Forum

மொஹபத் முதல் நிக்கா...
 
Notifications
Clear all

மொஹபத் முதல் நிக்காஹ் வரை-5

4 Posts
4 Users
1 Reactions
69 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#138]

அத்தியாயம்-5

அல்லாஹ் சுமத்தும் சுமை மனிதனால் தாங்கக்கூடியதே.

-குர்ஆன் 2:286

மனிதர்களில் சிறந்தவர் மனிதர்களுக்கு உதவுபவர்.

-நபிகள்

காலை அலாரம் அடித்தவுடன், வழக்கம் போல பிரணவ் கண்களை திறந்து உடனே எழுந்தான்.

சூர்யா இன்னும் பாதி தூக்கத்தில் இருந்தான்.

"சூர்யா... எந்திரிக்கலை?" என்று சொல்ல திரும்பிப் படுத்துக் கொண்டே, "எந்திரிக்க முடியலையே.. நேத்து ஒய்ப் கூட ரொம்ப‌ நேரம் சாட் பண்ணினேன். லேட்டா தான் தூங்கினேன். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேன்." என்றதும் பிரணவ் சிரித்துக்கொண்டு தயார் ஆனான். மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு தனியாக நாட்டில் வேலை பார்க்கும் கணவர்களின் நிலை தான் சூர்யாவுக்கு. இரவெல்லாம் போனில் மணிக்கணக்கில் பேசிவிட்டு கண்ணயர்ந்தான்.

நெடுநேரம் தியானாவை பற்றி யோசித்த பொழுது திரும்பி படுத்த சமயம், சூர்யா போனுடன் கொஞ்சிக்கொண்டு சிரித்ததை கண்டவனாயிற்றே. அதனால் உறங்கட்டுமென குளித்து தயாரானான். 

கிளம்பும் பொழுது தான் மீண்டும் சூர்யாவை எழுப்பிவிட்டு சென்றான்.

இம்முறை வொர்க்கர்ஸ் சொல்லும் வழியில், கிச்சன் கதவைத் திறந்தவுடன், அந்த பழக்கமான முகங்கள் யாராவது தென்படுகின்றனரா என்று தேடினான். ஆனால் யாரும் பழகிய முகமாக இல்லை. 

அவனுக்கு முன்னே சீனியர் செஃப் நடமாடி மற்றவர்களை மேற்பார்வையிட்டவாறு வந்தவரை கண்டு புன்னகையுடன், "குட் மார்னிங் செஃப்" என்று சொன்னான்.

"மார்னிங்" என்று சீனியர் செஃப் சொன்னார்.

ஏதோ இன்று மற்ற நாட்களை விட கூடுதலாக ஆட்கள் உள்ளதாகவும், விஐபி கெஸ்ட் எல்லாம் வந்திருப்பதாகவும், உணவை ஹோட்டலை தவிர்த்து, அறைக்கு சென்று சர்வ் செய்ய கட்டளைகள் பிறப்பித்தார். 

அதற்காக சீனியர் செஃப்பே சிலதை அவர் கையால் சமைத்தார். அதுவொரு ஸ்பெஷல் டிஷ்,

வெளிநாட்டு விஐபி கெஸ்டிற்கான ஆர்டரில் சீனியர் செஃப் தயாரிக்கும் பொழுது சாஸ் கன்சஸ்டன்ஸி கொஞ்சம் மாறி இருந்தது.

ஏதோ சரியில்லை என்று சீனியர் செஃப் எரிந்து விழுந்து எப்படி எப்படியோ சரிசெய்ய முனைய, தோல்வியை சந்தித்தார்.

அங்கே சில செஃப் ஏதோ சுவை சரியில்லை என்றதால் சீனியர் செஃப் கோபமாக உள்ளதாக கிசுகிசுத்தார்கள். 

பிரணவ் அதை கவனித்தான். ஒரு நொடி தயக்கமிருந்தது.

'இப்ப சொல்லலனா பிறகு இன்னமும் சுவை மொத்தமாய் கெட்டுவிடுமென யோசித்தான். மேலும் சீனியர் செஃப்புக்கு தான் வந்து, ஏதாவது சொன்னால், அவரது ஈகோ காயமாகுமோ என்றும் பயந்தான். 

