தகிக்கும் நிலவொன்று-1
🔥தகிக்கும் நிலவொன்று🌜
அத்தியாயம்-1
இடம்: மகளிர் மத்திய சிறைச்சாலை
உயரமாக எழுந்திருந்த சாம்பல் நிற மதில்கள், வெளியுலகை முழுவதுமாக மறைத்து நின்றன. அந்த சுவர்களின் மேல் சுற்றி ஓடிய கண்ணாடி சில் கொண்ட வேலிகள் மீது முள்வேலியும் போடப்பட்டிருந்தது. சிறைக்கு உள்ளே இருப்பவர்களுக்கு சுதந்திரம் என்பது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதை ஒவ்வொரு நொடியும் நினைவூட்டிக் கொண்டிருந்தது.
இரும்புக் கதவுகள் திறந்து மூடும் சத்தம், காலையில் ஒலிக்கும் விசில், கைதிகளின் வரிசையான நடைகள், பெண்காவலர்களின் கட்டளைகள் இயங்கும் அவ்விடத்தில் தான் நாயகி ஷ்ரத்தாவின் புதிய வாழ்க்கை தொடங்கியது.
ஆம் கிங்பின் உலகத்தின் சக்ரவர்த்தி சத்ரியனின் ஆசைநாயகி ஷ்ரத்தா, சிலபல காரணத்தால், சத்ரியனையே கொன்றுவிட்டு, தற்போது மகளிர்கான மத்திய சிறைச்சாலையில் இருக்கின்றாள்.
அங்கே காலமே ஒரு ஒழுங்குக்குள் கட்டுப்பட்டு வாழ்ந்தது. வெளியுலகில் நாட்கள் பறந்து சென்றாலும், சிறைக்குள் ஒவ்வொரு நாளும் மெதுவாக நகர்வது போல தோன்றியது அவளுக்கு.
சில முகங்களில் கோபம், குற்றவுணர்வு, விரக்தி. இன்னும் சில முகங்களில் எந்த உணர்வும் இல்லாத வெறுமை படர்ந்திருந்தது.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கதையோடு அந்த மதில்களுக்குள் அடைக்கப்பட்டிருந்தனர். ஷ்ரத்தாவுக்கும் ஒரு கதை இருப்பதை அறிவோம்.(தெரியலைன்னா *தி லீடர்(அடங்காத திமிர் அரசன்)* கதை வாசிக்கவும் பிரதிலிபில இருக்கு. தளத்தில் நீக்கியுள்ளேன். பிரதிலிபில தினம் ஒரு லாக் ஓபன் ஆகும். இல்லை... எனக்கு சட்டுனு படிக்கணும்னா ப்ரீமியம் சைட்ல முழுகதை இருக்கு. 20 ரூபாய் பணம் செலுத்தி வாசிக்கலாம்.)
அந்த சிறை வளாகத்தின் பின்புறம் இருந்த பழைய கட்டிடத்தின் இரண்டாவது பிரிவில் தான் ஷ்ரத்தாவுக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது.
பத்து அடி நீளமும், எட்டு அடி அகலமும் கொண்ட சிறிய அறை.
ஒரு இரும்புக் கட்டில்.
மெல்லிய படுக்கை. மூலையில் குடிநீர் பாத்திரம். மறுபக்க மூலையில் சிறிதாக இந்தியன் டாய்லெட் தண்ணீர் மக்கும்.
சிறிய ஜன்னல் ஒன்று அவ்வறையிலிருக்க, பொருத்தப்பட்டிருந்த தடித்த இரும்புக் கம்பிகள்.
அந்த ஜன்னல் வழியாக வானத்தின் ஒரு சிறிய துண்டு மட்டுமே தெரியும். பகலில் சூரிய ஒளி சில நிமிடங்கள் மட்டும் உள்ளே விழும். இரவில் நிலவு தெரிந்தால் அதுவே ஷ்ரத்தாவுக்கு பெரிய ஆறுதல். அங்கே தான் கடந்த சில வாரங்களாக ஷ்ரத்தா வாழ்ந்து கொண்டிருந்தாள்.
