தகிக்கும் நிலவொன்று-13
அத்தியாயம்-13
கீர்த்தனா இந்த நான்கு நாளில் மருத்துவமனையிலேயே இருந்து ஷ்ரத்தாவையும் குழந்தையையும் பார்த்துக் கொண்டார்.
குழந்தைக்கு டயப்பர், பால் பாட்டில், துணிகள், ஷ்ரத்தாவுக்கு தேவையான பொருட்கள் என ஏதாவது தேவைப்பட்டாலே, "ருத்ரா... இதையும் வாங்கிட்டு வா." என்று கூறி வாங்கிடுவார்.
கீர்த்தனா சொல்லவும் மறுப்பே இல்லாமல் வாங்கி வந்து வைத்தான் ருத்ரன்.
அதை கவனித்த ஷ்ரத்தா, "அம்மா... யதுநந்தன் சார்கிட்ட சொல்லியிருக்கலாமே. எதுக்கு இவரை அலைய விடுறீங்க? இல்லைன்னா.. என் கார்ட் இருக்கும். நான் பின் நம்பர் சொல்லறேன். அவரை யூஸ் பண்ண சொல்லுங்க" என்று மெதுவாகக் கேட்டாள்.
அதற்கு முன்பே ருத்ரன் கையில் இருந்த பையை மேசையில் வைத்துவிட்டு, "பரவாயில்லை... உங்க லாயர் சார் தனியா வாங்கிட்டு வர்றாரு.
எங்கம்மா கேட்டத நான் வாங்கிட்டு வந்தேன்." என்றான்.
ஷ்ரத்தா உடனே முகத்தைத் திருப்பி கண்களை மூடிக் கொண்டாள்.
அதைப் பார்த்த கீர்த்தனாவோ"ருத்ரா... நீ உன் வேலையை பாரு." என்று அதட்டினார்.
ருத்ரன் எதுவும் பேசவில்லை. ஷ்ரத்தாவை புலியை போல நோட்டவிட்டபடி சென்றான்.
அதே நேரம் யதுநந்தனும் வெளியிலிருந்து உள்ளே வந்தான். அவன் கையிலும் இரண்டு பெரிய பைகள். "இதெல்லாம் குழந்தைக்கு.. இதுல டிரஸ், பவுடர், ஆயில்... இதுல ஷ்ரத்தாவுக்கு தேவையானது." என்று நீட்டினான்.
அதைப் பார்த்த கார்த்திகா சிரித்தாள். "என்ன சார்...
ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு வாங்கிட்டு வர்றீங்களே!" என்றாள்.
ருத்ரன் உடனே, "ஹலோ கார்த்திகா... நான் எங்கம்மா சொன்னதை வாங்கிட்டு வந்தேன்." என்றான்.
யதுநந்தன் சிரித்தபடி, ''நான்... எங்க லாயர் திவாகர் சாரோட பொண்ணுக்கு உரிமையா வாங்கிட்டு வந்தேன்." என்றான்.
'உரிமை...' அந்த ஒரு வார்த்தை... ருத்ரனின் காதில் மட்டும் தனியாக அமிலம் போல ஒலித்தது. அவன் முகம் இறுகியது.
ஒரு வார்த்தை கூட பேசாமல் வெளியே நடந்தான். மருத்துவமனை வராண்டாவில் வந்து நின்றவன், இரு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டான்.
'உரிமையா...? அவனுக்கு என்ன உரிமை... வேண்டி கிடக்கு' என்று மனம் அனத்தியது.
அடுத்த நொடியே, 'அவள்கிட்ட உரிமையா இருக்க வேண்டியது... நான் தானே...' என்ற எண்ணம் மின்னல் போல உள்ளே தோன்றியது. அடுத்த நொடியே "ச்சே..."என்று தலையை உலுக்கியவன், 'என்ன நினைக்கிறேன்' என்று தன்னைத் தானே கடிந்துக் கொண்டான். ஆனால் அந்த எண்ணம் மனதை விட்டு போகவில்லை. மாறாக... இதயத்தில் வேர் பிடிக்க ஆரம்பித்தது.
'ஒருவேளை...எனக்கு... ஷ்ரத்தா மேல... சாப்ட் கார்னர் வந்துடுச்சா? என்று அவன் கண்கள் மெதுவாக விரிந்தன.
