தகிக்கும் நிலவொன்று-14
அத்தியாயம்-14
ஷ்ரத்தா இருந்த சிறைப்பிரிவின் பொறுப்பு முழுவதும் கார்த்திகாவிடமே இருந்தது.
அதுவும் இப்போது கைதியாக மட்டுமல்ல. பிறந்த சில நாட்களே ஆன குழந்தையுடன் இருந்த தாயாக என்பதால், அவளது கவனம் முழுவதும் ஷ்ரத்தாவையும், குழந்தையையும் சுற்றியே இருந்தது.
இரவானதும் குழந்தை அழ ஆரம்பித்தால், ஷ்ரத்தா வலியால் எழுந்து நிற்கக்கூட தடுமாறுவாள்.
"ஷ்ரத்தா... நீ எழுந்துக்காத" என்று கார்த்திகா உடனே குழந்தையை அவளிடமிருந்து வாங்கிக் கொள்வாள்.
"நான் பார்த்துக்கறேன்." என்று குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு மெதுவாக தட்டிக் கொடுத்து நடந்தபடியே தூங்க வைப்பாள்.
ஷ்ரத்தாவை மட்டும் மீண்டும் படுக்கையில் படுக்க வைத்து,
கதவை பூட்டி விட்டு,வெளியே குழந்தையுடன் அமர்ந்திருப்பாள்.
குழந்தை நிம்மதியாக உறங்கிய பிறகு தான் மீண்டும் ஷ்ரத்தாவின் அருகில் கொண்டு வந்து படுக்க வைப்பாள்.
அதைப் பார்த்த ஷ்ரத்தாவின் மனம் நெகிழ்ந்தது.
கண்களை மூடியபடி படுத்திருந்தவள். கடந்த சில நாட்களை நினைத்துப் பார்த்தாள்.
யதுநந்தன், ருத்ரன் இருவருமே குழந்தையை கையில் வாங்கிய விதம் இன்னும் கண்முன்னே வந்தது.
அவ்வளவு நேரமும் அந்தச் சிறிய உயிரை ரசித்துக் கொண்டிருந்தனர்.
குழந்தையை காணும் போது இருவரின் முகத்திலும் வன்மம் இல்லை. பகையும் இல்லை. சிரிப்பு மட்டும் இருந்தது. தன்னிடமும் அவர்கள் இருவரும் இதுவரை இல்லாத அளவுக்கு நிதானமாகவே நடந்துகொண்டனர்.
யதுநந்தன் அப்படித்தான். ஆனால்... ருத்ரனின் மாற்றம்தான் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
முன்பெல்லாம் பார்வையில் சந்தேகம், குரலில் முழுவதும் கோபம். இப்போது அதே பார்வையில் வேறோரு அர்த்தம் இருந்தது. அந்தப் பார்வைக்கு அர்த்தம் தேடினாள்.
யதுநந்தனின் பார்வையிலும்... அதே மென்மை. 'இது... என்ன பார்வை?' என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள்.
பதில் மட்டும் கிடைக்கவில்லை.
கீர்த்தனா ருத்ரனின் தாய் வேறு. சொந்தம் இல்லாதவளாக இருந்தும்... ஒவ்வொரு நொடியும் தாயைப்போல் பார்த்துக் கொண்டார். அதை நினைத்ததும் ஷ்ரத்தாவின் கண்கள் கலங்கின. ஆனால் ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும் அவளது சத்ரியன் மட்டும் இருந்திருந்தால், அது வேறொரு உலகம். அவன் அருகில் இருந்தாலே,
எந்தப் பிரச்சினையையும் பார்த்து சிரித்திருப்பாள்.
முதல் முதலாக அவனை விட்டு பிரிய வேண்டும் என்று நினைத்தவள். இன்று...
அந்தப் பிரிவையே தாங்க முடியாமல் தவித்தாள். கண்ணீர் அமைதியாக வழிந்தது. அதை கவனித்த கார்த்திகா. "ஷ்ரத்தா." என்று மெதுவாக அழைத்தாள்.
"குழந்தை தூங்கிட்டான்." என்று கூறி அவனை மீண்டும் ஷ்ரத்தாவின் அருகில் படுக்க வைத்தாள்.
