Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-11

10 Posts
9 Users
3 Reactions
83 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#195]

அத்தியாயம்-11

  கொஞ்ச வாரங்களாகவே ஷ்ரத்தாவின் உடலில் சிறுசிறு மாற்றங்கள் ஆரம்பித்திருந்தன.

சில நேரங்களில் வயிறு இறுகுவது போல, அடிவயிற்றில் இழுக்கும் வலி. இப்பொழுது அதிகமாகவே மூச்சு விடவே சிரமமாக இருப்பது போல உணர்வு.

தினமும் சிறை மருத்துவர்கள் வந்து பரிசோதித்து சென்றனர்.

"குழந்தை எந்த நேரமும் பிறக்கலாம். உடம்புல ஏதாவது வித்தியாசமா தோணுச்சுன்னா உடனே சொல்லணும். தாமதம் பண்ணக்கூடாது." என்று மீண்டும் மீண்டும் எச்சரித்திருந்தார் மகப்பேறு மருத்துவர் சங்கரி.

அதனால் கார்த்திகாவும் அந்த நாட்களில் ஷ்ரத்தாவை தனியாக விடவில்லை.

   ஒரு அதிகாரியாக அல்ல... அக்காவாகவே அவளருகே இருந்தாள்.

அதே நேரம் ருத்ரனின் கை முழுமையாக குணமாகிவிட்டது.

கட்டைப் பிரித்து இரண்டு நாட்களாகிவிட்டதால், பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் தனது பைக்கை எடுத்தான்.

எஞ்சின் சத்தமே அவனுக்குள் இருந்த கோபத்தை கிளறியது.

நேராக மத்திய சிறைச்சாலையை நோக்கிப் புறப்பட்டான்.

"இன்ஸ்பெக்டர் வந்திருக்கார்." என்று காவலர் சொல்லவும், கார்த்திகாவின் முகம் சுருங்கியது.

'இப்ப எதுக்கு வந்திருக்காரு?' என்று நினைத்தபடியே வெளியே வந்தாள்.

ருத்ரன் பைக்கில் இருந்து இறங்கினான். "ஷ்ரத்தாவை பார்க்கணும்."

"அனுமதி இருக்கா சார்?" என்று கேட்க, "சத்ரியன் கேஸ் சம்மந்தம்மா ஒரு விஷயம் க்ளியர் பண்ண வந்திருக்கேன். கோர்ட் ஆர்ட்ர் இருக்கு" என்றான். 

  தன் இஷ்டத்திற்கு வருவதற்கு தடங்கலாக தான் யதுநந்தன் தடையாக இருக்கின்றானே என்ற கடுப்புடன் ஷ்ரத்தாவை சத்திக்க அனுமதியுடன் முறையாக தான் வந்தான்.‌

" சார்... இன்னைக்கு வேண்டாம். அவங்க ஆல்ரெடி ரொம்ப சோர்வா இருக்காங்க" என்றாள். 

"அவளை கூப்பிடுங்க. உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க. இது என் வேலை." என்றான்‌ அழுத்தமாக.

  அவன் குரலில் மறுப்புக்கு இடமே இல்லை. வேறு வழியில்லாமல் ஷ்ரத்தாவை அழைத்து வந்தார்கள்.

அவள் மெதுவாக வந்து நின்றாள். முகத்தில் கார்த்திகா கூறிய சோர்வே அப்பட்டமாக தெரிந்தது. 

வயிறு மேலும் பெரிதாகி இருந்தது. அதை ஒரு நொடி பார்த்த ருத்ரன் உடனே பார்வையை மாற்றிக் கொண்டான்.

"என்ன விஷயம்?" என்று ஷ்ரத்தா அமைதியாக கேட்டாள்.

ருத்ரன் கைகளை கட்டிக்கொண்டான். "நான் நிரோஷையும், ஜானையும் பார்த்தேன்." என்றான்

அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. அடிக்கடி தன்னை சார்ந்தவர்களையும் இவன் விட்டு விடாமல் தொந்தரவு செய்வதை புரிந்துக் கொண்டான்.‌

"உன் பிரெண்ட்ஸ் கனி... மனிஷா.. அவங்க யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம் எனக்கு தெரிஞ்சிருச்சு." இந்த முறை ஷ்ரத்தாவின் புருவம் சுருங்கியது.