தந்தையோடு மிடில்கிளாஸ் மக்கள் வாழும் அழகான தனி வீட்டிலும், தந்தை இறந்தப்பின், சத்ரியனின் பங்களா வீட்டு அமைப்பிலும், கடலுக்குள் தனி ராஜாங்கம் நடத்தும் விதமாக பெரிய கப்பலிலும் வாழ்ந்தவள், சிறு அறையில், சிறையில் வாழும் வாழ்க்கைக்கு இன்னும் முழுவதுமாக பழகவில்லை.
பழக வேண்டும் என்ற ஆசையும் இல்லை. ஆனால் இந்த வாழ்க்கையை எதிர்த்து உதறும் சக்தியும் இப்போது அவளிடம் இல்லை. அவளது உலகம் சுருங்கிவிட்டது.
அந்த அறை, அந்த ஜன்னல், அவள் வயிற்றுக்குள் வளரும் குழந்தை இந்த மூன்று மட்டுமே அவளது உலகமாக மாறியிருந்தது.
ஷ்ரத்தாவின் ஒவ்வொரு மூச்சிலும்... சத்ரியன் என்ற பெயர் இன்னும் உயிரோடு இருந்தது. அதை மட்டுமே அவள் சுவாசிக்கின்றாள்.
பெண்காவலாளியான வார்டன் வந்து கதவை தட்டி, "மெடிக்கல் செக்கப் பண்ண டாக்டர் வந்திருக்காங்க. எல்லாரும் வெளிய வாங்க" என்று குரல் கொடுத்திட, ஷ்ரத்தா அசைவற்று இருந்தாள். அவள் இருக்கும் அறையை தட்டி, "ஏய்... உனக்கு தனியா சொல்லணுமா. எந்திரிச்சு வா" என்று கத்தவும் ஷ்ரத்தா திடுக்கிட்டு வயிற்றை பிடித்து எழுந்தாள்.
ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு மருத்துவம் பார்க்க வந்திருந்த டாக்டர் சங்கரி அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருக்க, கைதிகள் ஒவ்வொருத்தராக வந்தனர்.
டாக்டருக்கு படிக்க வேண்டியவள், இங்கு கைதியாக.. அதுவும் அவள் நேசித்த... நேசிக்கும்.. சத்ரியனை கொன்றுவிட்டு வந்ததாக பழி ஏற்று நிற்கின்றாள்.
ஷ்ரத்தாவின் வரிசை வரவும் டாக்டரின் துணைக்கு வந்த நர்ஸ் ஏற்கனவே பீபி செக்கப் செய்து இருந்தனர். கூடவே பிளட் எடுத்து ரிப்போர்டும் மேஜையில் இருந்தது. "பிளட் பிரஷர் நார்மலா இருக்கு... ஹீமோகுளோபின் கொஞ்சம் கம்மியா இருக்கு." என்று குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தார் மகப்பேறு மருத்துவர் சங்கரி. ரத்த டெஸ்ட் எடுத்தப்பொழுது எல்லாம் அவள் சுயநினைவின்றி வெறித்த பார்வையில் இருக்க, தற்பொழுது மட்டும் நலனை பற்றி அறியும் ஆவல் இருக்குமா? இப்பொழுதும் ஷ்ரத்தா அமைதியாக அமர்ந்திருந்தாள்.
சிறைக்கு வந்த நாளிலிருந்து அவள் பெரிதாக யாரிடமும் பேசவில்லை. சாப்பிடுவது... தூங்குவது... ஏதாவது சில எளிய வேலைகள் செய்வது, மருந்து எடுத்துக் கொள்வது... எல்லாமே யாரோ கட்டாயப்படுத்தி செய்வது போல செய்தாள்.
அவளது முகத்தில் வயதிற்கு மீறிய சோர்வு குடியேறியிருந்தது.
மருத்துவ பெண்மணி சங்கரி பேனாவை மூடிவிட்டு அவளை நேராக பார்த்தார்.
"ஷ்ரத்தா..." அவள் மெதுவாக நிமிர்ந்தாள். "என்னம்மா இது கர்ப்பிணி பொண்ணு இப்படி இருக்க கூடாது." என்றதற்கு பதில் இல்லை.
"உங்க உடம்புல இன்னொரு உயிர் வளருது. உங்களுக்கு மட்டும் இல்ல... அந்த குழந்தைக்கும் நீங்க தான் பொறுப்பு." என்று கூறிக்கொண்டிருக்க அவளிடம் அதே அமைதி.
