Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-10

7 Posts
7 Users
3 Reactions
89 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#193]

அத்தியாயம்-10

    யதுநந்தனை சந்தித்ததிலிருந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது. அந்த இரண்டு நாட்களும் ருத்ரனின் மனம் அமைதியாக இல்லை.

யதுநந்தன் போட்டிருந்த நீதிமன்றத் தடை மற்றும் ஷ்ரத்தாவுக்கு ஏதாவது என்றால் உடனடியாக வந்து நிற்பதும் அவனுக்கு பிடிக்கவில்லை. 

   அது வேறு மனதில் உறுத்த, அன்று ஜான் சென்னை வந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. அந்த தகவல் கிடைத்த அடுத்த அரை மணி நேரத்திலேயே, ருத்ரன் சேகர் உதவியுடன் காரில் கிளம்பிவிட்டான்.

  ஜானின் வீட்டுக்கு அருகே இருக்கும் காபி ஷாப்பில் சந்திக்க பேசியிருந்தான்.‌ மாலை நேரம் என்பதால், லேசான கூட்டமாக இருந்தது. 

    கார் நின்றதும் ருத்ரன் இறங்கினான்.

அவனுடன் டிரைவர் சேகரும் உடன் வந்தான்.

"சார்... இவனும் நிரோஷ் மாதிரி எதுவும் தெரியாதுன்னு சொல்லிட மாட்டானே?" என்று சேகர் பூடகமாக கேட்டான்.

ருத்ரன் சிரிப்பில்லாமல், "தெரியல. ஆனா... ஒவ்வொருத்தனும் ஒரு சின்ன க்ளூவாவது விட்டுட்டு போறான்.‌ அந்த க்ளூவை சேர்க்கறது தான் நம்ம வேலை." என்றான்.

அவர்கள் நேராக கேன்டீனுக்குள் சென்றனர். முன்பே தகவல் கொடுத்திருந்ததால், ஜான் அங்கே காத்திருந்தான். ருத்ரனை பார்த்ததும் எழுந்து நின்றான்.

"குட் ஈவினிங் சார்." என்றான் மரியாதை நிமித்தமாக

"உட்காருங்க." என்றான் ருத்ரன்.

இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர். சேகரும் அமைதியாக கூடவே உளவு வேலையை செய்யும் நோக்கத்தில் அமர்ந்தான்.

சில நொடிகள் அமைதியாக இருந்தது. ருத்ரன் அவனை கவனித்தான்.

கொஞ்ச வருடங்களுக்கு முன்பு பார்த்த ஜானுக்கும், இப்போது எதிரே அமர்ந்திருந்த ஜானுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.

அப்போது இருந்த பயம் இல்லை. அவசரத்தனம் இல்லை.

பேச்சிலும் ஒரு முதிர்ச்சி தெரிந்தது. அதை உணர்ந்த ருத்ரன், "நீ மாறிட்ட போல..." என்று மெதுவாகச் சொன்னான்.

ஜான் சிரித்தான்.

"காலம் எல்லாரையும் மாத்திடும் சார். என்னையும் மாத்திடுச்சு."

ருத்ரன் தலையசைத்தான்.

"சரி... நேரா விஷயத்துக்கு வர்றேன். எனக்கு ஷ்ரத்தா சத்ரியனைப் பற்றி தெரிஞ்சிக்கணும். நீ அவங்களை பார்த்த முதல் ஒன்னுவிடாம நினைவுலயிருந்து சொல்லு.."

என்றதும், ஜான் ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்தான்.

