Forum

மொஹபத் முதல் நிக்கா...
 
Notifications
Clear all

மொஹபத் முதல் நிக்காஹ் வரை-3

4 Posts
4 Users
1 Reactions
64 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#112]

அத்தியாயம்-3

"நன்றி கூறினால் நான் உங்களுக்கு மேலும் அருள் புரிவேன்."
-குர்ஆன் 14:7

"மென்மை இருக்கும் இடத்தில் அழகு இருக்கும்." -நபிகள் நாயகம்

துபாயில் பிரணவ் இரவு வைத்த அலாரம் சத்தம் அடுத்த நாள் காலையிலிருந்த அமைதியை உடைத்தது. பிரணவ் கண்களை மெதுவாக திறந்தான்.

    ஒரு நொடி எங்கே‌ இருக்கின்றோம் என்று புரியாமல் மேலே சீலிங்கை பார்த்தான்.
    அடுத்த நொடி "துபாய்ல... அச்சோ வேலைக்கு கிளம்பணும்" என்று மெதுவாக எழுந்தான்.

சூர்யா இன்னும் தூக்கத்தில் இருந்தான். அவனுக்கு அலாரத்தின் அலறல் சத்தம் எல்லாம் கேட்டது போல தெரியவில்லை.

பிரணவ் சூர்யாவின் உறக்கத்தை கெடுக்காமல், அமைதியாக எழுந்து, குளித்து, ரெடியானான்.

முதல் நாள் வேலைக்கு செல்வதால், முதல் இம்ப்ரஸன் முக்கியம் அல்லவா?!

துபாய்யின் காலை நேரம் இன்னும் வேறாக இருந்தது. ஜஃப்ரான் பேலஸ் ஹோட்டல் காலையிலும் பரபரப்பாக தோன்றியது.

இரவின் பிரகாசம் இல்லயென்றாலும், ஒரு விதமான அமைதியை மீட்டெடுத்தது.

ஸ்டாப் செல்லும் வழியில் பிரணவ் உள்ளே சென்றான்.
அங்கே புதிதாக இணைந்ததால் இன்னமும் ஐடி தராத பட்சத்தில் தற்காலிக நுழைவு கார்ட் இருந்தது. அதன் மூலமாக பெயர் பதிவு செய்து, கையெழுத்திட்டான்.

"நியூ ஜாயினா?" என்று செக்யூரிட்டி கேட்டான்.

"ஆம்.. அட இங்கயும் தமிழ்" என்று ஆச்சரியப்பட, "கிச்சன் ரைட் சைட்ல இருக்கு" என்று வழிகாட்ட, பிரணவ் உள்ளே நடந்தான்.

கிட்சன் டோர் திறந்த அந்த நொடி, ஒரு உணவிற்கான உலகமாக மாறி இருந்தது.

ஹீட், ஸ்டீம், மெட்டல் சத்தம், என்றதுடன் 'ஆர்டர் ரெடி, பாஸ்ட், மூவ், ஹரிஅப்' என்ற ஓட்டத்திற்கான வார்த்தைகள் செவியில் விழுந்தன.

பிரணவ் ஒரு நொடி அங்கே நின்றான். அவன் இதய துடிப்பு வேகம் எடுத்தது.
"ஹே... நியூவா?" என்றதும் சீப் செஃப் வந்தார். பிரணவின் தகுதியை பார்வையிட்டு, "ஓ... இந்தியன் புட், வெஜிடேரியன் ஸ்பெஷல் புட் செய்ய வந்தவனா? அப்ப வெஜிடபிள் செக்ஷன்ல போய் வேலையை ஆரம்பி. முதல்ல முதல் நாள் வெஜிடேபிள் கட் பண்ணு." என்றார். பிரணவ் முழித்து திரும்பிப் பார்த்தான்.