அவன் மெதுவாக சீனியர் செஃப் அருகே சென்றான்.

"செஃப்..." என்று அழைக்க, 

"கீப் கொயிட். ஐ ஹேவ் குக்டு" என்றார்.

"சாஸ் கொஞ்சம் திக் ஆகிட்ட மாதிரி இருக்கு... லேசா டிலியூட் பண்ணலாம்னு தோணுது. உங்களுக்கு தெரியாதது இல்ல. பட் நீங்க விஐபி கஸ்டமர்குனு செய்யற பதட்டத்தில் கவனிக்காம இருக்கலாம். ஏதாவது தப்பா சொல்லியிருந்தா சாரி செஃப்" என்று கூறிவிட்டு இரண்டடி பின் நகர்ந்தான்.

அங்கே ஏதோ பிரணவ் கூறியதாக சில நொடி அமைதியானது.

சீனியர் செஃப் அவனை மேலும் கீழும் பார்த்தார். பிறகு அவர் செய்ததை தனிப்பட்டு ஸ்பூன் எடுத்து உணவை சுவைத்து பார்த்தார். பிரணவ் கூறியது போல தான் இருந்ததை இம்முறை கவனித்தார்

சில விநாடிகள் அவர் சின்னதாக தலையசைத்தார். பிரணவ் கூறியதை ஏற்றதாக இருந்தது அவரது செய்கை.

விஐபி உணவை சரிசெய்து ருசித்து சரியானதாக கூறி அதை அலங்காரம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டு பிரணவை கண்டு

"குட்" என்றவர் பிரணவ் தோளில் தட்டி அப்ரிசேட் செய்யும் விதமாக நகர்ந்தார்.

அந்த ஒரு வார்த்தை, பிரணவ் உள்ளுக்குள் அத்தனை மகிழ்ச்சியை தர, மற்றவர்களுக்கோ ஓர் அறிமுகம் போல விழுந்தது.

அவர் அதை சரி செய்து, டிஷ் பைனலிஷ் செய்த பக்கத்தில் இருந்த ஒருவர் மெதுவாக சொன்னார். "Even if you're new to cooking, you need to be meticulous and be a good chef" என்று பாராட்டிட, பிரணவ் சிரித்தான்.

ஆம்... புதிதாக வேலைக்கு சேர்ந்தவனாக இருந்தாலும் நல்ல செஃப் என்ற பெயரை புதிதாக ஒருவர் பாராட்டும் படி நடந்துள்ளதில் ஒரு பெருமை.

மெல்ல அந்நாள் முழுதும் அந்த இடத்தில், அவனை வேறு மாதிரி பார்த்தார்கள்.

பிரணவ் இரும்பவும், யாரோ ஒருவர் தண்ணீர் கொடுத்தார். மற்றொருவர் "பிரேக் எடுக்கலையா?" என்று ஆங்கிலத்தில் "Won't you take a break?" வலிய வந்து கேட்டார்.

அவன் இல்லை என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு இங்கே தன்னை தற்போது தான் சிலர் நிமிர்ந்து பார்க்க வைத்திருப்பதை உணர்ந்தான்.

மாலை களைப்பிற்கு பின் சின்ன எதிர்பார்ப்பு ஓய்வும் தேவைப்பட்டது. 

ஷிப்ட் முடிந்ததும், பிரணவ் ஸ்டாப் எக்ஸிட் வழியே வெளியே வந்தான்.

தினமும் டாக்ஸியில் ஏறும் சிலரும் அங்கே ஏற்கனவே காத்திருந்து சென்றனர். அங்கே பிரணவ் அமைதியாக நின்றான்.

தியானாவுக்காக காத்திருந்தானா என்பதே அறியாமல் அங்கேயே நின்றான்.

"ஹாய் பிரணவ்" என்றதும்

பிரணவ் திரும்பிப் பார்த்தான். அங்கே தியானா. இம்முறை அவள் முழுதாக பர்தா இல்லாமல், சாதாரணமாக வந்திருக்க, முகம் தெளிவாக இருந்தது.

