Forum

மொஹபத் முதல் நிக்கா...
 
Notifications
Clear all

மொஹபத் முதல் நிக்காஹ் வரை-8

4 Posts
4 Users
0 Reactions
25 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#190]

அத்தியாயம்-8

      காலை ஹோட்டல் கிச்சன் வழக்கம்போல் பரபரப்பாக இருந்தது. காய்கறிகள் நறுக்கும் சத்தம். பாத்திரங்கள் உரசும் ஓசைகள்.  ஆர்டர்கள் மழையாக வந்து கொண்டேயிருந்தன.
ஆனால் பிரணவின் மனம் மட்டும் வேலைக்குள் முழுவதுமாக செல்லவில்லை.

கையில் கத்தி காய்கறியை நறுக்கிக் கொண்டிருந்தாலும், அவன் பார்வை சில நிமிடங்களுக்கு ஒருமுறை சுவரில் இருந்த கடிகாரத்தைத் தேடிச் சென்றது. 'இன்னும் எவ்வளவு நேரம்?' அவனுக்கே அவனை நினைத்து சிரிப்பு வந்தது.

'என்னடா பிரணவ்... இப்படி ஆயிட்டியே...' என்றபடி தியானாவின் முகம் நினைவில் வந்துவந்து மறைந்தது.

அவள் அனுப்பியிருந்த கீதை உபதேசம். இவனை போலவே இனிய காலை வணக்கம் பிரணவ்." என்ற அந்த ஒரு வரி...
அவன் மனதை நாள் முழுவதும் துரத்திக் கொண்டே இருந்தது.

அந்த நேரம் அருகில் இருந்த செஃப் ஒருவர், "பிரணவ்..." என்று அழைத்தார்.

"யெஸ் செஃப்."
"என்னாச்சு? டைம் மட்டும் பார்த்துட்டே இருக்க?" பிரணவ் சிரித்தான்.

"ஒன்னுமில்லை செஃப்." என்றாலும் லாபியில் தியானாவை பார்க்கும் ஆசையில் திளைத்தான்.

இதில் மற்றொரு சீனியர் செஃப் தயாரித்திருந்த முக்கியமான டிஷ், சர்வீஸுக்கு சென்ற சில நிமிடங்களில் திரும்பி வந்தது.
"கார்னிஷ் எல்லாம் கலைஞ்சிருக்கு. டேபிள் டுவெல்வ் கம்ப்ளைன். இதை யார் பிரிப்பர் செய்தது" என்று செஃப் கேட்டதும், அடுத்த நொடியே முழு கிச்சனும் அமைதியானது.

அந்த சீனியர் செஃப் கடும் கோபத்தில், "யார் இதை பிளேட் பண்ணினது?" என்று கத்தினார்.

பதறியபடி ஒரு இளம் செஃப் முன்வந்தான். "சாரி செஃப்... நா..நான் தான்" என்றதும்,
அவ்வளவு மேலதிகாரி "சாரியா? பைவ் ஸ்டார் ஹோட்டல்ல 'சாரி' சொல்லி வேலையை காப்பாத்த முடியுமா?" என்று சீறினார்.

அங்கே இருந்த அனைவரும் அமைதியாக நின்றனர். "இங்க நம்மள தேடி வேலைக்கு எடுத்தது ஏன் தெரியுமா? சம்பளம் நல்லா தர்றாங்க. வசதி தர்றாங்க. விசா தர்றாங்க. அதுக்கெல்லாம் காரணம்...
நாம செய்யுற வேலை! ஒரு பிளேட் வெளியே போகும் முன் முன்னாடி நூறு தடவை செக் பண்ணணும். இது ஒன்னும் சாதாரண ஹோட்டல் இல்ல. பைவ் ஸ்டார் ஹோட்டல்.
  இங்க ஒரு கஸ்டமர் பணம் கொடுக்கறது சாப்பாட்டுக்கு மட்டும் இல்ல. எல்லாவிதமான பெர்பெக்ஷனுக்கும் தான். அவங்களுக்கு மோசாமான அனுபவமா அமைந்தா, அடுத்து இங்க வருவாங்களா?" என்று கத்தினார்.‌
இதுவரை அமைதியாக இருந்து கனிவாக பேசி காரியத்தை நையமாக கையாளும் செஃப் தான்‌ இன்று குரல் உயர்த்தி கடிந்தார்.

