Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-2

9 Posts
9 Users
3 Reactions
62 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#164]

🔥தகிக்கும் நிலவொன்று🌜

அத்தியாயம்-2

காலை நேரத்தின் பரபரப்பு மெதுவாக அடங்கி, மருத்துவப்பெண்மணி எல்லாம் சென்றதும், மதியத்தின் சோம்பேறித்தனம் சிறை வளாகத்தை சூழ்ந்திருந்தது.

வெயில் மதில்களின் மீது விழுந்து வெண்மையாக மின்னிக் கொண்டிருந்தது.

தொலைவில் சில கைதிகள் சிறை வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். சிலர் மர நிழலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

ஆனால் அந்த உலகத்திற்கும் ஷ்ரத்தாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் அருகே அமர்ந்திருந்தாள்.

இரும்புக் கம்பிகளுக்கு அப்பால் தெரிந்த வானத்தின் சிறு துண்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எத்தனை நாட்கள் கடந்தது?

எத்தனை இரவுகள் கடந்தது?

அவளுக்கு கணக்கே இல்லை.

சில நேரங்களில் சத்ரியன் இறந்துவிட்டான் என்றில்லாமல் எங்கோ வாழ்வதாக எண்ணி தனியாக பேசுவாள்.

சில நேரங்களில் அவன் கதவை திறந்து உள்ளே வந்து நிற்பவன் போல தோன்றும். அவளது வாழ்க்கை நினைப்பில் தவிப்பில் சிக்கிக் கிடந்தது.

அப்போது "ஷ்ரத்தா." என்று பெண்காவலரின் குரல் கேட்டது.

அவள் மெதுவாக திரும்பினாள். "உங்களை பார்க்க வக்கீல் வந்திருக்கார்." என்றதும் ஒரு நொடி புரியாமல் பார்த்தாள்.

வக்கீலா? அது யார்? மனதில் கேள்வி எழுந்தாலும் வாயில் வார்த்தை வரவில்லை. "வாங்க." என்று பெண்காவலர் வழி காட்டியதும் மெதுவாக எழுந்தாள். 

   சிறையின் நிர்வாகக் கட்டிடத்தின் பின்புறம் இருந்த சந்திப்பு அறைக்கு அழைத்து செல்லப்பட்டாள். அது சாதாரண கைதிகள் உறவினர்களை பார்க்கும் இடம் அல்ல.

சட்ட ஆலோசகர்கள், அதிகாரிகள், விசாரணை அதிகாரிகள் சந்திக்கும் தனி அறை.

சிறிய அறை என்றாலும் நடுவில் இரும்பு மேசை, இரண்டு நாற்காலிகள் இருக்கும். சுவரில் மங்கிய வெள்ளை பெயிண்ட்.

மேலே சுழன்ற பழைய மின்விசிறி. ஜன்னலில் தடித்த இரும்புக் கம்பிகள். அறை முழுவதும் ஒரு வித அமைதி.

அந்த அமைதிக்குள் அமர்ந்திருந்தான் யதுநந்தன்.

வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் அருகில் கோப்புகள் அடங்கிய பை. கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் எழுந்து நின்றான்.

தனது சீனியர் குரு, லாயர் திவாகரின் மகள் என்று மரியாதையுடன் "வாங்க ஷ்ரத்தா." என்று அழைத்தான். அவள் அமைதியாக எதிரில் அமர்ந்தாள். சில நொடிகள் அவளாக பேசவில்லை.

யதுநந்தன் தான் அமைதியை உடைத்தான்.

"இப்ப உடம்பு எப்படி இருக்கு?" என்றான் கரிசனமாக. 

"நல்லா இருக்கு சார்." அது கூட மரியாதைக்காக வந்த பதில்.

அவள் முகத்தை பார்த்தாலே தெரிந்தது. மனமும் உடலும் நலமாக இல்லை.

யதுநந்தன் மெதுவாக மூச்சை இழுத்தான். "நான் மேல் கோர்டில் அப்பீல் போடலாம்னு யோசிச்சேன். அது விஷயமா உங்களிடம் கலந்து ஆலோசித்துட்டு" ஷ்ரத்தா உடனே மறுப்பாய் தலையசைத்தாள்.

"வேண்டாம் சார்."‌அவன் புருவம் சுருங்கியது.