"இன்னிக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கிங்க போல" என்றதும் பிரணவ் சிரித்தான்.

"அப்படியா.. என் முகம் மனதை பிரதிபலித்து சொல்லுதா" என்றான்

"பின்ன இல்லையா? நேற்று கூட லேசான டென்ஷன்ல இருந்திங்க. இன்னிக்கு முகத்தில் கொஞ்சம் கான்பிடன்ஸ் தெரியுது" என்றாள். தன்னை தன் முகபாவனையை உற்று நோக்கி சொல்லவும், பிரணவ் சிரித்தான்.

"மேபீ" என்றவனை பார்த்து, பூரித்தவளாக "யாரோ இன்று உங்களைப் பற்றி நல்லதா பேசினாங்களாமே" என்று பீடிகையுடன் உரைக்க, பிரணவ் புருவம் உயர்த்தினான்.

"யாரு?" என்றான்.

"கெஸ் பண்ணுங்க.

"அய்யோ... அந்தளவு பெரிய ஆளு இல்லை. எனக்கு கிச்சன் மட்டும் தான் உலகம்.. அதோட கிச்சன்ல இருக்கற என்னை பத்தி, ரிசப்ஷன்ல உங்களிடம் யார் சொல்லியிருப்பா?" என்று தன்னடக்கத்துடன் பேசியவன், இன்று நடந்த விஷயம் மறக்காமல், "கிச்சன்ல தானா?" என்று வினாத்தொடுத்தான்.

தியானா பதில் சொல்லாமல் சிரித்தாள். "அய்யோ தியானா சொல்லுங்க" என்றான்.

"சீனியர் செஃப் நம்ம ஹோட்டல் மேனேஜரிடம், குட் அப்சர்வேஷன் இருக்கற பெர்சன்னு உங்களை பத்தி சொன்னார். நீங்க என்ன நினைச்சிங்க.. ஜப்ரான் ஹோட்டல்ல புதிதா ஆள் எடுத்தாலும் கொஞ்ச நாளாவது உங்களோட அணுகுமுறையை கவனிப்பாங்க. அதை பொறுத்து தான் ப்ரமோஷன் கூடும்" என்று கூற, பிரணவ் கண்கள் லேசா விரிந்தது.

"அதுவா.. நினைச்சேன். சீனியர் செஃப் சமைக்கும் போதே மிஸ்டேக் எதுனு கண்டுப்பிடிச்சி சொன்னேன். அவர் என்னை திட்டுவாரோனு பயந்து மெதுவா சொன்னேன். சீனியர் குட்' என்று சொன்னார். அதை தானே சொல்லறிங்க. ஆனா இங்க வேலைக்கு வர்றவங்களை கவனிக்கப்படுவதா சொல்வது நல்லது தான். இனி நான் இன்னும் குட் பாயா நடந்துப்பேன்" என்று சிரித்தான்.

"அதுவே தான். ஆமா... சீனியர் செஃப் பாராட்டின ஒரு வார்த்தை போதுமா?" என்று கேட்டாள். 

"அட வந்ததும் இந்த ஒரு வார்த்தை சொல்லி அப்ரிசெட் பண்ணியதே பெரிய விஷயம் தியானா. அதுவும் மேனேஜரிடம்" என்றான்.

"ம்ம்" என்று சிரித்தவள், "நீங்க தினமும் அக்கமண்டேஷனுக்கு லேட்டா போறிங்களா? உங்களுக்கு சௌகரியமா இருக்கா?" என்று கேட்டாள். 

"அட என்னை மாதிரி ஆட்கள் இங்க அவசரமா டாக்ஸி பிடிச்சி போய் யாரை பார்க்க போறேன். யாரிடம் நேர்ல போய் பேசப்போறேன். அம்மா ஊர்ல இருக்காங்க. இங்க யாருமில்லை. அதனால பொறுமையா லேட்டா போறேன். கொஞ்ச தூரம் வாக் பண்ணறேன் தியானா. துபாயை சுற்றி பார்க்க, அப்பறம் டாக்ஸி பிடிச்சி திர்ஹாம் தந்து போறேன்." என்றான். 