தவறு செய்தவனோ தலைகுனிந்து நிற்க, "உங்கள்ல பாதி பேர் சம்பளம் வாங்கின மறுநாளே வீட்டுக்கு அனுப்புறிங்க. கடன் அடைக்கறீங்க. EMI கட்டுறிங்க. உங்க குடும்பம் உங்களை நம்பி காத்திருக்குது. அப்படி இருக்கும்போது... வேலை செய்யுற இடத்துல கவனக்குறைவா? இந்த கிச்சன் நமக்கு வெறும் வேலை செய்யுற இடமா? இது நம்ம கோவில்! இங்க உள்ளே வந்ததும் வெளியுலகத்தையே மறந்துடணும். மனம் முழுக்க ருசியா சமைக்கறதுல மட்டும் இருக்கணும்." என்றதும் முழு கிச்சனும் அமைதியானது.

ஏனோ பிரணவும் தலை குனிந்தான். செஃப் வேறு ஒருவரைத் திட்டிக் கொண்டிருந்தார்.
ஆனால்... ஒவ்வொரு வார்த்தையும்... தன்னையும் பார்த்து சொல்வது போல இருந்தது.

  'ஊரில் அம்மா... அண்ணன்... தனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் சேர்த்து அனுப்பியிருக்க, இங்க வந்து தான் தியானாவை நினைத்துக் கொண்டு இருக்கின்றோமே..' என்று அவனுக்கே அவன் மீது கோபம் வந்தது.

அந்த நிமிடமே ஒரு முடிவு எடுத்தான். 'இல்ல... இனி இப்படி போகக்கூடாது. வேலை தான் முதல்ல. மத்ததெல்லாம் அப்புறம்.' என்று மனதார உறுதி எடுத்தான்.

புயல் அடித்து ஓய்ந்தது போல அன்றைய நாள் முழுக்க சமையல் செய்யுமிடத்தில் மயான அமைதி. யாரும் யாரிடமும் அதிகம் பேசவில்லை. லேசான கேலி கிண்டல் கூட அறவே ஒழிந்தது. மேலும் தவறு செய்த செஃப்பை தனியாக அழைத்து மேனேஜரை பார்த்து முடித்தப்பின்னே மற்ற வேலையில் தொடரலாமா அல்லது எவ்வாறென கூறுவதாக முடித்து விட்டார்.‌

அன்று மாலை ஷிப்ட் முடிந்தவுடன் யாருக்காகவும் தியானாவுக்காகவும், பிரணவ் காத்திருக்கவில்லை.
நேராக டாக்ஸி நிறுத்தத்தில் நின்று, திர்ஹாம் கொடுத்து,
அக்கமோடேஷனுக்கு கிளம்பிவிட்டான்.

தியானா தான் வழக்கம்போல் டாக்ஸி நிறுத்தத்திற்கு வந்தாள்.
அவளது கண்கள், தானாகவே பிரணவைத் தேடின.

இடது பக்கம், வலது பக்கம் என்று பிரணவை தேடி அவனில்லை என்றதும் . 'இன்னிக்கு சீக்கிரமா போயிட்டாரா...?' என்று சிறிது ஏமாற்றத்துடன் நின்றாள்.

டாக்ஸியில் ஏறிய பிறகும்,
அவள் பார்வை ஜன்னல் வழியாக அவனைத் தேடியது.
சில நேரம் நடந்து செல்வதாக அல்லவா கூறுவான்.
  
  பிரணவிடம் எங்கே இருக்கின்றான்‌? சென்று விட்டானா? என்றறியும் விதமாக பேசும் எண்ணம் எழுந்தது. ஆனால் சற்று கையை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

வீட்டிற்கு வந்த பிறகும், நஸீர் இல்லாமல் போக, உம்மாவும் இரவு சமைக்க வேண்டுமென காரியத்தில் கண்ணாக இருக்க, தங்கையும் படிப்பில் மூழ்கியிருக்க, தலைவலி என்று உம்மாவிடம் சொல்லிவிட்டு அறைக்கு வந்து தாழிட்டு விட்டாள்.
தைலம் தேய்த்து படுத்திருப்பதாக உம்மாவிடம் சொல்விவிட்டே இருந்தாலும், பொய் சொன்னதை விட, பிரணவிடம் பேசாததே அவ்வெண்ணமே மனதில் ஓடியது.