அவர் ஒரு சீனியர் செஃப் தான்‌.
"வாட்... என்ன என்‌ முகத்தையே பார்க்கற?" என்று கேட்க, "இல்லை சார்... இங்க இங்கிலிஷ் பேசுவாங்கனு பார்த்தேன். வந்ததிலருந்து தமிழ் பீப்பிளா பார்க்கறேன்" என்று ஆனந்தப்பட்டான்.‌

"ஷிட்.. இங்க இந்தியன் புட் கிச்சன் ரூமுக்கு வந்திருக்க மேன். இந்தியனா இருக்கறப்ப தமிழ் தெரியாம போகுமா? அதுவும் எஸ்ஸ்பெஷலி தமிழ் புட் ப்ரீப்பேர் பண்ண தான் ஆளை தேடி பிடிச்சது. சோ.. இங்க மோஸ்டா தமிழ் பீப்பிள் தான் கிச்சனில் இருங்காங்க. நான்-வெஜிடேபிள் செக்ஷன், அந்த கிச்சன் வேற. அதனால இங்க லாங்வேஜ் உங்க இஷ்டம் போல பேசலாம். ஆனா கஸ்டமர் சர்வீஸ் பண்ணறப்ப, மேனஜர், முந்தைய சீனியர்ஸிடம் பேசறப்ப இங்கிலிஸ் மஸ்ட். அன்டஸ்டாண்ட்..." என்றார்.

"ஓகே. ஓகே..சார்" என்றவனிடம், "வாட் இஸ் யுவர் நேம்" என்று கேட்க "பிரணவ் சார்" என்று கூறினான்.

"ஓகே.. கம் இயர். டைமுக்குள்ள நைஃப் ஹாண்டில் பண்ணி வெஜிடேபிளை கட் பண்ண தெரியுமா?" என்று கேட்டு ஒரு கூர்மையான கத்தியை தந்து, பிரணவ் முன் பல காய்கறிகளை வைத்து, குறிப்பிட்ட நேரத்தில் வெட்டிவிட கூறி கடிகாரத்தை பார்த்தார். பிரணவ் தனக்கான வேகத்தை அறிய கேட்பதால், மடமடவென காய்கறியை நறுக்க முனைந்தான்.

"ஸ்பீட் அப்" என்று செஃப் கூற வேகமெடுத்தான்.
லேசான பதட்டம், அதனால் ஏதேனும் தப்பும் தவறுமாய் நேர்த்தியின்றி காய்கறி வெட்டப்படக்கூடாதென கவனமாய் இருந்தான்.

ஒரே அளவில், காய்கறி துண்டு, அதே போல எந்த காய்கறி எப்படி நறுக்க வேண்டுமென்று ஆராய்ந்தவனாக சிலதிற்கு குட்டி குட்டியாக, சிலது நீளமாக, சிலதை பெரிதாக என்று வகைப்படுத்தி வெட்டினான்.

"பிரணவ் பாஸ்ட்" என்ற குரலில் அழுத்தம் ஆனது.

புது இடம், புது சூழல், லேசான பதட்டமும் ஒன்றிணங்க, இதில் வெட்பமான காற்று, அதிக
நீராவி, இதில் பயத்தில் தாண்டி வியர்வை என பிரணவ் கையை துடைத்தான்.

"போக்கஸ் பிரணவ் இப்படியா கையை துடைப்பாங்க. ஹாண்ட் கர்ச்சீப், ஆர் டிசு பேப்பர்ல துடைக்க வேண்டாம்?" என்று கத்தவும், அந்த நேரம் ஒரு பிளேட் கை தவறி விழும் நிலையில் ஸ்லிப்பானது.
பிரணவ் கவனமாய் உடனே பிளேட்டை பிடித்தான்.

"கேர்ஃபுல் பிரணவ்" என்றதும் "சாரி செஃப் லேசான பயம்" என்றதும், "பஸ்ட் டே என்பதால் பேனிக் ஆகாதிங்க. சில்" என்று தட்டிக் கொடுத்து நகர்ந்தார்.

அந்த ஒரு வார்த்தை பிரணவை கொஞ்சம் நிதானிக்க வைத்தது.
நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.

புதியவன் பழைய ஆட்களின்றி வேலைகள் கழுத்துவரை இருக்க, ஆர்டர் வந்தவண்ணம் இருக்கவும், பிரணவிற்கு நிற்க நேரமின்றி வேலைக்கான அழுத்தம் அதிகமானது.