"என்ன தெரியும்?" என்று சலித்தபடி கேட்க, ருத்ரன் மெதுவாக சிரித்தான்.

"என்ன தெரியும்?" என்று அவள் மீண்டும் கத்தினாள்.

அவன் அவள் கண்களை நேராக பார்த்தான்.

"உங்க அப்பாவை... சத்ரியன் கொல்லலைன்னு தெரியும்." ஒரே நொடியில் ஷ்ரத்தாவின் முகம் வெளிறியது.

"உங்க அப்பாவை யார் கொன்னாங்கன்னும் தெரியும்." அவளது மூச்சு வேகமாயிற்று.

"எதுக்காக கொன்னாங்கன்னும் தெரியும்." அவள் தன்னையறியாமல் இரண்டு அடி பின்னால் சென்றாள்.

"அதுக்கு அப்புறம்..." ருத்ரனின் குரல் இன்னும் அழுத்தமானது. "அவங்களை உன் சத்ரியன் எப்படி கொன்னான்னும் எனக்கு தெரியும்."

"போதும்... உங்க இஷ்டத்துக்கு ஏதாவது பேசாதிங்க" என்று ஷ்ரத்தா கத்தினாள். அவளது கை தானாகவே வயிற்றை பற்றியது.

ருத்ரன் அதையும் கவனித்தான். ஆனால் நிற்கவில்லை.

"சத்ரியன் எங்கடி?" அவன் குரல் கர்ஜனையாக மாறியது.

"அவன் சாகலை. எனக்கு நல்லாவே தெரியும். ஏதோ ஒரு காரணத்துக்காக... பொட்ட மாதிரி ஒளிஞ்சிட்டு இருக்கான். சொல்லு டி.. எங்க இருக்கான்?" என்றதும் ஷ்ரத்தாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

"என்... சத்ரியன்.. ஆம்பளைடா. அசிங்கமா பேசாத" என்றவள் பற்களை கடித்தாள். அந்த ஒரு வார்த்தை ருத்ரனை ஒரு நொடி அமைதியாக்கியது.

அவன் எதிர்பார்த்த பதில் அது இல்லை. அவளது கண்களில் இருந்த கண்ணீர் வேறு அவனை சற்று தள்ளி நிறுத்தியது. ஆனால் அடுத்த நொடியே அவன் மீண்டும் கடினமானான்.

"ஆம்பளன்னு தான் உனக்கு குழந்தையையும் கொடுத்திருக்கானே ஆனா... என்னை பேஸ் பண்ண பயந்த கோழையவன்" என்று ஷ்ரத்தா உடனே நிமிர்ந்தாள்.

"அவர் வீரத்துக்கு என்ன குறைச்சல் கண்ட? அவரை நேர்ல பார்த்தவங்களிடம் கேளு. அவர்கிட்ட அடி வாங்கினவங்களிடம் கேளு. இப்பவும்... அந்த பெயரை கேட்டாலே சிலர் நடுங்குவாங்க." ருத்ரன் அமைதியாக அவளை பார்த்தான்.

உண்மைதான் நிரோஷ், ஜான் இருவருமே சத்ரியன் பெயரை சொன்னாலே கலங்கினார்கள்.

   'ஷ்ரத்தா பக்கம் தங்கள் பார்வை சென்றால், செத்தாலும் திரும்பி வந்து கொன்றுடுவான் சார்.' என்று கூட சொல்லியிருந்தார்கள்.

அந்த நினைவும் ருத்ரனுக்குள் ஓடியது. அவன் மீண்டும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

"லுக்.. அவன் புகழ் பாட நான் இங்க வரல. எனக்கு நடந்தது என்னனு தெரியணும். ஸ்டெல்லா எங்கன்னு சொல்லு." ஷ்ரத்தா திடுக்கிட்டாள்.