இறுதியில்... அவளே கைபேசியை எடுத்தாள்.
சில நொடிகள் தட்டச்சு செய்து அழித்தாள். மீண்டும் எழுதினாள். "எங்க இருக்கிங்க?" என்றதை எழுதியும்
அனுப்பவில்லை. மீண்டும் அழித்தாள். இறுதியாக மனம் கேளாமல் "குயிக்கா போயிட்டீங்களா? இன்னிக்கு உங்களை காணோம்..."
என்று அனுப்பிவிட்டாள்.

அந்த மெசேஜ் வந்தபோது
பிரணவ் அறையில் அமைதியாக அமர்ந்திருந்தான்.

திரையைப் பார்த்ததும்
உதட்டில் தானாக சிரிப்பு வந்தது.
    அவனும் தன்‌ மனக்கட்டுப்பாட்டை விதித்து போனை வெறித்தபடி தங்குமிடம் வந்துவிட்டான். ஏனோ சுவாசிக்க மறந்தவனாக உள்ளம் தவித்தது. தியானா தற்போது அனுப்பியது, உலகம் இயங்கியதாக, சில விநாடிகள் கழித்தே பதில் அனுப்பினான்.

"ரொம்ப டயர்டா இருந்துச்சு. கொஞ்சம் உடம்பும் முடியல. அதான் சீக்கிரம் வந்துட்டேன் தியானா." என்றான்.

‌அடுத்த நொடியே பதில் வந்தது.
"ஏன்? என்னாச்சு? உடம்புக்கு என்ன?" என்று அன்பான அக்கறை.

"லைட்டா பீவர். இப்ப பரவாயில்லை." அதன்பிறகு சில நொடிகள் அமைதி.

திடீரென்று... தியானா கேட்டாள்."ஆமா... உங்களுக்கு குர்ஆன் வசனங்கள் எல்லாம் எப்படி தெரியும்?"

பிரணவ் சிரித்தான். "அது நமக்கு பிடிச்ச விஷயத்தை தெரிஞ்சிக்கற ஆர்வம் தியானா." என்றான்.

  "ஆமா... உங்களுக்கு எப்படி கீதை உபச்சாரம் தெரியும்?" என்றான்.‌

"உங்களை மாதிரி தான். பிடிச்ச விஷயத்தை தெரிந்துக்கற ஆர்வம்." என்றாள்.

பிரணவ் உடனே, "வாட்...? நீங்க முஸ்லிம் பொண்ணு. கீதையில என்ன ஆர்வம்?" என்று கேட்டான்.

சில நிமிடங்கள் தியானாவிடம் பதில் வரவில்லை. பிறகு...
மெதுவாக தட்டச்சு செய்தாள்.

"நான் நிறைய புத்தகங்கள் வாசிப்பேன் பிரணவ். குர்ஆன்... நபிமொழிகள். எங்க மதத்தோட பெருமை பேசுவதை அறிந்திருக்கேன். அதே போல பொதுவுடைமை நூல்களான திருக்குறள், ஐம்பெருங்காப்பியம், பகவத் கீதை... எல்லாமே படிப்பேன்."
பிரணவ் ஆச்சரியமடைந்தான்.

"புக்ஸ் படிப்பீங்களா?" என்றான்

"ம்ம்ம்... ஸ்கூல் படிக்கும்போதே வாசிக்க பிடிக்கும்.
அதோட கதைகள் எழுத ஆரம்பிச்சேனா எல்லாவிதமான விஷயமும் அறிந்து கொள்ள வாசிப்பேன்." என்றாள்.

பிரணவின் விரல்கள் நின்றுவிட்டன. பிறகு "உண்மையாவா? கதை எழுதுவிங்களா?" என்றான்.‌

"ம்ம்ம கவிதை கதை... வீட்ல யாருக்கும் தெரியாது." என்றாள்.

"என்ன பெயர்ல எழுதுறீங்க?"
என்று கேட்டான்.

அடுத்த பதிலுக்காக அவன் ஆவலுடன் காத்திருந்தான்.