"சார்... இப்போ நினைச்சா எனக்கே வெட்கமா இருக்கு. காலேஜ்ல ஷ்ரத்தாவை முதல் முதலா பார்த்தப்ப, நான் ரொம்ப ராகிங் பண்ணிருக்கேன். அழகாயிருக்கானு நெருங்க நினைச்சு, சத்ரியன் மூலமா சீட் கிடைச்சி வந்தானு தெரியவும் அவளை அவமானப்படுத்திருக்கேன்." என்றான்.‌

சத்ரியனால தான் சீட் கிடைச்சதுனு உனக்கு எப்படி தெரியும்?" என்றான் ருத்ரன்

"எங்க கசின் ஒருத்தனுக்கு அந்த மெடிக்கல் சீட் கிடைக்க பணமெல்லாம் தந்து வச்சான் சார். ஆனா... அந்த சீட் ஷ்ரத்தாவுக்கு கிடைச்சிருச்சு. அதனால ஆரம்பத்துல இருந்தே அவ மேல கோபமாயிருந்தான். அதனால தெரியும்." என்றான்.‌

"கோபமாவா.. ஓகே.. அதுக்கப்புறம்..." அவன் தயங்கினான்.

"சொல்லு." என்று ருத்ரன் அழுத்தமாகக் கூறினான்.

"சத்ரியன் சார் கேஸை... லாயர் திவாகர் வாதாடினதுக்குக் கிடைச்ச பரிசு தான் அந்த சீட்டுன்னு... தெரியாம, நானே கதை கட்டி பேசினேன்."

ருத்ரனின் கண்கள் கூர்மையானது.

"அதாவது... ஷ்ரத்தா... சத்ரியனோட ஆசைக்கு இணங்கினதால தான் சீட் வாங்கினான்னு... காலேஜ் முழுக்க நானே பரப்பினேன் சார்." என்று தலைகுனிந்து சொன்னான்.

ருத்ரனுக்கு கோபம் உண்டானது. "ஒரு பொண்ணை பத்தி அசிங்கமா பேசறதுக்கு முன்ன யோசிக்க மாட்டியா?" என்று கடிய, "சார் அது அப்ப.. அந்த நேரம் விவரம் இல்லை சார். நீங்க சொன்ன மாதிரி  மெச்சூரிட்டி இல்லாம நடந்துக்கிட்டேன்." என்றான். 

"அதுக்கப்புறம்... சத்ரியன் கார்டியன்னு தெரிந்தது. நான் அப்படி கேலி கிண்டல் பண்ணியது அவருக்கு தெரியவும், சத்ரியன் சார் என்னை அடிச்சார். 

  அடின்னா... சாவே கண்ணுக்கு தெரிஞ்சிடுச்சு சார்... ஏன் அவரை கிங்பின்னு சொல்லறாங்கன்னும், இனி ஷ்ரத்தா விஷயத்துல தலையிடக்கூடாதுன்னும் அன்னிக்கு புரிந்தது." என்றதும், வெயிட்டர் ஒருவர் வந்து "சார்... போலீஸ் வண்டி காபி ஷாப் முன்ன இருக்கு. பார்க்கிங் பண்ணிடுங்க சார். ப்ளீஸ்." என்று கோரிக்கை வைக்க, "சேகர் அதை கவனிங்க" என்று ருத்ரன் அனுப்பிட சேகர் வலுக்கட்டாயமாக எழுந்தான்.  

சேகர் செல்லவும், "சொல்லு" என்றான்.‌

  ஜானோ "அதான் சார்.. அதுக்கப்பறம் ஷ்ரத்தா பக்கமே போகலை. ஆனா நிர்மல் அடிக்கடி வந்து ஷ்ரத்தாவை ஒரு மாதிரி பார்த்தான். அவன் காலேஜ்ல படிக்கலை. ஆனாலும் ஆதிகேசவ் சாரோட ரிலேட்டிவ் என்றதால வருவான். அப்படி வர்றப்ப ஷ்ரத்தாவை கோபமா பார்க்கவும்." என்றதும் ருத்ரன் வெயிட் வெயிட்.. இந்த நிர்மல் ஆதிகேசவ்... பெயரை எங்கயோ கேட்டிருக்கேன்.‌ ஆங்.. அது.." என்று ருத்ரன் சிந்திக்க, "எங்க காலேஜ் ஹாஸ்பிடல் அட்மினிஸ்ரேட்டர் சார். நிர்மல் அவரிடம் பணம் தந்து சீட் கேட்டு அவர் ஏமாற்றியதா இரண்டு பேரும் அடிச்சிட்டு இறந்துட்டதா பேப்பர்ல கூட நியூஸ் வந்துச்சே" என்றதும், ருத்ரனுக்கு நினைவு வந்தது. ஷ்ர்ததா கல்லூரி என்றதும் அதெல்லாம் கூட பார்த்து செய்தியை கத்தரித்து வைத்திருந்தான்.‌

  அந்த கொலை கூட சாதாரணமாக தெரியவில்லை. ஒரு கைதேர்ந்த கொலையாளியின் வண்ணம் அக்கொலையில் இருந்ததே. 