"ஸ்டெல்லாவும்... சத்ரியனும்... ஒரே நேரத்துல இல்லை. சத்ரியன் இறந்ததா உலகம் நம்புது‌. அப்ப ஸ்டெல்லா..? ஸ்டெல்லாவோட பொண்ணு ஐரீன்" என்றவன் பேச பேச ஷ்ரத்தாவுக்குள் பல பூகம்பம் உண்டானது. 

  "சொல்லு ஐரீன் எங்க? அன்னைக்கு நீ ஏதோ உளறின... 126 குழந்தைகள்'ன்னு அதுக்கும் என்ன சம்பந்தம்? சொல்லு." என்றதும் ஷ்ரத்தா பதில் சொல்லவில்லை.

ருத்ரன் தனது மொபைலை எடுத்தான். அதில் இருந்த புகைப்படத்தை அவள் முன் நீட்டினான்.

  "இங்க எங்கம்மா உனக்கு நடத்திய வளைகாப்பு நாளில் எடுத்த படம்.  வெள்ளைச் சேலையில், கண்ணாடி வளையல்கள், நெற்றியில் குங்குமம், காகித மல்லிப்பூ முழு சுமங்கலிக் கோலத்தில் நீயிருக்க ஷ்ரத்தா. இந்த பூ... பொட்டு... ஒன்னையும் நீ தடுக்கல. சத்ரியன் செத்துட்டான்னு நம்புறவ... அதை எல்லாம் தவிர்த்திருப்ப தானே? தெரியாம குங்குமம் பட்டதுன்னாலும்... அதை அழிக்க சொல்லியிருக்கலாம். ஆனா... நீ சிரிச்சு சந்தோஷமா இருந்த. ஏன்?" என்றதும் ஷ்ரத்தா புகைப்படத்தை பார்த்தாள்.

அவளுக்கு எவ்வித வார்த்தைகளும் வரவில்லை.

"உண்மையை சொல்லு. எப்ப பாரு... ஏதாவது கேட்டா.. மயங்கி விழுந்து நடிக்காத." என்று கூற, அந்த வார்த்தை முடிவதற்குள் ஷ்ரத்தா முகம் சுருங்கியது.

அடிவயிற்றை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்தாள்.

"அம்மா..." என்று கதறினாள்.

உடம்பே நடுங்க ஆரம்பித்தது. "ஷ்ரத்தா!" என்று கார்த்திகா ஓடிவந்தாள்.

ஒரே பார்வையில் அவளுக்கு புரிந்துவிட்டது. ஷ்ரத்தா காலடியில் தண்ணீர் பரவியது.

"சார்! பனிக்குடம் உடைஞ்சிருச்சு!" கார்த்திகாவின் குரல் முழு சிறையிலும் எதிரொலித்தது.

"என்ன சார் பண்ணிட்டீங்க? இன்னைக்கோ நாளைக்கோ குழந்தை பிறக்கற நிலையில இருக்காங்கன்னு நான் சொன்னேன்ல! இப்ப பாருங்க! உடனே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும். இல்லனா... அவங்க உயிருக்கும் குழந்தைக்கும் ஆபத்தானா அதுக்கு நீங்க தான் பொறுப்பு. பிறகு கடவுளே வந்தாலும் உங்களை காப்பாத்த முடியாது." என்றாள். 

ருத்ரனின் முகம் வெளிறிப் போனது ஷ்ரத்தா நிலையால்...

ஒரு நொடி கூட யோசிக்கவில்லை. குனிந்து ஷ்ரத்தாவை இரு கைகளிலும் அள்ளிக்கொண்டான்.

வலியால் அவள் அவன் சட்டையை இறுகப் பற்றிக்கொண்டாள்.

"ஆம்புலன்ஸ்?" என்று ருத்ரன் வேகமாகக் கேட்டான்.

"போன் பண்ணிடறேன் ரெடியா இருக்கும் சார். அதுல போனா நேரா கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல போயிடலாம்" என்றாள். 

