மொஹபத் முதல் நிக்காஹ் வரை-2
அத்தியாயம்-2
"அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பின்பற்றுபவர்களுக்கு பயமில்லை." -குர்ஆன் 2:38
"உண்மையான செல்வம் மன திருப்திதான்." -நபிகள் நாயகம்
பிரணவ் பதட்டத்தை மறைத்தவனாக 'மேனேஜர் அன்வர்' என்று எழுதிய கதைவை பார்த்து "May I come in, sir?" என்று கதவை மெதுவாக தட்டியபடி பிரணவ் கேட்டான்.
"கம் இன்" என்றது ஆளுமையான குரல். பிரணவ் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். அறை முழுக்க நேர்த்தியான அமைப்பு. கண்ணாடி மேசை துடைத்து வைக்கப்பட்டு சுத்தமாக காட்சிக்கு இருந்தது. அதன் மேல் நாலைந்து கோப்புகள் அடங்கியிருந்தது.
ஒரு பக்கம் துபாயின் அழகு. தெரிய, அந்த மேசையின் முன்னால் அமர்ந்திருந்தார் மேனேஜர் அன்வர்.
மூக்குக்கண்ணாடி கீழே சரிய வைத்தபடி, பிரணவின் அப்பாயின்மெண்ட் லெட்டரை பார்த்துக் கொண்டிருந்தார்.
"பிரணவ் ரைட்..."
"யெஸ் சார்…"
"டேக் யுவர் சீட்" என்றார்.
பிரணவ் மெதுவாக நாற்காலியில் அமர்ந்தான். கைகளை ஒன்றாகப் பிடித்தபடி பதட்டத்தை மறைத்தான்.
அந்த சில விநாடிகள் பிரணவின் இதயத் துடிப்பு தான் அவனுக்கு கேட்கும் அளவுக்கு இருந்தது. மேனேஜர் பிரணவின் பைலை மூடினார்.
"யுவர் பிரப்பைல் இஸ் குட்" என்று ஒரு சின்ன இடைவேளையுடன், "யு ஹேவ் எக்ஸ்பீரியன்ஸ். தட்ஸ் ரியலி குட்." பிரணவ் ஆமென்பது போல தலையசைத்தான்.
"பட் பிரணவ்.." என்றவர் பிரணவ் முன் குனிந்து சொன்னார். "டிசிபிளின் இஸ் எவரிதிங். இங்க அதை அதிகமாவே எதிர்பார்ப்போம்." என்ற வார்த்தை சற்று கனமாக விழுந்தது. "இன் அவர் கிட்சன். நம்ம ஹோட்டலில் கஸ்டமருக்கு புட் ரெடிப் பண்ணறதுல டிலேவே இருக்க கூடாது. வேலையில் சுத்தமும் சுகாதாரமும் இருக்கணும். நம்ம சர்வீஸ் தான் நமக்கான கஸ்டமரை தேடி வரவைக்கணும். ஒரு சின்ன பிளாக் மார்க் கூட வராம பார்த்துக்கோங்க. மோஸ்டா துபாய் என்றதும் நான்வெஜ் ஸ்பெஷலா இருக்கும். நம்ம ஹோட்டலில் வெஜ் ப்ரியர்களுக்குனு தேடி தேடி பெஸ்ட் குக்கிங் ஆட்களை தேடி நியமிக்கறோம்." என்று அவரும் தமிழர் என்பதால் தமிழில் கதைக்க, பிரணவ் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான்.
"இங்க மிஸ்டேக்.. ஆர் நாட் அக்சப்டபிள் அதை மட்டும் எப்பவும் மனசுல பதிய வச்சிக்கோங்க" என்று மீண்டும் கூற பிரணவ் மனசுக்குள் ஒரு அழுத்தத்தை உருவாக்கியது.
"கேன் யு ஹாண்டில் தட்?" என்றார் நேரடி கேள்வியாக. பிரணவ் ஒரு நொடிக்கு மூச்சை ஒழுங்குபடுத்திக் கொண்டான்.