"ம்ம்ம். அம்மா ஊர்ல இருக்காங்க. மனைவி காதலி இல்லையா?" என்று கேட்டாள். 

"அச்சோ தியானா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. அதோட எனக்கு காதலியும் இல்லை." என்றவன் அவசரமாய் பதில் தந்து நெளிந்தான். அந்த நேரம் தியானாவை இவன் ரசிக்க அவளுமே அவனது பதட்டத்தை ரசித்தாள். 

"ஓகே.. ஓகே..என்னோட டாக்ஸி வந்துடுச்சா. பை" என்ற போது, "நீங்க.. எங்க இருக்கிங்க" என்று கேட்டான் பிரணவ். 

அவளிருக்குமிடத்தை பகிரவும், "ஓ... எனக்கு அது எங்கயிருக்குனு கூட தெரியாது. இதே சென்னைன்னா சட்டுனு தெரியும். எனிவே... நீங்க கிளம்புங்க. இனி துபாயில இருக்கற ஊரையும் ஏரியாவையும் தெரிந்துக்கறேன்" என்று டாக்ஸியில் ஏறிய, தியானாவும் "தெரிந்துக்கோங்க.. தெரிந்துக்கிட்டா எல்லாமே ஈஸி தான்" என்று கூற, அனுப்பி வைத்தான்.

பிரணவ் தியானா சென்றதும் கூகுளில் அவள் சொன்ன அட்ரஸை மேப்பில் போட்டு நடந்தான். 

அவன் செல்லும் அக்கமண்டேஷன் தாண்டி தான் தியானா வீடு இருப்பதாக கூகுள் ஆண்டவர் காட்டினார்.

'அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே.' என்று தியானா செல்லும் வழிதடத்தை கவனித்தான். 

அவனுக்குள் இந்த தியானா தினம் தினம் புதிதானவளாக தெரிந்தாள். நன்றாக பழகும் அழகான முஸ்லிம் பெண். 

தனக்கு காதலி மனைவி இருக்கின்றனரா என்று அவள் கேட்ட பொழுது, அவள் முகத்திலுள்ள இருவிழியில் அத்தனை ஆவல். 

அதையெல்லாம் ரசிக்க இன்னும் நான்கு விழிகள் தேவைப்படும் போல. அந்தளவு கவர்ந்தாள்.

இப்படியே பேசினால், அது எதில் போய் முடியுமோ என்ற பயமும் நெஞ்சில் அதிர்வை உண்டாக்கியது. 

பிரணவ் உடனடியாக அதெல்லாம் எவ்விதமான பயமின்றி நல்ல நட்பில் முடியட்டுமென பிரணவ் கூறிக் கொண்டான். 

இங்கே நட்பை தாண்டி வேறென்ன வந்துவிடுமென்று பிரணவ் நினைத்தான். 

டாக்ஸியில் பயணித்த தியானாவோ கொஞ்ச நாள் முன் அறிமுகமானவனிடம் இத்தனை இயல்பாக எப்படி உரையாற்ற முடிகின்றது. தமிழ் மெழி என்ற ஒன்றால் வந்த ஒட்டுதலா? 

ஆனால் அவனுக்கு காதலி மனைவி இருக்கின்றார்களா என்று ஆர்வமாக கேட்டுவிட்டோமோ? பிரணவ் தவறாக நினைத்துவிட்டால்? ஆனால் அவளொன்றும் மனதில் அப்பழக்கு அற்றே கேட்டு நின்றாள்‌.

ஒரு அழகான இளைஞன், வேலைத்தேடி சொந்த ஊரிலிருந்து, சொந்த நாட்டை தாண்டி, கடலை தாண்டி, வேறொரு நாடான துபாயிற்கு தனித்து வந்து சேர்ந்து தடுமாற, தமிழில் பேசுவதாலும், பழக நல்லவனாக, ஒரேயிடத்தில் வேலை என்பதாலும் இந்தளவு பேசி பழகுவதில் தவறில்லை என்றது தியானா மனம். இதே ஒரு பெண் அவ்விடத்தில் இருந்தால் மணமாகி விட்டதா என்று கேட்பது எதார்த்தம் தானே. 