மதிய உணவை கூட ஓய்வின்றி தான் ஸ்டாபிற்கான உணவு மேஜையில் சாப்பிட்டான். பீக் ஹவர்ஸ் என்று மீண்டும் மாலை வேலை கூடியது.

பிரணவ் கைகள் பெரிய பெரிய கரண்டி, பிடித்து அதை வைத்துவிட்டு இளைப்பாறவே முடியவில்லை.

அவன் தலையை தூக்கி சுற்றி பார்த்தான். அவனை போல பலரும் அப்படி தான், இங்கே பணியாற்றினார்கள். அவன் உள்ளுக்குள் சிரித்தான். 'ஓ இதுக்கு தான் அவசரமா விசா ஏற்பாடு செய்து வேலைக்கு எடுத்திருக்காங்க.' என்று புரிந்தது.
சீப் செஃப் மற்றவர் உணவை ருசி பார்த்து தட்டில் அலங்கரித்திட சம்மதம் அளித்ததும், தான் உணவு அலங்கரித்து வெளியே சென்றது.

இடையில் பிரேக் டைம் என்று நேரம் கிடைத்திட, நிதானமாய் சுவாசம் விடுத்தான்.

அடுத்து ஷிப் முறையில் ஆட்கள் மாறவும், பிரணவ் முதல் நாள் வேலையை இனிதாக முடித்துவிட்டு வந்தான். இரவு உணவு அவனுக்கு பார்சல் தந்திருக்க, அதையும் பெற்றுக் கொண்டான். செப் உடையை அகற்றி நார்மலாக உடையணிந்துக் கொண்டான்.

தங்கியிருக்கும் அறைக்கு செல்லும் வழியில் ஹோட்டல் லாபியில் பக்கம் நடந்தான்.
அங்கே அவள் தியானா.
அவள் வழக்கம்போலவே டெஸ்கில் அமைதியாக வீற்றுக்கொண்டு ஹோட்டலில் தங்குவதற்கான மற்ற விஷயத்தை தொகையை விவரித்தாள்.

சட்டென மற்றொரு பெண் வரவும் தியானா அவ்விடம் விட்டு வெளியேறினாள்.

'ஹலோ மிஸ்டர். வொர்க்கர்ஸ் ஏன் இந்த பக்கம் வந்திங்க? இது கஸ்டமர் வர்ற பாதை.' என்று ஆங்கிலத்தில் குரல், தன்னை பார்த்து சத்தமாக வரவும், தன் தற்காலிக அட்டையை மறைத்தபடி, "சாரி சார். தி சேம் மிஸ்டேக் வோண்ட் ஹாப்பன் அகைன்" என்று பணிவாக கூறி மறுபுறம் நடந்தான்.

'ஒரு பொண்ணை பார்க்கணும்னு நினைச்சி அசிங்கப்பட்டது தான் மிச்சம். இது எனக்கு தேவையா? நல்லவேளை அவ பார்க்கலை. ஆனாலும் அசிங்கமா போச்சு' என்று சுணங்கிக் கொண்டு நடந்தவன், அருகே "முதல் நாளே ரொம்ப வேலையா?" என்ற குரல்.

கருப்பு சீருடையில் முகம் மட்டும் தெரிய தலையை கூட மறைத்து நின்ற தியானாவே தான், இந்த முறை பர்தா முழுதா அணிந்து கேட்பதை யூகித்தான்.‌

இவன் கண்ணை தேடவும் முகத்திலிருந்த துணியை தலையில் மேல ஏற்றி வைத்தாள்.

"ஆமாங்க... வேலை அதிகம் தான். வெஜிடேரியனுக்கு இந்த அளவு வரவேற்பு இருக்கும்னு நினைக்கலை. நிதானமா மூச்சு விட்டு நிற்க கூட நேரமில்லாம பரபரப்பா போச்சு" என்று பேசினான்.‌

தியானாவோ "ம்ம்ம்.. அதுக்கு தான் அவசரமா இங்க உங்களை வரவழைச்சி வேலைக்கு சேர்த்தது." என்று புன்சிரிப்பை உதிர்த்தாள்.

