட்டார். 

  இத்தனை நாட்களாக ருத்ரன் ஷ்ரத்தாவை அளவுக்கதிகமாக கோபத்துடன் அல்லவா பார்த்து திட்டி தீர்த்தான். 

  குழந்தை பிறந்தப்பிறகு அதிகப்படியாக தான் மென்மை காட்டுகின்றானோ? ஆனால் முன்பு அடிக்கடி வந்து அவளை ஏறிட்டவன் இந்த இடைப்பட்ட நாட்களில் அதிகம் தன்னுடன் வராமல் தவிர்த்துவிட்டு இன்று தான் வந்துள்ளதில் சந்தேகம் கூடவில்லை. மாறாக மகனுக்கும் கனிவுடன் பேச வந்துவிட்டதாக முடிவுக் கட்டினார்.‌

கார்த்திகா உடனே இனிப்புப் பெட்டியை திறந்தாள்.

"சரி... இனிப்பு கொடுக்கலாமா?" என்று சிரித்தாள்.

யதுநந்தன் சாக்லேட்டுகளை எடுத்துக் கொண்டு அனைவருக்கும் வழங்க ஆரம்பித்தான். கீர்த்தனாவோ யதுநந்தனின் செய்கையை கண்டவர் ஏதோ புரிந்தவராக நின்றார். 

குழந்தைக்கு ராயன் என்ற பெயரிட்ட காட்சியை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.

ஒரு காலத்தில் 'எந்த கூட்டத்துக்கு தலைவன்?' என்று கிண்டல் கூட செய்திருப்பான்.

ஆனால் இன்று ஷ்ரத்தாவை மீண்டும் அழ வைக்க விரும்பவில்லை. கொஞ்ச நேரம் முன் அழுததே அவனால் தாங்கயியலவில்லை‌. அதனால் அமைதியாகவே நின்றான்.

யதுநந்தனும் அமைதியாக ஷ்ரத்தாவை பார்த்துக் கொண்டிருந்தான்.

'முதல் கரு கலைந்தப்போ சத்ரியன் ரொம்ப உடைஞ்சு போயிட்டார்னு சொன்னா. அதே ஷ்ரத்தா தான்... குழந்தையை கொல்ல வந்ததால சத்ரியனை சுட்டேன்னு சொன்னா...

இரண்டும் ஒன்றுக்கொன்று பொருந்தவில்லை.

உண்மை... வேறு எங்கோ இருந்தது. ஒருவேளை... சத்ரியன் வேறு காரணத்திற்காக சிக்கியிருக்கலாம். அல்லது...

ருத்ரன் சந்தேகப்படுவது போல...

சத்ரியன் இன்னும் உயிரோடு கூட இருக்கலாம். ஆனால்... அந்த உண்மையை தெரிந்துகொள்ள...

ஷ்ரத்தாவின் காயத்தை மீண்டும் கீற அவனுக்கும் மனமில்லை.

அவளுக்கு திவாகரின் மகளாக பாதுகாப்பு கொடுத்தாலே போதும் என்று நினைத்தான்.

ருத்ரனின் மனமும் வேறொரு போராட்டத்தில் இருந்தது.

தென்கிழக்கு ஆசிய தீவுகளின் குற்றவலை பற்றி அவன் சேகரித்த தகவல்கள். அதில் சிக்கியவர்கள் உயிரோடு திரும்பிய வரலாறே இல்லை.

அதனால் சத்ரியன் இறந்திருக்கலாம் என்று அவன் நம்பினான். அதனால்தான்...

இனி ஷ்ரத்தாவிடம் சத்ரியனைப் பற்றி கேட்டு காயப்படுத்தக்கூடாது என்று அவனும் முடிவு செய்தான்.

ஆனால் அவள் பக்கம் நகரும் தன் மனதை மட்டும் அவனால் நிறுத்த முடியவில்லை. அவளது வெறுப்பை மாற்ற வேண்டும்.

குறைந்தபட்சம் அவள் தன்னை மனிதனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த முயற்சியின் முதல் அடியாக இன்று அவளிடம் மென்மையாக பேசியிருந்தான்.

பெயர் வைத்துக் கொண்டாட்டம் முடிந்ததும்,

குழந்தை பலரது கைகளில் சுற்றி இறுதியில் மீண்டும்.

அம்மாவின் மார்பில் வந்து அமைதியாக உறங்கிக் கொண்டான்.

  யதுநந்தனோ 'குழந்தையை வளர்ப்பதில் கஷ்டமிருக்கா?' என்று கேட்க இல்லை என்று தலையாட்டியவள், "வினோத் அண்ணா ஹரிணியை நான் சந்திக்க ஆசைப்படறேன்னு சொல்லறிங்களா.. எ..என்னால அவங்களை பார்க்காம இருக்க முடியலை. கிட்டதட்ட ஆறேழு மாசமாகுது. சும்மாவாது வந்து பார்க்க சொல்லுங்க." என்று கோரிக்கையை வைத்தாள். 