"என்ன.. ஏன்?" என்றான்.

"வேண்டாம்." என்றாள் ஷ்ரத்தா. 

"மூணு வருஷம் தண்டனை ஷ்ரத்தா."

"தெரியும் சார். அந்த ஜட்ஜ் தீர்ப்பு கூறியது நினைவில் இருக்கு" என்று சலித்தாள்.

"அப்புறம் ஏன்?" அந்த கேள்விக்கு பதில் சொல்ல சில நொடிகள் எடுத்துக் கொண்டாள். பிறகு மெதுவாக சொன்னாள்.

"எங்க இருந்தாலும் சத்ரியன் இல்லையே சார்." என்றதும் குரல் உடைந்தது. அந்த ஒரு வாக்கியம் அறைக்குள் விழுந்ததும் யதுநந்தன் அமைதியாகி விட்டான்.

அவள் தண்டனையால் உடையவில்லை. சத்ரியனின் இழப்பால் உடைந்திருக்கிறாள்.

அது தெளிவாக புரிந்தது.

"உங்க அப்பா..." என்று தொடங்கியவன் ஒரு நொடி நின்றான். ஷ்ரத்தாவின் பார்வை அவனை நோக்கி திரும்பியது.

"திவாகர் சார் உங்களைப் பற்றி நிறைய பேசுவார்." அவளது விழிகள் மெதுவாக விரிந்தது.

"நீங்க டாக்டர் ஆகணும்னு எவ்வளவு ஆசைப்பட்டார்னு எனக்கு தெரியும். ஒவ்வொரு தடவையும்.. என் பொண்ணு டாக்டர் படிக்க வைக்கணும் பெருமையா சொல்வார்."

ஷ்ரத்தாவின் தொண்டை அடைத்தது.

இத்தனை நாட்களாக யாரும் அவளது அப்பாவைப் பற்றி பேசவில்லை.

எல்லோரும் சத்ரியனைப் பற்றிதான் பேசினார்கள்.

முதல் முறையாக யதுநந்தன் திவாகரை நினைவுபடுத்திக் கொண்டிருந்தான்.

"உங்க அப்பா இருந்திருந்தா உங்களை இந்த நிலைமையில் விடமாட்டார். அதுவும் சத்ரியன் மாதிரி ஒருத்தனோட... சாரி.. அவனை கொன்றப்பிறகும் நீங்க மகிழ்ச்சியா இருப்பது போலவும் தெரியலை. அவனுக்காக உருகறிங்க. அப்பறம் டாக்டருக்கு படிக்க முடியாததால வருத்தமா இருக்கோ?'' என்று தொடங்கியவன் நிறுத்தினான்.

ஏனெனில் அதற்கு மேல் பேசினால் அவளும் அழுவாள். அவனும் வருந்துவான்.

அதே நேரம்... சந்திப்பு அறைக்கு வெளியே இருந்த நடைபாதையில் நின்றிருந்தான் ருத்ரன். அவன் கையில் விசிட்டர் பதிவு புத்தகம்.

அதில் இருந்த பெயரை மீண்டும் பார்த்தான். ஷ்ரத்தாவை தேடி யார் யார் வருகின்றார்கள் என்று அறிந்திட, கேட்டு வைத்திருக்க, தற்போது யாரோ வந்ததாக கூறியதும் வாசலுக்கு சென்றவன் மீண்டும் ஷ்ரத்தா இருப்பிடம் வந்து சேர்ந்தான்.

'Advocate Yadhunandhan' என்ற பெயரை பார்த்ததும்

கண்கள் சுருங்கின. ஷ்ரத்தாவின் வழக்கு முடிந்து விட்டது. தண்டனை வழங்கப்பட்டு விட்டது. இன்னும் எதற்காக இவன் வந்திருக்கிறான்? சாதாரண அக்கறையா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று 

சுவரில் சாய்ந்து நின்றபடி  கதவை நோக்கிப் பார்த்தான்.

சந்தேகம் அவன் மனதை விட்டு போகவில்லை.