"எஸ் சார்.. ஐ வில்" என்றதும்
மேனேஜர் அவனை ஒரு நொடிக்கு குறைவாக பார்த்தார்.
அந்த பார்வை பிரணவை அளந்தது போல இருந்தது
"குட்." என்றவர் சற்றே சாய்ந்து அமர்ந்தார்.
"டுடே டேக் ரெஸ்ட் பிரணவ். டிராவல் பண்ணி வந்ததில அலைச்சல் உண்டு. டுமாரோ ஜாயின் பண்ணிக்கோங்க. அப்பறம் மத்த பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிச்சிடுங்க. ஹோட்டல் கம்பெனியே சீனியர் செஃப்னா ரூம் நாங்களே அலார்ட் பண்ணுவோம். பட் நீங்க புதுசு என்பதால இப்பொழுது ஸ்டாப் அக்கமண்டேஷன்ல ரூம் கிடைக்கும். அதுல தங்குங்க." என்றதும் பிரணவ் கண்களை உயர்த்தி கவனமாய் கேட்டுக் கொண்டான்.
"ஓகே சார்" என்று பதிலிட்டான்.
"வெல்கம் டூ ஜஃப்ரான் பேலஸ் ஹோட்டல்" என்று அதன் பின் வாழ்த்தினார்.
முகமலர்ந்து பிரணவும் "தேங்க்யூ சார்" என்று கூறினான்.
பிரணவுக்கு ஒரு தொடக்கம் கிடைத்திட எழுந்தான். "டூ யுவர் பெஸ்ட்" என்றதும் "சூர் சார்" என்று பிரணவ் மெதுவாக வெளியே வந்தான்.
அந்த கதவை மூடிய நொடியில், ஒரு ஆழ்ந்த மூச்சை விட்டான். "ஹூஃப்" அவன் உள்ளுக்குள் சிரித்தான்.
தனக்கான வேலை நாளை ஆரம்பமாகுமென தற்போது அவன் மீண்டும் லாபி நோக்கி நடந்தான்.
அங்கே அதே ரிசப்ஷன் பெண் தியானா. அவளிடம் அதே அமைதி. அதே மென்மையான முகம்.
அவள் வழக்கம் போலவே வேலைக்குள் மூழ்கியிருந்தாள்.
கணினியில் கவனமும், எதிரே ஹோட்டலில் வந்து நின்றவருக்கு தகவலும் கூறி சிரித்துப் பேசினாள்.
அவர்கள் சென்றதும் பிரணவ் அருகே நின்றதும், அவள் தலை தூக்கினாள்.
"என்ன சார் எல்லாம் முடிந்ததா?" என்ற உற்சாக குரல். "எஸ் மேம்" என்று பிரணவும் சிரித்தான்.
"நாளைக்கு ஜாயின் பண்ண சொல்லிட்டாங்க… இப்ப ரூம் போக சொல்லி ரிலாக்ஸ் பண்ணிட சொன்னாங்க. நாளையிலருந்து வேலை ஆரம்பம்" என்றான். "வெரி குட்" என்றாள்.
"அப்பறம் ரொம்ப தேங்க்ஸ்... இங்க வந்ததும் லேசா தயக்கம். நீங்க கனிவா பேசி உதவி பண்ணியதுல ரிலாக்ஸ் ஆச்சு. அதுவும் தமிழ்ல." என்றதும் அவள் ஒரு நொடிக்கு அவனை பார்த்தாள்.
"தேங்க்ஸ் எல்லாம் மென்ஷன் பண்ண வேண்டாம் சார். இட்ஸ் மை டூயூட்டி." என்று அவள் மீண்டும் சிரித்தாள்.
அந்த சிரிப்பு இம்முறை சற்று இயல்பாக இருந்தது. அதை ரசித்திட, இடைஞ்சலாக பெல்பாய் லக்கேஜை கொண்டு வந்தான்.
"சார் யுவர் லக்கேஜ்" என்றதும் பிரணவ் திரும்பி பார்த்தான்.