குழந்தையின் முகத்தை பார்த்தவள் மெதுவாக அவனது கன்னத்தை வருடினாள்.
சில நொடிகள் கழித்து.. "மேம்..."என்று கார்த்திகாவை அழைத்தாள்.
"சொல்லுங்க." என்றாள் கார்த்திகா.
"நீங்க... இன்னும் வீட்டுக்கே போகலையா?" என்றதும் கார்த்திகா சிரித்தாள்.
"போகணும்.. ஆனா எனக்குன்னு ஒரு வீடு வேணுமே?" என்றாள்.
"அப்போ... உங்க குடும்பம்?" என்று கேட்டாள்.
கார்த்திகாவின் முகத்தில் அந்த நொடி ஒரு மெல்லிய மாற்றம் தோன்றியது. ஆனால் உடனே மறைத்துக் கொண்டாள்.
"அதெல்லாம்... ஒரு நாளைக்கு சொல்றேன். அதுக்கு நேரம் வரும்." என்று மட்டும் சொல்லிவிட்டு பேச்சை முடித்தாள்.
அந்த ஒரு பதில் ஷ்ரத்தாவுக்குள் மீண்டும் பழைய எச்சரிக்கையை எழுப்பியது.
'126 குழந்தைகள்...' அந்த எண்ணிக்கை மீண்டும் நினைவுக்கு வந்தது.
இன்னும் அவர்களை தேடிக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள்.
அப்படியிருக்க... கார்த்திகா மட்டும் யார்? அவளுக்கும் அந்த ரகசியத்துக்கும் கூட ஏதாவது தொடர்பு இருந்தால்? என்று ஒரு நொடி சந்தேகம் தோன்றியது.
அடுத்த நொடியே மனதில் அலாரம் அடிக்க, மேற்கொண்டு அந்த எண்ணத்தை தள்ளிவிட்டாள். யாரை நம்புவது யாரை நம்ப கூடாதென்று அறியாமல் திணறினாள்
ஒரு நிம்மதியான இரவாக மாறியது. கொசுவலையினுள்...
குழந்தை அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.
கொசுக்கடி கூட இல்லாமல்... சின்னஞ்சிறு கைகளை விரித்தபடி தூங்கிய அவனை பார்த்துக்கொண்டே
ஷ்ரத்தாவின் மனமும் சற்றே அமைதியானது.
அடுத்தடுத்த நாட்களில், குழந்தையை பார்க்க சிறைக்கைதிகள் பலரும் வந்தனர். சிறையில் இருந்த பெண் கைதிகள் ஆசையாக
"ஒரு தடவை குழந்தையை கொடுங்க மேடம்." என்று ஆசையுடன் வாங்கி கொஞ்சினர்.
அதைப் பார்த்த கார்த்திகா உடனே தடுத்தாள். "எல்லார் கையிலயும் கொடுக்காதீங்க ஷ்ரத்தா" என்று கடிந்தாள். "ஏதாவது ஆகிடப் போகுது." என்று கண்டித்தாள்.
பிறகு ஷ்ரத்தாவுடன் ஒரே அறையில் இருந்த சில கைதிகளை மட்டும் காட்டி,
"இவங்ககிட்ட மட்டும் கொடுங்க. தீபா, நந்திதா, லட்சுமி இவங்க நம்பிக்கையான கைதிங்க. இதுவும் ஒரு விதமான பாதுகாப்புதான்." என்று விளக்கினாள்.
அதன் பிறகுதான் ஷ்ரத்தாவும் விழிப்புடன் இருக்க ஆரம்பித்தாள்.
'இங்க கூட யாராவது... என் குழந்தைக்கு ஏதாவது பண்ணிடுவாங்களோ...? சத்ரியன் வாரிசு என்று அழிக்க வந்தால்.' என்ற பயம் வந்தது.
கார்த்திகா கூடயிருந்ததால் அந்த பயம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
இந்த நாட்களில் கீர்த்தனா இரண்டு முறை குழந்தையை பார்க்க வந்தார். குழந்தையை கையில் வாங்கியவர், "இவனை பார்த்தாலே... வீட்டுக்கு கூட்டிட்டு போயிடணும்னு தோணுது." என்று சிரித்தார்.