இதுவரை எந்த பெண்ணையும் அந்த பார்வையில் பார்த்ததில்லை. காதலிக்க வேண்டும் என்ற எண்ணமே வந்ததில்லை.
இப்போது ஷ்ரத்தாவை நினைத்தாலே ஏன் மனம் வேகமாக துடிக்கிறது?
ஏன்... அவளைப் பார்க்க தினமும் ஏதாவது காரணம் தேடுகிறேன்? ஏன்... அவள் அழுதால் மனசு கஷ்டப்படுது? ஏன்... அன்று அவளுக்கு வலி வந்ததற்கு நான் தான் காரணமோ என்று குற்றவுணர்ச்சி தோன்றினாலும், அவளை அள்ளிக்கொண்டு ஓடி வந்தேன்? ருத்ரனின் மனதில் உதித்த கேள்விகளுக்கு எல்லாமே ஒரே பதிலை நோக்கித்தான் போய்க் கொண்டிருந்தது.
'இல்ல..' என்று மீண்டும் மறுத்தான்.'அவ.. ஒரு விதவை." என்ற எண்ணம் வந்தது.
அடுத்த நொடியே 'அப்படியிருந்தா என்ன? உலகத்துக்கு தான் சத்ரியன் செத்துட்டான். அவனைக் கொன்னது ஷ்ரத்தா தான்.
நான் போலீஸ்காரன்.. கணவனை இழந்தவளை, நான் ஏன்... அவளை நேசிக்கக் கூடாது?' என்ற விபரீதமான எண்ணம் மனசாட்சியால் ஆதரவு கரம் எழுப்பி உள்ளே குரல் எழுப்பியது.
ருத்ரனே திடுக்கிட்டான். 'இல்ல... இது தப்பு..." என்று சொல்லிக் கொண்டாலும் அவன் இதயம் அமைதியாக இல்லை.
அப்போது மனம் இன்னொரு கேள்வி கேட்டது. 'அப்படின்னா வாரம் வாரம் ஏன் ஷ்ரத்தாவை பார்க்க வந்த? அதுவும் காரணம் ஏதாவது பாக்கெட்லயே வச்சிட்டு' அந்தக் கேள்விக்கு...
ருத்ரனால் பதில் சொல்ல முடியவில்லை.
சில நிமிடங்கள் கழித்து,
மற்றொரு எண்ணம் தோன்றியது. 'நான் மட்டும் தானா காரணம் ஒன்னை பிடிச்சிட்டு ஷ்ரத்தாவை பார்க்க வர்றேன். யதுநந்தனும் வர்றான். அப்ப அவனுக்கும் ஷ்ரத்தா மேல நேசமிருக்க?' என்று சந்தேகமாக நினைத்தான்.
அவன் எப்போதும் ஷ்ரத்தாவோட பேசிக்கிட்டே இருப்பான். அவளுக்காக சண்டை போடுறான்.
அன்று கூட அவளுக்காக என்னையே அறைந்தான்.
'ஒருவேளை... அவன் மனசுல என்ன இருக்கும்?' என்று அறிய முடியாமல் நின்றான்.
ருத்ரனை குழப்பவாதியாக மாற்றிவிட்ட யதுநந்தனோ அறைக்குள் யதுநந்தன் தனது மொபைலை ஷ்ரத்தாவிடம் நீட்டினான்.
"வினோத்தை தொடர்பு கொள்ள முடியலை... ஆனா... ஹரிணிகிட்ட இருந்து மெசேஜ் வந்திருக்கு. அவங்களால் பேச முடியாதுல்ல அதனால மெயில்ல இதை அனுப்பியிருக்காங்க." என்று காட்ட ஷ்ரத்தா திரையைப் பார்த்தாள்.
*Congratulations... The hunters see you. Be brave Sharattha* என்றிருந்தது.
யதுநந்தனோ "வாழ்த்தும் வார்த்தையும் ஏதாவது கோட் வேர்டா?" ஷ்ரத்தா சில விநாடிகள் யோசித்தாள்.
பிறகு மெதுவாக சிரித்தாள். "ஆமாம் வேட்டைக்காரங்க...
எப்பவும் பார்த்துக்கிட்டே இருப்பாங்க... தைரியமா இருன்னு சொல்றாங்க."