"பக்கத்துல பிரைவேட் ஹாஸ்பிடல் இருக்கே... அங்க போக முடியாதா?" என்று ஷ்ரத்தாவை பூவை போல தூக்கியபடி கேட்டான்.‌

"முடியாது சார். கைதிகளுக்கு அரசு மருத்துவமனை மட்டும் தான். பிரைவேட் கூட்டிட்டு போகக்கூடாது. சங்கரி மேடத்துக்கும் தகவல் சொல்லணும்." என்று கார்த்திகா போனை எடுக்க, ருத்ரன் வேகமாக நடந்தான்.

அவனது கைகளில் ஷ்ரத்தா வலியால் துடித்தாள். ஆம்புலன்ஸ் வண்டி வெளியே திறக்கப்பட்டிருந்தது.

உள்ளே ஏற்றும் முன்... அரை மயக்கத்தில் இருந்த ஷ்ரத்தா கண்களை திறந்தாள்.

"யது... யதுநந்தனுக்கு... கால்..." என்றவளுக்கு மூச்சு திணறியது. "வி... வினோத்... அண்ணாவுக்கும்..." என்று சொல்லும் பொழுதே அவளது தலை சாய்ந்தது.

"ஷ்ரத்தா!" என்று கார்த்திகா கத்தினாள். ருத்ரனின் இதயம் வேகமாக துடித்தது.

முதல்முறையாக... தன் விசாரணையை விட... ஷ்ரத்தாவுக்கும் அவள் வயிற்றில் இருந்த குழந்தையும், உயிரோடு இருக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டான்.

ஆம்புலன்ஸ் சைரன் சத்தத்துடன் அரசு மருத்துவமனை வாசலில் நின்றது. "லேபர் கேஸ்... சீக்கிரம்!" என்று கார்த்திகா கத்திக்கொண்டே இறங்கினாள்.

ருத்ரன் ஸ்ட்ரெக்ச்சரில் இருந்த ஷ்ரத்தாவை கவனமாக இறக்கினான்.

மருத்துவர்கள் வேகமாக உள்ளே அழைத்துச் சென்றனர்.

"பேஷண்ட் ரெடி... சங்கரி மேமும் வந்துட்டாங்க" என்று கூறி  லேபர் ரூம் கதவு மூடப்பட்டது.

வெளியே நின்றிருந்த ருத்ரன் முதன்முறையாக தன் கைகள் வெறுமையாகி விட்டதை உணர்ந்தான். அவன் பார்வை அந்த மூடிய கதவிலேயே நின்றது.

அப்போது.. கார்த்திகாவின் மொபைல் ஒலித்தது.

திரையைப் பார்த்தவள் உடனே அழைப்பை ஏற்றாள்.

"ஹலோ சார்... எங்க இருக்கீங்க? ஷ்ரத்தா மேடத்துக்கு லேபர் பெயின் வந்துடுச்சு. அதனால உங்களை கூப்பிட்டாங்க. நீங்க போன் எடுக்கலை." என்றதும் மறுமுனையில் யதுநந்தன் பதட்டமாகக் கேட்டான்.

"சார்... கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்திருக்கோம்." என்றாள்.‌

"என்ன நா..நான் உடனே வர்றேன்" என்றவன் குரலே மாறியது. அழைப்பை துண்டிக்கப்பட்டதும், பத்து நிமிடங்களுக்குள் மருத்துவமனை வாசலில் ஒரு காரில் வேகமாக வந்து நின்றான்.‌

அதில் இருந்து யதுநந்தன் கிட்டத்தட்ட ஓடிக்கொண்டே உள்ளே வந்தான்.

"ஷ்ரத்தா எங்க?" என்று மூச்சு வாங்கியபடி கேட்டான்.

"உள்ளே சார்..." என்று கார்த்திகா சொல்லி முடிப்பதற்குள்... அவனது பார்வை ருத்ரன் மீது விழுந்தது. அடுத்த நொடி 'பளாரென' ஒரறை ருத்ரனின் கன்னத்தில் விழுந்தது.

சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சியில் திரும்பிப் பார்த்தனர். ருத்ரன் அசையவில்லை.

யதுநந்தன் அவன் சட்டையைப் பிடித்து இழுத்தான். "உனக்கு அறிவிருக்கா? நிறைமாத கர்ப்பிணின்னு தெரிஞ்சும் வந்து விசாரணை பண்ணிறுக்கியே, கோர்ட் ஆர்டர் வாங்கினதும் போதலையா? இப்ப பாரு! அவ உயிருக்கு ஏதாவது ஆச்சு உன்னை கொன்னுடுவேன்" என்றான்.

ருத்ரன் அமைதியாகவே நின்றான். பதிலே பேசவில்லை.

"என்னடா சாதிச்ச? ஒரு கர்ப்பிணி பெண்ணை அழவச்சு... பயமுறுத்தி... இப்ப இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்க!" என்று சொல்லிவிட்டு மீண்டும் அவனை தள்ளினான்.

இந்த முறை ருத்ரன் இரண்டு அடி பின்னால் தடுமாறினான். இருந்தும், யதுநந்தனை திருப்பி அடிக்கவில்லை.

கார்த்திகா வேகமாக இருவருக்கும் நடுவே வந்தாள்.

"போதும் சார்! இது ஹாஸ்பிட்டல். நீங்க ரெண்டு பேருமே அரசு அதிகாரிங்க. இப்படி சண்டை போட்டா வெளியே அனுப்பிடுவாங்க." என்றாள்.‌

அந்த நேரமே பாதுகாப்பு காவலர்கள் இருவரும் அருகே வந்தனர். "சார்... சண்டை வேண்டாம்." என்றனர்.‌

      யதுநந்தன் ஆழமாக மூச்சை இழுத்தான். ஆனால் கோபம் இன்னும் குறையவில்லை.

"ஷ்ரத்தா... என்னை கூப்பிடதா தானே சொன்னிங்க. நான் இங்க இருப்பேன்." என்று அழுத்தமாகச் சொன்னான்.

பிறகு ருத்ரனை பார்த்தான்.

"இவனை வேண்டும்னா வெளிய அனுப்புங்க. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை." என்று யதுநந்தன் பேச,

ருத்ரன் அவனை ஒரு நொடி பார்த்தான்.

எதுவும் பேசாமல் திரும்பி நடந்தான். மருத்துவமனை வராண்டாவின் கடைசி முனையில் சென்று நின்றான்.

தந்தை இறப்பிற்கு பிறகு ஒரு செயலால் செய்வதறியாது, என்ன செய்வது என்று தெரியவில்லை.

கைகளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை குனிந்து நின்றான்.

லேபர் ரூம் கதவை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கே ஷ்ரத்தா அலறுவதை கேட்க முடிந்தது. 

'என்னால தானா...?' என்ற கேள்வி மீண்டும் மீண்டும் ருத்ரன் மனதை குத்தியது.

சில நொடிகள் கழித்து, மெதுவாக மொபைலை எடுத்தான். அதில் "அம்மா" என்ற பெயரை அழுத்தினான்.

இரண்டாவது ரிங்கிலேயே கீர்த்தனா எடுத்தார்.

"ருத்ரா.." என்று அழைக்க, அவன் பேசாமல் நின்றான்.

"என்னடா?" என்றார்.‌

"அம்மா." அவன் குரல் உடைந்தது.

"நீங்க... உடனே கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல் வாங்க.'' என்று

கீர்த்தனா பதறினார்.

"ஏன்டா? என்னாச்சு?" என்றார்.‌

"ஷ்ரத்தாவுக்கு லேபர் பெயின்...‌ நான் போய் விசாரணை பண்ணிட்டிருந்தேன்... அதுக்குள்ள...‌ அவளுக்கு... பனிக்குடம் உடைஞ்சிடுச்சு."

மறுமுனையில் சில விநாடிகள் அமைதி.

"எந்த ஹாஸ்பிட்டல்?"‌ என்று கீர்த்தனா அவசரமாகக் கேட்டார்.