"என்னோட இருக்கணும்னு அவனுக்கும் விதிம்மா" என்றாள் ஷ்ரத்தா.
"பெயர் யோசிச்சிட்டியா ஷ்ரத்தா?" என்று கேட்க, கார்த்திகாவோ "அதெல்லாம் முப்பதாம் நாளில் அம்சமா வச்சிடலாம். வளைகாப்பு மாதிரி இந்த முறை வச்சிட்டா போச்சு" என்றதும், ஷ்ரத்தாவோ "கார்த்திகா... என் பேங்க் பேலன்ஸ்ல யதுநந்தன் சாரை பணத்தை எடுக்க சொல்லிட்டு, அன்னிக்கு கைதிகளுக்கு பிரியாணி போடணும். என் செலவுல பண்ணுவோம்" என்றதும், "யதுநந்தன் சாரிடம் அப்ப பேசிடலாம்" என்றாள் கார்த்திகா.
கீர்த்தனாவோ "ம்ம்... அப்ப அதுவரை பொடி பையன்னு கூப்பிடவா" என்று சிரித்தார்.
ஷ்ரத்தாவும் அப்படியே அழைக்க போவதாக கூறினாள்.
கீர்த்தனா சென்றப்பின் யதுநந்தனிடம் கார்த்திகா ஷ்ரத்தாவின் விருப்பத்தை தெரிவித்தாள்.
யதுநந்தனும் "பெயரை மட்டும் ஷ்ரத்தாவை முடிவெடுக்க சொல்லுங்க. குட்டி பையன் பெயர் சூட்டுவிழா அப்ப சமையல் வினியோகிச்சிடலாம் அதற்கான பார்மாலிடிஸ் பண்ணிடுவோம்" என்றான்.
அதற்குபின் யதுநந்தன் இரண்டு முறை சிறைக்கு வந்து குழந்தையையும் ஷ்ரத்தாவையும் பார்த்து பேசி திரும்பினான். ஷ்ரத்தா வினோத்தையும் ஹரிணியையும் அன்று வந்து கலந்துக்க கொள்ளும் விதமாக தன்னை காண மட்டும் வரக்கூறினாள்.
யதுநந்தனோ ஹரிணியிடம் வினோத்தை பற்றி கேட்டு வைக்க, அவளோ வினோத் பற்றி மழுப்பலாகவே சாட்டில் தெரிவித்தாள்.
யதுநந்தன் வீடியோ காலில் பிடித்து, குறுட்டுத்தனமாக 'வினோத்துக்கு என்னங்க ஆச்சு? ஏதாவது மறைக்கறிங்களா?' என்று கூட கேட்டுவிட்டான்.
ஹரிணி உடைந்து அழதவள் சட்டென வீடியோவையும் அமர்த்திட, யதுநந்தன் குழம்பினான். அதை ஷ்ரத்தாவிடம் தெரிவிக்கவும் அஞ்சினான்.
ஷ்ரத்தாவுக்கு இருக்கும் ஒரே உறவாக வினோத் என்று நம்பியிருக்க, ஏதோ அசம்பாவிதம் நிகழ்வதை கண்டு, யதுநந்தன் வெறும் சாதாரண நலன் விசாரிப்புடன் பேசியதாக தெரிவித்து வந்தான்.
அதிலும் ஷ்ரத்தாவிடம் இந்த தாய்மை கோலம், பூரிப்பு என்று இருக்க வினோத் பற்றி ஒன்றும் பாதியுமாக தெரிந்து கூறுவதை மறைத்துவிட்டான்
இதில் ருத்ரன் ஷ்ரத்தாவை காண வரவில்லை. அவன் வேண்டுமென்றே வரவில்லை. தனக்குள் பிறந்திருந்த அந்தப் புதிய உணர்வுக்கு ஷ்ரத்தா மீது பரிதாபமா? ஆசையா? காதலா? காமமா? என்று அவனுக்கே புரியவில்லை. அந்தக் குழப்பத்தோடு ஷ்ரத்தாவை சந்திக்க பிடிக்காமல், தானாகவே விலகி நிற்க முயன்றான்.