பிரணவிற்கு அந்த அழகான புன்னகை ஈர்த்தது.

"நீங்களும் வந்துட்டிங்க?" என்று கேட்டான்.

"டே ஷிப்ட் வேலை சார். நைட் ஷிப்ட் ரிசப்ஷனுக்கு வேறொருத்தங்க வந்துட்டாங்க. கிளம்பிட்டேன். அன்னிக்கு நீங்க வந்தப்பவும் எனக்கு பதிலா வேற ரிசப்ஷன் பொண்ணு இருக்க வேண்டியது. அன்னிக்கு அவங்க லேட்டா வந்ததால் நான் எக்ஸ்ட்ரா நிற்க வேண்டியதா போச்சு. நான் எப்பவும் இதே டைமுக்கு கிளம்பிடுவேன்." என்றாள்.

"இ...இதே டைமா மேம்?" என்றான்.

"எஸ்.. சார்." என்று புறப்பட, பிரணவிற்குள் அவள் செல்லும் வழியை கவனித்தான்.‌

ஒரு டாக்ஸி வந்து அவளை அழைத்து சென்றது. பிரணவ் இரவு நேரம் என்பதால் தனது இடத்திற்கு செல்லும் முன் வேடிக்கை பார்த்துக்கொண்டு கொஞ்சம் தூரம் நடந்தான்.

தியானா டாக்ஸியில் ஏறியவள், 'இவர் டாக்ஸி புக் பண்ணாம நடக்கறார். எங்க நடந்து போறார். அவர் தங்கியிருக்கற இடம் தூரம் ஆச்சே. பச்... இடமெல்லாம் சௌகரியமா இருக்கானு கேட்கவில்லையே.' என்று தோன்றியது.

பிரணவ் ஆள் அழகா இருக்கார். இன்னமும் லேசான பயம் இருக்கு. அது அவர் முகத்தில் தெரியுது. இதுல என்னை குறுகுறுனு பார்க்கறாரோ?' என்று சிந்தித்தாள்.

'அட நாமளும் தான் அவரை அப்படி பார்த்தோம். முதல் முறை ரிசப்ஷன்ல வந்து பேசறப்ப, ஏதோ இந்த ஹோட்டலுக்கே சொந்தக்காரன் போல தோற்றம். அழகான வசீகரிக்கும் முகம். என்னிடம் வந்து பேசறப்ப என் சோர்வை கூட சட்டுனு களைந்து உற்சாகமா பேசினேன். என்ன தான் ரிசப்ஷன் பெண் என்றாலும் முகத்தில் கனிவு இருக்கும். ஆனால் அன்று ஒரு விதமான ஆர்வம் சூழ்ந்ததே.' என்று நினைத்து வரவும், டாக்ஸி நின்றது. தியானாவின் இறங்குமிடமும் வந்ததும், (பணத்தை)டிர்ஹாம் வழங்கிவிட்டு நடந்தாள்.

பல அடுக்கு மாடி கட்டிடத்தில் தான் தியானா வசிப்பது.
அவளுக்கென அப்பா அம்மா தங்கை மட்டுமே.

தந்தை நஸீர் ஒரு எண்ணெய் கிடங்கில் சூப்பர்வைஸராக உள்ளார். அம்மா பாதிமா ஹவுஸ் ஒய்ஃப்.

தங்கை தற்போது தான் பன்னிரெண்டாம் வகுப்பில் பயில்கின்றாள். தியானா பிறந்து பல வருடம் கழித்து நீண்ட இடைவெளியில், வயது வித்தியாசத்தில் பிறந்தவள் சஹ்ரா.