   ஷ்ரத்தாவோ "எனக்கு விடுதலை எதுவும் வேண்டாம் மிஸ்டர் யதுநந்தன். இந்த தண்டனை எனக்கு தேவை தான். நீங்க மேல் கோர்ட்டுக்கு எதுவும் அப்பீல் பண்ண வேண்டாம். அப்பறம் எங்க மேல வச்சியிருக்கற அபிப்ராயத்துக்கு நன்றி. எத்தனையோ முறை அப்பா இல்லாத வாழ்க்கையை நினைச்சி நினைச்சி வெறுத்துட்டேன். சத்ரியன்.. சத்ரியனை நான் கொன்னுட்டேன். அதுவே எனக்கு தண்டனை தான்" என்று உடைந்து அழுதாள். 

யதுநந்தனுக்கு இந்த பெண் முன்னுக்கு பின் முரணாக இருப்பதை நினைத்து கணிக்க முடியாது நின்றான்.‌

   லாயர் திவாகர் இறப்பு நடந்தப்போது யதுநந்தன் ஊரில் இல்லை. சத்ரியனால் இறப்பு நிகழ்ந்திருக்கலாமென்ற யூகமும், ஷ்ரத்தா கொல்ல துடித்ததாகவும் செய்தி வெளியானதை கேள்விப்பட்டிருந்தான். ஆனால் நாளடைவில் கார்டியன் என்ற இடத்தில் மெடிக்கல் சீட் வாங்கி தந்து படிக்க வைத்ததும் சத்ரியன் என்றதாலும், கொஞ்ச நாளில் சத்ரியனின் கோட்டையில் சிறைப்பறவையாக மாற்றிவிட்டானென்று கேள்விப்பட்டான். அப்பொழுது எல்லாம் இரண்டு முறை சத்ரியனை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டான். ஷ்ரத்தாவை காண நெருங்கி வந்தான். ஆனால் வினோத் யோகேஷ் இருவரது பாடிகார்ட்ஸ் சூழ்ந்திருக்க நெருங்கவே முடியவில்லை. அத்துடன் ஷ்ரத்தா படிப்பதில் தீவிரமாக இருக்க, நிஜமாகவே சத்ரியன் லாயர் திவாகரை கொல்லவில்லையோ என்று கூட நினைத்தான். அதனால் தான் ஷ்ரத்தா தன்னை இழந்து... இதோ வயிற்றில் சத்ரியன் குழந்தையை சுமக்கின்றாளா? ஆனால் சத்ரியனை சுட்டது இவள் என்று இவளே கூறி தண்டனை அனுபவிக்கின்றாள். எதையும் யூகத்தின் அடிப்படையில் எடுத்துக்கொள்ளவே முடியாத யதுநந்தன் ஷ்ரத்தாவிடம் பேசி பார்க்க முயன்றான்.

  லேசான அழுகையோ சத்ரியன் திவாகரின் பேச்சோ ஷ்ரத்தாவுக்கு மூச்சு முட்ட நீரை கேட்டு நின்றாள். நீரை தந்திடவும், பருகியவள், 'நான்.. நான்.. போறேன்" என்று கூறினாள். 

"ஷ்ரத்தா... இன்னிக்கும் நீங்க அப்நார்மலா அன்ஹெல்தியா இருக்கிங்க. எதையும் யோசிக்காதிங்க. உங்களுக்கு சட்டம் சம்பந்தப்பட்ட விஷயமா துணை நிற்க நான் இருக்கேன். அதோட உங்களோட நட்பா இருக்கவும் விரும்பறேன். 

   ஏதாவது சொல்லணும்னா பேசணும்னா உடனடியா என்னை அணுகலாம். ஜெயிலரிடம் சொல்லுங்க" என்று கூற அதற்கு தலையாட்டி சென்றாள். 

  யதுநந்தன் சோர்வாய் வெளியேற ருத்ரன் இந்த வேடிக்கையை பார்த்துவிட்டு அவனும் சென்றான். 

ஷ்ரத்தா அவளுக்கான இடத்திற்கு மீண்டும் சென்றாள். சத்ரியனின் நினைப்பு கிளறிவிட்டதால் அவனை நினைத்து கண்ணீரை பொழிந்தவாறு இருந்தாள். 

அப்படியே மாலை ஆனது. விசிட்டிங் ஹவர் நெருங்கியது.  வினோத்தும் ஹரிணியும் மருத்துவர்கள் வந்து செக்கப் செய்த நாளில் வருவது வழக்கம் என்பதால் காத்திருந்தாளே. 

இதோ இரும்பு கம்பிகளுக்கு நடுவே நின்றபடி கைதிகளும் உறவினர்களும் பேசிக் கொண்டிருந்தனர்.