ஆண் என்பதால் தனக்கு அவனிடம் ஆர்வம் என்று ஏன் எண்ண வேண்டுமென என அவளது நினைப்பிற்கு காரணத்தை அடுக்கினாள் மனசாட்சியிடம். 

டாக்ஸி டிரைவர் தியானா முன் சொடக்கிட்டு, வெளியே கதவை காட்டி பேச, தனது இடம் வந்துவிட்டதை எண்ணி மன்னிப்பு வேண்டி இறங்கினாள். 

திர்ஹாம் தந்துவிட்டு அப்படியே நடந்து சென்றாள்‌. எதிரே வருபவர் பார்த்து புன்னகைக்க, வீட்டிற்கு வந்து காலிங் பெல் அழுத்தினாள்.

தியானாவின் அன்னை பாதிமா கதவை திறக்க, "தியானா பர்தா போடாம வந்துட்ட? ஏன் என்னாச்சு?" என்று கேட்டதும் தான் முகத்தை தொட்டு பார்த்தாள். 

"அச்சோ... பர்தா போடலையா?" என்று தியானா அதிர்ந்தாள். 

'பிரணவ் இதனால தான் என் முகத்தையே இமைக்காம பார்த்தாரா?' என்று எண்ணியவளிடம், "தியானா... என்னாச்சு?" என்றார் நஸீர். 

"வாப்பா... வேலை முடிச்சி ரெப்ரெஷ் செய்ய ஸ்டாப்ஸ் ரெஸ்ட்ரூம் போனோன். அங்க முகம் அலம்பினதுல பர்தா கழட்டி வச்சேன். மறுபடியும் போட மறந்துட்டேன். சாரி வாப்பா" என்றாள். 

"நமக்குன்னு கட்டுப்பாடு இருக்கு தியானா. அதை மறக்காம பின் தொடரணும். அப்ப தான் நல்லது" என்று கரடுமுரடான குரலில் உரைத்தார். 

"சரிங்க வாப்பா." என்று அறைக்குள் சென்று விட்டாள். 

தந்தை இன்று விரைவில் வந்துவிட்டார். இன்று

பார்த்து பர்தாவை மறந்து விட்டு வந்தது எத்தகைய தவறு. இனி கவனமாக செயல்பட வேண்டுமென இறைவனை தொழுதாள். 

-தொடரும். 

பிரவீணா தங்கராஜ். 

 

 

 

 

 


 
Posted : July 4, 2026 10:34 pm
(@guna-sundari)
Posts: 56
Trusted Member
 

Wow piranav got good name in very few days. Good. Improvement in his. Work. Very intresting sis 


 
Posted : July 4, 2026 10:47 pm
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

மொஹபத் முதல், நிக்காஹ் வரை!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 5)

அட பரவாயில்லையே..!   விசுவாமித்திரர் கையில பிரம்மரிஷி பட்டம் கிடைச்ச மாதிரி
வேலையில சேர்ந்த ரெண்டாவது நாளே, குட்ன்னு சொல்ற அளவுக்கு பாராட்டு வாங்கியிருக்கானே நம்ம நியூ செப். உண்மையிலயே இது பாராட்டுதலுக்குரியது தான்.

ஒருவேளை, இந்த தியானா பிரணவை பார்க்காமல் போயிடுவோமோ என்கிற அவசரத்துல பர்தா இல்லாமல் வந்துட்டாளோ..? இருக்கும், இருக்கும்... பர்தா என்கிறது இவங்களுக்கு இன்னொரு முகத்தோல், முக கவசம் மாதிரி, அதுவே போட்டிருக்கிறோமா, இல்லையா என்கிறது கூட உறைக்காத அளவுக்கு நிலைமை போயிருக்குன்னா.. பாருங்களேன்.

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : July 4, 2026 11:09 pm
(@dharsinipriya)
Posts: 59
Trusted Member
 

Super sis nice epi 👍 👌 😍 hmm velaiyila nalla per kedachachi super 😘 eppdi renduperum friends ah mattum erukangala ella adhukum melaya nu parpom 🧐 


 
Posted : July 5, 2026 3:53 pm

Scroll to Top