ஓரளவு விலகியும் இருந்தான். அதற்கேற்றது போல புது கேஸ் பல பிடிப்பட்டது.
இதில் ஸ்டெல்லாவை வேறு தேடினான். லாயர் திவாகர் இறந்தப்பொழுது ஸ்டெல்லா கூடவேயிருந்திருக்கின்றாள். நிரோஷ் புட் பாய்ஸனால் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் ஸ்டெல்லா சத்ரியன் பேசியதாக கூறியதும், அதன் பின் ஸ்டெல்லா தன் மகள் காணாமல் போனதும் நேராக சத்ரியன் இல்லாத போது காண சென்று திரும்பி வந்ததும் அறிந்திருக்க, ஸ்டெல்லாவின் மகள் ஐரீன் காணாமல் போன விவாகாரம் பதிவான ஸ்டேஷனில் நேரில் சென்று விவரம் வேறு கேட்க, "சார் அது பெரிய விவகாரம். அதுல நாம தலையிட முடியாது.' என்ற பதில் வந்தது.
கூடுதலாக 'இப்படி தான் சார் சத்ரியனோட பி.ஏ யோகேஷ் வந்து டீட்டெயில் கேட்டார். அப்பறம் டீட்டெயில் எல்லாம் கேட்டுட்டு போயிட்டார்." என்று கூறினார்கள்.
யோகேஷ் எதுக்கு அதை விசாரிக்கணும்?" என்று கேட்க 'தெரியலை சார்." என்றார்கள்.
ருத்ரனோ திகிலுடன் "சத்ரியன் சைல்ட் கிட்னாப்பிங் செய்திருக்கானா?" என்று கேட்க, "சார்... சத்ரியன் அவனோட மோதறவங்க உயிரை தான் எடுப்பாரே தவிர, தேவையில்லாம அடுத்தவங்க உயிரோட விளையாடி பணம் சம்பாதிக்க மாட்டார்" என்று கறாராக கூறினான்.
''இதெல்லாம் தென்கிழங்கு ஆசிய தீவுகளில் இருக்கறவங்க செய்யற பிசினஸ் சார். வோர்ட் லெவல்ல... நம்ம டிபார்ட்மெண்ட் மோப்பம் பிடிச்சி போனவங்க ஒன்னு பணம் வாங்கிட்டு வருவாங்க. இல்லை பிணமா கிடைப்பாங்க." என்று கூற ருத்ரனுக்கு குழப்பமானது. அதில் குழப்பம் நீளவும், அதை பற்றி அதிகம் நோண்ட ஆரம்பித்தான்
ருத்ரன் மூளையோ ஸ்டெல்லா ஷ்ரத்தாவோட அப்பா டெத் அப்ப ஆம்புலன்ஸில இருக்கா. அவளை நிரோஷ் சேர்த்த ஹாஸ்பிடல்ல சந்திச்சு சத்ரியனோட பேசியிருக்கா. அடுத்த இரண்டாவது நாளே ஆதிகேசவ் நிர்மல் இறந்திருக்காங்க.
சோ... ஸ்டெல்லா அப்ப ஆதிகேசவ் மூலமா திவாகர் இறந்ததை சொல்லியிருக்கணும். பட்.. அவங்க ஐரீன் குழந்தை காணாம போனதும் சத்ரியனை ஏன் தேடி வர்றாங்க. அப்ப.. அப்ப.. போலீஸால முடியலை என்றதும் சத்ரியனிடம் உதவி கேட்டிருக்கலாமோ?
ஷ்ரத்தா அன்னிக்கு பிரசவ வலியோட ஏதோ சொன்னாளே... ஐரீன் ஸ்டெல்லாவை பார்த்தா கேளு. சத்ரியனை கடவுளா கும்பிடுவாங்கனு அப்ப... சத்ரியன் ஒரு வருஷத்துக்கு மேலாக அந்த கேங்கல எப்படியோ போய் குழந்தையை மீட்டிருக்கணும். பட் 126 குழந்தை.? என்றவனுக்கு பளிச்சிட்டது.