யதுநந்தனோ ''நான் வந்து பார்க்கறேன்னே ஷ்ரத்தா அது போதாதா?" என்று கேட்டான். ஷ்ரத்தா அமைதியாக சொல்ல முடியாது தவிக்க, "வினோத் உங்க சத்ரியனிடம் வேலை பார்த்தவன். அவனை அண்ணன்னு அழைச்சதால இந்த பாசமா? இல்லை... வினோத் மூலமா உங்களுக்கு ஏதாவது தகவல் தெரியணுமா?" என்று லாயர் மூளை லேசாக கேள்விக் கேட்டு விட்டது. 

  ஷ்ரத்தாவோ "நீங்க எந்த மாதிரி பதில் வேண்டும்னு என்னிடம் வினாத் தொடுக்கறிங்களே அதுக்கான பதிலாகவே நினைச்சிக்கோங்க." என்றாள். 

   யதுநந்தனோ மனதிற்குள், 'நான் லாயர் திவாகரோட பொண்ணை நேசிக்கறேன் ஷ்ரத்தா. அவ என் நேசிப்பை வெறுக்காம ஏற்றுப்பானு நம்பறேன். என்னைக்காவது மனதிலிருப்பதை சொல்வேன். அப்ப எஸ் சொல்லு' என்றது போல நின்றான்.‌

"திரும்ப வருவேன் ஷ்ரத்தா. முடிந்தா ஹரிணியை அழைச்சிட்டு வர்றேன்." என்று யதுநந்தன் கடிகாரத்தை பார்த்து கிளம்பினான். 

கீர்த்தனாவோ "அம்மாடி நாங்களும் கிளம்பறோம். குழந்தையை ராயனை நல்லபடியா பார்த்துக்கோ. அதென்னவோ வீட்டுக்கு போனா கூட கண்ணுக்குள்ளயே நிற்கறான்." என்று முத்தமிட்டார். 

"ருத்ரா.. போலாமா?" என்று கேட்க, தலையாட்டினான்.

  இரண்டெட்டு கீர்த்தனாவுடன் நடந்தவன், ''ஒன் செகண்ட் மா இதோ வந்துடறேன்'' என்று ஷ்ரத்தா முன் வந்தான். 

    ''உன்கிட்ட நிறைய பேசணும்னு தோணுது. ஆனா முடியலை. நான் ஏதாவது பேசினா நீ அழுவற.   

    அடிக்கடி அழுது அழுமூஞ்சி அம்மாவா ராயனுக்கு இருக்காத. பீ போல்ட். உனக்கு சத்ரியன் கன் சூட் பண்ண கத்து தந்தான்னு சொன்ன. அதே போல சூழ்நிலையை எப்படி கையாளனும்னு சொல்லி தந்திருப்பான். சோ.. கொஞ்சம் யோசி. உன் குழந்தை பெயர் சூட்டு விழா. இந்த நேரம் எப்படி சந்தோஷமா சிரிச்சு இருக்க வேண்டாம். 

  வளைகாப்பு போட்டோவுல எல்லாம் ஸ்மெல் பண்ணி அழகாயிருந்த. இன்னிக்கு பாதிக்கிட்ட அழுதுட்ட. குட் மெமரிஸா மாத்தறதுக்குள்ள போதும் போதுமாயிடுச்சு.

   இப்பவும் சொல்லறேன்..‌ சத்ரியனை நீ கொன்றுயிருக்க மாட்ட. வேண்டுமின்னா.. அவன் உனக்காக சாக தயாராக இருப்பான். ஏன்னா.. உன் முகம் வாடினா யாராயிருந்தாலும் மனசு கேட்காது.'' என்றான்.‌

   அதில் நீ முகம் வாடினா எனக்குமே தாங்கமுடியவில்லை என்று கூற நா எழுந்தது.

  ராயனை தொட்டு தடவி, 'ஸ்வீட் பாய்.. நல்லா பார்த்துக்கோ. நீ..நீயும் உடம்பை பார்த்துக்கோ. மனசுல கண்டதும் போட்டு குழப்பிக்காத" என்று அவளை பார்த்தவாறு பின்னால் நடந்து சென்றான்.

  கார்த்திகாவோ "சார்... முன்னால பார்க்காம பின்னாடி நடக்கறிங்க.. பார்...த்..த்து இடிச்சிட போறிங்க" என்றாள் நக்கலாய். 

  ருத்ரனோ புன்முறுவலுடன் அவ்விடம் விட்டு சென்றதும் கதவு சாற்றப்பட்டது. 

ஷ்ரத்தாவுக்கு ருத்ரன் கூறியதோ பேசியதோ புரிந்தும் புரியாமலும் இருக்கும் மனநிலையில் இருந்தாள். 

முன்பு ருத்ரனே, 'என்ன சத்ரியன் சொல்லி தந்தானா

யாரிடம் எப்படி பேசணும் சமாளிக்கணும்'னு என்று கூறுவான். அதில் ஒரு ஏளனம் கேலியும் இகழ்ச்சியும் இருக்கும். இன்றும் அதே வார்த்தை ஆனால் சில முன்னும் பின்னும் வார்த்தை கனிந்து கூறுகின்றான்.‌

   ஆனால் ஏதோ பூடகமான உணர்வை வெளிப்படுத்துவதை கவனித்தாள். 