"தேங்க்யூ" என்றவன் கைப்பிடியைப் பிடித்தான். இன்று வந்ததிலிருந்து அருமையாக நேரம் செல்கின்றது என்றதும், ஒரு நொடி அவன் தியானாவை பார்த்தான். அவளும் அதே நேரம் அவனை பார்த்தாள்.
அந்த பார்வை ஒரு நொடி மட்டும் பிரணவை புரட்டி போட்டது. உடனே அவள் கண்களை கணினி பக்கம் திருப்பினாள்.
பிரணவ் மெதுவாக திரும்பி நடந்தான். லாபி கதவை நோக்கி.
இன்று வந்ததும் துபாயில் அறிமுகமான முதல் பெண் பெயர் தியானா. அந்த பெயரை அவன் மனதில் மெதுவாக உச்சரித்து வெளியே நடந்தான்.
ஜஃப்ரான் பேலஸ் ஹோட்டலின் கண்ணாடி கதவுகள் பின்னால் மூடியது. அவன் அறியாமல்
அந்த கதவுக்குள் அவன் வாழ்க்கையின் முக்கியமான கதவு திறக்கப்பட்டது.
முதல் இரவு, துபாய் ஜஃப்ரான் பேலஸ் ஹோட்டல் முன் நின்ற கம்பெனி வேனில்
பிரணவ் அமைதியாக ஏறினான்.
பெல்பாய் காட்டிய வழியில் வேன் இருக்க, 'ஸ்டாப் அக்கமண்டேஷனுக்கு இந்த வண்டில போங்க சார்" என்று கூற பிரணவ் தலையசைத்தான்.
நகரத்தின் மின்னும் விளக்குகள் மெதுவாக பின்னால் சென்றது.
அந்த லக்ஸரி ஹோட்டல் உலகத்திலிருந்து, இது வேறொரு வாழ்க்கை போல.
சில நிமிடங்களில் வேன் ஒரு அப்பார்ட்மெண்ட் பில்டிங் முன் நின்றது.
சிம்பிள் பில்டிங், பெரிதாக கிராண்ட் வெளிச்சம் லக்ஸரி என்றில்லாமல் அவனை வரவேற்றது. 'இதுதான் இப்படி தான் அமையுமென' அவன் உள்ளுக்குள் நினைத்தான். அவன் லக்கேஜை தற்போது அவன் எடுத்துக்கொண்டு உள்ளே நடந்தான்.
கார்டினரியில் சற்றே அமைதி. சில கதவுகள், சத்தங்கள். ஒரு இடத்தில் சிரிப்பு. மற்றொரு இடத்தில் டி.வி சத்தம். ஒவ்வொன்றாக செவியில் கேட்டபடி, ரூம் நம்பரை தேடி கதவைத் தட்டினான்.
டக்… டக்… "யா கம்மிங்" என்று கதவு திறந்து, ஒரு இளைஞன் ஷார்ட்ஸ் டீஷர்ட்ஸ் என்று கேஸுவல் உடையில் வந்தான்.
யாரென பார்த்து புருவம் சுருக்க, "ஜஃப்ரான் பேலஸ் ஹோட்டல்ல நியூ ஜாயின். ரூம் இங்க தான் தந்திருக்காங்க" என்று பழக்க தோஷத்தில் தமிழில் கூறியவன் அதன்பிறகே ஆங்கிலத்தில் பேச முயல, "ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். நான் தமிழ் தான். சிவகாசி பக்கம். நீங்க?" என்று லக்கேஜை இழுத்து அறையிலிருந்தவன் வரவேற்றான் சூர்யா.
பிரணவ் சிரித்தவன் "பரவாயில்லை வந்ததிலருந்து கஷ்டப்பட்டு இங்கிலிஷை பேசணும்னு வந்தேன். ஆனா பார்க்கற நபர் எல்லாம் தமிழ். சாரி.. என்ன கேட்டிங்க. ஊரா.. நான் சென்னைங்க" என்று கூறினான்.