அதில் வினோத் ஹரிணி ஷ்ரத்தாவை சந்திக்க வந்திருந்தனர். 

 "எப்படி இருக்கம்மா?" என்றான் வினோத்.

"இருக்கேன் அண்ணா." என்றாள்.

"நல்லா சாப்பிடறியா இல்லையா?" என்று கடிந்தான்.

"சாப்பிட தான் முயற்சி பண்றேன் அண்ணா. ஆனா முடியலை" என்றாள் ஷ்ரத்தா. 

"நல்லா சாப்பிடு." என்று ஹரிணி செய்கையால் கூறினாள். 

"உன் பையன் உன்னை உள்ள இருந்து உதைக்க ஆரம்பிச்சா தெரியும்." அந்த வார்த்தையில் ஷ்ரத்தாவின் உதட்டில் மெலிதான சிரிப்பு தோன்றியது.

அது சில நொடிகள் மட்டுமே.

"அண்ணா..." திடீரென்று அழைத்தாள்.

"என்னம்மா?"

"அந்த ருத்ரன்..." வினோத்தின் முகம் சற்றே மாறியது.

"அவருக்கு என்ன?"

"எப்பவும் என்னையே பார்த்துட்டு இருக்காரு ஏதாவது கேட்டு எறிந்து விழறார். ஏதோ அவங்க அப்பாவை சத்ரியன் கொன்றதுக்கு என்னை பழிவாங்கற மாதிரி ஒரு பார்வை." என்றாள். 

"ஏதாவது வெளிப்படையாக பேசினானா?" என்று கேட்க, "இதை தான் பேசினான். நான் சத்ரியனை கொல்ல நினைச்சி போஸ்டிங் வாங்கி வந்தா நீ கொன்னுட்ட, ஏன் கொன்ன எதுக்குனு கேட்கறான்." என்றாள். 

"சத்ரியன் பாஸை அவன் கொல்ல நினைச்சானா... ஜோக்கர் அவன்." என்றான் வினோத்.

ஹரிணி 'எதையும் விளையாட்டாக பேசாதே' என்று செய்கையில் கடிய, "அவன் ராகவன் சாரோட பையன். அவனுக்கு கோபம் இருக்கலாம். நீ சொல்ற மாதிரி தினமும் உன்னை கவனிக்கலாம். பாஸை கொல்ல முடியாத கோபம் உன் மேல கொஞ்சம் திரும்பலாம். அதுக்காக பீல் பண்ணாதம்மா" என்றான்.

ஹரிணியும் தலையசைத்தாள்.

"கோபம் இருந்தா தூரத்துல இருந்து வெறுப்பா பார்ப்பாங்க. இவர் வேற ஏதோ தேடுற மாதிரி இருக்காரு." அந்த வார்த்தை ஷ்ரத்தாவின் மனதிலும் ஒலித்தது.

"என்ன பார்த்தாலும் முறைச்சாலும் அவனால ஒன்னும் புடுங்க முடியாது ஷ்ரத்தா. அதெல்லாம் பாஸ் கச்சிதமா முடிச்சி வச்சிட்டு தான் போயிருப்பார்" என்றான். 

  ஷ்ரத்தாவுக்கும் அதே எண்ணமிருந்தது. ஆனாலும் வினோத்திடம் கூறினால் ஏதோ சாந்தி அடையும் மனம்.

பிறகு பேசி வெளியேறி செல்ல, அன்று இரவு... தனது அறைக்குள் திரும்பியிருந்தாள்.

ஜன்னல் வழியே நிலவொளி உள்ளே விழுந்தது.

அமைதியாக கட்டிலில் அமர்ந்தாள்.

இன்று முதல் முறையாக சத்ரியனை தவிர இரண்டு பேர் அவளது சிந்தனையில் இடம் பிடித்திருந்தனர்.

ஒருவர் வெறுப்போடு கேள்வி கேட்கும் ருத்ரன். மற்றொருவர் அக்கறையோடு கேள்வி கேட்கும் யதுநந்தன்

'தன்னிடம் ஏதோ தேடுவது என்ன?' என்று தன்னிடமே கேட்டுக் கொண்டாள்.