லிப்டில் மாடிக்கு வந்து சேர்ந்தாள்.
வீட்டு கதவை மெதுவாகத் தள்ளி திறந்து உள்ளே நுழைந்தாள் தியானா.
"அஸ்ஸலாமு அலைக்கும்..." என்று தான் வந்துவிட்டதை தெரிவிக்கும் பொருட்டு அன்னை பக்கம் பார்த்து குரல் கொடுத்தாள்.
அதுக்குள் சமையலறை பக்கம் இருந்து பாதிமா "வஅலைக்கும் சலாம், மொளே" என்றார் தியானாவின் அம்மா பாதிமா.
அந்த ஒரு வார்த்தையிலேயே
அம்மாவின் பாசமும் கவலையும் கலந்து இருந்தது.
தியானா தனது பேக்கை மெதுவாக சோபாவில் வைத்தாள்.
பர்தாவை அவிழ்த்து ஹாங்கரில் தொங்கவிட்டாள்.

"என்ன மொளே இன்னிக்கு லேட்டா வந்துட்டே... வேலை அதிகமா?" தியானா தாய் பாதிமா கேட்டுக்கொண்டே தோளை தீண்டினார்.
"ம்ம்ம்மா... ரொம்ப க்ரவுட் உம்மா... ஹோட்டலில் இன்னிக்கு அதிகப்படியான மீட்டிங் என்பதால் ஆட்கள் வந்துட்டே இருந்தாங்க." என்று தியானா சோர்வுடன் சிரித்தாள்.
"வா... முதல்ல கைய கழுவிட்டு வா. ஸ்னாக்ஸ் வைக்கிறேன்" என்றார் பாதிமா.
"சரி உம்மா..." என்று தியானா பதில் தந்தாள். அவள் கைகளை கழுவி வந்து டைனிங் டேபிள் அருகே அமர்ந்தாள்.

சாதாரண வீடு. சின்ன ஹால்.
பக்கத்திலே டைனிங் டேபிள்.
சுவரில் ஒரு கடிகாரம் மெல்ல ஒலித்துக்கொண்டே இருந்தது.
"சஹ்ரா எங்க?" என்று தங்கையை கேட்டாள்.
"அவ உள்ளே படிச்சிக்கிட்டு இருக்கா... நாளைக்கு டெஸ்டாம்" என்றார் பாதிமா.

"சஹ்ரா" என்று தியானா மெதுவாக கூப்பிட்டாள். அதுக்குள் அறையிலிருந்து ஓடி வந்தால் சின்னவள். "அக்கா வந்துட்டாங்களா!" என்றவள் முகத்தில் முழுக்க சந்தோஷம்.

"ஸ்னாக்ஸ் சாப்பிடலாம்னு கூப்பிட்டேன். உட்காரு. இன்னிக்கு ஸ்கூல் எப்படி போச்சு?" என்று கேட்டாள். இது வழக்கமாக முறை தான்‌. அக்கா தங்கை சிறிது நேரம் இன்றைய நாட்களை பற்றி பேசிக்கொள்வார்கள்.

"ஹம்... ஓகே தான் அக்கா. ஆனா மேத்ஸ் கொஞ்சம் கஷ்டமா இருக்கு" என்று சோகமாய் உரைத்தாள்.
"நான் ஃப்ரி ஆனதும் சொல்லி தர்றேன்" என்று தியானா சிரித்தாள்.
பாதிமா பிளேட் வைத்தபடி இருவரையும் பார்த்தார்.
"நீங்க இருவரும் முதல்ல சாப்பிடுங்க" என்றார்.

"வாப்பா இன்னும் வரலையா உம்மா?" என தியானா கேட்டாள்.

"இல்ல மொளே... இன்று கிடங்குல வேலை அதிகமா இருக்கும்னு சொல்லிட்டு தான் போனாரு..." என்று உம்மா குரலில் ஒரு சின்ன கவலை.
"ஹும்..." தியானா மெதுவாக தலையசைத்தாள்.

சஹ்ரா பேசிக்கொண்டே சிற்றுண்டியை சாப்பிட்டாள்.
"அக்கா... நீங்க வேலை பாக்குற ஹோட்டலில் புதுசா என்ன ஸ்பெஷல்" என்றாள்.

"ஸ்பெஷல் என்று எதுவும் இல்லை. ஆனா தமிழ் பேசற ஒருத்தரை சந்திச்சேன்" என்றதும் சஹ்ரா கண்கள் பெரிதானது. பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேசி மற்றவரிடம் உரையாடுவது தியானா வேலை. தமிழ் ஆட்கள் துபாயில் இருந்தாலும் ரிசப்ஷன் பணியில் ஆங்கிலம் மட்டுமே.