  தனக்கு தான் தவறாக தெரிகின்றதா இல்லை எப்படி என்று புரியாமல் திகைத்தாலும், ராயன் வேறு உறங்கவும், குழந்தையை அணைத்துக் கொண்டு, வானத்தை பார்த்தாள். 

  "சத்ரியா... ராயன்னு பெயர் வச்சிருக்கேன். உன்னால காப்பாற்றப்பட்ட குழந்தைக்கு இவன் ஒரு நல்ல தலைவனா நின்று வழிநடத்த போறவனாக. பெயர் நல்லாயிருக்கா?' என்று மனதிற்குள் மறுகினாள். 

  கார்த்திகா முன்னே வந்து, "ரெம்ப நேரம் வெயில்லயோ, பனியிலயோ நிற்காத. உள்ள போங்க" என்று அதட்ட, அதற்கேற்றவாறு அறைக்குள் அடைக்கலமானாள். 

முதல் முறை கார்த்திகா எதிரியின் குழுவிலிருந்து வந்தவளாக இல்லாமல், சத்ரியனுக்காக தங்களை காக்கா வந்திருக்கும் பெண்ணாக இருப்பாளோ என்று யோசித்தாள். ஏனெனில் ஒரு நொடி அதிகமாக வெயிலில் இருந்தாலும் கூட தன்னையும் தன் குழந்தையையும் காத்திடும் முடிவில் பாதுகாக்கின்றாள். 

அதனாலோ என்னவோ தயங்கியபடி, 'கா..கார்த்..கார்த்திகா. நீங்க வினோத் அண்ணா மூலமா வேலைக்கு சேர்ந்தவங்களா?" என்றாள். 

கார்த்திகாவின் அந்த ஒரு நொடி தடுமாற்றமே, அவள் மனதில் புதிய சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்

 

 

 

 

 


 
Posted : July 25, 2026 7:35 am
Kalidevi, muthupriyabalaji, Priyarajan and 1 people reacted
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 15)

அடப்பாவிங்களா..! ரெண்டு பேரும்
உள்ளுக்குள்ள ஷ்ரத்தாவை போட்டி போட்டு லவ் பண்ணிக்கிட்டு, அதை வெளியே சொல்ல முடியாமல், அவளைப் போய் மனசுல கண்டதையும் போட்டு குழப்பிக்காதேன்னு
அட்வைஸ் வேற பண்ணிக்கிட்டு போறிங்களே... இது உங்களுக்கே நல்லா இருக்குதா..? அவ ரொம்ப தெளிவாத்தான்டா இருக்கிறாள், குழப்பமே உங்க ரெண்டு பேருக்கும் தான் டா. தீ வட்டி தடியன்களா...!

😊😊😊
CRVS (or) CRVS 2797


 
Posted : July 25, 2026 8:38 am
(@kothaihari)
Posts: 54
Trusted Member
 

Very interesting 


 
Posted : July 25, 2026 9:05 am
(@guna-sundari)
Posts: 56
Trusted Member
 

Omg both are loving sharadha. But sharadha always love chattiyian.only.  Karthika also has some secrets. Very intresting sis.


 
Posted : July 25, 2026 9:28 am
(@subhakumar85)
Posts: 44
Eminent Member
 

Hmm yar yarukkaga vanthirukaangane theriyala 


 
Posted : July 25, 2026 9:39 am
(@dharsinipriya)
Posts: 59
Trusted Member
 

Super sis nice epi semmaiya pogudhu story 👍 👌 😍 paavam Vinoth ku enna Achu nu therila shratha ku therinja romba kashta paduvaa eppdiyo name vechi celebrate panniyachu but endha name konjam nallaella sis but unga eshtam ( dhanush film dhan pa niabagam varudhu🫣) Karthika shrathava nalla parthukuranga eppodhaiku adhu dhan avaluku aarudhal🥺


 
Posted : July 25, 2026 10:10 am
(@priyarajan)
Posts: 11
Active Member
 

It's interesting waiting for nxt epi 💕 👌🏼


 
Posted : July 25, 2026 12:03 pm
(@kalidevi)
Posts: 56
Trusted Member
 

ennanga da rendu perum ippadi love panren solringa yathu soft corner oda lawyer sir ponnu ponnu sollum pothe intha doubt vanthuchi athe mari ipo panran chatriyan illa ninachi panringa thedirnu oru naal vanthu nika poran apo therium da ungaluku


 
Posted : July 25, 2026 2:18 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 49
Trusted Member
 

Adei enna ga da rendu perumae ullukula love ah vachi kitu suthiriga nalla varuviga da nega .Shardha correct ah Keerthana ah va pathi guess pannita polayae 


 
Posted : July 25, 2026 7:05 pm

Scroll to Top