  "அப்பறம்.. நிரோஷ் ஹாஸ்பிடல்ல இருந்தப்பிறகு கொஞ்ச நாள்ல இரண்டு பேரும் இறந்துட்டாங்க சார். 

  நிர்மல் இறந்ததை சொல்ல நினைச்சு ஷ்ரத்தாவுக்கு கால் பண்ணினேன். அவ 'ஓ.. அப்படியா.'னு கேட்டுட்டு வச்சிட்டா. நான் தான் என்னடா இது இப்படியொரு கொலையானு அதிர்ந்தேன். 

  மேபீ.. சத்ரியனோட இருந்ததால கொலை எல்லாம் அவ பார்த்து மூவ் ஆன் ஆகியிருக்கா. அதோட ஷ்ரத்தாவை காலேஜ் முடியவும் நல்லா படினு சொல்லிட்டு போயிட்டேன் சார். 

  இப்ப சத்ரியன் சாரையே போட்டு தள்ளிட்டா என்றதும் நம்ப முடியலை சார். அவளுக்கு அவர்னா ரொம்ப பிடிக்கும்" என்றான். 

  "இப்ப சிறையில என்ன பண்ணறாளோ? சந்திக்க ஆசையிருக்கு சார். ஆனா சத்ரியன் சார் அடிச்சது தான் நினைவிருக்கு. செத்துப்போன மனுஷன் பிறகு என்‌ ஷ்ரத்தாவை சந்திக்க வந்தியானு உயிரோட வந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை." என்றான்.‌

ருத்ரனுக்கு அந்தப் பேச்சு இனிக்கவில்லை. 

  வேறேதும் சொல்ல இல்லை சார்." என்றதும் சேகர் வரவும் சரியாக இருக்க, "ஓகே.. ஆர்டர் செய்த காபியை குடிச்சிட்டா கிளம்பு." என்று கூறிவிட்டு தனக்கு வந்த கோல் காபியை ஒரு மடக்கில் குடித்துவிட்டு எழுந்தான். சேகரும் அதே போல குடித்து ருத்ரனை பின் தொடர்ந்தான். 

ஜான் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ருத்ரனின் மூளையில் சுற்றிக்கொண்டே இருந்தது.

சேகர் "ஏதாவது சொன்னானா சார்" என்று கேட்க "வண்டியை எடுங்க சேகர்" என்று கத்தினான். 

  அதிலேயே சேகருக்கு எதுவும் ஆவதற்கு இல்லை என்று புரிந்து கொண்டு வண்டியை இயக்கினான்.‌

ருத்ரனோ 'நிர்மல்... ஆதிகேசவ்...' போனை எடுத்து, எஸ் நோட்டில் எழுதியதில் சிவப்பு வண்ணத்தால் தனித்து காட்டும் விதமாக மாற்றி அடிக்கோடிட்டிருந்தான்.

  அவன் கண்களில் பட்டது. "மருத்துவக் கல்லூரி மாணவன் நிர்மல் மரணம். மெடிக்கல் சீட்டிற்கு பல லட்சத்தை ஆதிகேசவிடம் தந்தும் சீட் கிடைக்காமல், அதே நேரம் பணமும் திரும்ப கிடைக்காமல் கோபத்தில் இருவரது கொலை நிகழ்ந்ததை சிந்தித்தான். 

ருத்ரன் புருவம் சுருங்கியது.