"பேர் என்ன?" என்று கேட்க "பிரணவ்... நீங்க?" என்று கேட்டதும், "சூர்யா" என்று நட்புடன் கையை குலுக்கிக் கொண்டார்கள்.
அறை என்னமோ சின்னதா இருந்தது. இரண்டு மெத்தைகள், ஒரு பொதுவான கப்போர்ட், டேபிள் இருக்க பார்வையிட்டான்.
"ஆமா நீங்க எந்த டிபார்ட்மெண்ட்?" என்று சூர்யா கேட்க, "செஃப்ங்க... கிட்சன் டிப்பார்ட்மெண்ட்." என்றான் பிரணவ்.
"ஓ... அப்ப நல்ல சமைப்பிங்க." என்று மகிழ "நீங்க" என்று பிரணவ் சூர்யாவை பார்த்து கேட்டதும், "க்ளீனிங் டிப்பார்ட்மெண்ட்ங்க.. ரூமை நீட்டா வச்சதுலயே தெரியலையா. ஹோட்டலில் ரூம் இன்டீரியர் டிசைனர். அறையெல்லாம் க்ளினிங் பண்ணறவன்" என்று சிரித்தான்.
"ஆமா... இன்னிக்கு வேலைக்கு போகலை?" என்று பிரணவ் சூர்யாவை பார்த்து கேட்க, "கொஞ்சம் உடம்பு முடியலைங்க லீவு சொல்லியிருக்கேன்." என்றதும், பிரணவ் தயக்கமாய் தன் உடமையை எடுத்து அடுக்கினான்.
"ஷையா இருக்கா... அதெல்லாம் அட்ஜெஸ்ட் ஆகிடுவிங்க" என்றதும் ஒரு நெருக்கம் கூடியது.
"டின்னர் ஏதாவது சாப்பிட்டிங்களா?" என்று கேட்க,
"இல்ல" என்றான் பிரணவ்.
"ஸ்டாப்கு மெஸ் கீழே இருக்கு.
ஆனா இப்ப அன்டைம் நைட்னா டின்னர் ரெடியாயிருக்கும்." என்றான்.
"பரவாயில்ல… நான் வந்ததும் சாப்பிட கப் நூடுல்ஸ் கொண்டு வந்திருக்கேன். உங்களுக்கு ஓகேன்னா நாம இங்க இப்ப சாப்பிடலாம். வெந்நீர் மட்டும் கொதிக்க வைக்க கெட்டில் யூஸ் பண்ணிடலாம்" என்று கூற சூர்யா சம்மதிக்க பிரணவ் சிரித்தான்.
"சரி… ப்ரஷ் ஆகிட்டு வர்றேன்" என்று பிரணவ் குளிக்க ஓடினான்.
அடுத்து பிரணவ் மடமடவென நூடுல்ஸை நீரில் கொதிக்க வைத்து சூடாக கிளறினான். எப்பேற்பட்ட செஃப்பாக இருந்தாலும் பசிக்கின்றது என்றதும் உடனே கையில் எடுப்பது இந்த இரண்டு நிமிட நூடுல்ஸ் வகை தானே.
பிரணவ் குளித்து முடித்து வந்து சிம்மை மாற்றிவிட்டு, அன்னை மகாலட்சுமிக்கு தகவல் அளித்தான். இங்கு பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டதாக. நாளை தினம் வேலைக்கு செல்ல வேண்டும் என்றும் அடிக்கடி பேசாவிட்டாலும் நடுநடுவே அழைத்து பேசுவேன் என்று கூறினான்.
அப்படியே அண்ணன் அண்ணியிடம் தெரிவித்திட கூறினான். அதன்பின் போனை வைத்துவிட்டு, சூர்யாவிடம் கதை அளந்தான்.