"தியா நாவல்ஸ்." என்றாள்.  அந்த பெயரை இரண்டு முறை மெதுவாக உச்சரித்தான்.
"தியா... நாவல்ஸ்..." அடுத்த நொடியே கூகுளைத் திறந்தான்.
தேடுவதற்கு முன்பே... தியானாவிடமிருந்து இன்னொரு மெசேஜ் வந்தது.

"ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கணும்னா... அவங்களோட மதம்... மொழி... கலாச்சாரம்... வாழ்க்கை முறை... எல்லாத்தையும் படிச்சு ஓரளவென்ற அளவிலாவது தெரிஞ்சிக்கணும்னு நம்புவேன். அதனால்தான் குர்ஆனோட சேர்த்து திருக்குறள்... பகவத் கீதை... வேறு நிறைய புத்தகங்களும் படிப்பேன்."
பிரணவின் முகம் முழுக்க புன்னகை.

"தியா-ன்னா.. விளக்கு, ஒளின்னு இல்லைங்க அர்த்தம். அத்தோட அது இந்து பெயர் மாதிரில்ல இருக்கு. உங்க வீட்ல.. ஓ.. சாரி சாரி. உங்க வீட்ல நீங்க எழுதுவதே தெரியாதுனு சொன்னிங்கள்ல. மறந்துட்டேன்." என்றான்.

  "ஆக்சுவலி இந்து பெயர் மாதிரி தான் வச்சிக்கிட்டேன். இங்க ரைட்டர்ஸ் பெரும்பாலும் முஸ்லீமா இருந்தாலும் இந்து பெயரை தான் அடையாளமா வச்சிப்பாங்க. அதென்னவோ அது தான் தமிழ்நாட்டு வாசகர்கள் வந்து படிக்காங்க. முஸ்லீம் ரைட்டர் அதுவும் லங்கைனா கொஞ்சம் யோசிக்கறாங்கனு எங்க சைட்ல சொல்லிருந்தாங்க. இதே தமிழ் நேம் இந்து பெயர்னா சப்போர்ட் அதிகமா கிடைக்கும்னு சொன்னாங்க." என்றாள்.

  பிரணவிற்கு எழுத்தாளரை பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாதே. அதனால் அந்த பேச்சை விரிவாக கேட்கவில்லை. மாறாக, 'உங்க பெயரை போட்டு... சர்ச் பண்ணிட்டேன்..  எதுவும் காட்டலை. எப்படிங்க படிக்க.. லிங்க் அனுப்புங்க. நான் கண்டிப்பா படிப்பேன்." என்றான்.

தியானாவின் இதயம் வேகமாக துடித்தது.

"சரி... லிங்க் அனுப்புறேன். படிச்சுட்டு... எப்படி இருக்குன்னு நேர்மையா சொல்லணும். அப்பறம்... படிச்சிட்டு என்னை தப்பா நினைக்க கூடாது. என் தமிழ் கொஞ்சம் அப்படியிப்படி இருக்கலாம். " அவள் அனுப்ப "லிங்க் கொடுங்க." என்று சிரிக்கும் எமோஜியை தட்டிவிட்டான்.

தியானா லிங்கை எடுத்து தந்தாள். ஒரு எழுத்தாளரின் எதிர்பார்ப்பும், ஒரு பெண்ணின் தயக்கமும், இரண்டும் கலந்திருந்தன. அவளது உள்ளத்தில்.. மேலும் உடம்பை பார்த்துக்கோங்க." என்று கணிவுடன் கூறினாள்.

  பிரணவிற்கோ பதினொன்று மணியிலிருந்து இருந்த மனப்பாரம் தியானாவிடம் பேசக்கூடாது என்ற திட்டம் முடிவு எல்லாம் அவளாக குறுஞ்செய்தி அனுப்பியதும் வீட்டு நினைப்பு கூட மறந்தே போனான்.‌
 
  தியானா அனுப்பிய லிங்கை தொட்டான்.
   முதல் முதலாக நாவல் உலகத்திற்குள் கதை படிக்க வந்த ஆச்சர்யம். இதற்கு முன் வேதங்கள், உபநிஷதங்கள் கூட எல்லாம் படித்திருக்கின்றான்.‌ அத்துடன் சுஜாதா, கல்கி, சாண்டில்யன், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், கி.ரா, சுபா, ஜெகாந்தன், ஜெயமோகன், இந்திரா சௌந்திராஜன்,  கதைகள் எல்லாம் அத்துப்படி. பெண் எழுத்தாளர்களின் எழுத்துபணியை பருகியது குறைவே.