"ஒருவேளை..." என்று முணுமுணுத்தவன் மீண்டும் சிந்திக்க ஆரம்பித்தான். ஜான் செல்லியதில் நிர்மல் சீட்டை ஷ்ரத்தாவுக்கு கொடுக்கப்பட்டிருக்க, நிர்மல் கோபமாக கேண்டீனில் சுற்றி ஷ்ரத்தா சாப்பிடும் உணவில் விஷம் கலந்திருந்தால்.... 

நிரோஷ் விஷம் கலந்த உணவை சாப்பிட்ட சம்பவம், அதற்குப் பிறகுதான் நிர்மல் இறந்தான்.

அப்படியென்றால் ஷ்ரத்தாவை கொல்ல முயன்றது நிர்மலாக இருந்து, அதை தெரிந்துகொண்ட சத்ரியன் பழிவாங்கினானா?

அப்படியென்றால்... சத்ரியன் ஏன் அதற்கு முன்பே நிர்மலை கொல்லவில்லை?

ருத்ரன் ஆழமாக மூச்சை இழுத்தான்.‌ "இல்ல... ஏதோ மிஸ் ஆகுது." சேகர் காரை ஓட்டிக்கொண்டே,

"என்ன சார்?" என்று கேட்டான்.

  "காவல் நிலையத்துக்கு போ‌" என்றான்

காவல் நிலையம் வந்ததும்,

ருத்ரன் நேராக பழைய கேஸ் கோப்புகளை எடுத்தான். சத்ரியனை கொல்ல துப்பாக்கி சூடு நடந்தது ஏன் ஷ்ரத்தாவுக்கான குறியாக இருக்க கூடாது. அதென்ன ஷ்ரத்தா சேர்ந்த பிறகு கொல்ல துடித்தது? அவள் கல்லூரியில் சேரும் முன் சாகடிக்க திட்டமிட்டிருந்தால்? அப்பொழுது மனிஷாவிடம் விசாரணை செய்த விஷயமும் நினைவு வந்தது. 

  திவாகர் இறந்த சில நாளில் ஷ்ரத்தாவை கொல்ல ஆட்கள் வந்து அவள் சத்ரியனிடம் சென்று உதவி கேட்டது. 

  அப்படின்னா ஷ்ரத்தா தனியா இருந்தப்பவே கொல்ல முயன்று இருக்காங்க. 

  அதுயேன் ஷ்ரத்தாவை கொல்ல.. திவாகரை கொல்ல முயன்றதும் இநாத சீட் பிரச்சனைக்காக இருந்தா?' என்று யோசனை சென்றது. 

  தனது தந்தையை கொன்றவனோடு எந்த பெண்ணும் ஆசைக்காதலியாக இருக்க மாட்டாள். அதுவும் ஷ்ரத்தா போன்ற பெண் நிச்சயம் இருக்க மாட்டாள். அதை மீறி சத்ரியன் குழந்தையை ஈன்றெடுக்க துடிக்கின்றாளென்றால், சத்ரியன் அவளது தந்தையை கொன்றுயிருக்க வாய்ப்பில்லை. மாறாக ஆதிகேசவ் நிர்மல் யாராவது, திவாகரை கொன்றியிருந்து, அதன் காரணம் இருவரை கொன்றது சத்ரியனாக இருந்தால், ஷ்ரத்தா அவனோடு இணங்கி நடக்க வாய்ப்புண்டு.

திவாகர் இறந்த மருத்துவமனை. நிரோஷ் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தவன்,

ஒரே பெயரில் பார்வை நின்றது. இதில் நிரோஷ் உச்சரித்த ஸ்டெல்லா என்ற பெயர்.' ஸ்டெல்லா வேலை செய்த மருத்துவமனைக்கு காவல் நிலையத்தில் உள்ள போன் மூலமாக அழைத்தான். உடனே அந்த மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டான்.

தன்னை பற்றி அறிமுகம் செய்து "ஸ்டெல்லா நர்ஸிடம் பேசணும்." என்று கேட்டான்.

மறுமுனையில் இருந்த நிர்வாக அதிகாரி போலீஸ் என்றதும் பதிலளித்தார்.