அப்ப... அந்த போராட்டத்தில 126 குழந்தைகளை காப்பாத்தியிருந்தா? அந்த கேங்க சத்ரியனை சும்மா விடுவாங்களா?' என்று யோசிக்க ருத்ரனுக்கு வேர்த்துவிட்டது. சத்ரியனை கொன்றதா சொல்லிட்டு தண்டனை அனுபவிக்கற ஷ்ரத்தா, ஒரு வேளை கொல்லாம அது டிராமாவா இருந்து, சத்ரியன் அந்த 126 குழந்தைகளை காப்பாற்ற அவனோட பிரைவேட் கப்பல்ல பயணிச்சிருந்தா? அந்த கப்பல் தான் பிளாஸ்ட் ஆகியிருந்தது.' என்று மீண்டும் அதேயிடத்துக்கு வந்து நின்றான்.
'அப்ப... ஷ்ரத்தா சத்ரியனை விரும்பி மணந்து அவனில்லாம வாழற. அதனால தான் சத்ரகயனை பத்தி ஏதாவது தப்பா சொன்னாலும் உடனே கோபப்படறா. 'என்ன மாதிரி மனசுல பிக்ஸ் ஆகியிருக்கான். அவ மனசுல இருந்து சத்ரியன் நினைவை அழிப்பது கஷ்டம் தான் ருத்ரன்' என்று மனசாட்சி எடுத்துரைத்தது.
அதனால் இப்பொழுது எல்லாம் சத்ரியன் உயிரோடு இருக்கின்றானா இல்லையா என்ற வேட்டைக்கு மூடுவிழா போட்டுவிட்டான். பத்திரிக்கையாளராக நடித்த போலீஸ் டிரைவர் சேகரோ சத்ரியன் தேடும் கூட்டத்தில் இருப்பவனிடம் "சார்.. சத்ரியன் உயிரோட இருக்கானா இல்லையானு நாம ருத்ரனை பாலோவ் பண்ணினா. அவன் உங்க மடியிலயே கை வைக்க பார்க்கறான். சைல்ட் கிட்னாப் கேஸை பத்தி விசாரிக்கறான்" என்றான்.
"யூ இடியட்.. அவன் எங்களை பத்தி விசாரிக்கறான் என்றாலே சத்ரியனை பத்தி தான் விசாரிக்கறான். சத்ரியன் உயிரோட இருக்கானா இல்லையானு விரைவில் கண்டுபிடிச்சிடுவான். மேபீ.. எங்களை ஸ்மெல் பண்ண நினைக்கலாம். ஆனா தனியொரு போலீஸா அவனால ஒன்னும் கிழிக்க முடியாது. அது அவனுக்கும் தெரியும். அதனால அது பெரிய மேட்டர் இல்லை. சத்ரியன் இருக்கானா இல்லையா.. அந்த பதிலை மட்டும் தேடி தரட்டும். அப்பறம் 126 குழந்தைங்க டீட்டெயில் கிடைச்சாலும் வேண்டும்." என்றான்.
"சார் வினோத் என்ன ஆனான்." என்று கேட்க, "டேய்... நான் கேட்கறதுக்கு தான் நீ பதில் தரணும். நீ திரும்ப கேள்வி கேட்க கூடாது. இது உனக்குன்னு இல்லை. எனக்கும் அதே விதி தான். எனக்கு மேலயிருக்கறவன் பதில் சொல்லமாட்டான்." என்று தெரிவிக்க மறுபுறம் வாங்கிய காசை தாண்டி வினாத்தொடுத்து அமைதியானான் சேகர்.
"நீ மட்டுமில்லை... ருத்ரன் ஷ்ரத்தாவை கண்கானிக்கற நம்ம ஆட்களுக்கும் இதே பதில் தான்.
யாருக்காவது சத்ரியன் பற்றியோ குழந்தைகள் பற்றியோ விவரம் தெரிந்து தகவல் தர்றவங்களுக்கு ஒரு பிளாட் பம்பர் பரிசு. அது நீயா இருந்தா சந்தோஷப்படு." என்றான்.