சிறிது இடைவெளிக்குப் பிறகு, "ருத்ரன் என்னை முதல் நாள் பார்த்ததிலிருந்து, இப்ப வரைக்கும் வேட்டைக்காரர் மாதிரி துரத்திக்கிட்டே இருக்காரே. கடைசியா பேசினப்ப சொன்னேன். அதனால இப்படி அனுப்பியிருக்கலாம்" என்றதும்
யதுநந்தனும் 'உண்மை தான்' என்று சிரித்தான். ஆனால் நம்பினானே இல்லையோ அது அவனே அறியேன்.
பிறகு அவன் கொண்டு வந்த பைகளை அவள் அருகில் வைத்தான். "நாளைக்கு உன்னை ஜெயிலுக்கு கூட்டிட்டு போயிடுவாங்க. இதுல பேபிக்கு கொசுவலை... விளையாடுற பொம்மை... டிரஸ்...
இதுல மதர் ஹார்லிக்ஸ்... பழங்கள்... இதெல்லாம் உனக்கு."
ஷ்ரத்தாவின் கண்கள் மீண்டும் கலங்கின.
"என்னோட... என் பையனும்... ஜெயிலுக்கு வர்றான்ல சார்... முதல் முறையா... குழந்தை பெத்துட்டு... சிறைக்கு கூட்டிட்டு போறேன்... எந்த தாயும் இப்படி மகனை டே-அவுட் கூட்டிட்டு வந்து போகமாட்டாங்க" என்று உடைந்து அழுதாள்.
யதுநந்தன் அவளது தோளில் நட்புடன் கை வைத்தான். "டோண்ட் வொர்ரி... நாளைக்கு கிளம்புறதுக்கு முன்னாடி...
பக்கத்துல இருக்குற கோவிலுக்கு கூட்டிட்டு போறேன். கார்த்திகாகிட்ட நான் பேசுறேன். அவங்களும்...
இந்த ரெண்டு கான்ஸ்டபிள்ஸும் தான் கூட இருப்பாங்க. ஏற்பாடு பண்ணலாம்." என்றான்.
அவனால் முடிந்த உதவியை அவன் செய்ய தயங்குவதில்லை.
ஷ்ரத்தாவின் கண்கள் நன்றியால் நிரம்பின.
"தேங்க்ஸ் சார். எங்க அப்பா... உங்களுக்கு என்ன உதவி பண்ணார்னு எனக்கு தெரியாது.
ஆனா... அதுக்காக... நீங்க எனக்கு செய்யற இந்த உதவியை... என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்..." என்று கண்ணீருடன் கூறினாள்.
இதை சற்று தூரத்திலிருந்து பார்த்த ருத்ரனுக்கு நெஞ்சமெல்லாம் காந்தியது.
ஷ்ரத்தாவை காணும் பொழுதெல்லாம் கடித்து குதறாத குறயாக கத்திவிட்டு, சந்தேகப்பட்டு, அவளை உலுக்கி எடுத்தப்பின், இதோ.. மனம் அவளை நேசிக்க, அவள் அருகே செல்ல உந்துகிறது. ஆனால் இதற்கு முன் போட்ட எரிமலை வட்டம், இன்று அவனையே காயப்படுத்தவும், துவண்டான்.
ருத்ரனோ அன்னை அருகே வந்து, "ஏம்மா.. குழந்தையை நாம வேண்டுமென்றால் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா?" என்று கேட்டான்.
"உனக்கு என்ன கிறுக்கு பிடிச்சிருக்கா ருத்ரா. பிறந்த குழந்தை அம்மாவிடம் பால் குடிக்குமே. எப்படி கூட்டிட்டு போவ? அதுவுமில்லாம உனக்கும் அவளுக்கும் ஒத்தே வராது. இதுல ஆடு பகை குட்டி உறவாடா?" என்று கேலி செய்தார்.
'ஆடு பகைன்னு யார் சொன்னா?' என்றவன் மனமோ யாரிடமாவது அவன் எண்ணத்தை விதைக்க படாத பாடுபட்டான்.
கார்த்திகாவிடம் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் கூறிவிட்டு, அடுத்து குழந்தைக்கு தடுப்பூசி போடும் தேதிகளையும் குறித்து தந்து அனுப்பினார்.
அரசாங்க மருத்துவமனையில் சங்கரி தனி அறை தந்ததே அதிசயம். அதற்கும் ஷ்ரத்தா நன்றி தெரிவித்தாள்.