சென்னையில் கேட்டரிங் முடிச்சி நளபாகம் நல்லா வரும்னு பெரிய பெரிய ஹோட்டலில் வேலையில் இருந்ததாகவும், தற்போது துபாயில் ஒருவர் மூலமாக வேலை கிடைத்து, அண்ணன் நிர்மல் உதவியுடன் கடன் வாங்கி இங்கே வந்ததை தெரிவித்தான் பிரணவ்.
சூர்யாவோ சிவகாசியில் இரண்டு தம்பி ஒரு தங்கை இருக்க, சூர்யா இங்கு வேலைக்கு வந்ததாக தெரிவித்தான். பேச்சில் நெருக்கமாக மாறினார்கள்.
"நாளைக்கு வேலைக்கு எத்தனை மணிக்கு போகணும்?" என்று சூர்யா கேட்க, "9 மணிக்கு மார்னிங். நேரம் கடத்தாம, சுத்தமா, நேர்மையா இருக்கணும்னு மேனேஜர் அட்வைஸ். லேட்டாகாம பார்த்துக்கணும்." என்று பயந்தான் பிரணவ்.
"புது இடம் சிலருக்கு தூக்கம் வராது. பட் பயண களைப்புல தூங்கிடப்போற. எதுக்கும் அலாரம் வச்சி தூங்கிடறது பெட்டர்." என்று சூர்யா அனுபவஸ்தனாக கூறினான்.
பிரணவ் அதை ஏற்றவனாக, படுக்கையில் உறங்க சென்றான்.
சில நிமிடங்களில் களைப்பில் தூங்கிவிட்டான். அறையே அமைதியானது. பேனின் சத்தம் மட்டும் பிரணவ் செவிக்கு கேட்டது.
ஒவ்வொரு ஆண்மகனும் பணத்தை தேடி, திறமைக்கான அங்கீகாரத்தை தேடி அலைகின்றான். தனக்கு மேலுள்ள அதிகார ஆட்களுக்கு அடிப்பணிந்து, அமைதிக்காத்து, தன் பணியை தன் அளவிற்கு சரியாக செய்து ஊதியம் வாங்குகின்றனர்.
ஏனோ தனக்கு முன்பு இல்லாத அதிர்ஷ்டம் ஏதோ கூடவே வருவதாக பிரணவ் உணர்ந்தான்.
அன்னை மகாலட்சுமி, அண்ணன் அண்ணியோடு, பேரனை கவனித்து கொள்வதில் இருக்கின்றார்.
தனக்கு ஒரு திருமணம் செய்ய ஆவலாக இருக்கின்றார். ஆனால் இந்த நேரம் இந்த ஆஃபர் வந்து துபாயில் பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டலில் செஃப்பாக நிற்பதில் பெருமையாக இருந்தான்.
எப்படியும் தனது நளபாக திறமைக்கு விரைவில் நல்ல முன்னேற்றம் வருமென நம்பினான்.
அப்படி வருவதற்கான அறிகுறியாக தான் இங்கு விமானத்தில் ஏறி இறங்கியதிலிருந்து நல்ல நல்ல மனிதர்களை சந்திக்கின்றான்.
முதலில் இமிக்கேரஷன் இடத்தில் ஒருவர், அடுத்து, டிரைவர் அதற்கடுத்து தியானா..
தியானா.. இன்றைய சந்திப்பில் முதல் பெண். பெயர் தெரிந்து அறிமுகமானவளும் கூட, இதில் கனிவான அழகு, கு
ணம், சாந்தமான முக அமைப்பு, என்று இமை மூடியவனுக்குள் தியானா பிம்பம் தெள்ளத்தெளிவாக மனதில் நங்கூரமாக இறங்கியது.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
-
மொஹபத் முதல் நிக்காஹ் வரை-8
1 week ago
-
மொஹபத் முதல் நிக்காஹ் வரை-7
1 week ago
-
மொஹபத் முதல் நிக்காஹ் வரை-6
3 weeks ago
-
மொஹபத் முதல் நிக்காஹ் வரை-5
3 weeks ago
-
மொஹபத் முதல் நிக்காஹ் வரை-4
3 weeks ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