அதனால் ஒருவிதமான எதிர்பார்ப்பில் ஆசையாக அந்த லிங்கில் சென்று கதையை பார்த்தான். சைட்டே பளபளப்பாக வண்ணங்களுடன் காட்சியளித்தது. பல்வேற எழுத்தாளர்கள் எழுதுவதை கவனித்தான்.‌ 'தியா நாவல்ஸ்' என்றதை கவனித்தான்‌.
 
  அதில் முகப்பு படமே அவனை ஈர்த்தது. அந்த கண்ணை காதலனாகவும் கணவனாகவும் மனதால் ஏற்று வாழும் மீராவின் ஓவியப் புகைப்படம். அதுவும், கழுத்தில் துளசி மாலையும், கையில் தம்பூராவை ஏந்தி, கண்ணனின் நாமத்தைப் பாடிய பக்தையான மீராவின் புகைப்படம் இருந்தது.

அதில் தியாவின் பயோடெட்டா வேறு கொஞ்சம் போல இருந்தது.
  அதை வாசிக்க ஆரம்பித்ததும், "என்ன பிரணவ் இன்னிக்கு ரொம்ப குயிக்கா வந்துட்டியா என்ன?" என்று சூர்யா வரவும, தற்காலிகமாக போனை இறக்கிவிட்டு "ஆமா" என்றான் பிரணவ்.

  பிரணவோ சடசடவென சூர்யாவிடம் ஒப்பிக்க மனம் உந்தியது. ஆனால் ஏதாவது சொன்னால் ஏற்றி விடும் விதமாக பேசுவான். இப்பொழுது தானே போன் இலக்க எண்ணையே பெற்றது. இதில் இவனிடம் கூறினால் என்ன ஏதென தன்னை தோண்டி துருதுருவென, ''இ-புக் படிக்கறேன் சூர்யா. நீங்க வாசிக்கறாங்களா?" என்று பொய்யாக கேட்டான். 

சூர்யாவும் மறுத்துவிட்டு குளிக்கத் தேவையான துணிகளை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் சென்றான். 'அப்பாடா...' என்று மனதிற்குள் நினைத்த பிரணவ், மீண்டும் கைபேசியை எடுத்தான்."

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.

  


 
Posted : July 19, 2026 9:22 am
(@dharsinipriya)
Posts: 58
Trusted Member
 

super sis nice epi semmaiya pogudhu story 👍 🥰 dhiya writer ah super 😘 


 
Posted : July 19, 2026 11:21 am
(@crvs2797)
Posts: 101
Estimable Member
 

மொஹபத் முதல், நிக்காஹ் வரை!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 8)

உண்மை தானே, செய்யும் தொழில் தெய்வம், இதுல வேலை நேரத்துல
கனவு என்ன வேண்டியிருக்கு ,?
முதல்ல வேலை கிடைக்கலையேன்னு கவலைப்படறது, கிடைச்சிட்டால்
வேலையை மறந்துட்டு கனவு காண வேண்டியது ? இதுக்குத் தான் சொல்றது, வயித்துல ஈரம் படாதவரைக்கும் பசியை மட்டுமே உணர்றது, சாப்பாட்டை மட்டுமே யோசிக்கிறது. கொஞ்சம் ஈரம் பட்டுட்டால் புத்தியை இஷ்டத்துக்கு மேய விடறது.

தியா ரைட்டரா ? கதை, கவிதை எழுதுறதே வீட்டுக்குத் தெரியலை, இதுல தான் காதலிக்கிறது மட்டும் வீட்டுக்குத் தெரிஞ்சால், நஸீர் ஒத்துப்பாரா...?

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : July 19, 2026 2:53 pm
(@guna-sundari)
Posts: 56
Trusted Member
 

Yes work is worship. Super super. Very intresting sis.


 
Posted : July 19, 2026 3:18 pm

Scroll to Top