"இன்னோரு குட் நியூஸ் சொல்லட்டா.. இன்னிக்கு தமிழக முதலமைச்சர் நம்ம ஹாஸ்பிடலுக்கு வர்றார். தாய்மாமா மோதிரம் போடப்போறார். அதையும் வாங்கிட்டு போங்க. பட் அதுவும் சிறைசாலைக்கு போனதும் வாங்கி வச்சிப்பாங்க நீங்க ரிலீஸ் ஆகறப்ப தான் தருவாங்க" என்றார்.
"பாருங்களேன்.... ஷ்ரத்தா என்னவோ குழந்தைக்கு யாருமில்லைனு சொன்னிங்க. ஆனா உங்களுக்கு அண்ணாவா... குழந்தைக்கு மாமாவா, ஏன் சத்ரியனுக்கு மச்சானா.. முதல்வரே வர்றார்" என்று கேலியுடன் கூற பேரானந்தம் கொண்டார்.
ஷ்ரத்தா முகமும் கார்த்திகா கூறியதை கேட்டு சிரிக்க முயன்றாள்.
ஷ்ரத்தா முதல் முதலில் வோட்டு போட்டதும் இந்த முதல்வருக்கே. அப்பொழுது சத்ரியன் ஆளுங்கட்சி மறுபடியும் வெற்றி பெறாது. புதுக்கட்சி தான் முன்னிலை வரும் என்று ஜம்பமாக ஹாலில் அமர்ந்து கூறியதும் எண்ணத்தில் வந்து போனது. இத்தனைக்கும் அப்பொழுது இருந்த ஆளாங்கட்சி பணப்பட்டுவாடா எல்லாம் செய்தது. ஷ்ரத்தா வீட்டுக்கு பக்கத்தில் உள்ள ஆன்ட்டி கூட பணத்தை வாங்கி உடைகளை வாங்கி தள்ளினார்.
உண்மையில் சத்ரியன் தனக்கு குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்தால், முதல்வரும், ஏன் வேறு எவரும் கூட விஐபி வந்து செல்வது சாத்தியமாக நிகழ்ந்திருக்கும். ஆனால் இன்று இந்த செயல்கள் தொடர்வதை கண்டு 'வினோத் அண்ணா அப்ப இங்க தான் எங்கயோ இருக்காரா? இதெல்லாம் ஏற்பாடு செய்வதும் அவரா இருப்பாரா' என்று யோசித்தாள்.
அதன்பின் புயல் வேகத்தில் முதல்வர் வந்து வாழ்த்தி, மோதிரம் போட்டு நெகிழ்ந்து குழந்தைக்கு முத்தமிட்டு மோதிரம் மாட்டி செல்ல அனைத்தும் ஷ்ரத்தா பார்வையிட்டாள். மற்றவர்களுக்கு தான் அது பரவசமான நிகழ்ச்சி. ஷ்ரத்தாவோ அப்பொழுதும் ஏதேதோ எண்ணம் மோத கண்ணீருடன் கடந்தாள்.
முதல்வர் சென்றதும் குழந்தையை அழைத்துக் கொண்டு, யதுநந்தன் காரில் ஏற, ருத்ரன் கோபமாக அவன் புக் செய்த கேப்பை அனுப்பி வைத்தான்.
கீர்த்தனா யதுநந்தனுடன் குழந்தை வைத்து காரில் ஏறியவர் மருத்துவமனைக்கு முன் இருந்த வினாயகர் கோவிலுக்கு சென்று குழந்தையை வைத்து எடுத்தார்.
யாருமற்ற இவளுக்கு எல்லாமே நீயாக வேண்டுமென்ற வேண்டுதலுடன் மீண்டும் சிறைச்சாலைக்கு புறப்பட்டனர்.
ருத்ரனோ உற்றென்ற முகத்துடன் பைக்கில் முன்னால் சென்றான்.
இதையெல்லாம் அறியாத வினோத் சதிகார கும்பலிடம் சிக்கி கொண்டு, "எந்த குழந்தைங்கடா.. சத்ரியன் சாருக்கு தான் குழந்தை பிறக்க போகுது. நீங்க எந்த குழந்தைங்க கேட்கறிங்கனு தெரியலையே.'' என்று வாயில் ரத்தம் வழிய, கூறினான்.