"அவர் ஹோட்டலில் வேலை செய்ய வந்த ஸ்டாப். நேத்து அறிமுகமாகி, இன்னிக்கு வேலையில் முதல் நாள் இணைந்துட்டார். அவரோட தமிழ்ல தான் பேசினேன். அவருக்கு அது சந்தோஷத்தை தந்திருக்கும் போல அவர் முகமே சொல்லுச்சு" என்று தியானா தன்னை அறியாமல் பிரணவ் பற்றி ஆர்வமாக சொன்னாள்.
"அப்படியா? ம்ம்ம் வேற வேற நாட்ல இருந்துட்டு நம்ம மொழியை கேட்கும் போது சந்தோஷம் வர்றது இயல்பு தான்." என்றார் பாதிமா.  லங்கையிலிருந்து துபாயில் இருக்கின்றார் தியானா குடும்பத்தகனர். நஸிர் வேலைக்காக வந்து வொர்க் பெர்மிட் ஆனதும் எக்ஸ்பெக்ட் ஆனவர். அதனால் பாதிமா நாட்டை விட்டு இங்கு வந்ததில் வருத்தமாக உரைத்தார்.

"என்ன வேலையில் சேர்ந்தார் அக்கா?" என்று சஹ்ரா கேட்க, "கிட்சன் வேலை பார்க்கறார். செஃப் போல." என்றாள்.
"நல்லா பேசினாரா?"
''ம்ம்ம்ம்மா... தமிழ் தானே.. அதனால ஆர்வமா பேசினார்."

தற்போது பிரணவ் என்ன பேசினான் என்று கேட்டால் தியானா விழிப்பாள். ஏனெனில் அவளுக்கு பிரணவ் பேசியது எதுவும் நினைவில் இல்லை. அவனது வசீகரிக்கும் முகம் மட்டும் கண்ணில் தோன்றி மறைந்தது.

"என்ன மொளே... என்ன யோசிக்கிறே?" என்று பாதிமா
உம்மா கேட்டார்.
''ஒன்னும் இல்ல உம்மா..." என்று அவசரமாய் மறுத்து சிரித்தாள்.
"சாப்பிடு... குளிர்ந்துடும்..." என்று நினைவூட்ட சிற்றுண்டியை விழுங்கினாள்.

சஹ்ரா மீண்டும் புத்தகம் எடுத்து படிக்க அமர்ந்தாள். உம்மா சமையலறை பக்கம் போனார். தியானா சற்று பின்சாய்ந்து அமர்ந்தாள்.

வாப்பா இன்னும் வரவில்லை என்பதால், அவள் கண்களை மூடினாள். உம்மா தந்த சிற்றுண்டியால், ஒரு நாள் முழுக்க இருந்த சோர்வு
மெதுவாக உடலை விட்டு வெளியேறியது.

பிரணவ் பற்றி பேசியதில் கூடுதல் உற்சாகம் வந்ததை அறியாதவளாக இருந்தாள் தியானா.

-தொடரும்


 
Posted : June 28, 2026 7:33 pm
SOURABH reacted
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

மொஹபத் முதல், நிக்காஹ் வரை!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 3)

பிரணவ் நினைக்கிறானோ, இல்லையோ பட்... தியானா பிரணவ்வை ரொம்ப நினைக்குறாளோ...? ஆனா,
துபாயில ஒரு முஸ்லிம் பொண்ணு தமிழ் பையனை காதலிக்க விட்டுடுவாங்களா என்ன ?

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : June 28, 2026 8:40 pm
(@Guna Sundari)
Posts: 9
 

Wonderful narration sis. Indian workers are welcomed by all over the world. Becz of their hardwork and talent. Very intresting sis 


 
Posted : June 28, 2026 10:21 pm
(@sourabh)
Posts: 5
Active Member
 

INTERESTING . WAITING FOR THE NEXT


 
Posted : July 2, 2026 8:10 pm

Scroll to Top