"இல்ல சார்... அவங்க ரொம்ப  மாசமா வேலைக்கு வரலை." என்றதால அவங்களை வேலைவிட்டு எடுத்துட்டோம்." என்றார்.

"ஏன் வரலை?" என்றான்.

"அவங்களோட ஒரே பொண்ணு காணாம போயிட்டா. அதுக்கப்புறம் ரொம்ப மனசு உடைஞ்சு இருந்தாங்க. அப்புறம் திடீர்னு எங்கயோ போயிட்டாங்க. வீட்டுக்கு கூட போனோம். இப்ப வரைக்கும் எந்த தகவலும் இல்லை."

ருத்ரன் நிமிர்ந்து அமர்ந்தான்.

"வீட்டு அட்ரஸ் இருக்கா?"

"இருக்கு சார்." முகவரியை குறித்துக் கொண்டான். வீட்டிற்கு செல்லும் வழி என்பதால, சேகரை வரவேண்டாமென கூறிவிட்டான். 

சேகர் எப்பொழுதும் வீடு வரை கொண்டு விடுவான். சில நேரம் இன்று போல நானே போயிடறேன் என்பான் ருத்ரன். அதனால் ருத்ரன் போக கூறியதில் காரணம் கேட்கவில்லை. 

அன்று இரவு ஏழு மணி அளவில் ஸ்டெல்லாவின் வீட்டுக்குப் போனான்.

பழைய வீடு பூட்டு போட்டு இருக்கும் என்று எண்ணியதற்கு மாறாக வேறொரு குடும்பம் அங்கே இருந்தது. அவர்களுக்கு ஸ்டெல்லாவை தெரியவில்லை. 

  அருகில் இருந்த வீட்டுக்காரரிடம் விசாரித்தான்.

"ஸ்டெல்லா நர்ஸா? பாவம் சார்... நல்ல மனுஷி. ஞாயிறு சர்ச் தவறாம போவாங்க. ஊர்ல யாருக்காவது உதவி வேணும்னாலும் முதல்ல ஓடி வர்றது அவங்கதான். ஆனா... அவங்களோட பொண்ணு ஐரீன் காணாம போனதுக்கப்புறம் வாழ்க்கையே மாறிடுச்சு. உயிரோட நடைப்பிணமா இருந்தது. அதுக்கப்புறம் ஒரு நாள் வீட்டையே பூட்டிட்டு போயிட்டாங்க திரும்ப வரலை. வாடகை வரும்னு பார்த்து பார்த்து, ஸ்டெல்லாவும் தொடர்புக் கொள்ள முடியாம போகவும், ஹவுஸ் ஓனர் வீட்டுல இருந்த சாமானெல்லாம் வெளியே தூக்கிப் போட்டுட்டார். சிலதை அரை விலைக்கு வித்துட்டாரு." ருத்ரன் மெதுவாக கண்களை மூடினான்.

 ஆக ஸ்டெல்லா இல்லை.' என்றதும் மெதுவாக நடந்து வந்தான். ஸ்டெல்லா காணாமல் போன நாட்களும், சத்ரியன் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நாளும் இரண்டுமே கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தது.

'இது வெறும் தற்செயலா.. இல்ல... இதுக்குள்ள ஏதாவது தொடர்பு இருக்கா?' என்று மனதில் பெரிய கேள்விக்குறி போட்டான்.

   ஏதோ 'ஐரீன் குழந்தை.' என்றதும், ஷ்ரத்தா வாயிலிருந்து உதிர்த்த '126 குழந்தைகள்' என்றதும் தற்போது நெருங்கியது போல ஒரு மாயை. ஆனால் விடை அறிய வேண்டுமாயின் ஷ்ரத்தா வாய் திறக்க வேண்டும். இங்கே அவள் கல்லை திண்றவள் போல அல்லவா தன்னை எரித்து பார்ப்பாளென ஸ்டெல்லாவை தேட நினைத்தான். 

---

மறுபக்கம் யதுநந்தன் தனது அலுவலகத்தில் இருந்து தொடர்ந்து வினோத்துக்கு அழைத்துக் கொண்டிருந்தான்.