ருத்ரன் மருத்துவமனையின் பெயரைச் சொன்னான். "நான் இப்பவே கிளம்புறேன்." என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார். போனை வைத்த கீர்த்தனாவின் கைகள் நடுங்கின.

"கடவுளே.. அந்த பொண்ணுக்கும் குழந்தைக்கும் ஒன்னும் ஆகக்கூடாது"‌என்று  வேண்டிக் கொண்டபடியே அவசரமாக வீட்டை விட்டு வெளியே வவ்தார்.

மருத்துவமனை வராண்டாவில் ருத்ரன் மட்டும் மூடியிருந்த லேபர் ரூம் கதவையே வெறித்துப் பார்த்தபடி அசைவின்றி நின்றிருந்தான்.

தொடரும். 

பிரவீணா தங்கராஜ்.

 


 
Posted : July 21, 2026 6:45 am
(@dharsinipriya)
Posts: 59
Trusted Member
 

Super sis nice epi 👍 👌 endha rudhran en eppdi pandran konjam porumaiya handle pannama eppdi andha ponna nogadikiraaney🙄 dei chathriyan mattum erundhana eneram neenga ellam gaali da 🤔🧐


 
Posted : July 21, 2026 7:34 am
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 11)

இந்த ருத்ரனும் விக்கிரமாதித்தன் மாதிரி விடாது சத்ரியனைப் பத்தி கேள்வி கேட்க ஷ்ரத்தா முன்னாடி வந்துடறான், அதைத் தடுக்கவே யதுநந்தனும் வேதாளம் மாதிரி பல முயற்சிகள் எடுக்கிறான், ஆனாலும் ஒண்ணும் வேலைக்கு ஆகலைப் பாருங்களேன்.
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியாகுமா...?

ஆனால் அந்த குழந்தை நல்லபடியாவே பிறந்திடும்ன்னுத்
தோணுது, ஏன்னா அது சத்ரியனோட குழந்தையாச்சே.

😊😊😊
CRVS (or) CRVS 2797


 
Posted : July 21, 2026 9:21 am
(@guna-sundari)
Posts: 56
Trusted Member
 

Omg. Sema twist. Ruthran u did a big mistake. U need this slap from yathu. U derserve it. Soon baby will born. Chatriyian will arrive soon. Very intresting sis.


 
Posted : July 21, 2026 9:28 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 49
Trusted Member
 

Rudhran enna chathriyan ah ne enga enga nu ketkuriyo avan mattum inga irundha unnoda nilamai enna aagi irukum nu theriyathu. 

Ne nallavan ah irundhalum avan atha pathi yosikavae matan yen na innaiku ne Shardha kita behave pannathu rombhavae thappu ava health condition ah pathi eduthu solli yum ne aval ah tension panni iruku ah andha uruthal unnaku yae iruku ah poi than ipadi silent ah iruku ah 


 
Posted : July 21, 2026 9:51 am
(@subhakumar85)
Posts: 44
Eminent Member
 

Porumai naa kilo yenna velai nu kepan pola.. soon chathriyan entry yethirpaakirom


 
Posted : July 21, 2026 12:23 pm
(@subhakumar85)
Posts: 44
Eminent Member
 

Porumai na kilo yenna velanu kepan pola. 


 
Posted : July 21, 2026 12:23 pm
(@kalidevi)
Posts: 56
Trusted Member
 

manasatchiye illa ruthran unaku evlo solloium unaku court order potum nee vidama ippadi kasta paduthura shradha va


 
Posted : July 21, 2026 3:15 pm
(@sabarimanju5gmail-com)
Posts: 5
Active Member
 

Nice 👍 sis


 
Posted : July 21, 2026 4:40 pm
(@kothaihari)
Posts: 54
Trusted Member
 

சூப்பர். .. குட்டி சத்ரியன் தான் ... ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ அது குட்டி சத்ரியன் மாதிரி இருக்கனும்....


 
Posted : July 22, 2026 2:33 am

Scroll to Top