"நல்லா சாப்பிடணும். நேரத்துக்கு தூங்கணும். மனசை சந்தோஷமா வச்சிக்கணும்." அதை கேட்டதும் ஷ்ரத்தாவின் உதடுகளில் கசப்பான புன்னகை தோன்றியது.
மனசை சந்தோஷமா வச்சிக்கணுமா? என்ற ஏளனம்.
அவளால் சிரிக்க கூட மறந்து போயிருந்தது. மருத்துவர் மெதுவாக அவள் தோளை தட்டினார். "வாழ்க்கை முடிஞ்சிடல ஷ்ரத்தா. இன்னும் நிறைய இருக்கு." அந்த வார்த்தை அவளை ஒரு நொடி குலைத்தது.
வாழ்க்கை... அந்த வார்த்தையை கேட்டாலே சத்ரியன் நினைவு தான் வந்தது. இவளது வாழ்க்கையே அவன் மட்டும் தான் என்று மாற்றி விட்டு சென்று விட்டானே!
"என்ன சொன்னாலும் எதுவும் காதுல வாங்க மாட்டேங்கறிங்க. நானும் இங்க வந்ததிலருந்து இரண்டு முறையும் நோட் பண்ணிட்டேன். ஓகே... ரெகுலரா சாப்பிடுங்க." என்று மருத்துவர் எழுந்து வெளியேறினார்.
அவர் வெளியே வந்ததும் சுவரில் சாய்ந்து நின்றிருந்த ருத்ர ராகவன் சிரித்தான். இன்ஸ்பெக்டர் ராகவனின் மகன் சுருக்கமாய் ருத்ரன். தந்தை ராகவன் சத்ரியனால் இறந்தவர். அவர் இறந்தபோது IPS பயிற்சிக்காக தேர்வெழுதி கொண்டிருந்தவன். இன்று மாவட்டத்தின் இளம் DSP ஆக பதவியேற்று, சத்ரியன் தொடர்பான விசாரணைகளை கையில் எடுத்திருந்தான். சத்ரியனை கைது செய்யாமல் சுட்டு பிடிக்கும் எண்ணத்துடன் வேலையில் வந்து சேர, அவன் போதாத நேரம் ஷ்ரத்தா சுட்டுவிட்டதாக கூறி ஷ்ரத்தாவை கைது செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டான்.
அப்படியிருந்தும் சத்ரியன் இறந்துவிட்டால் மகிழாமல், சத்ரியன் இறப்பை நம்ப மாட்டாது, ஷ்ரத்தாவை இன்னமும் விசாரணை என்ற பெயரில் அடிக்கடி இம்சிக்க வந்து நிற்பவன்.
இன்றும் டாக்டர் சங்கரியிடம் "டாக்டர்... நீங்க என்ன சொல்லுங்க. எதுவும் காதுல விழாத மாதிரியே இருப்பா." என்று இளப்பமாய் கூறினான்.
"ஏன் இவங்க இப்படியே இருக்காங்க ருத்ரன்" என்று மருத்துவர் கேட்க, "எப்ப பாரு செத்து போன அயோக்கியனுக்காக பீல் பண்ற மாதிரி முகத்தை தூக்கி வச்சிட்டு சுத்துறாங்க. ஆக்சுவலி அப்பாவை கொன்றவனை பழிவாங்கியிருந்தா சந்தோஷப்படணும். ஆனா இவளுக்கு சந்தோஷமும் இல்லை. ஆசைநாயகியா வாழ்ந்த ரோல் தான் மனசுல இருக்குதோ என்னவோ எப்பவும் புருஷனை இழந்த புண்ணியவதி மாதிரி ஒரு மூஞ்சி" என்று திட்ட, மருத்துவர் புரியாமல் பார்த்தார்.
ருத்ரனோ உள்ளே இருந்த ஷ்ரத்தாவை பார்த்தபடி தொடர்ந்தான். "பாருங்க.. டாக்டர்.. இவ தான் அவனை கொன்னா ஆனா முகத்துல சோகம் தாண்டவமாடுது." என்று பேசபேச மருத்துவ பெண்மணி சங்கரியே சங்கடமாக நின்றார்.