"ஓ.. எந்த குழந்தைங்கனு தெரியாதா? உன் கூட வேலை செய்யற யோகேஷ் எங்கடா? அவனும் அந்த தீவிபத்துல சத்ரியனோட செத்துட்டானா?" என்று கேட்க, "ஏன்.. அன்னிக்கு செய்தியை பார்க்கலையா? போய் மறுபடியும் பாரு.
'கிங்பின் சத்ரியன் இறப்பு'னு கூகுளில் தட்டு வரும்." என்றான் மாறாத நக்கலுடன்.
"ஆல்பெர்ட்.. இவன் இப்படி கேட்டா பதில் சொல்ல மாட்டான். அவன் தாங்கி தாங்கி நடக்கற காலை வெட்டிடு." என்றதும், ஆல்பெர்ட் அதற்கான வேலையில் இறங்கினான்.
வினோத் கண்ணில் பயம் தெரிந்தாலும், கண்ணை இறுக மூடிக் கொண்டான். இனி இறப்பே நிகழ்ந்தாலும், இது அவன் நேசிக்கும் சத்ரியனுக்கான காணிக்கை என்றும்
126 குழந்தைகளின் வாழ்வுமென முடிவுக் கொண்டான். ஒரு உயிருக்காக 126 உயிரினை காட்டி கொடுக்க இயலாதே.
தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
சில இடத்துல சில சம்பவம் தேவையற்றுதுனு நினைக்கலாம். இல்லை.. நான் அந்த கேரக்டரை என் கதைக்கு லாஸ்ட்ல உபயோகப்படுத்த முடியுமானு யோசித்து தான் எழுதறேன். சோ.. என் கதைக்கு தேவைக்கு.... நீங்களா ஹேட்டர்ஸ் லவ்வர்ஸ்னு முடிவுப்பண்ணாதிங்கப்பா.
நமக்கு சிம்புவையே பிடித்தாலும் இஷ்டத்துக்கு பயர் விடமாட்டேன்
எல்லாமே லிமிட் வெர்ஷன் தான். சம்ஜே. (ஏதோ சிம்புவானு சொல்லக்கூடாது. மை பஸ்ட் க்ரஷ்)
Wow super super. Sis. Ruthran starts love to sharadha. But sharadha will accept him. Sema twist. U wrote in ur own way sis. Keep rocking sis. Story going very well sis.
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 13)
அடப்பாவிங்களா ! இப்படி ரெண்டு பேரும் போட்டிப்போட்டுட்டு வாங்கிட்டு வரிங்களே. ம்.. ஷ்ரத்தாவுக்கு அடிச்சது லக்கி ப்ரைஸ். இந்த காட்சியை சத்ரியன் பார்த்தால், கிடைச்சது நம்ம பொண்டாட்டிக்கு ரெண்டு கொத்தடிமைங்கன்னு பூரிச்சு போயிருப்பானோ என்னவோ..?
அடேய் சத்ரியா..! சீக்கிரம் வந்து இந்த கண்கொள்ளாக் காட்சியைப்
பாரேன்.
திக்கற்றவங்களுக்கு தெய்வமே துணை என்கிற மாதிரி தாய் மாமா மோதிரம் சீர் அருமை. அது சரி, இந்த ருத்ரனும் யதுநந்தனும் அம்புட்டு போட்டி போடுறாங்களே..
அந்தக் குழந்தைக்கு ஒரு குண்டுமணி அளவு தங்கமாவது கொண்டு வந்து போட்டாங்களா ?
கஞ்சப் பயலுங்க... ஒரு பாக்கெட் டைப்பரை கொண்டு வந்து கொடுத்திட்டு இதுல பெருமைப் பீத்தல் வேற, போங்கடா டேய்..!
அட ராமா..! நான் நினைச்ச மாதிரியே வினோத் மாட்டிக்கிட்டானா, போச்சு போ.
😊😊😊
CRVS (or) CRVS 2797
Posted by: @guna-sundariWow super super. Sis. Ruthran starts love to sharadha. But sharadha will accept him. Sema twist. U wrote in ur own way sis. Keep rocking sis. Story going very well sis.
-
தகிக்கும் நிலவொன்று-17
21 minutes ago
-
தகிக்கும் நிலவொன்று-16
15 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-8
17 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-7
17 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-6
18 hours ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 0 Online
- 329 Members