அந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை. இதில் யதுநந்தன் தன்னிடம் பேச வந்து தடுமாறி பார்வையிடுவதும் உறுத்தியது. இந்த இரண்டு விஷயமும் சத்ரியனை காப்பாற்றிய 126 குழந்தைகளை பற்றி ஏதேனும்  தன்னிடம் தகவலறியும் முயற்சியாக கூட இருக்கலாமென நினைத்தாள். 

சிறை மதில்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த அவளது வாழ்க்கையில், இன்னொரு அத்தியாயம் மெதுவாக திறக்கத் தொடங்கியிருந்தது. அதென்னவே மற்றவர்களிடம் இவளாக மூச்சுவிடப்

போவதில்லை. ஆனால் வந்த இருவரும் எந்த காரணத்திற்காக வந்தாலும் இது தொடரும் என்பது போல யூகித்தாள் ஷ்ரத்தா. 

தொடரும்.

பிரவீணா தங்கராஜ்.

நேத்து ருத்ரன் என்ட்ரி இன்னிக்கு யதுநந்தன் என்ட்ரி.. ஏதாவது அத்தியாயத்துல சத்ரியன் என்ட்ரி வருவா.... காத்திருங்கள் ரீடர்ஸ். நான் இரண்டு விதமாக யோசித்திருக்கேன். ஆனா எழுதறப்ப எது பெஸ்டா வருதோ அது தருவேன். 


 
Posted : July 12, 2026 7:13 am
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 2)

அப்பாடா...! இப்பவாவது ஷ்ரத்தாவோட அப்பாவைப் பத்தி ஒருத்தன் பேச வந்திருக்கானே, அதுவும் அவ மறந்து போன லட்சியத்தை, கடமையை நியாபகப்படுத்த... அந்த மட்டுக்கும்
ரொம்ப சந்தோஷம். அய்யய்யோ..!
அம்புட்டு பேசியும் யதுநந்தனோட எனர்ஜி வீணானது தான் மிச்சம் போல.

ருத்ரனோ, யதுநந்தனோ வரட்டும், வராமல் போகட்டும்... ஆனால் எப்ப, எந்த நேரத்துல, எப்படி வரணுமோ அப்ப உங்க சத்ரியன் வர வேண்டிய நேரத்துல வராமல் இருக்க மாட்டான் சரி தானே..?

😊😊😊
CRVS (or) CRVS 2797


 
Posted : July 12, 2026 8:34 am
(@dharsinipriya)
Posts: 59
Trusted Member
 

Super sis nice epi 👌 😍 oru Pakkam rudhran enoru Pakkam yedhunandhan renduperum shratha kita erundhu enn yethir parkuranga🙄 paavam avaley kavalaiyila eruka🥺 sis pls kandipa chathriyan ya marubadiyum konduvaanga pa🙏🙏🙏


 
Posted : July 12, 2026 8:52 am
(@priyarajan)
Posts: 11
Active Member
 

Waiting 😍 


 
Posted : July 12, 2026 9:32 am
(@guna-sundari)
Posts: 56
Trusted Member
 

Wow super super. Waiting for chatriyian entry. Very intresting sis.


 
Posted : July 12, 2026 10:20 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 49
Trusted Member
 

Yadhunandhan oru vela divagar sir Shardha ku future la jodi aakalam nu nenachi irundhu irupano nu oru doubt aana onnu ivan aachum ava doctor aaganum na ra aim ah niyabaga paduthitu ponan yae athu varaikkum happy .

Rudhran or nandhan ivanga entry ah vida Chathriyan oda entry ah than athigam ah expect panrom 


 
Posted : July 12, 2026 2:27 pm
(@subhakumar85)
Posts: 44
Eminent Member
 

Epdi yaaravathu vantha than ava konjam pidipoda eruupa


 
Posted : July 12, 2026 5:39 pm
(@kalidevi)
Posts: 56
Trusted Member
 

super epi doctor agura kanavu pathi pesa oruthan vanthu irukan oruthan chathriyan irukanu ivala vevu pakuran but chathriyan thirumba varuvanu thenjiduchi


 
Posted : July 14, 2026 2:00 pm
(@kothaihari)
Posts: 54
Trusted Member
 

சூப்பர். ... பீளிஸ் சத்ரியன் ஷ்ரத்தாவை பிரிக்காதிங்க


 
Posted : July 22, 2026 1:23 am

Scroll to Top