சத்ரியன் குழந்தை வயிற்றில் வளர, மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட பெண், கைதியாக நிற்கும் பொழுது மனம் துவள தான் செய்யும். ஆனால் மீண்டு வரவேண்டியதும் ஷ்ரத்தா தானே என்பது மருத்துவர் எண்ணம்.
"ஆபீசர்... நீங்க எப்பவும் அவங்களை காயப்படுத்தற மாதிரி பேசறிங்க. நானும் முதல் நாளிலிருந்து பார்த்துட்டேன்." என்று டாக்டர் பெண்மணி ருத்ரன் பேசுவதை தடுத்தார்.
"நான் உண்மையை தான் சொல்றேன் டாக்டர்."
என்று தோளைக் குலுக்கினான்.
மருத்துவபெண் சென்ற பிறகும் ருத்ரன் அங்கிருந்து நகரவில்லை.
ஷ்ரத்தா வெளியே வந்ததும் அவளை பின்தொடர்ந்தான்.
"ஒரு டவுட்." ஷ்ரத்தா கண்டுகொள்ளவில்லை.
"பிடிக்காதவன் இறந்தா ரிலாக்ஸா ஃபீல் வரணுமே?உனக்கு ஏன் அந்த நிம்மதி வரலை?" ஷ்ரத்தாவின் கால்கள் ஒரு நொடி நின்றது.
"உன் மனசுல என்ன தான் ஓடுது?" என்று அவளருகே நெருங்கி நின்று கேட்டான். அவள் அவனது நெருக்கத்தை பிடிக்காமல் மறுபக்கம் நடக்க ஆரம்பித்தாள்.
"நில்லு." ருத்ரனின் குரல் கடினமானது. "நான் சத்ரியனின் கேஸை தோண்டி துருவ வந்திருக்கேன் உனக்கு தெரியும் தானே?!" என்றதும் ஷ்ரத்தா மெதுவாக திரும்பினாள்.
ஷ்ரத்தாவுக்கு பல நாட்களாக அடக்கி வைத்திருந்த எரிச்சல் அந்த கணத்தில் வெளியே வந்தது.
"உங்களுக்கு சத்ரியன் மேல கோபம்னா... அவர்கிட்ட காட்டுங்க. என்னை ஏன் இம்சை படுத்தறீங்க?" என்றாள்.
ருத்ரன் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி கசப்பாக சிரித்தான். "அவன் உயிரோட இருந்தா... அவன்கிட்ட தான் மோதியிருப்பேன். அவனை தான் நீ கொன்னுட்டியே." என்றதும் அந்த வார்த்தை அவளது இதயத்தை குத்தியது.
ருத்ரன் இன்னும் நெருங்கினான். "உனக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா?" அவள் புரியாமல் பார்த்தாள்.
"நீ... உன் அப்பாவை கொன்றவனை தேடி போய் பழி வாங்கின." ஷ்ரத்தாவின் மூச்சு கனத்தது. "நானும் அதே மாதிரி தான்." ருத்ரனின் கண்களில் கோபம் தெரிந்தது. "என் அப்பாவை கொன்றவன் சத்ரியன்." அவன் தாடை இறுகியது. "அவன் இன்னும் உயிரோட இருந்திருந்தா..." ஒரு நொடி நிறுத்தினான். "நானே அவனை கொன்று புதைச்சிருப்பேன். ஆனா அந்த வாய்ப்பை நீ பறிச்சிட்ட... சத்ரியன் இறந்துட்டான் என்றதும் எனக்கும் சந்தோஷம் வரணும். ஆனா எனக்கும் அந்த சந்தோஷம் வரமாட்டேங்குது." அதை சொல்லிவிட்டு திரும்பி நடந்தான்.
மனசாட்சியோ 'அதுக்கு பதிலா உன்னை காயப்படுத்தி நோகடிச்சா சந்தோஷமா இருக்கு. அதென்ன டிசைனோ தெரியலை' என்று கூறாமல் சென்றான்.
ஷ்ரத்தா அப்படியே உறைந்து நின்றிருந்தாள். அவனது வார்த்தைகள் காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. வெறுப்போடு பேசுகிறான்... மேலும் அவன் கண்களில் தெரிந்தது வெறுப்பு மட்டும் இல்லை. இழப்பும் இருந்தது.