"சரிங்க சார் சரிங்க" என்று அணைத்துவிட்டு சொந்தமாய் வீடு கிடைத்தால் நன்றாக இருக்குமென்ற கனவுக்குள் மூழ்கியிருந்தான் பத்திரிக்கையாளர் வேடமிட்டு வந்த போலீஸ் சேகர்.
'ம்ம்... நாமும் ருத்ரனுக்கு காரோட்டிட்டு இருக்கோம். இதுல ருத்ரனே பத்திரிக்கையாளரா நடிக்க கூப்பிட்டு ஷ்ரத்தாவை வேற மீட் பண்ண வச்சார். அந்த பொண்ணு சத்ரியனை பற்றி வாயை திறக்கும்னு பார்த்தா செய்யலை. சரி ருத்ரனாவது பெத்த அப்பனை கொன்றவங்களை கண்டுபிடிக்க ராவு பகலா தேடி சத்ரியனை பத்தி தெரிந்து நம்மிடம் சொல்லவோ, இல்லை போற இடம் சந்தேகப்பட்டா சொல்லலாம்னா அதுவும் இல்லை. போலீஸ்காரணுக்கு காரோட்டி எப்ப வீடு வாங்க. சத்ரியா.. எங்கப்பா இருக்க? இருக்கியா செத்துட்டியா?
இங்க சில நாய்ங்க செத்தாலும் பிணத்தை தேடி ஆராயற கூட்டத்துல வேட்டைக்காரங்க போல உன்னை தேடிட்டு இருக்காங்க தெரியுமா? தெரியாதா?
இல்லை சாகாம நீயே வேட்டையாடறியா? இதுல என்னை மாதிரி எவன் எவளுங்க இங்க சுத்தறாங்களோ? உன் பொண்டாட்டி பிள்ளைங்க கூட' என்று புலம்பியபடி, நடையை கட்டினார்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
super ruthran un police brain vachi alaga nadanthatha ellam kandu pidichita sikram chathriyanaium kandupidi illana veliya vara vei unnaium note panitu irukanga sila per un kudave oruthan irunthu note pani solran avana note panu nee apo ellathukum pathila kedachidum , shradha va care panna chathriyan vacha aal tha karthika va illa avalum note panravala therilaye
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 14)
'என்ன பார்வை.....
உந்தன் பார்வை'ன்னு விட்டால் பாட்டே பாடிடலாம் போல...
ருத்ரனும் யதுநந்தனும் நடந்துக்கிறது கொஞ்சமும் சரியில்லை. சத்ரியா சீக்கிரம் ஓடியா... இவங்க ரெண்டு பேருமே சரியில்லை.
இந்த கார்த்திகா மேல எனக்கு கொஞ்சம் டவுட் வருது. ஷ்ரத்தா மேல ஓவர் ப்ரொட்டெக்சன் எடுத்துக்கிறாளோன்னு..?
பழி வாங்கவா ? இல்லை நல்லது செய்யவா ? இவ நல்லவளா, கெட்டவளா ஆண்டவரே !
சத்ரியன் அப்ஸ்காண்ட் ஆனாலும் ஆனான், இங்க நிறைய ஸ்பை
உருவாகிட்டாங்கப்பா. யாரை நம்பறது, யாரை நம்பாம இருக்கிறதுன்னே தெரியலை போங்க.
😊😊😊
CRVS (or) CRVS 2797
Rudhra ne ipadi Shardha kita irundhu velagi irukirathu nallathu unnoda brialliancy ah vachi ippo indha alavuku ipadi than nadanthu irukum.nu Chathriyan oda death ku pinnadi irukirathu ah kandupidicha pathiya andha smartness ah Shardha kita kammichi impress panna try panna Chathriyan unna enna pannavunan yae theriyathu yaru ku theriyum oru vela indha karthika kooda Chathriyan oda arrangement ennavo koodavae moonu kaithi ga la vera ava safety ku solluraga ellam chathriyan mayam than pola yae
-
தகிக்கும் நிலவொன்று-17
21 minutes ago
-
தகிக்கும் நிலவொன்று-16
15 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-8
17 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-7
17 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-6
18 hours ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 0 Online
- 329 Members