"The number you are calling is switched off." என்ற குரல் மட்டுமே திரும்பத் திரும்ப ஒலித்தது.

'எங்க போனாங்க.' என்று முணுமுணுத்தவன் கார்த்திகாவுக்கு அழைத்தான்.

"ஷ்ரத்தா கேட்டதுக்காக வினோத்தை தொடர்பு கொள்ள முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். ஆனா... ஒரு தடவைக்கூட லைன்ல கிடைக்கலை." என்றதும், கார்த்திகா அமைதியாகி விட்டாள்.

"பரவாயில்லை சார்.. நீங்களும் கைதி ஷ்ரத்தாவுக்காக ஏதாவது நல்லது செய்ய முயற்சி செய்யறிங்க. ஆனா கடவுள் முடிவெடுக்கணும் சார். பார்ப்போம்.. குழந்தை பிறக்கும் போது வினோத் வரலாம்" என்றாள். 

    யதுநந்தனோ ''என்னால முடிந்தவரை கான்டெக் பண்ணிட்டேன் கார்த்திகா. ஏனோ ஷ்ரத்தா கேட்கும் போது அவங்களை சந்திக்க வைக்க ஆசைப்பட்டேன். என்னால முடியலை. பார்ப்போம்.. நீங்க சொன்ன மாதிரி குழந்தை பிறந்தா வருவாங்க. அப்பறம் ஷ்ரத்தாவுக்கு ஏதாவது லேபர் பெயின்னா உடனே கால் பண்ணுங்க. வர்றேன்." என்றான். கார்த்திகாவும் ஓகே சார்"  என்று துண்டித்தாள். 

அதை ஷ்ரத்தாவுக்கும் தெரிவித்தாள். ஷ்ரத்தாவோ குழந்தை பிறக்க இன்னும் எத்தனை நாட்கள் உள்ளதென எண்ணி பார்த்தாள்.

-தொடரும். 

-பிரவீணா தங்காஜ்.


 
Posted : July 20, 2026 9:12 am
(@guna-sundari)
Posts: 56
Trusted Member
 

Super super. Sema twist. Still chatriyian is alive or not. We need to wait and watch. Very very intresting sis. 


 
Posted : July 20, 2026 9:33 am
(@dharsinipriya)
Posts: 59
Trusted Member
 

Super sis nice epi 👍 👌 😍 endha police ellathaiyum kandu pidichiduvaan polaye🙄 Vinoth ku enna Achu nu therilaiye😐 


 
Posted : July 20, 2026 11:20 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 49
Trusted Member
 

Police moolai ellathaiyum connect pannuthu stella ah ga nerungita Chathriyan saavuku pinnadi iruku ah karanam theriya vandhudum .

Vinoth number yen switch off nu yae iruku ivan enga ponan 


 
Posted : July 20, 2026 11:47 am
(@kalidevi)
Posts: 56
Trusted Member
 

super ruthran kitta nerungitta unnoda answer ku aana ithellam therinji next step ena pana pora vinoth enga poitan ena achi call reach agatha alavuku ena nadanthu iruku


 
Posted : July 20, 2026 12:49 pm
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 10)

அப்பாடா...! இ்ப்பத்தான் இந்த ருத்ரனுக்கு புத்தி ஒழுங்கா ஒரே நேர்கோட்ல வேலை செய்யுது போலயிருக்கு. இப்பத்தான் ஒவ்வொரு பாயிண்ட்டா பிடிச்சு  க்ளியர் அவுட் பண்ணிட்டிருக்கிறான். இதே வேகத்துல போனால், சத்ரியனை கயித்தை கட்டி தரதரன்னு இழுத்துட்டு வந்துடலாம் சரி தானே ?

😊😊😊
CRVS (or) CRVS 2797


 
Posted : July 20, 2026 1:26 pm
(@kothaihari)
Posts: 54
Trusted Member
 

அச்சோ வினோத்துக்கு என்ன ஆச்சு


 
Posted : July 22, 2026 2:25 am

Scroll to Top