ஷ்ரத்தா தன் வயிற்றின் மீது கையை வைத்தாள். "சத்ரியா... உன்னால எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்க பாரு. எல்லாம் சரியாகிடும்னு போனியே.. இப்ப பாரு... எதுவும் மாறலை. என் மனதோட வலி தான் கூடியிருக்கு.'' என்று மனதிற்குள் முணுமுணுத்தாள்.
உன்னை மறக்க முடியாம தானே தவிக்கறேன் என்று நினைத்தவளின் கண்கள் மெதுவாக கலங்கின.
ருத்ரன் ஒரு எதிரியாக ஷ்ரத்தாவை காண, அவளோ சத்ரியனால் காயப்பட்ட இன்னொரு மனிதனாக மட்டுமே ருத்ரனை பார்த்தாள்.
அதனாலோ என்னவோ ருத்ரனின் கோபங்களை சாடல் பேச்சுகளை, காயப்படுத்தும் வார்த்தை அம்புகளை அவள் பெரிதுப்படுத்தவில்லை
கையில் மருத்துவர் தந்த மருந்து மாத்திரையை எடுத்துக்கொண்டு, நகர ஆரம்பித்தாள்.
சாப்பிட்டு மருந்தை விழுங்க வேண்டுமே. அவள் வயிற்றில் சத்ரியனின் உலகமே இயங்குகின்றது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
ஹாய் ரீடர்ஸ் புது தளத்தில் ரெஜிஸ்டர் செய்து லாகின் பண்ணிக்கோங்க. உங்க கமெண்ட்ஸ் பதிவு பண்ணுங்க. அது எனக்கான ஆதரவு. உற்சாகம் தரும். இன்னும் எழுத மூளை யோசிக்கும்.
Wow super super. Very intresting. Who will pair to Shraddha?
Wow amazing start sis semma epi👍👌😘 shratha enga kavalaiya eruka edhula endha rudhran vera avala torture pandraney🙄 kandipa chathriyan meendum varuvaan namburen pa😕🥺
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 1)வாழ்க்கை தான் எந்தளவுக்கு வைச்சு செய்ததிடுது இல்ல.
தந்தையோட மரணத்துக்கு கேள்வி கேட்கப்போய், சத்ரியன் மூலமா பதில் தெரிஞ்சு, கடைசியில் நூற்றி இருபத்தாறு குழந்தைகளுக்காக
வாழ்வையே இழந்து, இன்னைக்கு சிறைப்பறவையா சிறையில
காலம் தள்ள வேண்டிய நிலைமை.
தந்தையோட அன்பெனும் கூட்டுக்குள்ள தானாவே சிறையிருந்ததுப் போய், சத்ரியனோட காதலெனும் கூட்டுக்குள்ள சிறைப்பட்டு, இன்று தான் நேசித்தவனையே கொன்றவள் என்னும் பழியை சுமந்து உண்மைச் சிறையில் சிக்கி
சீரழியும் நிலைமை.இதுல மருத்துவர் ஆகணும்ங்கிற தந்தையின் கனவும், அவளின் லட்சியமும் அந்தரத்துலயே நின்னு ஊசாலிடிக்கிட்டிருந்தாலும், தான் நெஞ்சில் கொண்டவனின் வாரிசை சுமப்பதோடு, கண்டவனின் (ருத்ர ராகவன்)
ஏச்சையும், பேச்சையும் வேற வாங்க வேண்டியதாயிருக்கு...
என்ன கொடுமையடா ???😔😔😔
CRVS (or) CRVS 2797
Good start, romba sogama pokathinga, sathirayan sikiram konduvanga, we are having hope that he didn't die
Rudhra ne indha vai ellam chathriyan kita katti irukanum atha vittu Shardha kita katturathu la unnaku nimathi varutham ada poda ava vazhkai la vithi oda aatathula inga vandhu iruku ah ithula ivan vera ah
-
தகிக்கும் நிலவொன்று-17
21 minutes ago
-
தகிக்கும் நிலவொன்று-16
15 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-8
17 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-7
17 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-6
18 hours ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 0 Online
- 329 Members
